World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The political lessons of the Detroit mayoral elections டெட்ரோயிட் மேயர் தேர்தலின் அரசியல் படிப்பினைகள் By D'Artagnan Collier, SEP candidate for Detroit Mayor டெட்ரோயிட் மேயர் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து, உதவி புரிந்த ஒவ்வொருவருக்கும் மற்றும் செவ்வாயன்று ஆரம்பகட்டத் தேர்தலில் எனக்காக வாக்களித்த 1,200 க்கும் மேற்பட்டவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாக்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. எங்களுடைய பிரச்சாரம் பற்றி அனேகமாக ஊடகங்கள் முழு இருட்டடிப்பு செய்திருந்தபோதிலும், டெட்ரோயிட் தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க தட்டினர் ஒரு முழு நனவுடன் கூடிய முடிவாக சோசலிச வேட்பாளருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுத்தனர். தேர்தல் நடப்பதற்கு பல காலம் முன்னரே அரசியல் மற்றும் செய்தி ஊடகங்கள் நடைமுறையில் ஏற்கனவே அதன் வேட்பாளராக --தற்போதைய மேயரும் பல மில்லியன்களின் சொந்தக்காரரும் வணிகருமான டேவிட் பிங்கை தேர்ந்தெடுத்துவிட்டது. செவ்வாயன்று அவர் 74 சதவிகித வாக்குகளை பெற்றார். நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மறுகட்டத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை பெற்ற டாம் பாரோவை எதிர்கொள்ளுவார். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற சதவிகிதத்தைவிட மிக முக்கியமானது தொழிலாள வர்க்கம் பெருமளவில் வாக்களிக்காததுதான். டெட்ரோயிட்டில் பதிவு செய்த வாக்காளர்களில் 17 சதவிகிதத்தினர்தான் வாக்களித்தனர். இதன் பொருள் மொத்த வாக்காளர் பட்டியலில் 10 சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாகத்தான் பிங் வாக்குகளை பெற்றார் என்பதாகும். இந்த வாக்களிப்பு நகரத்தின் அரசியல் ஆளும்வர்க்கத்திற்கும் பிங்கிற்கும் ஒரு ஜனநாயக உரிமையை வழங்குகின்றது என்ற கருத்து மோசடித்தனமானதாகும். மக்களில் பெரும்பாலானவர்கள் நகர சபை அரசியலுக்கு முற்றிலும் அந்நியமான போக்கைக் கொண்டுள்ளனர். முழுமையான உணர்வு பல மட்டங்களில் இருக்கையில், அவர்கள் ஜனநாயகக் கட்சியின் முழு கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் அரசியல் அமைப்புக்கள், ஊழலில் மூழ்கி பல பெருநிறுவன நலன்களுடன் பிணைந்துள்ளது என்றும் காண்கின்றனர். முன்னோடியில்லாத்தன்மையற்ற நிலைமைகளுடைய ஒரு பொருளாதார நெருக்கடிக்கு இடையே, பெருநிறுவன ஆதரவு கொடுக்கும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரம் ஒரு அடிப்படையான பிரச்சினைக்கு ஆதிக்கம் செலுத்தியது அதாவது: வரவு-செலவு திட்டத்தை சரி செய்வதற்கு செலவீனங்களை வெட்டுதல் என்பதே அது. பிரச்சாரத்தின் போது, பொருளாதார நெருக்கடியினால் இடர்பாட்டுக்கு உள்ளானவர்களையும் தங்கள் வேலைகள் அழிக்கப்படுவதை காண்கின்றவர்களையும் தங்கள் வீடுகள் முன்கூட்டியே விற்பனைக்கு வருகின்றவர்களையும், அவர்களின் பாடசாலைகள் மூடப்படுகின்றதையும் மற்றும் அவர்களின் ஊதியங்கள் பெரிதும் கண்டபடிவெட்டப்படுகின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் நாம் பேசினோம். ஆனால் இந்த நகர சபை வேட்பாளர்கள் டெட்ரோயிட் மக்களை எதிர்கொள்ளும் கடுமையான இந்தப் பிரச்சினைகளை பற்றி எதையும் முழுமையாக கூறவில்லை. இப்பொழுது டெட்ரோயிட் தொழிலாளர்கள் மீதான தன்னுடைய தாக்குதலை பிங் தீவிரமாக தொடர்வார். புதன் காலை, தேர்தல் முடிவுகள் வந்த சில மணி நேரத்தில் அவர் அரசாங்க திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்களில் மகத்தான குறைப்புக்களை அறிவித்தார். அவற்றில் நகரத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் வேலை செயல்படுத்தப்படும் என்றும் 500 முதல் 700 பணிகள் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முக்கிய நகரப் பணிகளை தனியார்மயமாக்கும் நோக்கத்தை அவர் கொண்டுள்ளார், அதே நேரத்தில் டஜன் கணக்கான பொதுப் பாடசாலைகள் மூடப்படும். தொழிலாள வர்க்கம் முழுவதையும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைகின்றன. இந்த வாரம் முன்னதாக ஜெனரல் மோட்டார்ஸ், 7,500 பணிகளை நாடு முழுவதும் அகற்றிவிடும் என்று அறிவித்துள்ளது. இவற்றில் மிச்சிகனில் இருக்கும் பலவும் அடங்கும். கடந்த சில ஆண்டுகளில் கார் தொழிலில் அகற்றப்பட்ட நூறாயிரக்கணக்கான பணிகளுக்கு அதிகமாக இவை வந்துள்ளன. உத்தியோகபூர்வ வேலையின்மை டெட்ரோயிட்டில் ஏற்கனவே கிட்டத்தட்ட 25 சதவிகிதம் என்று உள்ளது. உண்மையான வேலையின்மை இதைவிட அதிகமாக இருக்கும். நகரத்தில் பெரும் பிரிவு மக்கள் பெரு மந்த நிலைக்கு ஒப்பான நிலைமைகளில் ஏற்கனவே இடருற்று கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பிரச்சாரத்தின் மத்திய நோக்கம் டெட்ரோயிட்யிலும் நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு தலைமை கொடுத்து அதற்கு ஊக்கமும் கொடுக்கவேண்டும் என்பதாகவே இருந்தது. மற்றய வேட்பாளர்கள் வலதுசாரித் திட்டங்கள் மற்றும் வெற்றுத்தன கருத்துக்களை இணைத்து முன்வைத்தபோது, நாங்கள் நெருக்கடியின் வேர் முதலாளித்துவ முறை என்று வலியுறுத்தியதுடன், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களுக்காக பொருளாதார, அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடும் கீழ்ப்படுத்தப்படுவதுதான் என்றும் கூறினோம். தொழிலாள வர்க்கத்திற்கு தனக்கென ஒரு அரசியல் கட்சி தேவை என்று நாங்கள் வலியுறுத்தினோம். அது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியினர் பல தசாப்தங்களாக டெட்ரோயிட்டை கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொண்டு, அடிப்படை சமூகப் பணிகளை தகர்க்கப்பதிலும் பல்லாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதையும் செய்வதற்கு மேற்பார்வையிட்டுள்ளனர். ஒபாமா நிர்வாகத்தின் உண்மையான இயல்பைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு விளக்க முற்பட்டோம். ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்திருக்கையில், நிர்வாகம் உண்மையில் ஒவ்வொரு பிரச்சினையிலும் வலதுசாரி செயற்பட்டியலை செயல்படுத்தி, டிரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்கு அளித்தது. அதே நேரத்தில் கார்த் தொழிலாளர்களும் தொழிலாள வர்க்கமும் முழுமையாக "தியாகம்" செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன் விளைவாக டெட்ரோயிற்றையும் ஏனைய நகரங்களையும் பீடித்துள்ள நெருக்கடிக்கு காரணமானவர்கள் முன்னொருபோதுமில்லாதளவிலான இலாபங்களுடன் முன்னைரை விட மிக வசதியுடன் இருப்பதுடன், பாரிய வங்கிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகளும் கிடைத்துள்ளன. தொழிலாளர்களை பழைய அமைப்புக்களிலிருந்து அதாவது "தொழிற்சங்கங்கள்" என்று கூறப்படுபவற்றிடமிருந்து உடைத்துக் கொள்ளும்படியும் அழைப்பு விடுத்தோம். United Auto Workers, Detroit Federation of Teachers மற்றும் AFSCME நகரத் தொழிலாளர்கள் சங்கம் என்று அனைத்தும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு ஒத்துழைத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும் மற்றும் தயாரிக்கவும் தமது மட்டத்திலான சொந்த சுயாதீன அமைப்பும், குடியிருப்பு குழுக்களும் தேவையாகும். தேர்தல்களில் SEP நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தது. பயன்பாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மூடப்படல், வீட்டுக்கடன்கள் திவாலாதல் மற்றும் வீட்டைவிட்டு வெளியேற்றப்படல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் அறிக்கைகளை வெளியிட்டோம். அனைத்து பள்ளிகளும் திறந்திருக்க வேண்டும் என்றும் கல்விக்கு பரந்த முறையில் செலவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினோம். இன்னும் மூடல்களை தடுக்கும் வகையில் கார்த் தொழிலாளர்கள் ஆலைகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். பல பில்லியன் டாலர் பொதுப்பணித் திட்டங்கள் எடுத்து நம் நகரம் மறுகட்டமைக்கப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்தோம் மற்றும் அனைவருக்கும் தரமான வேலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தோம். ஆளும் வர்க்கமும் அதனிடம் ஊதியம் பெறும் பிரதிநிதிகளும் கெளரவமான வேலைகள், வாழ்க்கைத் தரங்களை பேண "பணம் இல்லை" என்று வலியுறுத்துகின்றனர். இது ஒரு பொய் ஆகும். வங்கிகள் பிணைஎடுப்பு மற்றும் போர் என்று வரும்போது நிறைய பணம் அங்கே இருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு ஒரு சோசலிசத் தீர்வு என்பது நாம் கூறியுள்ளபடி, அனைத்து முக்கிய வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருதலை உள்ளடக்கியிருக்கும். அதே நேரத்தில் தேசிய அளவில் தீவிரமான வகையில் செல்வம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இதில் செல்வந்தர்களுக்கு அதிக வரியும் அவர்கள் முறையற்று பெற்ற இலாபங்களை திரும்பப் பெறுதலும் இருக்க வேண்டும். சமூகத்தின் ஆதாரங்கள் தனியார் இலாப நலனுக்கு என்று இல்லாமல் சமூகத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். என்னுடைய மேயர் பிரச்சாரத்தின் மையப்புள்ளியாக இருந்தது, அனைத்து நிற, இன மற்றும் தேசிய எல்லைகளையும் கடந்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டம் ஆகும். எங்கள் தேர்தல் பிரச்சார அறிக்கையில் நாங்கள் உறுதியாக அடையாள அரசியலை நிராகரித்திருந்தோம். அவைதான் தொழிலாளர்களை பிரிக்கவும் முதலாளித்துவ முறைக்கு எதிரான எதிர்ப்பை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மிகச் சிறிய கறுப்பு உயர்தட்டினரே டெட்ரோயிட்டை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுள்ள நிலையில், இவைகளின் கொள்கைகளிலிருந்தே மகத்தான முறையில் நலன்களை பெற்றுள்ளன. அதே நேரத்தில் பெரும்பாலான அனைத்து இன தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமைகள் எப்பொழுதையும் விட மோசமாகத்தான் போய்விட்டன. இம் முன்னோக்கிற்கான போராட்டம் தேர்தல்களுடன் முடிவடைந்து விடவில்லை. இது இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. டெட்ரோயிட்டின் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் இப்பொழுது தங்கள் விருப்பத்திற்குரிய மேயரை வெற்றிகரமாக பதவியில் இருத்தியுள்ளது பற்றி தங்களையே பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தடையின்றி இப்பொழுது தொடரலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் அவர்கள் பார்வை குறுகியது. தேர்தல்கள் வரவிருக்கும் பெரும் வர்க்கப் போராட்டங்களுக்கு அரங்கைத்தான் அமைத்துக் கொடுத்துள்ளன. வரவிருக்கும் மாதங்களில், சோசலிச சமத்துவக் கட்சி இடைவிடாமல் டெட்ரோயிட்டிலும் நாடு முழுவதும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், தலைமை தாங்கவும் பிரச்சாரம் செய்யும். என்னுடைய பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து எனக்கு வாக்களித்தவர்களை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்: எங்கள் முன்னோக்கை நன்கு படியுங்கள், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருதல் என்ற முடிவை எடுத்துக்கொள்ளுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்வது எப்படி என்பது பற்றி கூடுதலாக அறிய இங்கே கிளிக் செய்யவும். |