WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
Obama escalates war in Central Asia
மத்திய ஆசியாவில் ஒபாமா போரை துரிதப்படுத்துகிறார்
World Socialist Web Site editorial board
30 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி பாரக் ஒபாமாவால் அறிவிக்கப்படுட்டுள்ள புதிய இராணுவ
மூலோபாயம் ஆப்கானிஸ்தானில் போரில் பெரும் அதிகரிப்பைக் குறிப்பதுடன் பாக்கிஸ்தானை அமெரிக்க இராணுவ
நடவடிக்கையின் ஒரு அரங்காக உத்தியோகபூர்வமாக மாற்றுவதையும் குறிக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்பட்ட போர் எதிர்ப்பு உணர்வுகளை இழிவுபடுத்துவதுடன்
அமெரிக்க மக்கள் அறியாமல் தயாரிக்கப்பட்ட ஒபாமாவின் திட்டம், ஆப்கானிஸ்தானில் புஷ் ஈராக்கில்
கொண்டுவந்த இராணுவ "பெருக்கத்தை" பரிசோதனையாய் மீண்டும் கொண்டுவருவதுடன் பாக்கிஸ்தானிலும் இராணுவத்
தாக்குதல்களை தொடங்குகிறது. ஒபாமாவின் வேட்புத் தன்மை ஒன்றும் சமாதானத்திற்கான நடவடிக்கை இல்லை
என்பதை உறுதி செய்வதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய முன்னுரிமைகள் பற்றி அமெரிக்க ஆளும்
உயரடுக்கிற்குள் நடக்கும் போராட்டத்தின் வெளிப்பாடு என்றும் ஆகிறது. ஒபாமா பென்டகன் அளவுக்குதிகமாய் ஈராக்மீது
கவனத்தைக் குவித்தது என்று கருதியவர்களின் முன்னணியில் இருந்தார்; மத்திய ஆசியாதான் இராணுவ வன்முறையின் முக்கியமான
இலக்காக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.
ஒபாமா பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்கு தடைசெய்யும்
மக்கள் பிரிவுகளை அழிக்கும் நோக்கத்துடன் ஒரு குருதி தோய்ந்த சமாதான நடவடிக்கைக்கு தயாரிக்கிறார்.
இதற்கு அமெரிக்க மக்களாலும் அதிக விலை கொடுக்கப்படும்; ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்கள் உயிரிழப்பு,
பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு மற்றும் வாஷிங்டன் இஸ்லாமிய உலகின் மீது போர் தொடுக்கிறது
என்று பரந்த அளவில் கருதப்படும் உணர்வால், அமெரிக்கர்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும்
என்று அதிகரிக்கும் ஆபத்து ஆகியவையும் ஏற்பட்டுள்ளன.
பெயரளவிற்கு அமெரிக்கா நட்பு நாடு என்றாலும், பாக்கிஸ்தான் ஒரு காலனி
அந்தஸ்திற்குத் தள்ளப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. 173 மில்லியன் மக்கள் வாழும், அணுவாயுதத்தை
கொண்ட நாடாக இருந்தாலும், பாக்கிஸ்தான் மிக வறிய நிலையில் இருப்பதுடன் வட்டார, இனப் பிளவுகளையும்
கொணடுள்ளது. அமெரிக்க தாக்குதல்கள் அதிகரிப்பது, ஏற்கனவே ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடி எல்லைப்
பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான பாக்கிஸ்தானியர்களை கொன்றுவிட்டது, இன்னும் அதிகமாக பாக்கிஸ்தானிய
மக்கள் கருத்தை சீற்றத்திற்கு உட்படுத்தி, பாக்கிஸ்தானின் இராணுவப் பிரிவுகள் சிலவற்றை எதிரிகளாக்கி, நாட்டை
உள்நாட்டுப் போருக்குத் தள்ளும்; அப்பகுதியில் இதையொட்டி கணக்கிலடங்கா விளைவுகள் ஏற்படும்.
நியூ யோர்க் டைம்ஸின் விளக்கமான ஒபாமாவின் திட்டம் போரைக்
"குறுக்குகிறது" என்பதை எதிரொலிப்பவர்கள், அது ஆப்கானிஸ்தானில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் பற்றிய திரு
புஷ்ஷின் தெளிவற்ற பேச்சுக்களைக் கைவிட்டுவிட்டது என்று நினைப்பவர்கள் மக்களை ஏமாற்றத்தான் முயல்கின்றனர்.
அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் பரந்த செயற்பரப்பெல்லையினால் இக்கூற்றுக்கள்
பொய்யாகின்றன; மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமாகப் பேசும் பிரதிநிதிகளாலும் நேரடியாக
மறுக்கப்படுகின்றன. Fox Network
தொலைக் காட்சியினால் ஒரு பேட்டியில் நேற்று புஷ்ஷின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும்
ஒபாமாவின் "தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்" என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி
கேட்கப்பட்டதற்கு, பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் விடையிறுத்தார்: "வேறுபாடே இல்லாத இடத்தில்
மக்கள் வேறுபாடுகளைக் காண விரும்புகின்றனர் என நான் நினைக்கிறேன்" என்றார். மேலும் அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட 59,000 த்தை விடஅதிகமாக 68,000 துருப்புகளைப்
பயன்படுத்தும் என்று கேட்ஸ் கூறினார்.
ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து சாதகமான அறிக்கைகள் வந்தாலும், ஒபாமாவின்
போர்ப் பெருக்கம் என்பது வாஷிங்டனுடைய ஒருதலைப்பட்ச முடிவு ஆகும். பிரிட்டன் இன்னும் 1,700 துருப்புக்களை
அனுப்புவதாகவும், மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் போலீசுக்கு பயிற்சி அளிக்க அதிகாரிகளை அனுப்பக் கூடும்
என்றும் தெரிகிறது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் நேட்டோ நட்பு நாடுகள் கணிசமான துருப்புக்களை அனுப்பும்
என்று எதிர்பார்க்கவில்லை; அவர்கள் தனி அமெரிக்கக் கட்டுப்பாட்டைத்தான் தெற்கு ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளுக்கு
நிறுவியுள்ளது.
ஒபாமா போர் விரிவாக்கத்திற்கு கொடுத்துள்ள காரணங்கள் அரைகுறை உண்மைகளும்
பொய்களும் ஆகும்--எல்லாவற்றிற்கும் மேலாக இது பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஒரு விடையிறுப்பு எனக் கூறுவது.
இப்போர் மத்திய ஆசியாவில் எண்ணெய் கொழிக்கும் பகுதிமீதான ஆதிக்கப் போராட்டத்தின் தொடர்ச்சி ஆகும்;
இதில் எண்ணெய்க் குழாய் பாதைகள், சர்வதேச வணிக, இராணுவ நலன்கள் ஆகியவை பெரும் தொடர்புடையவை;
இவை அனைத்தும் கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவை போரில் ஈடுபடும் உந்ததுலைக் கொடுத்துள்ளன. இப்பகுதியில்
சீனா, ரஷ்யா, இந்தியத் துணைக் கண்டம் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாற்சந்திகளின் நடுவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மூலோபாய முக்கியத்துவத்தை நிறுவும் பல சிந்தனைக் குழுக்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வல்லுனர்களின்
கணக்கிலடங்கா பகுப்பாய்வுகளையும் ஒருவர் எளிதில் மேற்கோள் காட்ட முடியும்-
இப்பகுதி நீண்ட காலமாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மைய குவிப்பாக
இருந்துவருகிறது. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் முக்கிய குறுக்கீடு நடந்ததின் 30ம் ஆண்டு நிறைவைக்
குறிக்கிறது--சோவியத் படையெடுப்பை தூண்டும் நோக்கத்துடன், 1979ல் காபூலில் இருந்த சோவியத் ஆதரவு
பெற்ற ஆட்சியை உறுதிகுலைக்க வேண்டும் என்ற அதன் முடிவைக் குறிக்கிறது. கிரெம்ளின் படையெடுத்ததும்,
வாஷிங்டன் சோவியத் எதிர்ப்பு முஜாஹிதீன் தளபதிகளுக்கும் கிராமப்புற முக்கியஸ்தர்களுக்கும் நிதி உதவியும்
ஆயுதங்களையும் கொடுத்தது; அவர்களிடம் இருந்துதான் இன்றைய ஆப்கானிஸ்தானிய ஆட்சி உயரடுக்கின் போர்ப்
பிரபுக்கள் வெளிப்பட்டுள்ளனர்.
"Fox News Sunday" க்குக்
கொடுத்த பேட்டி ஒன்றில், கேட்ஸ் பாக்கிஸ்தான் உளவுத்துறைக்கும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க எதிர்ப்பு
எழுச்சி சக்திகளுக்கும் இடைய உள்ள தொடர்பு பற்றி வினவப்பட்டபோது, 1980 களில் தன்னுடைய தொடர்பு
"இதே குழுக்களில் இருக்கும் சிலர் பாக்கிஸ்தானில் இருக்கும் பாதுகாப்பான புகலிடத்தில் இருந்து ஆயுதங்களைப்
பெற உதவியது" என்றார்.
சோவியத்தின் சரிவிற்குப் பின்னர் அமெரிக்கா இப்பகுதியில் அதன் சூழ்ச்சிகளை
தொடர்ந்தது; தொடக்கத்தில் 1990 களில் தாலிபனுக்கு ஆதரவு கொடுத்தது; பின்னர் அவர்களை அகற்றுவதற்கு
ஆப்கானிஸ்தான் மீது செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் படையெடுத்தது.
வாஷிங்டன் ஒவ்வொரு முந்தைய ஆண்டும் தொடக்கிய போரைப் போலவே, ஒபாமாவின்
குறுக்கீடு இன்னும் கூடுதலான, இன்னும் ஆபத்து நிறைந்த பூசல்களைத்தான் தோற்றுவிக்கும் வளர்ச்சிகளை ஏற்படுத்தும்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் விரிவாக்கத்தை ரஷ்யா பெரும் எச்சரிக்கையுடன் கவனிக்கும். பாக்கிஸ்தானிய
போர் பகுதிகளை தவிர்த்து ஆப்கானிஸ்தானிற்கு செல்ல வேண்டிய அமெரிக்கப் பொருட்களுக்கு பாதை என்பது,
பெருகிய முறையில் ரஷ்யா சக்திவாய்ந்த மூலோபாய நலன்களைக் கொண்டிருக்கும் இடங்களில் வரும்: அதாவது காகசஸ்,
முன்னாள் சோவியத் மத்திய ஆசியா, ஒருவேளை ஈரானும் சேரக்கூடும். தெற்கு ஒசேஷியாவில் ரஷ்ய சமாதான
படைகள் மீது ஜோர்ஜியாவில் உள்ள அமெரிக்கக் கைப்பாவை அரசாங்கம் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவளித்ததன்
மூலம், கிட்டத்தட்ட போரைத் தூண்டிய சில மாதங்களுக்குப்பின் வருகிறது.
முஸ்லிம் பாக்கிஸ்தானுக்கும் பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் இந்தியாவிற்கும்
நீண்டநாள் பகைமை ஒருபுறம் இருந்தாலும், பெரும் குழப்பம், உள்நாட்டுப் போர் என்று பாக்கிஸ்தானின் நிலைமை
சரிந்தால் அது இந்தியாவிற்கு தீவிர அச்சுறுத்தல்களை கொடுக்கும். அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் காஷ்மீர்
பகுதியில் இருக்கும் இந்திய பாக்கிஸ்தானிய எல்லை அதைத்தான் இந்திய காஷ்மீர் பகுதிக்குள் இருக்கும்
கெரில்லாக்களுக்கு உதவ பாக்கிஸ்தான் திரட்டுகிறது இந்திய முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஆபத்தான நிலையை
ஏற்படுத்தும் அச்சுறுத்தலைத் தவிர, இது ஒரு நான்காம் இந்திய பாக்கிஸ்தானிய போர் அபாயத்தையும்
கொண்டுள்ளது; இம்முறை இரு அணுவாயுத நாடுகளுக்கு இடையேயான அபாயத்தையும் கொண்டுள்ளது.
அமெரிக்க சீன அழுத்தங்கள் அமெரிக்க பற்றாக்குறைகளுக்கு நிதி கொடுப்பதிலும்,
டாலருக்கு முட்டுக் கொடுத்தலிலும் சீனா தயக்கம் காட்டுகையில் பெருகியுள்ளபோது, பாக்கிஸ்தானில் அமெரிக்கக்
குறுக்கீடு--இந்திய துணைக்க கண்டத்தில் அது பாக்கிஸ்தானின் முக்கிய நட்பு நாடு--சீனாவுடன் அமெரிக்க மோதல்
என்ற ஆபத்தைத் தீவிரப்படுத்தத்தான் செய்யும்.
ஒபாமாவின் திட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அமெரிக்காவின் இழிந்த
நிலையில் உள்ள ஜனநாயகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறது. மக்களின் மிகப் பெரும்
போர் எதிர்ப்பு வாடிக்கையாக புறக்கணிக்கப்படுகிறது, மீறப்படுகிறது. ஒபாமாவின் திட்டம் மக்கள் விவாதம்
அல்லது சட்டமன்ற இசைவு என்று இல்லாமல் ஏற்கப்பட்டதாகும்.
இது வெளியிடப்பட்ட நேரம் கூட பொது கவனம் மற்றும் கண்காணிப்பைத் தவிர்க்கும்
வகையில் வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு ஒபாமா ஒரு முக்கிய நேர செய்தி மாநாட்டை நடத்தினார்: இதில்
ஆப்கானிஸ்தான் பிரச்சினை எழுப்பப்படவில்லை. காலை 9.30 க்குக் கூட்டப்பட்ட கேள்விகள் கூடாது செய்தியாளர்
கூட்டத்தில் போர் விஸ்தரிப்பைப் பற்றி அறிவிக்க விரும்பினார்; பெரும்பாலான மக்கள் அப்பொழுது வேலைக்குச்
செல்வர் அல்லது பார்க்க முடியாது. ஒபாமா பேசுகையில் ஒருபுறம் கேட்ஸும் மற்றொரு புறம் புஷ்
நிர்வாகத்தின் மிச்சம் இருப்பவர்களும் இருந்தனர்; இராணுவப் பெருங்குடியினர், சிந்தனைக்குழு செயலர்கள் மற்ற
போர்குற்றத் தொழிலை உடையவர்களும் அங்கு இருந்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தை இராணுவமயமாக்குதல் அமெரிக்க சமூக வாழ்வின் தீய
போக்குகளைத்தான் வெளிப்படுத்துகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் சேர்பியா மீது அமெரிக்க குண்டுவீச்சைப் பற்றி
கருத்து தெரிவித்த உலக சோசலிச வலைத்தளம் எழுதியது: "அமெரிக்க சமூகத்திற்குள் சமூகப் பிளவு பரந்து இருப்பது
பெரிதும் அதிகமாகியுள்ளது --ஒருவேளை ஏற்கனவே அடையப்பட்டுக்கூட இருக்கலாம்; இக்கட்டத்தில் பரந்த சமூக
ஒருமித்த உணர்வு உள்ளது என்ற பாசாங்குத்தனம் கூட காட்டப்படவில்லை; அது ஜனநாயக மதிப்புக்களில் வேரூன்றியுள்ள
ஒருமித்த உணர்வு ஆகும்; இதுவும் தக்க வைக்கப்படவில்லை. [...] செல்வத்தைத் தொற்றுவிக்கும் வழிவகையின் குறிப்பான
தன்மை --பங்கு மதிப்புக்கள் மூலம் செல்வக் கொழிப்பைக் காண்பது--இயல்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும்,
ஏகாதிபத்திய சார்புடைய தன்மையையும் கொண்ட சமூக, அரசியல் அணுகுமுறைகளைத் தோற்றுவிக்கின்றன."
[See: "பாரிய
மனிதப் படுகொலைகளின் பின்னர்:பால்கன் யுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்"]
பின்னர் புஷ்ஷின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பும் கடந்த ஆண்டு
வெடித்துள்ள பெரும் பொருளாதார நெருக்கடியும் இந்த பகுப்பாய்வை உறுதிப்படுத்ததான் செய்கின்றன. ஈராக்
மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு உள்ள நிலையில், இப்பொழுது அவற்றை ஒபாமா விரிவாக்குகையில்,
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத கருவியாக போர் வந்துவிட்டது; மேலும் உள்நாட்டில்
வர்க்கப் பூசலை அடக்குவதற்கும், அமெரிக்கப் பெருநிறுவனங்களில் இலாபங்களை உறுதிப்படுத்தவும் ஒரு கருவியாகிவிட்டது.
ஒபாமாவின் மத்திய ஆசியக் கொள்கை, சக்தி வாய்ந்த எண்ணெய், எரிவாயு நலன்களால் இயற்றப்பட்டவை,
வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு டிரில்லியன் டாலர் பிணை எடுப்பு கொடுப்பதைச் சூழ்ந்து நிற்கும்
ஒரு உள்நாட்டுக் கொள்கையின் புற முகம் ஆகும்.
ஒபாமாவின் கொள்கைகள் அவருடைய தேர்தல் பிரச்சாரமான "மாற்றம்" என்பது
ஒரு அரசியல் மோசடி, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களின் வன்முறை உறுதிப்பாட்டில் ஒரு உத்திமுறை மாற்றத்திற்கான
அரங்கத்தை அமைப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. போர் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனமும்
ஜனநாயகக் கட்சிக்கு முறையீடு செய்வதின் மூலம் எதிர்க்கப்பட முடியாதவை; முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு
வர்க்கப் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதின் மூலம்தான் முடியும். |