WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: Union thugs, police evict undocumented
workers from union hall
பிரான்ஸ்: தொழிற்சங்க குண்டர்களும் போலீஸும் ஆவணமற்ற தொழிலாளர்களை தொழிற்சங்க
வளாகத்திலிருந்து வெளியேற்றுகின்றனர்
By Pierre Mabut and Antoine Lerougetel
16 July 2009
Use this version
to print | Send
feedback
தொழிற்சங்கக் குண்டர்களும்
CRS
போலீஸ் கலகப் பிரிவும் நூற்றுக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்களை அவர்கள் ஆக்கிரமித்திருந்த பாரிஸின் தொழிற்சங்க
அரங்கத்திலிருந்து (La
Bourse du travail)
வெளியேற்றியதானது தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒத்துழைப்பதை அப்பட்டமாக
சித்தரிக்கிறது.
ஆவணமற்ற தொழிலாளர்கள்
Bourse du trevail
ஐ கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி ஆக்கிரமித்து
CGT
தொழிற்சங்கத்தை (ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருப்பதை) அரசாங்கத்துடன் தங்கள்
நிலையை ஒழுங்குபடுத்த பேச்சுவார்தைதகளை நடத்த கட்டாயப்படுத்தாலாம் என்று நம்பினர். அவர்களுடைய முன்முயற்சியானது
CSP
75 ஆவணமற்றோர் ஒருங்கிணைப்பு
குழுவின் தலைமைமையை ஏற்று நடந்ததானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த
அடுக்குகள் காட்டிய பெருகியமுறையிலான நம்பிக்கையின்மை, விரோதப்போக்கு ஆகியவற்றை உறுதிபடுத்தியது.
CGT
இன் உயர்ந்தபட்ச விடையிறுப்பு, அரசியலில் தீவிரமாவதையும், இந்த விரோதப்போக்கு தெளிவாவதையும்தான்
உறுதிபடுத்துகிறது.
ஜூன் 24ம் திகதி
CGT
தலைமையில் ஒரு கமாண்டோ குழு ஆவணமற்ற தொழிலாளர்களை
Bourse du travail
லில் இருந்து தாக்கி வெளியேற்றியது. இத்தாக்குதல்
CRS
கலகப் பிரிவு போலீசுடன் இணைந்து நடத்தப்பட்டது; அவர்கள் இந்த கட்டாய வெளியேற்றத்திற்கு உதவிய பின்னர்
வெளியே நடைபாதையில் முகாமைத்திருந்த 600 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற தொழிலாளர்களை சூழ்ந்து கொண்டனர்.
ஆவணமற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு, தாக்குதலுக்கு பின் வெளியிட்ட ஒரு
அறிக்கையில் கூறியதாவது: "CGT
பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 100 குண்டர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு, இரும்பு ஆயுதங்கள், கைத்தடிகள்
மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் 11.30 க்கு தொழிற்சங்க அரங்கிற்குள் பலவந்தமாக நுழைந்தனர்... அங்கு
இருந்தவர்களை, குறிப்பாக மகளிரையும் குழந்தைகளையும் தாக்கி அவர்களை [கட்டிடத்திற்கு] வெளியே தூக்கி
எறிந்தனர்." காலையிலேயே தங்கள் வாடிக்கையான வாரந்திர எதிர்ப்பை காட்டுவதற்கு உள்ளூர் அரச
தலைமை நிர்வாக அலுவலகத்திற்கு
(Préfecture),
அவர்களின் வசிக்கும் உரிமைகளை கோருவதற்கு சென்றிருந்த பெரும்பாலான தொழிலாளர்கள் இல்லாத நிலையை
CGT
பயன்படுத்தி கொண்டது.
CSP
75 ஆக்கிரமிப்பு ஒழுங்கமைப்பாளர்கள் கூறியதாவது: "23 பேர் காயமுற்றனர், கண்ணீர் புகை வாயுவினால்
திணறினர், தாக்கப்பட்டனர்; அவர்களில் ஐந்து பெண்களும் ஒரு குழந்தையும் அடங்கும்."
CGT
இன் தாக்குதலுக்கு ஆக்கிரமிப்பாளர்களுடைய ஆரம்ப எதிர்ப்பை தொடர்ந்து போலீஸார் கண்ணீர்ப்புகையை
பயன்படுத்தி குறுக்கீடு செய்தனர்--இதற்கு அந்த இடத்தின் உரிமையாளராக இருந்த பாரிஸ் நகர சபையின் அனுமதி
கிடைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆவணமற்ற தொழிலாளர்கள், தெருக்களில் மாறி மாறி
அமர்ந்திருந்து, அவர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்,
டஜன் கணக்கான கலகப் பிரிவு போலீஸ் வாகனங்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டனர்.
17
நாட்கள் Bourse
de travail இன்
வளாகத்தின் வெளிப்புற நடைபாதையிலிருந்த பின்
CSP
75 குழுவின் உறுப்பினர்கள் இறுதியில் தங்கள் 14 மாத போராட்டத்தை, அதாவது தொழிற்சங்கங்கள் அவர்களின்
பிரான்சில் வசிக்கும் மற்றும் வேலை பார்க்கும் உரிமைகளை பெறும் கோரிக்கைகளுக்கான ஆதரவுடன் கூடிய
போராட்ட முயற்சியை கட்டாயப்படுத்தலின் பேரில் கைவிட நேர்ந்தது. தெருக்களில் இருந்து அகல வேண்டும்
என்பதற்கும் 1,174 பேரில் 300 விண்ணப்பங்களை பரிசோதித்து இரு மாதங்களுள் வசிக்கும் உரிமை
கொடுக்கப்படும் என்ற ஒரு உறுதியையும் அவர்கள் ஒரு பரிமாற்றாக பெற்றுக்கொண்டு, ஜூலை 12ம் திகதி
அரசாங்கத்தினால் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவதற்கு அவர்கள் வாக்களித்தார்கள்.
இந்த ஆரம்ப வெளியேற்ற முடிவு, இந்த அரங்கில் அலுவலகங்களை வைத்திருந்த ஏழு
தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க அரங்கின் நிர்வாகக் ஆணைக்குழுவால்
எடுக்கப்பட்டது. இதன் செயலர்
Edgar Fisson
தன்னுடைய பங்கிற்கு, இந்த கட்டிடத்தை திருப்பப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக பாரிஸ் மேயர்
Bertrand
Delanoë (சோசலிஸ்ட்
கட்சி) உடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்
CSP 75
ன் செய்தித் தொடர்பாளர்
Sissoko
கூறியதாவது: "அவர்கள் [போலீஸ்] இறுதியில் தலையிட்டதும், நகரசபை
préfecture
டம் [போலீசிடம்] இந்த ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்
புள்ளிவையுங்கள் என்று கூறியதை கண்காணிப்பாளர் என்னிடம் கூறினார்."
மேயர் அலுவலகத்தில் "ஒருங்கிணைப்பிற்கு" பொறுப்பாக இருக்கும்
Pascale Boistard,
விளக்கினார்: "அரசியல் அளவில் நாங்கள் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கவில்லை. தொழிலாளர்
உரிமைகள் மீது அரசாங்கம் பலமுறை தாக்கியுள்ள நிலையில், இந்த ஆக்கிரமிப்பு வரவேற்கத்தக்கதல்ல என்றுதான்
நினைத்தோம்; ஏனெனில் தொழிற்சங்கங்களின் செயல்களையும் இது தடுத்தது."
CGT
இன் பாரிஸ் மாவட்ட செயலர் பாட்ரிக் பிக்கர்ட் தாக்குதலை நியாயப்படுத்தி ஒரு அறிக்கை விட்டார்: "பல
மாதங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுகாண முயற்சித்து பலனற்றுப் போன பின்னர், நாங்கள் ஆக்கிரமிப்பிற்கு
முடிவு கட்ட விரும்பினோம்; இது ஒரு நிரந்தர கட்டாக்காலி ஆக்கிரமிப்பு நிலையாகிவிட்டது." வெளியேற்றப்பட்ட
தினத்தன்று பிக்கர்ட் செய்தி ஊடகத்திடம் கூறினார்: "பாரிஸ் தொழிற்சங்க இயக்கம் இந்த பெண்களையும்
ஆண்களையும் அவர்கள் கொண்டிருந்த நெருக்கடி நிலையிலிருந்து அகற்ற முடிவெடுத்தனர்; போலீசிடம் செல்லாமல்
இதை செய்ய விரும்பினர்."
CGT ,
அரச நிர்வாகத்திடமிருந்து சுதந்திரமான முறையில் இதைச் செய்ய முற்பாட்டார்கள் என்னும் பிக்கர்டின் கருத்து
நம்பகத்தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஒரு
CSP 75
ஆதரவாளர்
Liberation
இடம் கூறியகருத்தானது, "முகமூடி அணிந்து உலோகத் தடிகளை வைத்திருந்த ஒரு குழுவினரை அமைதியாக
செல்லும்படி போலீசார் அனுமதித்தது அசாதாரணமானது."
ஆவணமற்ற தொழிலாளர்களை வெளியேற்றுவதில்,
CGT
இன் CRS
உடனான ஒத்துழைப்பு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தின் விரோதப்போக்கு
எந்த அளவிற்கு உள்ளது என்ற தீவிர ஆபத்தைக் காட்டுகிறது.
அரசாங்கத்துடன்
CGT
இன் உறவுகள் ஒன்றும் புதிதல்ல. அதிலும் குறிப்பாக தற்போதைய கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசியுடைய நிர்வாகத்துடன், இது நடத்திவரும் எந்த பயனுமற்ற ஒரு நாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
அரசாங்கத்தை மகத்தான ஓய்வூதிய குறைப்புக்கள், வங்கிகளுக்கு பிணை எடுப்பு ஆகியவற்றை மக்கள் எதிர்ப்பை மீறி
செய்ய வைத்துள்ளன; இதற்கு பரிமாற்றாக ஒரு
Common Position,
அதாவது
"பொது நிலைப்பாடு" உடன்பாடு
ஏற்பட்டுள்ளது; இதன்படி
CGT
க்கு கூடுதலான தொழிற்சங்க, அரசாங்க நிதியுதவி மற்றும் பதவிகள் கிடைக்கும். உலகப் பொருளாதார
நெருக்கடி சமூக அழுத்தங்களை அதிகப்படுத்தும்போது,
CGT
இன் அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு இன்னும் அடக்குமுறை, சர்வாதிகார வடிவமைப்புக்களை பெறுகிறது.
ஆவணமற்ற தொழிலாளர்களின் இத் துயரநிலையானது முதலில், இன்று இருக்கும்
அமைப்புக்கள் தோற்றுவித்துள்ள தேசிய-சந்தர்ப்பவாத சார்பின் மகத்தான சாதகமற்ற அரசியல் சூழ்நிலைக்கு
சான்றாகும். ஆவணமற்ற தொழிலாளர்களின் உறுதிப்பாடு இருந்தாலும், அவர்களுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்
சக்திவாய்ந்த அரசியல் மற்றும் இப்பொழுது தெளிவாகத்தெரியும்
CGT
அமைப்புக்களை அவர்கள் தனியே தோற்கடிக்க இயலாது.
CSP 75
கடந்த ஆண்டு அரங்கை ஆக்கிரமிக்க முடிவெடுத்தபோது,
CGT
தொடர்ச்சியாக பல வேலை நிறுத்தங்களை பாரிஸ் பகுதியில் முன்னின்று
நடத்திவந்தது; குறிப்பாக உயர்மட்ட உணவுவிடுதிகளின் அருகில், ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ
உரிமையளிக்கப்பட வேண்டும் என்பதற்கு. இது அடிப்படையில் உணவு மற்றும் கட்டிட தொழில்களுடன் தொடர்புடைய
2,000 சட்டபூர்வ நடவடிக்கைகளை பாரிஸ் பகுதியில் மட்டும் பெப்ருவரி 2008லிருந்து தான் செய்ததாக
CGT
கூறுகிறது. அப்பொழுது குடியேற்றம் மற்றும் தேசிய அடையாளப் பிரிவு மந்திரியாக இருந்த
Brice Hortefeux,
CGT
ஐ ஆதரவு நிறைந்த இடைத்தரகு அமைப்பாக சில முன்னுரிமைத் தொழில்களின் சில தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ
உரிமை கொடுப்பதற்கு நியமித்திருந்தார்.
CGT
வேலைநிறுத்தங்கள் வெறுப்புமனப்பான்மையுள்ள, மிகைப்பூச்சு தன்மையைத்தான் கொண்டிருந்தன. 2,000
சட்டப்பூர்வ வசித்தல் உரிமை
கொடுக்கப்பட்டவர்கள், பிரான்சில் இருக்கும் 400,000 ஆவணமற்றவர்களில் ஒரு சிறு பகுதியாவர். மேலும்
அவற்றுள் பலவும் குறுகிய கால வசிக்கும் உரிமையைத்தான் பெற்றுக்கொண்டுள்ளன, சிலவோ மூன்றே மாதங்களுக்கு
மட்டுமே; இவை அவர்களுடைய எஜமானர்கள் விரும்பும்வரைதான் நடைமுறையில் இருக்கும்.
ஆவணமற்ற தொழிலாளர்கள்
CGT
இன் வழிகாட்டலில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதில், அவர்கள் தோல்வியைத்தான் தழுவ
நேரிட்டது.
Hortefeux மற்றும்
Sarkozy இருவரும்
இவர்களுக்கு விட்டுக் கொடுப்பதாக இல்லை; அத்தகைய நடவடிக்கை அரசியலில் தொலை விளைவுகளை
ஏற்படுத்திவிடும். முதலில் அது மற்ற ஆவணமற்ற தொழிலாளர்களையும் தங்கள் உரிமைகளுக்கு போராடவைக்கும்,
இதையொட்டி முன்கணிக்கமுடியாத சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் அத்தகைய சலுகை ஆவணமற்றவர்களுகு கொடுக்கப்பட்டால், அது
சார்க்கோசியின் தேர்தல் ஆதரவுத் தளத்தில் பேரழிவை ஏற்படுத்தும்--அது குறிப்பான முறையில் குடியேற்ற
எதிர்ப்பு முறையீடுகள் புதிய பாசிச தேசிய முன்னணிகான வாக்குகளைக் கொண்டுள்ளது.
இருக்கும் தேசியவாத முன்னோக்குகளின் திவால்தன்மை மனித உரிமைகள் அமைப்புக்கள்
மற்றும் "தீவிர இடது"கட்சிகளின் துரோத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; இவை ஆவணமற்ற தொழிலாளர்கள்
அடக்கப்படுவதற்கு ஒப்புதல் கொடுக்கின்றன.
ஜூலை 13ம் திகதி
Libeation
கொடுத்த தகவலின்படி: "ஒரு உள்விவாதத்திற்குப் பின்னர்,
LDH
ஆனது
(League for the Rights of Man)
வெளியேற்றப்பட்டது பற்றி எந்த நிலைப்பாட்டையும்
எடுக்கவில்லை;
RESF (எல்லைகளற்ற கல்விகான
வலையமைப்பு குழு) ஏற்பாடு செய்திருந்த "மத்தியஸ்த" கூட்டங்களுக்குக் கூட அது செல்ல மறுத்துவிட்டது.
Attac (பூகோள
எதிர்ப்பு அமைப்பு),
PCF (கம்யூனிஸ்ட்
கட்சி) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO)
ஆகியவையும் ஜூலை 1 அன்று விவாதங்களில் இருந்து விலகிக்கொண்டன; ஏனெனில்
CSP 75
உறுப்பினர்கள் பாரிஸ்
CGT
உடன் "சமரசத்தை" விரும்பவில்லை.
CSP
75 தலைவர்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து "தெருவிற்கு வந்துவிட்ட முகாமிற்கு" எந்த அமைப்பும் வந்து ஆதரவு
கொடுக்கவே இல்லை என்று கூறியுள்ளது.
ஒரு "தீவிர இடது" கட்சியான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, அடக்கு
முறைக்கு ஆதரவு கொடுத்து ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டுக் கூறியதாவது: "மொத்தத்தில்
NPA
உறுப்பினர்கள் கருதுவதுயாதெனில், இத்தகைய ஆக்கிரமிப்பு தொழிற்சங்கத்தின் செயற்பாட்டை தடுப்பிற்கு
உட்படுத்தியதானது, அரசாங்கத்துடனும் போலீசுடனும் ஒரு சமநிலை சக்திநிலையை கட்டமைத்து வசிக்கும்
உரிமைக்கான ஆவணத்தை பெறுவதற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு முடியாமல் செய்துள்ளது."
இத்தகைய அறிக்கை இந்த அமைப்புக்களின் வழிகாட்டல் பற்றிய நிறையவே
எடுத்துரைக்கிறது; இவைகள் அரசியல் திசை விலகல் இயக்கத்தைதான் "இடதில்" பரந்த அளவில் இருக்கும்
பண்புகளை விபரிக்கின்றன. உண்மையில், ஒருபுறத்தில் தொழிலாளர்களுக்கும் மறுபுறத்தில் அரசும் அதனுடடைய
தொழிற்சங்கங்களும் மற்றும் போலீசுற்கும் இடையே அதிகாரத்திற்கான போராட்டத்தில், அவர்கள்
பிந்தையவர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். |