World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-China talks: a fragile relationship

அமெரிக்க-சீன பேச்சுவார்த்தைகள்: ஒரு பலமற்ற உறவு

By John Chan
30 July 2009

Use this version to print | Send feedback

வாஷிங்டனில் ஜூலை 27-28 தேதிகளில் நடைபெற்ற அமெரிகக சீன மூலோபாய, பொருளாதார உரையாடல் மிக அதிகமாக கடனில் இருக்கும் அமெரிக்க முதலாளித்துவம் சீனாவை ஒரு முக்கிய நிதி தரும் ஆதாரமாக நம்பியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. அதே நேரத்தில், இந்த அரங்கு இரு நாடுகளின் மோதலுக்கு உட்படும் மூலோபாய, பொருளாதார நலன்கள் பெருகியிருப்பதையும் புலப்படுத்தியது.

முன்னாள் நிதி மந்திரி ஹென்ரி பெளல்சனின் கீழ் பெய்ஜிங் ஆட்சியுடன் நிதிப் பிரச்சினைகளை விவாதிக்க புஷ் நிர்வாகத்தால் முதலில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பின்னர் ஒபாமா நிர்வாகத்தால் வெளிவிவகாரத்துறை மற்றும் அமெரிக்க-சீன உறவுகளில் அதிகம் வெளிப்படும் மூலோபாயப் பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளும் விதத்தில் மேலுயர்த்தப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவும் லண்டனில் ஏப்ரல் மாதம் உலகப் பொருளாதார நெருக்கடி அப்பொழுது ஆழ்ந்த நிலையில் இருந்தபோது நடைபெற்ற G20 மாநாட்டின்போது பேச்சுவார்த்தைகளை நடத்த உடன்பட்டனர். இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 1.85 டிரில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ள நிலையில், ஒபாமா நிர்வாகத்திற்கு சீனா தேவைப்படுகிறது. சீனாதான் இப்பொழுது வோல் ஸ்ட்ரீட்டை பாரிய பிணை எடுப்புக்களை செய்வதற்கு நிதி கொடுக்க அமெரிக்காவுக்கு மிக அதிக கடன்வழங்கும் நாடாக உள்ளது (கருவூலப் பத்திரங்களில் $800 பில்லியனையும் பல நூறாயிரக்கணக்கான அரசாங்க அமைப்புக்களின் பத்திரங்களிலும் கொண்டுள்ளது). இந்த வாரம் மட்டும் அமெரிக்க அரசாங்கம் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிடுகிறது.

உயர்ந்துள்ள வேலையின்மையுடன் போராடும் பெய்ஜிங் ஆட்சியோ மீண்டும் அமெரிக்கா பொருளாதார மீட்பு அடைய வேண்டும் என்று விரும்பகிறது. அதுதான் சீனாவில் பாதிப்பிற்குட்பட்டுள்ள ஏற்றுமதிப் பிரிவிற்கு சந்தைகளை அளிக்க முடியும். கடந்த வாரம் வடமேற்கு மாநிலமான ஜிலினில் 30,000 கலகம் செய்த எஃகு தொழிலாளர்கள் தனியார்மயமாக்கியதற்கும் மற்றும் வேலை இழப்புக்களுக்குமாக தங்கள் நிர்வாகியை கொன்றுவிட்டனர். உலக முதலாளித்துவத்திற்கு குறைவூதிய தொழிலாளர் பிரிவாக சீனத்தொழிலாள வர்ககம் சுரண்டப்படுவதால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆழ்ந்த சமூக அழுத்தங்கள் இதன் மூலம் காட்டப்பட்டது.

இந்த உரையாடலில் அமெரிக்காவின் பக்கம் வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டனும் நிதி மந்திரி டிமோதி கீத்நரும் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னன்கேயும் இருந்தனர். பெய்ஜ் இதுவரை இல்லாத வகையில் வாஷிங்டனுக்கு மிகப் பெரிய குழுவை அனுப்பி வைத்தது. அதில் 150 மூத்த அதிகாரிகள், அரசாங்க ஆலோசகர் Dai Bingguo (வெளியுறவுக் கொள்கைக்கு பொறுப்பு), துணை பிரதமர் வாங் குய்ஷன் (பொருளாதாரத்தை மேற்பார்வையிடுபவர்) மற்றும் மத்திய வங்கியின் தலைவர் Zhou Xiaochuan ஆகியோரின் தலைமையில் இக்குழு வந்தது.

அமெரிக்கா மிக உயர்மட்டக்குழுவை பேச்சுக்களுக்கு கொண்டுவந்தபோது, சீனக் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த அரசியல்குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் ஒருவரும் இல்லை.

இந்த நிகழ்ச்சியை ஜனாதிபதி ஒபாமா தொடக்கிவைத்து, அமெரிக்க சீன உறவு "21ம் நூற்றாண்டை உருவமைக்கும்" என்றார். அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சீனா சவால் விடும் என்ற கருத்துக்களை உதறும் வகையில் ஒபாமா அறிவித்தார்; "சீனாவில் சிலர் நாங்கள் சீனாவின் முயற்சிகளை கட்டுப்படுத்த முயலுகிறோம் என்று நினைக்கின்றனர்; அமெரிக்காவில் சிலர் எழுச்சி பெறும் சீனாவைக் கண்டு அச்சப்படுவதற்கு ஏதோ உள்ளது என்று நினைக்கின்றனர். நான் வேறு பார்வையை கொண்டுள்ளேன். நம்முடைய இரு நாடுகளும் தேவையை ஒட்டி பங்காளிகள் என்று மட்டும் இல்லாமல், வாய்ப்பை ஒட்டியும் பங்காளிகள்....என்ற வருங்காலத்தை நான் நம்புகிறேன்."

கிளின்டன் மற்றும் கீத்நெர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு இணைந்த கட்டுரையை எழுதி அறிவித்தனர்; "எளிதாகக் கூறவேண்டும் என்றால், அமெரிக்கா அல்லது சீனா மட்டுமே உலகப் பிரச்சினைகளை தீர்க்க இயலாது. அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா இணைந்து செயல்படாவிட்டால் இன்னும் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாது. உலகப் பொருளாதாரத்தின் வலிமை, உலகச் சுற்றுச் சூழலின் ஆரோக்கியம், நலிந்த நாடுகள் உறுதிப்படுவது மற்றும் ஆயுதப் பெருக்கம் இல்லாமல் செய்வது போன்ற சவால்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பின் மூலம் பெரிதும் எதிர்கொள்ளப்படும்."

பெப்ருவரி மாதம் சீனாவிற்கு கிளின்டன் பயணித்து அமெரிக்க அரசாங்க பத்திரங்களை பெய்ஜிங் தொடர்ந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்; இது ஒரு அமெரிக்க வெளிவிவகார செயலாளர் முன்னோடியில்லாத வகையில் செய்த செயலாகும். ஜூன் மாதம் கீத்நெர் பெய்ஜிங்கிற்கு சென்று சீனத் தலைவர்களிடம் சீனாவின் மகத்தான பத்திர இருப்புக்களை, வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளை குறைப்பதற்கு கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதின்மூலம் ஒபாமாவின் வெள்ளை மாளிகை காப்பாற்றும் என்று உறுதியளித்தார்.

ஜனவரி மாதம் தன்னுடைய முதல் உத்தியோகபூர்வ அறிக்கையில், புதிய நிர்வாகம் சீனாவை "நாணய விகிதத்தை திரிக்கும் நாடு" என பெயரிடும் என்று அதன் ஏற்றுமதிகளுக்காக யுவானை குறைமதிப்பிலேயே வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி சீனாவுடன் அமெரிக்க வணிகப் பற்றாக்குறையை ஆழமாக்குகிறது என்றும் கூறியிருந்தார். இந்த வாரக் கூட்டத்தில், கீத்னர் அதைப்பற்றி மெளனமாக இருந்துவிட்டார். அமெரிக்க வணிகக் குழுவின் மூத்த துணைத் தலைவர் மைரோன் பிரில்லியன்ட், "இப்பிரச்சினையில் மேசையில் ஓங்கி அடித்து நிர்வாகம் எதையும் பேசவில்லை" என்றார்.

தங்கள் பங்கிற்கு சீன அதிகாரிகள் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஒரு புதிய உலக இருப்பு நாணயம் வேண்டும் என்று முன்பு விடுத்த அழைப்புக்கள் பற்றி மெளனமாக இருந்துவிட்டனர். சீன மத்திய வங்கியின் தலைவர் ஜியாவு நிருபர்களிடம் கீத்னருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் ஒரு புதிய சர்வதேச இருப்பு நாணயம் பற்றி விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை என்றார்; சீனாவின் நாணய மாற்று விகித முறை "சற்றே தொடப்பட்டது" என்றும் கூறினார்.

ஆயினும்கூட, துணைப் பிரதமர் வாங், அமெரிக்கா டாலர் மதிப்பைக் காக்கவேண்டும் என்ற பெய்ஜிங்கின் நிலைப்பாடை வலியுறுத்தினார்; ஏனெனில் பெருகும் அமெரிக்க பற்றாக்குறைகளை சீனாவின் மகத்தான டாலர் வகை சொத்துக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன. சீனா மொத்தத்தில் கொண்டுள்ள வெளிநாட்டு நாணய இருப்புக்களில் மூன்றில் இரு பங்கு அமெரிக்க டாலர்களில் உள்ளது. கீத்னர் இதற்கு விடையிறுக்கும் வகையில், சீனா செய்யக்கூடியதை போலவே, அமெரிக்கர்களாகிய நாங்களும் நிதிய பற்றாக்குறைகளை இக்காலத்தில் குறைக்க முற்பட்டு, நெருக்கடியை தீர்த்து உறுதிப்படுத்தும் செயல்களை கொண்ட அசாதாரண நடவடிக்கைகளை மாற்றிவிடுவோம்." என்றார்.

வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு புஷ், பின்னர் ஒபாமா நிர்வாங்கள் செலவழித்த பல டிரில்லியன் டாலர்கள், கணக்கிலடங்கா நிதிய இழப்புக்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முதுகிற்கு மாற்றும் நோக்கத்தை கொண்டிருந்தன. இதன் பொருள் அடிப்படை சமூக நலப் பணிகளான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை அழிப்பதுடன் உண்மை ஊதியங்களை இன்னும் சுருங்க வைப்பதாகும். இதுதான் பெய்ஜிங்கிற்கு கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மூலம் அமெரிக்க பற்றாக்குறைகளை "குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கீத்நெர் கொடுத்த உறுதிமொழிகளின் சாரம் ஆகும்.

ஆனால் அமெரிக்க தொழிலாளர்களின் சரியும் நுகர்வு, சீனாவை மட்டும் இல்லாமல் ஆசியப் பொருளாதாரங்களையும் ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளும். சீனா இன்னும் அதிகமான முறையில் உள்நாட்டுத் தலைமை கொண்ட வளர்ச்சிக்கு மாறவேண்டும் என்று கீத்நெர் கேட்டுக் கொண்டார்; அதுதான் "சமச்சீர், தொடர்ந்த உலக வளர்ச்சிக்கு" உதவும் என்றும் கூறினார்; அதே நேரத்தில் அமெரிக்கா கடன் உந்துதலில் கொள்ளப்படும் நுகர்வில் இருந்து கூடுதலான சேமிப்பு விகிதங்களுக்கு மாறும். அமெரிக்க நுகர்வில் வெட்டு என்பது பெய்ஜிங்கின் உடனடித் தேவையான அதிருப்தியை குறைப்பதற்கு உற்பத்தி விரிவாக்கத்தின் மூலம் மில்லியன் கணக்கான வேலைகளை தோற்றுவித்தல் என்ற கருத்துடன் தீவிர மோதலுக்கு வரும்.

சீனாவின் பாரிய ஊக்கப் பொதிகளை குறிப்பிட்டு, பெகிங் பல்கலைக்கழகத்தில் உள்ள நிதிப்பிரிவு பேராசிரியர் மைக்கேல் பெட்டிஸ் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பின்வருமாறு எச்சரித்தார்: "கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கால்பகுதிக்கும் மேலாக என்ற விகிதத்தில் நடைமுறையில் சீன புதிய கடன்களை அள்ளித்தருகையில், அது குறுகிய கால வேலைகளை தோற்றுவித்து, மிகை உற்பத்தியை அதிகப்படுத்தி அரசாங்கத்தின் இருப்புநிலைக் குறிப்பை சீர்குலைத்துவிடும்.... அமெரிக்காவின் உயரும் சேமிப்புக்கள் சீனாவில் வரும் அரசாங்கம் உந்துதல் கொடுத்த உற்பத்தி ஏற்றங்கள் மோதினால், இரு நாடுகளும் ஒன்றை ஒன்று அழிக்கும் கொள்கைகளுக்கு தள்ளப்படும். இதன் விளைவு, குறிப்பாக சீனாவிற்கு காட்டுமிராண்டித்தனம் ஆகிவிடும்.

பெய்ஜிங் ஆட்சி சமூக வெடிகுண்டின் மீது உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்துள்ள ஒபாமா நிர்வாகம் ஜிங்ஜியாங் உய்குர் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையில் சீனாவின் இராணுவ போலீஸ் வகையிலான அடக்குமுறை பயன்படுத்தப்பட்டது பற்றி பொதுவாக மெளனம் சாதித்துள்ளது. டஜன்கணக்கான உய்குர் நடவடிக்கையாளர்கள் "சீனாவிற்கு வெட்கம்" என்று வெள்ளை மாளிகைக்கு வெளியே கோஷமிட்டபோது, சீன துணை வெளிமந்திரி வாங் குவாங்யா, ஜிங்ஜியாங்கில் அமைதியின்மை பற்றி அமெரிக்காவின் நிதானமான அணுகுமுறை பற்றி எங்கள் பாராட்டுக்களை" தெரிவித்துக் கொள்ளுகிறோம் என்றார். நிருபர்களிடம் "இந்த நிகழ்வு முற்றிலும் சீனாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று வாஷிங்டன் ஐயத்திற்கு இடமின்றி கூறிவிட்டதாகவும்" தெரிவித்தார்.

அமெரிக்க முதலாளித்துவம் சீனத் தொழிலாள வர்க்க குறைவூதிய பிரிவை மிருகத்தனமாக சுரண்டுவதை நம்பியிருப்பது மட்டும் இல்லாமல், ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவிலும் காட்டுமிராண்டித்தனமான சமூகத் தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படுகையில் இங்கும் சமூக அமைதியின்மை மிகப் பெரிய அளவில் வெடிக்கக்கூடிய காலம் அருகில் உள்ளது என்பதையும் நன்கு அறிந்துள்ளது.

அமெரிக்க-சீன உரையாடல் அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான வீழ்ச்சியை குறிக்கிறது. இக்கூட்டம் சீனாவிற்கு சில சலுகைகள் கொடுக்கும் விதத்தின் வடிவமைக்கப்பட்டது. அதை அமெரிக்க ஆதிக்கம் உள்ள உலக ஒழுங்கு என்னும் குடைக்குள் கொண்டுவர வேண்டும் என்பது இதன் நோக்கம். அத்தகைய மூலோபாயம் முதலில் ஜனவரி மாதம் முன்னாள் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் Zbivniew Brzezinski ஆல் முன்வைக்கப்பட்டது. அமெரிக்க-சீன தூதரக உறவுகளின் 30வது ஆண்டு உத்தியோகபூர்வ நிறைவு விழாவில் Brzezinski ஒரு உரை நிகழ்த்தினார். அமெரிக்க குழுவின் ஒரு அங்கமாக அவர் அதில் கலந்து கொண்டார்; அக்குழுவில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்ரி கிசிங்சர் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரால் வரவேற்கப்பட்டனர்.

Brzezomski உடைய உரை ஜனவரி 13ம் தேதி பைனான்சியல் டைம்ஸில் "The Group of Two that could change the world" (இரு நாடுகள் கொண்ட குழு, உலகை மாற்றும் தன்மை உடையது) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அவர், "உலகில் ஏற்றம் காணும் சீனா ஒரு திருத்தல்வாத சக்தியாகும்; அதாவது சர்வதேச முறையில் முக்கிய மாற்றங்களை விரும்புகிறது; ஆனால் அவற்றை பொறுமையாக, சீரிய, அமையான முறையில் அடைய முற்படுகிறது" என்றார். Brzezinski பொருளாதார நெருக்கடிக்கும் அப்பால் பரந்த ஒற்றுமை தேவை என்று அழைப்பு விடுத்தார். இதில் அமெரிக்கா ஈரானுடன் கொண்டுள்ள செயற்பாடுகளில் சீனா பங்கு பெறுதல், இந்தியா-பாக்கிஸ்தான் உறவுகளில் சீன ஆலோசனை மற்றும் இஸ்ரேலிய பாலஸ்தீனிய மோதலில் சீனாவிற்கு ஒரு பங்கு, மற்றும் மத்திய கிழக்கிலும் சீனாவிற்கு ஒரு பங்கு ஆகியவை அடங்கும். சீனாவுடன் ஒரு பங்காளித்தனம் வேண்டும் என்று கூறிய அவர் "ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றிற்கு இணையான முறையில் அது இருக்க வேண்டும்" என்றார்.

ஆனால் G2 கருத்துப்படிவம் ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனா தங்கள் இழப்பில் உலக விவகாரங்களில் கூடுதல் பங்கு பெறக்கூடும் என்ற அச்சமே அது. ஒபாமா அமெரிக்க-சீனப் பேச்சுக்களுக்காக நடத்திய உரையில், அமெரிக்க-சீன உறவு, "உலகில் உள்ள பிற இரு நாடுகள் உறவைப் போல் மிக முக்கியமானது" என்று குறிப்பாக கூறினார் (-இத்தகைய கருத்து ஜப்பானை விரோதப்படுத்தும் நோக்கத்தைக் கொள்ளவில்லை) ஜப்பான்தான் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக ஆசியாவில் உள்ளது.

அடிப்படையில் Brzezinski சீனாவுடன் ஒத்துப் போதல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்; இது புதிய உலகப் போரைத் தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டது; "மகத்தான அழிப்புதரக்கூடிய "நாகரிகங்களின் மோதல்" எழுச்சி பெற்றுக் கொண்டு இருக்கையில், உண்மையான நாகரிகங்களுக்கு இடையேயான சமரசம் அவசரத் தேவையாகும்" என்றார்.

ஆனால் வாஷிங்டன் கூட்டம் அதிக உருப்படியான உடன்பாடுகளை ஏற்படுத்தவில்லை. வல்லரசுகளுக்கு இடையே அழுத்தத்தை அடக்குவது என்பதற்கு பதிலாக, உலக நிதியநெருக்கடி அதை அதிகப்படுத்தியுள்ளது. முன்னைக்காட்டிலும் சீனா மீது அதிக பொருளாதார நெம்புகோல்தன்மை இல்லாத நிலையில், இறுதியில் அமெரிக்கா தன் மேலாதிக்கத்தை வலியுறுத்தக் கூடியது அதன் இராணுவ மேன்மையினால்தான். அந்த மேன்மையும் தான் ஒரு முக்கிய இராணுவ சக்தியாக வரவேண்டும் என்றும் சீனாவின் சொந்த விருப்பத்துடன் மோதலைக் காண்கிறது.

மார்ச் மாதம் ஒபாமா நிர்வாகம் தெற்கு சீனக் கடல் பகுதிக்கு ஒரு கண்காணிப்பு கப்பலை சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றி அறிய அனுப்பி வைத்தது; இது சீன கடற்படையின் ரோந்து கப்பல்களுடன் மோதலை ஏற்படுத்தப்பார்த்தது. அந்த நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன்பு பைனான்சியல் டைம்ஸின் தலையங்கம் ஒன்று எச்சரித்தது; "உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ளுவது பற்றியதாகும். ஒப்புமையில் உறுதியான உலக ஒழுங்குகள் எளிதில் புதிய சக்திகள் வெளிப்படுவதை ஏற்பதில்லை. வேதனை தரும் தடுமாற்ற நிலைப்பாடுகள் அதிகபட்சம் ஏற்படக்கூடுவதுடன், மிகப் பேரழிவு தரும் சோகங்களும் விளையக்கூடும். தற்போதைய உலக நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி சீனாவின் மகத்தான வணிக உபரிகள் ஏற்படுத்திய சமசீரற்ற தன்மையினால் தோன்றியதால், (இது இல்லை என்று பெய்ஜிங் வாதிடுகிறது) அத்தகைய உடைவின் மகத்தான அளவு ஏற்கனவே தெளிவாக உள்ளது. இதேதான் சீனாவின் விழைவுகளான இராஜதந்திர, இராணுவ பலத்தை காட்டும் திட்டத்திற்கும் பொருந்தும்."

இத்தகைய விதத்தில் அமெரிக்க-சீனா "உரையாடலில்" புன்சிரிப்புக்களும் புகைப்படங்களும் இருந்தபோதிலும், சக்தி வாய்ந்த பொருளாதார முரண்பாடுகள் இரு வல்லரசுகளையும் பேரழிவு தரக்கூடிய மோதல்கள் ஏற்படக்கூடிய தன்மைக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.