World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குBritain's political elite and the Afghan war பிரிட்டனின் அரசியல் உயர்தட்டினரும் ஆப்கான் போரும் Chris Marsden ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் 9,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளது. 2001 இருந்து அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பில், 191 பிரிட்டிஷ் இராணுவ சிப்பாய்கள் (ஆண்களும் பெண்களும்) அங்கு இறந்துள்ளனர்; இது ஈராக்கில் நடக்கும் ஆறாண்டு போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் நடந்ததைக் காட்டிலும் அதிகமாகும். இப்போர் இங்கிலாந்திற்கு 12 பில்லியன் பவுண்ட்கள் செலவை கொடுத்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது--அதாவது இங்கிலாந்தில் இருக்கும் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தலா 190 பவுண்ட்கள் செலவு என்பது பொருளாகும். இது 23 மருத்துவமனைகள் புதிதாகக் கட்டுவதற்கும், 60,000 கூடுதலான ஆசிரியர்கள் நியமனத்திற்கும் அல்லது 77,000 மருத்துவமனை செவிலியர்கள் நியமிக்கவும் போதுமானதாக இருந்திருக்கும். பாதுகாப்பு அமைச்சரகம் ஏற்றுள்ள 9 பில்லியன் பவுண்ட்கள் சட்டவரைவு, மறைமுகச் செலவுகளான காயமுற்ற வீரர்களுக்கு கொடுக்கும் ஆதரவிற்கான செலவு, மூத்த வீரர்கள் மற்றும் கொல்லபட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய செலவுகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. குறைந்தது 218 சிப்பாய்களாவது, "வாழ்க்கையையே மாற்றிவிடும் காயங்களினால்" ஏப்ரல் 2006 ல் இருந்து அவதிப்பட்டுள்ளனர்; குறைந்தது இன்னும் 50 பேராவது காயத்தின் விளைவாக உடல் உறுப்புக்கள் அகற்றப்படுதல் சிகிச்சையை பெற்றுள்ளனர். இதையும்விட மோசமானது 30,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் போரில் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களிடையே ஏற்பட்ட இறப்புக்களை பற்றிய புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் கெட்டகனவு போன்று வெளிப்பட்டிருக்கும் நிகழ்வில், ஹெல்மண்ட் மாநிலத்தில் பெருகும் பிரிட்டிஷ் இறப்பு எண்ணிக்கையினால் எரியூட்டப்பட்டுள்ள நிலைமையில், ஆப்கான் போருக்கு எதிராக பொதுமக்கள் கருத்து தீவிரமாக உள்ளது. ஜூலை 28ம் தேதி Indpendent ஏட்டின் பதிப்பு ComRes நடத்திய கருத்துக் கணிப்பின் விளைவுகளை வெளியிட்டது. அது பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கருதுவதை தெரிவிக்கிறது. வாக்களித்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் (52 சதவிகிதம்) துருப்புக்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரிட்டிஷ் படைகள் "எவ்வளவு விரைவில் அகற்றப்பட முடியுமோ" அவ்வளவு விரைவில் அகற்றப்பட வேண்டுமென்று 64 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.58 சதவிகிதம் விடை அளித்தவர்கள் இந்தப் போரில் "வெற்றி பெற முடியாது" என்று கருதுவதுடன் கூடுதலான துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவதை எதிர்க்கின்றனர். முன்னதாக கனடாவை தளமாகக் கொண்ட Angus Reid Research Centre நடத்திய ஆய்வு பிரிட்டனில் 53 சதவிகிதம் ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலையீட்டை எதிர்த்ததாக கண்டறிந்தது. BBC மற்றும் கார்டியன், 56 சதவிகித மக்கள் உடனடியாக வெளியேறுவதற்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்றும் ITN News கருத்துக் கணிப்பு இந்த எண்ணிக்கையை 59 சதவிகிதம் என்றும் கண்டறிந்துள்ளன.ஆயினும்கூட, உத்தியோகபூர்வ அரசியல் வட்டாரங்களிலோ அல்லது செய்தி ஊடகத்திலோ இத்தகைய எதிர்ப்பின் வெளிப்பாடு எதுவும் இல்லை. மாறாக, போர் எதிர்ப்பாளர்களை மிரட்டி போருக்கு ஆதரவு தேடும் வகையில், பிரிட்டிஷ்காரர்களின் இறப்புக்கள் பிரச்சினையை இழிந்த வகையில் நடத்துவதற்கான ஆதரவை முடுக்கிவிடுவதற்கான முயற்சிகள் ஒருங்கிணைந்து நடத்தப்படுகின்றன. போர் வெற்றிபெற்றுவருகிறது என்ற கூற்றுக்களுடன் பிரிட்டிஷ் பொதுமக்களிடம் தொழிற் கட்சி அரசாங்கம் உற்சாகமாக கூறிவருகையில், எதிர்க்கட்சிகள் துருப்பு இறப்புக்கள் அதிக நிதி கொடுக்கப்படாமல் பிரிட்டிஷ் தலையீடு இருப்பதாலும், அங்கு இருக்கும் துருப்புக்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் அதிக ஆயுதங்கள் இல்லாததால்தான் என்றும் குறைகூறியுள்ளன. பெரும்பாலும் அரசியல் உரைகள் மற்றும் செய்தித்தாள் கருத்துக்கள் இன்னும் அதிக துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்று ஒரு "நடைமுறைக்கேற்ற" மூலோபாய வெற்றிக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. Independent கருத்துக் கணிப்பு வெளியிடப்படுவதற்கு முதல் நாள், தொழிற் கட்சி வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் பிரஸ்ஸல்ஸில் நேட்டோவிற்கான உரையில் மற்றய உறுப்பு நாடுகள் இன்னும் கூடுதலான துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்றார். இறப்பு மற்றும் தீவிர காயங்களினால் குறைந்துவரும் எண்ணிக்கையை நிரப்புவதற்கு 125 துருப்புகள் அனுப்பப்பட இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் அதே நாளில், ஹெல்மண்ட மாநிலத்தில் அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலான "முதல் கட்ட" Pancher's Claw நடவடிக்கை ஒரு வெற்றி என்று அறிவித்தார். இரண்டாம் கட்டம் இன்னும் கூடுதலான இறப்பு எண்ணிக்கைகளையும் காயம்படுபவர்களையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆப்கான் தேர்தல்களுக்கு முன்னதாக பிரிட்டிஷ் துருப்புக்கள், "தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு களத்தில் இருக்க வேண்டும்" என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று Independent எழுதியுள்ளது.எதிர்க்கட்சிகளை பொறுத்தவரையில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் காமெரோன் இடைவிடாமல் கூடுதலான துருப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், வரவிருக்கும் டோரி அரசாங்கம் நீண்ட கால பாதுகாப்பு செலவினத் திட்டங்கள் அடிப்படையில் முன்னணிக் களத்தில் இருக்கும் துருப்புக்களுக்கான கருவிகள் உடனடி முன்னுரிமையில் அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்--போர் 2010க்கும் அப்பால் தொடரும் என்று அவர் கருதுவதை இது சுட்டிக்காட்டுகிறது. லிபரல் டெமக்ராட்டின் நிக் கிளக், 2,000 கூடுதலான துருப்புக்கள் "அரசியல் காரணங்களுக்காக" அனுப்ப மறுப்பதற்கும், இராணுவத்திற்குரிய "அரசியல் ஆதரவை" கொடுக்காததற்காகவும் அரசாங்கத்தை கண்டித்துள்ளார். ஸ்காட்லாந்து தேசியக் கட்சி ( SNP) ஒரு "அரசியல் தீர்வு" வேண்டுமென வலியுறுத்துவதுடன், "அது குறைந்தது எம்முடைய துருப்புக்களுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் சரியான மூலோபாயத்தை தொடரவும் அடையக்கூடியதுமான நம்பிக்கை" கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.Plaid Cymru வின் பாதுகாப்பு பிரிவிற்கான செய்தித் தொடர்பாளர் Elfyn Llwyd தெளிவற்ற முறையில் "வெளியேறுவதற்கான மூலோபாயம்" வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; அதுவரை "நாம் இராணுவத்திற்கு அதன் நடவடிக்கைகளிற்கு முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.இத்தகைய "அரசியல் மூலோபாய" பேச்சுக்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கலாம் என்ற கருத்துக்களால் உந்துதல் பெறுபவை. ஹமித் கர்சாயி உடைய ஆட்சியில் இருக்கும் கிளர்ச்சி பிரிவினரையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிகளை இது மையமாகக் கொண்டுள்ளது. அதையொட்டி இவற்றின் சார்பில் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தின் தளம் விரிவாக்கப்பட முடியும்; ஒரு பரந்த போர்ப்பிரபுக்கள் தொகுப்பு பயன்படுத்தப்படலாம், பழங்குடித் தலைவர்கள் மற்றும் இயன்றளவு தாலிபன் பிரிவினரும் விலைக்கு வாங்கப்படலாம்; அதனால் ஆப்கான் மக்கள் மீது கண்காணிப்பு பெருக உதவியாகவிருக்கும். . இந்தக் கொள்கைதான் ஏற்கனவே அரசாங்கத்தால் ஏற்கப்பட்டுள்ளது, பிரஸ்ஸல்ஸில் மிலிபாண்ட்டினால் கூறப்பட்டது, அப்பிராந்திய அமெரிக்க பிரதிநிதியான ரிச்சர்ட் ஹோல்ப்ருக்கினால் உடனடியாக இசைவு கொடுக்கப்பட்டது. மறைமுகமான நிராகரிப்புக்களை காட்டிலும் இப்படியாக ஆப்கானிஸ்தானில் போருக்கு ஆதரவு வகையிலிருந்து சிறிதும் விலகாமல், உறுதியாக ஆளும் வர்க்கம் பக்கம் நின்று செயற்படுவது, அரசியல் ஏகபோக உரிமை கொண்டிருக்கும் தன்மையை அனுபவிப்பதை வேறு எதுவும் இவ்வளவு தெளிவாக சித்தரிக்கமுடியாது. 2003 ஈராக் தேர்தலுக்கு முன்புகூட போருக்கு முறையாக எதிர்ப்புத் தெரிவித்த வகையில் 100 தொழிற்கட்சி எம்.பி.க்கள் இருந்தனர்--அந்த நிலைப்பாட்டை லிபரல் டெமக்ராட்டுக்கள், SNP, Plaid ஆகியவையும் ஏற்றிருந்தன.அந்த நேரத்தில் மிகப் பெரிய மக்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பிரதம மந்திரி டோனி பிளேயர், வாஷிங்டன் ஆணைகளை செயல்படுத்தியவர், அறிவித்ததாவது: "புகழற்ற தன்மையை பெருமிதச் சின்னம் என்று நான் நாடவில்லை. ஆனால் சிலசமயம் தலைமைக்கு கொடுக்கும் விலையாக அது போகிறது." பிரிட்டன் உலக அரங்கில் ஒரு தகுதியுடன் இருக்க வேண்டும் என்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட்பு நாடு என்ற முறையில்தான் அது முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிளேயரின் உறுதியான கருத்து --மக்கள் விருப்பத்தை மீறத் தயாராக இருப்பதுதான் தலைமையின் சாரம் என்பது-- ஜனநாயக நெறிகளுக்கு உலக நிதிய தன்னலக்குழு மற்றும் அதன் கூலிப்படைகள் கொண்டிருக்கும் இகழ்வின் வடிகட்டிய வெளிப்பாடு ஆகும். வெளிநாடுகளில் கொள்ளைப் போர்கள் நடத்தவோ, உள்நாட்டில் பொருளாதார சமூக கொள்கைகளை செயல்படுத்தவோ ஜனநாயக ஆதரவு கிடைப்பது அரிது என்ற அவருடைய உணர்வுதான் பெரும்பாலான மக்களின் இழப்பில் உயரடுக்கை செல்வக் கொழிப்பு உடையதாக்கும் கொள்கைகளை செயல்படுத்தச் செய்தது. அவருடைய செய்தி உரத்த குரலில், தெளிவாக கேட்கப்பட்டது. தங்கள் பெயரளவு எதிர்ப்பை வெளிப்படுத்தியபின், முழு பாராளுமன்ற சகோதர தொகுப்பும் விரோத நடவடிக்கைகள் தொடக்கப்பட்டதும் ஈராக் போரின் பின் அணிவகுத்து நின்றன. அந்தப் பாதையில் இருந்து அவை இன்றளவும் விலகியது இல்லை. இன்று மிகக் குறைவான தொழிற் கட்சி எம்.பி.க்கள் ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாக உத்தியோகபூர்வமாக கூறுகின்றனர்; ஆனால் அவர்கள் திறமையுடன் மறைந்துதான் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் முழு இராணுவத் தலையீடு என்பது ஆளும் வட்டாரங்களுக்குள் அமெரிக்கா மற்றும் ஒபாமா நிர்வாகத்துடன் அரசியல் கூட்டை அடைய முக்கியம் என்று பரந்த அளவில் காணப்படுகிறது. அது பிரிட்டனின் முக்கிய ஐரோப்பிய போட்டி நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றிற்கு தேவையான பதிலீட்டு முறை என்று கருதப்படுகின்றது. போர் எதிர்ப்பு உணர்வு பற்றிய பாராளுமன்ற முறைக்கு புறத்தேயான குறிப்பிடத்தக்க வகையிலான எந்த வெளிப்பாடும் அங்கு இல்லை. சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் தலைமையிலான, போர்க்கூட்டை தடுத்து நிறுத்து என்ற இயக்கம் முன்பு ஒரு சமயம் ஈராக் போருக்கு எதிராக 2 மில்லியன் எதிர்ப்பாளர்களை திரட்ட முடிந்தது. ஆனால் இந்த இயக்கத்தின் தலைமை, இயக்கத்தை தரைமட்டமாக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது; ஏனெனில் தாராளவாத நடைமுறைப் பிரிவுகளான தொழிற் கட்சி இடது போன்றவற்றிற்கு முறையீடு செய்து, ஐரோப்பிய சக்திகளின் ஆதரவை நாடுவது இராணுவ மோதலை தடுக்கும் என்று அவர்கள் வலியுறுத்திவிட்டனர். இன்று உத்தியோகபூர்வ போர் எதிர்ப்பு இயக்கம் ஒரு எஞ்சிய பகுதியாக இருக்கிறது; அதன் ஒரே மரபியம் வெஸ்ட்மின்ஸ்டர் கட்சிகளின் போர் வெறியை எதிர்ப்பதற்கு எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை வலுப்பட்டிருப்பதுதான். அனைத்து பிரிட்டிஷ், அமெரிக்க, நட்புநாடுகளின் இராணுவப் படைகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து உடனடியாக திரும்பப் பெறவேண்டும், ஈரானுக்கு, பாக்கிஸ்தானுக்கு, சிரியாவிற்கு பிற நாட்டு மக்கள் ஆகியோருக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு முடிவு வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரவேண்டும். ஈராக் போரைப் போல் ஆப்கான் போரும் முக்கிய ஏகாதிபத்திய நாடுகள் உலகின் மூலோபாய சந்தைகள் மற்றும் இருப்புக்களை--குறிப்பாக மத்திய கிழக்கு, காஸ்பியன் பகுதியில் இருக்கும் எண்ணெய் இருப்புக்களின் மீது ஆதிக்கம் செலுத்த விழைவதின் குருதி சிந்தும் விளைவுதான் இப்போர்கள் என்பதையும் உணரவேண்டும். இது பிற நாடுகளை அடிமைப்படுத்தும் காலனித்துவ வகைப் போர் ஆகும். போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவம் மற்றும் முழு இலாப முறைக்கு எதிராக ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயம், திட்டம் ஆகியவற்றை கையாண்டு சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை மேற்கொள்வதின் மூலம்தான் வெற்றிகரமாக நடத்தப்பட முடியும். |