World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Supreme Court rejects appeal by Mumia Abu-Jamal for new trial

அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் முமியா அபு-ஜமாலின் புதிய விசாரணைக்கான முறையீட்டை நிராகரிக்கிறது

By Barry Grey
7 April 2009

Back to screen version

திங்களன்று அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் புதிய விசாரணை வேண்டும் என்று முமியா அபு-ஜமாலின் கோரிக்கை முறையீட்டைக் கேட்ட மறுத்துவிட்டது. இந்த முறையீடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மற்றும் இனவெறி நோக்கத்துடனான போலிவழக்கில் இவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, மரண தண்டனை மற்றும் அடக்குமுறைக்கும் சர்வதேச எதிர்ப்பின் மத்தியாக இது உள்ளது.

1982ல் நடைபெற்ற அவருடைய விசாரணையில் அரசாங்க வழக்கு தொடுனர் சட்டவிரோதமாக ஆபிரிக்க அமெரிக்கர்களை ஜூரர் பதவிகளில் இருந்து ஒதுக்கியிருந்ததால் முந்தைய ஆண்டு ஒரு பிலடெல்பியா போலீஸ் அதிகாரியை கொன்றது என்பது தள்ளபடி செய்யப்பட வேண்டும் என்ற அபு-ஜமாலின் வக்கீல்கள் கொடுத்திருந்த சிறப்பு மனுவை எந்த கருத்தும் கூறாது நீதிமன்றம் நிராகரித்தது. ஒன்பது நீதிபதிகளில் நான்கு பேர் உடன்பட்டால் இந்த முறையீட்டு விசாரிக்கப்படலாம். குறைந்தது நான்கு நியமிக்கப்பட்ட பெயரளவு தாராளவாத நீதிமன்ற உறுப்பினர்கள் சிறப்பு மனுக்கு ஆதரவு கொடுக்காதுவிடலாம் என்பதே நிலைப்பாடாகும். ஆனால் எந்த கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமல் ஒருமனதான முடிவு ஒருமித்தது என கூறப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் செயல் மார்ச் 2008 கூட்டரசு முறையீட்டு நீதிமன்றம் ஒன்று அபு-ஜமாலுக்கு புதிய விசாரணைக்கான முறையீட்டை மறுத்ததை உறுதி செய்தது. அதே முடிவின்படி, ஒரு மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, மூன்றாம் முறையீட்டுச் சுற்று நீதிமன்றத்தின் பிரிவு, அபு ஜமால் விசாரணையில் வழங்கப்பட்ட மரண தண்டனையை அகற்றி, ஜூரி முறையற்ற விதத்தில் விசாரணை நீதிபதிக்கு அபு-ஜமாலை மரணப்படியில் நிறுத்தக்கூடிய காரணிகளைப் பற்றி கவனிக்க வேண்டும் என்று கூறியது தவறு என்பதைக் காரணமும் காட்டியது. நீதிபதி 10 வெள்ளையர்கள் மற்றும் இரு ஆபிரிக்க அமெரிக்கர்கள் அடங்கிய ஜூரிகளிடம் தவறான முறையில் குறைந்த தண்டனைக்கான காரணிகள் பற்றி ஒருமனதாக உடன்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையை இரத்து செய்து ஒரு புதிய மரண தண்டனை விசாரணைக்கு உத்தரவிட்டது. அதில் ஒரு ஜூரி மரண தண்டனையை மீட்கலாம் அல்லது பிணையில் வெளிவராத வகையில் தண்டனை அளிக்கலாம். அபு- ஜமால் தலைமை நீதிமன்றத்திற்கு இந்த தீர்ப்பை எதிர்த்து புதிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

பிலடெல்பியாவின் அரசாங்க வக்கீல்கள் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிமன்றத்தில் முறையிட்டு முதலில் இருந்த மரண தண்டனை புதிப்பிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த முறையீடு பற்றி தலைமை நீதிமன்றம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இதன் விளைவாக, தன்னுடைய வாழ்வில் பாதியை நிச்சயமற்ற மரண தண்டனையில் கழித்துவிட்ட 54 வயதான அபு-ஜமால் தனது தண்டனை புதுப்பிக்கப்படலாம் என்ற நிலையிலும் இப்பொழுது உள்ளார். பிலடெல்பியா அரசாங்க வக்கீல்களும், அமெரிக்க அரசியல் அமைப்பில் பலரும் இந்த அரசியல்வாதி, ஆசிரியர் மற்றும் மரணதண்டனை எதிர்ப்பாளருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். மார்ச் 2008 முறையீடுகள் நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பான அபு-ஜமால் குற்றவாளி என்பதை அடுத்து, பிலடெல்பியா மாவட்ட அரசாங்க வக்கீல் Lynn Abraham அவருடைய ஆதரவாளர்களை கண்டித்து அறிவித்தார்: "இவர் ஒரு படுகொலையாளர் என்பதைவிடக் குறைந்தவர் அல்ல."

அபு-ஜமாலின் வக்கீல் ரோபர்ட் ஆர். பிரியன் தன்னுடைய கட்சிக்காரரின் விசாரணை "ஒரு நீதிவகை கேலிக்கூத்து" என்று குறிப்பிட்டு திங்களன்று தான் தலைமை நீதிமன்றம் இதை மறுபடி விசாரிக்க வேண்டும் எனக் கோர இருப்பதாகக் கூறினார்.

1981ம் ஆண்டு அபு-ஜமால் கைது செய்யப்பட்டு டானியல் பாக்னர் என்னும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பிந்தையவர் அபு-ஜமாலின் சகோதரரை ஒரு அதிகாலை போக்குவரத்து சந்தியில் நிறுத்தி வைத்திருந்தார். பிலடெல்பியாவில் Black Panther Party உடைய நிறுவன உறுப்பினரான அபு-ஜமால் நன்கு அறியப்பட்ட வானொலி விமர்சகர் மற்றும் இனவெறி, போலீஸ் மிருகத்தனத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர் ஆவார். இவர் அப்பொழுது ஒரு டாக்சி ஓட்டுனராக இருந்தார். தம்பியை நிறுத்திய இடத்தில் அவர் இருந்தார், தன்னுடைய சகோதரர் அடிக்கப்பட்டதை பார்த்து அவருக்கு உதவ சென்றார். துப்பாக்கி குண்டுகள் வெடித்தன; அபு-ஜமால் மற்றும் பாக்னர் இருவரும் தாக்கப்பட்டனர். அதிகாரி காயங்களால் இறந்து போனார்.

அபு-ஜமால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. போலி சாட்சியங்கள், தவறான முறையில் அரசாங்க வக்கீல்கள் நடந்தது, இனவெறி ஆகியவை இந்த விசாரணையில் காணப்பட்டன. 1982 அரசாங்க வழக்குதொடுனர்கள் சாட்சியங்களின் ஆதாரத்தில் அபு-ஜமால் ஒருவர்தான் அந்த இடத்தில் கொலை செய்திருக்க முடியும் என்று வலுவாகக் கூறினர். மேலும் அவரிடத்தில் இருந்த துப்பாக்கிதான் கொலை செய்யப்பயன்படுத்தப்பட்ட கருவி என்றும் அவர் மருத்துவமனையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் கூறினர்.

அரசாங்க வழக்கின் இந்தக் கூறுபாடுகள் அனைத்துமே 1990களின் நடுவில் வெளிவந்த பல சான்றுகளால் முரண்பாட்டிற்கு உட்பட்டன. அப்பொழுது பல மறுபரிசீலனை வாதங்கள் கேட்கப்பட்டன. இதில் ஆர்னால்ட் பெவர்லி என்ற நபர் தான்தான் பாக்னரை உள்ளூர் மாபியாக்ளுடன் தொடர்புடைய சில ஊழல் போலீஸ் அதிகாரிகள் சார்பாகக் கொன்றதாக கூறினார். குண்டர்களின் நடவடிக்கைகளை பாக்னர் தடுத்ததால் இது நிகழ்ந்தது என்றும் கூறினார்.

அபு-ஜமால் மருத்துவமனையில் கொடுத்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியங்களால் நிராகரிக்கப்படுகிறது. அவர்கள் விசாரணையில் அரசாங்க வழக்குத்தொடுனர்களாலும் போலீசாலும் தவறான சாட்சியம் கொடுக்குமாறு அழுத்தத்திற்கு உட்பட்டதாகக் தங்கள் அறிக்கைகளை கொடுத்தனர். இதில் அபு-ஜமால் எக்கருத்துக்களையும் கூறவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி தான் கொடுத்த முதல் அறிக்கையை அரசாங்க வழக்குத்தொடுனர்களை பார்த்த பின்னர் மாற்றி வேறு அறிக்கை கொடுத்தாக ஒப்புக் கொண்டதும் அடங்கியிருந்தது.

ஜனவரி 2002ல் Yvette Williams பதிவு செய்த பிரமாண அறிக்கை ஒன்று அபு-ஜமால் பாக்னரைச் சுட்டதாகக் கூறியிருந்த ஒரு முக்கிய அரசாங்க சாட்சி Cynthia White அளித்த முக்கியமான சாட்சியத்தை நிராகரித்தார். டிசம்பர் 1981ல் White தன்னிடம் "போலீசார் அவரை திரு.ஜமால் அதிகாரி பாக்னரை சுட்டதைப் பார்த்ததாக பொய் சொல்லக் கட்டாயப்படுத்தியதாகவும், உண்மையில் தான் யார் சுட்டது என்பதைப் பார்க்கவில்லை என்றும் கூறியதாக Williams தெரிவித்தார். Williams மேலும் கூறியது: "ஏன் ஒரு மனிதரைப் பற்றி பொய் சொல்கிறீர்கள் என்று அவரைக் கேட்டேன். அந்த அம்மையார் போலீசாரால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படும் என்று அச்சுறுத்தியிருந்ததாகக் கூறினார்."

இதைத்தவிர, அரசாங்க வக்கீல்கள் இந்த முக்கியமான தவறை திருத்தும் சாட்சியத்தை அளிக்கவில்லை; பாக்னரின் பிரேத விசாரணை பற்றிய விவரத்தையும் கொடுக்கவில்லை: அதில் அவருடைய மூளையில் இருந்து அகற்றப்பட்ட தோட்ட .44 காலிபர் என்று கூறியிருந்தது; முமியாவின் துப்பாக்கி .38 காலிபர்தான். எனவே அந்த துப்பாக்கி அதிக காலிபர் தோட்டவை செலுத்தியிருக்க முடியாது.

பிலடெல்பியா போலீஸ் துறை அபு-ஜமாலின் அரசியல் நடவடிக்கை 1969ல் இருந்து எப்படி இருந்தது என்பதைச் சித்தரித்து இருந்தது. இது FBI உடைய உளவுத்துறை எதிர்த் திட்டத்தின் (COINTELPRO) ஒரு பகுதியாகும். 1982ல் இவ்வாறு மாட்டிவிடப்படுவதற்கு முன்பே அவர் FBI யின் இலக்கிற்கு உட்பட்டிருந்தார், அதே போல் ஒரு முன்னாள் மேயர் மற்றும் போலீஸ் தலைவரான Frank Rizzo மற்றும் போலீஸ் துறையின் இலக்கிற்கும் ஆளாகியிருந்தார். ஏனெனில் அவர் போலீசாரின் மிருகத்தன மற்றும் பிற்போக்குத்தன செயல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவபவர். அவரைச் சிறையில் வைத்ததில் இருந்து, அபு-ஜமால் ஒரு தைரியமான, மரண தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் எதிர்பாளராக, கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு எதிர்ப்பாளராக, பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் சர்வதேச அளவில் படிக்கப்பட்டுள்ளன.

இவருடைய பாதுகாப்பிற்கு உதவ வந்துள்ளவர்களில் Amnesty International, Human Rights Watch போன்ற மனித உரிமைகள் அமைப்புக்கள் உள்ளன. இவருடைய புதிய விசாரணைக்காக போராடும் மற்று அமைப்புக்களில் National Association for the Advancement of Colored People (NAACP) மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றமும் உள்ளன. புகழ்பெற்ற நடிகர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், அறிவாளிகள் என்று அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பவர்கள் இவருக்கு ஆதரவாக அறிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர்.

2000 பெப்ருவரி மாதம் Amnesty International (AI) நியூ யோர்க்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தி புதிய விசாரணை வேண்டும் என்று கோரியது. ஒரு விரிவான 53 பக்க அறிக்கை முதல் விசாரணை மற்றும் மாநில நீதிமன்ற முறையீடுகள் பற்றி ஆராய்ந்து இந்த நடவடிக்கைகள் "நியாயமான விசாரணைக்கு உள்ள குறைந்த பட்ச சர்வதேசத் தரங்களை அடையவில்லை" என்று கூறியது.

இந்த அறிக்கையை அறிமுகப்படுத்திய டாக்டர் வில்லியம் எப். ஷல்ஸ், AI ன் அமெரிக்கப் பிரிவின் நிர்வாக இயக்குனர் "எங்கள் அறிக்கை எப்படி ஜமாலின் விசாரணை சோகம் ததும்பிய முறையில் சாட்சியங்களின் சாட்சியம் பற்றிய முரண்பாடுகள், துப்பாக்கித் தடயம் பற்றி முரண்பாடான சாட்சியம், சந்தேகத்திற்குரிய ஒப்புதல் வாக்குமூலம், தக்க சட்டபூர்வ பிரதிநிதித்துவம் இல்லாதது, நீதிமன்றத்தின் ஒருபக்கச் சார்பு, நீதித்துறை விசாரணையை அரசியல்மயப்படுத்தியது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியது" என்றார்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை, "The fight to free Mumia Abu-Jaman and the defense of democratic rights" என்று உலக சோசலிச வலைத் தளத்தில் ஏப்ரல் 23, 1999ல் வெளியிடப்பட்டது. இது இன்னும் முழுவதும் பொருத்தமானதாகத்தான் உள்ளது. இந்த அறிக்கையின் ஒரு பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டது:

"முமியா அபு-ஜமாலின் பாதுகாப்பு அமெரிக்க மற்றும் சர்வதேரீதியாக அரசியல் அடக்குமுறை, இனவெறி மற்றும் மரண தண்டனை இவற்றிற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய புள்ளியாக உள்ளது. இவருடைய வழக்கில் உள்ள பிரச்சினைகள் ஜனநாயக உரிமைகள் முழுவதையும் பாதுகாத்தல் மற்றும் சமூக நீதிக்குப் போராடுதல் என்று உள்ளது. இந்த அரசியல் கைதியை மரணதண்டனைக்கு உட்படுத்துலை எதிர்க்கும் பிரச்சாரத்திற்கு மிகவும் முக்கியமானது ஒரு புதிய விசாரணை நடத்தப்பட்டு அவர் விடுதலை அடையப்பட வேண்டியது ஆகும். இது இன்னும் பரந்த அளவில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் கவனத்தையும் ஆதரவையும் பெற வேண்டும்."

"அதிகாரிகளின் நோக்கம் பற்றி எவ்வித நப்பாசைகளையும் கொள்ளக்கூடாது. அவர்கள் முமியாவிற்கு எதிரான தங்கள் அரசியல் மோதலின் இறுதிக்கட்டத்தை முடித்துவிட உறுதியாக உள்ளதுடன், அவரை இறுதியாக மெளனமாக்கிவிட விரும்புகின்றனர். அவருக்கு மரண தண்டனை என்பது நீண்டகால விளைவுகளைத் தரும். இத்தகைய உயர்மட்டத்திலான ஒரு அரசாங்க கொலை, பல தசாப்தங்களில் ஒரு அரசியில் கைதியை தூக்கில் இடுதல் என்பது, இன்னும் கூடுதலான வகையில் அரசியல் அடக்கு முறையை தீவிரமாக்குவதுடன், ஜனநாயக, குடியுரிமைகள் மீது தடைகள் தீவிரமாக்கப்படும். முமியாவை ஒரு உதாரணமாக்க அதிகாரிகள் விரும்புகின்றனர்; அதனூடாக எவ்விதமான எதிர்க்கருத்துக்களையும் மிரட்டல் மற்றும் அச்சம் ஆகியவற்றினூடாக இல்லாதொழித்துவிடும் சூழலை உருவாக்க முயல்கின்றனர்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved