World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காNo to Wall Street bailout! The socialist answer to the financial crisis வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்து காப்பாற்றுவதை நிராகரி! நிதிய நெருக்கடிக்கான சோசலிச பதில் Statement of the Socialist Equality Party National
Committee சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் முறையே ஜெரோம் வைட் மற்றும் பில் வான் ஒகென் ஆகியோரும் வோல் ஸ்ட்ரீட்டை தப்பிவிக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வரிசெலுத்துவோர் நிதியை பயன்படுத்துவது என புஷ் நிர்வாகம் அறிவித்த திட்டத்தையும் ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பாரக் ஒபமா மற்றும் ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற தலைமை அதை தழுவிக் கொண்டு ஏற்றுள்ளதையும் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கின்றனர். இந்த வாரம் காங்கிரசில் அவசரம் அவசரமாக இயற்றப்படவிருக்கும் இத்திட்டம் அரசாங்கம் மற்றும் முழு அரசியல் அமைப்புமுறையும், 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு பின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதற்கு கொடுக்கும் விடையிறுப்பு ஆகும். அது முன்னோடியில்லாத வகையில் பொது நிதிகள், முக்கிய வங்கிகளுக்கும் அமெரிக்க நிதிய ஆளும் உயரடுக்கிற்கும் பரந்த மக்கள் தொகுப்பின் இழப்பில் மாற்றுவதற்கு அழைக்கிறது. இத்திட்டமும் இது கட்டளையிடும் முறையும் ஆழ்ந்த ஜனநாயக விரோதப் போக்கை உடையவை ஆகும். நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் நிதிய தன்னலக் குழு ஆட்சியானது, அமெரிக்க மற்றும் உலக நிதிய சந்தைகளின் உடைவை பயன்படுத்தி, எந்தவித விவாதமும் ஆய்வும் இல்லாமல் தொலை விளைவுதரக்கூடிய தன் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு இரு முக்கிய அரசியல் கட்சிகள் மீதும் செய்தி ஊடகத்தின்மீதும் தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. 9/11க்கு பின் நடந்ததைப்போலவே, இது நெருக்கடியை பயன்படுத்தி முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என மற்ற நேரத்தில் கருதப்பட்டிருக்கும் கொள்கைகளை அவசர அவசரமாக செயல்படுத்துகிறது. செயல்படுத்தப்பட உள்ள நடவடிக்கைகள் எதுவும் நிதிய உருகுதலின் அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணமுடியாதவை; அதே போல் நெருக்கடியையும் அவை தீர்க்க முடியாது. அதிகபட்சம் செய்த தவறுக்கு தண்டணை பெறும் காலத்தை தள்ளிப்போட மட்டுமே முடியும். வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களை கட்டுப்படுத்துபவர்கள் எவரும் பொறுப்புக்கூற அழைக்கப்படவில்லை; நெருக்கடிக்கு வழிவகுத்த பரபரப்பு ஊகவாணிகத்தின் விளைவாக மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்கள், தங்கள் வீடுகள், வேலைகள், வாழ்க்கை நடத்தும் முறை இவற்றில் அடைந்த இழப்பிற்கு ஒரு சதமும் உதவிகூட அளிக்கப்படவில்லை. தவறாக ஏதும் கருதப்பட வேண்டாம்: ஆளும் உயரடுக்கின் நிதிய ஒட்டுண்ணித்தனத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாள வர்க்க மக்கள் சமூக செல்வத்தை சூறையாடி தங்களை செல்வக்க கொழிப்பாக ஆக்கிக் கொண்டவர்கள் தப்பிப் பிழைக்க பணத்தைக் கொடுப்பர். இத்திட்டத்தினால் ஏற்பட இருக்கும் மகத்தான பட்ஜெட் பற்றாக்குறை விரிவாக்கங்கள், தேசிய கடனில் வளர்ச்சி ஆகியவை அடிப்படை சமூக திட்டங்கள், கல்வி, வீடுகள், வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதார நலன்கள் என்று தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு இருப்பவற்றின் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்துவதற்கு நியாயப்படுத்தப்படும். இத்திட்டத்தின் செலவை --அமெரிக்க நிதி அமைச்சரகம் கிட்டத்தட்ட அனைத்து பயனற்ற அடைமான ஆதரவு உடைய சொத்துக்கள் அனைத்தையும் வங்கிகள் மற்றும் பிற நிதிய அமைப்புக்களில் இருந்து வாங்கவுள்ளது-- 700 பில்லியன் டாலர் என்று அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இந்த தொகை ஏற்கனவே உலக வரலாற்றில் மிகப் பெரிய முறையில் பெருநிறுவனங்கள் தப்பிப் பிழைப்பதற்கு செலவழிக்கப்பட்டுள்ள தொகை ஆகும். சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, உதவி நிதி இவற்றின் ஆண்டு செலவினங்களைவிட இது மிக அதிகமாகும். இத்தகைய செலவினம் நடைமுறைப்படுத்தப்படும்போது ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திற்கும் கிட்டத்தட்ட 10,000 டாலர் இழப்பு ஏற்படும். மற்ற பெருநிறுவனங்கள் தப்பிப்பிழைக்க கொடுக்கப்படும் பணத்துடன் இணைத்து பார்க்கும்போது, கடந்த சில வாரங்களில் இதையொட்டிய செலவினங்களையும் கருத்திற்கொள்ளும்போது --அடைமானப் பெருநிறுவனங்களான Fannie Mae, Freddie Mac ம் எடுத்துக்கொள்ள அரசாங்கம் கொடுத்த $200 பில்லியன், காப்பீட்டு பெருநிறுவனம் AIG அமெரிக்கக் காப்பீட்டுக் குழுவை எடுத்துக் கொள்ள $85 பில்லியன், பணச் சந்தை நிதியங்களுக்குக் காப்பீடு என்ற வகையில் $50 பில்லியன், பெடரல் ரிசேர்வ் போர்டிற்கு கருவூலத்தில் இருந்து மாற்றப்பட்ட $200 பில்லியன் -- வங்கிகளுக்கு கொடுக்கப்பட உள்ள $700 பில்லியன் அனைத்தும், பென்டகன் நீங்கலாக, 2009 நிதி ஆண்டிற்கான மொத்த விருப்புரிமைச் செலவுகளையும் விட மிக அதிகமாக இருக்கும். உண்மையில் $700 பில்லியன் என்பது வோல் ஸ்ட்ரீட் இறுதியில் தப்பிப் பிழைப்பதற்கான காப்பாற்றும் திட்டத்தில் மிகக் குறைந்த மதிப்பீட்டு தொகையாகும். திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் புஷ் நிர்வாகத்தின் முடிவான வெளிநாட்டு தளத்தை கொண்ட வங்கிகளிடம் இருந்து பாதுகாப்புப் பத்திரங்களை வாங்குதல் என விரிவாக்கம் செய்தல் --அமெரிக்க கடன் தொகைகளில் மகத்தான அளவை வைத்துள்ள உலக நிறுவனங்களின் அழுத்தத்தின்பேரில் செய்யப்பட்டது-- திட்டத்தின் செலவினங்களை மிகக் கணிசமாக உயர்த்தும். நான்கு பக்க "கருவூல அதிகாரம் அடைமானத் தொடர்புடைய சொத்துக்களை வாங்குவதற்கான சட்டமியற்றும் திட்டம்" என்பதின் பொருளுரை, சனிக்கிழமை அன்று நியூ யோர்க் டைம்ஸினால் வெளியிடப்பட்டது, இத்திட்டத்தின் ஆழ்ந்த ஜனநாயக விரோத மற்றும் எதையும் செய்யலாம் என்ற கருத்தின் தன்மையைத் தெளிவுபடுத்துகிறது. முதல் விதியின் படி கருவூல செயலாளருக்கு, ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிக்கு, வரி செலுத்துபவர்கள் பணத்தை எப்படிப்பட்ட "அடைமான தொடர்பு" உடைய பத்திரங்களாயினும், எந்த விலையிலும், அவர் விரும்பும் பணத்திற்கு எந்த நிதிய அமைப்பில் இருந்தும் வாங்கும் அதிகாரம் தடையற்ற முறையில், ஒருதலைப்பட்சமாக கொடுக்கப்படுகிறது. செயலாளர் --கோல்ட்மன் சாக்ஸின் முன்னாள் தலைமை நிர்வாகியாகவும் பல மில்லியனுக்கு உரிமையாளராவும் இருக்கும் ஹென்ரி போல்சன் தற்பொழுது -- "வாங்குவதற்கும், வாங்குவதற்கான நிதிய உதவிக்கு உத்தரவு கொடுக்கவும், அடைமானத் தொடர்புடைய சொத்துக்களை எந்த நிதிய அமைப்பில் இருந்தும் செயலாளர் நிர்ணயிக்கும் விதத்தில் வாங்குவதற்கும் ஒப்புதல் கொடுக்கப்படுகிறது" என்று அது கூறுகிறது. இதை தொடர்ந்து கருவூல செயலரின் அதிகாரம் இச்சட்டத்தின்படி "எந்தவித வரம்பிற்கும்" உட்பட்டிருக்காது என்ற ஒரு விதி உள்ளது. மற்றொரு விதி, நிதி மந்திரி வங்கிகளுடன் "பொது ஒப்பந்தங்களில் இருக்கும் பிற சட்டபூர்வ விதிகளை பொருட்படுத்தாமல், ஈடுபடலாம்" என்று ஒப்புதல் கொடுக்கிறது. வேறுவிதமாகக் கூறினால் நிறுவப்பட்டுள்ள பொது ஒப்பந்தங்களை பற்றிய சட்டங்கள் புறக்கணிக்கப்படலாம் என்று பொருளாகும். பிணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான "நிதி நிறுவனங்கள்" அரசாங்கத்தால் வடிவமைக்கப்படும் என்று முன்மொழிவு கூறுகிறது இதன் பொருள் அரசாங்கம் திட்டத்தை செயல்படுத்த எந்த நிறுவனங்கள் நெருக்கடி ஏற்பட பொறுப்பாக இருந்தனவோ, எவை இந்தப்பிணை எடுத்தலில் இருந்து நேரடிப் பயன் பெறுமோ, அவற்றிடமே கொடுக்கலாம். இத்திட்டத்தீன்கீழ் தேசிய சட்டமன்றம் நிதி அமைச்சகத்தில் இருந்து அரையாண்டு அறிக்கைகள் மட்டுமே பெறும் நிலைக்கு தள்ளப்படும். உண்மையான கண்காணிப்பு அல்லது கட்டுப்பாட்டு அதிகாரம் அதற்குக் கிடையாது. இத்திட்டம் கருவூல செயலருக்கு துறை வங்கிகளில் இருந்து வாங்கும் சொத்துக்களை மறுபடியும் விற்பதற்கான தடையற்ற அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இதன் பொருள் ஒப்பந்தத்தின் இருபுறத்திலும் வங்கிகள் இலாபத்தை அடையும் என்பதாகும்-- ஒருபுறம் அவை மகத்தான கடன் தொல்லையில் இருந்து மீளும்; பின்னர் பத்திரங்களை வீடுகள் சந்தை மீண்டும் நிறுவப்பட்ட பின்னர் சிறப்பான விலைகளில் வாங்கவும் முடியும். கருவூல செயலரின் அதிகாரம், அடைமானத் தொடர்புடைய சொத்துக்களை வாங்குவதற்கானது, "எந்தக் குறிப்பிட்ட ஒரு நேரத்திலும்" $700 பில்லியனுக்கு மிகாது என்று பொருளுரை கூறுகிறது. வேறுவிதமாகக் கூறினால், இன்னும் பயனற்ற சொத்துக்களை முன்பு வாங்கியதை விற்றபின் பழையபடி வாங்க அவரால் இயலும் --இதையொட்டி $700 பில்லியன் வரம்பு என்று கூறப்படுவது கட்டுக்கதையாகிவிடும். "அதிகாரம் முடிக்கப்படுதல்" என்பதின் கீழ் இம்முன்மொழிவு ஒரு இரு ஆண்டுகள் வரம்பை அறிவிக்கிறது; ஆனால் சில விதிவிலக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன; இதையொட்டி நடைமுறையில் நிதி அமைச்சகம் இவ்வேலைத்திட்டத்தை காலவரையின்றி செயல்படுத்த முடியும். தேசிய கடன் மீது சட்டபூர்வமாக உள்ள வரம்பு $700 பில்லியன் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிவு கூறுகிறது; அதையொட்டி அது 11.315 டிரில்லியன் டாலர் என்று உயர்த்தப்படும். இதன்பின் "அடைமானத் தொடர்புடைய சொத்துக்கள்" என்பது மிகப் பரந்த முறையில் விவரிக்கப்படுகிறது; அதையொட்டி பத்திரங்களில் இருக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களில் இருந்து "கடன் பிறழ்தலில் மாற்றங்கள்" என்று அழைக்கப்படுவதில் மதிப்பிடப்பட்டுள்ள $62 டிரில்லியன் கட்டுப்பாட்டில் இல்லாத சந்தை வரை அனைத்தையும் உள்ளடக்கும். மிக அசாதாரணமான விதி எனப்படக்கூடிய கருத்து கீழ்க்கண்டவிதத்தில் உள்ளது: "இந்த சட்டத்தின் அதிகாரத்தின்கீழ் செயலர் எடுக்கக் கூடிய முடிவுகள் பரிசீலனைக்கு உட்பட்டவை அல்ல; நிறுவன அமைப்பின் விருப்புரிமைக்கு விடப்படுகிறது; எந்த நீதிமன்றம் அல்லது நிர்வாக அமைப்பின் பரிசீலனைக்கும் உட்பட்டது அல்ல." இந்த அப்பட்டமான அரசியலமைப்பிற்கு புறம்பான விதி ஒரு தேர்ந்தெடுக்கப்படாத கருவூல செயலர் தானே ஒரு சட்டம் போல் செயல்படும் முறையை, காங்கிரஸ், பிற நிர்வாக அமைப்புக்கள் அல்லது நீதிமன்றம் ஆகியவற்றின் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஏதும் இல்லாத வகையில் நிறுவுகிறது. இந்தவிதியை பற்றி இரு விஷயங்கள் கூறப்பட வேண்டும் --அதாவது நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரம் பற்றி; மேலும் இது உட்குறிப்பாக திட்டமிடப்படுவது ஒரு சட்டமீறல் என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறது. இல்லாவிடின், இதை நீதிமன்றத்தில் எவரும் சவால் விட முடியாது என்று ஏன் கூறவேண்டும்? ஒபாமா மற்றும் முழு ஜனநாயகக் கட்சியின் தலைமையும் நாட்டின் பெரும் செல்வந்தர்களுக்கு பணமழை கொடுக்கும் இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வரிசையில் நிற்கின்றனர்; புஷ் மற்றும் மக்கெயினுக்கு ஒரு மாற்றீட்டை தாங்கள் கொடுப்பதாகக் கூறும் கருத்து இதையொட்டி வெடித்துச் சிதறுகிறது. இரு கட்சிகளும் நிதிய உயரடுக்கிற்கு முற்றும் தாழ்ந்து நிற்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மிகச்சக்தி வாய்ந்த பகுதியினால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இத்த பிணை எடுப்பு திட்டம், இலாப அமைப்பு முறையைக் காப்பாற்ற பிரகடனம் செய்யப்பட்ட அனைத்து பொய்களையும் கற்பனையுரைகளையும் அம்பலப்படுத்துகிறது: முதலாளிகள் மேற்கொள்ளும் "ஆபத்தான நடவடிக்கைகளுக்கு" கட்டாயம் தக்க இழப்பீடு பெற்றாகவேண்டும், சமூகப் பிரச்சினைகள் அவற்றின் மீது "பணத்தை வீசினால்" தீர்க்கப்பட முடியாது என்ற மந்திரம், அல்லது குறைந்த பட்சம் வேலைகள், வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றிற்கு பணம் இல்லை; மேலும் "பெரிய அரசாங்கத்திற்கு" இடைவிடாமல் பிரார்த்தனை இவற்றின் காரணமாக, பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர் ஊதியம், ஊகவாணிகர்களுக்கு பரந்த இலாபங்கள், இன்னும் பரந்த அளவில் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மை ஆகியன நியாயப்படுத்தப்படுகின்றன. இது அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகள் முடிவுகள் பற்றிய வர்க்க தன்மையையும் நிரூபிக்கிறது; ஜனநாயகம் என்ற வடிவமைப்பிற்குள் உண்மையில் ஒரு சிறு குழுவின் தன்னல ஆட்சி, செல்வந்தர்களின் ஆட்சிதான் உள்ளது. நிதிய நெருக்கடியின் உண்மையான ஆதாரம் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் அல்லது பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகளான குடியரசுக் கட்சியினர் அல்லது ஜனநாயகக் கட்சியினர் என்று எவராலும் விவாதிக்கப்படுவது இல்லை. பல தசாப்தங்களாக தன்னுடைய அடிப்படை முரண்பாடுகளை கடப்பதற்கு இன்னும் கூடுதலான முறையில் ஒட்டுண்ணித்தனம் மற்றும் மோசடித்தன நிதிய திரித்தல் வழிவகைகளைக் கையாளும் முதலாளித்துவ முறைதான் கடன்களை குவித்துச் சேர்க்கிறது; அதே நேரத்தில் சமூகத்தின் உற்பத்தி உள்கட்டுமானத்தையும் தகர்க்கிறது. ஆளும் உயரடுக்கிற்கு தனிப்பட்ட செல்வத்தை ஏற்படுத்துவதற்கு உலகிற்கு வழிகாட்டும் தலைமையை அமெரிக்க முதலாளித்துவம் கொண்டுள்ளது; அதுவும் உற்பத்தி வகையில் இருந்து உண்மையான மதிப்பை தோற்றுவித்தல் என்ற வழிவகையில் இருந்து முற்றிலும் பிரிக்கப்பட்ட வகையில். தற்போதைய பொருளாதார முறிவு, உகல மக்களையே பேரழிவிற்கு உட்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளதுதான் இதன் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். மூலதனத்தின் அப்பட்டமான சர்வாதிகாரத்திற்கு மாற்றீடு மற்றும் உழைக்கும் மக்களின் வறிய நிலைக்கு மாற்றீடு என்பது சோசலிசம் ஆகும். அமெரிக்க மக்களுடைய ஆதாரங்கள் பொருளாதார பேரழிவை தவிர்ப்பதற்கு திரட்டப்பட வேண்டும் என்றால், பின் அமெரிக்க தொழிலாளிகள் நிதிய அமைப்புக்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு அவற்றை பெருநிறுவன இலாபம், தனியார் செல்வக் கொழிப்பு என்று இல்லாமல் பொது நலனுக்கு என பயன்படுத்த வேண்டும். பெரிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும்' அவை பொதுநலப் பயன்பாடுகளாக மாற்றப்பட்டு தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு செயல்பட வேண்டும். அவை கட்டுப்படுத்தும் பரந்த நிதிய ஆதாரங்கள் கெளரவமான கல்வி, வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்கள், நல்ல ஊதியம் இருக்கும் வேலைகள் ஆகியவை அனவருக்கும் வருமாறு பயன்படுத்தப்பட வேண்டும். இது முன்னாள் சொந்தக்காரர்களுக்கு எந்த இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படாமல் செயல்படுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தொழிலாளர் மக்கள் சிறு வணிகர்கள் ஆகியோருடைய சேமிப்புப் பணம், வைப்பு நிதியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பில்லியன் கணக்கில் ஊகவணிகர்கள் மற்றும் வங்கியாளர்களின் தனிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட சமூக சொத்துக்கள், திரும்பப் பெற வேண்டும், அவை பொதுமக்களுக்கு நலன் அளிக்கும் சமூகத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். நெருக்கடிக்கு எரியூட்டிய மோசடி மற்றும் ஊழல் பற்றி பொதுவில் அதைச் செய்வர்கள் பொறுப்பு ஏற்கச்செய்ய வேணடும்; இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை உட்பட, அதற்காக பதில் சொல்லியாக வேண்டும். பெரிய வங்கிகள், நிதிய நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், ஒதுக்கு நிதி அமைப்புக்கள் ஆகியவற்றின் கணக்குப் புத்தகங்கள் பொது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு சட்டவிரோத, சமூக அழிப்பு செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்கள் ஜெரோம் வைட் மற்றும் பில் வான் ஒகென், ஆகியோர் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை தோற்றுவிக்க வாதிடுகின்றனர் --தொழிலாள வர்க்கத்துடைய, தொழிலாள வர்க்கத்திற்காக தொழிலாள வர்க்கத்தினால் ஆன ஒரு அரசாங்கம்-- வீடுகள் கடன்கள் முன்கூட்டி மூடப்பெறல் தவிர்க்கப்பட்டு வீடுகள் மறுபடியும் கொடுத்தல், மில்லியன்கணக்கான பொதுப் பணிகளை உருவாக்கல், ஊதியக் குறைப்பு, வேலைநீக்கம் ஆகியவற்றின்மீது தடை கொண்டுவரல் மற்றும் பொதுப்பணிகளில் மகத்தான விரிவாக்கம் ஏற்படுத்தல் உள்பட, உழைக்கும் மக்களின் நலன்களின் பேரில் இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிதிய உயரடுக்கின் நலனுக்காக சமூகத்தை திவால் செய்வதை எதிர்க்கும் அனைவருக்கும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காக்க விரும்பும் அனைவருக்கும், பெருவணிகத்தின் இரு கட்சி முறைக்கு ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவை வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் நாங்கள் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறோம்: சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அதன் வேட்பாளர்கள் ஜெரோம் வைட் மற்றும் பில் வான் ஒகெனுக்கும் ஆதரவு தாருங்கள். சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள். |