World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Naval incidents highlight tense US-China relations

அமெரிக்க-சீன உறவுகளின் நெருக்கடிகளை கடற்படை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன

By John Chan
12 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் அமெரிக்க மற்றும் சீனக் கப்பல்கள் தொடர்புடைய தொடர்ச்சியான கடற்படை முரண்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே தீவிர அழுத்தங்களை தூண்டியுள்ளன. வாஷிங்டனில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் சீன வெளியுறவு மந்திரி யாங் ஜியேசிக்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் இப்பிரச்சினை குறைந்த முக்கியத்துவத்தை பெற்றிருந்தாலும், முரண்பாடுகள் வியத்தகு அளவில் வெடித்தெழக்கூடிய திறனை அடித்தளத்தில் கொண்டிருப்பதை இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பென்டகன் கூற்றின்படி, இந்நிகழ்வுகள் கடந்த புதனன்று தொடங்கின. அப்பொழுது ஒரு சீன மீன்பிடி ரோந்துப் படகு அதிக சக்திவாய்ந்த ஒளிவிளக்கை பயன்படுத்தி USNS Victorious என்னும் மஞ்சள் கடலில் உள்ள கண்காணிப்புக் கப்பல் மீது வெளிச்சமயமாக்கியது. இதற்கு மறுநாள் ஒரு சீன Y12 கடற்படை கண்காணிப்பு விமானம் கப்பலைச் சுற்றி 12 முறைகள் 120 மீட்டர்கள் உயரத்திலே பறந்து சென்றது.

தெற்கு சீன கடலில் சீனாவின் முக்கியமான ஹைனன் தீவிற்கு அருகே இயங்கிவரும் மற்றொரு அமெரிக்கக் கப்பல் USNS Impeccable இதில் தொடர்புபட்டது. கடந்த வியாழனன்று ஒரு சீன கப்பல் Impeccable க்கு அருகில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வந்ததாகவும் 90 மீட்டர் இடைவெளிக்குள் இதன் முன்பகுதியைக் கடந்தது என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் ஒரு Y 12 விமானப் கப்பலுக்கு அருகே குறைந்த உயரத்தில் பறந்தது. சனிக்கிழமையன்று ஒரு சீனக் கப்பல் Impeccable இடம் உடனே இடத்தை விட்டு அகலுமாறும் இல்லாவிடில் "விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்றும் வானொலித் தகவல் அனுப்பியது.

ஞாயிறன்று மிகவும் பிரச்சனைக்குரிய நிகழ்வு நடந்தது. பென்டகன் கூற்றின்படி, ஐந்து சிறிய சீனக் கப்பல்கள் Impeccable இனை "பின்தொடர்ந்து வந்ததுடன் ஆத்திரமூட்டும் முறையிலும் ஆபத்தான முறையிலும் வெகு அருகே சுற்றிவந்தன"; இதன் நோக்கம் அதை அப்பகுதியில் இருந்து விரட்டிவிடுதல் என்பது வெளிப்படை. அமெரிக்க கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் தண்ணீர் பீச்சும் குழாய்களை சீனக்கப்பல்கள் மீது திருப்பினர். இரு சீனக் கப்பல்கள் இதன் வழியை மறைத்த அளவில் Impeccable தன் ஓட்டத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. அக்கப்பல்கள் குப்பைகளையும் நீரில் எறிந்த வண்ணம் இருந்தன.

நேற்று செனட் இராணுவக் குழுவின் முன் கொடுத்த சாட்சியத்தில் அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனரான டென்னிஸ் பிளேயர் இந்த மோதலை 2001ல் நடுவானில் ஏற்பட்ட ஒரு மோதலை அடுத்து ஒரு சீன விமானி மரணம் அடைந்து அமெரிக்கக் கண்காணிப்பு விமானம் ஹைனன் தீவில் இறங்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்ட நிகழ்விற்கு பின்னர் "மிகவும் தீவிரமான" இராணுவ மோதல் என்று விவரித்தார்.

பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டூவர்ட் உப்டன் "சீனக் கப்பல்களும் விமானங்களும் வாடிக்கையாக இப்பகுதியில் இருக்கும் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை கடந்து செல்லுகின்றன அல்லது அவற்றின்மீது பறந்து செல்கின்றன. இந்த நடவடிக்கைகள் கணிசமான ஆத்திரமூட்டும் தன்மையை கொண்டுள்ளதுடன், நாம் முன்கண்டிராதளவு நெறியற்றவை. இவை மோதல் அல்லது தவறான கணிப்புக்கு பெரிதும் வாய்ப்பைக் கொடுத்துவிடும்." அமெரிக்க இராணுவக் கப்பல்கள் சர்வதேச நீர்ப்பாதையில்தான் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீன அதிகாரிகள் நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான தகவல்களை கொடுக்கவில்லை மாறாக அமெரிக்க கப்பல்கள் ஹைனன் தீவில் இருக்கும் முக்கிய இராணுவ வசதிளைப் பற்றி ஒற்று வேலை பார்ப்பாதக குற்றம் சாட்டியுள்ளனர்; இங்கு ஒரு முக்கிய கடற்படைத் தளமும் நிலத்தடி நீர்மூழ்கிக் கப்பல் வசதிகளும் உள்ளன. மேலும் இத்தகைய துப்பு சேகரிக்கும் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்கீழ் சீனாவில் பிரத்தியேக பொருளாதாரப் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது; இப்பகுதி 200 கடல் மைல்கள் கடற்கரையோரத்தில் இருந்து பரவியுள்ளன. Impeccable ஹைனன் தீவிற்கு 70 கடல் மைல்களுக்குள் இருந்தது. அமெரிக்கா சர்வதேச கடல் விதிகளில் கையெழுத்துப்போடாத நாடாகும்; இருந்தபோதிலும் சீனாவின் விளக்கத்தை எதிர்க்கிறது.

Impeccable சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிப்பதில் ஈடுபட்டிருந்தது என்பதை அமெரிக்க பாதுகப்பு ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒருவேளை புதிய Shang பிரிவு அணுசக்தி உந்துதல் இருக்கும் தாக்குதல் திறனுடைய நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும். இன்டர்நேஷனர் ஹெரால்ட் ட்ரிபூன் அமெரிக்க கடற்படை புகைப்படம் ஒன்று சீன கடல்வீரர் ஒரு நீண்ட கோலைப் பயன்படுத்தி Impeccable நீருக்கடியில் கேட்கக்கூடிய கருவியை இழுக்க பயன்படுத்தும் கேபிளை இழுப்பதை தகவலாகக் கொடுத்துள்ளது.

அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டின் தலைவரான அட்மைரல் டிமோதி கீட்டங் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பூசல்களை தவிர்ப்பதற்கு சீனாவுடன் ஒரு கடற்படை நெறித் தொகுப்பு உடன்பாட்டை பரிசீலிப்பதாகக் கூறினார். அதே நேரத்தில் சீனாவின் பெருகும் கடல்படை பற்றிய பென்டகனின் கவலைகளை பற்றியும் வெளிப்படுத்தினார். பசிபிக் பகுதியில் உள்ள 600 நீர்மூழ்கிக் கப்பல்களில் 65 சீனாவுடையது என்று குறிப்பிட்ட கீட்டிங் கூறினார்: "இந்த அளவிற்கு எதற்காக நீருக்கு அடியிலான திறனை இந்த அளவிற்கு வளர்த்துக் கொள்ள சீனா விழைகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.... அவர்களுடைய நீர்மூழ்கிக் கப்பல்கள் என்னுடைய தூக்கத்தைக் கெடுக்கவில்லை; ஆனால் சீன நீர்மூழ்கி வளர்ச்சி பற்றி பெரிதும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறோம்."

பல தசாப்தங்களாக சீனக் கடற்படை அமெரிக்காவை சவால்விடும் நிலையில் இல்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சீனா தன்னுடைய கடற்படையில் தகர்க்கும் கப்பல்கள், படைப்பிரிவுகள், தரையிலும் நீரிலும் தாக்குதல் நடத்தும் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அமெரிக்கப் படையுடன் ஒப்பிடுகையில் வலு குறைந்தாலும் கூட, சீன கடற்படை பெருகிய முறையில் நவீனமாகி வருகிறது. 2006ம் ஆண்டு ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கப் பாதுகாப்பு வட்டங்களில் திடீரென அமெரிக்க விமானங்களைக் கொண்ட கப்பலான USS Kitty Hawk அதுவரை கண்டுபிடிக்கப்படாமல் அருகே தோன்றிய விதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனா தன்னுடைய விமானத்தாங்கி கப்பல்களை கட்டுமானம் செய்யும் திட்டத்தையும் கொண்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம் சீனாவின் பால் சில சமாதான அணுகுமுறைகளை காட்டியுள்ளது. ஹில்லாரி கிளின்டன் வெளிவிவகார அமைச்சர் என்ற முறையில் முதலில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் சீனா உட்பட ஆசியாவிற்கு ஆகும். போட்டிகள் தொடர்ந்தாலும் இரு நாடுகளின் பொருளாதாரங்களும் பெரிதும் பிணைந்துள்ளன. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் ஒரு பாரிய குறைவூதிய தொழிலாளர் அரங்காக சீனாவை நம்பியுள்ளன; சீனா தன்னுடைய பொருட்களை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்காவை நம்பியுள்ளது. அதன் மிக அதிக வெளிநாட்டு இருப்புக்கள் அமெரிக்கப் பத்திரங்களை வாங்குவற்கு பெய்ஜிஙை கிளின்டன் வலியுறுத்தினார்; அது கடன்கள் நிறைந்த அமெரிக்க நிதிய முறைக்கு முட்டுக் கொடுத்து நிறுத்துகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் இருந்தபோதிலும்கூட, அடித்தளத்தில் அழுத்தங்களும் உள்ளன. ஜனவரி மாதம் பதவிக்கு வருவதற்கு முன்பு டிமோதி கீத்னர் தன்னுடைய நாணயத்தை சீனா "திரிப்பதாக" ஆத்திரமூட்டும் வகையில் குற்றம் சாட்டினார். இக்குற்றத்திற்கு பதிலடி கொடுப்பது என்றால் அமெரிக்க சட்டங்களின் படி சீனாவிற்கு தண்டனை நடவடிக்கைகள் இருக்கும். ஜனநாயகக் கட்சியின் சில பிரிவுகள் ஏற்கனவே பாதுகாப்புவாத உணர்வைத் தூண்டுகின்றனர்; இது குறிப்பாக சீனாவிற்கு எதிராக இலக்கு கொண்டுள்ளது. இது உள்நாட்டில் உள்ள சமூக அதிருப்தியை திசைதிருப்பும் வழிவகையாகும் இது.

ஆனால் கடற்படை நிகழ்வுகள் சற்று எதிர்பாராவிதமாகத்தான் வந்துள்ளன. அவருடைய பயணத்தின்போது கிளின்டன் இரு நாடுகளுக்கும் இடைய நடுத்தர இராணுவ பேச்சுவார்த்தைகள் தொடரப்படும் என்று அறிவித்தார்; கடந்த அக்டோபர் மாதம் தைவானுக்கு $65 பில்லியன் மதிப்பு உடைய ஆயுதங்களை கொடுத்தபின் அப்பேச்சுக்கள் முறிந்துபோயின. முறையாக இராணுவ கலந்துரையாடல்களை இரு நாடுகளும் தொடர்ந்த ஒரு வாரத்தில் அமெரிக்க சீன மோதல் ஆரம்பித்துள்ளது.

இந்த அழுத்தங்களுக்கு பின் இன்னும் அடிப்படையிலான பூகோள-அரசியல் மாற்றங்களின் உந்துதல் உள்ளது. அது அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவையும், ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க நலன்களுக்கு ஒரு சவால் விடும் திறன் உடைய நாடான சீனாவின் விரைவான எழுச்சியையும் கருத்தில் கொண்டவை. சீனாவின் மூலப்பொருட்கள் மற்றும் அதன் பெரும் உற்பத்தித் தொழில்களுக்கு தேவைப்படும் எரிபொருளை இன்னும் கூடுதலான முறையில் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்காவில் தேட வைத்துள்ளது. இது போட்டி நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் விரோதத் தன்மையை வளர்த்துள்ளது.

கடற்படை தொடர்பான மோதல்கள் வெளிப்பட்டுள்ளது தற்செயல் நிகழ்வு அல்ல. இரு நாடுகளின் மூலோபாய உத்திகள் இப்பிரிவில்தான் தீவிரமாக எதிரிடையாக உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க மூலோபாயம் இயற்றுபவர்கள் பசிபிக் பெருங்கடலை அமெரிக்க ஏரி போல் கருதிவந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதியில் அமெரிக்கப் படைகள் நிறுத்திவைக்கப்படல் பனிப்போர்க்காலத்தின் சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவைச் சுற்றி வளைத்தல் கொள்கையின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கில் இருந்து முக்கிய கடல் பாதைகள் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. இது அமெரிக்க நலன்களுக்கு முக்கிய அச்சுறுத்தலாக ஜப்பான் மீண்டும் வரமுடியாதபடி செய்துவிட்டது.

முக்கிய கடல் சந்துகள் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருப்பது தன் மூலப்பொருட்கள் தேவைக்கு, குறிப்பாக எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிற்கு ஒரு அச்சுறுத்தல் என்பதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஒரு நீலநீர்க் கடற்படை மற்றும் தொடர்ந்த துறைமுகங்களை "முத்துக்களின் கோர்வை எனக் குறிப்பிடப்படும் மத்திய கிழக்கில் இருந்து தென்கிழக்கு ஆசியா வரை கட்டமைக்கும் பெய்ஜிங்கின் முடிவு இந்த மூலோபாய பாதைகளின் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதாகும். அதே நேரத்தில் கிழக்கு சீன கடல்பகுதியில் உள்ள Diaoyutai தீவுகள் மீது அதன் இறைமை இருப்பது பற்றி (இவை ஜப்பானில் சென்காகு என்று அறியப்பட்டவை) சீனா ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகிய ஜப்பானின் சவால்களையும் எதிர்கொள்கிறது. தென்சீனக்கடலில் நீண்ட நாளாக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் Spratly, Paracel தீவுகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள நீர்நிலை பற்றிய இறைமை முரண்பாடுகள் உள்ளது.

சீன இராணுவம் தன்னுடைய கடலோரப்பகுதியில் இருந்து அமெரிக்க வேவு பார்க்கும் கப்பல்கள் அதிக தூரத்தில் இல்லை என்பது பற்றி எரிச்சல் அடைந்து, அதையொட்டி இன்னும் கூடுதலான ஆக்கிரோஷ நிலைப்பாட்டை எடுத்துள்ளதில் வியப்பு ஏதும் இல்லை. ஜனவரி மாதம் சோமாலி கடற்கரையோரம் இருக்கும் சீனக் கப்பல்களுக்கு அங்குள்ள கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்க இரு அழிக்கும் விமானங்களை அனுப்பிவைத்தது. இது பெய்ஜிங் தன்னுடைய பெருகிவரும் இராணுவ வலிமையை தன் பொருளாதார, மூலோபாய நலன்களைக் பாதுகாக்கப் பயன்படுத்தும் என்பதின் அடையாளமாகும். ஆனால் கடல்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கையில் சீனா பொதுவாக தன்னுடைய செயல்களை கவனத்துடனும், குறிப்பாக அமெரிக்காவுடன் அதையொட்டி எந்த இராணுவ மோதலும் வராது நடத்துகின்றது.

தன்னுடைய பங்கிற்கு ஒபாமா நிர்வாகம் ஜனாதிபதி புஷ்ஷின் முயற்சிகளான தொடர்ச்சியான மூலோபாய நட்பு, உடன்பாடுகளை பயன்படுத்தி ஜப்பான் முதல் தென் கொரியா வரை தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து இந்தியத் துணை கண்டம், ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியா வரை கொண்டு சீனாவை அடக்கலாம் என்பதில் இருந்து பின்வாங்கவில்லை. அமெரிக்க அரசியல் ஆளும்பிரிவினுள் தந்திரோபாயங்கள் மாறினாலும்கூட, சீனா, அமெரிக்க நலன்களுக்கு ஒரு பெரிய சவாலாக வந்துகொண்டிருக்கிறது என்பதில் ஒரு பொது ஒருமித்த உணர்வு உள்ளது.

மிகவும் அதிகமான இராணுவ பிரிவுகளிடையே அமெரிக்கா சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது. வலதுசாரி American Enterprise Institute ஜனவரி மாதத்தில் நடத்திய ஆய்வு "அமெரிக்க மூலோபாயத்தின் குறைந்த நோக்கம் கடந்த நூற்றாண்டில் இருந்ததைப் போல் தொடர வேண்டும். அதாவது ஆசியா மீது ஆதிக்கம் ஒரு சக்தி அல்லது விரோத சக்திகிளின் கூட்டணியின் கீழ் வந்துவிடக் கூடாது. அவை பிரத்தியேக பொருளாதார முகாம்களை அமைக்கக்கூடாது அல்லது நாம் ஆசியாவிற்கும் அதன் வழியேயும் செல்லும் உரிமையை மறுக்க விடக்கூடாது." என கூறுகிறது. இச்சிந்தனைக்குழு "விரோத சக்தி" அநேகமாக சீனாவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கு வந்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வியாழனன்று வந்த தலையங்கம் ஒன்று ஞாயிறு நடைபெற்ற கடல்படை மோதலை குறிப்பிடத்தக்க ஆக்கிரோஷ வகையில் எடுத்துள்ளது: "Impeccable லுடன் நடந்த மோதல் சீனாவின் பிராந்திய ஆதிக்க முனைப்புகள் பற்றி மற்றொரு நினைவுபடுத்துதல் ஆகும். ஒரு புதிய அமெரிக்க நிர்வாகம் வந்தாலும் இப்பகுதியில் அமெரிக்கச் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதே அது." செய்தித்தாள் தொடர்ந்து எழுதியது: "அடுத்த முறை Impeccable இப்பகுதியில் செல்லும்போது சீனாவின் தூண்டுதலுக்கு விடையிறுக்கும் வகையில் அது விரைவில் செல்லவேண்டும். ஜனாதிபதி ஒபாமா அதற்கு பாதுகாப்பாக ஒன்று அல்லது இரு அழிக்கும் விமானங்களையும் உடன் அனுப்ப வேண்டும்."

அமெரிக்க-சீன கடற்படை பூசல்கள் வெளிக் கொண்டுவந்துள்ளது ஆசியா மற்றும் சர்வதேச அளவில் பொருளாதார மற்றும் மூலோபாயப் போட்டிகளின் வெடிமருந்து கிடங்கின் தன்மைதான். இது இன்னும் வெடிக்கக்கூடிய வகையில் உலக மந்த நிலையினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களின் ஆரம்ப கணிப்புக்கள் பெரும் பிழைக்கு உட்படக்கூடியவாறு மிகச் சிறிய நிகழ்வுகூட பரந்த மோதலை தோற்றுவிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்ற ஆபத்து உள்ளது.