WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ரஷ்யா மற்றும் முந்தைய USSR
Violence increases in Russia's Caucasus republics
ரஷ்யாவின் காகசஸ் குடியரசுகளில் வன்முறை அதிகரிக்கிறது
By Niall Green
31 July 2009
Use this
version to print | Send
feedback
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் வடக்கு காகசஸில்
நீண்ட நாட்களாக நடக்கும் "எதிர்ப்புரட்சி" நடவடிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி என்று அறிவித்தார். ஏப்ரல் மாதம்
பேசும்போது மெட்வெடேவ் அப்பகுதியில் கிரெம்ளின் இராணுவ திட்டமிடுவோர் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் பின்வாங்கப்படுவதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளுவர் என்று அறிவித்தார். ஆனால் ரஷ்ய பாதுகாப்புப் படைகளுக்கும் உள்ளூர் போராளிகளுக்கும்
இடையே சமீபத்திய வன்முறை வெடிப்பு மாஸ்கோ இப்பகுதியில் தன் இராணுவப் பிடியை தளர்த்தும் திட்டத்தை
வைத்திருக்கவிலை எனக் காட்டுகிறது.
1994ம் ஆண்டு பிரிவினைவாத சக்திகள் ரஷ்யாவின் செச்சென்யா குடியரசில் அதன்
சுதந்திரத்தை அறிவித்ததில் இருந்து இந்த பிரச்சனை நிரம்பிய பகுதியில் மாஸ்கோ பெரிய இராணுவ நிலைப்பாட்டை
கொண்டிருந்தது. ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி பெருகியிருக்கையில் இப்பகுதியில் தன் இராணுவ நடவடிக்கைகளை
குறைக்கலாம், அவை பெரும் செலவினங்கள் கொடுக்கின்றன என்று கிரெம்ளின் கருதியிருந்தது.
செச்சேனிய தலைநகரான குறொஸ்னியில் ஞாயிறன்று ஒரு தற்கொலை குண்டுதாரி
தன்னையும் ஆறு பேரைக் கொன்றான். இதைத்தவிர பத்து பேர் காயமுற்றனர். செச்சேன்யா மற்றும் ரஷ்யாவின்
வடக்கு காகசஸ் பகுதியில் வன்முறை மோதல்கள் இந்த ஆண்டு அதிகரித்துவிட்டன; இது 2001ல் இரண்டாம் செச்சேனிய
போர் என்ற குருதி கொட்டிய போரில் நிகழ்விற்கு பின்னர் கொலைகள் குறைந்தளவில் நடந்துள்ளன.
ரஷ்யாவின் அண்டைய குடியரசுகளான இங்குசேஷியா மற்றும் டாகேஸ்தான் குடியரசுகள்
இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கும் ரஷ்ய கூட்டாட்சி சக்திகள் மற்றும் அதன் உள்ளூர் நட்பு அமைப்புக்களுக்கும்
எதிரான வன்முறையில் மிகப் பெரிய விரிவாக்கத்தைக் காண்கின்றன. மே மாதத்தில் டாகேஸ்தானின் உள்துறை
மந்திரி துப்பாக்கியேந்திய போராளிகளால் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த மாதம், இங்குசேஷியாவின்
ஜனாதிபதி ஒரு கார்க்குண்டு வீச்சினால் படுகாயமுற்றார். சமீபத்தில் போராளிகள் இங்குசேஷியாவில் வாகனத்தை
நோக்கி ஒரு தாக்குதல் நடத்தியபோது ஒன்பது செச்சேனிய போலீசாரும் கொல்லப்பட்டனர்.
ஜூலை மாதம் ரஷ்ய மனித உரிமைகள் ஆர்வலர் நடாலியா எஸ்டிமிரோவா
குறொஸ்னியில் கடத்தப்பட்டு இங்குசேஷாயாவில் கொலையுண்டு கண்டுபிடிக்கப்பட்டார். செச்சேன்யாவில் இருந்த
கிரெம்ளின் சார்பு அரசை விமர்சித்தவர்களில் அவர் முக்கியமானவராக இருந்தார்.
இந்த வாரம் ரஷ்ய பாதுகாப்பு படைகள் டாகேஸ்தானில் சந்தேகத்திற்குரிய எட்டு
இஸ்லாமிய போராளிகளை தலைநகரமான மக்காக்காவிற்கு அருகே ஒரு காட்டுப் பகுதியில் நடந்த ஒருமணி நேரத்
துப்பாக்கிச் சண்டையில் கொன்றன. கிட்டத்தட்ட அதே நேரத்தில் மற்றொரு போராளி செச்சேன்யாவில்
கொல்லப்பட்டார். இது ரஷ்ய பாதுகாப்பு படைகளால் மூன்று முஸ்லிம் பெரும்பான்மை இருக்கும் ரஷ்யக்
குடியரசுகளில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் மட்டும் 20க்கும் மேல் என்று கொண்டு
வருகிறது.
ரஷ்ய சார்புடைய அதிகாரிகள் சில செச்சேனிய பிரிவினைவாதிகளுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றனர். இம்மாதத்தில் முன்னதாக அரசாங்கத்தின் பிரதிநிதியும் 1990களில்
மாஸ்கோவிற்கு எதிராக போரிட்ட முன்னாள் செச்சேனிய போர்ப்பிரபுவின் மகனுமான ரம்ஜான் காட்யுரோவ்
நோர்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் அகமத் ஷாகாயேவ் உடன் பேச்சுக்களை நடத்தினார் என்று
BBC தகவல்
கொடுத்தது.
செச்செனியாவின் வெளியே உள்ள அரசாங்கத்தின் தலைவர் தானென ஷாகாயேவ்
கூறுகிறார். 2007ல் இவர் தானே அறிவித்துக் கொண்ட இஷ்கேரிய குடியரசின் (செச்சேன்யா) ஜனாதிபதி என்று
அறிவித்துக் கொண்ட செச்சேனிய பிரிவினைவாதத் தலைவர் டோகு உமரோவிடம் இருந்து பிரிந்தார். செச்சேனியா
ஷரிய சட்டத்தின்படி ஆளப்பட வேண்டும் என்றும் மேலைநாடுகள் இஸ்லாமின் விரோதிகள் என்றும் உமரோவ்
அறிவித்தார். இந்த நிலைப்பாட்டிற்கு ஷாகாயேவ் எதிர்த்து, மேலை சக்திகளுடன் உறவுகளை வளர்க்க ஆதரவு
தெரிவித்து, செச்சேனியாவில் இருக்கும் மதசார்பற்ற சக்திகளுடனும் நல்லுறவு வேண்டும் என்றார்.
பொதுவாக அதிக அளவு தன்னாட்சி பெற்றிருந்தாலும், குறொஸ்னியில் இருக்கும்
காட்யுரோவ் அரசாங்கம் அத்தகைய பேச்சுக்களில் ஈடுபடுவது அநேகமாக நடக்காது; மாஸ்கோவின் ஆசி
இல்லாமல் எட்டு ஆண்டுகளில் முதல் தடவையாக அவ்வாறு செய்யாது. இக்கூட்டத்திற்கு விருந்தோம்பினராக இருந்த
நோர்வேயினர் "கிரெம்ளினில் உள்ள மிக உயர்மட்டத் தலைமையில்தான்" இப்பேச்சுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டது
என்று கூறினர்.
ஷாகாயேவும் அவரைப் பின்பற்றுபவர்களும் செச்சேனியாவில் இன்னும் போரிட்டுக்
கொண்டிருக்கும் பிரிவினைவாத போராளிகளுக்கு நெருக்கமானவர்கள் ஆனால் வேறுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
செச்சேனிய அரசாங்கப் பிரதிநிதி பேச்சுக்கள் "செச்சேனிய குடியரசின் முழு அரசியல் உறுதிப்பாடு மற்றும்
செச்சேனிய சமூகம் இறுதியாக ஒருங்கிணைக்கப்படுவது பற்றி இருக்கும்" என்று கூறினார். ஷாகாயேவ்
பாதுகாப்பாக செச்சேனியாவிற்கு திரும்பி, அங்கு அவர் "செச்சேனிய கலாச்சாரத்தை புதிப்பிப்பதில்
பங்குவகிக்கவேண்டும்" என்று காட்யூரோவ் கூறினார்.
இந்த வாய்ப்பை அவர் எடுத்துக் கொள்ளுவாரா என
BBC யால்
கேட்கப்பட்டதற்கு ஷாகாயேவ், "செச்சேனிய குடியரசிற்கு நான் உறுதியாகத் திரும்புவேன், இதில் நான் எந்த
நிபந்தனையையும் சுமத்த மாட்டேன்." என்றார்.
இப்பகுதியில் ரஷ்ய உயரடுக்கு வலுவான நலன்களை கொண்டுள்ளது. வடக்கு காகசஸ்
குடியரசுகள் மத்திய ஆசிய எண்ணெய், எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களாகும். இது மாஸ்கோவின்
பாதுகாப்பிற்கு மிக முக்கியம் எனக் கருதப்படுகிறது. இதைத்தவிர, இந்த மாநிலங்களில் ஒன்று பிரிந்து போவது
என்பது ரஷ்யாவின் மற்ற இனவழி, தேசிய சிறுபான்மை குடியரசுகளான டாடார்ஸ்தான் போன்றவை சுதந்திர
இயக்கங்களை வகுக்க வழிசெய்யும்.
தேசிய மற்றும் இனவழிப் பிரிவுகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச
ஆட்சியில் சோவியத் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் பிரிப்பதற்கு தக்க வைக்கப்பட்டிருந்தன. ரஷ்ய
தேசியவெறி அதிகாரத்துவத்தால் ஊக்கம் கொடுக்கப்பட்டு, தேசிய, இனவழிவகை துன்பங்கள் மிருகத்தனமான
அடக்குமுறையினால் அதிகரித்தன. ஸ்ராலின் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மத்திய ஆசியாவிற்கு செச்சேனிய
மக்களை ஏராளமாக கடத்தியது ஒரு உதாரணம் ஆகும்.
இத்தகைய ரஷ்ய கூட்டாட்சிக்குள் இருக்கும் பிரிவினை இயக்கங்கள் ரஷ்ய உயரடுக்கு
அனைத்து ரஷ்யர்களுடைய ஜனநாயக, சமூக விருப்புகளை பூர்த்தி செய்ய முடியாத தன்மையை பிரதிபலிக்கின்றன.
அதே நேரத்தில் செச்சேன்யாவில் காட்யுரோவ் போன்ற உள்ளூர் இனவழி, தேசிய உயரடுக்குகள் சுதந்திரம்
அல்லது தன்னாட்சி பெறுவதை தங்களுக்கும் தங்கள் குறுகிய வட்டத்திற்கும் செல்வக் கொழிப்பு கொடுக்கக்கூடிய
வழிவகையாகக் காண்கின்றனர்.
ரஷ்யாவின் பொருளாதாரம் எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களின் விலைச் சரிவு
மற்றும் முக்கிய உள்கட்டுமான பிரச்சினைகளால் நெருக்கடியில் இருக்கும் நிலையில், மாஸ்கோவும் அதன் உள்ளூர்
செயலமைப்புக்களும் கூடுதலான முறையில் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைக்க இராணுவம் மற்றும் போலீசை நம்ப
வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில் பொருளாதார மந்த நிலையின் சுமை தொழிலாள வர்க்கத்தின்
முதுகுகளில் ஏற்றப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை காகசஸ் பகுதியில் கொண்டுள்ள பங்கை மொஸ்கோ
நன்கு அறியும். மேலும் தன் குடியரசுகளில் அமெரிக்கத் தூண்டுதலின் "வண்ணப் புரட்சிகள்" அச்சுறுத்தல் பற்றியும்
அஞ்சுகிறது. ரஷ்ய படைகளுக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே தற்போதைய சுற்று கொலைகள் இருக்கும்
நிலைமை, பிரிவினை சக்திகளுக்கு தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகைய கொள்கையை கிரெம்ளின் கடைப்பிடிக்கும்
என்பதற்கான ஒரு சைகையாக இருக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுடன் இந்த மாதம் உச்சிமாநாட்டில் பேசிய
பின், மெட்வெடேவும் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டினும் அப்பகுதியில் ரஷ்ய உயரடுக்கின் நலன்களை முன்னேற்றுவிக்கும்
வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு மாஸ்கோ உதவுவதற்கு பிரதியுபகாரமாக
(உச்சிமாநாட்டிற்கு முன் மெட்வெடேவ் அமெரிக்க விமானங்கள் ரஷ்ய வான்பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு
உட்பட்டிருக்கும் நாட்டிற்கு செல்ல அனுமதி கொடுத்திருந்தார்) வாஷிங்டன் தற்போதைக்கேனும் சேசன்யா, இங்குஷேடியா
மற்றும் டாகேஸ்தான் ஆகியவற்றுடன் எல்லைகளை கொண்ட முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் ரஷ்ய
நலன்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
ஒபாமா மாஸ்கோவை விட்டு சென்ற பின்னர் ஒரு பெரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக,
கடந்த ஆண்டு மாஸ்கோவிற்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற டிபிலிசி அரசாங்கத்திற்கும் இடையே நடந்த போரின் மையப்பகுதியான
பிரிந்துசென்ற நாடும் ஜோர்ஜிய மாநிலமான தெற்கு ஒசேஷியாவிற்கு மெட்வெடேவ் பயணித்தார். அம்மாநிலத்திலும்
ரஷ்ய சார்புடைய ஜோர்ஜிய பகுதியான அப்காசியாவிலும் தன்னுடைய அதிகாரத்தை ஒருங்கிணைக்க மாஸ்கோ முற்படும்
என்ற விருப்பதை வெளியிடும் செயல் ஆகும்.
வாஷிங்டன் ஆப்கானிஸ்தானத்தில் நடத்தும் போரில் தன் பங்காளித்தனத்தை அதிக
அளவிற்கு புதுப்பித்தவுடன், மாஸ்கோ வடக்கு காகசஸில் தன்னுடைய "பயங்கரவாதத்தின் மீதான போரை" தொடரும்.
அதே நேரத்தில் அதன் அதிகாரத்தை காகசஸ் மலைகளின் தெற்குப் புறத்திலும் விரிவாக்க முற்படும். |