World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காWhite House pushing GM toward bankruptcy வெள்ளை மாளிகை ஜெனரல் மோட்டார்ஸை திவால்நிலைக்கு தள்ளுகிறது By Jerry White திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் ஒபாமா நிர்வாகம் ஆக்கிரோஷமான முறையில் ஜெனரல் மோட்டார்ஸை திவால்நிலைக்கு தள்ளுகிறது என்று தகவல் கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகை திவால் பதிவு நீதிமன்றங்களை பயன்படுத்தி நூறு வயதான தொழில்துறை பெருமிதச் சின்னத்தை உடைத்து அதன் இலாபம் தரக்கூடிய பகுதிகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்க முனைகிறது. இதற்கிடையில் நிர்வாகத்தின் விருப்பமற்ற சொத்துக்களான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய கட்டாயச் செலவுகள், நீடிக்கும் திவால் நடவடிக்கைகளில் கரைக்கப்பட்டுவிடும். "ஜூன் 1ம் தேதி காலக் கெடுக்குள் திவால் பதிவு செய்வதற்கான அடிப்படை வேலையைத் தயாரிக்குமாறு நிதி அமைச்சரகம் ஜெனரல் மோட்டார்ஸை கேட்டுக் கொண்டுள்ளது; நீதிமன்ற பிடிக்கு வெளியே மறுசீரமைக்க முடியும் என்று GM ன் பகிரங்க உறுதி இருந்தபோதிலும் இது தான் நடக்கிறது என்று விவரங்கள் நன்கு அறிந்தவர்கள் கடந்த வாரம் கூறினர்" என்று செய்தித்தாள் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு இன்னும் கூடுதலான ஜெனரல் மோட்டார்ஸ் இன் பங்குச் சந்தை மதிப்பைக் குறைத்தது; திங்களன்று இது 16 சதவிகிதம் குறைந்து பங்கு ஒன்றுக்கு 1.71 டாலர் எனப் போயிற்று; திவால்தன்மையை இன்னும் நிகழக்கூடியதாகச் செய்கிறது. "363 விற்பனை" என்று அழைக்கப்படும் முறையின்கீழ் --அமெரிக்க திவால்தன்மை சட்டப் பிரிவு 363 பகுதியில் பெயரிடப்பட்ட பின்னர்-- நிர்வாகம் ஜெனரல் மோட்டார்ஸ் ஐ இரு நிறுவனங்களாக பிரிக்கும். புதிய "சிறப்பான" ஜெனரல் மோட்டார்ஸ், Chevrolet, Cadillac, Buick ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; கடைசி மாதிரி சீனாவில் பெரும் இலாபத்தை ஈட்டியுள்ளது. நிர்வாகம் பின் திவால்தன்மை நடவடிக்கையில் இரு வாரங்களுக்குள் ஈடுபடும்; கூட்டாட்சி நிதியின் 7 பில்லியன் டாலரில் 5 பில்லியன் டாலரை இதற்குப் பயன்படுத்தும் என்று, இத்திட்டம் பற்றி கடந்த வாரம் நன்கு அறிவிக்கப்பட்டிருந்த நபரை மேற்கோளிட்டு செய்தித்தாள் கூறியுள்ளது. "மாதிரிகள், ஆலைகள், சுகாதாரப் பாதுகாப்பு கட்டாயங்கள் போன்றவை உள்பட அதிகம் விரும்பப்படாத சொத்துக்கள், பழைய நிறுவனத்தில் வைக்கப்பட்டு, அந்நிறுவனம் பல ஆண்டு காலத்திற்குள் கரைக்கப்பட்டுவிடும்" என்று டைம்ஸ் கூறியுள்ளது. கடந்த வாரம் வெள்ளை மாளிகை ஜெனரல் மோட்டார்ஸ் இன் தலைமை நிறைவேற்று அதிகாரியான (CEO) ரிச்சார்ட் வாக்னரை --திவால் தன்மைக்கு எதிர்ப்பு கொடுத்ததாக கூறப்பட்டவர்-- கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டு அவருக்குப் பதிலாக, தலைமை செயல்பிரிவு அதிகாரியான Fritz Henderson ஐ நியமித்துள்ளது; வோல் ஸ்ட்ரீட் பகுப்பாய்வாளர்கள் இவர் இக்கருத்திற்கு ஆதரவாக உள்ளார் என கூறுகின்றனர். திவால்தன்மை அச்சுறுத்தல் என்பது ஜெனரல் மோட்டார்ஸ் இன் 60,000 மணிநேர ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 800,000 ஓய்வு பெற்றவர்கள் அவர்களுடைய வாரிசுகளிடம் இருந்து சலுகைகளை பறிப்பதற்கு முன்னோடியில்லாத வகையில் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் (UAW) கடுமையான ஊதியக் குறைப்பு, நலன்கள் வெட்டுக்களை மே 31க்குள் சுமத்த இயலாமற் போனால், பின்னர் ஒரு திவால் பிரிவு நீதிபதி அதைச்செய்வதற்கு நியமிக்கப்படுவார். அமெரிக்காவில் 21,000 வேலைகள் உட்பட 47,000 வேலைகள் அகற்றப்படல், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 14 ஆலைகள் மூடப்படல் மற்றும் ஊதியங்கள் மற்றும் பிற நலன்கள் 2010 அளவில் அமெரிக்காவில் ஜப்பானியருக்கு சொந்தமான நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கம் சாரா ஆலைகளில் உள்ள தொழிலாளர் தரங்களுக்கு குறைக்கப்படும் என்பது உள்பட, GM கொடுத்திருந்த மறுகட்டமைப்புத் திட்டங்களை, கடந்த மாதம் ஒபாமா நிர்வாகம் நிராகரித்தது. ஜனாதிபதி இத்திட்டம் போதுமான அளவிற்கு கட்டமைக்கப்படவில்லை என்று கூறி கார்த்தொழிலாளர்கள் "வேதனை தரக்கூடிய சலுகைகளை" அதிகம் கொடுக்க வலியுறுத்தினார். ஜனாதிபதியின் கார்ப்பிரிவு பணிக்குழு நிறுவனம் அனைத்துச் சூழ்நிலையிலும், இன்னும் கடுமையான பொருளாதார சரிவுக் காலத்தில்கூட, வோல் ஸ்ட்ரீட்டிற்கு "முதலீட்டிற்கு பொதுமான வருவாய்" கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் இருப்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப்படும் என்றார். ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தை (UAW) அதன் கடந்த கால செயற்பாடுகளுக்காக பாராட்டிய கார்ப்பிரிவு பணிக்குழு உறுப்பினர் Jared Bernstein, டெட்ரோயிட்டில் உள்ள WWJ Radio விடம் இன்னும் மிகக் கூடுதலான இழப்புக்கள், ஊதியம், பிற நலன் குறைப்புக்களும் தற்போதைய தொழிலாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். முந்தைய குறைப்புக்களிலேயே புதிய தொழிலாளர்களுக்கு மணிக்கு 14 டாலர் என்று குறைக்கப்பட்டது, "ஆழ்ந்த, முக்கியத்துவம் நிறைந்தது" என்றும் அவர் கூறினார். ஆயினும் கூட கடந்த கால குறைப்புக்கள் "புதிய தொழிலாளர்கள், புதிதாகச் சேர்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தியுள்ளது. கூடுதலான அனுபவம் வாய்ந்த, நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து அதிக ஆதாயம் அடையும் இன்னும் ஏராளமான பழைய தொழிலாளர்கள் உள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டு இக்கடந்தகால நலன்களும் அகற்றப்பட வேண்டும் என்றார். இத்தகைய தாக்குதலின் எதிரே UAW முழு மெளனம் சாதிக்கிறது. திரைக்குப் பின்னால், UAW அதிகாரத்துவம் அதன் உறுப்பினர்களின் -வேலைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் காப்பதற்கு அல்ல, மாறாக கார்த் தொழில் சிதைவில் தனக்கு என்ன ஆதாயத்தைப் பெற முடியும் என்பதில் ஆழ்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு சில தகவல்களின்படி, UAW "புதிய" ஜெனரல் மோட்டார்ஸ் இல் UMW மிகப் பெரிய பங்குதாரர்களை கொண்ட அமைப்பாக வெளிப்படக்கூடும் என்று தெரிகிறது; இது தொழிலாளர்கள் வேலைகள், ஊதியங்கள் நலன்கள் ஆகியவற்றை தகர்ப்பதின் மூலம் இலாபம் மற்றும் பங்கு விலைகளை உயர்த்துவதில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஒரு நேரடி நிதியப் பிடிப்பை வழங்குகிறது. [See "The UAW's silence"] மேலும் UAW ஜெனரல் மோட்டார்ஸ் இன் திவால் தன்மையை விரும்புகிறது என நம்புவதற்கு காரணம் உண்டு. இவ்விதத்தில் அது உறுப்பினர்களுக்கு இன்னொரு சலுகை ஒப்பந்தத்தைக் கொண்டு வர தவிர்க்கக்கூடும், அது அனைத்து கீழ்மட்ட தொழிலாளர்களின் வாக்கால் தோற்கடிக்கப்படக் கூடும். மேலும் UAW தலைமை திவால் பிரிவு நீதிபதியைக் குறைகூறி சலுகைகள் இழப்பிற்கான பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும். UAW ஊதியங்கள், பிற நலன்கள் மற்றும் பணி விதிகளில் குறைப்புக்கள் பற்றி ஏற்கனவே ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொழிற்சங்கத்தின் ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்பு நிதியத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய கட்டணங்கள் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கோரிக்கையை அது எதிர்க்கிறது.2007TM UAW புதிதாக எடுக்கப்படும் தொழிலாளர்களின் ஊதியங்களை பாதியாகக் குறைக்க ஒப்புக் கொண்டு GM, Ford, Chrysler ஆகியவற்றிற்கு பல பில்லியன் டாலர்கள் ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்புக் கட்டாயங்களில் இருந்து விடுவித்து அதற்கு ஈடாக தொழிற்சங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அறக்கட்டளை நிதி, Voluntary Employees' Beneficiary Association VEBA வைப் பெற்றது. ஜெனரல் மோட்டார்ஸ், UAW நிதியத்திற்கு $20 பில்லியன் கொடுக்க வேண்டும். கடந்த மாதம் ஜெனரல் மோட்டார்ஸ், UAW இடம் $10 பில்லியனை சிறப்பு பங்குகளாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு 9 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும் என்றும் $10 பில்லியன் ரொக்கம் படிப்படியாக 20 ஆண்டுகளில் கொடுக்கப்படும் என்றும் முன்மொழிந்தது. JP Morgan Chase அறிக்கை ஒன்றின்படி, ஜெனரல் மோட்டார்ஸ் இன்னும் கடினமான பேரத்தை இந்த வாரம் UAW விற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சரின் கார்ப்பிரிவு பணிக்குழு ஜெனரல் மோட்டார்ஸ் UAW க்குக் கொடுக்க வேண்டிய கடன்களில் பாதிக்கும் மேலானவற்றை கொடுத்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. Business Week குறிப்பிடுவதாவது: "இதன் பொருள் ஜெனரல் மோட்டார்ஸ், தொழிற்சங்கத்தை மிச்சம் இருக்கும் தொழிற்சங்க சுகாதாரப் பாதுகாப்பு சுமைகளில் பாதிக்கும் மேலானவற்றை பங்குகளில் கொள்ளவேண்டும் என விரும்புகிறது."உயர்மட்ட UAW அதிகாரிகள் --வோல் ஸ்ட்ரீட் நிறுவனம் Lazard ஆலோசனைக்கு உட்பட்டவர்கள்-- VEBA வைத்தான் முதலீட்டு வருவாயில் சிறந்த பகுதியைக் கொடுக்கும் என்று நம்பியிருந்தனர்; அது கார்த்தொழில் சரிவினால் விளையும் கட்டண வருவாய்களை ஈடு செய்துவிடும் என்றும் நினைத்தனர். மேலும் VEBA விற்கு நிதி கொடுத்தல் என்பது, அதுவும் கிட்டத்தட்ட எந்த உபயோகமும் இல்லாத பங்குகள் மூலம் என்பது, எண்பது வருடங்கள் நீடிக்கும் என்று தொழிற்சங்கம் நம்பியிருந்த அறக்கட்டளை விரைவில் பணம் இல்லாத நிலைக்கு வந்துவிடும் என்பதை உறுதியாக்கிவிடும். இதன் பொருள UAW, ஜனவரி 2010ல் ஓய்வூதிய நலன்கள் பிரிவை எடுத்துக் கொள்ள இருப்பது, இப்பொழுது ஆயிரக்கணக்கான UAW ஓய்வு பெற்றவர்கள் அவர்களுடைய கணவன்/மனைவி ஆகியோருடைய மருத்துவப் பாதுகாப்பைப் பெரிதும் குறைப்பதற்கு பொறுப்பாகும். சுகாதார பாதுகாப்பு நலன்களை தகர்ப்பதைத் தவிர, அரசாங்கம் ஓய்வூதியங்களிலும் தீவிரக் குறைப்பை கோருகிறது. திவால் தன்மையின்படி, ஒரு நீதிபதி ஜெனரல் மோட்டார்ஸ் ஐ ஒய்வூதியங்களை நிறுத்திவிட்டு அதன் பொறுப்புக்களை அரசாங்க ஓய்வூதிய நலன் உத்தரவாத நிறுவனத்திற்கு கொடுத்துவிடுமாறு அனுமதிக்கலாம்; பிந்தையது ஏற்கனவே பல பில்லியன் டாலர் பற்றாக்குறையில் உள்ளது. அத்தகைய நிலை ஓய்வூதியம் பெறும் பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பெரிதும் குறைத்துவிடும். கார்த் தொழிலாளர்களில் கடந்த கால ஆதாயங்களை அழித்து அதை ஒரு முன்னோடியாகப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவின் வாழ்க்கைத் தரங்களின்மீதும் கடுமையான தாக்குதலை நடத்த விழையும் மிகச் சக்தி வாய்ந்த நிதிய உயரடுக்கின் பிரிவுகளுக்காக ஒபாமா நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கார்த் தொழிலைத் தகர்ப்பது என்பது --இது வோல் ஸ்ட்ரீட்டிற்கு இன்னும் பெரும் செல்வக் கொழிப்பைக் கொடுக்கும்-- ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதார "மீட்பு" திட்டத்தின் ஒரு பகுதி என்பதில் சந்தேகம் இல்லை; இது தொழிலாள வர்க்கத்தை வறியதாக்கும் வகையில், அமெரிக்க நிதிய பிரபுத்துவத்தின் செல்வக் கொழிப்பை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கார்த் தொழிலாளர்கள் கடுமையாக ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். பிரையனும் அவருடைய சகோதரரான டானும் உலக சோசலிச வலைத் தளத்திடம் டெட்ரோயிட்டிற்கு வடக்கே உள்ள Pontiac Truck and Bus ஆலையில் பேசினர். 54 வயதான பிரையன் 18 வயதிலேயே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், கடந்த 36 ஆண்டுகளாக கார்த் தொழிலாளியாக உள்ளார். அவருடைய சகோதரர் அதற்கு நான்கு மாதங்களுக்கு பின்னர் சேர்ந்தார். பிரையன் கூறினார்: "இந்த ஆலையில் என்ன நடக்கவுள்ளது என்பது பற்றி எங்களுக்கு கூறப்படவில்லை; சில வதந்திகள் உள்ளன, ஆனால் சங்கத்திடம் இருந்து தகவல் ஏதும் இல்லை. ஒபாமா இன்னும் சலுகைகளை விரும்புகிறார். ஆனால் கடந்த 3-4 ஒப்பந்தங்களில் நாங்கள் பல இழப்புக்களைத்தான் கொண்டுள்ளோம், குறைந்த பட்சம் 12 ஆண்டுகளுக்கு. ஆனால் மக்களுக்கு நாங்கள் எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்துள்ளோம் என்பது தெரியவில்லை" என்று அவர் தொடர்ந்து கூறினார். ஜெனரல் மோட்டார்ஸ் இன் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி ரிச்சார்ட் வாக்னர் 147,000 வேலைகளை ஏழு ஆண்டு காலத்தில் அகற்றிவிட்டார் என்பதைக் குறிப்பிட்ட அவர் கூறியது: "இது அரசாங்கத்திற்குப் போதவில்லை. அரசாங்கம் இன்னும் கூடுதலான வேலை வெட்டுக்களை இப்பொழுது விரும்புகிறது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தை பெரிதும் தாக்குவதற்கு விரும்புகின்றனர். புஷ் நிர்வாகம் அதை எட்டு ஆண்டு காலமாக செய்து வந்தது, இப்பொழுது ஒபாமா அதைச் செய்கிறார்." அவர் தொடர்ந்தார்: "அவர்கள் எங்களிடம் கூறுகின்றனர், 'உங்கள் ஒப்பந்தம் செல்லத்தக்கது அல்ல என்று'. அதை ஏற்பது கடினம். தாங்கள் விரும்பும் வகையில் எங்கள் ஒப்பந்தத்தை எப்படியும் மாற்ற விரும்புகின்றனர். சராசரித் தொழிலாளர் ஒபாமாவிற்கு ஆதரவு கொடுத்தனர். இப்பொழுது அவர் அதனை உதறிவிட்டு, தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய விரும்புகின்றார்." "தொழிற்சங்கத்தினர் நகரத்தில் நல்ல இடங்களில் வசதியாக வசிக்கின்றனர். அவர்கள் சிறந்த கார்களை ஓட்டுகின்றனர், தங்கள் வேலைகளுக்கு பாதுகாப்பை விரும்புகின்றனர். அதுதான் அவர்களுக்கு முக்கியமாக உள்ளது." WSWS இடம் ஒரு இளம் தொழிலாளி Jeff கூறினார்: "UAW இதில் இருந்து ஏதேனும் ஆதாயத்தை அடையும். ஒரு கணத்தில் அவர்கள் எங்களை விற்றுவிடுவர். இதைத் தடுக்க ஒரு போராட்டம் அமைப்பது சிறந்தது; ஆனால் தொழிற்சங்கம் "அவ்வாறு செய்யாதீர்கள்" என்கிறது. அவர்கள் எங்கள் நலன்களைக் காக்கவிலலை."ஒபாமா தான் உறுதி கூறியது போல் பிணை எடுப்பு கொடுக்கிறார். அவர்கள் UAW தொழிலாளர்களை இலக்கு கொள்ளுகின்றனரே அன்றி உயர்மட்ட நிர்வாகிகளை அல்ல. வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் இன்னும் எப்பொழுதும் போல் தமக்குரிய பணத்தைப் பண்ணிக் கொண்டுதான் உள்ளனர். அவர்கள் இந்த நாட்டை மிக அதிக அளவு கொள்ளை அடித்தவர்கள்; அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கவலை இல்லை. AIG நிர்வாகிகள் ஒப்பந்தத்தைத் தொடாதீர்கள் என்று அவர்கள் கூறினர்; அவர்களுக்கு போனஸ் கொடுக்கப்பட்டது, அப்படியானால் எங்கள் ஒப்பந்தம் என்ன ஆவது?' |