World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா Voting begins in India's multi-phase election இந்தியாவின் பல கட்டத் தேர்தல் ஆரம்பமாகிறது By Keith Jones ஒரு மாத காலம் ஐந்து கட்டங்களில் நடக்க இருக்கும் இந்தியாவின் தேர்தல்கள் வியாழனன்று ஆரம்பமாகின; 124 லோக் சபா தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களின் வாக்குளை அளிக்கின்றனர்; இவற்றில் பல நாட்டின் வறிய பழங்குடிப் பகுதிகள் ஆகும். பல கட்சிகள் அடங்கிய மூன்று உறுதியற்ற கூட்டணிகள் அதிகாரத்திற்கு போட்டியிடுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் முதலாளித்துவ மரபார்ந்த அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஒரு சிறுபான்மைக் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இந்தியாவை ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு அரங்காக உலக முதலாளித்துவத்திற்கு மாற்றும் இந்திய முதலாளித்துவ திட்டத்தை செயல்படுத்தி ஒரு "உலகளாவிய, மூலோபாய பங்காளித்தனத்தையும்" அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பிணைத்துள்ளது. இறுதியில் அதன்மீதே பாயக்கூடிய வகையில் நடத்திய அரசியல் விளையாட்டில் காங்கிரஸ் கட்சி தேர்தல்களை UPA பதாகையின்கீழ் நடத்த மறுத்துவிட்டது. அதன் "தேசிய" தன்மையை உறுதிப்படுத்தவும், UPA க்குள் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும், காங்கிரஸ் UPA ல் பங்காளிகளாக இருந்த பல வட்டார மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளுடன் தொடர்ச்சியான தனிப்பட்ட மாநிலவாரியான தேர்தல் உடன்பாடுகளைக் கொண்டுள்ளது. பல UPA தளங்களும் கூட்டணி நட்புக் கட்சிகளும் இந்த ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அவை தங்கள் சொந்த தேர்தல் உடன்பாட்டை பீகார், உத்தரப்பிரதேசம், கங்கை சமவெளி மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் ஏற்படுத்திக் கொண்டன; இவை கிட்டத்தட்ட 250 மில்லியன் மக்களுடைய தாயகம் ஆகும்; இது UPA இன் எதிர்காலத்தை வினாவிற்கு உட்படுத்தியுள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான மற்றும் காங்கிரஸை தவிர இந்திய பாராளுமன்றத்தின் 543 உறுப்பினர்கள் கொண்ட கீழ்ப்பிரிவில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP), அரசாங்கம் அமைக்க விரும்பும் இரண்டாம் கூட்டணியாக, (National Democratic Alliance) தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதை அமைத்துள்ளது. மே 2004ல் BJP தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் உயரடுக்கின் ஏற்றுமதி வழியிலான வளர்ச்சியை பின்பற்றியதால் விளைந்த பெருகிய பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை இவற்றால் ஏற்பட்ட மக்கள் அதிருப்தியின் விளைவாக பதவியில் இருந்து அகற்றப்பட்டது. அப்பொழுது முதல் NDA பல நீண்ட விலகல்களைத்தான் சந்தித்துள்ளது. இதன் விளைவாக BJP ஒரு முக்கிய பங்காளி அல்லாது தெற்கு, கிழக்கு இந்தியாவில் கணிசமான ஆதரவு இல்லாமல் நுழைகிறது; இதில் ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் அடங்கும். தேர்தல்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) அல்லது சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி ஒரு "காங்கிரஸ் அல்லாத", "BJP இல்லாத" வட்டார, சாதி அடிப்படை அரசியல் அமைப்புக்களை இணைத்த மூன்றாம் முன்னணி எனப்படுவதை அமைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. 2004 மே மாதம் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு ஸ்ராலினிச CPM, சிறுபான்மை UPA அரசாங்கத்திற்கு அது பதவியில் தொற்றிக் கொண்டு இருப்பதற்கு தேவையான பாராளுமன்ற வாக்குகளைக் கொடுத்து, ஒரு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒன்றுதான் இந்து தேசியவாத வலதுசாரி பதவிக்கு மீண்டும் வராமல் தடுக்க முடியும் என்றும் காங்கிரஸை "மக்கள் சார்பு" கொள்கையைத் தொடர அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கூறி ஆதரவு கொடுத்தது. ஆனால் கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து திறமையுடன் இடது முன்னணியை விரட்டி அடித்தது; அப்பொழுது பிந்தையது இடதின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி தான் இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தும் என்றும் அறிவித்தது; இந்த உடன்படிக்கை புஷ் நிர்வாகத்தால் இந்திய-அமெரிக்க மூலோபாய பங்காளித்துவத்தை வலுப்படுத்த வடிவாக்கப்பட்டது. அதிகாரத் தாழ்வாரங்களில் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியிலும், காங்கிரஸுடனான அதன் உடன்பாட்டில் ஏற்பட்ட வெளிப்படைத் தோல்வியை மறைக்கும் நம்பிக்கையிலும், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் UPA, NDA இவற்றில் இருந்து அதிருப்தியுடன் வெளியேறிய கட்சிகளை சேர்த்து மூன்றாம் முன்னணி என்னும் கருத்தைப் புதுப்பித்தது. மார்ச் மாதம் அத்தகைய உடன்பாடு முறையாக தொடக்கப்பட்டது. இதன் முக்கியமான கூறுபாடுகள்--தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்ட AIDMK, ஆந்திரப் பிரதேசத்தின் தெலுகு தேசக் கட்சி, ஒரிஸ்ஸாவை தளமாகக் கொண்ட BJD மற்றும் ஜனதா தளம் (மதசார்பற்றது) ஆகியவை தவறான அரசியல் சான்றுகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒரு காலத்தில் இந்து மேலாதிக்க BJP உடன் நட்புக் கட்சிகளாக இருந்து, அனைத்துமே தாங்கள் தளத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் அதிகாரத்தில் இருந்தபோது இரக்கமற்ற முறையில் இந்திய மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் ஆணைகளைச் செயல்படுத்தின. ஆயினும்கூட ஸ்ராலினிஸ்ட்டுகள் இடது ஆதரவு பெற்ற மூன்றாம் முன்னணி அரசாங்கம் இந்தியாவிற்கு "மத சார்பற்ற" மற்றும் "மக்கள் சார்பு" உடைய அரசாங்கத்தைக் கொடுத்து "சுதந்திரமான" வெளியுறவுக் கொள்கையையும் செயல்படுத்தும் என்று கூறுகிறது. இந்திய மாநிலங்களில் அதிக மக்கள்தொகை உடைய உத்தரப்பிரதேசத்தை தற்பொழுது ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) ஐ மூன்றாம் முன்னணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர்; ஆனால் இவர்களுடைய எண்ணங்களை அது நிராகரிதுவிட்டது. மாறாக BSP தலைவியும் உத்தரப் பிரதேச முதல் மந்திரியுமான மாயாவதி மூன்றாம் மற்றும் இடது முன்னணித் தலைவர்களுக்கு ஒரு விருந்து வைத்தார். பிரதம மந்திரியாகும் தன் அவாவை இரகசியமாக வைத்திராத மாயாவதி இடது முன்னணியின் கோரிக்கையான முறையான உடன்பாட்டை மறுத்தார் என்றார், மே 16 தேர்தல் முடிவுகள் வரத் துவங்கும்போது பேரம் பேசுவதற்கு எந்த கட்டும்பாடும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை அவர் கொண்டிருப்பதே காரணம். BSP நசுக்கப்பட்டவர்கள் மற்றும் குறிப்பாக தலித்துக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி என்று தன்னைக் காட்டிக் கொள்ளுகிறது; ஆறு தசாப்தங்கள் தீண்டாமை சட்டபூர்வமாக அகற்றப்பட்டுவிட்டாலும், தலித்துக்கள் இந்தியாவின் நிலமற்ற ஏழைகள், படிக்காதவர்களில் பரந்த அளவில் அளவுக்கு ஒவ்வாத வகையில் பங்கைக் கொண்டிருக்கின்றனர். ஆயினும்கூட BSP எந்த குறிப்பிடத்தக்க சமூகப் போராட்டங்களிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை, முக்கியமான சமூகச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுவது இருக்க, அவற்றிற்காக வாதிடவும் இல்லை. பதவி வேண்டும் என்பதற்காக இது பலமுறையும் BJP உடன் இணைந்து செயல்பட்டு, மற்ற சாதித்தள கட்சிகளைப் போல் இட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவை கொடுக்கிறது, அதாவது உடன்பாட்டுச் செயல் திட்டங்களுக்கு; இவை இந்திய முதலாளித்துவத்தை இன்னும் "நியாயமான முறையில்" வறுமையை பகிருமாறு கோருகிறது; அதே நேரத்தில் பிற்போக்கு சாதி அடையாளங்களைத் தூண்டி சாதிப் பூசல்களையும் வளர்க்கிறது.கருத்துக் கணிப்புக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் லோக் சபா தேர்தல்களில் அதிக வாக்குகள் பெறும் கட்சியாக வரும் எனக்கூறுகின்றன. ஆனால் இந்தியாவில் கருத்துக் கணிப்புக்கள் துல்லியமாக இருப்பதில்லை என்ற இகழ்வைத்தான் கொண்டுள்ளன. காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது பொருந்ததா, மிகப் பல கட்சிகளிடுடனான கூட்டணி மூலம்தான் முடியும். மேலும் இந்தியாவின் பொராளாதார நெருக்கடி இந்தியாவில் பெரிய, குறிப்பாக தேர்தலில் கணித்துக் கூறமுடியாத தாக்கத்தைக் கொண்டிருக்கும். கடந்த டிசம்பர் மாதம் நிதிய சுனாமி தாக்கியபோது, UPA அரசாங்கமும் இந்தியாவின் உயரடுக்கின் பல பிரிவுகளும் இந்தியா நெருக்கடியில் இருந்து பாதிப்பை அதிகம் பெறாது என்று கூறிவந்தன. ஆனால் இந்த கற்பனைகள் விரைவில் சிதைந்து போயின. ஏற்றுமதிகள் மிகப் பெரிய அளவில் சரிந்தன, உற்பத்தி அளவு குறைந்து விட்டது. பெப்ருவரி மாதம் தொழில்துறை உற்பத்தி 1.2 சதவிகிதம் குறைந்தது, பிற உற்பத்தி முறை 1.4 சதவிகிதம் குறைந்தது. இந்தியா மாதாந்திர அல்லது ஆண்டு வேலையின்மை அளவைகள்கூட எடுப்பதில்லை (அவைதான் நாட்டின் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடையாளம் ஆகும்); ஆனால் அரசாங்கம் அரை மில்லியன் தொழிலாளர்கள் கடந்த ஐந்து மாதங்களில் வேலைகளை இழநுவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பெரும்பாலான நோக்கர்கள் உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு இருக்கும் என நம்புகின்றனர். ஜனவரி மாதம் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் 10 மில்லியன் வேலைகள் விரைவில் சர்வதேச கோரிக்கைகளில் புதுத்துயிர்ப்பு இல்லாவிட்டால் இழக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளனது. இந்தியாவில் வேலையின்மை என்பது பெரும்பாலனவர்களுக்கு உடனடியான வறிய நிலை என்ற அச்சுறுத்தல் ஆகும்; ஏனெனில் நாட்டில் சமூக பாதுகாப்பு வலை ஏதும் கிடையாது. ஒரு சமீபத்திய OECD யின்படி பத்தில் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் முறையான ஒப்பந்தம் ஏதும் பெறவில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளது; இதன் பொருள் அவர்கள் எந்நேரமும் பணியில் இருந்து நீக்கப்படலாம்; அரசாங்கத்திடம் இருந்தோ முதலாளிகளிடம் இருந்தோ, சமூக நலன்கள் அவர்களுக்குக் கிடையாது. தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடங்குவதற்கு முன்பே, நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்கள் "பெரும் வறுமையில்" வாழ்ந்துவருகின்றனர்; இது நாள் ஒன்றுக்கு ஒரு முழு நாள் உழைப்பிற்குத் தேவையான கலோரி உட்செலுத்துதலை அடிப்படையாகக் கொண்டது. வாக்காளர்கள் பெரும்பான்மையினரிடையே உணவுப் பாதுகாப்பும் உடனடிப் பிரச்சினை என்பதை ஒப்புக் கொள்ளும் விததிதல் காங்கிரஸ் மற்றும் BJP ஆகியவை அரசாங்க உதவி அதிகம் தரப்பட்டு கோதுமை மற்றும் அரிசி வினியோகிக்கப்படும் என்று தங்கள் தேர்தல் திட்டத்தில் மையமாக அதைக் கூறியுள்ளன. காங்கிரஸ் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் 25 கிலோகிராம் கோதுமை அல்லது அரிசியை கிலோ 3 ரூபாய்க்குத் தருவதாகவும், BJP ஒரு கிலோகிராம் 2 ரூபாய்க்கு அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளன. BJP யின் கொள்கைகளில் இருந்து தன்னுடையதை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் வகையில் காங்கிரஸ் தன்னை "உள் வளர்ச்சி" காவலர் என்றும் "மனிதத் தன்மை உடைய முதலாளித்துவ முகம்" என்றும் கூறுகிறது. முன்னோடியில்லாத வகையில் பொருளார விரிவாக்கம் ஏற்பட்டு, வெளி மூதலனம் மற்றும் விரைவான ஏற்றுமதி வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் --இந்தியப் பொருளாதாரம் மார்ச் 2008 முடிந்த ஐந்து ஆண்டுகளில் 8.8 சதவிகித ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது-- UPA அரசாங்கம் ஓரளவு பொது நல செலவுகளை அதிகரித்து, கடந்த தசாப்தத்தில் கிராமப்புற இந்தியாவை பெரிதும் அலைக்கழித்த தீவிர வறுமையை குறைக்கும் திட்டங்கள் சிலவற்றைக் கொண்டுவந்தது.மிக முக்கியமான நிவாரணத் திட்டம் மற்றும் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின் அளிப்பாகவும் இருப்பது தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதம் (National Rural Employment Guarantee - NREG) என்பதாகும். இது கிராமப்புற குடும்பங்களில் ஒரு நபருக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 நாட்கள் குறைந்தது உடலுழைப்பு பணியை குறைந்த ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது (அதாவது நாள் ஒன்றுக்கு 1 டாலரைவிட சற்றே அதிகமாகும்). NREG விவசாய இடர்பாடுகள் இன்னும் கூடுதலான வகையில் ஆழமாவதை நிறுத்தக்கூடும்--இந்த நெருக்கடிக்கு காரணம் பெருவணிகத்தான் கோரப்பட்ட அரசாங்க முதலீடு விவசாயத்துறையில் இருந்து உள்கட்டுமான திட்டங்களுக்கு மாற்றியது எனலாம்; அதேபோல் பல விவசாயப் பொருட்களுக்கு விலை ஆதரவு, உட்செலுத்தல் மானியங்கள் ஆகியவையும் நிறுத்தப்பட்டிருந்தன.பெரு வணிகத்தின் பெரும்பிரிவுகள் NREG ஐ அரசாங்க இருப்புக்களில் பெரும் வற்றச்செய்தல் என்று கண்டித்துள்ளன. இதற்கிடையில், பொருளாதாரப் பகுப்பாய்வாளர்கள் UPA அரசாங்கம் மேற்கொண்டுள்ள மிகக்குறைந்த சமூகச் செலவினங்கள்கூட பொருளாதார வளர்ச்சி விகிதச் சரிவு தொடர்ந்தால், செயல்படுத்தமுடியாமல் போகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். வரிமூலம் வருமானங்களில் குறைவு மற்றும் பல ஊக்க நடவடிக்கைகளினால், மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறை 2008-09 நிதி ஆண்டு 2.5 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதம் உயர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசாங்கங்களின் பற்றாக்குறையும் கூட்டப்படும்போது அரசாங்க பட்ஜெட் பற்றாக்குறை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் கூடும். தேர்தல்களை அடுத்து, அரசாங்கம் எப்படி அமைந்தாலும், அது உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்தில் இருந்து இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு செலவாகும் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற பெரும் அழுத்தத்திற்கு உட்படும். BJP இன் தேர்தல் பிரச்சாரம் அப்பட்டமான வகுப்புவாத, மிரட்டும் தன்மை உடைய பாக்கிஸ்தான் எதிர்ப்புக் கருத்துக்களை கொண்டுள்ளது. BJP, UPA அரசாங்கத்தை பயங்கரவாதத்தின்மீது "மிருதுவாக" இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறது; இதற்குக் காரணம் பயங்கரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்காது என்றும், "முஸ்லிம் வாக்குகள் வங்கியை" விரோதப்படுத்த அது விரும்பாதது என்ற வகுப்புவாத குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் மும்பை பயங்கரவாத அட்டூழியத்தைத் தொடர்ந்து புதிய கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை கொண்டுவந்ததை சுட்டிக் காட்டியுள்ளது; மேலும் எப்படி தான் சர்வதேச பிரச்சாரத்தை இந்தியாவின் வரலாற்றளவு எதிரியான பாக்கிஸ்தானை தனிமைப்படுத்த மேற்கொண்டுள்ளது என்றும் அவை பாக்கிஸ்தான் அனைத்து தளவாடங்கள் மற்றும் அரசியல் ஆதரவை "பயங்கரவாதம்", அதிலும் குறிப்பாக காஷ்மீர் எழுச்சியாளர்களின் இந்திய எதிர்ப்பை அடக்கும் வரை தொடரும் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பல முறையும் BJP தலைமையிலான NDA அரசாங்கம் பயங்கவாதத்திற்கு "தாழ்ந்து நின்றதாகவும்" ஆப்கானிஸ்தானத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய விமானம் ஒன்றின் விடுதலைக்கு அவ்வாறு செய்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியத் தேர்தல்கள் ஐந்து கட்டங்களில் நடைபெற உள்ளன. ஆனால் இந்திய செய்தி ஊடகம் இவை மிக முக்கியமான ஆறாம் கட்டத்தில் தொடரும் என்று கூறியுள்ளது; அதாவது தேர்தல் முடிவுகள் வந்தபின் பல கட்சிகளின் வெற்றி எண்ணிக்கை போன்றவை வந்தபின்னர் பாராளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்றுவதற்காக நடைபெறும் பேரம்பேசல், தந்திர உத்தி ஆகியவை பற்றி இவ்வாறு கூறுகிறது. கடந்த முறை லோக் சபாவில் ஒற்றைக் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது 1984ல் தான் நடந்தது. காங்கிரஸோ, BJP யோ உண்மையில் தேசிய வாக்கெடுப்பில் 25 சதவிகிதத்திற்கும் மேல் பெற முடியாது, அதாவது 150 இடங்களுக்கும் மேல் (28 சதவிகிதம்) லோக் சபாவில் பெற முடியாது. சமீபத்திய நாட்களில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜியும் காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் இடது முன்னணி ஆதரவுடன் வரலாம் என்று கூறிவருகின்றனர். புதனன்று சிங் Editors Guild of India வில் கூறினார்: "அரசாங்கம் என்ற முறையில் இடதுடன் நடந்து கொண்ட முறை பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். இடது கட்சிகளுடன் கூட்டு என்பது தேர்தலுக்குப் பின்னர் நடக்கக்கூடியதே. சூழ்நிலைதான் நாங்கள் இடது ஆதரவைக் கோருவோமா என்பது பற்றி நிர்ணயிக்கும்." சிங்கின் கருத்துக்கள் பாராளுமன்ற கூட்டிக் கழித்தல் முறை காங்கிரஸை மீண்டும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசாங்கம் அமைக்க நாட வைக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இன்னும் அடிப்படையில், அவை இந்தியாவின் உயரடுக்கு CPM மற்றும் இடது முன்னணி வர்க்கப் போராட்டத்தை நசுக்கவும் தொழிலாள வர்க்கத்தை இருக்கும் சமூக ஒழுங்கிற்கு கீழ்ப்படிய வைக்கும் அரிய பங்கிற்கும் நம்பியிருக்கும் கெட்டிக்காரத்தனத்தை உணர்த்துவதாகும். இந்தியாவின் உழைப்பாளிகள் முதலாளித்துவத்தின் சமூக விரோதப் போக்கான இந்தியாவை குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு புகலிடமாக உலக முதலாளித்துவத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றிற்கான எதிர்ப்பை பிற்போக்குத்தன பாராளுமன்ற தந்திரங்கள் மற்றும் செயலற்ற எதிர்ப்புக்களாக ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மாற்றுகின்றனர். இதற்கிடையில் அவர்களே ஆட்சி நடத்தும் மாநிலங்களில், மிகவும் முக்கியமாக மேற்கு வங்கத்தில் அவர்கள் இரக்கமற்ற முறையியில் முதலீட்டாளர்கள் சார்பு கொள்கையை தொடர்ந்து, சோசலிசத்தை "செயல்படுத்த முடியாத "தொலைவில் இருக்கும் கருத்து" என்றும் உதறித்தள்ளியுள்ளனர். |