World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குPaulson and Goldman Sachs: A dirty secret of the Wall Street bailout போல்சன் மற்றும் கோல்ட்மன் சாஷ்ஸ்: வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பில் ஒரு கறை படிந்த இரகசியம் Barry Grey ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் நிதி மந்திரியான ஹென்றி போல்சனுக்கும் பாரிய முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாஷ்ஸுக்கும் இடையே போல்சன் புஷ் நிர்வாகத்தில் சேர்வதற்கு முன்னர் திரைமறைவில் நடந்த உடன்பாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ள கட்டுரை அரசாங்க அதிகாரிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே இருந்த ஊழல்நிறைந்த உறவுகள் பற்றி கணிசமாக எடுத்துக் கூறுகிறது. இதுதான் வோல் ஸ்ட்ரீட் பல டிரில்லியன் டாலர்களை கொட்டி பிணை எடுப்பதற்கான அடித்தளமாக இருந்தது. தகவல் பெறும் உரிமையின் அடிப்படையில் பெறப்பட்ட 2007, 2008 ஆண்டுகளின் போல்சனுடைய உத்தியோகபூர்வ செயற்பட்டியலை தளமாகக் கொண்ட இக்கட்டுரை, போல்சனுக்கும் கோல்ட்மன் சாஷ்ஸில் அவருக்கு பின்னர் தலைமை நிர்வாகியாக வந்த லாயிட் சி. பிளாங்பெயினுக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளாக நிதிய நெருக்கடியின் போது நடந்த நெருக்கமான ஒத்துழைப்பு பற்றி உறுதியாகக் கூறுகிறது. 2008 செப்டம்பர் நடுப்பகுதி பற்றி இது முக்கியத்துவம் காட்டுகிறது. அப்பொழுதுதான் அரசாங்கம் 85 பில்லியன் டாலரை தோல்வியுறும் காப்பீட்டு மற்றும் நிதிய நிறுவனமான அமெரிக்க இன்டர்நாஷனல் க்ரூப்பை (AIG) பிணை எடுக்க முடிவு எடுத்தது. AIG ஐ மீட்கும் திட்டத்தின் இதயத்தானத்தில், AIG உடன் கொண்டிருந்த கடன் ஒப்பந்தங்களை வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மாற்றிக் கொள்ளும் விதத்தில் பில்லியன் கணக்கான டாலர்களுக்கும் சரியான ஈடு செய்யும் வகையில் வரி செலுத்துபவர் பணம் பயன்படுத்தப்படலாம் என்ற முடிவு இருந்தது. கடன் கொடுக்காதவற்றிற்கான காப்புறுதி (Credit default swaps) என்பதுதான் மிகப் பரந்த அளவில் வங்கிகள் பெரிதும் நம்பி ஊகமுறை கையாளப்பட்டு, மிகப் பெரிய இலாபங்களை ஈட்டுவதற்கும் தங்கள் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்களுக்கு பல மில்லியன் டாலரை மேலதிக கொடுப்பனவு, பிற ஊதிய சலுகைகளை கொடுப்பதில் மத்திய பங்கை கொண்டிருந்தது.கட்டுப்பாடற்ற கடன் கொடுக்காதவற்றிற்கான காப்புறுதி சந்தைகளூடாக வங்கிகளும் பெருநிறுவனங்களும் மற்ற வங்கிகளும் நிறுவனங்களும் வெளியிடும் பத்திரங்கள் தவறுக்கு உட்படுவதற்கு எதிராக காப்பீட்டை வாங்கிக் கொள்ள முடியும். காப்புறுதிகளை விற்கும் நிறுவனம் (AIG அவற்றிலேயே மிகப் பெரியது ஆகும்) திவாலானால் அதை நம்பியிருக்கும் பல நிறுவனங்களும் பில்லியன் கணக்கில் இழப்பு அடைந்து அவையும் திவாலாகிவிடும். இதுதான் செப்டம்பர் 2008ல் பெருநிதிய நிறுவனங்களின் துல்லியமான நிலைமையாக இருந்தது. அப்பொழுது AIG சரிவின் விளிம்பில் தடுமாறிக் கொண்டிருந்தது. போல்சனுடைய செய்தித் தொடர்பாளர் மிச்சாலே டேவிஸ் அரசாங்க அதிகாரிகள் கோல்ட்மன் மற்றும் முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்ரான்லியும் "வார இறுதிக்குகள் தோல்வி அடைந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தன" என்று கவலைப்பட்டனர் என்று கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டது. மிகப் பெரிய, மிக அதிக இலாபம் ஈட்டிய வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனமான கோல்ட்மன் சாஷ்ஸைப் போல் எந்த நிறுவனமும் அதிக ஆபத்திற்கு உட்படவில்லை. அது கடன்கள் கொடுக்காதவர்களுக்கான காப்புறுதி மற்றும் AIG உடைய எஞ்சிய பிரிவு ஒப்பந்தங்களில் தவறுகள் ஏற்பட்டால் அது 13 பில்லியன் டாலரை இழக்கும் ஆபத்தில் இருந்தது. டைம்ஸில் வந்துள்ள கட்டுரை சட்டப்படியும், அறிநெறியின்படியும் தன்னுடைய முன்னாள் வங்கியுடன் தேவையற்ற தொடர்பை வைத்துக் கொள்ளக்கூடாது என்ற தடைக்கு உட்பட்ட போல்சன் பல டஜன் தொலைபேசி விவாதங்களை பிளாங்பீனுடன் செப்டம்பர் 16 க்கு முன்பும் அன்றும் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் போல்சனும் மத்திய வங்கிக்கூட்டமைப்பும் AIG க்கு பிணை எடுப்பை அறிவித்த நேரம் ஆகும். போல்சனும் வங்கி பிணை எடுப்பில் ஈடுபட்டிருந்த மத்திய வங்கிக்கூட்டமைப்பும் தலைவர் பென் பெர்னான்கே மற்றும் நியூ யோர்க் மத்திய வங்கியின் அப்போதைய தலைவரும் தற்போதைய நிதி மந்திரியுமான டிமோதி கீன்னர் உட்பட அவருடைய ஒத்துழைப்பாளர்கள் பலரும், பொது நிதியை பயன்படுத்தி கோல்ட்மனை மீட்பதில் போல்சன் கொண்டிருந்த பங்கின் சட்டபூர்வ தாக்கங்களை பற்றி நன்கு அறிந்திருந்தனர். டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சட்டபூர்வ மூடுதிரையை வழங்கிக்கொள்வதற்காக போல்சன் செப்டம்பர் 17ல் பெர்னன்கே, கீத்னர் மற்றும் பிற வங்கிக் கட்டுப்பாட்டினருடன் கோல்ட்மன், மெரில் லின்ச், மோர்கன் ஸ்ரான்லி ஆகியவற்றின் நிதி நெருக்கடி பற்றி பேசுவதற்கு கூடுவதற்கு முன்பு இரு அறநெறி தள்ளுபடிகளை (Ethics waivers) பெற்றார். இந்த தள்ளுபடிகள் போல்சனுடைய நிதி அமைச்சரகத்தாலும் புஷ்ஷின் வெள்ளை மாளிகை வக்கீல் அலுவலகத்தில் இருந்தும் வெளியிப்பட்டன. டைம்ஸ் குறிப்படுகிறது: "மொத்தமாக பார்த்தால் செப்டம்பர் 16ல் இருந்து செப்டம்பர் 21, 2008 க்குள் திரு.போல்சனும் திரு.பிளாங்பீனும் 24 முறை பேசினர். நிதிய நெருக்கடியின் உச்சக் கட்டத்தில் திரு.போல்சன் அவருடைய தினக்குறிப்பு பட்டியலின்படி, வேறு எந்த நிர்வாகியையும் காட்டிலும் அதிகமான அளவிற்கு திரு.பிளாங்பீனுடன் தொடர்பு கொண்டிருந்தார். தள்ளுபடிகள் பெறுவதற்கு முன்பு போல்சன் தன்னுடைய வங்கிக்கு விகிதத்திற்கும் அதிகமாக கொடுக்கப்பட்ட முடிவுகளில் போல்சன் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் என்று செய்தித்தாள் சுட்டிக் காட்டுகிறது. கோல்ட்மன் சாஷ்ஸ் AIG உடன் கொண்டிருந்த மோசமான கடன்களை ஈடு செய்ததைத் தவிர, கோல்ட்மன் உடைய போட்டி நிறுவனங்களான பேர்ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns) மற்றும் லெஹ்மன் பிரதர்ஸ் (Lehman Brothers) (பின்னர் மெரில் லின்ச்சும்) அகற்றப்படுவதும் இதில் அடங்கியிருந்தது. இதை ஒட்டி கோல்ட்மன் சட்டபூர்வமாக ஒரு முதலீட்டு வங்கி என்ற நிலையில் இருந்து வணிக வங்கி என்று மாற்றிக் கொள்ள முடிந்தது. இதனால் அதற்கு கூடுதலான கூட்டாட்சி நிதியம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் மாற்றீட்டு குழு முதலீட்டாளர்கள் கோல்ட்மன் பங்குகளை சந்தையில் குறைமதிப்பிற்கு விற்பதற்கு எதிராகப் பந்தயம் கூடாது என்று கொடுத்திருந்த விதியும் வந்தது. இத்தகைய நடவடிக்கைகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட வட்டியில்லாத கடன்கள், கடன் உறுதிகள் மற்றும் வரிப்பணத்தில் சலுகைகள் என்று டிரில்லியன் கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டு இவை பின்னர் தொடரப்பட்டு ஒபாமா நிர்வாகத்தால் விரிவாக்கமும் பெற்றன. இதையொட்டி முக்கிய வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் இந்த ஆண்டு கணிசமான இலாபங்களை ஈட்டிப் பதிவு செய்துள்ளதுடன் மகத்தான முறையில், சில இதுவரை இல்லாத அளவிற்கு, பணங்களை தங்கள் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்களுக்கு ஏழு, எட்டு இலக்க தொகையை ஊதிய, சலுகைகளாக வழங்க முடிந்துள்ளது. இதை கோல்ட்மனை விட சிறப்பாக எவரும் செய்யவில்லை. சமீபத்தில் அது இரண்டாம் காலாண்டில் இதுகாறும் இல்லாத அளவிற்கு 3.44 பில்லியன் டாலர் இலாபத்தைக் காட்டியுள்ளது. மேலும் அதன் ஊழியர்களுக்கு இதுவரை இல்லாதளவில் 22 பில்லியன் டாலரை மேலதிக கொடுப்பனவு மற்றும் ஊதியங்களாக இந்த ஆண்டு கொடுக்கிறது. ஞாயிறு டைம்ஸ் கட்டுரை சட்ட, அறநெறி மீறல்களை தவிர போல்சன் கடந்த மாதம் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் கொடுத்த சாட்சியத்தில் பொய்யும் கூறியிருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளது. AIG, Goldman இவற்றுடன் செயற்பாடுகள் பற்றி அவருடைய நிலைப்பாட்டில் நலன்கள் மோதல் இருந்தது பற்றிய சவால் கேள்விக்கு விடையிறுக்கையில் முன்னாள் நிதி மந்திரி குழுவிடம் "AIG க்கு கடன் கொடுத்தவர்கள், அதன் நிலையில் இருந்த மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பணங்கள் பற்றிய மத்திய வங்கிக் கூட்டமைப்பு முடிவுகள் எதிலும் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." எனக் கூறினார். ஆனால் பெயரிடப்படாத முன்னாள் அரசாங்க அதிகாரிகள், "திரு.போல்சன் AIG மீட்புத் திட்ட விவாதங்களில் அந்த வாரம் [செப்டம்பர்13-14] முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் என்றும் பங்குபெற்றவர்கள் பலருக்கும் AIG க்கு கடன் கொடுப்பது என்பது கோல்டமனுக்கு பணத்தை கொடுக்கப் பயன்படும், காப்பீட்டு நிறுவனத்தின் பிற வணிகப் பங்காளிகளுக்கும் செல்லும் என்பதை நன்றாக அறிந்திருந்தனர்." எனக் கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது. இன்னும் கேவலமான உண்மையைப் பற்றி செய்தித்தாள் குறிப்பிடவில்லை. டைம்ஸ் குறிப்பிடுவது போல் போல்சன் தானே AIG உடைய உயரதிகாரியை பணிநீக்கம் செய்து அவருக்குப் பதிலாக எட்வர்ட் எம்.லிட்டியை நியமித்தார். விக்கிபீடியா கருத்தின்படி போல்சன் மக்கள் வரிப்பணத்தை AIG கோல்ட்மனுக்கும் இன்னும் பிற கடன் கொடுத்தவர்களுக்கும் கொடுப்பதற்கு மேற்பார்வையிடுவதற்கு தேர்ந்தெடுத்த நபர் கோல்ட்மன் இயக்குனர் குழுவின் 2003ல் இருந்து 2008 வரை இருந்து பின்னர் AIG யில் உயரதிகாரி ஆவதற்காக இராஜிநாமா செய்தார். இரு பதவியையும் செய்வதற்கும் இவரை ஹென்ரி போல்சன் தேர்ந்தெடுத்தார். தன்னுடைய AIG பதவியை இராஜிநாமா செய்துவிட்ட லிட்டி 3 மில்லியன் டாலர் மதிப்புடைய கோல்ட்மன் சாஷ்ஸ் பங்குகளில் 27,000 இனை கொண்டுள்ளார். ஒபாமாவிற்கு டைம்ஸ் கொடுத்த அரசியல் ஆதரவைப் பிரதிபலிக்கும் வகையில், செய்தித்தாள் தற்போதைய நிர்வாகம் உயர்மட்டத்தில் கோல்ட்மனில் இருந்தவர்கள், அதன் உயர்மட்ட நிர்வாகி ரோபர்ட் ரூபினுடைய செல்லப்பிள்ளைகள் பலரை கொண்டுள்ளது என்பதை குறிப்பிடவில்லை. இவர்களுள் இருவர் பெயர் மட்டும் கூறவேண்டும் என்றால், பிரச்சனைக்குரிய சொத்துக்கள் உதவி திட்டத்தின் நிதி நிர்வாகி, முன்னாள் கோல்ட்மன் துணைத் தலைவர் நீல் காஷ்காரி, ஒபாமாவின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் லாரன்ஸ் சம்மர்ஸ் ஆவர். இதேபோல் இக்கட்டுரை AIG பிணை எடுப்பு பற்றி முக்கிய பங்கு கொண்டிருந்த தற்போதைய நிதி மந்திரி கீத்னரின் பெயரையும் குறிப்பிடவில்லை. றிணீuறீsஷீஸீs க்ஷீஷீறீமீ வீஸீ ஷீக்ஷீநீலீமீstக்ஷீணீtவீஸீரீ tலீமீ ஜீறீuஸீபீமீக்ஷீவீஸீரீ ஷீயீ tலீமீ ஜிக்ஷீமீணீsuக்ஷீஹ் tஷீ ஜீணீஹ் ஷீயீயீ tலீமீ ரீணீனீதீறீவீஸீரீ பீமீதீts ஷீயீ நிஷீறீபீனீணீஸீ ணீஸீபீ, னீஷீக்ஷீமீ ரீமீஸீமீக்ஷீணீறீறீஹ், sலீவீமீறீபீ tலீமீ யீவீஸீணீஸீநீவீணீறீ ணீக்ஷீவீstஷீநீக்ஷீணீநீஹ் யீக்ஷீஷீனீ tலீமீ நீஷீஸீsமீஹீuமீஸீநீமீs ஷீயீ வீts sஜீமீநீuறீணீtவீஸ்மீ ஷீஜீமீக்ஷீணீtவீஷீஸீs, வீs நீக்ஷீவீனீவீஸீணீறீ வீஸீ tலீமீ யீuறீறீ sமீஸீsமீ ஷீயீ tலீமீ ஷ்ஷீக்ஷீபீ. ஜிலீமீக்ஷீமீ வீs மீஸ்மீக்ஷீஹ் தீணீsவீs யீஷீக்ஷீ றீணீuஸீநீலீவீஸீரீ ணீ நீக்ஷீவீனீவீஸீணீறீ வீஸீஸ்மீstவீரீணீtவீஷீஸீ, ணீஸீபீ ணீsவீபீமீ யீக்ஷீஷீனீ ஜீஷீtமீஸீtவீணீறீ ஸ்வீஷீறீணீtவீஷீஸீs ஷீயீ றீணீஷ், tலீமீ பீமீstக்ஷீuநீtவீஸ்மீ sஷீநீவீணீறீ நீஷீஸீsமீஹீuமீஸீநீமீs யீஷீக்ஷீ லீuஸீபீக்ஷீமீபீs ஷீயீ னீவீறீறீவீஷீஸீs ஷீயீ ஜீமீஷீஜீறீமீ வீஸீ tலீமீ ஹிஷி ணீஸீபீ ணீக்ஷீஷீuஸீபீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ ஷீயீ லீவீs ஜீஷீறீவீநீவீமீsஷ்லீவீநீலீ ணீக்ஷீமீ தீமீவீஸீரீ நீஷீஸீtவீஸீuமீபீ தீஹ் ளிதீணீனீணீணீக்ஷீமீ வீஸீநீணீறீநீuறீணீதீறீமீ. கோல்ட்மன் இன்னும் பொதுவாக பலருடைய சூதாட்டக் கடன்களை தீர்க்க கருவூலத்தை சூறையாடியதில் போல்சனில் பங்கு, அவர் செயல்பட்ட விதம், மற்றும் நிதிய பிரபுத்துவத்தை ஊக நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றியதென்பது, உலகத்தில் குற்றம் (Criminal) என்ற சொல்லின் முழு இலக்கணம் ஆகும். ஒரு குற்றவியல் விசாரணை நடத்துவதற்கு அனைத்து தளமும் இதில் அடங்கியுள்ளது. சட்ட மீறல்கள் என்ற திறனைத்தவிர, இவருடைய கொள்கையினால் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் நூறாயிரக்கணக்கான மக்களுடைய வாழ்வில் பேரழிவு தரக்கூடிய சமூக விளைவுகளும் இருந்தன. இவை ஒபாமாவாலும் தொடரப்படுவதுடன், இவற்றின் இழப்பு கணக்கிலடங்காதவை ஆகும். ஆனால் போல்சன் ஒன்றும் ஒரு விதிவிலக்கல்ல. பல மில்லியன்களை கொண்ட வங்கியாளர் ஒரு மத்திரிசபையில் இடம் பெறுவது என்பது நிதிய தன்னலக்குழு எந்த அளவிற்கு சமூக, அரசியல் வாழ்வில் ஆதிக்கத்தின் மொத்த உருவாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதன் முக்கிய பிரதிநிதிகள்தான் பெருநிறுவன உயர்மட்ட நிர்வாக அறைகளுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகார அறைகளுக்கும் இடையே சுழலும் கதவினூடாக வந்து செல்லும் வண்ணமாக உள்ளனர். இத்தகைய பெரும் பிற்போக்குத்தன, ஊழல் நிறைந்த குப்பை இலாயம் என்பது ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதின் மூலம்தான் தூய்மைப்படுத்தப்பட முடியும். |