:
பிரான்ஸ்
German-based tire maker announces European plant
closures
ஜேர்மனியைத் தளமாக கொண்ட டயர் தயாரிப்பு நிறுவனம் ஐரோப்பிய ஆலைகள் மூடலை
அறிவிக்கிறது
By Kumaran Ira
24 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
ஜேர்மனியை தளமாகக் கொண்ட டயர் தயாரிப்பாளரும் கார் பாகங்கள் அளிக்கும்
நிறுவனமுமான Continental AG
பிரான்சிலும் ஜேர்மனியிலும் ஆலைகளை முட இருப்பதாக கொடுத்துள்ள அறிவிப்பு பிரான்சில் பரந்த எதிர்ப்பையும்
விவாதங்களையும் தூண்டியுள்ளது. மார்ச் 11ம் தேதி தான் 1,900 பேரை வேலை நீக்கம் செய்யப்போவதாகவும்
கூடுதல் உற்பத்தியை குறைக்கும் நோக்கம் மற்றும் கார் பொருட்களுக்கான தேவை சரிவு உலகெங்கிலும் இருப்பதால்
இந்த நிலை என்றும் Continental
அறிவித்துள்ளது.
Continental AG ஐரோப்பாவின்
இரண்டாம் மிகப் பெரிய டயர் தயாரிப்பு நிறுவனம், உலகெங்கிலும் கார்த் தொழிலுக்கு பாகங்கள் வழங்கும் உயர்மட்ட
நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு இதன் விற்பனை 24 யூரோக்கள் பில்லியன் என்று இருந்தது. நிறுவனத்தின்
35 நாடுகளில் உள்ள 190 ஆலைகளில் 140,000 தொழிலாளர்கள் வேலைபுரிகின்றனர். ஒரு அறிக்கையில்
Continental
இன் நிர்வாகக் குழு உறுப்பினர்
Joachim Nokilin,
"பல விருப்பங்களையும் பரிசீலித்தபின் டயர் பிரிவில் இருக்கும் போட்டி அதிக
செலவுகள் இருக்கும் இரு ஆலைகளை மூடினால் மட்டுமே தக்க வைக்கப்பட முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளோம்.
இந்த இரண்டும் கிளேய்ரோக்ஸியல் உள்ள பயணிகள் வாகன டயர் ஆலை மற்றும் ஹனோவரில் உள்ள வணிக வாகன
டயர் ஆலை என்பவையாம்" என்று அறிவித்தார்.
ஜேர்மனியில் இருக்கும் ஹனோவர் வணிக வாகன டயர் உற்பத்தி ஆலை, 1.4 மில்லியன்
டயர் உற்பத்திதிறனைக் கொண்டது; இது இந்த ஆண்டு இறுதிக்குள் மூடனப்பட்டுவிடும். இதையொட்டி 780 ஊழியர்கள்
பாதிக்கப்படுவர். பிரான்சில் உள்ள கிளேய்ரோக்ஸியில் இருக்கும் பயணிகள் வாகன டயர் ஆலை மார்ச் 2010ஐ
ஒட்டி மூடப்படும். 1,120 தொழிலாளர் பாதிக்கப்படுவர்.
Continental
இன் கருத்துப்படி கிளேய்ரோக்ஸி ஆலை ஐரோப்பாவிலேயே பயணிகள் வாகன ஆலைகளில் மிக அதிக செலவினம்
கொண்டது ஆகும். கடந்த ஆண்டு இந்த ஆலை 8.7 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்து 28 யூரோ மில்லியன்
இலாபத்தை ஈட்டியது.
ஆலை மூடல்கள் மற்றும் உற்பத்தித் திறனை குறைத்தல் ஆகியவற்றை நியாயப்படுத்துகையில்
Continental
ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் கார் விற்பனைகள் சரிவை மேற்கோளிடுகிறது.
செய்தி ஊடகத்திற்கு கொடுத்துள்ள அறிக்கையில் நிறுவனம் கூறுவது: "2008 நான்காம் காலாண்டு பகுதியில் வணிக
வாகன டயர் வணிகம் 20 சதவிகிதம் சரிந்தது; புதுப்பிக்கப்பட்ட டயர்கள் விற்பனை ஐரோப்பாவில் 15 சதவிகிதம்
குறைந்தது. இப்போக்கு இவ்வாண்டு முதல் இரு மாதங்களில் வியத்தகு அளவில் அதிகரித்தது. பயணிகள் வாகன டயர்
விற்பனை 2008 நான்காம் காலாண்டில் 20 சதவிகிதம் குறைந்தது. இவ்வாண்டு முதல் இரு மாதங்களில்
30சதவிகிதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயணிகள் டயர் சந்தையும் கணிசமாக தேவையிழப்பை
கொண்டுள்ளது."
சந்தை குறுகிய மற்றும் இடைக்காலங்களில் இருக்கும் உற்பத்தித் திறனின் உகந்த
பயன்பாட்டை பெற இயலாது என்பதால்,
Continental, "தான் ஐரோப்பிய ஆலைகளில் குறைப்பிற்கு
தேவைக்கு ஏற்ப கொண்டுவருவதற்கான நடவடிக்கைளில் ஈடுபட இருப்பதாக" கூறியுள்ளது. இந்நிறுவனம் வணிக டயர்
உற்பத்தியை 27 சதவிகிதம் குறைப்பதுடன் பயணிகள் டயர் உற்பத்தியையும் ஐரோப்பாவில் 17 சதவிகிதம்
குறைக்கும்.
Continental இன் பரிதாப
நிலைக்குக் காரணங்களில் ஒன்று கடந்த ஆண்டு அது மிகச் சிறிய
Schaffler Group
நிறுவனத்தால் கையேற்கப்பட்டதாகும். அது ஒரு
ball-bearing தயாரிப்பு நிறுவனம்,
Continental
இன் பங்கில் 90.2 சதவிகிதத்தை கொண்டுள்ளது.
Schaeffler ஐப் போல் மூன்று மடங்கு வருவாயை
Continental
AG
ஈட்டுகிறது. Schaeffler Group
ஜேர்மனிய அரசாங்கத்திடம் 6 பில்லியன் யூரோக்களை புதிய மூலதனத்திற்கு கொடுக்குமாறு கேட்டுள்ளது. ஏனெனில்
Continental
இனை விலைக்கு வாங்குவதற்கு பெற்ற 11 பில்லியன் யூரோக் கடனை அது சமாளிக்க வேண்டியுள்ளது.
இந்த உதாரணம் தற்போது வோல் ஸ்ட்ரீட் ஊகக்காரர் செயலின் விளைவு மற்றும்,
சார்க்கோசி குறைகூறியுள்ள "நிதிய மூலதனமும்" காரணம் என விளக்கப்பட்டாலும் இந்த பொறுப்பற்றதும் மற்றும்
பொருளாதார ரீதியாக பகுத்தறவற்ற இணைப்புக்களும், புது நிறுவனங்களை கையகப்படுத்திக்கொள்ளுதலும் பரந்த
அளவில் உள்ளன; உற்பத்திப் பொருளாதாரத்திலும் இது காணப்படுகிறது. மார்ச் 12 ராய்ட்டர்ஸ் தகவல்படி, "Schaeffler
Group கடன் கொடுத்த வங்கிகளிடம் இருந்து மறு
கட்டமைப்பிற்கு கூடுதல் காலக்கேட்டை கோரியுள்ளது. கடன் கொடுத்த வங்கிகள் இடைக்கால நிதியத்தையும்
Schaefflerக்கு
குழுவைக் காப்பதற்கு கொடுக்கத் தயாராக உள்ளன." ஒரு விருப்புரிமை
Continental
இன் பங்குகளை Schaeffler
உடைய சொத்துக்களை பணமாக்கும் நிலைமையை உயர்த்துவதற்கு வங்கிகளுக்கு விற்பதாகும்.
தங்கள் பொருட்களுக்கு தேவை குறைவதை எதிர்பார்த்து,
Continental
இல் இலாப நலன்களை கருத்தில் அது சரிதான் என்றாலும், இந்நிலை ஒரு மந்தமான பொருளாதார
நடவடிக்கையை போன்ற தீய வட்டத்தை உருவாக்கி பொருளாதார நெருக்கடியை நீடிக்கும். ஆனால்
Continentalஇன்
தொழிலாளர்கள் வறிய நிலைக்கு தள்ளப்படுவர். ஹனோவர் மற்றும் கிளேய்ரோய்க்ஸ் ஆலைகள் முடப்பட்டுவிட்டால்,
நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த புறநிலை சந்தைக் அராஜகத்தின் செலவினங்களை
தொழிலாளர்கள் தலையில் கட்டும் உத்தியை கையாள்வர்.
2007 ஜனாதிபதி பிரச்சாரத்தின்போது,
Continental
இன் நிர்வாகம் அப்பொழுதிருந்த 35 மணி நேரத்திற்கு பதிலாக 40 மணிநேர பணி வாரம் கிளேய்ரோய்க்ஸ்
ஆலையில் வேண்டும் என ஒரு வாக்கடுப்பு வேண்டும் என்று முன்மொழிந்தது. அது தொழிலாளர்கள் இத்திட்டத்தை
ஏற்பதற்கு அச்சுறுத்துவதற்காக நடந்தது. இல்லாவிடின் ஆலை மூடப்படும் என்று கூறப்பட்டது. பெரும்பாலான
தொழிலாளர்கள் திட்டத்தை நிராகரித்தாலும், சில மாதங்களுக்கு பின்னர் நிர்வாகத்திற்கும் பெரும்பான்மை
CFTC, CGC
தொழிற்சங்கங்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. தொழிற்சங்கங்களின் அழுத்தத்தை ஒட்டி தொழிலாளர்கள்
40 மணி வாரத்தை, இழப்பீடு இல்லாமல் ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு வேலைகள் தொடர்ந்து இருக்கும்
என்று உறுதி கூறப்பட்டது.
இப்பொழுது அந்த உறுதிமொழிகள் பயனற்றுப் போய்விட்டன. 42 வயதான டேவிட்
கூபின், ஆலைத் தொழிலாளர், ராய்ட்டர்ஸிடம் கூறினார்: "21 ஆண்டுகளாக நான் கிளேய்ரோய்க்ஸில் உள்ள
Continental
இல் வேலை பார்த்துவருகிறேன். இது அதிர்ச்சி தரும் செய்தி ஆகும். கடந்த
சில ஆண்டுகளில் பல தியாகங்கள் செய்துள்ளோம், 40 மணி நேர பணிவாரத்தை ஒப்புக்கொண்டோம், ஊதிய
உயர்வு இல்லை. வார இறுதிகள், விடுமுறைகளிலும் நான் உழைத்துள்ளேன்."
கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து தொடரும் பொருளாதார சரிவை ஒட்டி,
நிறுவனம் இப்பொழுது புதிய நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது; பணி நேரக் குறைப்பு, கூடுதலான காலத்திற்கு
ஆலைகள் தற்காலிக மூடல், தற்காலிக தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தை நிறுத்துதல் என உற்பத்திக் குறைவிற்காக
இவை செய்யப்படுகின்றன. ஆனால், "மிக அளவில் தேவைக் குறைவு உறுதியாக இருப்பதை எதிர்கொள்ளும்
வகையில், நாங்கள் கடைபிடித்துவரும் குறுகிய கால நடவடிக்கைகள் நிலைமையை சமாளிக்கப் போதாது" என்று
Continental
இன் நிர்வாக உறுப்பினர் நிகோலின் கூறினார்.
சமூக அமைதியின்மை அச்சங்கள் பெருகியிருக்கையில், உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரிகள்
தொழிலாளர்கள் நிலைக்கு தாங்கள் பரிவுணர்வு காட்டுவதாக காட்டிக் கொள்ள முயலுகின்றனர். பிரெஞ்சு அரசாங்கத்தின்
செய்தித் தொடர்பாளரும் தொழில்துறை மந்திரியுமாகிய
Luc Chatel, "மறு கட்டமைப்பு விருப்பத்தை தொடர
நிறுவனம் விரும்பினால், அதன் காரணம், பதவி நீக்கல்கள் ஆகியவற்றை ஒரு நீதிமன்றத்தின் முன் அது விளக்க
வேண்டும்" என்றார்.
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா
மேர்க்கெலுடன் மார்ச் 12 அன்று பேர்லின் ஒரு சந்திப்பில் பேசினார். அக்கூட்டம் அடுத்த மாதம் லண்டலில் நடக்க
இருக்கும் G20
பொருளாதார உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பு மாநாடு ஆகும்.
Continental
இன் கஷ்டங்களை தான் உணர்ந்ததாகக் கூறிய நிக்கோலோ கடந்த காலத்தில் அது செய்த உறுதிமொழிகளை நினைவிற்கொள்ளும்
என்று தான் நம்புவதாகவும் பிரெஞ்சு சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்கும் என்று கருதுவதாகவும் கூறினார்.
பிரான்சின் வடக்கில் உள்ள கிளேய்ரோய்க்ஸ் ஆலையில் உள்ள தொழிலாளர்கள் ஆலை
மூடல் பற்றி செய்திக்கு எதிராக சீற்றத்துடன் எதிர்ப்புக் காட்டினர். மார்ச் 16ம் தேதி கிட்டத்தட்ட 1,000
ஆர்ப்பாட்டக்காரர்கள் வடகிழக்கு பிரான்சில் ரெய்ம் என்ற இடத்தில் அணிவகுத்தனர். அங்கு நிர்வாகிகள் கூட்டம்
ஒன்று நடைபெற்று வந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்ட அறையைச் சூழ்ந்து கொண்டு நிர்வாகிகளை சாடியதுடன்
முட்டைகள், காலணிகள் ஆகியவற்றையும் எறிந்தனர்.
அரசியல்வாதிகளின் பாசாங்குதனம் மற்றும்
Continental
மூடப்படுவதற்கு சந்தர்ப்பவாத விடையிறுப்பை குறைகூறுகையில்
CGT (General Confederation of Workers)
இன் பிரதிநிதி சேவியர் மத்தேயு குறிப்பிட்டார்: "இங்கும் அங்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளும் செனட்டர்களும்
Continental
முதலாளிகள் இழிந்தவர்கள் எனக் கூறுபவர்கள் உள்ளனர். ஆனால்
இவர்கள்தான் அவர்களை அவ்வாறு செய்ய உதவுகின்றனர். அவர்கள் சட்டங்களை இயற்றுகின்றனர். முதலாளிகள்
இழிவாகச் செயல்பட முடியும் என்றால், அதற்குக் காரணம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் செனட்டர்களும் அவர்களை
அவ்வாறு செய்ய முடியாமல் தடுக்கும் சட்டங்களை இயற்றவில்லை"
மார்ச் 19ம் தேதி, பிரான்சின் தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் ஏற்பாடு
செய்திருந்த சமீபத்திய தேசிய நடவடிக்கை தினத்தன்று கிட்டத்தட்ட 10,000 பேர் கிளேய்ரோய்க்ஸில் ஆலை
மூடலை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். |