WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
Obama stages surprise visit amid renewed bloodshed in Iraq
ஈராக்கில் புதுப்பிக்கப்பட்ட இரத்தக்களரிக்கு மத்தியில் ஒபாமா திடீர் விஜயம்
By Bill Van Auken
8 April 2009
Use this version to
print | Send
this link by email | Email
the author
செவ்வாயன்று பிற்பகல் முன்கூட்டி அறிவிக்கப்படாத வருகை ஒன்றை பாக்தாத்திற்கு
ஜனாதிபதி பாரக் ஒபாமா மேற்கொண்டார். தொடர்ச்சியான கார்க்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் சுன்னி
போராளிகள், மற்றும் ஈராக்கி பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெறும் புதுப்பிக்கப்பட்ட போர்கள்
என்று ஈராக் மீதான அமெரிக்க நவ-காலனித்துவ முறையிலான செயல்கள் "வெற்றி" என்ற கூற்றுக்களை
முரண்பாடாக்கும் வகையில் நடைபெற்றும் வருகின்றன.
அமெரிக்க அரசாங்கம் மற்றும் செய்திஊடகம் ஊக்கம் கொடுக்கும் இத்தகைய கூற்றுக்கள்
ஒபாமா வருகையை சூழ்ந்திருந்த அசாதாரண இரகசியம் மற்றும் பாதுகாப்பினால் பொய்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
ஜோர்ஜ் டபுள்யூ புஷ் சமீப ஆண்டுகளில் அந்நாட்டினுள் இரகசியமாக புக நிர்ப்பந்திக்கப்பட்டதுபோல்தான் ஒபாமாவின்
வருகையும் இருந்ததுடன், விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் அமெரிக்க இராணுவத்தளமான
Camp Victory
ஐ தாண்டியும் அவர் செல்லவில்லை.
பாக்தாத்தின் பலத்த கோட்டையான பசுமைப் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் ஈராக்கிய
பிரதம மந்திரி நூரி அல் மாலிக்கியுடன் நடைபெறவிருந்த ஒரு திட்டமிட்ட கூட்டம் ஒரு சிறிய மண்புயலால் இரத்து செய்யப்பட்டது
என்று நிருபர்களுக்கு கூறப்பட்டது. இதற்குக் காரணம் சற்று வலுவழிந்துவிட்ட புயல்வந்ததுதான் என்று கூறப்பட்டது.
பாதுகாப்புக் காரணங்கள்தான் உண்மையில் ஒபாமாவை இந்த பயணத்தை மேற்கொள்ளுவதை தடுத்து நிறுத்தியதா
என்பது தெளிவாக இல்லை. அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதியை ஈராக்கிய தலைநகரத் தெருக்கள்
வழியே அழைத்தும் செல்லுவதை உறுதியுடன் தடுத்து விட்டனர் என்பது உறுதி. இறுதியில் மாலிகி
Camp Victory
க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஒபாமாவுடன் பயணிக்கும் செய்தியாளர்களில் ஒருவரான
Newsweek
உடைய Holly Bailey,
விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க தளத்திற்கு சென்ற சிறிது தூரத்தைப்
பற்றி விளக்கினார். "மோட்டார் வாகனங்களின் இறுதியில் குறைந்த உயரத்தில் பறக்கும் கறுப்பு ஹெலிகாப்டர்கள்
இருந்தன; வாகனங்கள் ஐந்து மைல் பயணத்திற்கு பின்னர் தூசி படிந்த சாலையில்
Camp Victory
ஐ அடைந்தன. எல்லா திசைகளிலும் முழுமையான பேரழிவைத்தான் காணமுடிந்தது. முறிந்துகிடக்கும் மரங்கள்,
கட்டிடங்களாக ஒரு காலத்தில் இருந்து இப்பொழுது மங்கிய செங்கற்களாகவும் கூளங்களாக கிடந்தன.
வெறுமைதான் படர்ந்திருந்தது. நிலவின் பகுதி போல் ஒரே தூசியாக இருந்தது."
விஷேட வசதிகளுடனான வாகனங்களுக்குள் (SUV)
நுழையுமுன் குண்டுவீச்சு நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது
பற்றி நிருபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
எட்டு நாட்கள் ஐரோப்பா மற்றும் துருக்கிப் பயணங்களின் முடிவில் இந்த நான்கு மணி
நேர வருகை நடந்தது. அவற்றில் அமெரிக்க ஜனாதிபதி ஐரோப்பிய சக்திகள் தன்னுடைய உதவிக்கு ஒருங்கிணைந்த
நிதிய ஊக்கப் பொதித் திட்டங்களுடனும் ஆப்கானிஸ்தானியப் போருக்கு அதிகப் படைகளும் கோரியவை வெற்றி
அளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை இலக்கு கொள்ளும் அமெரிக்க
இராணுவத்தின் விரிவாக்கம் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்கும்போது,
ஜனாதிபதி அங்கு ஏன் செல்லவில்லை என்ற வினாக்கள் எழுந்தன. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்
கொடுத்த விடை காபூலை விட பாக்தாத் துருக்கிக்கு அருகில் உள்ளது என்பதாகும்.
இந்தச் சுருக்கமான பயணம் புவியியில் ரீதியாக அருகில் இருக்கும் தன்மையை விட
கூடுதலான காரணிகளால் உந்தப்பெற்றதுடன், அமெரிக்க துருப்புக்களுடன் புஷ் மாதிரியில் புகைப்படம் எடுத்துக்
கொள்ளும் விருப்பமும் இருந்தது. அமெரிக்கா இங்கிருந்து ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை மாற்றும் தயாரிப்பில்
இருக்கையில் தனியான மூடப்பெற்ற கதவுகளுக்குப் பின் நடந்த ஒபாமா, மாலிகி மற்றும் ஈராக்கிய ஜனாதிபதி
ஜலால் தாலிபானி கூட்டங்கள் ஈராக்கில் இருக்கும் நிலைமையை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தைக்
கொண்டிருந்தன.
மாலிகியுடன் பேசிய பின்னர், ஒபாமா நிருபர்களிடம் நாட்டின் பல பிரிவுகளையும்
ஒன்றுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஈராக்கிய ஆட்சிக்கு "வலுவாக ஆதரவு" கொடுத்துள்ளதாக கூறினார்.
இதில் அரசாங்கத்திலும் அதன் பாதுகாப்புப் பிரிவுகளிலும் சுன்னி சிறுபான்மை உறுப்பினர்கள் இணைக்கப்படுதலும்
அடங்கியுள்ளது.
தன்னுடைய பங்கிற்கு மாலிகி கூறினார்: "பாதுகாப்புப் பிரிவில் அனைத்து
முன்னேற்றங்களும் தொடரப்படும் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் வாக்குறுதி அளித்தோம்."
இந்த வாக்குதியின் மீது சந்தேகம் கொள்ள நியாயமுள்ளது. பென்டகனும் ஈராக்கிய
அரசாங்கமும் கடந்த சில மாதங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க போர் ஆக்கிரமிப்பு தொடங்கியதில்
இருந்து மிகக் குறைவான ஆயுதமேந்திய வன்முறையைக் கண்டுள்ளது என்று கூறிக் கொண்டாலும், தாக்குதல்கள்
நீடித்துள்ளன. கடந்த மாதத்தில் வன்முறையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதுடன், மிக மோசமான தாக்குதல்கள்
ஒபாமா வருகைக்கு சற்று முன்னதாக நடத்தப்பட்டன.
திங்களன்று 3 டஜன் மக்கள் கொல்லப்பட்டு, 130 பேருக்கும் மேல் காயமுற்றனர்.
பாக்தாத்தின் வெவ்வேறு பகுதிகளில் 7 ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் குண்டுவீச்சுக்கள் எனக் கருதக் கூடியதில் இது
நடைபெற்றது. மிக மோசமான வெடிப்பு சதர் நகரத்தின் ஷியைட் சேரியில் நடந்தது. அங்கு கூட்டம் நிறைந்த
சந்தை ஒன்றில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு 10 பேரைக் கொன்று 65 பேரைக் காயப்படுத்தியது.
இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும் எனத் தோன்றுகிறது; ஏனெனில் வெடிப்பினால் ஏற்பட்ட காயங்களின்
தன்மை தீவிரமாக இருந்தன.
Air Force One பாக்தாத்தில்
தரையைத் தொடுவதற்கு சில மணி நேரம் முன்பு பாக்தாத் ஷியைட் மசூதியில் ஒரு குண்டும் மற்றொன்று
பல்லுஜாவிலும் வெடித்து குறைந்தது 11 பேரைக் கொன்றன.
இச்சமீபத்திய தாக்குதல்கள் மாலிகி அரசாங்கத்தின் முக்கிய ஷியைட் பாதுகாப்புப்
பிரிவுகளுக்கும் விழிப்புக்குழுக்கள் (Awakening
Councils) என அழைக்கப்படும் சுன்னிப் போராளிகளுக்கும்
இடையே அதிகரித்துவரும் மோதல்களில் இருந்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விழிப்புக்குழுக்கள்
அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுடன் ஒத்துழைப்புடன், எழுச்சி எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு பகுதியான இராணுவ
"விரிவாக்கத்தினால்" புஷ் நிர்வாகத்தால் சுன்னி ஆயுதக்குழுக்களால் 2007ல் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க இராணுத்தால் ஈராக்கின் மகன்கள் என்று குறிப்பிடப்படும் விழிப்புக்குழுக்கள்,
விரிவாக்கத்தின் வெற்றி எனத் தோன்றியதில் பலவற்றிற்கு காரணமாக இருந்தவர்கள். இது 2006ல் நிலவியிருந்த
கொடூர குருதிச் சிந்தலைக் சற்று குறைக்க உதவியது. இந்த உடன்பாட்டின்படி சுன்னி ஷேக்குகள்
போராளிக்குழுக்களை அமைத்தனர். அவை முன்னாள் ஆயுதமேந்திய குழுக்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். அவர்கள்
சுன்னிப் பகுதிக்கு பாதுகாப்பு கொடுத்து, ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் கட்டுப்படாத பிரிவுகளை அடக்க உதவின.
இதற்கு பதிலாக இந்த ஆயுதக்குழு உறுப்பினர்கள் மாதம் ஒன்றுக்கு $300 ஊதியத்தை அமெரிக்க இராணுவத்திடனம்
இருந்த பெற்றனர்.
இந்த மூலோபாயம் மாலிகி அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி
செயல்படுத்தப்பட்டது. அரசாங்கம் விழிப்புக்குழுக்கள் அரசாங்கத்திற்கே அறைகூவல் விடும் அடித்தளமாக
அமைந்துவிடும் என்று அஞ்சியது. அமெரிக்காவிற்கும் பாக்தாத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்
ஒரு பகுதியாக விழிப்புக் குழக்களின் பொறுப்பு மாலிகி அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது. அது அவர்களுக்கு
ஊதியத்தைக் கொடுப்பதுடன், அதே நேரத்தில் பாதுகாப்புப் பிரிவுகளுடன் இணைத்து வருகிறது அல்லது தேவையான
அரசாங்க பணிகளை பொதுத்துறையில் பெற்றுக்கொள்கிறது.
ஆனால் விழிப்புக் குழு உறுப்பிர்கள் முழு ஊதியத்தைப்ப பெறவில்லை. ஒப்புமையில்
100,000 பேரில் குழுக்களில் இருந்தவர்களில் சிலர்தான் வேலைகளைப் பெற்றுள்ளனர். மேலும் மாலிகி
அரசாங்கம் விழிப்புக்குழுக்களை அடக்கும் பிரச்சாரத்தை செய்வதாகவும் கூறப்படுவதுடன், அதன் தலைவர்கள் கைது
செய்யப்படுகின்றனர். அமெரிக்கத் துருப்புக்கள் இதைச் செய்வதற்கு தேவையான சுடுபலத்தை கொடுக்கின்றன.
மார்ச் மாத இறுதியில் இத்தகைய அடக்குமுறைச்செயல்பாடு மத்திய பாக்தாத்
பட்ஹில் பகுதியில் ஆயுதமேந்திய எழுச்சியைத் தூண்டியது. அப்பொழுது ஈராக்கிய பாதுகாப்புப் பிரிவுகள் விழிப்புக்
குழுக்களின் தலைவரை கைது செய்தனர். அமெரிக்கத் துருப்புக்களும்
Apache
ஹெலிகாப்டர்களும் அடக்க உதவ வருமாறு கோரப்பட்டன.
இந்த நிகழ்வு தாமும் இவ்வாறு வளைக்கபட்டுவிடுமோ என்ற நினைப்பில் மற்ற
விழிப்புக் குழுக்களின் தலைவர்களிடையே அச்சங்களை தூண்டியதுடன், போராளிகள் குழுக்களில் சேர்ந்திருந்த முன்னாள்
சுன்னி எழுச்சி போராளிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய குண்டுத்தாக்குதல்கள் பரந்த அளவில் இந்நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாக
தான் காணப்படுகின்றன. ஈராக்கின் கொந்தளிக்கும் அரசியல் நிலையில் மீண்டும் தீவிர வன்முறை வெடிக்கக்கூடும்.
குண்டுவீச்சுக்களுக்கு விடையிறுக்கையில் மாலிகி கோபத்துடன் அவர்களை அமெரிக்கப்
படையெடுப்பிற்கு முன்பு 35 ஆண்டுகள் நாட்டை ஆண்ட சதாம் ஹுசைனின் முன்னாள் பாத் கட்சியில் இருந்தவர்களை
குறைகூறினார். குண்டுவீச்சுக்கள் "கலைக்கப்பட்ட பாத் கட்சி அதன் ஆண்டுவிழா நிறைவின் தீய சகுனமாக நாட்டிற்கு
கொடுக்கும் அளிப்பு" என்றார் மாலிக். இது செவ்வாய்க்கிழமை கட்சி நிறுவப்பட்ட ஆண்டுவிழாவை பற்றிய
குறிப்பாகும்.
இத்தகைய கருத்து குறுங்குழுவாத அழுத்தங்களை பெருக்கும் நோக்கத்தைக்
கொண்டதுடன், அரசாங்கம் சமீபத்தில் கொடுத்த உறுதிமொழிகளான பெரும்பாலான சுன்னிக்களான முன்னாள்
பாத்திஸ்ட்டுகளையும் இணைத்துக் கொள்ளுவது என்பது வினாவிற்கு உட்படுத்தியது. இக்கொள்கை மாலிகியின் ஷியைட்
ஆதரவாளர்களிடம் இருந்தும் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இதற்கிடையில் அரேபியர்களுக்கும் குர்திஸ்களுக்கும் இடையேயான அழுத்தங்கள் வட
ஈராக்கில் பெருகியுள்ளன. இவை குர்திஸ்கள் கிர்குக் நகர தன்னாட்சிப் பகுதியின்மீது தங்கள் கட்டுப்பாட்டை
விரிவாக்குதல் மற்றும் அதன் எண்ணெய் வளத்தினை கட்டுப்படுத்த முற்படல் என்பவற்றிற்கு எதிரானது. இது ஈராக்கை
குறுங்குழுவாத வன்முறையாக நாட்டைத் துண்டாடும் கூடுதலான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
இன்னும் தீவிரமாக இப்பூசல்கள் வளர்ந்தால், அவை பெப்ருவரி மாதம் ஒபாமாவால்
முறையாக அறிவிக்கப்பட்ட ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படும் படைகள் என்பதை வினாவிற்கு உட்படுத்திவிடும்.
அந்த அறிக்கையின்படி ஈராக்கிய நகரங்களில் இருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இரு மாதங்களுள் திரும்பப்
பெறப்படும் என்றும் எல்லா "போர்ப் படைகளும்" ஆகஸ்ட் 2010க்குள் திரும்பப்பெறப்படும் என்றும் கூறியுள்ளது.
"போரில் ஈடுபடும் துருப்புக்கள்" என்பது பலவித இராணுவப் பிரிவுகள் ஆயுதமேந்திய
செயல்களில் ஈடுபட்டும் மற்றைய பிரிவுகளை விலத்திவிடுகின்றது. எப்படிப்பார்த்தாலும், பென்டகன் பலமுறையும் சில
போரில் ஈடுபடும் பிரிவுகளை போரில் ஈடுபடாத துருப்புக்கள் என்று புதிதாக வரையறுக்கும் திட்டத்தைக்
கொண்டுள்ளது. அதனால் அவை ஈராக்கில் 2010 ஆகஸ்ட் கால கெடுவிற்குப் பின்பும் வைத்திருக்கப்பட முடியும்.
கிட்டத்தட்ட 50,000 எஞ்சும் படைகள் அங்கு பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை செயல்படுத்த, ஈராக்கிய
படைகளுக்கு பயிற்சி அளிக்க மற்றும் அமெரிக்க பணியாளர்கள், நலன்களைக் காக்க என்று நிறுத்தி வைக்கப்படுவர்.
அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் ஈராக்கில் இருந்து 2011ல் வெளியேறிவிடும்
என்று 2008ல் கையெழுத்திடப்பட்ட படைகளில் நிலை பற்றிய உடன்பாட்டு விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புஷ்
நிர்வாகத்தில் இருந்து தொடர்ந்து இருக்கும் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸும் மற்ற உயர்மட்ட இராணுவத்
தளபதிகளும், அமெரிக்கத் துருப்புக்கள் அதற்குப் பின்னும் பல ஆண்டுகள் நாட்டில் தொடர்ந்து இருக்கும் என்றுதான்
கூறுகின்றனர்.
வாஷிங்டன் ஈராக்கில் அதன் படைகளைக் குறைக்க வேண்டும். அப்பொழுதுதான்
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் போரை விரிவாக்க முடியும். அங்கு ஒபாமா அமெரிக்கத் துருப்புக்களின்
எண்ணிக்கை இரு மடங்காக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுள்ளனர். அது இன்னும் இரு இராணுவ
முயற்சிகளிலும் சங்கடத்தைத்தான் எதிர்கொண்டுள்ளது.
செவ்வாயன்று துருக்கியை விட்டு நீங்குவதற்கு முன் ஒபாமா இஸ்தான்புல்லில் துருக்கிய
மாணவர் குழு ஒன்றுடன் தோன்றினார். அவர்களில் ஒருவர் ஈராக் பற்றியும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் உடனான
அரசியல் வேறுபாடுகள் பற்றியும் வினா எழுப்பி; ஒபாமாவின் தேர்தல் "முகத்தைமட்டும்
மாற்றியுள்ளது....அடிப்படை அப்படியேதான் உள்ளது" என்பதை நம்புமாறும் உள்ளது எனக்குறிப்பிட்டார்.
இதற்கு விடையிறுக்கையில் ஒபாமா ஈராக் போரைத் தான் எதிர்த்ததாகவும், இப்பொழுது
ஜனாதிபதி என்னும் முறையில் நாட்டில் இருந்து துருப்புக்கள் எப்படி வெளியெற்றப்பட வேண்டும் என்று கவனத்துடன்
இருப்பதாகவும் கூறினார். "எனவே ஒரு சிலர் கூறலாம், நீங்கள் போரை எதிர்த்ததாக நாங்கள் நினைத்தோம்;
அவர்கள் அனைவரையும் ஏன் உடனே வெளியேற்றவில்லை? "நல்லது, நான் ஆரம்பத்தில் எதிர்த்தேன் என்றால் அதன்
பொருள் நான் பொறுப்பில்லாமல் பொறுப்பற்ற தன்மையில் விஷயங்களைச் செய்துவிடுவேன் என்பது அல்ல."
வினா இதுதான்: எவருக்குப் பொறுப்பு? துருக்கிய மாணவர் ஒபாமாவின் ஈராக்
கொள்கை பற்றிய அடிப்படை உண்மையைச் சுட்டிக்காட்டினார்.
படைகளைத் திரும்பப் பெறுதல், ஈராக்கியர்களுக்கு நாட்டைக் கொடுத்தல் என்ற
பேச்சுக்களுக்கு பின், புதிய நிர்வாகம் இதற்கு முன்பு இருந்த நிர்வாகத்தின் போக்கைத்தான் அடிப்படையில்
மையமாகக் கொண்டுள்ள கொள்கையை தொடர்கிறது. ஈராக்கின் பாரிய எண்ணெய் இருப்புக்களை
கட்டுப்படுத்துவதின் மூலம் அமெரிக்காவின் பூகோள-மூலோபாய நலன்களைப் அதிகரிக்கும் நோக்கத்தை
கொண்டுள்ளது. வெள்ளை மாளிகை குறைந்த இராணுவ ஆக்கிரமிப்பு, குறைந்த செலவினங்கள் மூலம் இதை
அடையலாம் என்று வெள்ளை மாளிகை நம்பினாலும், உண்மை நிலை இதுதான். இதற்கிடையில் ஒரு பெரிய போர்
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் நடைபெறுகிறது. அல் கொய்தாவை அழிப்பதற்கு என்று இல்லாமல், இதே
போல் எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆசியப் பகுதி மீது அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்ற
முக்கியமான காரணத்திற்காக.
இந்தக் கொள்கைகள் ஒபாமாவிற்கு வாக்களித்த பல மில்லியன் மக்களுடைய
விருப்பங்களை நேரடியாக நிராகரிப்பவை ஆகும். அவர்கள் புஷ் நிர்வாகத்தின் இராணுவவாதத்திற்கு முற்றுப்புள்ளி
வைத்து அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களையும் நிறுத்த விரும்புனர். ஆனால் இராணுவத்தையோ அல்லது ஒபாமா
நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளையோ நிர்ணயிப்பது அமெரிக்க மக்களுடைய விருப்பம் அல்ல; மாறாக
ஒரு குறுகிய பெறுநிறுவன, நிதிய உயரடுக்கின் நலன்கள்தான் நிர்ணயிக்கின்றன. |