WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
பூகோள சமத்துவமின்மை
Antarctic ice shelf collapse: climate change and capitalism
அண்டார்டிகா பனியடுக்கு சரிவு: சுற்றுச்சூழல் மாற்றமும் முதலாளித்துவமும்
By Patrick O'Connor
8 April 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
கடந்த ஞாயிறன்று நடந்த
வில்கின்ஸ் பனியடுக்கையும், அண்டார்டிகா தீபகற்பத்தையும் இணைக்கும் 40 கிலோமீட்டர் பனிப்பாலத்தின் சிதைவு,
சுற்றுச்சூழல் மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கான மற்றொரு முழு அளவிலான அறிகுறியாகும்.
இந்த பனிப்பாலம் 14,000 சதுர கிலோமீட்டர் வில்கின்ஸ் அடுக்கிற்கும்,
அண்டார்டிகா நிலப்பகுதிக்கும் இடையில் இருந்த கடைசி இணைப்பாகும். இந்த பனியடுக்கு (ஒரு மிக நீண்ட பனிக்கட்டி)
படிப்படியாக தேயும் அல்லது முழுமையாக உருகிவிடும், குறிப்பாக வடக்கில் வெப்பமான பெருங்கடல் நீரோட்டத்திற்குள்
செல்லும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். 2008 மார்ச்சில் செயற்கைகோள் எடுத்த படங்கள் மூலம்
முதன்முதலில் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட வில்கின்ஸ் பனியடுக்கின் இந்த தேய்மானம், எதிர்பார்க்கப்பட்டதை விட
மிக வேகமாக நடந்துள்ளது. 1993ல் பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வுக்குழு, இந்த பகுதியை ஆபத்தானதாக கண்டறிந்தது,
ஆனால் குறிப்பிடத்தக்க சீர்குலைவு 30 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஏற்படும் என்று கணித்தது.
சராசரி உலக வெப்பநிலைகள் தொழிற்சாலை காலத்திற்கு முந்தைய நிலையை விட
0.8 டிகிரி செல்சியஸ் அதிகமாகி உள்ளன. ஆனால் ஆண்டார்டிக் தீபகற்பம் (தென் அமெரிக்காவின் பக்கம் நீட்டிக்
கொண்டிருக்கும் அந்த கண்டத்தின் ஒரு பகுதி) பூகோள வெப்பமயமாதலுக்கு மிக அதிகமாக பாதிப்படைந்திருப்பதை
நிரூபித்துள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில் மட்டும் வெப்பநிலைகள் 2.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
சிதைந்த அல்லது கணிசமாக மூழ்கிவிட்ட மிகப்பெரிய பத்து பனியடுக்குகளில்
வில்கின்ஸூம் ஒன்றாகும். இதுபோன்ற அடுக்குகள் நூறாண்டுகள் கணக்கில் உருவாகின்றன; சில பனியடுக்குகள் குறைந்தபட்சம்
10,000 ஆண்டுகளில் உருவாகி இருக்க கூடும் என்று பனிவார்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. தற்போது புவி ஆய்வாளர்கள்
அண்டார்டிகாவின் படத்தை மாற்றி வரைந்து வருகிறார்கள். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் பிரிட்டிஷ்
அண்டார்டிகா ஆய்வு மையத்தின் சமீபத்திய ஓர் ஆய்வு, 172 கடல்பனிமலைத் தொடர்களில் 142 தொடர்கள் அபாயத்தில்
இருப்பதாக கண்டறிந்துள்ளது.
"வரைபட மாற்றம் என்பது பூமியின் மீது பூகோள வெப்பமயமாதலின் விளைவுகளால்
ஏற்பட்டிருக்கும் மிகவும் ஆழ்ந்த, தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்," என்று கொலொரடோ தேசிய உறைபனி
மற்றும் பனி தகவல் மையத்தின் டாக்டர். டெட் ஸ்காம்போஸ் குறிப்பிட்டார்.
அண்டார்டிகா பனியடுக்களின் அழிவு நேரடியாக கடல்மட்டத்தை உயர்த்தாது,
ஏனெனில் பெருங்கடலின் மேல்மட்டத்தில் தான் மிதந்து கொண்டிருக்கின்றன. எவ்வாறிருப்பினும், அவற்றின் தேய்மானம்
பூமியின் பனி போர்த்திய பகுதிகளை குறைப்பதால், இது சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும்
புவிமண்டலத்திற்கே திருப்பி விடப்படுவதையே பிரதிபலிக்கிறது. இத்துடன் மூழ்கி வரும் ஆர்ட்டிக்கையும் எடுத்து
பார்ப்போமேயானால், விஞ்ஞானிகளின் மொழியில் கூறப்படும்
"positive feedback loop"
(குறையும் பனிப்போர்வை பெருங்கடலின் மீது அதிக சூரிய வெப்பத்திற்கு இட்டு செல்வதால் வெப்பநிலைகள்
உயர்த்தப்படுகிறது, உண்மையில் இது மேலும் பனிப்பிரதேசங்களை அழிக்கிறது என்பது தான் விளைவாக உள்ளது.
மேலும், அண்டார்டிகா தீபகற்ப பனியடுக்குகள் அக்கண்ட பனிப்பகுதிகளுக்கான
தடுக்கும் பொறியாகவும் விளக்குகின்றன. அவற்றின் அழிவினால், பெருமளவிலான பனிப்பகுதி (இது பெருங்கடலில்
மேல் மிதக்கவில்லை என்பதால் இது உருகுவதால் நேரடியாகவே கடல் மட்டங்களின் அளவுகள் உயரும்) வெப்பமான
பெருங்கடல் நீரோட்டங்களில் கலக்கும். நோர்வேஜியன் போலார் பயிலகத்தின் கருத்துப்படி, அண்டார்டிக்
பனிகளில் 1 சதவீதம் குறைந்தாலும் கூட, அது கடல் மட்டங்களில் 65 சென்டிமீட்டரை உயர்த்தும், இதனால்
அண்ணளவாக உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்தினரின் (சுமார் 700 மில்லியனுக்கு நெருக்கமான மக்களுக்கு)
வசிப்பிடமாக உள்ள கடற்கரை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவது போல, இந்த முக்கிய சுற்றுசூழல் நிலைமை சில
காலங்களுக்கு முன்னதாகவே அறியப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், சக்தி வாய்ந்த
பெருநிறுவன நலன்களின் சார்பில் இயங்கும் அரசாங்கங்களால் தடுக்கப்பட்டிருக்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில், ஸ்வீடன் விஞ்ஞானியான
Svante Arrhenius,
தொழில்துறை மாசும், எல்லாவற்றிற்கும் மேலாக புவிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் வெளியேற்றமும்,
பசுமைகளை பாதிப்பதன் மூலம் பூகோள வெப்பமயமாதலை உருவாக்கும் என்று முதன்முதலாக மெய்மைகோள்
காட்டியிருந்தார். வெப்பமயமாதல் ஏற்பட்டு வருவதை உறுதி செய்யும் ஆய்வுகள், இரண்டாம் உலக யுத்தத்திற்கு
பிந்தைய காலத்தில் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளால் திரட்டப்பட்டது; இது 1980களில் திரட்டப்பட்ட சுற்றுச்சூழல்
மாற்றத்திற்கான முக்கிய ஆதாரமாகும். இவை இருந்த போதினும், உலக முழுவதிலும் இருக்கும் அரசாங்கங்களின்
பதில் இதில் ஒன்றும் செய்யவில்லை என்பதாகும்.
பல்வேறு தேசிய அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்திசையாத மோதல்களின் மீது
பூகோள வெப்பமயமாதல் குறித்த தொடர்ச்சியான சர்வதேச கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின்
முதன்மை கவலை அவற்றின் சொந்த பெருநிறுவனங்களை காப்பாற்றுவதாக உள்ளது. இந்த பெருநிறுவனங்கள்,
பசுமையழிக்கும் வாயு குறைப்பு என்பதை தங்களின் குறுகிய கால இலாப நலன்களுக்கு முரணானதாக கருதுகின்றன.
விஞ்ஞானிகளால் வரையறுக்கப்பட்ட உண்மையான அளவை விட மிக குறைவான, குறைந்தபட்ச மாசு குறைப்பைக்
உட்கொண்டிருந்த 1997 Kyoto
உடன்படிக்கைக் குறிப்புக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மறுப்பால்
நிறுத்தப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக மூத்த புஷ் நிர்வாக பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்புகள்
கொண்டிருந்த முக்கிய பெருநிறுவன எண்ணெய் குழுமங்களை பாதுகாப்பதற்கான கவலையால் வாஷிங்டன்
உந்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்வு குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்காவின்
கொள்கையை மாற்றிவிடவில்லை. பிரச்சனைகளுக்கு உதட்டளவில் பேசிக் கொண்டும், உலக அரங்கில் ஓர்
இணக்கமான நிலைப்பாட்டை கைக்கொண்டும் இருக்கும் நிலையில், 1990ல் இருந்த அமெரிக்க கார்பன்
வெளிப்பாட்டின் அளவுகளை விட 2020ல் குறைப்பதாக ஒபாமா வெறுமனே வாக்குறுதி அளித்து வருகிறார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகள் 1990 அளவுகளை விட பசுமை மாசுபாட்டை 25-40 சதவீதம் குறைக்க வேண்டும்
என்ற சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அரசுகளுக்கிடையான குழுவின்
(IPCC)
தீர்மானத்தின் முகத்தின் முன்னால் தான் ஒபாமாவின் இந்த இலக்கு பறக்கிறது.
"Post-Kyoto"
உடன்பாடு ஏன் இறுதி பெறாமல் சந்தேகத்துடன் நிற்கிறது என்பதற்கு வாஷிங்டனின் நிலைப்பாடும் ஒரு
காரணமாகும். இந்த ஆண்டின் இறுதியில் டென்மார்க்கின் கோபென்ஹகனில் நடக்கவிருக்கும் ஒரு முக்கிய மாநாட்டில்
தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் உச்சத்தை அடைய இருக்கின்றன. ஆனால் சிறிது முன்னேற்றம்
செய்யப்பட்டிருக்கிறது. இந்த வாரம் ஜேர்மனியின் ஙிஷீஸீஸீல் நடைபெற்ற மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகள்,
அடிப்படை பிரச்சனைகளில் எந்த உடன்பாடும் கிடையாது என்று இன்று தீர்மானித்திருக்கிறது.
சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஐரோப்பிய சக்திகளிடம் எந்த தீர்வும் இல்லை.
நெருக்கடியை உருவாக்கிய "கட்டுப்பாடற்ற சந்தையை" பயன்படுத்துவதன் மீது தான் அவற்றின் கொள்கைகள்
மையம் கொண்டுள்ளன. பல்வேறு கார்பன் வர்த்தக ஊகவணிகர்கள், ஊகவணிக காப்பீட்டு நிதி தொழிலதிபர்கள்
மற்றும் முதலீட்டு வங்கிகளை வளமாக்கிய கார்பன் வர்த்தகம் (தொழில்துறை மாசுபாட்டை ஒரு வர்த்தக
பொருளாக மாற்றியிருக்கும் இருக்கும் ஒரு திட்டம்),
European Emissions Trading திட்டத்துடன் ஒரு
பரந்த ஆரவாரத்தை உருவாக்கியுள்ளது. சராசரி மக்கள் கணிசமாக உயர்ந்த எரிபொருள் மற்றும் போக்குவரத்து
கட்டணங்களால் பாதிக்கப்பட்டிருக்கையில், முக்கிய பெருநிறுவன மாசுபடுத்துனர்களும் கார்பன் விற்பனையின்
கட்டுப்பாடற்ற பரிமாற்றங்கள் மூலம் பாரியளவில் இலாபங்களை குவித்துள்ளனர்.
மிறிசிசி பரிந்துரைத்த, அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களுக்கான 25-40
சதவீத மாசு வெளியேற்ற வெட்டுக்களும், தேவைக்கும் குறைவான, மோசமான குறைமதிப்பீடாகும் என்று சமீபத்திய
விஞ்ஞான ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. நாசாவின் ஜேம்ஸ் ஹன்சென் உட்பட பல சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பூமியின்
புவிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடின் அளவு ஏற்கனவே அதிகபட்ச அளவையும் தாண்டி விட்டிருப்பதாகவும்,
இதற்கும் மேல் உயர்ந்தால் மாற்றமுடியாத சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயத்தில் என்ன தேவைப்படுகிறதென்றால், பூஜ்ஜியம் அளவில் கார்பன் வெளியேற்றங்கள்
இருக்கிற (அதாவது, இயற்கை நிகழ்முறைகள் மூலம் சுற்றுச்சூழலால் உள்வாங்கி கொள்ள தக்க அளவை விட அதிகமான
வெளியேற்றம் இல்லாத) ஓர் உலக பொருளாதாரத்திற்கான ஓர் உடனடி மாற்றம் தான் தேவைப்படுகிறது.
இதுபோன்றதொரு மாற்றத்திற்கு தேவையான தொழில்நுட்பமும், பொருள்சார் வளங்களும் ஏற்கனவே உள்ளன. ஆனால்
உலக உற்பத்தி சக்திகள் மற்றும் இந்த அளவிற்கான தொழில்நுட்ப திறன்களை நிர்வகிப்பதென்பது தற்போதைய
சமூக ஒழுங்கின் கீழ் சாத்தியப்படாது.
உண்மையில், சுற்றுச்சூழல் மாற்றம் என்பது ஒரு சர்வதேச பிரச்சனை, ஆனால்
முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் இதை தீர்க்க முடியாது. இந்த பிரச்சனையை உடனடியாக
சமாளிப்பதற்கான அனைத்து அறிவார்ந்த திட்டங்களும், இலாப முறையின் அதிகாரம் மற்றும் முக்கிய முதலாளித்துவ
தேசிய அரசுகளின் முரண்பாடான நலன்களின் அடித்தளங்களாகும். தேவையான அளவுகளுக்கு கார்பன்
வெளியேற்றங்களை குறைப்பதற்கு, எரிசக்தி உற்பத்தி மற்றும் வினியோகம், நகர்புற திட்டமிடுதல் மற்றும்
பொதுஜன போக்குவரத்து, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தி, கழிவு வெளியேற்றம் மற்றும் பிறவற்றின்
தொகுதியையும் மாற்றி அமைப்பது உட்பட சர்வதேச பொருளாதாரத்தை முழுமையாக மாற்றி அமைப்பதற்கு
குறைவில்லாத மாற்றங்கள் தேவைப்படுகிறது.
இதுபோன்றதொரு மறு ஒழுங்கமைப்பு என்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு
சோசலிச இயக்கத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும். தேவைப்படுவதென்னவென்றால், நீண்ட கால சமூக
தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடிய மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சராசரி மக்களின் வாழ்க்கைத்
தரங்களை உயர்த்தும் ஓர் உலக பொருளாதாரத்திற்கான ஒரு ஜனநாயக ரீதியான திட்டம் தான். |