World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lanka: ISSE-SEP meeting in Colombo on Karl Marx and Charles Darwin இலங்கை: கார்ல் மார்க்ஸ் மற்றும் டார்வின் பற்றி ஐ.எஸ்.எஸ்.ஈ.-சோ.ச.க. கொழும்பில் கூட்டம் 1 August 2009 இலங்கையில் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), 19ம் நூற்றாண்டின் இரு மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் சார்ல்ஸ் டார்வினும் ஆற்றிய பங்களிப்பு பற்றி பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. இந்த ஆண்டுடன் டார்வின் பிறந்து 200 ஆண்டுகளும் மற்றும் இனங்களின் தோற்றம் பற்றி அவரது படைப்பு வெளிவந்து 150 ஆண்டுகளும் பூர்த்தியாகின்றன. 1859ல் பிரெட்ரிக் எங்கல்ஸ் மார்க்சுக்கு எழுதியதாவது: "எப்படியாயினும் நான் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் டார்வின், முற்றிலும் சிறப்பானவர்... இயற்கையில் வரலாற்றுப் பரிணாமத்தை வெளிப்படுத்த இந்தளவு உயர்வான முயற்சி எடுக்கப்பட்டிருக்கவில்லை. மற்றும் நிச்சயமாக இந்தளவு சிறந்த விளைவுளை ஏற்படுத்தக்கூடிய முறையில் முயற்சிக்கப்படவில்லை." டார்வினின் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து 1861ல் மார்க்ஸ் எழுதியதாவது: "டார்வினின் வேலை அதி முக்கியமானதோடு வரலாற்று வர்க்கப் போராட்டத்துக்கு இயற்கை விஞ்ஞானத்திலிருந்து ஒரு அடிப்படையை வழங்குவதன் காரணமாக அது எனது தேவைக்கு மிகவும் பொருந்துகிறது." விஞ்ஞானத்தின் உயர்ந்த சிந்தனையாளர்களான டார்வினும் மார்க்சும், நவீன யுகத்தை வரையறுத்தனர். அவர்களது பணியின் முழு உள்ளடக்கமும் இன்று இப்போதுதான் வெளிப்படையாகி வருகின்றன. டி.என்.ஏ. கண்டுபிடிக்கப்பட்டதுடன் பரிணாமமானது அதன் உள்ளடக்கத்தை பூரணப்படுத்திக் கொண்டுள்ளதோடு மற்றும் மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், அது எமது அன்றாட வாழ்க்கையின் மற்றும் அனுபவத்தின் இன்றியமையாத பாகமாகி வருகின்றது. சோசலிசத்தை காலம் கடந்தது என்ற அதன் எதிரிகளால் நீண்ட காலமாக மார்க்ஸ் நிராகரிக்கப்பட்டு வந்த போதிலும், உலக நிதி முறைமை பின்னடைவை சந்தித்து, பூகோள பொருளாதாரம் ஒரு சமாந்தரமற்ற வீழ்ச்சிக்குள் மூழ்கியுள்ள நிலையில், அவரது படைப்புக்கள் புதிய பொருந்தும் தன்மையை பெற்றுள்ளன. ஐ.எஸ்.எஸ்.ஈ-சோ.ச.க. கூட்டத்தில், இந்த சிரேஷ்ட சிந்தனையாளர்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டு, அவர்களது பணிகளுக்கு உயிரூட்டிய பொது கருப்பொருள்களை வெளிக்கொணரப்படுவதோடு அவற்றின் தற்போதைய முக்கியத்துவம் ஆய்வுக்குள்ளாக்கப்படும். கூட்டத்துக்கு வருகை தந்து கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு நாம் அனைத்து மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சொற்பொழிவாளர்: பாணினி விஜேசிறிவர்தன காலம்: ஆகஸ்ட் 4, செவ்வாய் கிழமை பி.ப. 3.30 மணி இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம் |