World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா Indian elections: BJP combines rank communal appeals with populist posturing இந்தியத் தேர்தல்கள்: பாஜக அப்பட்டமான வகுப்புவாத முறையீடுகளுடன் ஜனரஞ்சக பாசாங்குகளையும் மேற்கொள்கிறது By Deepal Jayasekara பதவிக்காலம் முடிந்துவிட்ட இந்தியப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NPA) மேலாதிக்க பங்காளியுமான பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவின் தேசிய தேர்தல்களில் வாக்குகளை சேகரிக்கும் விதத்தில் வகுப்புவாத முறையீடுகளையும், ஜனரஞ்சக வாக்குறுதிகளுடன் முரட்டுத்தன "பயங்கரவாத எதிர்ப்பு" அலங்காரச் சொற்களையும் இணைத்துக் கூறிவருகிறது. இந்தியாவின் 15வது சுதந்திரத்திற்கு பின் வரும் தேர்தல் இன்று தொடங்கி அடுத்த நான்கு வாரங்களுக்கு நடந்து மே 13ம் தேதி ஐந்தாம், மற்றும் இறுதிக் கட்டத்தை அடையும். மே 2004ல் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், தன்னுடைய ஆக்கிரோஷ நிலைப்பாட்டை ஒட்டிய விதத்தில் BJP தன்னுடைய பிரச்சாரதந்தில் வகுப்புவாதம் நிறைந்த குற்றச்சாட்டுக்களை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) "பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு உறுதியற்று உள்ளது" என்றும் இதற்குக் காரணம் "முஸ்லிம் வாக்கு வங்கியை விரோதப்படுத்தி விடுவோமோ" என்று அது அஞ்சுகிறது என்றும், முன்வைத்துள்ளது. POTA, Prevention of Terrorism Act மீண்டும் திணிக்கப்பட வேண்டும் என்று BJP கோருகிறது. 2002ல் ஏற்கப்பட்ட POTA மத்திய மற்றும் பல மாநில அரசாங்கங்களால் வறிய முஸ்லிம்களுக்கு எதிராக வலைபோட்டு இழுக்கவும் மற்றும் அரசியல் விரோதிகளை இலக்கு கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. UPA அதிகாரத்திற்கு வந்து சில நாட்களில் அது அகற்றப்பட்டது. ஆனால் அதன் பெரும்பாலான கடுமையான விதிகள் UPA இயற்றிய அதற்குப் பதிலாக வந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டன அல்லது பின்னர் நவம்பர் 2008ல் மும்பை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்னர் வந்த பாராளுமன்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டன.திங்களன்று பேசிய BJP தலைவர் ராஜ்நாத் சிங் BJP அரசாங்கம் பாக்கிஸ்தான் மீது படையெடுக்கவும் தயார் என்று கூறினார். "அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், BJP அரசாங்கம், பாக்கிஸ்தானிடம் பயங்கரவாதத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் உதவி தேவையா என்று கேட்கும். இஸ்லாமாபாத் உடன்பட்டால் சரி. இல்லாவிடில் எமது அரசாங்கம் உலக சமூகத்திடம் இந்திய இராணுவத்தை பாக்கிஸ்தானுக்கு அனுப்புவது பற்றி ஒப்புதலைக் கேட்கும்." 2001-2002 ல் 10 மாதங்களுக்கு BJP தலைமையில் இருந்த NDA அரசாங்கம் பாக்கிஸ்தான் எல்லையில் மில்லியன் துருப்புக்களை திரட்டி நிறுத்தி, இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள எழுச்சிக்கு இஸ்லாமாபாத் அரசியல் மற்றும் தளவாடங்கள் உதவி அளிப்பதை நிறுத்தாவிட்டால் போர் வரும் என்று அச்சுறுத்தியது. ஆப்கானிஸ்தான் படையெடுப்பு ஆக்கிரமிப்பிற்கு ஒரு அச்சுறுத்துல் என்று கருதிய வாஷிங்டன் அழுத்தத்தை ஒட்டி NDA அரசாங்கம் இறுதியில் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.BJP, முகம்மது அப்சலை தூக்கிடுவதாகவும் உறுதி கொண்டுள்ளது. ஒரு காஷ்மீரி முஸ்லீமான இவர் டிசம்பர் 2001 அன்று இந்திய பாராளுமன்ற கட்டிடங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சதித்திட்டத்தில் பங்கு பெற்றவர் என்று கண்டறியப்பட்டுள்ளார்; அடிப்படை ஜனநாயக, நீதி உரிமைகளை மீறியதாக கூறி பல மனித உரிமைகள் குழுக்கள் விரைவாக நடைபெற்ற அந்த விசாரணையை கண்டித்துள்ளன. (See: India: Stop the state murder of Mohammed Afzal)தன்னுடைய தேர்தல் அறிக்கையில் BJP நீண்டகாலமாக உள்ள இந்து மேலாதிக்க வெற்றுப்பேச்சுக்களை மீண்டும் கூறியுள்ளது; இதில் அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தில் ஒரு இந்து கோயிலை கட்டும் உறுதிமொழியும், இந்திய அரசியலமைப்பின் 370வது விதி அகற்றப்படுதலும் உள்ளது; இது இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான காஷ்மீருக்கு இந்திய ஒன்றியத்திற்குள் சிறப்பு அந்தஸ்தை கொடுத்துள்ளது. 1991-1992 TM BJP இன் தற்போதைய பிரதம மந்திரி வேட்பாளராக இருக்கும் எல்.கே.அத்வானி, இந்து புராணக் கடவுள் இராமரின் "பிறந்த இடம்" என்று கூறப்படும் இடத்தில் ஒரு கோயில் கட்டுவதற்காக ஒரு தேசிய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்; இக்கிளர்ச்சி அந்த இடத்தில் இருந்த பாபர் மசூதியை தலைமை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தரைமட்டமாக்குவதில் முடிந்தது; இதைத்தொடர்ந்து 1947 பிரிவினைக்கு பின்னர் மோசமான கலகங்களின் அலை துணைக்கண்டத்தில் ஏற்பட்டது.இந்து தேசியவாத வலது பிரிவுகளுடைய பெரும் அதிர்ச்சியை காட்டும் வகையில் BJP 1999 மற்றும் 2004 தேர்தல்களில் அறிக்கைகள் ஏதும் விடவில்லை; இது அதன் இந்துத்துவ கருத்தியலுக்கு ஒத்துவராத NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கோபம் தரக்கூடாது என்ற கருத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு ஆகும். இந்து மேலாதிக்கவாத தளத்தை தற்போதைய தேர்தலில் அதிகப்படுத்தும் முயற்சியில், BJP அதன் அரசியல் விரோதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் கட்சியின் வேட்பாளராகிய வருண் காந்தியின் வேட்பு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை கடுமையாக நிராகரித்துவிட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து பேசிய உரையை காந்தி நிகழ்த்தியது வீடியோ நாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது; அதில் இந்துக்களை அச்சுறுத்தினால் அவர்கள் கைகள் வெட்டப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. BJP தலைமை இத்தகைய அறிக்கைகளை அளிக்குமாறு ஊக்கம் கொடுத்திருக்கலாம் என்று நம்ப தக்க காரணம் உள்ளது; அது தேசிய கவனத்தை காந்தியின் வம்சத்தை ஒட்டி ஈர்க்கும் என்று நினைக்கப்பட்டது (இவர் இந்திரா காந்தியின் பேரன் ஆவார், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மேலாதிக்கம் செலுத்தும் நேரு-காந்தி மரபின் விரோதப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்.) எப்படியும், அத்வானியும் மற்ற BJP தலைவர்களும் வகுப்புவாத அழுத்தங்களை தூண்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காந்தியை ஒரு தியாகி போல் சித்தரிக்க முயன்றுள்ளனர். வருண் காந்தியை ஜெயப் பிரகாஷ் நாராயணுடன் ஒப்பிடும் அளவிற்கு அத்வானி சென்றுள்ளார்; அத்தலைவர் 1942 இந்தியாவை விட்டு வெளியேறு போராட்டத்தில் புகழ் அடைந்தவர், பெரும் தன்னார்வத்துடன் சோசலிச தலைவராக இருந்து 1975-75ல் இந்திரா காந்திக்கு எதிரான எதிர்ப்பிற்கு தலைமை தாங்கினார்; அப்பொழுது அவர் நெருக்கடிக்காலத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.2004TM BJP "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சார கோஷத்துடன் தேர்தலில் நின்றது; ஆனால் இந்திய உழைக்கும் மக்களால் தேர்தல்களில் முறியடிக்கப்பட்டது; மக்களைப் பொறுத்தவரையில் NDA தொடர்ந்திருந்த முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்கள் மக்களின் கஷ்டங்களையும் பொருளாதார பாதுகாப்பற்ற தன்மையையும் அதிகப்படுத்தி இருந்தன. இப்பிரச்சாரத்தில் BJP பெருவணிகம், செல்வந்தர்களின் கட்சி என்று முற்றிலும் நியாயமாகக் கருதப்படும் தன் தோற்றத்தை மாற்றும் வகையில் ஜனரஞ்சக வாக்குறுதிகள் பலவற்றை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் கொடுத்திருந்த உறுதிமொழியான ஏழைக் குடும்பங்களுக்கு அதிக மலிவு விலையான மூன்று ரூபாய்க்கு 1 கிலோகிராம் என 25 கிலோகிராம் அரிசி அல்லது கோதுமை என்பதையும் மிஞ்சும் வகையில் BJP 36 கிலோகிராம் அரிசி அல்லது கோதுமை கிலோகிராம் 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளது. இதன் அறிக்கை மத்தியதர வகுப்பினருக்கு வரிக் குறைப்புக்கள் மற்றும் நாட்டின் பல மில்லியன் ஊழியர்கள் சிறு அல்லது குடும்ப சொந்த வணிகத்தில் உள்ள சில்லரை பிரிவு திறக்கப்படவும் வாக்குறுதி அளிக்கிறது, இது வெளிமுதலீட்டிற்கு பதிலாக வரும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சில்லறை விற்பனையாளர்கள் நுழைவு பல நடைபாதை விற்பனையாளர்கள், சிறு வணிகர்களுக்கு அழிவு தரும்; மேலும் இந்தியாவின் பல பெரிய சில்லரை விற்பனையாளர்களின் நிலையையும் பாதிக்கும். 1998ல் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு BJP, குறைந்த பட்சம் அதின் ஒரு பிரிவு ஸ்வதேசி (தேசிய) பொருளாதாரம் வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் BJP தலைமையலான NDA அரசாங்கம் இந்திய முதலாளித்துவத்தின் திட்டமான இந்தியாவின் தேசியக் கட்டுப்பாட்டுப் பொருளாதாரத்தின் எஞ்சிய பகுதிகளைக் கலைத்துவிட்டு இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்காக குறைவூதிய தொழிலாளர் திரட்டு அரங்காக மாற்றுவதை விரைவு படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து ஆக்கிரோஷமான முறையில் அமெரிக்காவுடன் ஒரு மூலோபாயப் பங்காளித்தனத்தை தொடர்வதும் அமெரிக்க-இஸ்ரேலிய-இந்திய அச்சு ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சியும் நடந்தது. கருத்துக் கணிப்புக்கள் (இந்தியாவில் இவை பலமுறை சரியாக இருப்பதில்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டதேயாகும்) இந்தியாவின் பெருகிய பொருளார நெருக்கடி மற்றும் "பதவியில் இருக்கும் அமைப்பிற்கு எதிர்ப்பு" என அழைக்கப்படும் காரணங்கள் இருந்த போதிலும்கூட, BJP பிரச்சாரம் மக்களைக் கவர்வதில் தோற்றுள்ளது என்றுதான் தெரிவிக்கின்றன. 2004 தேர்தல்களுக்கு பின்னர் NDA ஐ விட்டு வட்டாரக் கட்சிகள் கொண்ட பட்டியல் நீங்கிவிட்டன; இதில் ஜம்மு, கஷ்மீர் தேசியமாநாடு, தமிழ்நாட்டை தளமாக கொண்ட AIADMK, மேற்கு வங்கத்தை தளமுடைய திரணமூல் காங்கிரஸ் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைக் கொண்ட தெலுகு தேசக் கட்சி அல்லது TDP என்பவை அடங்கும்.மார்ச் மாதத் தொடக்கத்தில் பிஜு ஜனதா தளம் என்னும் கட்சி, இந்திய கிழக்கு கடலோரக் கரை மாநிலமான ஒரிஸாவை BJP கூட்டணியுடன் 11 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் கட்சி NDA வில் இருந்து விலகி ஒரு UPA பங்காளியான தேசிய காங்கிரஸ் கட்சி, மற்றும் இரு ஸ்ராலினிச கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்துள்ளது. இந்த உறவு நீக்கங்கள் BJPஐ குறிப்பிடத்தக்க நட்பு கட்சிகள் தொடர்பு இல்லாமல் செய்துவிட்டதுடன் பெரும்பாலான கிழக்கு, தெற்கு இந்தியப் பகுதிகளிலும் செயல்பாடு இல்லாமல் செய்துள்ளது. NDA ஐ விட்டு நீங்கியவை தாங்கள் விலகியதை நியாயப்படுத்தும் வகையில் BJP யின் இந்து மேலாதிக்கத் தன்மையை சுட்டிக் காட்டுகின்றன. உண்மையில் BJP உடன் அவை கொண்டிருந்த கூட்டு வாக்குகளை பெறுவதில் பெரும் சுமை என்றுதான் ஆயிற்று; அதுவும் முஸ்லிம் இன்னும் சில சிறுபான்மையினரிடம் இருந்து. ஆனால் NDA வைவிட்டு இவ்வாறு நீங்கியவர்கள் BJP உடன் தொடர்பை நீடிக்க விரும்புகின்றனர்; BJP அரசாங்கம் குஜராத்தில் 2002ம் ஆண்டு ஒரு கொடூரமான முஸ்லிம் எதிர்ப்பு படுகொலைக்கு தலைமை தாங்கியும் இந்நிலை தொடர்கிறது.BJP உடன் அவை முறித்துக் கொண்டுள்ளன என்றால் அது இழிந்த தேர்தல், அரசியல் காரணங்களுக்காகவாகும்; BJP மற்றும் அதன் NDA புது டெல்லிக்கு அதிகாரத்திற்கு விரைவில் வராது என்பது அவற்றின் கணக்கு ஆகும்.இன்னும் ஒரு கருத்தும் கூறப்பட வேண்டும். இந்த வலதுசாரி வட்டார, சாதித் தளத்தைக் கொண்ட கட்சிகளில் சில NDA உடன் முறித்துக்கொள்ளத் தயாராக இருந்தன என்றால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் இடது முன்னணி இவற்றுடன் கூட்டு கொள்ள தயாராக உள்ளன மற்றும் இவற்றை "மதசார்பற்றவை" என ஆசீர்வதிக்க தயாராக உள்ளன, "மக்கள் சார்பு" கொள்கைகளை செயல்படுத்தும் எனக் கூறத் தயாராக உள்ளன. BJP உடனும் பின்னர் NDA உடனும் அரை டஜன் கட்சிகளுக்கும் மேலானவை கூட்டு சேர்ந்திருந்தன. இவற்றில் மிக முக்கியமானவை அசாம் கண பரிஷத், மகாராஷ்டிர, இந்து தீவிர வெறி உடைய சிவ சேனை, சீக்கிய வகுப்புவாத ஷிரோமனி அகாலி தளம் மற்றும் இந்தியாவின் புதைந்துவிட்ட சமூக ஜனநாயகக் கட்சியில் தோற்றங்களைக் கொண்டிருந்த ஐக்கிய ஜனதா தளம் என்பவை இருந்தன.2004 தேர்தல்களில் பெருவணிகம் NDA மீண்டும் வெற்றிபெற அதற்கு பெரும் ஆதரவாக இருந்தது. ஆனால் இன்று பெருநிறுவன இந்தியா காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வரவேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறது; ஏனெனில் அனைத்து இந்தியர்களுடைய கட்சி எனக்கூறும் இதன் எஞ்சிய கற்பனைகளை மற்றும் இடது முன்னணியுடன் இது செயல்படக்கூடிய தன்மை இவற்றை ஒட்டி பெருகும் பொருளாதார நெருக்கடி, சமூக அமைதியின்மை சூழலில் அதுதான் முதலாளித்துவத்தின் நலன்களை சிறந்து காக்கும் என நம்புகிறது.மேலும் ஆளும் உயரடுக்கிற்குள் BJP யின் இந்து தீவிர வெறியின் தளத்தின் கொந்தளிப்புத் தன்மை பற்றிய அச்சமும் உள்ளது; ஆனால் இது ஒன்றும் முக்கிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளை தீவிர வகுப்புவாத குஜராத் முதல் மந்திரியான நரேந்திர மோடியை இந்தியாவின் தலைவர் என்று பாரட்டுவதை நிறுத்திவிடவில்லை. பெருநிறுவன இந்தியாவிற்கு குறிப்பாக கவலை தருவது BJP காங்கிரஸ் தலைமையிலான UPA க்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் விசுவாசமான எதிர்க்கட்சியாக நடக்க மறுத்தது ஆகும். மாறாக BJP பலமுறையும் அரசாங்கத்தின் உறுதியை சீர்குலைக்கும் வகையில் வலது சாரித் தூண்டுதல்களைச் செய்துள்ளது; அவை தங்கள் வர்க்க நலன்களுக்கு மிகவும் முக்கியமானவை என்று பெருவணிகத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் கருதியும் அத்தகைய நிலை இருந்தது. இதற்கு மிக முக்கிய உதாரணம் BJP இந்திய அமெரிக்க சிவிலியன் அணுசக்தி உடன்பாட்டிற்கு நிலைத்த எதிர்ப்பைத் தெரிவித்தது ஆகும்; அதுவும் முன்பு BJP யே அத்தகைய உடன்பாட்டை வாஷிங்டனுடன் கொள்ள அது பதவியில் இருக்கும்போது விரும்பியது; அது மரபார்ந்த முறையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளுக்கு பரபரப்பான ஆர்வத்தைத்தான் காட்டியிருந்தது. இத்தேர்தல்களின் விளைவுகள் எப்படி இருந்தாலும், இத்தகைய பிற்போக்குத்தன, உறுதியற்ற இந்து மேலாதிக்க BJP அமைப்பு போன்ற அரசியல் முறை இந்தியாவின் அரசாங்கத்தை ஆறு ஆண்டுகள் வழிநடத்தியது, இன்னும் இந்தியாவின் இரண்டாம் தேசியக் கட்சியாக உள்ளது என்பது இந்திய முதலாளித்துவத்தின் தீவிர நெருக்கடி மற்றும் இந்திய ஜனநாயகத்தின் இழிந்த தன்மை, சிதைந்த தன்மை ஆகியவை பற்றி நிறையவே கூறுகிறது. |