WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
US-Europe tensions erupt on eve of G20 summit
அமெரிக்க-ஐரோப்பிய அழுத்தங்கள் ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன் வெடிக்கின்றன
By Chris Marsden
2 April 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
முன்னனி பொருளாதார நாடுகளின்
G20 உச்சிமாநாட்டிற்கு
முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெலும் புதனன்று
ஒரு அசாதாரண கூட்டு செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, இன்னும் கூடுதலான ஊக்கப் பொதித் திட்டங்களை உலகப்
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு
தங்கள் பொது எதிர்ப்பை கோடிட்டுக் காட்டினர்.
ஜனாதிபதி ஒபாமா உச்சிமாநாடு நடக்க இருக்கும் லண்டனில் அரசியாருடன் ஒரு முறைசார்ந்த
கூட்டத்தில் இருக்கையில், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவுடன் தனியே பேச்சுக்களை நடத்த இருக்கையில்,
கண்டத்தில் உள்ள இரு பெரியநாடுகளின் தலைவர்கள் செய்தியாளர் கூட்டம் நடத்தி வாஷிங்டனுடன் தங்கள் கருத்து வேறுபாட்டை
வலியுறுத்தினர். அவர்கள் இணைந்து தோன்றியது, 1930 களுக்கு பின்னர் ஆழ்ந்த சரிவு ஏற்பட்டுள்ளதை ஒரு பொது
சர்வதேச கொள்கையை கொண்டுவந்து சமாளிப்பதற்காக என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த உச்சிமாநாடு,
அதிக பட்சம் பெரிய சக்திகளுக்கு இடையே பூசல்கள் கடினமாகியிருப்பதை அதிகம் காட்டாத வெற்று, தெளிவற்ற
அறிக்கையை தோற்றுவிப்பதுடன் நின்றுவிடும் என்று உறுதிப்படுத்துகிறது.
மேர்க்கெலும் சார்க்கோசியும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஊக்கப் பொதித் திட்டங்களை
விரிவாக்க வேண்டும் என்ற அமெரிக்க அழைப்புக்களை அப்பட்டமாக நிராகரித்ததுடன், பதிலாக ஒபாமாவையும்
மற்ற G20
தலைவர்களையும் ஹெட்ஜ் நிதி மற்றும் அதேபோன்ற கட்டுப்பாடற்ற நிறுவனங்கள் உள்பட நிதிய அமைப்புக்கள்
பற்றியதில் வலுவான, கூடுதலான சர்வதேச ரீதியான மேற்பார்வை, கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியதற்கு குவிப்பு
காட்டுமாறும், இன்றைய உச்சிமாநாட்டில் ஒற்றுமை காண்பதற்கு நிபந்தனை என்ற முறையில் ஆங்காங்கு சிவப்புக்
கோடுகளையும் போட்டுள்ளனர்.
அமெரிக்க நிதி நிறுவனங்களை எந்தத் தீவிர சர்வதேச கண்காணிப்பிற்கும்
உட்படுத்துவதை அமெரிக்கா பிடிவாதமாக எதிர்க்கிறது.
செய்தியாளர் கூட்டத்தில் சார்க்கோசி, "ஒதுக்க விளைவுகளில், புதிய கட்டுப்பாடு
ஒரு முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.... இதில் பேச்சு வார்த்தைக்கு
இடமில்லை." என்றார்.
உச்சி மாநாடு இதையும் மற்ற முக்கிய நோக்கங்களையும் அடையவில்லை என்றால்
முன்னர் அச்சுறுத்தியபடி தான் வெளியேறிவிட மாட்டேன் என்றார்; ஏனெனில், "அங்கேலா மேர்க்கெலும் நானும்
ஒரே பக்கத்தில்தான் உள்ளோம்... நாங்கள் அந்த வரலாற்று நிகழ்வை (உச்சிமாநாடு) கடக்க
விரும்புகிறோம். வரலாற்றை எதிர்கொள்ளும்போது, அதை ஒதுக்கிவிட்டு, மீறிவிட்டு செல்ல முடியாது."
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் பெயரைக் குறிக்காமல் சார்க்கோசி தவிர்த்தார்;
ஆனால் அவைதான் நெருக்கடிக்கு முக்கிய பொறுப்பு என்பதை தெளிவாக உட்குறிப்பின்மூலம் வெளிப்படுத்தினார்.
"நாங்கள் விரல்களால் சுட்டிக் காட்டவில்லை. ஆனால் ஒரு புதிய உலகைக் கட்டமைக்க வரலாற்று வாய்ப்பு
ஆகும்; அது வெறுமே கடக்கப்பட்டுவிடுவதை நாங்கள் விரும்பவில்லை."
பிரான்ஸும் ஜேர்மனியும் "ஒரே குரலில்" பேசும் என்று அவர் தொடர்ந்தார்.
"நாங்கள் லண்டனில் முடிவு வரவேண்டும் என்று விரும்புகிறோம், உறுதியான முடிவுகள் வரவேண்டும்."
ஐரோப்பா கூடுதலாக ஊக்கப் பொதிகளுக்கு செலவிடவேண்டும் என்னும் வாஷிங்டனுடைய
கோரிக்கையுடன் சமரசத்திற்கு இடமில்லை என்று மேர்க்கெல் உறுதியாகக் கூறிவிட்டார். "கட்டுப்பாட்டிற்கும்
பொருளாதாரத் திட்ட வளர்ச்சிகளுக்கும் இடையே பேரம்பேசும் வகையிலான பேச்சுக்களுக்கான இடம் உச்சிமாநாடு
அல்ல" என்று வலியுறுத்திய அவர், "ஒரு புதிய வடிவக் கட்டமைப்பு, ஒரு புதிய அரசியலமைப்பு முறை நிதியச்
சந்தைகளுக்கு வேண்டும்; அவை "மிக உறுதியான விதிகளை" தளமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வரி ஏய்ப்பு புகலிடங்கள் கரும்பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும் என்னும்
பிரான்ஸ்-ஜேர்மனிய கோரிக்கை பற்றிக் குறிப்பிட்டு, "நம்முடைய விதிகளுக்கு உட்படாதவர்களுடைய பெயர்கள்
இழிவுடன் குறிப்பிடப்பட வேண்டும்" என்பதைத் தெளிவுபடுத்தினார். "எந்த இடமும், நிறுவனமும், விளைபொருளும்
கட்டுப்பாடு இல்லாமல், தக்க வெளிப்பாட்டுத் தன்மை இல்லாத விதத்தில் இருக்கக் கூடாது என்று வாஷிங்டனில்
முடிவு எடுத்தோம். அது வேண்டும் என்றால், பின் கட்டுப்பாட்டை விரும்பாத இடங்களின் பெயர்கள்
வெளியிடப்படவேண்டும் என்றுதான் பொருள்."
ஹெட்ஜ் நிதிகள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு நிர்வாகிகளின் ஊதியங்களுக்கு
விதிகள் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
சார்க்கோசி மற்றும் மேர்க்கெலின் அறிக்கைகள், ஒபாமாவிற்கு மதிப்பு என்பதை
குறைக்காத விதத்தில் இருந்தாலும்கூட, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பிளவு உள்ளது என்பதை
வெள்ளை மாளிகை மறைக்கும் முயற்சிகளை குறைத்துவிடும் தன்மையில் உள்ளன. முன்னதாக புதனன்று ஒபாமா
வெளியுறவு அலுவலகத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளனுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தை
நடத்தி, அதில் கூறினார்: "இதில் தொடர்புடைய பலரிடையே கருத்து வேறுபாடுகள் பெரிதும்
மிகைப்படுத்தப்பட்டுள்ளன." அதன்பின் "இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகக் கடுமையான நெருக்கடியை
எதிர்கொண்டிருக்கையில்" உடன்பாடு மிகவும் முக்கியம் என்ற எச்சரிக்கையை விடுத்தார்.
ஒபாமா, நாடுகள் கூடுதலான ஊக்கப் பொதிகளுக்கு நிதியம் கொடுக்க வேண்டும்
என்ற தன் அழைப்பை மீண்டும் வலியுறுத்திய வகையில், தன் நுகர்வோர் செலவினத்தின் வளர்ச்சியை பெருக்கும்
விதத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மட்டும் அமெரிக்கா இதைச் செய்துவிட முடியாது என்றார்.
இது பிரெளனின் சொந்த முயற்சியான பிரச்சினையை குறைவாக காட்டுவதற்கு
முரணாகிவிட்டது; பிரிட்டன் இன்னும் அதிகமாக ஊக்கப் பொதி நடவடிக்கைகளை எடுக்க இயலாது என்று பாங்க் ஆப்
இங்கிலாந்தின் கவர்னர் மெர்வின் கிங் அவரிடம் கூறியிருந்தார்.
G20 நாடுகள்
ஏற்கனவே $2 டிரில்லியனுக்கும் மேலான ஊக்கப் பொதி நிதிய முறைக்கு ஒப்புக் கொண்டுள்ளன என்ற உண்மையை
சமீப காலத்தில் பிரெளன் சுட்டிக் காட்டியுள்ளபோது, ஒபாமா, உலகம் அதன் மீட்பு உந்துதலுக்கு அமெரிக்க
நுகர்வோர் "தீராத ஆர்வத்துடன் செலவழிப்பதை மட்டும்" நம்பியிருக்க முடியாது என்று அப்பட்டமாக
அறிவித்தார்.
"அமெரிக்கா எஞ்சின் போல் செயல்பட்டுவருவதற்கு உலகம் பழகிவிட்டது. எங்கள்
இலக்கு ஒவ்வொரு நாடும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை உறுதியாக செய்ய வேண்டும் என்பதுதான்.
ஒவ்வொரு நாடுமே விரைவாகச் செயலாற்ற வேண்டும்" என்றார் அவர்.
செய்தியாளர் கூட்டத்திற்கு முன்பு மேர்க்கெலும் சார்க்கோசியும் தாங்கள்
அமெரிக்கக் கோரிக்கையான அதிக ஊக்கப் பொதித் திட்டங்களை ஏற்பதற்கில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு மார்ச் 16ல் கூட்டாக எழுதிய கடிதத்தில் இருவரும் அனைத்து நாடுகளும்
"ஒரு புதிய உலக நிதிய கட்டமைப்பிற்கு ஆதரவு தரவேண்டும் என்றும்", "ஒருமித்த குரலைக் கொண்டுதான் நாம்
நம்முடைய பொது நலன்களைக் காப்பதற்கு சக்தி வாய்ந்த முறையில் பேச முடியும்" என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
மார்ச் 20 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு
ஐரோப்பியப் பொருளாதாரங்களில் கூடுதலான நிதியை உட்செலுத்துவதற்கான அழுத்தத்தை நிராகரித்து, கிழக்கு
ஐரோப்பிய நாடுகளுக்கு கிடைக்கும் கடன்களை இரு மடங்காக 50 பில்லியன் யூரோ வரை இருக்கும் என்றும்
மற்றும் ஒரு 75 பில்லியன் யூரோக்கள் சர்வதேச நிதிய அமைப்பின் கடன் திறனில் இருந்து கொடுக்கப்படும் என்றும்
கூறியது.
இதன் பின்னர் சார்க்கோசி தானும் மேர்க்கெலும் "ஒரு ஐரோப்பிய பார்வையை
மதிப்புக்கள் பற்றி தொடர்வோம் என்றும் அவை ஐரோப்பிய மதிப்புக்களாக இருக்கும்" என்றும் அறிவித்தனர்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நிலைப்பாடு ஜப்பானுடையதில் இருந்தும்
வேறுபட்டுள்ளது; ஜப்பானின் பிரதம மந்திரி டாரோ அசோ மிக அதிக பொது செலவுகளின் ஆபத்து பற்றிய
ஜேர்மனியின் எச்சரிக்கைகளை உதறித் தள்ளினார். ஜப்பானின் சொத்துக்கள் விலை குமிழி 1990 களின்
தொடக்கத்தில் வெடித்தது பற்றிக் குறிப்பிட்ட அவர், "எங்களுக்கு என்ன தேவை என்பது எங்களுக்குத் தெரியும்;
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை முதல் தடவையாக இந்நிலையை எதிர்கொள்ளக்கூடும். நிதியத்
திரட்டின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நாடுகள் உலகில் இருக்கின்றன என நினைக்கிறோம்; சில நாடுகள் அதைப்
பற்றி தெரிந்திருக்கவில்லை; எனவேதான் ஜேர்மனி தன் கருத்துக்களை இவ்விதம் கூறியுள்ளது" என்றார்.
அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இருக்கும் வேறுபாடுகள் அறியாமையின் விளைவு
என்பதில் இருந்து அப்பால்தான் உள்ளது. இவை உலக முதலாளித்துவ முறையின் அமைப்பிற்குள் இருக்கும் அடிப்படை
வேறுபாடுகளைப் பிரதிபலிக்கின்றன; இவை உலக பெருளாதாரப் பின்னடைவு தோன்றிய அளவில் முறியும் நிலைக்கு
கொண்டுவரப் பட்டுள்ளன.
ஒபாமா நிர்வாகம் அமெரிக்க டாலரின் சலுகை பெற்ற நிலையைப் பயன்படுத்தி
டிரில்லியன் கணக்கிலான பொது நிதிய டாலர்களை அமெரிக்க வங்கி முறையில் உட்செலுத்துகிறது; அமெரிக்க
வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை மூன்று மடங்கு அதிகமாக்கியுள்ளது; அமெரிக்க தேசியக் கடனையும் மிகவும்
பெரிதாக்கியுள்ளது. $787 பில்லியன் ஊக்கப் பொதி என நிர்வாகம் கடந்த மாதம் இயற்றியது நிதிய முறையில்
வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு ஒரு அடிக்குறிப்பு போல்தான்.
குறுகிய காலத்தில் இக்கொள்கை உலக நிதியச் சந்தைகளில் இருக்கும் அனைத்துத்
தனியார் மூலதனத்தையும் அமெரிக்காவிற்குள் ஈர்த்துவிடும் தன்மையுடையது; இதையொட்டி மற்ற நாடுகளுக்கு
பெரிதும் தேவைப்படும் கடன் கிடைக்காமல் போய்விடும். நீண்ட காலத்தில் இது பணவீக்க ஏற்றத்திற்கான
நிலைமைகளை ஏற்படுத்தும்; டாலர் நெருக்கடியையும் தோற்றுவிக்கும்; அவை அமெரிக்காவிற்கு கடன் கொடுத்துள்ள
உலக நாடுகளுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் மிகப் பெரிய நிதியை ஒதுக்குவதற்கு அதிகம்
விரும்பவில்லை; அவற்றால் இயலவும் முடியாது. இருந்த போதிலும்கூட, ஊக்கப் பொதி நடவடிக்கைகளை அவை
செயல்படுத்தியுள்ளன; ஜேர்மனி 100 பில்லியன் டாலர், பிரான்ஸ் 34 பில்லியன் டாலர் என்று கொடுத்தாலும்,
அவை அதிக பொருளாதார, அரசியல் தடைகளை எதிர்கொண்டுள்ளன.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இரண்டுமே தங்கள் தொழில்துறைத்தளத்தை காக்கும்
நடவடிக்கைகளை விரும்புகின்றன; சார்க்கோசி பிரான்சின் கார் தொழிலுக்கு நிதியை உட்செலுத்துகிறார்;
மேர்க்கெல் பள்ளி மறுகட்டமைப்பு மற்றும் 2,500 யூரோக்கள் ஊக்கத் தொகையாக பழைய, புதிய கார்கள்
வாங்க, வணிகம் செய்வதற்கு கொடுக்க முயற்சி எடுத்துள்ளார்.
அதன் வணிகப் பற்றாக்குறை பற்றி பிரான்ஸ் அதிகம் கவலை கொண்டுள்ளது; அது
இப்பொழுது மிகப் பெரிய முறையில் 71.4 பில்லியன் டாலராக உள்ளது. ஜேர்மனி தன் ஏற்றுமதி உந்ததுல்
நிறைந்த பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அது தளமாக கொண்டுள்ள உற்பத்தித் துறையை நிலைக்க
வைக்கவும் விரும்புகிறது.
இரு நாடுகளில் எதுவுமே, கூடுதலான ஊக்கப் பொதி உலகப் பொருளாதாரத்தை
விரைவில் அதன் நெருக்கடியில் இருந்து மீட்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக அவை அதிக
செலவுகள் உலகத்தையும் அவர்களுடைய நாடுகளையும் தலைதெறித்து ஓடும் பணவீக்கத்தில் தள்ளிவிடும் என்று
நினைக்கின்றனர். அரசாங்கக் கடன்கள் உயர்ந்துள்ள நிலையில், அதிலும் முக்கிய பொருளாதாரங்கள் ஸ்பெயின்,
கிரேக்கம், கிழக்கு ஐரோப்பா போன்ற நலிந்த பொருளாதாரங்களை காக்கும் வாய்ப்பை நழுவவிட்டால், இது
யூரோ நாணயம் தப்பிப் பிழைத்தலுக்கு ஆபத்து கொடுத்துவிடும்-.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
(OECD) ஜேர்மனியின் பொருளாதார இந்த ஆண்டு 5.3
சதவிகிதம் சுருக்கம் அடையும் என்றும், பிரான்சுடையது 3.3 சுருங்கும் என்றும் கணித்துள்ளது. ஜேர்மனியின்
Commerzbank
இச்சுருக்கம் இவ்வாண்டு 6 முதல் 7 சதவிகிதம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது; இது போருக்குப் பிந்தைய
ஜேர்மனியில் மிக மோசமான விகிதம் ஆகும். நாட்டில் தொழில்துறைக்கு வந்துள்ள ஆர்டர்கள் 8 சதவிகிதம்
குறைந்துவிட்டன.
யூரோப் பகுதி முழுவதுமே செப்டம்பர் 2008ல் இருந்து பொருளாதாரப்
பின்னடைவில் உள்ளது; இது இந்த ஆண்டு 4 சதவிகிதத்திற்கும் மேல் சுருங்கும் என்றும் வேலையின்மை 10
சதவிகிதத்திற்கும் மேல் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு அரசியல் நிலைமையும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது; குறிப்பாக
சார்க்கோசி தன்னை ஆங்கிலோ-அமெரிக்க பாணி முதலாளித்துவத்திற்கு ஒருவகை ஜனரஞ்சக எதிராளியாக தன்னைக்
காட்டிக்கொள்ள அவர் முயன்றுள்ளார். சமீபத்திய மாதங்கள் கிரேக்கத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பெரும்
வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் கண்டுள்ளது; பிரான்ஸும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த திரட்டுக்கள்
பலவற்றையும் ஆலை ஆக்கிரமிப்புக்களையும் கண்டுள்ளது.
ஃபைனான்சியல் டைம்ஸில் மார்ட்டின் வொல்ப் பற்றாக்குறை மற்றும் உபரி
நாடுகளுக்கு இடையே இருக்கும் வட்டிவிகிதம் தற்பொழுதைய பொருளாதார நெருக்கடியில் ஒரு முக்கிய காரணி
என்று குறிப்பிட்டு, அதன் விளைவாக அவை கொடுக்கும் விடைகள் ஆராயப்பட வேண்டும் என்று சுட்டிக்
காட்டியுள்ளார்.
புதனன்று வெளிவந்த கட்டுரை ஒன்றில் அவர் எழுதுகிறார்: "அமெரிக்காவும்,
இங்கிலாந்தும் நிதியப் பிரிவுகளில் நடந்த மிகை நிகழ்ச்சிகள் கட்டுப்பாடற்ற தன்மையில் மட்டும் வேர்களை
கொண்டிருக்கவில்லை; மகத்தான அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வந்த அதிக அளிப்புக்களினாலும்தான்;
அவற்றின் சீனா, ஜேர்மனி, ஜப்பான் (முறையே 2007ல் தற்போதைய நடப்பு கணக்கில் உபரியாக 372
பில்லியன் டாலர், 253 பில்லியன் டாலர் மற்றும் 211 பில்லியன் டாலர்களைக் கொண்டவை), மிகவும்
முக்கியமானவை ஆகும். சீனாவும், ஐரோப்பிய கண்ட நாடுகளும், ஜேர்மனி வழிநடத்த, ஊதாரித்தனமாக செலவு
செய்யும் பற்றாக்குறை நாடுகளின் குற்றம்தான் இது என வாதிடுகின்றன. ஆயினும்கூட சீனவும் உலகம் விரைவில் உபரி
அளிப்பை உறிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கிறது."
அவர் தொடர்கிறார்: "ஆயினும்ட அனைத்து உபரி நாடுகளுடைய அளிப்புத் திறன்
அதிகமாக இருந்தும் அது அடையப்பட முடியாதது என்றால், என்ன ஆகும்? 2007ல் மூன்று நாடுகள் நடப்பு கணக்கில்
உபரிகளை, 835 பில்லியன் டாலருக்கு கொண்டிருந்தன (629 பில்லியன் யூரோக்கள், 585 பில்லியன் டாலர்).
தர்க்க ரீதியாக எதிர் பற்றாக்குறை நாடுகள் அந்த அளவு தங்கள் வருமானங்களைவிட அதிகமாக செலவழித்திருக்க
வேண்டும். ஆனால் இன்று பற்றாக்குறை நாடுகள் கொடுக்கத் தயாராக இருக்கும், நாணயமான தனி கடன் பெறுவோர்கள்
இல்லாமல் உள்ளனர்."
ஊக ஏற்ற நிலையின் முடிவு, பெருநிறுவன, தனிப்பட்ட மற்றும் அரசாங்கக் கடன்களின்
மகத்தான தரங்களை தளமாகக் கொண்டது, கடனில் உள்ள நாடுகளைப் பெரிதும் பாதித்துடவிட்டது; குறிப்பாக
அமெரிக்காவை முதலும் கடினமான விதத்திலும். ஆனால் கடன் கொடுக்கும் நாடுகள் மற்றும் உற்பத்தி செய்யும்
நாடுகள் நல்ல வழியில்லாமல் நிற்கும் தன்மையையும் இது கொடுத்துவிட்டது.
அமெரிக்க வலைத் தளம்
Stratfor, "சீனா மகத்தான இருப்பு சொகுசு நிலையான 2
டிரில்லியன் டாலர் மதிப்புடைய வெளிநாட்டு இருப்புகளில் உள்ளது; ஆனால் அதன் ஏற்றுமதிகளில் சரிவை
எதிர்கொள்கிறது; இதன் பொருள் அதன் உற்பத்திப் பிரிவு பெரிதும் சரிந்துவிட்டது, வேலையின்மை, பெருகிய
முறையில் சமூக அமைதியின்மை நிகழ்வுகளின் அலைகள் தோன்றக் காரணம் என. கம்யூனிஸ்ட் கட்சி நாட்டை இந்த
சூறாவளியைக் கடக்க தன்னுடைய வழிகாட்டும் திறனைப் பற்றி பகிரங்கமாகக் கவலை கொண்டுள்ளது."
இன்னும் கூடுதலான ஊக்கப் பொதிகளை எதிர்க்கையில், மேர்க்கெல் கடந்த மாதம்
அறிவித்தார்: "நாம் நம் சக்திக்கு மீறி வாழ்கிறோம். ஆசிய நெருக்கடி மற்றும் 9/11 க்குப் பின்னர்
அரசாங்கங்கள் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பதற்காக ஊக ஆபத்தை நாட ஊக்கம் கொடுக்கின்றன."
ஆனால் "வசதிக்கு மீறிய முறையில் நாம் வாழ்தல்" என்பதன் பொருள் கற்பனையான
மலைபோன்ற மூலதனத்தை தொடர்ந்து அழித்தல் மற்றும் வரலாற்றில் முன்னோடியில்லாத விதத்தில் உலக மந்த
நிலையில் பொருளாதாரத்தை ஆழ்த்துதலும்தான். இதன் பொருள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே இருக்கும்
விரோதப் போக்குகள், ஒவ்வொரு சக்தியும் போட்டியாளரின் இழப்பில் தன்னைக் காத்துக் கொள்ள
முற்படுகையில், நெருக்கடிக்கு விலை கொடுக்குமாறு தொழிலாள வர்க்கத்தின் மீது இணைந்து முறையாகத் தாக்குதல்
நடத்துவதும் ஆகும். |