WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Los Angeles: immigrant workers protest layoffs,
repression
லாஸ் ஏஞ்சல்ஸ்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிநீக்கம், ஒடுக்குமுறைக்கு எதிராக
போராடுகிறார்கள்
By Rafael Azul and D. Lencho
4 August 2009
Use this version
to print | Send
feedback
Immigrant workers and their supporters protesting last Wednesday in Los
Angeles
கடந்த புதனன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர்ந்த
தொழிலாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும்.
அமெரிக்க புலம்பெயர்ந்தோர் மற்றும் சுங்க இலாக்கா அமுலாக்க
(Immigration and
Customs Enforcement - ICE)
கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 29ல், லாஸ் ஏஞ்சல்சில்
1,000த்திற்கும் மேலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பேரணி சென்றனர்.
நாடு முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகளின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும்
I-9
தணிக்கைகள் மற்றும்
E-Verify,
பெரியளவிலான பணிநீக்கங்கள் மற்றும் துடைப்புகளை பேரணியாளர்கள் எதிர்த்த போதினும், வெறுமனே நீக்கப்பட்ட
பணியாளர்களுக்கு மேலும் காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்று மட்டும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கிறார்கள்.
நூறு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நியமித்திருக்கும் மாட்டுழைப்பு கூடங்களின்
நகர தொழிற்சாலை தொடரின் மையத்தில் இருக்கும்
Alameda Avenueல்
பேரணி தொடங்கியது. பேரணியில் சென்ற தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனமான
American
Apparelஐ சேர்ந்தவர்கள்,
இதிலுள்ள 6,000 தொழிலாளர்களில் 2,000 பேர் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து ஆவணமில்லாமல்
புலம்பெயர்ந்தவர்கள் ஆவார்கள்.
மிக இளம் வயது பேரணியாளர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள் ;
பலர் தங்களின் நண்பர்கள்
மற்றும் குடும்பங்களுடன் நடந்தார்கள்.
"ளிதீணீனீணீ, மீsநீuநீலீணீ, மீstணீனீஷீs மீஸீ றீணீ றீuநீலீணீ!" ணீஸீபீ
"ளிதீணீனீணீ, ஜீக்ஷீஷீனீமீtவீstமீநீuனீஜீறீமீ!" ("ஒபாமா,
கவனிக்கவும், நாங்கள் போராட்டத்தில் இருக்கிறோம்!"
மற்றும்
"ஒபாமா,
நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள் - உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!")
என்ற இரண்டு கோஷங்கள்
தான் அதிகமாக கேட்டது.
ஏப்ரல் 4ல் எதிர்த்த பல ஆயிரங்களை விட இந்த பேரணி சிறியது தான். இவர்களின்
கோரிக்கைகளும் கூட மிகவும் மிதமாக இருந்தன.
ஏப்ரல் போராட்டத்தை எதிர்க்கும் வகையில், இந்த முறை அமெரிக்க கொடிகள்
ஏறத்தாழ முழுமையாக நீக்கப்பட்டிருந்தன. புலம்பெயர்ந்தோருக்கு முழு உரிமைகளையும் கோரிய மார்ச் 2006ன்
மாபெரும் பேரணிக்கு
பின்னர் இதுவரை,
இந்த பிரச்சனை வலதுசாரி நிகழ்ச்சி தொகுப்பாளர்களாலும், பிற்போக்குவாத குழுக்களாலும் முன்வைக்கப்பட்டது.
அந்த சமயத்தில், ஒரு மில்லியன் போராட்டக்காரர்கள் (அவர்களில் பலர் தங்களின் சொந்த தேசிய
கொடிகளையும், தங்களுக்கு அப்போது தோன்றிய தங்களின் சொந்த அறிவிப்புகள் மற்றும் கோஷங்களையும்
கொண்டிருந்தார்கள்), ஒரு புரட்சிகர வெடிப்பின் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில், லாஸ்
ஏஞ்சல்ஸ் தெருக்களில் வெள்ளமென திரண்டார்கள்.
எவ்வாறிருப்பினும், அதை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்கள் மிக கடுமையாக
கட்டுப்படுத்தப்பட்டன. 2009 ஏப்ரலில், வலதுசாரி அதிருப்தியாளர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், சோசலிச
குழுக்களிடமிருந்து துண்டறிக்கைகள் மற்றும் பத்திரிகைகளை வாங்க வேண்டாம் என்று பேரணியாளர்களை ஒருங்கிணைப்பாளர்கள்
தடுத்ததுடன், போராட்டக்காரர்களுக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளையும் அளித்தார்கள். ஆர்ப்பாட்டம்,
ஜனநாயக கட்சியுடன் தொடர்புடைய, அதன் ஒருங்கிணைப்பாளர்களின் அரசியலை பிரதிபலித்தது, மேலும் புலம்பெயர்ந்தோருக்கான
ஓர் அளவிலான சட்டங்களுக்காக ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் முறையீடுகளைக் அளிக்கும் மட்டத்தில் நின்றுவிட்டது.
துரதிருஷ்டவசமாக, இந்த முறை நட்சத்திரங்கள் மற்றும் கோடுகள் இல்லாமல் இருந்ததானது,
போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடையே ஓர் இடது திருப்பத்தின் பிரதிபலிப்பு இல்லாமல் இருந்தது, சர்வதேசியவாதம்
அல்லது வர்க்க ஐக்கியம் மீதான பார்வையும் மிக குறைவாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான
பிமீக்ஷீனீணீஸீபீணீபீ
நிமீஸீமீக்ஷீணீறீ பீமீ ஜிக்ஷீணீதீணீழீணீபீஷீக்ஷீமீs ஹிஸீவீரஸீ மிஸீtமீக்ஷீஸீணீநீவீஷீஸீணீறீ (நிமீஸீமீக்ஷீணீறீ கீஷீக்ஷீளீமீக்ஷீs ஙிக்ஷீஷீtலீமீக்ஷீலீஷீஷீபீ
மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஹிஸீவீஷீஸீபிநிஜிஹிமி)
மற்றும் தெற்கு கலிபோர்னியா புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு
(Southern California
Immigrant Coalition - SCIC)
ஆகியவை வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒருமாத
முன்னறிவிப்புக்கு மாறாக 90 நாட்கள் முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று மட்டுமே கேட்டது.
அவர்களின் வலைத்தளத்தில்,
"ஏராளமான
1-9 தணிக்கைகள் மற்றும்
E-VERIFY
ஆகியவற்றை ஒபாமா நிறுத்த வேண்டும்! என்று முறையிட, அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும்,
மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும்"
SCIC
அழைப்பு விடுக்கிறது. அனைத்து
தொழிலாளர்களுக்கும்
I-9
படிவங்கள் இருக்க வேண்டும், அத்துடன் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான தகுதியை
உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கோரப்படுகின்றன. ஒரு துணை திட்டம்,
E-Verify
என்று அதன் பெயர் குறிப்பிடுவது போல, புலம்பெயர்ந்தோரை
உடனுக்குடன் சோதிக்க தொழில்வழங்குனருக்கான ஒரு கருவியாக இருக்கிறது. ஏப்ரலில் முன்னர் நடத்தப்பட்ட ஒரு
பேரணியிலும் SCIC
இதே போன்றதொரு முறையீட்டை
முன்வைத்தது. (பார்க்கவும்:
"Thousands march in Los Angeles to support immigrant rights").
ICE
பிரச்சாரம், இணைந்துள்ள நிறுவனங்களின் இலாப தேவைகளுடன் பெருமளவில்
பொருந்தி உள்ளது. கடந்த மே மாதம், பதனிடப்பட்ட உணவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான
Overhill Farms,
சட்டவிரோதமாக பணியாற்றி
கொண்டிருந்ததாக கூறி 254 ஆவணமற்ற முழு-நேர தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. இவ்வாறு நீக்கப்பட்ட
முழு-நேர தொழிலாளர்களுக்கு மாற்றாக அவர்கள் இடத்தில் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. உயர்ந்த அளவிலான
வேலைவாய்ப்பின்மை நிலவும் நிலைமையின் கீழ், புலம்பெயர்ந்தவர்களோ அல்லது பிறரோ, திறமையில்லாத
தொழிலாளர்களை சுரண்டுவதற்கு மேலும் பல காட்டுமிராண்டித்தனமான வடிவங்களை செயல்படுத்த அரசின் அதிகாரத்தைப்
பயன்படுத்த முடியும் என்பதை தொழில்வழங்குனர்கள் காண்கிறார்கள்.
American Apparel லில்,
கடந்த டிசம்பரில் இருந்து உலகளவில் பணிநீக்கங்கள் நடந்த வருகின்றன. பொருளாதார நெருக்கடியின் விளைவாக
வேலை வெட்டுக்களை நடத்திய இந்நிறுவனம், பல தொழிலாளர்களுக்கு மாற்றாக அமையும் வகையில் புதிய இயந்திரங்களையும்
நிறுவியது. அவர்களால் போதிய ஆவணங்களை அளிக்க முடிகிறதோ இல்லையோ, பிற தொழிலாளர்கள் அனுபவிக்கும்
பணிநீக்கம் மற்றும் குறைந்த பணிநேரம் போன்ற பொருளாதார நெருக்கடியின் அதே விளைவுகளால் புலம்பெயர்ந்த
தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சராசரி தொழிற்சாலை தொழிலாளி
"குறைவாக
பயன்படுத்தப்படுவதாக"
அறிவித்த ஒரு தொழிற்துறை வல்லுனர் டோட் ஸ்லேட்டர் அறிவிப்பை சமீபத்தில்
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அதன் கட்டுரையில்
மேற்கோள் காட்டியிருந்தது.
"இது
போதிய ஜவுளிகளை உருவாக்குவதற்கான திறனை ஒருவர் பாதிப்பதை விட அதிகமாக ஒரு மனித-நலன் கதையாக
இருக்கிறது"
என்று குறிப்பிட்ட ஸ்லேட்டர்;
"இது சம்பளத்தில் எந்த
விளைவையும் கொண்டிருப்பதில்லை."
என்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸின் மாட்டுழைப்பு கூடங்களான ஜவுளித்துறை, பொம்மைகள் மற்றும்
உணவுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தி வருகிறது
என்பது ஒரு வெளிப்படையான இரகசியமாக உள்ளது. சட்டவிரோத பணிக்குழு என்றழைக்கப்படும் இந்த பணிக்குழுக்கள்
இருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸிலும் மற்றும் பிற மகாநகரங்களின் மையங்களிலும் உள்ள ஆலைகளுக்கு ஒரு வசதியை அளிக்கிறது.
அதாவது, இதுபோன்ற பணிக்குழுக்களை நீக்கும்போது பிரிப்பு தொகை, வேலைவாய்ப்பின்மை மானியம், அல்லது
பிற எவ்வித சட்டரீதியான நஷ்டஈடு பற்றி இந்த ஆலைகள் கவலைப்பட வேண்டி இருப்பதில்லை.
புஷ் நிர்வாகத்தின் ஒளிமங்கிய நாட்களில், சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கான வெளியேற்றங்களை
முகங்கொடுக்கும் புலம்பெயர்ந்தோர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மறுத்து நீதியரசர் மெக்கெல் முகசி ஒரு
தீர்ப்பை வழங்கினார். புலம்பெயர்ந்தோர் அவர்களின் வெளியேற்றங்கள் குறித்து முறையிடுவதை இந்த தீர்ப்பு கடுமையாக
பலவீனப்படுத்தியது. உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 15ன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாவது,
"முகசியின்
தீர்ப்பு, புலம்பெயர்ந்தோருக்கான நியாய நிர்வாகத்திற்கான தரப்படுத்தல் முறையை வெளியிடுகிறது, இது பிரத்யேகமானதாகவும்,
குடிமக்களுக்கு அளிக்கப்படுவதிலிருந்து சமமற்றதாகவும் உள்ளது, மேலும் சட்டப்பார்வைக்கு அப்பாற்பட்டதாகவும்
உள்ளது."
(பார்க்கவும் -
"US Justice Department rulings target immigrants' legal rights")
1930 களைப்
போலவே, ஆலைகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற இது வசதியாக
உள்ளது, மேலும் எளிதாக நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் இது மிக எளிமையாகவும் உள்ளது.
ஏப்ரலில் இருந்து,
SCIC
அதன் அலங்கார வார்த்தைகளுடன் சீறி எழுந்திருக்கிறது. அந்த அமைப்பின்படி,
"நாடு
முழுவதும் பத்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
I-9
தணிக்கைகளுக்கும்,
E-Verifyன்
பயன்பாட்டிற்கும் இலக்காகி உள்ளார்கள், இது பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு இட்டு சென்றுள்ளது. (ஆவணப்படுத்தப்பட்டதோ
அல்லது அவ்வாறு இல்லாமலோ) நாடு முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,
லத்தீனோ புலம்பெயர்ந்தோர்கள் மலிவான பலி ஆடுகளாக்கப்படுவதையும், அவர்கள் மீதான இன அடையாள பிரிவினைகளுக்கும்
ஒபாமா நிர்வாகம் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும். நிச்சயமாக இந்த மாற்றத்திற்காக நாம் வாக்களிக்கவில்லை,
மேலும் ஜனாதிபதி பராக் ஒபாமாவாலும் இதுபோன்ற புலம்பெயர்வு சீர்திருத்தம் உறுதியளிக்கப்படவில்லை."
என்று குறிப்பிட்டது. இந்த
அலங்கார திரைக்குப் பின்னால், இவ்வாறு கூறும் பல அமைப்புகள் ஒபாமாவின் தேர்தலுக்கு உற்சாகத்துடன் ஆதரவு
அளித்தன என்ற உண்மையை
SCIC
மறைத்து விடுகிறது.
ஜூலையில், உள்நாட்டு பாதுகாப்பு துறையின் பாகமாக உள்ள
ICE,
நாடு முழுவதிலுமுள்ள
652
வியாபாரங்களுக்கு பரிசோதனை சுற்றறிக்கைகள் (Notice
of Inspection - NOI)
அனுப்புவதன் மூலம் ஒரு தைரியமான, புதிய தணிக்கை முனைவை அது அறிமுகப்படுத்துவதாக"
அறிவித்தது. இந்த எண்ணிக்கை கடந்த நிதியாண்டு முழுவதிலும்
ICE
அனுப்பி இருந்ததை விட அதிகமாகும்.
ஒபாமா நிர்வாகம், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளையே பின்பற்றி உள்ளது ;
அதாவது உண்மையில், புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இது பேரணி முடிந்த
LA
பெடரல் கட்டிடத்தின் அடியில் பேசிய ஒரு
பேச்சாளரால் ஒத்துக்கொள்ளப்பட்டது. புஷ்ஷின் இனவாத அரசாங்கம் ("el
gobierno racista de Bush"),
ஒபாமாவின் இனவாத அரசாங்கத்தால் ("el
gobierno racista de Obama.")
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
ஒரு நம்பமுடியாத சமயத்தில்,
American Apparelன்
நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரி டோவ் சார்னே மேடை ஏறிய போது, ஜூலை 29ல்
SCIC
மற்றும்
HGTUIன்
வர்க்க கண்ணோட்டம் வெட்ட வெளிச்சமானது.
"நாம்
ஒன்றுசேர்ந்து இந்த போராட்டத்தில் வெல்வோம்"
என்று தொழிலாளர்களுக்கு சார்னே உறுதியளித்தார். முப்பது தொழிலாளர்களுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் தோற்றுவிக்கப்பட்ட
துணி நிறுவனத்தை குறிப்பிட்டு காட்டிய அவர், தற்போது அந்த நிறுவனம் உலகம் முழுவதும் 10,000
தொழிலாளர்களை கொண்டிருப்பதாக அவர் தொழிலாளர்களுக்கு (இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த வாரத்தில்
வேலை இல்லாமல் இருப்பார்கள்) நினைவுபடுத்தினார், அதாவது உண்மையில், எதிர்ப்பினால் ஒன்றும் பயனில்லை
என்று கூறும் தொழிலாளர்களுக்கான ஓர் எச்சரிக்கை தான் அது.
SCIC
மற்றும்
HGTUI
இரண்டும் 2008 ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவிற்கு ஆதரவு அளித்தன.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு பிரச்சார
குழு, அந்த பேரணியில் இருந்த
American Apparel
தொழிலாளர்களுடன் கலந்துரையாடியது.
Left to right: Maria, Glenda and Guilman
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள
American Apparel
நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட புலம்பெயர்ந்த
தொழிலாளர்களான கிளெண்டா, மரியா, கில்மேன் மற்றும் மார்வின் ஆகியோர் தற்போது நிறுவனத்திடமிருந்து
பணிநீக்க அறிவிப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். கடந்த வார போராட்டத்திற்கு அவர்களை எது அழைத்து வந்தது
என்பது குறித்து அவர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார்கள்.
கிளெண்டா கூறியதாவது:
"நடந்து வரும் ஒவ்வொன்றும்
நேர்மையற்றது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த பேரணிக்கு
வந்துள்ளோம்.
American Apparel
நிறுவனத்தில் பணியாற்றும் 2000த்திற்கும் மேம்பட்ட தொழிலாளர்கள் அந்நிறுவனத்திடமிருந்து கடிதங்களை பெற்றிருக்கிறார்கள்.
ஒரு மாதகால அவகாசம் அளித்திருக்கும் இந்த கடிதங்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவிக்கின்றன.
இந்த நீக்கங்களுக்காக நிறுவனம்
ICEஐ
குற்றஞ்சாட்டுகிறது. நாங்கள் சபையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறோம். பணிநீக்க அறிவிப்பு பெற்ற தேதியைப்
பொறுத்து, சிலருக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது, சிலருக்கு இரண்டு வாரங்கள் இருக்கின்றன, ஒரு சிலருக்கு ஒரு
மாதங்கள் இருக்கின்றன. இதே விஷயம் இப்பகுதியில் உள்ள
Farmer John's
போன்ற பிற நிறுவனங்களிலும் நடந்து வருகிறது."
என்றார்.
" இன்று
நாங்கள் கேட்பதெல்லாம் 90 நாட்கள் அவகாசம் தான் கேட்கிறோம், இதை கேட்க எங்களுக்கு
சட்டப்பூர்வமாக உரிமையும் உண்டு. எங்களுக்கு 90 நாட்கள் அளிக்கப்பட்டால், பின்னர் என்ன நடக்கிறதென்று
எங்களால் பார்க்க முடியும். எங்களில் பலர் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம்.
அரசாங்கமும், நிறுவனமும் எங்களுக்கு பணிஅனுமதி அளித்திருப்பதுடன், நாங்கள் சட்டப்பூர்வமாக இருக்கவும் அனுமதி
அளித்திருப்பது தான் சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது"
என்றார்.
" இங்கிருக்கும்
நாங்கள் மூவருமே, கடந்த ஆண்டு மில்லியன் நபர்கள் கூடிய போராட்டம் உள்பட, அனைத்து பேரணிகளிலும் கலந்து
கொண்டிருக்கிறோம். இதனால் ஒன்றுமே கிடைக்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்வதென்று எனக்கு
தெரியவில்லை. நாங்கள் சட்டபூர்வமாக தகுதியுடையவர்களாக ஆக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.
American
Apparelலில் இருந்து வந்து
இங்கு போராடும் எங்களில் பலர் பல ஆண்டுகளாக இங்கு பணியாற்றியவர்கள். தொழிலாள வர்க்கத்தின் அனைத்து
போராட்டங்களின் ஒற்றுமையும், போராடுவதற்கு தேவையான ஒரு குறிக்கோள் தான். எங்களை நாங்களே
ஒருங்கிணைத்தும், பின்னர் பிற தொழிலாள வர்க்கத்தை சேர்த்து கொள்வதன் மூலமாக தான் நாங்கள் தொடங்க
வேண்டியுள்ளது"
என்றார்.
" எங்களில்
பெரும்பாலானவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் இல்லாமல்
அவர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும், ஏனென்றால் எங்களுக்கு கிடைக்க கூடிய உரிமையுள்ள திட்டங்களில் கூட
நாங்கள் மறுக்கப்படுகிறோம். சிலர் மெக்சிகோ, கெளடிமலா அல்லது பிற நாடுகளில் தங்கள் குழந்தைகளை
விட்டு வந்திருக்கிறார்கள், அவர்கள் இந்த ஆலையில் எங்களின் தொழில் மூலமாக தான் உதவி வருகிறோம்"
என்று குறிப்பிட்டார்.
கில்மேன் :
"American Apparelல்
ஆப்ரேட்டர்களுக்கு மூலப்பொருட்களை வினியோகிக்கும் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். பிற ஆலைகளை விட
American
Apparelல் எங்களுக்கு
நல்ல தொழில்கள் கிடைத்தன. ஒரு உற்பத்தி தொழிலாளர் 2400 டி-சட்டைகள் என்ற அளவை அளிப்பதன் மூலம்
நாளொன்றுக்கு 110 டாலர்கள் சம்பாதிக்க முடிந்தது. இந்த அளவை எட்ட முடியாவிட்டால், குறைந்தபட்ச
ஊதியமாக 72 டாலர்கள் அளிக்கப்பட்டன. இது மிகவும் கடினமாக வேலை, அனுபவம் வாய்ந்த
தொழிலாளர்களுக்கும் கூட இது கடினமான வேலை தான். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில்
பெரும்பாலானவர்கள் என்னைப் போன்று இளம் வயதினர்கள்;
இது ஏனென்றால்,
ஆவணமற்றவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். இந்த பணிநீக்கங்கள், நிறுவனத்தில் ஒரு பெரும் விளைவை
ஏற்படுத்தும்."
" எங்களின்
பணிக்கு விண்ணப்பிக்க வரும் நபர்களுக்கு, இதில் என்ன மாதிரியான வேலை இருக்கிறது என்பது கூட தெரியாது.
அவர்களில் பலர் உடனடியாக வேலையை விட்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் ஏற்கனவே ஓய்வூதியங்கள் பெற்று
வருகிறார்கள், அவர்களின் காசோலைகள் அவர்களின் தேவைகளை முழுமையாக தீர்க்காது என்பதால் அவர்கள்
மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்."
மரியா :
"நான் அந்த ஆலையில்
குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு 80 டாலரும், அதிகபட்சமாக 110 டாலரும் பெற்றிருக்கிறேன். நான்
தரக்கட்டுப்பாடு செய்கிறேன். ஒவ்வொரு நாளும் 2500 டி-சட்டைகள் எனக்கு அளவாக இருந்தன. இது மூச்சு
முட்டும் வேலை. நாங்கள் புலம்பெயர்ந்தோர் என்பதால் அவர்கள் எங்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள்."
" கெளடிமாலாவில்
9 வயதிலும் மற்றும் 4 வயதிலும் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அமெரிக்காவில் வேலை செய்வதற்காக
வந்த பின்னர் நான் அவர்களைச் சென்று இதுவரை பார்க்கவில்லை. நான் அவர்களோடு தொலைபேசியில் மட்டும்
தான் பேசுவேன். அவர்கள் என்னை சார்ந்து இருக்கிறார்கள், நான் அவர்களைப் பிரிந்து இருப்பதற்காக மிகவும்
வருந்துகிறேன்."
மார்வின் கெளடிமாலாவில் இருந்து வந்தவர். அவர்
American Apparelலில்
ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
" ஆவணங்கள்
இல்லாத தொழிலாளர்களை நீக்குவதற்கும், அதற்கான முடிவை எடுப்பதற்குமான ஆவணங்களை பரிசோதிக்கவே
ICE
வந்துள்ளது. இந்த நிறுவனத்திற்காக
பலர் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கையையே அவர்கள் தகர்க்கிறார்கள். அடுத்த வாரத்தில், ஆவணங்கள்
இல்லாததால் பல தொழிலாளர்கள் வெளியேற வேண்டியதிருக்கும்.
" நிச்சயமாக,
நாங்கள் நிறுவனத்தில் இருக்க போவதில்லை;
ஏனென்றால், எங்களை
போக அவர்கள் அனுமதிக்கவில்லை என்றாலும், அங்கு ஒரு பெரிய சட்டப்பிரச்சனை இருக்கும், எங்களை அவர்கள்
துடைத்து வெளியேற்றவில்லை என்றாலும், அவர்கள் நிச்சயமான அபராதங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். நிறுவனம்
அளித்திருப்பதை விட சற்று கூடுதலான கால அவகாசம் மட்டும் தான் நாங்கள் கேட்பது. ஏனென்றால், அவர்கள்
எங்களுக்கு 30 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார்கள், ஆனால் குறைந்தபட்சம் மேலும் இரண்டு மாதங்கள் அங்கு
வேலை செய்ய அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்பது நாங்கள் விரும்புவது."
கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டால் அவர் செய்வார் என்று கேட்கபட்டதற்கு,
மார்வின் பின்வருமாறு பதிலளித்தார் :
"எவ்வாறு போராடுவதென்று
நாங்கள் பார்க்க வேண்டும், எங்களால் முடிந்த வரை நாங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும், இதன் மூலம்
நாங்கள் தேவைப்படுகிறோம் என்பதை அரசாங்கம் பார்க்கும்.
" இந்த
நாட்டின் அரசியல் பற்றி எனக்கு நிறைய தெரியாது, ஆனால் ஜனாதிபதியின் மீது பலர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்,
ஆனால் துரதிருஷ்டவசமாக அது எதிர்பதமாக இருக்கிறது. ஒட்டுமொத்த அரசாங்கமும், எப்போது அவர்கள் பதவிக்கு
வர விரும்புகிறார்களோ, அவர்கள் நிறைய செய்கிறார்கள், பின் இறுதியில், அவர்கள் ஒன்று சொல்கிறார்கள்,
மற்றொன்றை செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன், ஏனென்றால் அவர்கள் சொல்வதை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்
என்பதெல்லாம் உண்மையல்ல.
" வேலைக்காகவும்,
வெற்றி பெறுவதற்காகவும் நாங்கள் இந்த நாட்டிற்கு வந்தோம். எங்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்,
பின்னர் தான் நாங்கள் வேலை செய்வோம் என்று கேட்க நாங்கள் வரவில்லை. நாங்கள் வேலை செய்ய
விரும்புகிறோம் என்பது மட்டும் தான் ஒரே விஷயம். வேறெதுவும் எங்களுக்கு அளிக்கப்படுவதை நாங்கள்
விரும்பவில்லை. எங்கள் குடும்பம் எங்களையும், இந்த நாட்டில் உள்ள எங்களின் முயற்சியையும் சார்ந்து உள்ளது.
நாங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை என்றால், துரதிருஷ்டவசமாக நாங்கள் அவர்களுக்கு அனுப்பும் நிதி
உதவியை அவர்கள் இழக்க நேரிடும்."
|