WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா A
travesty of democracy
Democrats, Republicans conspire to remove Wall Street
bailout from election debate
ஜனநாயகத்தில் பெரும் அத்துமீறல்
ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் தேர்தல் விவாதத்தில் இருந்து
வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பை அகற்றுவதில் ஒன்றாக சதி
By Patrick Martin
27 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
மூடிய கதவுகளுக்கு பின் வெள்ளி முழுவதும் சட்டமன்றத்தில் உள்ள ஜனநாயக, குடியரசு
கட்சிகளின் தலைவர்களுக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்து
தரப்பினரும் $700 பில்லியன் மதிப்பு உடைய பிணை எடுப்பு பொதியை அமெரிக்க நிதிய முறைக்கு திங்கள் காலை
ஆசிய பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கொடுப்பதற்கு உடன்பாடு காண்பதாக உறுதியளித்தனர்.
இரு கட்சிகளும் ஒரு அடிப்படைக் கோட்பாட்டை ஒப்புக் கொண்டனர்: அமெரிக்க
மக்கள், வங்கிகள், ஊகக்காரர்கள் என்று நிதிய பேரழிவை தோற்றுவித்த இழப்புக்களுக்கு பணம் செலுத்தும்
நிர்பந்தத்திற்கு ஆளான ஒழுங்கு பற்றியதில் என்ன இருந்தாலும் கருத்துரைப்பதற்கு உரிமையையும் கொண்டிருக்கவில்லை.
பிணை எடுப்புப் பேச்சு வார்த்தைகளில் "அரசியல்" கூடாது என்று அனைத்துத் தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளின்
பொருளுரை அதுதான்.
இந்த வினா பற்றி ஜனநாயகக் கட்சியினர் குறிப்பாக வலியுறுத்தினர். ஜனநாயகக்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா, வியாழனன்று வெள்ளை மாளிகை கூட்டத்தில் மனக்கசப்பு வெளிப்பட்டபின்
கூறினார்: "சிக்கலான பேச்சுவார்த்தைகளில் நீங்கள் ஜனாதிபதித் தேர்தல் அரசியலை நுழைக்கும்போது, அது
தேவைப்படுமளவு உதவிகரமாக இருக்காது."
ஜனநாயகக் கட்சி தலைவர்களும் இதைப் பின்பற்றி பேசினர். செனட்டின்
பெரும்பான்மை கட்சித் தலைவரான ஹாரி ரீட் கூறினார்: "ஜனாதிபதி தேர்தல் பற்றிய அரசியல் இதில் கொண்டுவரப்படுவது
அனுகூலமாக இருக்காது." அவருடைய உதவியாளர் செனட்டர் இல்லிநோயின் டிக் டர்பின் கூறினார்: "ஜனாதிபதி
தேர்தல் அரசியல் பிரச்சாரத்தை காங்கிரஸ் மன்றத்தில் கொண்டு வருவது விஷயத்தை எளிதாக்காது."
இந்த வாதம்தான் அக்டோபர் 2002லும் இதே ஜனநாயகக் கட்சிக்காரர்களால்
முன்வைக்கப்பட்டது; அப்பொழுது அவர்கள் பரபரப்புடன் இராணுவ சக்தி ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தப்படும்
வாக்கிற்கு இசைவு கொடுத்தனர்; அதுவும் சட்டமன்ற தேர்தல்களுக்கு சிலவாரங்களுக்கு முன்னதாக; அதையொட்டி
தேர்தல்களில் அது புஷ் நிர்வாகத்தின் போர் உந்துதலுக்கு பொதுஜனவாக்காக ஆவதைத் தவிர்ப்பதற்கு என்று வாதிடப்பட்டது.
அமெரிக்கா உண்மையில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு பொருள் உடைய நாடாக
இருந்தால், ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது இது பற்றி முழு விவாதம் என்பது கட்டாயமாக இருந்திருக்கும்;
அதுவும் கூட்டாட்சி கருவூலம் கொள்ளை அடிக்கப்பட்டு, வருங்காலத் தலைமுறைகளும் நிதிய உயரடுக்கின் செல்வக்
கொழிப்பிற்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு அவற்றை அடைமானம் வைக்கையில் கட்டாயமானதாக
கருதப்பட்டிருக்கும்.
பிணை எடுப்புக்கு நவம்பர் 4 அன்று வாக்களிக்கப்பட வேண்டும் என்றால்,
வாக்காளர்கள் அதை பெரும்பான்மையில் நிராகரிப்பர் இந்த எதிர்ப்பை ஒட்டித்தான் இரு கட்சிகளிலும் இணைந்து
சதி செய்பவர்கள் இந்த வார இறுதிக்குள் உடன்பாட்டைக் காண முயல்கின்றனர்; இதையொட்டி அமெரிக்க மக்கள்
இந்த முடிவு பற்றி எந்த கருத்தும் கூற முடியாது என்று போய்விடும்; இதுவோ நாட்டின் வருங்காலப் போக்கை
ஆழ்ந்து பாதிக்கும் முடிவாகும்.
இரு கட்சிகளில் எதுவும் அமெரிக்க மக்களிடம் அதன் உண்மைத் திட்டத்தை முன்வைக்க
தயாராக இல்லை.
கடந்த வார நிகழ்வுகள் தெளிவாக நிரூபித்துள்ளது போல் ஜனநாயகக் கட்சி வோல்
ஸ்ட்ரீட்டின் வேலையாளாக உள்ளது. தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் பணக்காரர் நலன்களுக்கு எதிர்ப்பு என்று
காட்டிக் கொண்ட காலம் கூட முன்புதான் இருந்தது.
வோல் ஸ்ட்ரீட்டை பிணையில் எடுத்துக் காப்பாற்ற வேண்டியதன் தேவைமீதும் கடன்
சந்தைகளில் நெருக்கடியைக் கையாளுவதற்கு கருவூல செயலாளருக்கு முழுப் பொறுப்பு அளிக்கப்படுவதன் மீதும் ஜனநாயகக்
கட்சியினர் மத்தியில் உண்மையில் ஒருமித்த கருத்து இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பை
ஜனநாயகக் கட்சியினர் தனிப்பட்டமுறையில் வரவேற்கின்றனர்; ஏனெனில் இது ஒபாமா நிர்வாகத்திற்கு அதன் பிரச்சார
உறுதிமொழிகளை கைவிட்டு, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தக்க காரணமாகிவிடும்.
குடியரசுக் கட்சியினர் நிதியப் பிரபுத்துவத்தின் பாதுகாப்பிற்கு உறுதி கொடுப்பவர்கள்;
ஆனால் மன்றத்தில் ஒரு பிரிவு குடியரசுக் கட்சியினர் வாஷிங்டனில் பேரம் பேசுவதைத் தடை செய்தனர்; குறைந்தபட்சம்
தற்காலிகமேனும்; அவர்கள் பிணை எடுத்தலுக்கு எதிராக மக்களை திருப்தி செய்யும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வோல் ஸ்ட்ரீட்டிற்கு உதவித் தொகையாக வரிசெலுத்துவோர் பணத்தை கொடுப்பதை எதிர்ப்பதாக கூறினாலும்,
மன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சியினர் நிதி கொடுப்பதை வேறு வகையில் கூற வேண்டும் என்றுதான் திட்டமிடுகின்றனர்.
மூலதனத்தில் இலாபம் வரும்போது கொடுக்கப்படும் வரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் பெருநிறுவனங்களுக்கு வரிகுறைப்புக்கள்
ஒரு மாற்றீடு என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
வாஷிங்டனில் உத்தியோகபூர்வ விவாதம் மிக அடிப்படையான வர்க்க வினாவை
முற்றிலும் விலக்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு யார் பொறுப்பு?
உழைக்கும் மக்கள் இந்த அடைமான ஆதரவு உடைய கடன்பத்திரங்களுக்கான
சந்தையின் பொறிவை ஏற்படுத்தவில்லை; வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் விரைவில் இலாபம் அடையும்பொருட்டு,
நிதிய சூழ்ச்சிக் கையாளல் மூலம் இதை தோற்றுவித்தனர். அமெரிக்காவில் வீடுகள் வாங்கியவர்களில் 90
சதவீதத்திற்கு மேலானவர்கள் ஆழ்ந்த மந்த நிலையின் பாதிப்பு, வேலைகள் போகும் ஆபத்து, ஊதியக் குறைவு,
பெரும் செலவுகள் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு என்று இருந்தாலும்கூட, இன்று
தங்கள் கடன் தொகையை கொடுக்கின்றனர் --பல நேரமும் பெரும் தியாகம் செய்கின்றனர். ஆயினும்கூட
பிணைநிதிக்கு பணம் கொடுக்கும் தேவைக்காக, நெருக்கடியின் முழுச் சுமையும் தொழிலாள வர்க்கத்தின்மீது சமூகச்
செலவுகளில் வெட்டுக்கள் மற்றும் பெருகிய முறையில் வரிவிதிப்பு சுமத்தப்படும்.
அமெரிக்காவில் உள்ள வர்க்க பிளவுகள் வெள்ளியன்று நடந்த இரண்டாம் நிகழ்வில்
அடிக்கோடிட்டு காட்டப்பட்டன. விரிவாக்கப்பட்ட வேலையின்மை நலன்கள், சிறு வணிகங்களுக்கு வரிக்கடன்கள்,
உணவிற்கான உதவிகள், மருத்துவ உதவித் திட்டங்கள் மற்றும் உள்கட்டுமான திட்டங்கள் ஆகியவற்றிற்காக $61 பில்லியன்
கூடுதலான நிதி வழங்கும், ஜனநாயக ஆதரவுடைய பொருளாதார ஊக்க மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது.
இதற்கு ஒப்பான சட்டவரைவுக்கு தேவையான 60 வாக்குகள் வித்தியாசத்தை பெறுவதற்கு
செனட்டினால் முடியவில்லை; எட்டு வாக்குகள் இன்னமும் தேவைப்பட்டன; ஜனாதிபதி புஷ் அத்தகைய சட்டம் நிறைவேற்றப்படுமானால்
தடுப்பதிகாரத்தை பயன்படுத்திவிடுவதாக கூறிவிட்டார்.
இந்த வேறுபாடு அப்பட்டமானது. வோல் ஸ்ட்ரீட் தப்பிப் பிழைக்க வரம்பில்லாத
நிதிகள் கொடுக்கப்படுகிறது; ஆனால் ஒப்புமையில் அற்ப தொகை கூட தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு
கொடுப்பது என்பது இயலாது எனப்படுகிறது.
நிதிய நெருக்கடி முதலாளித்துவ முறையில் பொருளாதாரத் தோல்வியை நிரூபணம் செய்துள்ளது;
அரசியல் அமைப்பு முறையில் திவால்தன்மையையும் நிரூபணம் செய்துள்ளது. இரு பெரிய வணிகக் கட்சிகளின் மூலம்
தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் அக்கறைகள் வெளிப்படுவதற்கு எந்த வழியும் இல்லை.
மக்கள் குறைகளுக்கு பாதுகாப்பு வால்வ் போல் ஆளும் உயரடுக்கினால் நீண்ட காலமாக
பயன்படுத்தப்படும் ஜனநாயகக் கட்சி இப்பொழுது முற்றிலும் பெருநிறுவன அமெரிக்கா மற்றும் வோல் ஸ்ட்ரீட்டுடன்
அடையாளம் காணப்படுகிறது. தற்பொழுதைய நெருக்கடியில் ஜனநாயகக் கட்சியும் புஷ் நிர்வாகமும் ஒரு ஒன்றுபட்ட
கூட்டணியாக உள்ளன. வெள்ளை மாளிகையில் வியாழனன்று இருந்த அசாதாரணமான காட்சி ஒன்று, செய்தி ஊடகத்தில்
பரந்த முறையில் தகவல் கொடுக்கப்பட்டது, இதைச் சுருக்கிக் கூறுகிறது.
மன்றத்தின் குடியரசுக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர்
மக்கெயின் ஆதரவின்பேரில் இந்தத் பிணை எடுக்கும் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை எழுப்பினர்; இதை ஜனநாயகக்
கட்சி பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் "மறித்துக் கொண்டு போதல்" என்று விளக்கினர். நிதி மந்திரி ஹென்றி
போல்சன் மன்ற அவைத்தலைவர் நான்சி பெலோசியிடம் பேச்சுவார்த்தைகள் சீர்குலைவதை அனுமதிக்கக்கூடாது
என்று வாதிட்டார். ஒரு கட்டத்தில் அவர் ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவரிடம் மண்டியிட்டார்; அப்பொழுது
ஜனநாயகக் கட்சியினர் மன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சியினர்தான் பேச்சுக்களை முறிக்கும் பொறுப்பில் உள்ளனர்
என்றனர்; போல்சன் விடையிறுத்தார்: "எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்" என்றார்.
See Also:
வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்து காப்பாற்றுவதை நிராகரி!
1930களுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம்! வங்கிகள் பொதுவுடைமை ஆக்கப்பட வேண்டும்!
|