World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bill Clinton's visit to North Korea: a tactical shift in US foreign policy

பில் கிளின்டனின் வட கொரியப் பயணம்: அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தந்தரோபாய மாற்றம்

By John Chan
6 August 2009

Use this version to print | Send feedback

உலகை வியக்க வைத்த ஒரு நடவடிக்கையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மார்ச் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள இரு அமெரிக்க செய்தியாளர்களை விடுவிக்க கோருவதற்கு வட கொரியாவிற்கு செவ்வாயன்று வந்திருந்தார். ஒபாமா நிர்வாகத்தின் தனிப்பட்டபணி என்று விளக்கப்பட்ட இந்த வருகை உண்மையில் வாஷிங்டன் வடகொரியாவின் அணுசக்தி நெருக்கடியை ஒதுக்கி வைத்து ஈரானுடன் மோதலுக்கு தயார் செய்யும் விருப்பத்தைத்தான் அடையாளம் காட்டியது.

ஏப்ரல் 5ம் தேதி நீண்டதூர ஏவுகணை செலுத்துவதற்கான சோதனை முயற்சிக்கு அமெரிக்கா-ஜப்பான் இரண்டும் ஆதரவு கொடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கண்டன அறிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் வட கொரியா அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, இரு கொரியாக்கள் என்று ஆறு நாடுகள் பங்குபெறும் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறும் விருப்பத்தை அறிவித்தது. அதன் இரண்டாம் அணு சோதனையை பியோங்யாங் மே 25 அன்று நடத்தியது இதை ஒட்டி இன்னும் கடுமையான ஐ.நா.தீர்மானம் வந்தது. கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டின்போது கூட பில் கிளின்டனின் மனைவியான அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன், பர்மிய இராணுவ ஆட்சிக்கு அணுசக்தி மற்றும் ஏவுகணைப் பொருட்களை கொடுத்ததாக கூறப்படுதவற்கு வடகொரியாவை கடுமையாக தாக்கினார்.

வட கொரியத் தலைவர் இரண்டாம் கிம் ஜோங்கை கிளின்டன் சந்தித்த சில மணி நேரங்களுக்குள் பியோங்யாங்கின் உத்தியோகபூர்வ மத்திய செய்தி நிறுவனம் (KCNA) கிம், யூனாலீ, லாரா லிங் என்னும் இரு அமெரிக்க செய்தியாளர்களுக்கு "சிறப்பு மன்னிப்பு" கொடுத்த செய்தியை வெளியிட்டது. அவர்கள் மார்ச் மாதம் சீன-வட கொரிய எல்லையில் பிடிக்கப்பட்ட பின்னர் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்கள் வட கொரிய அகதிகள் பற்றி தகவல் சேகரிக்க முற்பட்டிருந்தனர். இரு செய்தியாளர்களும் விடுவிக்கப்பட்டபின் பியோங்யாங்கில் இருந்து கிளின்டனுடன் விமானம் மூலம் புதனன்றே புறப்பட்டனர்.

கிளின்டன் ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்து ஒரு செய்தியை எடுத்துச் சென்றதாக KCNA தகவல் கொடுத்தது. ஆனால் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இக்கூற்றை மறுத்தார். இது ஒரு "மனிதாபிமானத்திற்காக" மேற்கொள்ளப்பட்ட "தனிப்பணி" என்று வலியுறுத்தினார். வட கொரியா பற்றிய ஒபாமா நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ கொள்கையில் இருந்து கிளின்டன் பயணத்தை பிரிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதியுடன் எந்த தற்போதைய அரசாங்க அதிகாரிகளும் பயணிக்கவில்லை. மேலும் அரசாங்க விமானம் என்று இல்லாமல், ஒரு தனியாக வாடகைக்கு எடுத்த விமானத்தில் கிளின்டன் பயணித்தார்.

உண்மையில் கிளின்டனுடைய பயணம் வாஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையே இரகசிய பேச்சுவார்த்தைகளின் விளைவு ஆகும். உலகிற்கு முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல், ஒபாமா நிர்வாகம் ஒரு மாதத்திற்கு முன்பே கிளின்டனை வட கொரியாவிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டது. இது பியோங்யாங்கின் சிறப்பு வேண்டுகோளின்படி நடந்தது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுகிறது. "செவ்வாயன்று தற்போதைய, முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் இரண்டாம் கிம் ஜோங் கடிகாரத்தை திருப்பி வைக்கும் வகையில் 2000 ஆண்டுக் கடைசியில் கொரியப் போரை முறையாக முடிக்கும் விதத்தில் திரு.கிளின்டனுடன் உறவை மீட்க விரும்பினார் என்று நம்புவதாக கூறியிருந்தது."

கிளின்டனுடன் பயணித்தவர்களில் அவருடைய முன்னாள் வெள்ளை மாளிகை அலுவலர் தலைவரான ஜோன் போடெஸ்டாவும் இருந்தார். இவர் ஒபாமாவின் பதவிமாற்றக் காலத்திலும் தலைவராக இருந்தார். கிளின்டனை விமான நிலையத்தில் வரவேற்ற உயர்மட்ட வட கொரிய அதிகாரிகளில் ஆறு நாடுகள் பங்கு பெறும் கூட்டங்களில், நாட்டின் தலைமை அணுசக்தி பற்றி பேச்சு நடத்துபவரான கிம் கை க்வானும் இருந்தார்.

கிளின்டனின் பயணத்தின் அரசியல் நோக்கம் வடகொரியாவை அமெரிக்காவுடன் ஏதேனும் ஒருவிதத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தும் நிபந்தனைகளுக்கு தயார் செய்வது ஆகும். இதையொட்டி பியோங்யாங்கின் "அணுசக்தி நெருக்கடி" இப்பொழுதைக்கு ஒதுக்கி வைக்கப்படும்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நிலைப்பாட்டின்படி ஒபாமா நிர்வாகத்தின் முன்னுரிமை ஈரானிய ஆட்சிக்குள் இருக்கும் பிளவுகளை பயன்படுத்திக் கொள்ளுவது ஆகும். கடந்த வாரத்தில் ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய ஏற்றுமதிகளை குறைப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியது. இது தெஹ்ரானை அதன் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதும், மேலும் அந்நாட்டிற்குள் அரசியல் உறுதியைச் சீர்குலைத்து ஈரானிய உயரடுக்கில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புக்குகளுக்கு கூடுதலான ஒத்துழைப்பு கொடுக்கும் பிரிவை அதிகாரத்திற்கு கொண்டுவருதல் ஆகும்.

இரு அமெரிக்க செய்தியாளர்களை விடுவிப்பதற்காக பியோங்யாங்கிற்கு கிளின்டனை அனுப்பியதில், வாஷிங்டன் தெஹ்ரானிக்கும் ஒரு செய்தியை கொடுத்துள்ளது. அதுவும் மூன்று அமெரிக்கர்களை ஈரானிய ஈராக் எல்லைகளில் கடந்த மாதம் தடுத்துக் காவலில் வைத்துள்ளது. அதாவது அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயார் என்பதை தெரிவிக்கிறது. மற்றொரு கருத்து ஐ.நா. பாதுகாப்புக் குழு ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக சுமத்தியுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு சீனா மற்றும் ரஷ்ய எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பதும் ஆகும். ஒரு நிதானமான அணுகுமுறைக்கு அடையாளம் காட்டும் விதத்தில், வாஷிங்டன் ஐ.நா.வில் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவில் இருந்து சாதாகமான விடையிறுப்பை அடையக் கூடும்.

ஒபாமா நிர்வாகம் புஷ்ஷின் ஜனாதிபதி ஆட்சியின் வடகொரியாவுடன் ஆறு நாடுகள் கூட்டத்தின் மூலம்தான் பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பதை தொடர்ந்து வந்தாலும், வாஷிங்டன் பியோங்யாங்கிற்கு குறைந்த அளவு சலுகைகளை கொடுக்க முன்வந்துள்ளது. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கு அமெரிக்க உதவி வெளிவிவகார செயலாளராக இருக்கும் குர்ட் காம்ப்பெல் ஜூலை மாதம் சியோலுக்கு சென்று பியோங்யாங்கிடம் "இரு வழி" அணுகுமுறை பற்றி விவாதித்தார். "பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தேவை என்றாலும்... அவை வடகொரியா மீது கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் வடிவமைப்பை கொண்டு இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினாலும். அது அணுவாயுதத் திட்டத்தை கைவிட்டால் அமெரிக்கா வட கொரியாவிற்கு "பரந்த சலுகைகளை" தருவதாகவும் கூறினார்.

ஜூலை 24ம் தேதி ஐ.நா.விற்கு வட கொரியாவின் தூதர் சின் சன் ஹோ ஒரு அபூர்வ செய்தியாளர் கூட்டத்தைக்கூட்டி, "பொது அக்கறைகள்" பற்றி ஒபாமா நிர்வாகத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த பியோங்யாங் ஆர்வம் கொண்டிருக்கிறது என்று அறிவித்தார். தென் கொரியாவின் JoongAng நாளேட்டின் கருத்துப்படி, ஒரு தெற்கு கொரிய அதிகாரி கடந்த வாரம் அமெரிக்காவும் வடகொரியாவும் இரு அமெரிக்க நிருபர்களை பொது மன்னிப்பு கொடுத்து விடுவிப்பது பற்றி ஒரு உடன்பாடு கொண்டுள்ளன என்று அறிவித்தது. வட கொரியாவிற்கு யார் வருவது, எப்பொழுது என்பதுதான் முடிவெடுக்கப்படவேண்டும்" என்று அந்த ஆதாரம் கூறியது.

செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்ட் வடகொரியாவிற்கு கிளின்டன் பயணிக்க இருப்பது பற்றிய திட்டமிட்ட ஒரு ஆதாரத்தை மேற்கோளிட்டு ஒபாமா நிர்வாகம் முதலில் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோரைத் தேர்ந்தெடுத்திருந்தது என்று எழுதியது. அவர்தான் சான் பிரான்ஸிஸ்கோவை தளமாக கொண்ட Current தொலைக்காட்சி நிலையத்தின் இணை நிறுவனர் ஆவார். அதுதான் இரு அமெரிக்க செய்தியாளர்களையும் பணியில் இருந்தியிருந்தது.

ஆனால் பியோங்யாங் இன்னும் கூடுதலான செல்வாக்கு பெற்ற நபர் வரவேண்டும் என்று விரும்பியது. அப்பொழுதுதான் அமெரிக்காவுடன் உறவுகளை சீரமைக்க விரும்பும் தன் கருத்துக்களை வெளியிட முடியும் என்றும் பலமற்ற கிம் ஜோங் இல்லின் ஆட்சிக்கு வடகொரிய மக்களின ஆதரவை பெற பெரிதும் உதவும் என்றும் விரும்பியது. கடந்த ஆண்டு ஒரு பெரும் முடக்க நோயினால் கிம் அவதிப்பட்ட நிலையில், பியோங்யாங்கில் அவருக்கு பிறகு பதவிக்கு யார் வருவார் என்ற கேள்வி பெரிதாக உள்ளது. ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையே இது அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடும்.

பியோங்யாங்கின் அணுவாயுதத் திட்டத்தை ஒட்டி கொரிய தீபகற்பத்தை கிளின்டன் நிர்வாகம் போரின் விளிம்பில் நிறுத்தியபோது முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 1994ல் அங்கு சென்றதற்கு பின்னர் அமெரிக்க அரசியலில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் என்ற தகுதியில் கிளின்டன்தான் வட கொரியாவிற்கு சென்றுள்ளார். அப்பொழுது ஒரு புதிய கொரியப் போர் ஏற்பட்டால் அதில் இருந்து இயற்கை சேதங்களும் உயிரிழப்புக்களும் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை கூறியதை அடுத்து கிளின்டன் பின்வாங்கியிருந்தார்.

கார்ட்டரின் "உத்தியோகபூர்வமற்ற" பயணம் பியோங்யாங்கிற்கும் கிளின்டன் நிர்வாகத்திற்கும் இடையே உடன்பட்ட வடிவமைப்புக்கான (Agreeed Frameworkd) தளத்தை அமைத்தது. யொங்ப்யோனில் கொண்டிருந்த அதன் புளூட்டோனியத் தள உலையை அகற்றிவிடுவதற்கு பியோங்யாங் ஒப்புக் கொண்டது. ஆனால் அதற்கு ஈடாக இரு மிருதுநீர் உலைகள் (light-water reactors) மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள், வாஷிங்டனுன் இராஜதந்திர உறவு சீர்படுத்துதல் ஆகியவற்றைக் கோரியது.

அமெரிக்க-வட கொரிய உறவுகள் அதற்கு அடுத்த ஆண்டுகளில் உச்சகட்டத்தை அடைந்து முன்னாள் வெளிவிவகார செயலாளர் மெடலீன் ஆல்பிரைட்டின் 2000ம் ஆண்டு பியோங்யாங் நோக்கிய வரலாற்றுத்தன்மை வாய்ந்த பயணத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன்பின் வடகொரியாவின் இரண்டாம் உயர்ந்த இராணுவத் தளபதியான ஜோ ம்யோங்ரோக் வாஷிங்டனுக்கு பயணித்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அதில் கொரிய தீபகற்பத்தில் மோதல்கள் உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வரவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அங்கு அமெரிக்கா இன்னமும் தென் கொரியாவில் நிறைய படைகளை கொண்டிருந்தது. முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி கிம் டேஜங் தன்னுடைய புகழ்பெற்ற "சூரியஒளி கொள்கையை" பிரகடனப்படுத்தினர். அது பொருளாதார ரீதியாக வடகொரியாவுடன் இணைவதற்கு தயாராக இருந்தது. இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

உண்மையில், கிளின்டனின் கீழ் வட கொரியாவிற்கான தந்திரோபாய மாற்றம் என்பது அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள் மத்திய ஆசியா, காஸ்பியன் பகுதி மற்றும் யூரேசிய கண்டத்தின் மத்திய பகுதிகளில் அதன் மூலோபாய மேலாதிக்கத்தை நிறுவ வேண்டிய தேவைகளுடன் பிணைந்திருந்தது. கொரிய தீபகற்பத்தின் சமாதானம் என்று அழைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்த பின்னர் கிளின்டன் 1999ல் சேர்பியா மீது நவ-காலனித்துவ போரைத் தொடக்கினார்.

ஆனால் உடன்பட்ட வடிவமைப்பு உறுதியளிக்கப்பட்ட இரு மிருது நீர் உலைகளை வட கொரியாவிற்கு அளிக்கவில்லை. அச்சலுகை வலதுசாரி குடியரசுக் கட்சியினரால் எதிர்க்கப்பட்டது. இதனால் இந்த உடன்பாடு புஷ் ஆட்சிக்கு 2001ல் வந்தவுடன் முடக்கப்பட்டது. 2002ல் புஷ் உடன்பாட்டை தூக்கி எறிந்ததுடன், வடகொரியா இரகசியமாக தனி யூரேனிய செறிவுபடுத்தும் திட்டத்தை அபிவிருத்திசெய்கின்றது என்ற காரணத்தைக்கூறினார். அந்த நடவடிக்கை வட கொரியா "தீமையின் அச்சின்" ஒரு பகுதியாக வடகொரியா உள்ளது என்று கூறிய பின்னர் வந்தது. -ஈரானும் ஈராக்கும் மற்ற இரு நாடுகளாக அத்தீமையின் அச்சில் குறிக்கப்பட்டன. இதையொட்டி கொரிய தீபகற்பத்தில் அழுத்தங்கள் அதிகரித்தன. வட கொரியா அணுவாயுத பெருக்கத்திற்கு எதிரான உடன்பாட்டில் NPT இருந்து 2003ல் விலகிக் கொண்டு எரிக்கப்பட்ட எரிபொருள் குழாய்களில் (Fuel rod) இருந்து புளூட்டோனியத்தை எடுக்கும் வழிவகைகளை மீண்டும் தொடங்கியது.

அதே நேரத்தில் புஷ் நிர்வாகம் சீனா ஏற்பாடு செய்திருந்த ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பி வடகொரியா மீது அழுத்தத்தை தொடர முயன்றது. இது 2003ல் ஈராக் மீது அமெரிககப் படையெடுப்பை வாஷிங்டன் நடத்தத் தொடங்கிய நேரத்தில் இருந்தது. ஈரான் மீதான படையெடுப்பிற்கு போலிக்காரணம் சதாம் ஹுசைனிடம் இருந்ததாக கூறப்பட்ட "பேரழிவு ஆயுதங்கள்" ஆகும். இவை ஒருபோதும் இருந்ததில்லை; வட கொரியா வெளிப்படையாக தான் அணுவாயுதங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. இந்த ஒவ்வாநிலை மூலோபாய ரீதியாக எண்ணெய் வளம் கொழித்த மத்திய கிழக்கைவிட உலகாதிக்கத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்டத்தில் வடகொரியா குறைந்த முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருந்தது என காரணம் கூறப்பட்டது. மேலும் வாஷிங்டன் வடகொரியாவின் முக்கிய நட்பு நாடான சீனாவிடம் பொருளாதார ரீதியாக கூடுதலாக தங்கியிருக்கவேண்டியிருந்தது.

ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைகள் நீடித்தும் கடினமாகவும் இருந்தன. இதற்கு முதல் காரணம் புஷ் நிர்வாகம் வட கொரியாவின் அணுவாயுத அகற்றல் வழிமுறைகள் மதிப்பீடு செய்யவேண்டும் என்பது போன்ற பல கூடுதல் கோரிக்கைகளை முன்வைத்தது ஆகும். செப்டம்பர் 2005ல் உடன்பாட்டு வடிவமைப்பு போன்ற ஒப்பந்தம் அடையப்பட இருந்த நேரத்தில், ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. இதற்குக் காரணம் அமெரிக்க நிதி அமைச்சரகம் Macau வைத் தளமாக கொண்ட Banco Delta Asia வில் இருந்த வடகொரியாவின் $25 மில்லியன் சொத்துக்களை கிட்டத்தட்ட முடக்கிவிட்டதுதான். இறுதியில் வட கொரியா அக்டோபர் 2006ல் அதன் முதல் அணுவாயுத சோதனையை நடத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டது. வாஷிங்டன் அப்பொழுதுதான் சலுகைகளை கொடுக்க அழுத்தத்திற்குள்ளாகும் என்று கருதப்பட்டது.

பெப்ருவரி 2007ல் வட கொரியா அணுசக்தி நிலையங்களை முடக்கி, அகற்றுவதற்கும் முன்முயற்சிகளை மேற்கொள்ள முடிவெடுத்தவுடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஈடாக எரிசக்தி உதவியும் அமெரிக்காவுடன் உறவுகள் சீரடைய பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்றும் கோரப்பட்டது. அமெரிக்கா, சீனா இரண்டும் வடகிழக்கு ஆசியாவில் அணுவாயுதப் போட்டி பற்றி கவலை கொண்டாலும், குறிப்பாக ஜப்பானும் அணுவாயுதங்களை வளர்க்கும் வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், வட கொரியாவின் அணுவாயுதச் சோதனை ஒன்றும் புஷ் நிர்வாகத்தை பின்வாங்க செய்யவில்லை.

நாட்டிற்கு எதிராக இராணுவத் தாக்குதல் வரக்கூடும் என்ற ஆழ்ந்த விவாதங்களுக்கு இடையே புஷ் நிர்வாகம் ஈரான்மீது அழுத்தத்தை அதிகரித்தது. வட கொரியாவுடனான ஒப்பந்தம் வாஷிங்டனுக்கு நேரத்தைக் கடத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது. ஏனெனில் அப்பொழுது அது ஈரானிடம் கவனத்தை காட்டியது. புஷ் ஜனாதிபதி வரைகாலம் முடிவதற்கு முன்னதாக, ஆறுநாடுகள் பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2008ல் மீண்டும் முறிந்தன. இதற்குக் காரணம் அமெரிக்கா கூடுதலான கோரிக்கைகளை மதிப்பிடுவதற்காக முன்வைத்தது. அப்பொழுது வட கொரியா யாங்ப்யோன் உலையை மூடிவிட்டு அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. புதிய ஒபாமா நிர்வாகம் சலுகைகளை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்காக, பியோங்யாங் மீண்டும் அதன் பேர நடவடிக்கையான அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களுக்கு திரும்பியது.

வடகொரியா அணுவாயுத திட்டத்தை கைவிடுவதாக கூறிய உறுதிமொழிகளை பூர்த்தி செய்வதில் தோற்றுவிட்டது என்ற பேச்சுக்கள் இருந்தாலும், ஜனநாயக, குடியரசு இரு கட்சிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்த அமெரிக்க அரசாங்கம்தான் வட கொரியாவின் "அணுசக்தி நெருக்கடிக்கு" காரணம் என்று 1990களில் இருந்து சான்றுகள் எடுத்துகாட்டுகின்றன. பியோங்யாங்கின் அணுசக்திதிட்டம் வடகிழக்கு ஆசியாவில் அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்காவிற்கு வசதியான போலிக்காரணம் ஆகும். தென்கொரியா மற்றும் ஜப்பானில் இதன் வலுவான இராணுவ நிலைப்பாட்டை நியாயப்படுத்த உதவும். அது அதன் வல்லரசுப் போட்டி நாடுகளுக்கு எதிராகவும், குறிப்பாக சீனாவிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம். பியோங்யாங்கில் கிளின்டன் இராஜதந்திர நெறியில் செய்துள்ள செயல் ஒரு தந்திரோபாய செயல்தான். இது விரைவில் மாற்றப்படலாம். தன் உலக மேலாதிக்க முயற்சியில் வாஷிங்டனின் உடனடித் தேவைகளை பொறுத்து அது உள்ளது.

ஏற்கனவே அமெரிக்க ஆளும் வட்டங்களில் மிகத்தீவிர இராணுவவாத பிரிவுகள் கிளின்டன் பயணம் பற்றி தாக்குதல் நடத்தியுள்ளன. புஷ்ஷின் ஐ.நா.விற்கான தூதரான ஜோன் போல்ட்டன் "இதுதான் பணய எடுப்பிற்கு வெகுமதி போலும். அடுத்து பில் தெஹ்ரானுக்கு சென்று அங்கு உள்ள உல்லாசப்பயணிகளையும் மீட்கப் பயணிப்பாரா?" என கூறினார்.