WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Unemployment rises sharply across Europe
ஐரோப்பா முழுவதும் வேலையின்மை தீவிரமாக உயருகிறது
By Stefan Steinberg
5 August 2009
Use this version to print | Send
feedback
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவர நிறுவனமாக
Eurostat வெளியிட்ட
தகவல்கள் ஜூன் மாதம் முழுவதும் ஐரோப்பா நெடுகிலும் வேலையின்மை பெருகியுள்ளதை காட்டுகின்றன. பருவ காலத்திற்கு
ஏற்ப சரிசெய்யப்பட்டுவிட்ட உத்தியோகபூர்வ வேலையின்மைத்தரம் 27 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய
ஒன்றியத்தில்(EU)
8.9 சதவிகிதம் என்று உயர்த்துள்ளது. இது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 246,000 என கூடுதலாகியுள்ளதை
காட்டுகிறது. ஜூன் மாத புள்ளி விவரம் 2 சதவிகிதம் 2008 ஜூன் மாதத்தைவிட அதிகமாகும். இதன் பொருள்
கடந்த மாதம் 21.5 மில்லியனுக்கு அதிகமான ஐரோப்பியர்கள் வேலையின்றி இருந்தனர் என்பது ஆகும்.
16 நாடுகள் யூரோவை தம் நாணயமாக பயன்படுத்தும் யூரோப்பகுதியில் வேலையற்றோரின்
விகிதம் இன்னும் கூடுதலான 9.4 சதவிகிதத்தில் உள்ளது. இது கூடுதலான 158,000 பேருக்கு வேலையில்லை
என்பதை பிரதிபலிக்கிறது. யூரோப் பகுதியில் வேலையின்மை ஜூன் 2008 ல் 7.5 சதவிகிதமாக இருந்தது.
யூரோப் பகுதியில் இளைஞர்களிடையே வேலையின்மை என்பது வயது வந்தவர்களிடையே
வேலையின்மை என்பதைக் காட்டிலும் இரு மடங்காக 19.5 சதவிகிதம் என்று உள்ளது.
ஐரோப்பிய வேலையின்மை தகவல்கள் சமீபத்திய ஜப்பானிய வேலையின்மை
புள்ளிவிவரங்களை அடுத்து வருகின்றன. அங்கு 6 ஆண்டுகள் இல்லாத அதிக அளவான 5.4 சதவிகித வேலையின்மை
உள்ளது. அமெரிக்காவில் 26 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு 9.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
சமீபத்திய புள்ளி விவரங்கள் பெரிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்கள் மகத்தான
(சிலவற்றை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவு) இலாபங்களை காட்டும்போது, தொழில்துறை, வணிக
மற்றும் பணிகள் நிறுவனங்கள், "உண்மைப் பொருளாதாரம்" என அழைக்கப்படுபவை ஆபத்தான வேகத்தில் வேலைகளை
இழந்து கொண்டிருக்கின்றன.
யூரோஸ்டாட் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் உவப்பில்லாமல்தான்
எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவை வேலையில்லாதவர்கள் எனப்பதிவு செய்துகொள்ளும் தொழிலாளர்களைத்தான்
தளமாகக் கொண்டுள்ளன. வேலை தேடுவதை நிறுத்திவிட்ட ஏராளமான தொழிலாளர்களையோ அல்லது வேலையற்றோருக்கான
உதவிகளுக்கு தகுதியற்றதால் பதிவு செய்யாத தொழிலாளர்களையோ அது கணக்கில் கொள்ளவில்லை. அதேபோல்
யூரோஸ்டாட் குறைந்த வேலையில் ஈடுபட்டிருக்கும் மில்லியன் கணக்கானவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இதில் பகுதி நேர வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பங்கள் தப்பிப் பிழைப்பதற்கு போதுமான ஊதியம் மட்டுமே
பெறும் குறைந்த ஊதியம் பெறுபவர் அடங்குகின்றனர்.
ஐரோப்பிய அரசியல் வாதிகள் சமீபத்திய வேலையின்மை அதிகரிப்பு ஒரு நேரிய
முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், 2009ல் முந்தைய மாதங்களோடு ஒப்பிடுகையில் வேலையின்மை
விகிதம் சரிவைக் காட்டுகிறது என்றும் கூறுகின்றனர். மே மாதம் ஐரோப்பா முழுவதும் புதிதாக வேலையின்மையில்
இணைபவர்களின் எண்ணிக்கை 600,000
என்று ஆயிற்று.
ஆனால், பல முக்கிய ஐரோப்பிய நாடுகள், முக்கியமாக ஜேர்மனியும்
நெதர்லாந்தும், பரந்த அளவில் குறுகிய காலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இவை தங்கள் ஊழியர்களை
பணிநீக்கம் செய்யாமல், ஊழியர்களுக்கு பணிநேரத்தை குறைக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்க உதவி கொடுக்கும்
வகையில் உள்ளன. இதன் விளைவாக உத்தியோகபூர்வ எண்ணிக்கை சமூக இடர்பாடுகள், வறுமை என்று
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ளவற்றின் தரத்தை குறைமதிப்பாகக் காட்டுகின்றன.
இத்தகைய திட்டங்களுக்கான நிதி விரைவில் தீர்ந்துவிடும். அதையொட்டி புதிய அலை
பணிநீக்கங்கள், ஆலை முடல்கள் ஆகியவை வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கும்.
குறுகிய கால தொழிலாளர்கள், மற்றும் பதிவு செய்யாத வேலையின்மையில்
உள்ளவர்களும் வேலையற்றோர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், இந்த விகிதம் இன்னும் பெரிதாக உயரும்.
ஜேர்மனியில், உத்தியோகபூர்வமாக வேலையின்மையில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 52,000 உயர்ந்து
மொத்தம் 3,460,000 என்று ஆயிற்று. கணக்கில் சேராத வேலையற்றவர்கள் மற்றும் குறைந்தநேர வேலையில்
இருப்பவர்களையும் சேர்த்துக் கொண்டால், புள்ளிவிரம் கிட்டத்தட்ட 6 மில்லியனைக் காட்டும்.
ING வங்கி பொருளாதார
வல்லுனர் Martin van Vliet
இன் கருத்தின்படி, "பொருளாதாரம் இன்னும் மந்த நிலையில் உள்ளபோது, மீட்பு மிக மெதுவாகத்தான் இருக்கும்
என்ற நிலையில், வேலையின்மை துரதிருஷ்டவசமாக தொடர்ந்து இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உயரும்போல்தான்
இருக்கிறது."
பல சமீபத்திய புள்ளிவிவரங்கள் மற்ற சர்வதேச பொருளாதார அமைப்புக்கள்
வெளியிட்டவையும் தற்போதைய நெருக்கடி அமெரிக்காவில் இருப்பதை விட ஐரோப்பாவில் நீடித்து, ஆழ்ந்து
இருக்கும் என்பதை காட்டுகின்றன. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள கணிப்புக்களின்படி, 16 யூரோப்பகுதி
நாடுகளின் பொருளாதாரஙக்கள் இந்த ஆண்டு 4.8 சதவிகிதம் சுருங்கும். இது சர்வதேச நாணய நிதிய கணிப்பான
2.6 சதவிகித பொருளாதார சுருக்கம் அமெரிக்காவில் 2009 ல் இருக்கும் என்பதுடன் ஒப்பிட்டுப்பார்க்கத்தக்கது
ஆகும்.
நீண்டகால வேலையின்மையில் பெருக்கம் என்பதும் மிக அமெரிக்காவுடன்
ஒப்பிடும்போது அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார
கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (Organization
for Economic Cooperatioin and Development-OECD)
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீண்ட கால வேலையின்மை 2010 முடிவிற்குள் 1.5 சதவிகித புள்ளிகள் முதல் 9 வரை
உயரும் என்றும் இது அமெரிக்கா, ஜப்பானில் எதிர்பார்க்கப்படும் உயர்வைப் போல் 7 மடங்கு என்றும்
கணித்துள்ளது.
அதே நேரத்தில் ஐரோப்பிய தொழில்கள் வங்கி நெருக்கடியினால் கூடுதலான
விளைவுகளை எதிர்கொள்ளுகின்றன. ஐரோப்பிய பெருநிறுவனக்கடன்கள் மிக அதிக அளவில் உள்ளன; ஏற்கனவே
2008 இன் இறுதியில் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவிகிதம் என்று உள்ளன. அமெரிக்க
பெருநிறுவன கடன்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2008ம் ஆண்டு இறுதியில் 50 சதவிகிதமாகத்தான்
இருந்தன.
பல முக்கிய வங்கிகள் அதிக இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ள நிலையில், சில
இன்னும் அதிகமான நச்சு சொத்துக்களை வைத்துக் கொண்டு திவாலை எதிர்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு கடன்
கொடுக்க தயங்குகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, ஐரோப்பிய
வங்கிகள் 2010 இறுதிக்குள் $283 பில்லியனை இழக்கக்கூடும். இது நெருக்கடி 2007ல் தொடங்கியதில் இருந்து
ஏற்பட்ட $365 பில்லியனை தவிர அதிகமான இழப்பாகும்.
பெருகிய பணத் தேக்க நிலை அழுத்தங்கள் ஐரோப்பாவில் இருப்பதின் அடையாளம் செவ்வாயன்று
யூரோப்பகுதியில் ஆலை விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.6 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று வந்துள்ள
தகவல்தான். இது குறிப்பிடத்தக்க வகையில் மே மாதம் பதிவு செய்யப்பட்ட சரிவை விட அதிகமாகும்.
(5.9சதவிகிதம்). மேலும் இது 1981ல் இருந்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டதில் இருந்து மிகப் பெரிய சரிவை
பிரதிபலிக்கிறது. ஐரோப்பாவில் உற்பத்தியாளர் விலைகள் இப்பொழுது ஒவ்வொரு மாதமும் சரிந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணில் பல ஐரோப்பிய தொழில்கள் தாங்கள் இன்னும் கூடுதலான
சுருக்கத்தை திட்டமிட்டுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்,
Air France-KLM
குழு ஜூன் 30 முடிந்த மூன்று மாதங்களுக்கு 431 மில்லியன் யூரோக்கள் நிகர இழப்பை அறிவித்துள்ளது. இவை
எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான இழப்புக்காகும். விமான நிறுவனம் சரியும் வருமானங்களுக்கும் சரியும்
தேவைகளுக்கும் ஈடுகட்டும் விதத்தில் பரந்த முறையில் வணிக சீரமைப்பை மேற்கொள்ள இருக்கிறது; இது தவிர்க்க
முடியாமல் நிறைய வேலை இழப்புக்களுக்கு வகை செய்யும்.
Air France ஐ
எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் ஐரோப்பா முழுவதும் இருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை
எதிர்கொண்டிருப்பது போன்றவைதான்; ஏனெனில் வணிக வகை பயணம் சரிந்துள்ளதுடன் விடுமுறை நாட்கள்
பயணித்தலும் குறைந்து விட்டன.
பெல்ஜியத்தின் மிகப் பெரிய மருந்துகள் விநியோகிக்கும் நிறுவனமான
Omega Pharma NV
உடைய பங்கு விலை மிகக் கடுமையாக ஜூலையில் சரிந்தது. இதன் இரண்டாம் காலாண்டு விற்பனையில் தீவிரக்
குறைவு ஏற்பட்டதை அடுத்து இவ்வாறு நிகழ்ந்துள்ளது. முழு ஆண்டிலும் "சற்று"கூடுதல் விற்பனை இருக்கும் என்ற
கணிப்பை கைவிட்டதுடன் மறுகட்டமைக்கும் நடவடிக்கைகளையும் திட்டமிட்டுள்ளது.
ஜூலை 22ம் தேதி ஐரோப்பாவின் மிகப் பெரிய பொறியியல் நிறுவனமான மூனிச்
தளத்தை கொண்ட Siemens AG
தான் இன்னும் 1,400 வேலைகளை அதன் 409,000 தொழிலாளர் தொகுப்பில் இருந்து அகற்றும் திட்டத்தைக்
கொண்டுள்ளதாக அறிவித்தது. நிறுவனம் ஓராண்டிற்கு முன் 17,000 வேலைகளை தகர்த்தது.- தற்போது
19,000 பேர் குறுகிய கால வேலையில்தான் உள்ளனர்.
உலகின் மிகப் பெரிய எஃகுத் தயாரிப்பு நிறுவனமான
ArcelorMittal
மிகப்பெரிய குறைப்புக்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஸ்பெயின் நாட்டு ஆலையில் பணி நேரம் 40
சதவிகிதம் குறையும் என்றும் இந்த ஆண்டில் இனி தொழிலாளர் பிரிவின் ஒரு பகுதி வேலையின்றித்தான் இருக்கும்
என்றும் தெரிகிறது. Nicolas Correa SA,
என்னும் ஸ்பெயினின் மிகப் பெரிய அரைக்கும்
இயந்திரத் தயாரிப்பு நிறுவனம் ஜூலை மாத இறுதியில் அது வடக்கு
ஸ்பெயினில் இருக்கும் அதன் ஆலையில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், செப்டம்பர்
மாதம் இன்னும் கூடுதல் பணி நீக்கும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
எந்த ஐரோப்பிய நாடும் கண்டம் முழுவதும் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதார
வளர்ச்சியின் விளைவுகளில் இருந்து தப்பவில்லை. சில நாடுகள் குறிப்பா கடின நிலையை எதிர்கொள்ளுகின்றன.
யூரோஸ்டாட் புள்ளிவிவரங்கள்படி, சில ஐரோப்பிய நாடுகளில் வேலையின்மை ஐரோப்பிய ஒன்றிய சராசரியை விட
இரு மடங்கு உள்ளது.
ஸ்பெயினில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதம் 18.1 சதவிகிதத்தை எட்டியது.
மத்திய ஐரோப்பாவில் லாட்வியா உத்தியோகபூர்வ வேலையின்மை தரம் 17.2 என்பதை எட்டியது, எஸ்டோனியா
17 சதவிகிதம் என்று காட்டியுள்ளது.
ஸ்பெயின் கட்டுமானத் துறையில் நூறாயிரக்கணக்கான வேலைகளை இழந்துள்ளது.
இத்துறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட சரிந்துவிட்டது; இதன் இளைஞர் பிரிவு வேலையின்மை 36.5 என
ஐரோப்பாவிலேயே மிக அதிக அளவு உள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் மே மாத்திற்காக கணிப்பின்படி
ஸ்பெயினின் வேலையின்மை விகிதம் வரவிருக்கும் காலத்தில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக தொடர்ந்து ஏறும்.
லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் இன்னும்
மோசமாக உள்ளன. கடந்த வாரம் அதன் பொருளாதாரம் 22.4 சதவிகிதம் 2009 இரண்டாம் காலாண்டில்
சுருக்கம் அடைந்துவிட்டதாக லிதுவேனியா அறிவித்துள்ளது. இதே போன்ற சரிவுகள் லாட்வியா, எஸ்டோனியாவாலும்
அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாட்வியா ஏற்கனவே இரு அவசரக்கால கடன்களை . சர்வதேச
நாணய நிதியத்திடம் விண்ணப்பித்துள்ளது; லிதுவேனியாவும் அத்தகைய கடனைக் கோர சிந்தித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியம்,
ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் கடன்கள்
கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வரவுசெலவுத்திட்ட குறைப்புக்களுடன் பிணைந்தவை. லாட்விய
அரசாங்கம் ஏற்கனவே பொதுத்துறை ஊதியங்களை இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு குறைத்துவிடட்து; அதைத்தவிர
ஓய்வூதிய தொகைகளையும் கடுமையாகக் குறைத்துவிட்டது.
ஒன்பது மாதங்கள் மட்டுமே லாட்வியாவில் வேலையின்மை நலன்கள் இருக்கும். இதன்
பொருள் ஆண்டு ஆரம்பத்தில் வேலை இழந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் விரைவில் எந்த வருமானமும் இல்லாமல்
இருப்பர் என்று போகும். வெப்பமடையச் செய்வதற்கான செலவுகள் மிகப் பெரியதாக அதிகரித்துவிட்டன; பல
லாட்வியர்கள் வெப்பம் இல்லாத குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதன் சமீபத்திய கடனின் ஒரு பகுதியாக
சர்வதேச நாணய நிதியம் லாட்வியா அதன் அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தை இன்னும் 10 சதவிகிதம் இந்த ஆண்டு
குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மத்திய ஐரோப்பாவின் நிலைமையை பற்றி பைனான்சியல் டைம்ஸில் எழுதும்
Gideon Rachman
இப்பகுதியில் நெருக்கடி "ஐரோப்பாவின் பிற பகுதிகளில் நலிந்த முறையில் மீட்பு வரும் தன்மையைக்கூட
அச்சுறுத்தலாம்" என்று கூறியுள்ளார். லாட்வியாவின் அரசாங்கம் "அதிருப்தி தரும் குளிர்காலத்திட்டத்தை" தயாரிக்க
வேண்டும் என்று கூறியுள்ளார். அச்சூழலில், Rachman,
"போலீஸ் படையை 30 சதவிகிதம் குறைக்கலாம்...என்பது மடைத்தனமான கருத்து" என்று ஆலோசனை கூறியுள்ளார். |