World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா: பிரான்ஸ்France: Tamils arrested in protest against Sri Lankan mass killings பிரான்ஸ்: இலங்கை பரந்த மக்கள் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் கைது By Antoine Lerougetel இலங்கை இராணுவத்தால் தங்களது சொந்த மக்கள் மீது நடத்தப்படும் பரந்த மக்கள் படுகொலைகளுக்கு எதிராக பாரிஸ் லா சப்பல்லில் 500 தமிழர்களால் தன்னியல்பாக வீதியில் நடத்தப்பட்ட எதிர்ப்பினை திங்கள் மாலை பிரெஞ்சு போலீசார் தாக்கினர். போலீசார் 210 பேர்களை கைது செய்ததுடன் குறைந்த பட்சம் செவ்வாய்க்கிழமை வரை 143 பேரை சிறைக்காவலில் வைத்துள்ளது. அதே நாளன்று லண்டனில், போலீசாருடன் மோதல் எதுவுமின்றி 2000 தமிழர்களுக்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்று முன்னதாக இலங்கை இராணுவத்தால் பரந்த அளவிலான படுகொலைகள் நடத்தப்படுவது பற்றிய செய்திக்கு உடனடிப் பதிலாக, நகரின் பெரிய தமிழ் சமூகத்தால் நடாத்தப்பட்ட பாரிஸ் ஆர்ப்பாட்டம் இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கைகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தின் மீது இந்த அரசாங்க தாக்குதல்களால் 476 குழந்தைகள் உட்பட 1,496 குடிமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த இருவார காலமாக, இலங்கை இராணுவத்தால் நடாத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக உலகெங்கும் வாழும் பரந்த தமிழ் சமூகத்தினரால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், இன்னும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள, கடைசி எஞ்சியுள்ள 17 சதுர கிலோமீட்டர் பகுதியை இலங்கை இராணுவம் நெருங்கி வருகிறது. சுற்றி வளைப்பில் ஒரே இராணுவ தாக்குதலை தொடுக்கப்போவதாக கூறிய இராஜபக்ச அராசங்கம் சரணடைவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 24 மணி நேரம் கொடுத்தது. சர்வதேச நெருக்கடி குழுவானது, இன்னும் 1,50,000 குடிமக்கள் மாட்டிக்கொண்டுள்ள பகுதியில், ஒரு "மனித துன்பியல்" அதிகரித்து வர இருப்பதாக கூறியது. லா சப்பலில், வீதியில் தமிழ் இளைஞர்கள் அமர்ந்து எதிர்ப்பை நடத்தினர். போலீஸின் ஆத்திரமூட்டலின் விளைவாக கலவரம் வெடித்ததாக ஆர்ப்பாட்டத்தினர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தனர்: அதிகாரிகள் சாலையிலுள்ளோரை அப்புறப்படுத்தும் போக்கில் வீதியில் அமர்திருந்த ஒருவரது கால் மீது போலீஸ் வாகனம் ஏற்றிச்சென்றது. போலீசார் ஆர்ப்பாட்டத்தினர் மீது கண்ணீர்ப்புகையை அடித்தனர், கூட்டத்தினரோ அவர்கள் மீது அதனை திருப்பி வீசினர். போலீசாருடன் கைகலப்பு ஏற்பட்டதும், அவர்கள் மீது பாட்டில்கள் வீசப்பட்டன, மூன்று பேருந்துகள் சிறிய அளவில் சேதமுற்றன. லு மொண்ட் குறிப்பட்டது: "அதிகாரத்திலுள்ளோர் (préfecture) கருத்துப்படி, இந்த சம்பவங்களில் நான்கு பொதுமக்கள், ஒரு போலீஸ் சிறிதே காயமுற்றனர்." பொறுப்பாளர்கள் போத்தல்கள் சட்டரீதியாக ஆயுங்கள் என்று விளக்கப்படுவதால், சிறைக்காவலில் உள்ளோர் மீது "ஆயுதத்துடன் கூடியிருந்த" தற்கான குற்றங்களை அது சாட்டக் கூடும் என்று குறிப்பிட்டனர். ஆர்ப்பாட்டத்தினர் பின்வருமாறு முழங்கினர்: "பிரெஞ்சு மக்களே பதிலளியுங்கள்! திரு. சார்க்கோசி அவர்களே உதவுங்கள் உதவுங்கள்." முந்தைய எதிர்ப்பில் போல் சிலர் பிரெஞ்சு ஜனாதிபதியின் படங்கள் இடம்பெற்ற அட்டைகளை ஏந்தியிருந்தனர். ஆயினும், பிரெஞ்சு அரசின் ஆதரவு வெளிப்படையாகவே, இந்தப் போரில் தங்களது அன்பிற்குரியவர்களை, உறவினர்களை, நண்பர்களை இழந்துவிட்ட அல்லது சிக்கிக்கொண்டுள்ள நிலையை பெற்றிருக்கும் அவதிக்குள்ளான புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இல்லை. மாறாக, உள்நாட்டு யுத்தம் முழுவதும் அது கொண்டிருந்த நிலைப்பாட்டைப் போல, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு தொடர்ந்து ஆதரவைக் காட்டி வருகிறது. அதன் வணிக மற்றும் பூகோள அரசியல் நலன்களுக்கு அது சிறப்பாக பணியாற்றும் என்று நம்புகிறது. தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாங்கத்திற்கு எதிராக தங்களின் வர்க்க நலன்களின் அடிப்படையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை கொண்ட, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் மூலம் யுத்தத்தை முடிவு கட்டும் எந்த கொள்கையையும் எதிர்க்கிறது. தனி ஒரு நாட்டை அமைக்கும் தங்களின் செயல்திட்டத்திற்கு பிரெஞ்சு, பிரிட்டீஷ், ஜேர்மன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரோதத்தை எதிர்கொள்ளுகையிலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகளானது இந்த சக்திகளுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றது. நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஏனைய ஏகாதிபத்திய தலைவர்களின் உருவப்படங்களை அவர்கள் பகட்டாரவாரமாய் காட்டுதல், இந்நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்திடமிருந்து தமிழ் ஆர்ப்பாட்டத்தினரை தனிமைப்படுத்தவே செய்யும். திங்களன்று தமிழ் மக்கள் மீதான சார்க்கோசியின் தாக்குதலானது ராஜபக்ச அரசாங்கத்துடன் ஐக்கியம் கொள்ளும் செயல் மட்டுமல்லாது, உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைகையில் வேலையின்மை பெருகுவதையும், உரிமைகள் இழக்கப்படுவதையும் எதிர்க்கும் அனைத்து தொழிலாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும் முக்கிய அரச தாக்குதலின் ஒரு அங்கமும் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பற்ற பிரிவினரான புலம்பெயர்ந்தோரை வேட்டையாடுவது தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்கள் மீதான என்றும் இல்லா வகையில் ஆழமடைந்து வரும் தாக்குதலுக்கான தயாரிப்பு ஆகும். வசிப்பிட உரிமை கோரும் 27,000 புலம்பெயர்ந்தோர் பலருள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பி அனுப்பப்படும் அரசின் இலக்குக்கு ஆளாவோரில் தமிழ் மக்களும் உள்ளடங்குவர். பாரிசில் தமிழ் மக்களுக்கு எதிராக போரீசார் தாக்குதல் தொடுக்கையிலும் கூட, கலே (Calais) பகுதியில் அவர்கள் 200 புலம்பெயர்ந்தோரை, பிரதானமாக பிரிட்டனுக்கு செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த ஆப்கானியர்களை சுற்றி வளைத்திருந்தனர். |