World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

The lessons of Thailand's political upheaval

தாய்லாந்து அரசியல் எழுச்சியின் பாடங்கள்

By Peter Symonds
15 April 2009

Use this version to print | Send feedback

திங்களன்று பாங்கொக் வீதிகளில் இருந்த கோபத்தின் ஆரம்ப எழுச்சியானது, தாய்லாந்து தொழிலாளர் வர்க்கம் முகங்கொடுத்து வரும் அரசியல் முட்டுச்சந்தை எடுத்துக்காட்டியுள்ளது. ஆளும் மேற்தட்டின் ஜனநாயக அவமதிப்பில் வெறுப்படைந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் (இவர்களில் பெரும்பாலானவர்கள் பாங்கொக்கின் ஏழைகள்) பலத்த ஆயுதமேந்திய படையினருடன் தெருவில் கைகலப்பு சண்டையில் ஈடுபட்டார்கள். அந்த போராட்டம் தங்களின் கட்டுப்பாட்டை மீறி செல்வதாக அஞ்சிய அவர்களின் சொந்த தலைவர்களால் மட்டுமே கலைக்க கூடியதாக இருந்தது.

மூன்று ஆண்டுகளாக ஆளும் வட்டாரங்களுக்குள், முன்னாள் பிரதம மந்திரி தாக்சின் ஷினாவத்ராவின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான கடுமையான சண்டையால் தாய்லாந்து அரசியல் அதிர்ந்து வருகிறது. 1930க்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான உலக மந்தநிலையின் தாக்கத்தின் காரணமான பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் தற்போது இந்த போராட்டத்தில் குறுக்கிட்டுள்ளது. இருந்த போதினும், போட்டியில் ஈடுபட்டுள்ள எந்த பிரிவினராலும் உழைக்கும் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதனையே இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன.

பிரதம மந்திரி அப்ஹிசித் விஜ்ஜாஜிவாவின் தற்போதைய அரசாங்கம் இராணுவம், அரசு அதிகாரத்துவம் மற்றும் முடியாட்சி போன்ற பழைமைவாத தட்டுக்களையே தங்கியுள்ளதுடன், இந்த அரசாங்கம் 2006ல் நடந்த ஓர் இராணுவ சதியில் தாக்சினை வெளியேற்றியதுடன், பின்னர் கடந்த ஆண்டு தாக்சினுக்கு சார்பான இரண்டு அரசாங்கங்களையும் வெளியேற்றியது. டிசம்பரில் அப்ஹிசித்தை பதவி ஏற்றுவதில் உதவிய இராணுவம், கடந்த ஆண்டில் தாக்சின் எதிர்ப்பு போராட்டங்களை தோல் கையுறைகளுடன் கையாண்டது. ஆனால் திங்களன்று அது போன்ற ஈவிரக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மீதமிருந்த போராட்டக்காரர்களை சுற்றி வளைத்த துருப்புகள், செவ்வாயன்று ஓர் இரத்தத்தோயலுடன் அச்சுறுத்தியது. கடந்த ஆண்டு பாங்கொக் விமான நிலையங்களை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸ் மற்றும் நீதித்துறை, சட்டவிரோதமாக கூடியமை மற்றும் பொதுஜனங்களுக்கு சிரமங்கள் உருவாக்கியதற்காக திங்கட்கிழமை போராட்டங்களின் தலைவர்கள் மீது தற்போது குற்றங்களை பதிவு செய்ய விரும்புகின்றன.

பல தசாப்தங்களாக நாட்டின் இராணுவ ஆட்சியின் ஓர் எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டிருந்த அப்ஹிசித்தின் ஜனநாயக கட்சியின் தன்மையையே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. 1992ல், இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டிய பாங்கோக்கின் பாரிய போராட்டங்களால் ஜனநாயக கட்சியினரே ஆதாயமடைந்தனர். 1997-98ன் ஆசிய நிதி நெருக்கடிக்கு பின்னர், அக்கட்சி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத்திட்டங்களைச் செயல்படுத்தியதுடன், குறைந்து வரும் வாழ்க்கை தரங்கள் தொடர்பாக அதிகரித்துவந்த பொதுமக்களின் கோபத்தையும் எதிர்நோக்கியது. தாக்சினுக்கு எதிரான கடுமையான உட்சண்டையில், 2006 சதி உட்பட எதிர்-ஜனநாயக முறைகளைப் பின்பற்றவும் ஜனநாயக கட்சியினர் தயங்கவில்லை. ஞாயிறன்று, அவசரகால ஆட்சியைப் பிரகடனப்படுத்தவும், பாங்கொக்கிற்குள் துருப்புகள் மற்றும் டாங்குகளை அனுப்ப இராணுவத்திற்கு அங்கீகாரம் அளிக்கவும் அப்ஹிசித் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

எவ்வாறிருப்பினும், கோடீஸ்வரரான தாக்சினும் மற்றும் அவரின் ஆதரவாளர்களும், ஏழைகளுக்கு சார்பானவர்களோ அல்லது ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களோ அல்லர். ஜனநாயக கட்சியினருக்கு எதிரான பரந்த எதிர்ப்பை மூலதனமாக கொண்டு, தாக்சின் மற்றும் அவரின் Thai Rak Thai (தாய்லாந்துகாரர்கள் தாய்லாந்தை நேசிக்கிறார்கள்) கட்சி, ஜனரஞ்சகவாத வாக்குறுதிகள் மற்றும் தாய்லாந்து வியாபாரங்களைக் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளின் அடிப்படையில் 2001ல் ஆட்சியைக் கைப்பற்றியது. நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கான சில குறிப்பிட்ட திட்டங்களை உருவாக்கிய அவரின் திறமை, தாய்லாந்து பொருளாதாரத்தை மீட்பதையே சார்ந்திருந்தது. அது "Thaksinomics" எனப்பட்ட தாக்சின் இன் பொருளாதாரக் கொள்கையினால் எழுச்சியூட்டப்பட்ட இருந்தும் வெகு தொலைவில் இருந்ததுடன், குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகளை உயர்த்துவதை பெருமளவில் சார்ந்திருந்தது. எவ்வாறிருப்பினும், அவரின் பொருளாதார கொள்கைகளும் மற்றும் குடும்ப ஆதிக்க பொருளாதாரமும் தாய்லாந்தின் பாரம்பரிய மேற்தட்டுக்களின் சொந்த ஊழல் முறையை வெட்டியதன் மூலம் அவற்றை மாற்றி அமைத்தது.

அவரின் நிலைப்பாட்டை தாங்கிப் பிடிக்க, தாக்சின் 2003ல் ஒரு பிற்போக்குவாத "சட்டமும் ஒழுங்கும்" என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான போதைப்பொருள் விற்பனையாளர்களை போலீஸ் கொன்று குவித்தது. 2005ல் இருந்து, அவர் வேண்டுமென்றே நாட்டின் பெரும்பான்மையினரான புத்த மதத்தினரிடையே முஸ்லீம் எதிர்ப்பு உணர்வைக் கட்டவிழ்த்து விட்டதுடன், தெற்கு மாகாணங்களில் இருந்த முஸ்லீம் பிரிவினைவாதிகள் மீது ஓர் இராணுவ ஒடுக்குமுறைக்கும் உத்தரவிட்டார். எதிர்ப்பு கிளம்பிய போது, தாக்சின் விமர்சனங்களை அச்சுறுத்தியதுடன், ஊடகத்தின் மீதான அவரின் பிடியையும் இறுக்கினார். 2006ல் ஏற்பட்ட அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு எண்ணெய் ஊற்றுவதில் பெரும்பங்கு வகித்தவைகளில் அவரின் ஒடுக்குமுறைகள் மீதான கோபமும் ஒரு காரணியாகும்.

தங்களின் சொந்த நலன்களுக்கான பொருளாதார கொள்கையை வகுக்கும் பொருட்டு அரசியல் அதிகாரத்திற்கான தங்களின் போராட்டத்தில் ஆளும் மேற்தட்டின் இரண்டு அணிகளுமே ஜனநாயக உரிமைகள் மீதான மக்களின் கவனத்தை திரித்து விட்டிருக்கின்றன. பல வாரங்களாக, தாக்சினுக்கு ஆதரவான சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான ஐக்கிய முன்னணியின் (UDD) தலைவர்கள், இராணுவ ஆதரவுடனான அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்க பரந்தமக்களின் எதிர்ப்புக்களை சுரண்டிக்கொள்வதில் திருப்தியடைந்திருந்தனர். ஆனால் திங்களன்று, நகர்புற ஏழைகளின் சில பிரிவுகள் விடயத்தை தங்களின் சொந்த கைகளில் எடுக்க தொடங்கிய போது அவர்கள் பிரமித்து போனார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களின் "மக்களின் புரட்சி" அழைப்புகளால் எரிச்சலூட்டப்பட்டு, தாக்சினும் மற்றும் UDD உம் உடனடியாக போராட்டங்களை நிறுத்திவிட்டார்கள்.

குறைந்தபட்சம் நுணுக்கமாகவேனும், பாடப்புத்தகங்களில் உள்ளதுபோல், தாய்லாந்து போன்ற நாட்டில் முதலாளித்துவ தலைவர்களால் வகிக்கப்பட்ட பங்குதான் இங்கு முக்கியமானது. ஜனநாயகத்தின் அடிப்படையிலும், ஏன் சோசலிசம் ஒலிக்கும் கோசங்களுடனும் மக்களுக்கு அழைப்புவிட்டு, பின்னர் அவ்வியக்கம் தமது கட்டுப்பாட்டை விட்டு கைநழுவிப்போகும்போதும் மற்றும் முதலாளித்துவ அமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த தொடங்கிய போதும் அவ்வியக்கங்களை கலைத்த அல்லது தாக்கிய அரசியல் பிரதிநிதிகளை இருபதாம் நூற்றாண்டு தாராளமாகவே கண்டுள்ளது.

தாய்லாந்தின் ஆளும் மேற்தட்டுக்களின் ஜனநாயக எதிர்ப்பு பாத்திரம், லியோன் டிரொட்ஸ்க்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றை உறுதிப்படுத்துகிறது. அதாவது, உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாசைகளையும் மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பின்தங்கி அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்திற்கு இயல்பாகவே தகமை இல்லை என்பதையாகும். கிராமப்புற மக்களை ஒன்று திரட்டுவதற்கான போராட்டங்கள் மூலமும், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலமும் உண்மையான ஜனநாயக உரிமைகள் மற்றும் விவசாய சீர்திருத்தத்தை வென்றெடுப்பதற்கான திறன் பாட்டாளிகளிடம் மட்டுமே உள்ளது.

பாங்காங்கில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அரசியல் கொந்தளிப்பானது, தொழிலாளர் வர்க்கத்திற்கு சுயாதீனமான அரசியல் குரல் இல்லை என்பதையே எடுத்துக்காட்டி உள்ளது. இதுவரையிலும் தொழிலாளர்கள் அதில் ஈடுபட்டிருந்த போதினும், அவர்கள் ஆளும் வர்க்கத்தின் குழுவாத சூழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்திலும், அந்த பிராந்தியத்திலும் எவ்வித உண்மையான சோசலிச கட்சியும் இல்லாமல் இருப்பது ஸ்டாலினிசத்தின் கொடூரமான மரபின் ஒரு பகுதியாகும். மாவோயிஸ்டுகளான தாய்லாந்தின் கம்யூனிஸ்டு கட்சியினர் (CPT) தங்களை தொழிலாளர் வர்க்கத்தினை அடித்தளமாக கொள்ளாமல், விவசாய பிரிவுகளின் ஓர் ஆயுதமேந்திய கொரில்லா போராட்டத்தில் அடித்தளமிட்டுள்ளனர். ஸ்டாலினின் இரண்டு கட்ட கொள்கையால் வழிநடத்தப்படும் தாய்லாந்தின் கம்யூனிஸ்டு கட்சியின் உடனடி நோக்கம் சோசலிசம் அல்ல. மாறாக தேசிய முதலாளித்துவத்தின் "முற்போக்கான" பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசாங்கம் தான் எங்களின் உடனடி நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

1970களின் மாணவர் போராட்டங்களின் போது, 1976ல் தம்மாசட் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தாலும், போலீஸாலும் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வலதுசாரி இராணுவ குழுக்களாலும் செய்யப்பட்ட மாணவர்களின் கொடூரமாக படுகொலைக்கு பின்னர், நூற்றுக்கணக்கானவர்கள் காடுகளுக்கு ஓடிச் சென்று தாய்லாந்தின் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்கள். இராணுவத்தின் முறையான ஒடுக்குமுறைக்கு இடையிலும் இராணுவத்தால் அளிக்கப்பட்ட பொதுமன்னிப்புகளைப் பயன்படுத்தி, தாய்லாந்தின் கம்யூனிஸ்டு கட்சியால் தவறாக வழிகாட்டப்பட்ட பெரும்பாலானவர்கள் பாங்காங்கிற்கு மீண்டும் திரும்பினார்கள். அவர்களில் சிலர் தற்போது இடதுசாரி வார்த்தைஜாலங்களுடன் வலதுசாரி கொள்கைகளைப் போர்த்தி கொண்டு தாக்சினுக்கு ஆதரவான அல்லது எதிரான முகாம்களில் காணப்படுகிறார்கள். முன்னால் தீவிரவாதிகளான பும்தம் விஜ்ஜெளயாசாய், பிரபாத் பன்யசாத்ரக் மற்றும் சுரபோங் செப்வொன்ங்லீ ஆகியோர், தற்காலிகமாக, தாக்சினின் தாய்லாந்தின் கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய பிரபலங்களாக உள்ளனர் என்பதுடன் அதன் சமூக கொள்கைகளை பரப்புவதிலும் உதவி வருகிறார்கள்.

கடந்த வாரம் ஏசியான் மாநாட்டிற்காக கூடியிருந்த தலைவர்களால் தாய்லாந்து போராட்டக்காரர்களுக்கு காட்டப்பட்ட அச்சுறுத்தலூட்டும் பிரதிபலிப்பானது, அவர்கள் இதுபோன்ற எழுச்சிகளை அவர்களின் தாய்நாட்டிலும் முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதுடன் அதற்கு அவர்கள் தயாராக வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என்பதற்கான தெளிவான ஒப்புதாலாகும். தொழிலாளர் வர்க்கம் அது தானாகவே அதன் சொந்த ஆயத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் முந்தைய தோல்விகளிலிருந்து அவசியமான ஒரு அரசியல் மதிப்பீட்டை (Balance sheet) செய்யவேண்டி உள்ளது. அப்பிராந்தியம் முழுவதும், பல தசாப்தங்களாக இருந்து வரும் தவறான தலைமை மற்றும் ஸ்டாலினிச கட்சிகளின், குறிப்பாக மாவோவாத வகையினரின், காட்டிக்கொடுப்புகளின் விளைவுகளை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். சீனாவின் தவறான பெயர் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் உலகின் முதலாளித்துவ சுரண்டல்நிலையமாக மாறியுள்ள சீனா, இதற்கு மிக தெளிவான எடுத்துக்காட்டாகும்.

தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து வெளியில் வருவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை முன்வைக்கும் திட்டத்தையும், முன்னோக்கையும் அபிவிருத்தி செய்வது தான் தேவைப்படுகிறது. அது ஸ்ராலினிசம் மற்றும் அனைத்து வடிவத்திலான அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நிரந்தரப் புரட்சி முன்னோக்கிற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் நீண்டகால போராட்டத்தில் தான் காண முடிகிறது. ஆகவே தாய்லாந்திலும், அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும் இந்த வரலாற்றின் பக்கம் திரும்ப வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை படிப்படியாக உருவாக்க தேவையான முக்கிய அரசியல் பாடங்களை உள்வாங்க தொடங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.