WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
Obama's "carrot and stick" approach to Iran
ஈரானில் ஒபாமாவின் "இனிப்பும், குண்டாந்தடியும்" அணுகுமுறை
By Peter Symonds
25 March 2009
Use this version to
print | Send
this link by email | Email
the author
கடந்த வெள்ளியன்று பெரிதும் விளம்பரப்படுத்த வகையில் அமெரிக்க நிர்வாகம் ஈரான்
பற்றி சாதகமான முறையில் ஜனாதிபதி ஒபாமா பேசியுள்ள ஒளிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது; இது பாரசீக
புத்தாண்டான நவ்ரோஸை ஒட்டி வந்துள்ளது. இது சமாதான தொனியை வெளிப்படுத்தியபோதிலும், அடிப்படை
மூலோபாயம் ஒபாமா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியிருந்த "இனிப்பும்,
குண்டாந்தடியும்" என்ற அணுகுமுறையைத்தான் நேர்த்தியாக கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி தெஹ்ரானுக்கு கணிசமான இனிப்பை கொடுக்க முன்வந்துள்ளார்.
"முழுப் பிரச்சினைகளையும் ஆராயும் இராஜதந்திர முறை", "இஸ்லாமிய ஈரானியக் குடியரசு அனைத்து நாடுகளின்
மத்தியில் அதன் தகுந்த இடத்தைப் பெறும்" வாய்ப்பு என்பவே அவையாகும். முன்பு அமெரிக்க அதிகாரிகளால் தவிர்க்கப்பட்ட
இஸ்லாமிய ஈரானியக் குடியரசு என்ற குறிப்பு "ஆட்சி மாற்றம்" என்பது இப்பொழுது நினைப்பில் இல்லை என்பதைச்
சுட்டிக் காட்டுவதுடன் மற்றும் 1979 ஈரானியப் புரட்சிக்கு பின்னர் உருவாகிய நாட்டிற்கு அமெரிக்கா அங்கீகாரம்
கொடுக்கக்கூடும் என்ற கருத்தைக் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் ஒபாமா ஈரான் அதன் "தகுந்த இடத்தை... பயங்கரவாதம்
அல்லது ஆயுதங்கள் மூலம்" அடையமுடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். "ஆயுதங்கள்", "பயங்கரவாதம்"
என்பவை தெஹ்ரான் அதன் யுரேனிய அடர்த்தித் திட்டத்தைக் கைவிட்டு, மத்திய கிழக்கில் அமெரிக்காவில் முக்கிய
நட்பு நாடாக இருக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்போல்லா போன்ற அமைப்புக்களுக்கு
ஆதரவு கொடுப்பதையும் நிறுத்த வேண்டும் என்பதற்கு சங்கேதச்சொற்கள் ஆகும். அச்சுறுத்தல்கள் பற்றி ஒபாமா
நிராகரித்துள்ளதுடன், ''நியாயமான அணுகுமுறைக்கு'' அழைப்புவிடுகையில், பொருளாதாரத் தடை தொடர்ச்சியாக
இருப்பதுடன், பின்னணியில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடர்கின்றது.
தெஹ்ரான் இதை எதிர்கொண்டுள்ள விதம் எச்சரிக்கை உணர்வைக் காட்டுகிறது என்பதில்
வியப்பு ஏதும் இல்லை. ஒபாமாவின் ஒளிப்பதிவு உரைக்கு மறுநாள் பேசிய ஈரானிய உயர் தலைவரான அலி காமநேய்
அப்பட்டமாக "சொற்களில் மாற்றம் இருந்தால் மட்டும் போதாது" அமெரிக்கக் கொள்கைகள், நடவடிக்கைகளிலும்
மாற்றம் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆட்சியின் நெருக்கமான ஆதரவாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த
உரையில், உறவுகளை முன்னேற்றுவிக்க இருக்கும் அனைத்து தடைகளை வரிசைப்படுத்திக் குறிப்பிடப்பட்டது: "மூன்று
தசாப்தங்களாக இருக்கும் விரோதப் போக்கு, பொருளாதாரத் தடைகள், 1900 களில் ஈராக்கிற்கு அதன் ஈரானுக்கு
எதிரான போரில் கொடுத்த ஆதரவு, இஸ்ரேல் அதன் குற்றங்களுக்கு வாஷிங்டனுடைய ஆதரவு'' என்பனவே அவையாகும்.
ஆனால் பேச்சுவார்த்தைகள் கூடாது என்ற வகையில் காமனேய் கூறவில்லை. அதன்
அமெரிக்க எதிர்ப்பு உரைகள் இருந்தாலும், ஆட்சி ஈரானிய முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிபலிக்கிறது
என்பதுடன் அதன் மூலோபாயங்களும் பொருளாதார நலன்களும் விரிவு அடையும் என்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன்
இணைந்து செயல்படக்கூடிய விதத்தில் உடன்பாட்டிற்கு வரமுடியும். அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான், ஈராக்
படையெடுப்புக்களுக்கு தெஹ்ரான் அமைதியாக உதவியளித்தது. மேலும் ஈராக்கில் கடந்த ஆண்டு ஷியைட் போராளிகளை
கட்டுப்படுத்தியதின் மூலம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அங்கு உறுதியாக்கப்பட்டதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
ஒபாமாவின் ஒளிப்பதிவு காட்சியின் ஒரு நோக்கம் ஜூன் மாதம் ஈரானில் வரவிருக்கும்
ஜனாதிபதித் தேர்தல்களின் விளைவுகளில் செல்வாக்கை காட்டுவது ஆகும். ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜட் 2005
தேர்தல்களில் வெற்றிபெற்றதற்குக் காரணம் புஷ் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் பற்றி மக்கள் கொண்டிருந்த சீற்றத்தை
அவர் பயன்படுத்தியதாகும். அவர் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தொடர இருப்பதாகக் கூறி அமெரிக்காவுடன்
எந்த உறவுகளும் இல்லை என்றும் கூறவிட்டார்.
அஹ்மதிநெஜட்டிற்கு பதிலாக அமெரிக்காவின் கருத்தை ஏற்கும் மற்றவர்கள் வந்தாலும்
கூட, ஈரானிய ஜனாதிபதிக்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் இறுதி முடிவு எடுக்க
முடியாது. அமெரிக்கா காமனேயுடன் இணங்கி நடக்க வேண்டியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
கருத்தின்படி ஈரான் கொள்கை பரிசீலனையின் ஒரு பகுதியாக ஒபாமா நிர்வாகம் நேரடியாக ஈரானின் தலைமைத்
தலைவருக்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையை தெளிவுபடுத்தி ஜனாதிபதியின் கடிதத்தை அனுப்பலாமா என்று
விவாதித்து வருகிறது.
ஒபாமாவின் அணுகுமுறை புஷ் நிர்வாகத்தின் தன்மையில் இருந்து ஒரு தந்திரோபாய
மாற்றத்தைத்தான் அளிக்கிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையில் பிரிவுகள் ஒபாமாவின் தேர்தலை
புஷ்ஷின் ஈராக் போர் தோற்றுவித்த பேரழிவில் இருந்து அமெரிக்க நலன்களை மீட்கும் வழிவகை என்றுதான்
கருதுகின்றன. எனவே ஈரானுடன் ஒருவித சமரசம் என்பது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்த
முக்கிய கூறுபாடு என்பதுடன் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் இயற்கை வளங்கள் கொழித்த மந்திய
ஆசியாவில் வாஷிங்டனின் முன்னுரிமைகளுக்கு மறுகுவிப்புக் காட்ட பெரிதும் உதவும்.
குறிப்பிடத்தக்க வகையில், ஈரானைப் பொறுத்தவரையில், ஆப்கானிஸ்தான் பற்றியே
அமெரிக்க இராஜதந்திர ஆரம்ப முயற்சிகள் உள்ளன. முதல் தடவையாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின்
ஒரு மூத்த தூதரை மாஸ்கோவிற்கு இந்த வாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)
கூட்டத்திற்கு அனுப்பி வைக்கிறது; இக்கூட்டம் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எழுச்சி பற்றி விவாதிக்க
உள்ளது. இந்த முடிவு ஈரானியப் பிரதிநிதிகளுடன் பேசும் சாத்தியப்பாட்டை வழங்கியுள்ளது. அதுவும்
SCO வில் ஒரு
பார்வையாளர் அந்தஸ்த்தைக் கொண்டுள்ளது. 2001ல் சீனாவும் ரஷ்யாவும் மத்திய ஆசியாவில் அமெரிக்கச்
செல்வாக்கிற்கு ஈடு கொடுக்கும் மாற்று என்ற வகையில்
SCO வை நிறுவன.
மார்ச் 31ம் தேதி The
Hague ல் நடக்க இருக்கும் மாநாட்டிற்கும் ஈரானை வாஷிங்டன்
அழைத்துள்ளது. அக்கூட்டம் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான், அண்டை நாடு பாக்கிஸ்தான்
ஆகியவற்றில் உள்ள ஆழ்ந்த நெருக்கடி பற்றி விவாதிக்க உள்ளது. அக்கூட்டம் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்
ஹில்லாரி கிளின்டனுக்கு ஈரானிய தூதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை கொடுக்கும். இத்தாலியும்
G8 ஜூன்
டிரிஸ்டேயில் நடப்பதை ஒட்டி ஆப்கானிஸ்தான் பற்றி வெளியுறவு மந்திரிகள் நடத்தும் கூட்டத்தில் தெஹ்ரானை கலந்து
கொள்ள அழைத்துள்ளது. தான் இக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமா என்பது பெற்றி தெஹ்ரான் இன்னும் குறிப்பு
காட்டவில்லை.
ஆப்கானிஸ்தான் பிரச்சினையில்கூட, அமெரிக்க ஈரானிய நலன்கள்
வித்தியாசப்படுகின்றன. ஈரானிய உதவியைக் கோருகையிலும் அமெரிக்கா ஆக்கிரமிப்பு எழுச்சிப் பிரிவுகளுடன் சற்று
உடன்பாடுகளை நாடுகிறது. காபூலில் தலிபானின் பிரிவுகளுக்கு எவ்வித அரசியல் செல்வாக்கையும் கொடுக்கும் எந்த
உடன்பாடும் ஈரானுக்கு ஏற்புடைத்தது அல்ல. ஏனெனில் அது 2002 இல் தலிபான் எதிர்ப்புப் பிரிவுகளுக்கு ஆதரவு
கொடுத்திருந்தது. அமெரிக்க இரட்டை வேஷத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஈரானின் பாராளுமன்ற தலைவரான
அலி லாரிஜனி சமீபத்தில் "ஒவ்வொரு நாள் காலையும் சன்னல் கதவைத் திறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக
முழங்குகின்றனர். ஆனால் தலிபானுடன் இரகசியமாக பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்" என அறிவித்தார்.
இன்னும் கூடுதலான தடை ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகும். இது அணுவாயுதங்களை
உற்பத்தி செய்யும் நோக்கம் கொண்டது என்று வாஷிங்டன் கூறுகிறது. தன் அணுசக்தி திட்டங்கள் முற்றிலும் பொது
நோக்கங்களுக்குத்தான் என்று தெஹ்ரான் வலியுறுத்தி, அதன் யூரேனிய அடர்த்தி ஆலையை மூடவும் நீர் ஆராய்ச்சி
நிலையக் கட்டுமானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உறுதியாக மறுத்துள்ளது. இஸ்ரேல் சிறிதும் மறைக்காமல்
ஈரானிய அணு சக்தி நிலையங்களை குண்டுவீசி தகர்த்து இஸ்ரேலின் சொந்த ஆயுதங்களை ஈரான் எதிர்கொள்ள
முடியாமல் நிறுத்த முயல்வது சமரசத்திற்கான எந்தவித வாய்ப்பையும் சிக்கலாக்குகின்றது. ஒரு வலதுசாரி,
இராணுவ ஆட்சி இஸ்ரேலில் பெஞ்சமின் நேத்தென்யாகுவின்கீழ் வந்திருப்பது இந்த ஆபத்துக்களை உயர்த்தித்தான்
காட்டுகிறது.
ஈரானுடன் சமரசம் என்பது அமெரிகாற்காவிற்கு சில நலன்களைக் கொடுக்கும்.
குறுகிய காலத்தில் இவை ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவத்திற்கான விநியோகங்கள் செல்ல பாதை
கொடுக்கப்படும். இது பாக்கிஸ்தானில் உள்ள அதிகரித்துவரும் ஆபத்தான பாதைகளுக்கு மாற்றீடாக இருக்கும்.
நீண்டகால அடிப்படையில் ஈரான்தான் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உறுதிப்பாட்டிற்கு முக்கியமாக இருப்பது.
ஆனால் அமெரிக்க ஈரான் உடன்பாடு பரந்த முறையில் ஏற்பட்டு தெஹ்ரானின் நிலைமை சீர்படுத்தப்படுவது என்பது
அப்பகுதியில் இருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளான இஸ்ரேல் மட்டும் இல்லாமல், சவுதி அரேபியா, எகிப்து,
கல்ப் நாடுகளிடம் இருந்து தவிர்க்க முடியாமல் எதிர்ப்பை ஏற்படுத்தும்.
புஷ்ஷைப் போலவே, ஒபாமா அமெரிக்க மூலோபாய நலன்களைப் பொறுத்தவரையில்
சமரசம் செய்து கொள்ளக்கூடியவர் அல்லர். அமெரிக்கா விரும்பும் வகையில் தெஹ்ரான் பேச்சுவார்த்தகைகள் நடத்தத்
தயாரென்றால் ஒபாமாவின் ஒளிப்பதிவு இந்த இருவழிக் கொள்கையின் ஒரு பகுதியாகும். சனிக்கிழமை அன்று
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் விளக்கியது: "திரு. ஒபாமாவின் சொற்கள் ஈரானை மட்டும் இலக்கு
கொள்ளவில்லை. அவை ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் சீனா, ரஷ்யாவையும் இலக்கு பார்வையாளர்களாக
கொண்டவை. மூத்த அமெரிக்க அதிகாரிகள் இவருடைய நிர்வாகம் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின்
நிர்வாகத்திடம் இருந்து வித்தியாசமானது என்று உலகை நம்ப வைக்க விரும்புகின்றதுடன், ஈரானுக்குக் கூடுதலான
சந்தர்ப்பத்தை கொடுப்பதாகவும் கூறுகின்றனர். தெஹ்ரான் இவற்றை நிராகரித்து தன் அணுசக்தித் திட்டத்தை
தொடரும் என்றால், வாஷிங்டன் வெகு எளிதில் நிதிய தடைகள் அல்லது இராணுவ நடவடிக்கை போன்ற நிர்ப்பந்திக்கும்
நடவடிகைகளுக்கு பரந்த ஆதரவை பெறலாம் என அவர்கள் கூறுகின்றனர்."
ஈரானிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தத் தயார் எனக் கூறிக்கொண்டிருக்கும்போதே,
அமெரிக்க மத்திய கிழக்கில் இருக்கும் அதன் நட்பு நாடுகளுக்கு (குறிப்பாக இஸ்ரேலுக்கு) அவற்றின் நலன்கள்
பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிறது. அதே நேரத்தில் சிரியாவிடம் கூடுதலான அக்கறையை வாஷிங்டன் காட்டுகிறது;
இதுதான் அப்பகுதியில் முக்கிய நட்பு நாடு ஆகும். இது தண்டனை தடைகள் அல்லது இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக
தெஹ்ரானை தனிமைப்படுத்தும் நோக்கத்தை கொண்டது. இறுதிப் பகுப்பாய்வில் கூடுதலான நயமான முறை
இருந்தாலும், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை ஈரானை பொறுத்தவரையில் அதன் முந்தைய ஆட்சியைவிட அடிப்படையில்
வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை.
இராணுவவாத குணமுடைய, இஸ்ரேலியச் சார்பு டென்னிஸ் ரோஸை பாரசீக
வளைகுடாப் பகுதிக்கு ஒபாமாவின் சிறப்பு தூதர் என நியமிக்கப்பட்டுள்ளமையே இது பற்றி மிகஅதிக கருத்துக்களை
தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு இருகட்சி கொள்கை மையம் (Bipartisan
Policy Center), மற்றும் வலதுசாரி மத்தியகிழக்கு
கொள்கைக்கான வாஷிங்டன் அமைப்பு (Washington
Institute for Near East Policy) என்னும் இரு
சிந்தனைக் குழுக்களின் அறிக்கை தயாரிப்புக்களில் ரோஸ் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். அவைதான்
அமெரிக்கக் கோரிக்கைகளை ஈரான் ஏற்கத் தவறினால் பேச்சுவார்த்தைகளிடம் இருந்து தவிர்க்க முடியாமல் இராணுவ
மோதலுக்கு வழிவகுக்கும் விரிவான மூலோபாயத்தைக் கொடுத்தவை ஆகும். |