:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama demands
deep cutbacks to pay for Wall Street bailout
வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்துக் காப்பாற்ற நிதியளித்ததற்கு ஆழ்ந்த பொதுநலச் செலவினக் குறைப்புக்கள்
வேண்டுமென ஒபாமா கோருகிறார்
By Bill Van Auken
23 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
புஷ் நிர்வாகமும் காங்கிரஸும் திங்களன்று வோல் ஸ்ட்ரீட்டை பிணையில் எடுத்துக்காப்பாற்ற
ஒரு டிரில்லியன் நிதித் தொகுப்பை கொடுக்க பேச்சுவார்த்தைகளை தொடர்கையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளர் செனட்டர் பாரக் ஒபாமா விஸ்கான்ஸின் க்ரீன்லேயில் ஒரு உரை நிகழ்த்தினார்; இதில் அரசாங்க செலவினங்களில்
மிக அதிக வெட்டுக்களை மேற்கொள்ளப் போவதாகவும் அமெரிக்க அரசாங்கத்தில் கடுமையான நிதியக் கட்டுப்பாட்டை
கொண்டு வர இருப்பதாகவும் உறுதியளித்தார்.
"எமது காலத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நம்பினால், நாம் பல
கடின விருப்பங்களை மேற்கொள்ள வேண்டும்" என்று ஒபாமா அறிவித்தார். "ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் முழு
கூட்டாட்சி வரவு-செலவுத்திட்டத்தையும் நான் படிப்பேன், பக்கம் பக்கமாக பார்ப்பேன், வரிக்கு வரி
படிப்பேன்; செயல்பட முடியாத திட்டங்களை அகற்றுவேன், தேவையில்லாத திட்டங்களை அகற்றுவேன்."
இவருடைய மற்ற பேச்சுக்களை போலவே, ஒபாமாவின் கருத்துக்கள் ஒரே நேரத்தில்
இரு வேறு மக்கட்தொகுப்பிற்கு கூறப்பட்டவை ஆகும். மக்களுடைய ஆதரவிற்கான முறையீட்டில் அவர் தன்னுடைய
உரையை திருப்திப்படுத்தும் வகையில் பேசி, "வோல் ஸ்ட்ரீட் நெருக்கடி பற்றி மட்டும் என்று இல்லாமல்,
Main Street
நெருக்கடிய பற்றியும்" பேராசை பிடித்த தலைமை நிர்வாக அதிகாரிகள், நெறியற்ற செல்வாக்கு திரட்டுபவர்கள்
பற்றியும் பேசினார்.
ஆனால் அவருடைய மிக முக்கியமான தளமாகிய வங்கிகள், வோல் ஸ்ட்ரீட் நிதிய
நிறுவனங்கள் மற்றும் அவருடைய பிரச்சாரத்திற்கு அள்ளிவீசியவை என வரும்போது, அவருடைய கருத்துக்களின்
நோக்கம் தெளிவாக இருந்தது. தன்னை ஒரு நிதிய கடுமைச் சிக்கன முறைக்கு காவலர் என்ற முறையில் ஒபாமா
காட்டிக் கொள்ளுவதுடன், நிதி மூலதனத்தின் அடிப்படை நலன்களை காப்பவராகவும் காட்டிக் கொள்ளுகிறார்.
இப்படிப்பட்ட நோக்குநிலையை எடுத்துக்கொண்டால், பிணையில் எடுப்பதற்கும் அவருடைய
ஆதரவு இருக்கையில், "Main Street"
பற்றிய அக்கறை இருப்பதாகக் காட்டப்படுவது ஒரு பாசாங்குத்தன வனப்புரைதான். வோல் ஸ்ட்ரீட்டிற்கு பணத்தை
பொழிவது என்ற முடிவு மக்களின் பரந்த பிரிவின் சமூக நிலைமைகளை முன்னேற்றுவிக்க எந்தவித கணிசமான செலவினத்தையும்
தவிர்த்து விடுகிறது; அதையொட்டி ஒபாமாவின் மிகக் குறைந்த, தெளிவற்ற சீர்திருத்தங்கள் பற்றிய உறுதிமொழிகளும்
பொருளற்று போய்விடுகின்றன.
மில்லியன் கணக்கான அமெரிக்க உழைக்கும் மக்கள் இந்த பிணை எடுப்பு பற்றி சீற்றம்
கொண்டிருக்கும் நிலையிலும், மற்றும் முற்றிலும் ஜனநாயகமற்ற முறையில் இது அவர்கள்மீது சுமத்தப்படுவதை பற்றி
சீற்றம் உற்ற நிலையிலும், எதிர்க்கட்சி எனக் கூறிக் கொண்டிருக்கும் கட்சியின் வேட்பாளர் பொதுமக்கள் இதற்கான
விலையைக் கொடுக்கும் திட்டத்தை முன்வைக்கிறார்.
"அங்கு இருக்கிறது என்பதற்காக ஒவ்வொரு அரசாங்க திட்டத்தையும் நாம் காப்பாற்ற
வேண்டும் என்று நினைக்கும் ஜனநாயகக் கட்சியாளனாக நான் இல்லை" என்று ஒபாமா கூட்டத்தினரிடையே கூறினார்;
அதாவது அமெரிக்காவின் நிதிய பிரபுக்களை காப்பாற்றுவதற்காக திரட்டப்படும் மகத்தான செலவினங்களை ஈடுகட்டத்
தேவையான நிதிய பெரும் சிக்கனத்தை திணிப்பதற்கு காங்கிரசில் உள்ள தன்னுடைய கட்சி உறுப்பினர்களோடு மோதுவதற்கு
தயாராக இருப்பதாக குறிப்புக் காட்டினார்.
ஒரு றேகன் நிர்வாக குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்போல் பேசிய ஒபாமா "வாஷிங்டனில்
இருக்கும் பேராசை, அதிகப்படியான செயல்களை சீர்திருத்தும் திட்டம்" என்ற ஒரு 11 பக்கத்தை அளித்தார்.
இதில் அவர் கூட்டாட்சி அரசாங்கத்தை கட்டுப்படுத்த பெரிய கோடாலியை எடுத்துக் கொள்வதாக உறுதி
கொடுத்தார். "விளைவுகளைப் பெறாத அரசாங்க மேலாளர்களை பதவியில் இருந்து அகற்றுவோம்; உங்கள் பணத்தை
வீணடித்துக் கொண்டிருக்கும் நிதியங்களை குறைப்போம்; தனியார் துறையில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் படிப்பினைகளை
எடுத்துக் கொண்டு அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவின் திறமையையும் முன்னேற்றுவிப்போம்--ஏனெனில் ஒரு இருபதாம்
நூற்றாண்டு அதிகாரத்தை வைத்துக் கொண்டு நாம் இருபத்தியோராம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ள
முடியாது" என்றார்.
டிரில்லியன் கணக்கான டாலர்களை சூறையாடி நாட்டை பெரும் மந்த நிலையின்
விளிம்பிற்கு கொண்டு வந்த அந்தத் தனியார் துறையில் இருந்து "திறமை" பற்றிய துல்லியமான எந்தப் படிப்பினைகள்
பற்றியும் ஒபாமா விவரித்துக் கூறவில்லை.
முன்னதாக நியூ யோர்க் டைம்ஸிற்குக் கொடுத்த பேட்டியொன்றில் ஒபாமா,
தான் புஷ்ஷின் நிதி மந்திரி முன்னாள் கோல்ட்மன் சாஷ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிணை எடுத்துக் காப்பாற்ற
திட்டமிட்டவர்களில் முக்கியமானவருமான ஹென்ரி போல்சனை தன்னுடைய நிர்வாகத்திலும் உறுப்பினராக வைத்துக்
கொள்ளக்கூடும் என்று தெரிவித்தார்.
"ஒபாமா ஒரு குடியரசுக் கட்சிக்காரரான திரு போல்ஸனைத் தக்க வைத்துக் கொள்ளுவது
இயலும் என்றுதான் கருதுகிறார். நிதி அமைச்சரகம் அடைமானப் பெருநிறுவனங்கள் பானி மே மற்றும் பிரெட்டி
மாக் இரண்டும் அரசாங்கப் பாதுகாப்பில் இரு வாரங்களுக்கு முன்பு கொண்டுவந்ததில் இருந்து இருவரும் அன்றாடம்
பேசிக் கொண்டிருக்கின்றனர்; திரு ஒபாமா, திரு போல்ஸனை பற்றி பெரிதும் மதிப்புடன் பேசுகிறார்" என்று
டைம்ஸ் தெரிவித்துள்ளது.
"இந்த பந்து விளையாட்டை செய்வதற்கு புதிய நபரைக் கொண்டுவருவது உகந்ததல்ல"
என்று ஒபாமா சனிக்கிழமையன்று டைம்ஸிடம் கூறினார். "தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும், அடுத்த
நிர்வாகத்திற்கு மாற்றம் என்பது மிகவும் முக்கியமானது. அது இருகட்சி முறை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் செயல்படுத்தப்பட
வேண்டும்."
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இந்த மாறுதல் "சிறிதும் தடங்கல் இன்றி" புஷ்
நிர்வாகத்திற்கும் தன்னுடையதிற்கும் இடையே இருக்கும் என்றும், "நிதிய நெருக்கடி என்பதால் அல்ல; நாம் இரு
போர்களுக்கு நடுவில் உள்ளோம் என்பதாலும், அனைவரும் பயங்கரவாதத் தாக்குதலை இன்னும் எதிர்கொள்ளும் நிலையில்
இருப்பதாலும்தான்" என்றும் வலியுறுத்தினார்.
"மாற்றத்தின்" ஆதரவாளர் என்று இடைவிடாமல் தன்னை அறிவித்துக் கொண்ட ஒரு
வேட்பாளருக்கு "இருகட்சி நிலைப்பாட்டை" செயல்படுத்துவது, பெரு மந்த காலத்திற்கு பினனர் ஆழ்ந்த
பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் "தடங்கல் இன்றி" மாற்றம் கொண்டுவருவது, இரு ஆக்கிரமிப்பு
போர்களை தொடர்வது மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரானது" என அழைக்கப்படும் போரை தொடர்வது
என்பது இதைவிட வெளிப்படையாக இருக்க முடியாது.
தந்திரோபாயத்தில் எந்த மாறுதல்கள் வந்தாலும், பாரசீக வளைகுடா மற்றும் மத்திய
ஆசியாவில் மூலோபாய விசை இருப்புக்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான போர்கள் தொடரும். "வீண் செலவுத்திட்டங்களை"
அகற்றுதல், பட்ஜெட் செலவினங்களைக் குறைத்தல் என்ற பேச்சுக்கள் அனைத்தும் இருந்தாலும், ஒபாமா இராணுவச்
செலவில் ஒரு டாலர் கூட குறைக்கும் விருப்பம் இருப்பதாக குறிப்பிடவில்லை; ஆண்டு ஒன்றிற்கு இது உத்தியோகபூர்வ
மதிப்பீட்டில் $700 பில்லியன் என்று இருக்கும்; அதேதான் வோல் ஸ்ட்ரீட்டை பிணையில் எடுப்பதற்கான செலவுப்
பணமும் ஆகும். மாறாக அவர் இராணுவச் செலவை அதிகப்படுத்தும் வகையில் மற்றும் ஒரு 100,000 துருப்புக்கள்
சேர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க போர் இயந்திரம் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்றும் உறுதி
பூண்டுள்ளார்.
பயங்கரவாதத்தின் மீதான போரில் "சிறிதும் சிரமமில்லாமல் மாறுவது" ஏற்கனவே
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜூலை மாதம் சட்டமன்றத்தில் வாக்களித்து புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு
கண்காணிப்பு நடவடிக்கையை சட்டமாக்கியதில் குறிப்புக் காட்டப்பட்டது; அதே நேரத்தில் பெரிய தொலைபேசி
நிறுவனங்களுக்கு முதலில் இருந்தே சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்க குடிமக்களை ஒற்றுக் கேட்பது பற்றி பொதுமன்னிப்பு
அளிக்கப்பட்டுவிட்டது. உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான இத்தாக்குதல்கள் மற்றும் வெளிநாட்டில் குற்றம்
சார்ந்த நடவடிக்கைகளை பயன்படுத்துவது எனவே தொடரும்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் பெரும் திகைப்பிற்குரிய நெருக்கடியின் முன், ஒபாமா
புஷ் நிர்வாகம் இயற்றிய கொள்கைகளை தொடரும் நோக்கத்தைக் கொண்டுள்ளார்; இதற்கு ஜனநாயகக் கட்சியின்
சட்டமன்ற தலைமையின் முழு சதி உடந்தை உள்ளது. இக்கொள்கைகள் அமெரிக்க கருவூலத்தை கொள்ளையடித்து அதன்
ஒட்டுண்ணித்தனத்தின் விளைவுகளால் அவதியுறும் நிதிய தன்னலச் சிறுகுழுவின் செல்வத்தை பாதுகாப்பது என்ற விதத்தில்
உள்ளது.
இந்த வாரம் வாஷிங்டனில் வோல் ஸ்ட்ரீட்டை பிணையிலெடுப்பதற்காக எடுக்கப்பட்டு
வரும் முடிவுகள் நவம்பர் தேர்தலை கிட்டத்தட்ட தேவையற்றதாக ஆக்கிவிடும். ஜனநாயகக் கட்சியினரும் ஒபாமாவும்,
குடியரசுக் கட்சியினரும் மக்கெயினும் கூட, அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வத்தை புதிய பரந்த
முறையில் ஒரு சிறிய உயர்மட்டத்தில் இருக்கும் பெரும் செல்வக் கொழிப்பு உடைய தட்டிற்கு மாற்றுவதற்கு வரிசையில்
நிற்கின்றனர்.
இந்த முடிவு நவம்பரில் எவர் வெற்றிபெற்றாலும், அடுத்த நிர்வாகத்தின் கொள்கைகளை
நிர்ணயிக்கும். இதற்கு சமூக நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி
போன்றவற்றின் மீது நேர்முகத் தாக்குதல் நடத்தப்படும்; இதன் பொருள் ஊதியங்கள் மற்றும் தொழிலாளர்கள்
வாழ்க்கைத் தரங்கள் சிதைக்கப்படுவது தீவிர விரைவுபடுத்தப்படும் என்பதாகும்; ஏனெனில் டிரில்லியன் டாலர்களை
பெரும் வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்கள் மீது உட்செலுத்துவது என்பது டாலரின் மதிப்பைக் குறைத்து ஒரு புதிய
சுற்று ஏற்றத்தை பணவீக்கத்திற்கு அளிக்கும்.
திங்களன்று ஒபாமா நிகழ்த்திய உரை, அத்தகைய தாக்குதல்களை நடத்தத் தான்
தயாராக இருப்பதை ஒரு தெளிவான எச்சரிக்கையாகக் கொடுக்கிறது; மேலும் இரு முக்கிய கட்சிகளின் உண்மையான
தளத்தை --வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய உயரடுக்கு ஆகியவற்றிற்கு--தான்தான் தீவிர சிக்கன நடவடிக்கைகளை
இயற்றுவதற்கு சிறந்த நபர் என்பதையும் காட்ட முற்பட்டுள்ளது.
See Also:
வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்து காப்பாற்றுவதை நிராகரி!
நிதிய உருகிஅழிதலை ஒபாமா எதிர்கொண்டுள்ள விதம்: மோசடித்தனமும், வோல்ஸ்ட்ரீட்டிற்கு அடிபணிந்து நிற்றலும்
|