World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

 WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Mass abstention in Detroit mayoral elections

டெட்ரோயிட் மேயர் தேர்தலில் ஏராளமான மக்கள் பங்குபெறவில்லை

SEP candidate wins significant vote

SEP வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார்

By Jack Cody and Jerry White
6 August 2009

Use this version to print | Send feedback

வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களில் ஆறில் ஒருவர்தான் செவ்வாயன்று நடைபெற்ற "கட்சி சார்பற்ற" ஆரம்ப கட்டத் தேர்தலில் கலந்து கொண்டனர். இந்த பங்குபற்றலானது, நீண்ட காலமாக ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இந்த நகரத்திலுள்ள அரசியல் அமைப்பு முறையிலிருந்து ஏராளமான மக்கள் அந்நியமாகி ஒதுங்கி இருக்கும் போக்கையே காட்டுகிறது.

மில்லியனாரான வணிகரும் தற்போதைய மேயரும் இந்த நகரத்தின் பெருவணிகத்தினரதும் அரசியல் உயர்தட்டினரது ஆதரவைப் பெற்றவரும் 74 சதவிகித வாக்குளைப் பெற்று பெற்றுக் கொண்டவருமான டேவிட் பிங் உம் 11 சதவிகித வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளவரான ரொம் பாரோவும் நவம்பர் 3 திகதி அன்று நடைபெறவுள்ள இறுதிக் கட்ட தேர்தலில் பங்குபற்றுவார்கள்.

பிங்கை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை செய்தி ஊடகங்கள் அனேகமாக இருட்டடிப்பு செய்திருந்தநிலையிலும் SEP இன் டெட்ரோயிட்டின் மேயர் பதவிகான வேட்பாளர் டார்ட்டானன் கொலியர் 1,265 வாக்குகளை--கிட்டத்தட்ட அளிக்கப்பட்ட வாக்குகளில் 1.4 சதவிகிதத்தை பெற்றுக்கொண்டார். நகரத்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு கொலியர் ஒரு சோசலிச விடையிறுப்பை முன்வைத்திருந்தார். இந்த நகரம் கார்த் தயாரிப்பு தொழிலின் செயற்பாட்டுகளின் வீழ்ச்சியினாலும் பொருளாதார மந்த நிலையினாலும் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. வேலையின்மை விகிதம் 25 சதவிகிதமாக இங்கு உள்ளது.

வெற்றிபெற்றவரென அறிவிக்கப்பட்ட உடனேயே பிங், சமூக சேவைப்பணிகளை குறைக்கும் திட்டத்தின் பாகமாக நகர சபையிலுள்ள 500 முதல் 700 தொழிலாளர்கள் பணிநீக்கம் பெறுவார்கள் என்பதையும் அறிவித்தார். WWJ வானொலியில் புதன் காலை உரையாற்றியபோது அவர் கூறியதாவது, "பெரும் வேலை நீக்கங்களுடன், ஒரு வாரத்திற்கு நான்கு நாள் பணியும் கட்டாய விடுப்புக்களும் அத்தோடு நகரத்தின் சில பணிகளை ஏலம் விடுதல் ஆகியவை நகர பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க எடுக்கப்படவுள்ள சில நடவடிக்கைகளாகும்."

ஒரு ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தீவிர ஆதரவாளரும் ஏற்கனவே நடைபெற்ற மேயர் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்றாதவரும் நிதியப் பொறுப்பையும் மற்றும் "வீண் செலவைக் குறைக்க வேண்டும்" என்று கூறுபவருமான பரோவ், மேயர் பிங்கின் தொழிலாளர் வர்க்க விரோதக் கொள்கைகளுக்கு எவ்வித அரசியல் மாற்றீட்டையும் கொடுக்கவில்லை.

செவ்வாயன்று நடந்த ஆரம்ப கட்ட நகர சபை தேர்தலில் Charter Commission குழு மற்றும் பாடசாலையை சேர்ந்த சபையினரும் இந்த வேட்பாளர்களில் அடங்கியிருந்தனர். வாக்காளர்கள் நகர சபைப் பிரிவில் 167 பேரிருந்து 18 வேட்பாளர்ளை மட்டும் தெரிவுசெய்துள்ளனர். அவர்கள் இப்பொழுதுள்ள நவம்பர் மாத பொதுத் தேர்தலில் 9 இடங்களுக்காக போட்டியிடுவார்கள். முதல் தடவையாக போட்டியிடும் பல வேட்பாளர்கள் இதில் வெற்றிபெற்றுள்ளனர். இதில் தொலைக்காட்சி செய்தியாளர் சார்ல்ஸ் புக்கும் அடங்குவார். அவர் மிக அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

காங்கிரசின் உறுப்பினரான ஜோன் கோனியர்சின் மனைவியும் முன்னாள் இடைக்கால நகர சபைத் தலைவருமான மோனிகா கோனியர்ஸ் உறுதியான தோல்வியை பெற்றார். கடந்த மாதம் கூட்டாட்சி ஊழல் குற்றச் சாட்டுக்களை ஏற்றபின் பதவியை இவர் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார். அதாவது ஒரு $47 மில்லியன் Sludge-hauling செயற்பாட்டிற்காக அவர் தன் வாக்கை அளித்து $6,000 லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதத் தேர்தல் டெட்ரோயிட்டில் நான்காவது மேயர் தேர்தலாக இருக்கும். செப்டம்பர் 2008ல், ஜனநாயகக் கட்சியின் எழுச்சி பெறும் நட்சத்திரம் என்று பாராட்டப்பட்டவரான மேயர் Kwame Kilpatrick, ஒரு பகுதி செயற்பாட்டிற்காக இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார். அதில் இரு தவறான செயல்களுக்கும் ஒரு நீதியை தடைசெய்யும் குற்றத்திற்கும் குற்றங்களை செய்ததாக அவரே ஒப்புக் கொண்டார்.

ஜனநாயகக் கட்சி எந்திரத்தின் அப்பட்டமான ஊழல் ஒரு நீண்ட வழிவகையின் உச்சக்கட்டம் ஆகும். பல நகரங்களில் இருப்பதைப் போலவே, டெட்ரோயிட்டிலும் மத்தியதர வர்க்க கறுப்பர்களின் ஒரு பிரிவினர் 1960 களின் ghetto எழுச்சிகளை அடுத்து அரசியல், பொருளாதார சக்திகளாக நிலைகளுக்கு உயர்த்தப்பட்டனர். போலீஸ் அடக்குமுறை, வறுமை மற்றும் நிற பாகுபாடு ஆகியவை முதலாளித்துவத்திற்குள்ளும் இரு கட்சி முறை என்ற வடிவமைப்பிற்குள்ளும் தீர்க்கப்பட முடியும் என்ற போலித் தோற்றங்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காகவே இது செய்யப்பட்டது.

கறுப்புநிற ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள், டெட்ரோயிட்டின் மேயர் கோல்மன் யங் மற்றும் பதவிக்கு வந்தவர்களும் பெரு வணிகத்தின் நலன்களை அவர்களுடைய வெள்ளைநிற மேயர்கள் காத்ததுபோலவே விசுவாசத்துடன் கீழ்ப்பணிந்து காத்து, தங்களையும் தங்கள் நண்பர்களையும் செல்வம் கொழிக்குமாறு வளர்த்துக் கொண்டனர். அதே நேரத்தில் பெருநிறுவனங்களின் ஆணைகளை தொழிலாளர்கள்மீது--கறுப்பர்கள், வெள்ளையர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என்று வேறுபாடு இல்லாமல்--சுமத்தினார்கள்.

ஜனாதிபதி ஒபாமாவைப் போல் டேவிட் பிங்கும் உடன்பாட்டு நடவடிக்கை மூலமும் மற்றும் பிற கொள்கைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது தலைமைதாங்கி தாக்குதல் நடத்த ஒரு கறுப்பு உயர்தட்டினரையே பயன்படுத்தி நலன்களை அடைந்தவராவார். ஒரு பெரிய எஃகு மற்றும் கார் பாகங்களை போர்ட் நிறுவனத்திற்கு கொடுக்கும் முக்கிய நிறுவனமான பிங் குழுமத்தின் உரிமையாளரும் அமெரிக்காவில் இருக்கும் செல்வம் கொழிக்கும் ஆபிரிக்க அமெரிக்கர்களில் அவர் ஒருவராவார்.

செய்தி ஊடகம் பிங்கிற்கான வாக்கு--நகரத்தில் வாக்குப் அளிக்கும் உரிமையுடைய வாக்காளர்களில் 10 சதவிகித்திற்கும் சற்று அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்றார்--அவருடைய பிற்போக்குத்தன கொள்கைகளுக்கான ஆதரவு என்று கூறுகிறது. செவ்வாயன்று Detroit News தலையங்கம் கூக்குரலிட்டது அதாவது, "நல்ல செயல், டெட்ரோயிட்." "இனி காத்திருக்க தேவையில்லை: டெட்ரோயிட் மாற வேண்டும்" என்று Detroit Free Press கூறியது.

செய்தி ஊடகத்தின் திருப்தி நகரத்தில் இருக்கும் சமூக உண்மைக்கு முற்றிலும் எதிரிடையாக உள்ளது. வெடிப்புத் தன்மையுடைய வர்க்க அழுத்தங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இவைகள் அரசியல் முறையில் வெளிப்பாட்டை காணவில்லை மேலும் அவை தவிர்க்கமுடியாமல் பின்னர் வெளிமட்டத்திற்கு வெளிப்படும். டெட்ரோயிட்டில் உள்ள தொழிலாள வர்க்கமானது--வர்க்கப் போராட்டத்தில் மதிப்புவாய்ந்த மற்றும் ஆழ்ந்த மரபியத்தைக் கொண்டது--மீண்டும் வெகுஜனப் போராட்டங்களில் நுழையும்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் நடவடிக்கையில் டார்ட்டனன் கொலியர் ஒருவர்தான் தொழிலாள வர்க்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து தொழிலாளர்கள், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளிலிருந்து உடைத்துக் கொண்டு, SEP ஐ வெகுஜன அரசியல் கட்சியாகவும் சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாவும் கொண்ட ஒரு தொழிலாள வர்க்கக் கட்சியாகவும் கட்டமைக்க வேண்டிய தேவையை விளக்கினார்.

கொலியர் பெற்ற 1265 வாக்குகள், குறிப்பாக ஏராளமானவர்கள் தேர்தல்களில் பங்கு பெறாத நிலையில் பெரும் எண்ணிக்கையானவை இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்கவையானவை. பல தொழிலாளர்கள் வாக்களிக்க செல்லாதிருப்பினும் வாக்களிக்க சென்ற தொழிலாளர்கள் ஒரு சோசலிச வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முழு உணர்வுடனேயே முடிவை எடுத்துள்ளனர். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் மாற்றீடு தேவை என்ற வளர்ச்சியான புரிதலின் அடையாளம் இதுவாகும் .