WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Britain: National Health Service hospital faces
privatisation
பிரிட்டன்: தேசிய சுகாதாரப் பணி மருத்துவமனை தனியார்மயமாக்கப்படுதலை எதிர்கொள்ளுகிறது
By Jean Shaoul
4 August 2009
Use this version to print | Send
feedback
ஒரு தேசிய சுகாதாரப் பணி (NHS)
மருத்துவமனை, விரைவில் தனியார் துறையினால் நடத்தப்படும் முதல் மருத்துவமனையாகக் கூடும்.
பிரிட்டனின் சுகாதாரத்துறை
Hinchingbrooks Hospital
ஐ ஒரு ஏழாண்டு காலத்திற்கு நிர்வாகம் செய்யும் உரிமைக்காக ஏலங்கள் கேட்பதற்கான திட்டங்களுக்கு தனியார்துறைக்கும்
தேசிய சுகாதாரப் பணியின் பிரிவுகளுக்கும் அனுமதி அளித்து ஒரு "உறுதியாக வருங்காலம்'' அதற்கு இருப்பதற்கும்
ஏற்பாடு செய்கிறது.
இது ஒரு நிர்வாகப் பொறுப்பிற்கான குத்தகைக்கு மட்டும்தான் என்று அரசாங்கம்
கூறியுள்ளது. தேசிய சுகாதாரப் பணி சொத்துக்களையும் ஊழியர்களையும் தன்னிடம் கொள்ளும்; புதிய நிர்வாகியிடம்
அவை மாற்றப்பட மாட்டா. இதன் பொருள் தனியார்துறைக்கு ஆபத்து இல்லாத, செலவினங்கள் ஏற்கப்பட்டு நிர்வாக
ஒப்பந்தம் கிடைக்கும். வரி செலுத்துபவர்கள் இலாபத்திற்கு உறுதியாக உத்தரவாதம் கொடுப்பார்கள்.
Hinchingbrooke
ஒரு மாவட்ட
பொது மருத்துவமனை விபத்துக்கள், அவசரக்கால மற்றும் மகப் பேறு பணிகள் உட்பட அனைத்து வசதிகளையும்
கொண்டதாகும். ஒரு பரந்த பிரதேசத்திற்கு இது பணியாற்றுகிறது. மருத்துவ சான்றை சிறந்த முறையில்
கொண்டிருப்பதுடன் எப்பொழுதும் செயற்திறன் இலக்குகளை நிறைவேற்றியுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 73 மில்லியன்
பவுண்டுகள் வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தனியார்மயமாக்கலுக்கு அரசாங்கத்தின் காரணம், பல
ஆண்டுகளாக குவிந்துவிட்ட 40 மில்லியன் பவுண்டு பற்றாக்குறையை அது இன்னும் ஈடு செய்யவில்லை என்பதாகும்.
பெரும் வேலை இழப்புக்கள், பணிகளில் குறைப்புக்கள், தொழிலாள வர்க்க மற்றும்
அதன் குடும்பங்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பிற்கு குறைந்த வாய்ப்பு என்பவற்றை செய்யாமல் "நிதிய அளவில் ஒரு
மருத்துவமனையை இலாபத்துடன் செயல்படவைப்பது" என்பது நினைத்துப் பார்க்க முடியாததாகும்.
இது ஒன்றும் ஒரே முறை எடுக்கும் முடிவு அல்ல. இனி அனைத்து "நிதிச் சவால்
கொடுக்கும்" மருத்துவமனைகள், மனச் சுகாதாரம், சமூகம், அவசரகால வாகன மற்றும் முன்பாதுகாப்பு
அறக்கட்டளைகள் (PCT Primary Care trusts)
அனைத்தும், இன்னும் பிற தோல்வியுறும் பொது பணிகள் கல்வி
போன்றவையும், தனியார் மயமாக்குதலை எதிர்கொள்ளக்கூடும்.
Hinchingbrooke
யில்
ஏற்பட்ட பற்றாக்குறை புதிய தொழிற்கட்சியின் சந்தைச் சீர்திருத்தங்களின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்.
1997ல் பதவிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கம் கன்சர்வேடிவ்களுடைய "உள் சந்தை" சுகாதாரத் துறையில்
இருப்பதை அகற்ற உறுதியளித்தது; ஆனால் மாறாக அச்சந்தை கருவிகளைத் தொடர்ந்து விரிவாக்கியது.
நோயாளிகள் விருப்பம் என்ற மந்திரத்தை கூறிக் கொண்டு, தேசிய சுகாதாரப்
பணிக்குள்ளேயே அது போட்டியை வளர்த்து மருத்துவமனைகளுக்கு ஒரு தொகை பணமாக அளிக்கப்படுவதற்கு பதிலாக
சேவைக்கான கட்டணப்படி நிதியளிக்கப்படும். தேசிய சுகாதாரப் பணியுடைய விரிவடையும் செலவினங்களை
அதிகரிக்கசெய்து மருத்துவமனைகளின் திவால்தன்மைக்கும் வழிவகுக்கும்.
Hinchingbrooke
இன்
பற்றாக்குறைக்கு பல ஆதாரங்கள் உள்ளன; அவற்றின் வேர்கள் இக்கொள்கைகளில் மட்டும் இல்லை. 26
ஆண்டுகளாக செயல்படும், 310 படுக்கைகளை உடைய மருத்துவமனை என்ற முறையில் இது கேம்பிரட்ஜ்ஷயர்
முன்பாதுகாப்பு அறக்கட்டளைக்கு குறைந்த செலவு வசதிகளை அளித்து வந்தது.
விளைவுகளை ஒட்டி பண ஒதுக்கீடு(PbR)
என்று அறிமுகப்படுத்தப்பட்டது, தங்கள் பணிகளுக்கு தேசிய சராசரி அடிப்படையில் மருத்துவமனைகள் பணம் பெற்றது,
என்பதின் பொருள் கேம்பிரிட்ஜ் முன்பாதுகாப்பு அறக்கட்டளை அதன் நோயாளிகள்
Hinchbrooke
ல் சிகிச்சை பெறுவதற்கு கூடுதல் பணத்தை முன்னைவிட கொடுக்க வேண்டும் என்று ஆயிற்று. ஆனால் அதற்காக
NHS
இடம் இருந்து கூடுதல் நிதி பெறாது. CPCT
இதையொட்டி மருத்துவமனையை பணியை கிடைக்கும் நிதிக்கேற்ப குறைக்க கட்டாயப்படுத்தியது. இது அதன்
திறமையினாலேயே பாதிப்பிற்கு உட்பட்டது.
இப்பிரச்சினையை
Hinchingbrooke அதிகமாக்கும் வகையில் பிழையான
கணிப்புக்களை கொடுத்தது; இதையொட்டி அது மாற்று நிதி ஏற்பாடுகளில் கூடுதல் சுமையை பெற்றது.
PbR க்கு
சுலபமாக செல்வதற்கு அவை ஏற்பாடாகியிருந்தன.
இதற்குப் பின் மருத்துவமனை 22 மில்லியன் பவுண்டிற்கு புதிய சிகிச்சை மையத்தை
ஆரம்பித்தது. இது அரசாங்கத்தின் பரந்த கொள்கையான நோயாளிகளுக்கான பணிகளை விரிவுபடுத்துதல்
என்பதின்கீழ் வந்தது; ஆனால் அதில் விவாதத்திற்குட்டபட்ட, மிக அதிக செலவு கொடுக்கும் தனியார் நிதிய
முன்முயற்சியும் இருந்தது; அதற்கு அருகல் இருந்த PCT
க்களுடைய ஆதரவு இருந்தது. தனியார் நிதிய முன்முயற்சியின்கீழ், ஒரு மருத்துவமனை அடிப்படையில் அதன்
இடத்தையும் பணிகளையும் 30 ஆண்டு காலத்திற்கு வாடகைக்கு விடும்; இது பெரிதும் உயர்த்தப்பட்ட விலையில்
செயல்படுத்தப்படும்.
நவம்பர் 2005ல் புதிய வசதிகள் திறக்கப்பட்டபின்,
PCT க்கள் தங்கள்
நோயாளிகளை சிகிச்சை மையத்திற்கு அனுப்ப இயலாது என்பதை அறிந்தன. இதையொட்டி
Hinchingbrooke
க்கு 5 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது. கூடுதலான வருமானத்தை தோற்றுவிப்பதற்கு பதிலாக, புதிய
வசதிகள் கழுத்தைச் சுற்றி இருந்த நிதிப் பாறாங்கல் என ஆயின.
மருத்துவனையின் வருமானம் வேறு பல காரணங்களாலும் வீழ்ச்சியுற்றது. அரசாங்கக்
கொள்கையை பின்பற்றி East of England
ஆண்டு ஒன்றுக்கு 60,000 நோயாளிகளை தனியார் துறை வசதிகளுக்கு மாற்ற முடிவெடுத்தது; இது
NHSக்கு
அளிப்பவற்றிற்கு கிடைக்கும் பணத்தை இன்னும் அதிகமாகக் குறைத்துவிட்டது.
CPCT
2,500 நோயாளிகளை
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆண்டு ஒன்றிற்கு 2.3 மில்லியன் பவுண்ட் செலவில் அனுப்பும் திட்டத்தை
தயாரித்திருந்தது. இப்பகுதியில் இருக்கும் மற்ற இரு மருத்துவமனைகள்,
Peterboroug, Cambridge
இரண்டும் Foundation Trust
தகுதியை
Hinchingbrooke க்கு முன்னதாகவே பெற்றன. அது
அரசாங்கத்தின் மற்றொரு இலக்கு ஆகும். அதையொட்டி
PCT இன் சுகாதாரப் பாதுகாப்பு
PbR ன்கீழ்
வாங்குவது மூடப்பட்டது. இதனால் அதன் சொந்த நிதிய இயங்குதன்மை பாதிக்கப்பட்டது.
Hinchingbrooke
க்கு வருமானமும் குறைந்தது.
இறுதியாக
Hinchbrooke ல் முக்கியமாக வாங்கும்
CPCT, PCT
உடன் இணைந்தபோது மகத்தான கடனையும் பெற்றது.
East of England ஒரு நோயாளிக்கு மற்ற இங்கிலாந்து
பகுதியை விட 10சதவிகிதம் குறைவாக பெறுகிறது. இதில் சில வறிய பகுதிகள் இருந்தாலும் அவ்வாறுதான் நிலைமை
உள்ளது.
Caught in the Crossfire - The Plight of
Hinchingbrooke Health Care Trust
என்ற
தலைப்பில் UNISON
தொழிற்சங்கத்திற்காக John Lister
ஆல் எழுதப்பட்ட அறிக்கை ஒன்று, பிராந்திய செலவை தேசியச் சராசரிக்கு
உயர்த்துவது மட்டும் வரவுசெலவுத் திட்டத்தில் 800 மில்லியன் பவுண்டை சேர்த்திருக்கும். இது
CPCT இன்
பற்றாக்குறை மற்றும் Hinchingbrooke
இன் பிரச்சினைகளை தீர்த்திருக்கும்.
சராசரியை விடக் குறைவு நிதி என்பதின் விளைவாக, 2007ல்
CPCT அதன்
செலவினங்களைக் குறைத்து மருத்துவமனை சிகிச்சைப் பயன்பாட்டையும் குறைக்குமாறு இருந்த புதிய திட்டங்களை
அறிவிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாயிற்று. இது
Hinchingbrooke ஐ இன்னும் உறுதி குலைய வைத்தது.
Hinchingbrooke
தோல்வியுறும் மருத்துவமனைகளை தோற்றுவிக்க வேண்டும் என்றும் அரசாங்கக் கொள்கையினால் பாதிக்கப்பட்டுள்ள
அமைப்பு ஆகும். மேலும் 20076-07 வரை மருத்துவமனையின் வருமானத்தை அதன் பற்றாக்குறை பணத்தை
போலவே குறைக்கும் அரசாங்கத் திட்டம் இருந்தது; இது மருத்துவமனைக்கு ஒரு தடையாகவும் தண்டனையாகவும்
போயிற்று--பற்றாக்குறையில் இரட்டைத் தலைவலி என்பது போல்.
மிகப் பரந்த அளவில் செலவைக் குறைக்கும் முறையை மருத்துவமனை செயல்படுத்தியது:
இதில் மருத்துவமனை அதன் படுக்கைகளில் 17 சதவிகிதத்தை குறைக்கும் திட்டம், தேர்ந்தெடுக்கபடும் சிகிச்சைக்கு
நாள் குறைப்பு, பணிகள் முடக்கம், வரவிற்கு ஏற்ப செலவு இருக்க வேண்டும் என்பதற்காக முகவர் அமைப்பின்
ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் முதலியவை இருந்தன. ஆனால் குறிப்பாக மருத்துவமனைக்கு அருகே இருந்த
நிலத்தை 12 மில்லியன் பவுண்டிற்கு விற்கும் முயற்சிகள் சரிந்தபின் இதையொட்டி அதன் குவிந்திருந்த பற்றாக்குறையை
சரி செய்ய முடியவில்லை.
இப்பொழுது ஆறு மருத்துவமனை அறக்கட்டளைகள் கணிசமான குவிந்த
பற்றாக்குறையுடன் தனியார்மயத்தை எதிர்நோக்கி உள்ளன.
Health Service Journal
TM Sally Gainsbury
எழுதியுள்ளபடி, சுகாதாரத் துறை இந்த ஆறு சுகாதார பாதுகாப்பு அறக்கட்டளைகளையும் ஓராண்டிற்குள் புதிய
தோல்வி ஆட்சியின் கீழ் தகர்த்துவிடப்பார்க்கிறது. ஓராண்டிற்குள் பற்றாக்குறையை நீக்காத அறக்கட்டளைகள்
பணிகள் மாற்றும் விதம், மூடல்கள், பணக்குறைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் மூடும் நிலைக்கு தள்ளப்படும்.
இப்படிப்பட்ட அறக்கட்டளைகள் மொத்தம் 92 உள்ளன.
இத்தகைய கணிப்பு அரசாங்கத்தின் உயரும் பற்றாக்குறை மற்றும் சிக்கன
நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு பார்த்தால் நம்பிக்கையுடையதாக தெரிகிறது. அத்தகைய செயற்பாடுகளுக்கு
எல்லா முக்கிய கட்சிகளும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர் உறுதியான ஆதரவைக் கொடுக்கும்.
தனியார்துறை எடுத்துக் கொள்ளும் என்ற அச்சுறுத்தல் சுகாதார அதிகாரிகளை
ஒழுங்கிற்கு கொண்டுவர பயன்படுத்தப்பட்டது, ஊழியர்களை பணிநீக்கம் செய்ய, ஒப்பந்தங்களை கிழித்தெறிய,
பணிகளை குறைக்க மற்றும் உள்ளூர் எதிர்ப்பை அலட்சியம் செய்ய ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது.
King's Fund
இன் தலைமைப்
பொருளாதார வல்லுனரான John Appleby
கூறினார்: "அவர்கள் NHS
இருப்புக்கள் மகத்தான முறையில் மறுபங்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றனர்; அதிக ஒருங்கிணைப்பு மற்றும்
ஏகபோக உரிமை தோற்றுவிக்கக் கூடிய ஒரு கட்டத்தை அடையலாம் என்று கருதுகின்றனர்."
Hinchingbrooke
ஐ
குத்தகைக்கு வாங்கி நடத்தும் திட்டம் முந்தைய முயற்சியான மருத்துவமனையை தனியார்மயமாக்குவதை விட
அதிகமாகப் போகிறது. அப்பொழுது Tribal Group
என்னும் அமைப்பு 2003ல் பேர்மிங்ஹாமில் இருக்கும்
Good Hope Hospital ஐ மூன்று ஆண்டுகள் நடத்துவதற்கு
நிர்வாக ஒப்பந்தத்தை பெற்றது. அதில் தனியார்துறை நிர்வாகம் பொதுப்பணி பிரிவை விட மோசமானதாக
தன்னை நிரூபித்துக் கொண்டது. பற்றாக்குறை உயர்ந்த நிர்வாகச் செலவுகளால் கூடியது. ஒப்பந்தம் எட்டு
மாதங்களுக்கு முன்னதாகவே முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் East of
England சுகாதார மூலோபாய நிர்வாகம் விபத்தும்,
அவசர,மகப்பேறுப் பணிகள் Hinchingbrooke
ல் தக்கவைக்கப்படும் என்று கூறிய நிலையில், ஆபத்திற்கு இடமில்லாத ஒப்பந்தம் தனியார் துறைக்கு
போதுமானதாக இல்லை. அது வேலை நீக்கம் செய்ய முழு உரிமையை விரும்புகிறது.
NHS
க்கு செயற்பாடுகளுக்கு பணிகளை
சுதந்திரமாக கொடுக்கும் அமைப்பான Care UK
இன் தலைமை நிர்வாகியான Mike Parish,
பைனான்சியல் டைம்ஸிடம் NHS
இப்பொழுதுபோல் மருத்துவமனையை நடத்த விரும்பியிருந்தால்,
NHS இன் கீழ்
ஊழியர்கள் தக்கவைக்கப்பட்டு, "மாறுதல்களை சுற்றி கணிசமான தடைகள் செய்யப்பட்டு இருந்தால், எங்களை
போன்றவர்கள் அதில் அக்கறை கொண்டு இருந்திருக்கமாட்டோம்" என்று கூறினார்.
East of England
சுகாதார
மூலோபாய நிர்வாகத்தின் இயக்குனரான Stephen
Dunn தனியார்துறை கவலைப்பட வேண்டிய தேவை இல்லை என்று
உத்தரவாதம் அளித்தார். "எனவேதான் சுகாதாரத் துறை எங்களுடன் ஒத்துழைத்து அவர்களுடைய முக்கிய
விவரங்கள் சில பற்றி தெளிவுபடுத்தியுள்ளது; இது வருங்கால செயற்பாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக
இருக்கமுடியும்."
மற்ற NHS
அமைப்புக்கள், அருகில் இருக்கும்
Foundation Trusts
மற்றும் Hinchingbrook
இன் மூத்த நிர்வாகிகள் உட்பட, NHS
இன் "உள் சந்தையில்" இருந்து கிடைக்கும் பணத்திற்கு சுற்றுகின்றன.
ஒரு கெளரவமான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பணிகளை அளிப்பதற்கு
பணம் இல்லை என்ற கூற்று கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும். நூற்றுக்கணக்கான பில்லியன்கள் எந்தவித நிபந்தனையும்
இன்றி, வங்கிகளின் கணக்குகளை கூடப் பார்க்காமல் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் ஆலோசனை
கேட்கப்படவும் இல்லை, கணக்குகாட்டப்படவில்லை. ஆயினும்கூட சுகாதாரப் பாதுகாப்பு என்று வரும்போது "சந்தைகளின்
தடைகளை" எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அரசாங்கத்தின் திட்டங்கள் உள்ளூர் மக்களிடம் கடுமையான சீற்றத்தை எழுப்பியுள்ளன.
அவர்கள் தனியார்மயமாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
UNISON இன் பதில்
தனியார் பிரிவுக்குக் கட்டுப்பாட்டை மாற்றும் திட்டங்களை நிராகரித்து மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு
கொடுக்க வேண்டும் என்பதாகும். உள் சந்தைகள் பற்றி எத்தகைய குறைகளை கூறியிருந்தாலும், அது புதிய தொழிற்கட்சியின்
உள் சந்தையை நடந்துவிட்ட செயலாகத்தான் ஏற்றுள்ளது.