World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காWashington Mutual assets acquired by JPMorgan Chase வாஷிங்டன் மியூச்சுவல் நிதிநிறுவனத்தின் சொத்துக்கள் ஜே.பி. மோர்கன் சேசினால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன மிகப் பெரிய அமெரிக்க வங்கியின் இதுகாறும் இல்லாத திவால் By Barry Grey அரசாங்கம் வாஷிங்டன் மியூச்சுவல் நிதிநிறுவனத்தை எடுத்துக்கொண்டதுடன், அதன் செயற்பாடுகள் மற்றும் சொத்துக்கள் ஜே.பி. மோர்கன் சேசினால் எடுத்துக் கொள்ளப்பட்ட விதத்தில், மற்றொரு மிகப் பெரிய அமெரிக்க வங்கி வியாழக்கிழமை வீழ்ச்சியுற்றது; அமெரிக்காவின் ஆறாவது மிகப் பெரிய வங்கியும் நாட்டிலேயே சேமிப்பு, கடன் கொடுக்கும் வங்கிகளில் மிகப் பெரியதுமான, சியாட்டிலை தளமாகக் கொண்ட நிறுவனம் வீழ்ச்சியுற்றது அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய வங்கித் தோல்வி ஆகும். $307 பில்லியன் சொத்துக்கள், $188 பில்லியன் சேமிப்புக்களில் மற்றும் 2,200 கிளைகளை கொண்ட வாஷிங்டன் ம்யூச்சுவலின் தோல்வி முந்தைய வங்கிச் சரிவுகளின் மிகுந்த தன்மையை மறைத்துவிட்டது; அதாவது 1984ல் கான்டினென்டல் இல்லிநோய் வங்கியின் வீழ்ச்சிதான் இதுவரை மிகப் பெரியதாக இருந்தது; அது மடிந்தபோது அதன் சொத்துக்கள் $40 பில்லியன் என்று இருந்தன. 1889 ல் நிறுவப்பட்ட வாஷிங்டன் ம்யூச்சுவல், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவத்தின் பெருமிதச் சின்னங்கள் என்று இருந்த பேயர் ஸ்டேர்ன்ஸ், லெஹ்மன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச் போன்றவை அகற்றப்பட்ட தொடர் வங்கித் தோல்விகளில் சமீபத்திய பகடைக் காய் ஆகும். மூன்று வார காலத்திற்குள் லெஹ்மன், மெரில் மற்றும் வாமு ஆகியவை மறைந்துவிட்டன; அரசாங்கம் பெரும் அடைமான நிறுவனங்களான பானி மே, பிரெட்டி மாக் ஆகியவற்றையும் மிகப் பெரிய காப்பீட்டுப் பெருநிறுவனமான American International Group ஐயும் எடுத்துக் கொண்டது.இரண்டு மாதங்களுக்கு முன்பு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட மற்றொரு பெரிய சேமிப்பு மற்றும் கடன் கொடுக்கும் வங்கியான IndyMac பெடரல் கட்டுப்பாட்டினால் மூடப்பட்டது. அந்த தோல்வி பெடரல் சேமிப்பு காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டு நிதியான $45.2 பில்லியனில் இருந்து $8.9 பில்லியனை கரைத்தது. அந்த காப்பீட்டு அமைப்பு கட்டுப்படுத்தப்பட்ட வங்கிகளில் $100,000 வரை காப்பீடு செய்கிறது. மத்திய வைப்புத்தொகை காப்பீட்டுக் கழகம் (FDIC) உடனடியாகவே வாமு வணிக நடவடிக்கைகள் மற்றும் சேமிப்புக்களை மற்றொரு அமைப்பிற்கு விற்க முடியவில்லை என்றால், சியாட்டில் வங்கியின் தோல்வி மற்றொரு $20 பில்லியனில் இருந்து $30 பில்லியன் வரை கரைத்திருக்கும். அது கிட்டத்தட்ட மத்திய வைப்புத்தொகை காப்பீட்டுக் கழகம் (FDIC) யின் இருப்புக்கள் அனைத்தையும் கரைத்திருக்கும். வாமு (WaMu), ஊக வீடுகள் பூரிப்பு காலத்தில் மிகப் பெரிய அளவிற்கு இலாபம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக இருந்து, மிக அதிக வருமானங்களை அதிக ஆபத்துடைய, அதிக வட்டி இருந்த வீட்டுக் கடன்களில் இருந்து பெற்றது; வாங்கியவர்களுக்கோ உத்தரவாதம் இல்லாத நாணயம்தான் இருந்தது. வட்டி மட்டும் என்றவகையிலும் சரிசெய்துகொள்ளக்கூடிய அடைமான விகிதங்கள் வகையிலுமாக இத்தகைய உள்ளார்ந்த உறுதியற்ற, கொள்ளை முறை கடன்கள் கொடுப்பதில் இந்த வங்கி தேர்ச்சி பெற்றிருந்தது. பெருகிய முறையில் அது இழப்புக்களை 2007 கோடையில் இருந்தே வீடுகள் மற்றும் கடன் குமிழிகள் சரிவில் இருந்து, திருப்பிக் கொடுக்கப்படாத அடைமானங்கள், வீடுகளுக்கு ஆதரவு கொடுத்திருந்த நச்சு நிறைந்த பாதுகாப்புப் பத்திரங்களை நஷ்டக்கணக்கில் எழுதியதில் பல பில்லியன்கள் அதற்கு இழப்பாயிற்று. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், அது ஒரு காலாண்டு இழப்பு மிக அதிகமாக $3.3 பில்லியன் என்று தகவல் கொடுத்தது; மேலும் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்தின் அதன் அடைமானப் பிரிவில் $19 பில்லியன்களை இழக்கக் கூடும் என்றும் அறிவித்திருந்தது. வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளியன்று வாமு மடிந்ததை "நாட்டின் நிதிய நெருக்கடியில் ஒரு புதிய மிகக் குறைந்த புள்ளி என்று" வர்ணித்தது; அதாவது 1930 களில் பெருமந்த நிலைக்கு பின் முன்னோடியில்லாத வகையில் முறையே முறிந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரிய வங்கித் தோல்விகள் வரவிருக்கின்றன எனப்படுகிறது. மிகப் பெரிய இழப்புக்களை கொண்ட இரு முக்கிய வங்கிகளின் விலைகள் வெள்ளி அன்று இன்னும் சரிந்தன. வாசோவியா பங்கு 30 சதவிகிதமும் நாஷனல் சிட்டியின் பங்கு 26 சதவிகிதமும் விழுந்தது; பிந்தையதின் பங்குகள் இதுவரை இல்லாத குறைவான விலையான $2 என்று விற்பைனையாயிற்று. சொத்துக்களை பொறுத்தவரையில் அமெரிக்காவின் நான்காம் பெரிய வங்கி என்று இருந்து வாசோவியா விற்பனைக்கு தயாராக இருப்பதாகக் குறிப்பு காட்டி வாங்கும் திறன் உடையவர்களிடம் பேச்சு வார்த்தைகளையும் நடத்தியது. கடன் சந்தைகள் சரிவு அமெரிக்க மற்றும் உலக நிதிய முறையை கடந்த வாரம் விளிம்பிற்கு கொண்டு வந்தது, இன்னமும் நிற்கவில்லை. வெள்ளியன்று வங்கிகளுக்கு இடையேயான கடன் வாங்குவதில் ஏற்படும் செலவு இன்னமும் அதிகமாகத்தான் போயிற்று; இது வங்கிகளின் திவால்தன்மை, பிற நிதிய அமைப்புக்களின் திவால்தன்மை ஆகியவை பற்றி பொது நம்பிக்கை இழப்பை பிரதிபலித்தது. "மீண்டும் செயற்பாடுகள் உறைந்துவிட்டன" என்று Calvert Funds ன் தலைமை நிரந்தர வருமான மூலோபாய வல்லுனரான Steve Van Order கூறினார். "வங்கிகள் ஒன்றுக்கொன்று கடன் கொடுப்பதிலும் அச்ச உணர்வை காட்டுகின்றன, வணிக ஆவணச் சந்தை மீண்டும் அசையாத்தன்மைக்கு வந்துவிட்டது." இந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட புதிய தகவல் குறிப்புக்கள் வீடுகள் விற்பனை, விலைகளில் இன்னும் சரிவையும் வேலையின்மை காப்பீட்டில் புதிய பதிவுகளையும் காட்டியது. செப்டம்பர் 7ம் தேதி, வாமு அதன் தலைமை நிர்வாக அதிகாரி கெரி கில்லிங்கரை பதவிநீக்கம் செய்த புரூக்லின் வங்கியாளர் Alan Fishman ஐ பதவியில் இருத்தியது. லெஹ்மன் பிரதர்ஸ் திவாலடைவதிலிருந்து காப்பை செப்டம்பர் 15 அன்று நாடியபோது, நரம்புத் தளர்ச்சியுற்ற வாமு வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சேமிப்புத் தொகைகளை திரும்பப் பெறத் தொடங்கினர். அடுத்த பத்து நாட்களில் அவர்கள் $16.7 பில்லியன் சேமிப்புக்களை, கிட்டத்தட்ட வங்கி ஜூன் 30 வரை வைத்திருந்த மொத்ததத்தில் 9 சதவிகிதம் வரை திரும்ப பெற்றனர். வாமு தன்னை விற்பனை செய்யத் தயாராகி எவரேனும் வாங்குபவர் கிடைக்கமாட்டாரா என அலைந்தது; அதன் பங்கு விலைகள் சரிவை கண்டன; எந்த வங்கி அல்லது தனியார் பங்கு நிறுவனமும் விலை பேசத் தயாராக இல்லை. வியாழக்கிழமை பிற்பகுதியில் கூட்டாட்சி அலுவலக சேமிப்பு கண்காணிப்பு வங்கி மோசமாகிவிட்டதாக அறிவித்து, அதை எடுத்துக் கொண்டு FDIC யிடம் வங்கியின் செயற்பாடுகளயும் சொத்துக்களையும் JP Morgan Chase இடம் விற்குமாறு ஒப்பந்தம் செய்து கொண்டது. பேய்ர் ஸ்டேர்ன்ஸ் ஐ கடந்த மார்ச் மாதம் வாங்கிய JP Morgan, அதுவும் பெடரல் ரிசர்வ் குழு அதன் கடன்களில் $29 பில்லியனுக்கு உத்தரவாதம் அளித்த பின்னர் மிகக் குறந்த விலைக்கு வாங்கியபின், வாமுவின் சேரிப்புக்கள், கிளைகள் மற்றும் சொத்துக்களை பெயரளவு விலையான $1.9 பில்லியனுக்கு வாங்கியது. இந்த விற்பனை JP Morgan ஐயே அதுவும் நச்சுப்படிந்த அடைமான ஆதரவுப் பத்திரங்களில் பல பில்லியன் டாலர்கள் சுமையை ஏற்கும்படியும் பிற மோசமான கடன்களை சுமக்குமாறும் செய்துள்ளது; இதுவோ அமெரிக்காவில் மிகப் பெரிய சேமிப்பு நிறுவனம் ஆகும்; வாடிக்கையாளர்கள் சேமிப்பாக $900 பில்லியனுக்கு மேல் இதில் போட்டுள்ளனர். வாஷிங்டன் மியூச்சுவலின் பங்குதாரர்கள் மற்றும் பத்திரம் வைத்திருப்பவர்கள் இந்த நடவடிக்கையினால் அழிந்து போவார்கள். வாமு இந்த ஆண்டு தொடக்கத்தில் 4,200 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியது; அதன் தோல்வி மற்றும் JP Morgan ஆல் எடுத்துக் கொள்ளப்படுவது இன்னும் அதிக வேலைக் குறைப்புக்களுக்கு வகை செய்யும். ஜூன் 30 வரை, வங்கி 43,000 ஊழியர்களை கொண்டிருந்தது. ஏற்கனவே இந்த ஆண்டு அமெரிக்க வங்கிகளின் 150,000 ஊழியர்கள் ஊகவிதத்தில் வீடுகள் மற்றும் கடன் குமிழிகள் சரிந்ததை அடுத்து தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். வேலையிழந்த வாமு தலைமை நிர்வாக அதிகாரியான கில்லிங்கர் 2007ல் $14.4 பில்லியன் பணத்தை ஊதியமாக பெற்றார். அவருக்கு பின் பதவிக்கு வந்த பிஷ்மன் மூன்று வாரங்கள் பதவியில் இருந்ததற்காக பணிநீங்குகையின் நிதித்தொகுப்பாக $18 மில்லியன் பணத்தை பெறுவார். |