WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
The looting of America
அமெரிக்கா சூறையாடப்படல்
By Barry Grey
10 April 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
வியாழனன்று நியூயோர்க் டைம்ஸ் ஒரு முதல் பக்கக் கட்டுரையை வெளியிட்டது.
அது ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதார "மீட்பு" கொள்கைகளினால் ஆதாயம் பெறும் பொருளாதார, வர்க்க
நலன்களைப் பற்றி அது இன்னும் கூடுதலான உட்பார்வையைத் தருகிறது.
"சிறு முதலீட்டாளர்கள் வங்கி பிணை எடுப்பில் சேர்க்கப்படலாம்" என்ற தலைப்பில்
வந்துள்ள கட்டுரை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட "பொது-தனியார் முதலீட்டுத் திட்டம்" என அழைக்கப்படுவதில்
கட்டமைப்பு பற்றி நிர்வாகத்திற்கும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் விவாதங்களை
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதையொட்டி ஓரளவு மத்தியதர வருமானம் உடைய மக்களும் திட்டத்தில் முதலீடு செய்யமுடியும்.
அதன் நோக்கம் பொதுமக்கள் இழப்பில் வங்கிகள் தங்கள் விற்கமுடியாத சொத்துக்களை சுமை இறக்கிவிட முடியும்.
இத்திட்டம் மார்ச் 23 அன்று நிதி மந்திரி டிமோதி கீத்னரால் அறிவிக்கப்பட்ட
போது, அது பங்குச் சந்தைகளில் மாபெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. அரசாங்கம் முதலீட்டில் 95 சதவிகிதம்
அளிக்கும் என்றும், அனைத்து இழப்புத் திறன்களுக்குக் காப்பீடு கொடுக்கும் என்றும், வங்கிகளின் கடன்களை உயர்த்தப்பட்ட
விலைகளில் வாங்கத் தயாராக இருக்கும் ஊக முதலீட்டு நிதியமைப்புகளும் இன்னும் பிற நிதிய நிறுவனங்களுக்கு
கிட்டத்தட்ட பெரும் இலாபங்களை உறுதியளிக்கும் என்றும் தெளிவானவுடன்
Dow Jones Industrial Average 497
புள்ளிகளுக்கு உயர்ந்தது. வரிப்பணம் செலுத்தும் மக்கள் வோல் ஸ்ட்ரீட்டின் இலாபங்களை உறுதியளித்துவிட்டு அனைத்து
இழப்பு ஆபத்துக்களையும் கிட்டத்தட்ட தாங்களே பொறுத்துக்கொள்வர்.
வியாழனன்று வந்துள்ள டைம்ஸ் கட்டுரை சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த
திட்டத்தை அளிப்பது என்பது உண்மையில் பொதுக் கருவூலத்தை நிதியப் பெரும் சரிவிற்கு காரணமான அதே வங்கியாளர்கள்
மற்றும் ஊக வணிகர்களுடைய ஆதாயத்திற்காக சூறையாடும் திமிர்த்தனமான திட்டத்திற்கு ஒரு "ஜனநாயகப் பூச்சு"
கொடுக்கபட்டுள்ள வழிவகை என்று குறிப்புக் காட்டுகிறது. வெளிப்படையாக ஒரு முரண்பாட்டை காணாத நிலையில்,
கட்டுரை பிணை எடுப்பு நடவடிக்கைகள் திட்டத்தில் இருந்து நலன்களைப் பெற இருக்கும் வோல் ஸ்ட்ரீட் உள்நபர்களுடைய
நெருக்கமான ஆலோசனையின் பேரில்தான் இயற்றப்படுகிறது என்பதையும் தெளிவாக்கியுள்ளது.
"BlackRock, PIMCO
உட்பட அமெரிக்காவிலுள்ள சில மிகப் பெரிய முதலீட்டு நிர்வாகிகள் நாட்டின் சிதைந்த நிதியச் சந்தைகளை மறு
கட்டமைப்பதற்கு அரசாங்கத்துடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர்" என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது.
இக்கட்டுரை BlackRock
ல் நிர்வாகியாக இருக்கும் Steven A. Buffico
வை, "பெரும் நபர்களுக்கு சமமாக அடுத்த மேசையில் உட்காரும் வாய்ப்பை தொழிலாள வர்க்கத்தினதும் சிறு
வர்த்தகர்களினதும் நபருக்கு கொடுத்துள்ளது" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. இது தொழிலாள வர்க்கமும்,
சிறிய வர்த்தகர்களும் இழப்புக்களை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்குமே அன்றி "பெரும் நபர்களுக்கு"
முக்கிய சொத்துக்களை எடுத்துக் கொண்டு இலாபங்களை பெறுவதற்குத்தான் உதவும்.
இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள அரசியல் கருத்துக்களால் பொது மக்களுக்கு
இலாபத்தில் ஒரு பங்கை சேர்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
கருவூலம், மத்திய வங்கிக் கூட்டமைப்பு மற்றும் மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனத்துடன் தங்கள் பங்காளித்துவம்
இரட்டை இலக்க இலாபங்களை அவர்கள் எதிர்பார்த்தபடி கொடுக்கிறது என்றாலும்
AIG
நிர்வாகிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டபோது எழுந்த மக்கள் சீற்றம் வெடிப்பு போல்
இதற்கும் தோன்றலாம் என்ற எச்சரிக்கையுடன்தான் ஊக முதலீட்டு நிதிய மேலாளர்கள் உள்ளனர். இது
அவர்களுடைய போட்டித்தன்மையைக் குறைக்கும், வருமானங்களில் அதிக வரிகளை ஏற்படுத்தக் கூடும், மற்றும்
இதேபோல் பொறுத்துக் கொள்ள முடியாத குறுக்கீடுகள் இருக்கும் என்று அஞ்சுகின்றனர்.
இன்னும் முக்கியமானவை உறுதியான வணிக கணிப்பீடுகளாகும். பரந்த பொதுமக்களுக்கு
திட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்பைக் கொடுத்த நிலையில், கருவூலம் திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுத்துள்ள
தனியார் நிறுவனங்கள் முதலீட்டாளர் கட்டணங்களில் இருந்து அவர்கள் பெறும் இலாபங்களை பெருமளவில்
அதிகரித்துக்கொள்ளலாம். "முதலீட்டு நிர்வாகிகளுக்கு கிடைக்கக் கூடிய நலன்களின் திறன் அதிகம். இந்த பெரு
நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் பங்கு பெறுவதற்கு தக்க கட்டணங்களை வசூலிக்க முடியும்" என்று டைம்ஸ்
எழுதியுள்ளது.
டைம்ஸ் கொடுத்தள்ள சுருக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பத்தி உள்ளது: "ஒரு
தொழில்துறை அதிகாரி பயன்படுத்தும் தவறுகளை எடுத்துக்காட்டும் முறை அமெரிக்கா தவிர்க்க வேண்டிய
ஒன்றாகும். அது மிக அதிக அளவில் 1990களில் ரஷ்யாவில் நடந்த பெரிய இடங்களில் தொடர்புள்ள தன்னலக்
குழுவினரின் (Oligarchs)
கைகளில் முழுத்தொழிற்துறையும் சென்ற தனியார்மயமாக்கம்போல் இருக்கக் கூடாது. அந்த அனுபவம் ரஷ்யாவில்
தடையற்ற சந்தை முதலாளித்துவக் கருத்தை இழிவிற்கு உட்படுத்தி, சந்தைப் பொருளாதரத்தின்புறம் செல்ல
வேண்டிய நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது."
அரசியல் மற்றும் வரலாற்றளவு சூழ்நிலையில் பல வேறுபாடுகள் இருந்தபோதிலும்கூட,
முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர் மற்றும் அவர்கள் உள்நாட்டு குண்டர்கள் மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்திய
நண்பர்கள் சோவியத் சமூகத்தைக் கொள்ளை அடித்ததற்கும் அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியில் தற்பொழுது
வோல் ஸ்ட்ரீட் மற்றும் அதன் ஒபாமா நிர்வாகத்தின் அரசியல் கருவிகள் அமெரிக்க நிதிய பிரபுத்துவத்தை இன்னும்
கொழிப்பு அடையச் செய்வதற்கு பற்றி எடுத்துக் கொண்டதற்கும் சமாந்தரங்கள் இருக்கின்றன. உண்மையில் இதைச்
செய்பவர்களுக்கு தாங்கள் அதே போன்ற --இன்னும் அதிகமான-- கொள்ளைச் செயல்களில் ஈடுபடுகிறோம்
என்பது முழு உணர்வுடன் நன்கு தெரியும்.
செயற்பாட்டின் அளவு மற்றும் தன்மை இந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில்
வந்துள்ள மற்றொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. டைம்ஸின் நிதித்துறை எழுத்தாளர்
Andrew Ross Sorkin
எழுதி செவ்வாயன்று வந்துள்ள கட்டுரை புதிய பிணை எடுப்புத் திட்டத்தில் மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனத்தின் (FDIC)
பங்கு பற்றி கவலை கொண்டுள்ளது.
மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனம் 76 ஆண்டுகளுக்கு முன்னால் பெரு மந்த நிலை
ஆழ்ந்த காலத்தில் துவக்கத்தில் $5,000 வரை வங்கிகளில் சிறு சேமிப்பாளர்களுக்கு அரசாங்க உறுதி
அளிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்றும், இப்பொழுது $250,000 வரை அளிப்பதற்காகவும் கட்டுரை
துவங்குகிறது. பின்னர் மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனம் எப்படி விற்கப்படமுடியாத சொத்துக்களை விற்பனை
செய்யும் ஒபாமா நிர்வாகத்தின் திட்டத்தின்கீழ் எப்படி மாறியுள்ளது என்பதைக் கீழ்க்கண்ட விதத்தில் கூறுகிறது:
"நிதி அமைச்சரகம் கொடுக்கும் கடன்களில் 85 சதவிகிதத்திற்கு இது காப்பீடு
கொடுப்பது போல் செயல்படும். தனி முதலீட்டாளர்கள் விற்கப்படமுடியாத சொத்துக்களை தாங்கள் வாங்குவதற்கு
உதவித்தொகையாக இதைப் பயன்படுத்துவர்."
வேறுவிதமாகக் கூறினால், மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனத்தின் செயல் முறையான
வங்கிகளில் சேமிப்பிலிடும் சிறு சேமிப்பாளர்களுக்கு அரசாங்க உத்தரவாதம் கொடுப்பதில் இருந்து பல மில்லியன்
முதலீடு செய்யும் நிதி மேலாளர்களுக்கு உத்தரவாதம் கொடுத்தல் என்று மாறிவிட்டது. இந்த செயற்பாடும்,
கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது போல், காங்கிரசில் வாக்கெடுப்பு நடத்தாமல் செய்யப்படுகிறது.
மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனம் வங்கிகளின் மோசமான கடன்களுக்கு அரசாங்க
மறைப்பு என்ற விதத்தில் ஏற்பட்டுள்ள புதிய கட்டாயங்களை ஒட்டி $ 1 டிரில்லியனுக்கும் மேலாகக் காப்பீடு
கொடுக்கும். ஆனால் மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனத்தின் கட்டாய நெறிகள் இது $30 பில்லியன் வரைதான்
காப்பீடு கொடுக்கலாம் என்று வரம்பு கட்டியுள்ளன. "ஒரு முக்கியமான பத்திரங்கள் பிரிவு வக்கீல்கள் குழு,
அவர்கள் சட்டத்தின் எழுத்தை முறிக்கவில்லை என்றாலும், அதன் உயிரை முற்றிலும் பொருட்படுத்தவில்லை என்று
கூறியதாக" டைம்ஸ் கட்டுரை தெரிவித்துள்ளது.
இந்த மீறலை அரசாங்கம் எப்படி நியாயப்படுத்துகிறது? மத்திய வைப்பு காப்புறுதி
நிறுவனம் எடுத்துக் கொண்டிருக்கும் கடமைப்பாடுகளை பண மதிப்பில் என்று இல்லாமல் "எதிர்பாரா சுமைகள்"
என்று மதிப்பிட்ட வகையில் இது கணக்கிடப்படுகிறது. அதாவது மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனம் குறிப்பிட்ட பரந்த
கடனை வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கொடுப்பதில் எவ்வளவு இழக்கக்கூடும் என்பதைக் கணக்கில் கொள்ளுகிறது
(இது மீண்டும் வராத கடன்கள் வகையில் இருக்கும். அதாவது தங்கள் கடனுக்கு எந்த உறுதியும் கொடுக்காத
நிறுவனங்கள், அவை வாங்கியுள்ள விற்கமுடியாத சொத்துக்களுக்கு இருப்பதாகக் கூறப்படும் மதிப்பும் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படும்.)
பின் இந்த "எதிர்பாரா சுமைகள்" உடைய மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
Sorkin
எழுதுகிறார்: "நாம் இழப்புக்கள் என்று எதையும் காட்டவில்லை என்று இதன்
தலைவர் ஷீலா பையர் என்னிடம் ஒரு பேட்டியில் கூறினார். பூஜ்யமா? உண்மையிலேயா? " எங்கள் கணக்காயர்கள்
நிகர இழப்புக்கள் ஏதும் இல்லை என்று கையெழுத்திட்டுள்ளனர்" என்று அவர் கூறினார். (இது ஒருவிதத்தில் கடன்வாங்கிய
தொப்பியின் கீழ் நிற்பது போல் ஆகும்.)'
இத்தகைய வியத்தகு காரணம் கூறலுக்கு என்ன முக்கியத்துவம்? இதுதான்: ஒபாமா
நிர்வாகம், நிதிய உயரடுக்கின் செல்வம், அதிகாரத்தைக் பாதுகாப்பதற்காக பாரிய வகையில் முதலில்
பொருளாதார பேரழிவிற்கு வகை செய்த கணக்கு மோசடி, பொறுப்பற்ற திரித்தல் முறை ஆகியவற்றைத் தானே
கையாண்டு அவர்களுக்கு நேரடியாக உதவும் வகையில் செயல்படுகிறது.
இத்தகைய கொள்கை முறைக்கு எவர் விலை கொடுப்பது? ஒபாமாவின்
கார்த்தொழிற்துறை பிரிவு (Auto Task Force)
கோரியுள்ள அமெரிக்காவின் கார்த் தொழில் தகர்ப்பு மற்றும் பெரிதும் எஞ்சியிருக்கும் தன்மையின் குறைப்பு
ஆகியவற்றுடன் எஞ்சியிருக்கும் ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வறுமைத்தர ஊதியங்கள்
கொடுக்கப்படுதலுடன் இணைந்து, ஓய்வூதியம் பெற்றவர்களின் ஓய்வூதியம், சுகாதார நலன்கள் தூக்கி எறியப்படுதல்
ஆகியவற்றில் விடையைக் காண முடியும். மேலும் நிர்வாகம் சமூகநலத் திட்டஙகளை தகர்ப்பதாகக் கூறியிருக்கும்
உறுதியும் உள்ளது. இதில் மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு ஆகியவையும் அடங்கியுள்ளன.
நிர்வாகத்தின் "மீட்புத் திட்டம்" நிதியப் பிரபுத்துவத்தின் செல்வங்களைக்
பாதுகாக்கும் அதிக மறைப்பு இல்லாத திட்டம்தான். அவர்களின் நலன்களைத்தான் தொழிலாள வர்க்கத்தின் மீது
வறுமை மற்றும் சமூக வறிய நிலையைச் சுமத்துவதின் மூலம், இது பிரதிபலிக்கிறது.
|