WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Dozens of Haitian immigrants drown off Turks and Caicos
ருர்க்ஸ் மற்றும் கைக்கோஸ் தீவுகளுக்கு அருகே டஜன்கணக்கான ஹைய்ட்டிய புலம்பெயர்ந்தோர்
கடலில் மூழ்கியுள்ளனர்
By David Walsh
30 July 2009
Use this version
to print | Send
feedback
பல ஆண்டுக்கணக்கில் நிகழ்ந்துவரும் ஹைய்ட்டிய அகதிகள் தொடர்புடைய மிகப் பெரிய
சோக நிகழ்வாக, கரிபியத் தீவுகளான ருர்க்ஸ் மற்றும் கைக்கோஸ் ஆகியவற்றிற்கு அருகே உள்ள ஒரு கடலடி நீரடிப்பாதையில்
அவர்கள் பயணித்த படகு உடைந்ததில் டஜன்கணக்கான மக்கள் காணாமற் போய்யுள்ளனர்.
புதன் பிற்பகல் அளவில் கிட்டத்தட்ட 120 பேர் காப்பாற்றப்பட்டனர்; ஆனால் 16
சடலங்களும் அதாவது கிட்டத்தட்ட இதுவரை கணக்கில்வராதவர்கள் 70 புலம்பெயர்ந்தோர் உட்பட
மூழ்கியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
அமெரிக்க கடலோர பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர்
Jennifer Johnson
செய்தி ஊடகத்திடம் கூறினார்: "உயிர்தப்பிப் பிழைத்தவர்கள் இருக்கிறார்கள்
என்று நம்புகிறோம்; நாங்கள் அவர்களுக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்ய முடியும்... ஆனால் நேரம் கடக்க,
கடக்க ஆபத்துக்களை எதிர்கொள்ளுவதனாலும், பாரியகளைப்பினாலும் மேலும் மேலும் குறைந்த எண்ணிக்கையாகவே
அது ஆகியிருக்கிறது".
எப்பொழுது படகு மூழ்கியது என்பது பற்றி குழப்பம் உள்ளது. திங்கள் பிற்பகல் விபத்து
நடந்தது என்று ஜோன்சன் குறிப்பு காட்டினார்; ஆனால் ருர்க்ஸ் மற்றும் கைக்கோஸ் துணை போலீஸ் ஆணையர்
Hubert Hughes
நிருபர்களிடம் ஞாயிறு இரவு அது நடந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தார். இந்த விபத்து கடலோர பாதுகாப்புப்
பிரிவிற்கு தெரிவிக்கப்படவில்லை; அதுதான் திங்கள் வரை மியாமிக்கு தென்கிழக்கே 600 மைல் குறிப்பிட்ட பகுதியை
மட்டும் ரோந்து சுற்றுகிறது.
உயிர்தப்பிப் பிழைத்தவர்கள் இந்தப் படகு பஹாமாஸ் அல்லது அமெரிக்காவிற்கு
செல்லவிருந்தது என்றும் ஹைய்டியில் இருந்து கடந்த வாரக் கடைசியில் 160 பேருடன் புறப்பட்டது என்றும் பின்னர்
அது தெரியாத இடங்களில் இன்னும் 40 பேரை ஏற்றிக் கொண்டது என்றும் கூறுகின்றனர். ஹைய்ட்டிய
புலம்பெயர்ந்தோரை கொண்டுவரும் படகுகள், ஒரு கப்பல் பாயையும் சுக்கானையும் கொண்டவை, வேறு எந்தவித
வழிகாட்டும் கருவியும் இல்லாதவை பொதுவாக 40 முதல் 60 அடி நீளமானவையாக இருக்கும்.
கடலோர பாதுகாப்புப் பிரிவினை சேர்ந்த ஜோன்சன், இப்படகுகள் "மிகுந்த
சுமையை ஏற்றிக் கொண்டு வருகின்றன....ஒரு பாய்ப்படகில் 200 பேர் வருவது என்பது மிக மிக அதிகம்"
என்றார். "20 நோட் வேகத்தில் (knot)
காற்றும், 6 அடி உயரும் அலைகளும் கடலில் உள்ளன" என்றும் இப்பெண்மணி கூறினார்.
இத்தகைய படகுகள் உடைவது, மூழ்குவது என்பது பல சமயங்களில், ருர்க்ஸ் மற்றும்
கைக்கோஸ் என்னும் பிரிட்டிஷ்க்கு சொந்தமான நாடுகடந்த பிரதேசப்பகுதியைச் சுற்றியே நடைபெறுகிறது. இது
சுற்றுலா மையமாக இருப்பதுடன் இங்கு 33,000 மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதி படகு செலுத்துபவர்களுக்கு
குறிப்பான ஆபத்தைத் தரும் இடமாகும். ஏனெனில் கடலின் மேற்பரப்பிற்கு வெகு அண்மையில் பல பவளப் பாறைகள்
உள்ளன.
உடல்நீர் பற்றாக்குறைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், உயிர்
பிழைத்தவர்களில் ஒருவரான Alces Julien,
அசோசியேட் பிரசிடம் (AP)
"நாங்கள் போலீஸ் படகுகளை பார்த்தோம், அவை நகர்ந்து செல்லும் வரை மறைந்து கொள்ள முயன்றோம்;
ஆனால் ஒரு கற்பகுதிமீது மோதி படகு உடைந்து சின்னாபின்னமாகிக் கவிழ்ந்தது" என்றார்.
தப்பிப் பிழைத்தவர்களுடன் பேசியவரும் ஒரு ஹைய்ட்டிய தூதரக அதிகாரியும் பவளப்
பாறைகளில் மோதியபின்செய்தி ஊடகத்திடம் கூறியவருமான டொனால்ட் மெடெலஸ், "கடல்நீர் பெண் பயணிகள்
நெருக்கமாக உட்கார வைக்கப்பட்டிருந்த இடத்தின்கீழ் நிரம்பத் தொடங்கியதும் படகின் கீழ்ப்பகுதி மோதியவுடன்
பெரிதாக விரிசல் ஏற்பட்டுவிட்டது" என்று மெடெலஸ் தெரிவித்தார் என
AP
தெரிவித்துள்ளது.
ருர்க்ஸ் மற்றும் கைக்கோஸ் அரசாங்கம் பொருளாதார அகதிகளை ஹைய்ட்டிக்கு
உடனே திருப்பி அனுப்பி வைத்தது; 60 பேர் செவ்வாயன்று விமானத்தில் அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் ஒரு
உடற்பயிற்சிக் கூடத்தில் அல்லது மற்றொரு தடுப்புக்காவல் நிலையத்தின் கட்டில்களிலோ அல்லது
மருத்துவமனைகளிலோ இரவைக் கழித்தனர்.
அமெரிக்க கடலோர பாதுகாப்புப் பிரிவினர் அக்டோபர் 2008ல் இருந்து 1,600
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஹைய்ட்டிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இது ஓராண்டிற்குமுன் இதே காலத்தில்
இருந்ததைவிட 20 சதவிகிதம் அதிகம் ஆகும். அமெரிக்க அதிகாரிகள் மற்றொரு அளவுக்குமீறி நிரம்பிய படகில்
இருந்து 124 ஹைய்ட்டியர்களை கைப்பற்றி திங்களன்று
Cap Haitien னுக்கு அழைத்து வந்தனர்.
2007 மே மாதம் நடந்த
மற்றொரு பெரும் விபத்தில், கிட்டத்தட்ட 100 ஹைய்ட்டியர்கள் உயிரிழந்த நிகழ்வில், பலர் பெரும் சுறா
மீன்களால் விழுங்கப்பட்டனர். அதில் தப்பியவர்களை ருர்க்ஸ் மற்றும் கைக்கோஸ் ரோந்துப் பிரிவினர், அவர்களின்
படகு கரையோரம் வரும்போது அதை வேண்டுமென்றே இடித்து பின் ஆழ்கடலில் தள்ளிவிட்டதாகக் கூறினர்.
மே 2009ல் குறைந்தது 9 ஹைய்ட்டியர்களாவது தெற்கு பிளோரிடா கடலோரப்
பகுதியில் மூழ்கினர்; 16 பேர் காப்பாற்றப்பட்டனர். 11 மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 2008 ல் 22
ஹைய்ட்டிய புலம்பெயர்ந்தோர் பஹாமாஸ் Nassau
விற்கு வடகிழக்கே உள்ள கடலில் இறந்து போயினர்.
அதிகமானோர்களை ஏற்றியிருந்த ஒரு படகு,
Belle-Anse
மற்றும் ஹைய்ட்டியின் தென்கிழக்கு கரையில் இருக்கும்
Marigot க்கும் இடையே செல்லும்போது ஜூலை 11 அன்று
கவிழ்ந்தது. நீரில் 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. டஜன் கணக்கான மக்கள் என்ன ஆயினர் என்பது
தெரியவில்லை.
அமெரிக்கா அல்லது பிற கரிபியத் தீவுகளுக்கு இந்த சிறிய படகுகளில்
புறப்படுபவர்கள் ஹைய்ட்டியில் இருக்கும் சொல்லொணா இடர்கள் நிறைந்த சமூக நிலைமைகளில் இருந்து தப்பிக்க
முயல்கின்றனர்; உலகிலேயே வறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஹைய்ட்டிய மக்கள் நாள் ஒன்றுக்கு $2 க்கும்
குறைவான பணத்தில் வாழ முயல்கின்றனர்; 70 சதவிகிதத்திற்கும் மேலான வயதிற்கு வந்த தொழிலாளர் தொகுப்பு
வேலையின்மையில் வாடுகிறது. இந்த நாட்டின் மிக அதிகமான குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐந்து வயதாவதற்கு
முன்உள்ள 1000 குழந்தைகளில் 129 இறந்துவிடுகின்றன); இதைத்தவிர
HIV/AIDS யும்
(வயது வந்தவர்களில் 6.2 சதவிகிதம் இவற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்) இப்பகுதியில் உள்ளது. 13 முதல் 20
சதவிகித ஹைய்ட்டிய குழந்தைகள் உணவு ஊட்டமின்றி வளர்கின்றன.
Meds & Foods for Kids
என்னும் இலாபநோக்கு இன்றி இயங்கும் அமைப்பு என்று அழைக்கப்படும் அமைப்பில் இருக்கும்
Dr.Patricia Wolff,
2008 ம் ஆண்டு CNN
இடம் "உணவு கிடைக்கும் என்பதற்கு பெரும் நம்பிக்கையிழந்துள்ள ஹைய்ட்டியர்கள் கொண்டுள்ள நிலையானது, பல
தாய்மார்கள் ஊட்டமின்மையால் புதிதாக பிறக்கும் சிறு குழந்தைகள் இறந்துவிடுமோ என அஞ்சி அவை பிழைக்கும்
வரை காத்திருந்துதான் பெயரிடுகின்றனர்" என்றார். மற்றய ஹைய்ட்டிய தாய்மார்கள் "தங்கள் குழந்தைகளில்
எவற்றை வாழவைப்பது" என்ற மிகக் கொடூர விருப்பத்தை கையாள வேண்டியுள்ளது என்றார் வொல்ப்.
"அவர்களுக்கு உணவு கொடுத்து உயிரோடு வைக்கத்தான் முயலுகின்றனர் ஆனால் சிலநேரம் இக்குழந்தை இறப்பதே
மேல் என்ற முடிவிற்கு வந்துவிடுகின்றனர்"
நான்கு சூறாவளிகளும் கடுமையான புயல்களும் 2008ல் இழைத்த பேரழிவுகள் மக்களுடைய
கடும்துயரத்தை இன்னும் மோசமாக்கியது. ஹைய்ட்டியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் அழிக்கப்பட்டு
1 பில்லியன் டாலர் சேதமாயிற்று... இது "100 ஆண்டுகளில் ஹைய்ட்டியை தாக்கிய மாபெரும் மனித இடர்"
என்று மியாமி ஹெரால்ட் அழைத்தது. மேலும் ஜூன் மாதம், "ஹைய்ட்டிக்கு இன்னும் உறுதியளிக்கப்பட்ட
புயல் உதவியான 300 மில்லியன் டாலரில் ஒரு பென்னி கூட பெற்றுக்கொள்ளவில்லை, சர்வதேச சமூகம் ஏப்ரல்
மாதம் நன்கொடை அளிப்பவர் சங்கத்தில் இந்த புயல் தாக்கிய தீவிற்கு கொடுப்பதாக உறுதி அளித்திருந்தனர்"
என்று அது எழுதியது.
கிட்டத்தட்ட 28,000 ஹைய்ட்டியர்கள் அமெரிக்காவில் வெளியேற்றப்படும் அச்சுறுத்தலில்
உள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையின் முடிவுக்காக காத்திருக்கும் நடவடிக்கையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
ஹைய்ட்டிய சார்பு மற்றும் குடியேற்ற உரிமை அமைப்புக்கள் அமெரிக்காவில்
ஆவணமற்ற ஹைய்ட்டியர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (TPS
Temporary Protected Status) கொடுக்கப்பட
வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளன. போர் மற்றும் இயற்கை பேரழிவு அல்லது தீவிர சூழ்நிலையால்
உடனேயே தாய் நாடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பிச் செல்ல முடியாத புலம்பெயர்ந்தோர்களுக்கு இது அளிக்கப்படுகிறது.
ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் அரசாங்கத்திடம் இருந்து கடுமையான வெளியேற்றும்
கொள்கையை ஒபாமா நிர்வாகம் மரபாகக் கொண்டுள்ளது. இவர்களை ஆதரிக்கும் குழுக்கள் மற்றும் உள்ளூர்
அரசியல்வாதிகளின் அழுத்தம் இருந்தாலும் TPS
பிரச்சினையில் இந்த அரசு அசைந்து கொடுப்பதாகவில்லை, "இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதை
நிறுத்தி வைத்துள்ள போதிலும், நிலைமை இதுதான்...தற்போதைக்கு ஹைய்ட்டிய மக்கள் ஏதேனும் ஒருவிதத்தில்
குடியேற்ற சலுகையின் தேவையை உடையவர்கள் ஆனால் இன்னும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்."
(Caribbean World News, July 22,
2009) |