WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தோனேசியா
Indonesian president's re-election disputed
சர்ச்சையில் சிக்கியது இந்தோனேஷிய ஜனாதிபதியின் மறுதேர்தல்
By John Roberts
3 August 2009
Use this
version to print | Send
feedback
பதவி வகித்து வரும் ஜனாதிபதி சூசீலோ பாம்பேங் யூதோயொனொ (Susilo
Bambang Yudhoyono)
பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக ஜூலை
25ல், அறிவிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் பொது தேர்தல் ஆணையத்தின் (KPU)
அறிவிப்பு, தோல்வியடைந்த
வேட்பாளர்களால் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இரண்டாவதாக வந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மேகாவதி சுகர்னோபுத்ரி
(Megawati
Sukarnoputri) இந்த
அறிவிப்புக்கு செவிசாய்க்கவில்லை. அவரும், அவரின் உடனிருக்கும் கட்சியாளரான, அவப்பெயரெடுத்திருந்த கோபாஸ்சஸ்
சிறப்பு படையின் (Kopassus
special forces)
முன்னாள் தளபதி பிரபோவோ சுபெயின்டோவும் அவர்களின் வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர், இந்த
அரசியமைப்பு நீதிமன்றத்தில் அந்த முடிவிற்கு
சவால்விடப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல, மூன்றாவது வேட்பாளரான ஜூசுப் கல்லாவும் (Jusuf
Kalla), அவர் கட்சியாளருமான
விரண்டோவும் (Wiranto),
அந்த முடிவுக்கு சவாலாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். சுஹர்டோ சர்வாதிகாரத்தின் அரசியல் எந்திரமான
கோல்கரின் (Golkar)
சேர்மேனாக இருக்கும்
கல்லா, 2004 வரை யூதோயொனொவின் துணை ஜனாதிபதியாக இருந்தார். விரண்டோ இராணுவப்படையின் ஒரு
முன்னாள் தலைவருமாவார்.
KPU ன்
புள்ளிவிபரங்களின்படி, யூதோயொனொவும், அவரின் துணை ஜனாதிபதியும், பேங்க் இந்தோனேஷியாவின் (மத்திய
வங்கி) முன்னாள் ஆளுநருமான போடொனொவும் (Boediono),
73,874,562
வாக்குகளை அல்லது மொத்தத்தில்
60.80 சதவீதம் வாக்குகளை பெற்றார்கள். அந்த குழு, நாட்டின் 33ல் 28 மாணாங்களுக்கு ஜூலை 8ல்
வாக்குப்பதிவு நடத்தியது. ஒரு வீணான தேர்தலின் தேவையை தவிர்க்கும் வகையில் முதல் சுற்றிலேயே தம் பதவியை
வென்ற யூதோயொனொ, இரண்டாவது ஐந்தாண்டு பதவி காலத்திற்காக அக்டோபரில் தம் தொடக்க விழாவிற்கான
பாதையையும் அமைத்து கொண்டார்.
தேர்தலுக்கு முந்தைய சுற்றுப்பயணங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக,
யூதோயொனொவும், அவரின் ஜனநாயக கட்சியும்
Prosperous Justice Party (PKS), National
Mandate Party (PAN), United Development Party (PPP)
மற்றும்
National Awakening Party
(PKB) ஆகிய நான்கு
முக்கிய இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவை (பெயரளவில் குறைந்தபட்சம்) ஆதரவை பெற்றிருந்தது. மக்கள்
பிரதிநிதித்துவ சபையின்
(DRP),
பாராளுமன்றத்தின் கீழ்சபை, 560 இடங்களில், அவர்களுக்கு இடையில்,
இந்த கட்சிகள் 314 இடங்களை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு புதிய மந்திரிசபையை அமைக்க
இது, யூதோயொனொவை ஒரு வலுவான இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்துகிறது.
ஜனாதிபதி தேர்தலில், மேகாவதி-பிரபோவோ பிரிவு
32.584
மில்லியன் வாக்குகளை அல்லது 26.79 சதவீத
வாக்குகளை சேகரித்தது. 121 இடங்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள
Megawati's Indonesian
Democratic Party-Struggle (PDI-P)
மற்றும்
Prabowo's Greater Indonesia Movement Party
(Gerindra) ஆகிய
இரண்டு கட்சிகள் இவர்களுக்கு ஆதரவாக இருந்தன. கல்லா மற்றும் விரண்டோவின் மூன்றாவது பிரிவு
15.081
மில்லியன் வாக்குகளை அல்லது 12.41
சதவீதத்தை வென்றது. ஒட்டுமொத்தமாக, கோல்கார் மற்றும் விரண்டோவின்
Peoples Conscience Party,
DRPல் 125 இடங்களை
கொண்டிருக்கிறது.
வாக்களிக்க தகுதி பெற்ற
176
மில்லியன் வாக்காளர்களில் சுமார் 121 மில்லியன் முறையாக
வாக்களித்திருப்பதாக
KPU
அறிவித்தது. வாக்காளர் பட்டியல்களில் 23 மில்லியன் போலி வாக்காளர்
பெயர்கள் இருப்பதாகவும், மில்லியன்கணக்கான தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும்
மேகாவதி குழு குறிப்பிடுகிறது. முதலில் பதிவுசெய்யப்பட்ட புகார், அதாவது கல்லாவினுடையதை, ஆகஸ்டில் 4ல்
அரசியல் அமைப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது.
சட்டரீதியான முறையீடுகளுக்கு அப்பாற்பட்டு, பொருளாதார கொள்கை மீது ஆளும்
மேற்தட்டுக்களுக்குள் கணிசமான முரண்பாடுகள் உள்ளன. யூதோயொனொ, அவரின் தேர்வான போடொனொவுடன்,
தாம் சந்தை மற்றும் முதலீட்டுற்கு ஆதரவான பொருளாதார திட்டத்தை தொடரவிருப்பதாக
தெளிவுபடுத்திவிட்டார். அதே நேரத்தில், வறுமையில் வாடும் மக்களிடையே உள்ள பரந்த விரோத போக்கை
மனதில் கொண்டு, ஏழைகளும் கவனிக்கப்படுவார்கள், அவர்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என்று வாக்குறுதி
அளித்தார்.
ஜனாதிபதி அவரின் நிதி மந்திரியான ஸ்ரீ முல்யானி இந்திராவதியை மத்திய வங்கிக்கு
நகர்த்துவதற்கும், அதேசமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மறுஉறுதியளிக்கும் வகையில் அவரை மந்திரிசபையில்
தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாக யூதோயொனொவின் பணியாளர் வட்டாரங்களில்
பெயர்வெளியிட விரும்பாத ஒருவரின் கருத்தின் அடிப்படையில், ராய்டர்ஸ் ஜூலை 25ல் ஒரு கட்டுரை
பிரசுரித்திருந்தது. அந்த கட்டுரை குறிப்பிடுவதாவது :
"தென்கிழக்கு ஆசியாவின்
மிகப்பெரிய பொருளாதாரத்தின் திறனற்ற பொதுச்சேவைகள், போலீஸ் மற்றும் சட்டம் ஆகியவற்றில்
சீர்திருத்தங்களை கொண்டு வர நிதியறிக்கையை அவரால் தம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க முடியும் என்பதால்,
இந்திராவதி நிதி அமைச்சகத்தில் இருப்பதை முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்."
சர்வதேச செய்தி ஊடகங்கள் முழுவதும்
யூதோயொனொவின் வெற்றி
பாராட்டுகள் நிரப்பப்பட்டிருந்தன, ஆனால் அவரின் இரண்டாவது நிர்வாகத்தில் நிறையவே எதிர்பார்க்கின்றது.
சான்றாக, அரசாங்கத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முதிர்ந்த, உணர்வுபூர்வமான இந்தோனேஷிய அரசியல்
திட்டம் என்பதைப் பிரதிபலித்து, ஏப்ரல் மற்றும் ஜூலையின் தேர்தல் முடிவுகளைப் பாராட்டி
The Australian
பத்திரிகையில் ஜூலை 25ல்
கிரெக் ஷெரிடனின் ஒரு கட்டுரை வெளியானது. ஆனால் பின்வருமாறு எச்சரித்தது:
" இந்தோனேஷிய
பொருளாதார கதையில், வெளிநாட்டு நேரடி முதலீடு தான் ஒரு பலவீனமான புள்ளியாக உள்ளது. கடந்த ஆண்டு
சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடாக இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளது.
இதுவொரு கழிவு தொகை தான்.
SBY [யூதோயொனொ]
முதலீட்டு விதிகளை
தாராளமயமாக்கினால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரிய சட்டரீதியான ஸ்திரத்தன்மையை உருவாக்கும்,
சுரங்கத்துறை போன்ற குறிப்பிட்ட துறைகளை சீர்திருத்தும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும், மேலும் அவரின்
ஒட்டுமொத்த பெரிய-பொருளாதார மேலாண்மையை நிர்வகிக்கும், அவரால் வெளிநாட்டு முதலீட்டிற்கான ஒரு
பெரிய உடன்படிக்கையை கட்டவிழ்த்து விட முடியும். இது, உண்மையில் சீன மற்றும் இந்திய அளவிற்கு நிலையான
உயர் வளர்ச்சிக்கு திருப்பும்."
என்று குறிப்பிட்டது.
முரண்பாடாக, வெகுஜன மற்றும் பாதுகாப்புவாத திட்டங்களை முன்வைத்த
மேகாவதியும், கல்லாவும், தம் சக உறுப்பினரை மத்திய வங்கியின் ஆளுநராக்குவதற்கான யூதோயொனொவின்
தேர்வு, அவரை வெளிநாட்டு மூலதனத்தின் முகவராக மாற்றிவிட்டது என்று அறிவித்தார்கள்.
கோடீஸ்வரரான அவரின் சகோதரர்
Hashim Djojohadikusimo
ஆல் நிதியளிக்கப்பட்ட
பிரபோவோவின் பிரச்சாரம், உள்ளூர் சிறுவியாபாரிகளும், விவசாயிகளும் மற்றும் சிறுவர்த்தகர்களும் வெளிநாட்டு
போட்டியிலிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. நகர்புற மற்றும் கிராமப்புற மத்திய
வர்க்கங்களில் அவர்களின் பிரச்சாரங்களை முழங்கிய போதினும், நாட்டின் இராணுவத்தால் நடத்தப்படும் பிரிவுகள்
உட்பட வியாபாரத்தின் நலிந்த பிரிவுகளை பாதுகாப்பதே மேகாவதி மற்றும் கல்லா இருவருக்குமான முக்கிய
பிரச்சனையாக இருந்தது.
Jakarta JW Marriott
மற்றும்
Ritz-Carlton
ஹோட்டல்கள் மீதான ஜூலை 17 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தம்
தொடக்கவிழாவை தடுக்கவும், ஈரானில் தேர்தல் முடிவுகள் பெருந்திரளான மக்களால் எதிர்க்கப்பட்டது
போன்றதொரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான சூழ்ச்சியுடன் தொடர்புபட்டிருந்ததாகவும், யூதோயொனொ
கூறியபோது உட்பூசல் மேலும் அச்சுறுத்தலாக மாறியது. எவ்வாறிருப்பினும், ஈரானைப் போலில்லாமல், பதவி
வகிக்கும் ஜனாதிபதி யூதோயொனொ இந்தோனேஷியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் அமெரிக்காவின் மற்றும்
அதன் கூட்டாளிகளின் நலனுக்கு சிறந்த உத்தரவாதம் அளிப்பவர் என்பதால் அவை அவருக்கு பின்புலத்தில் முழுவதுமாக
ஆதரவளித்து வருகின்றன.
இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது,
KPU
தலைமையிடங்களைச் சுற்றி தெருக்களில் ஆயுதமேந்திய
வாகனங்கள் உட்பட பெரிய பாதுகாப்பு படையை குவித்ததன் விளக்கத்தையும் யூதோயொனொவின் அறிவிப்பு
கொண்டிருக்கிறது. சமூக கிளர்ச்சிக்கு எதிராக அதன் போலீஸ் மற்றும் இராணுவ இயந்திரத்தை பயன்படுத்தி எவ்வித
பயங்கரவாத தாக்குதலையும் அரசாங்கம் செயல்படுத்தும் என்பதற்கு இந்த இந்த நடவடிக்கை ஓர் எச்சரிக்கையாகும்.
2009
தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளர்களாக இருந்தவர்கள் அனைவரும், சுஹர்டோ சர்வாதிகாரத்தின்
தசாப்தகால தயாரிப்புகளாகும். நன்கு நிதிவசதி கொண்ட கட்சிகள் மட்டுமே பாராளுமன்ற தேர்தல்களில் நிற்க
முடியும் என்பதை அரசியமைப்பு மற்றும் தேர்தல்
சட்ட விதிகள் உறுதிபடுத்தி இருந்தன. ஏப்ரல் மாத தேர்தலில் 100ற்கும் மேலான கட்சிகள் போட்டியிட விரும்பியதில்,
வெறும் 38 கட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதிலும் வெறும் ஒன்பது கட்சிகள் மட்டுமே
DRPல்
இடங்களை பெற தேவையான 2.5 சதவீத தேசிய வாக்குகளை பெற்றன.
ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்று
DRP
உறுப்பினர்களில் 20 சதவீதத்தினரின் ஆதரவைப் பெற வேண்டும் அல்லது தேசிய
வாக்குகளில் 25 சதவீத வாக்குகளை பெற்ற ஒரு கட்சியாக இருக்க வேண்டும். கட்சி அமைப்புகளுக்கு
வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளரும் போட்டியிட முடியாதபடி
KPU
விதிகளை அமைத்திருந்தது.
இந்த தேர்தல், இந்தோனேஷியாவில் ஜனநாயகத்தின் மற்றொரு வெற்றியைக் குறிக்கிறது
என்ற முறையீடுகளானது, பல தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை அல்லது ஒட்டுமொத்தமாக
அரசியல் அமைப்பின் மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த அவர்கள் வேண்டுமென்றே நிராகரித்தார்கள்
என்ற உண்மையை தவிர்த்திருக்கின்றன. யூதோயொனொவிற்கு வாக்களித்தவர்களில் மற்றவர்கள், யூதோயொனொவின்
மற்ற இரண்டு போட்டியாளர்களை ஒப்பிடும் போது இவர் குறைந்த கொடுமையாளர் என்பதற்காக அவர்கள் வாக்களித்தார்கள்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையிலும், புதிய நிர்வாகம் அதன் சந்தை-சார்பான திட்டத்தை
ஊக்குவித்து வரும்நிலையிலும் முரண்பாடுகளும், பாகுபாடுகளும் கோபமாகவும், சமூக கிளர்ச்சியாகவும் திரும்ப
கூடும். |