WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Danger grows of NATO-Russian clash in Black Sea
கருங்கடலில் நேட்டோ-ரஷ்யா மோதுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது
By Julie Hyland and Chris Marsden
1 September 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
நேட்டோ மற்றும் ரஷ்ய கப்பல்கள் கருங்கடலில் கப்பற்படையை அமைப்பதில் தயாராகி
வருகின்றன. அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டணியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், பேரழிவு மிக்க
விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஆபத்தான மோதலை உருவாக்கியுள்ளன.
கடந்த வார இறுதியில், ரஷ்ய இராணுவ தளபதிகளின் துணை தலைவரான அனடோலி
நோகோவிட்சின், 10 நேட்டோ யுத்த கப்பல்கள் கருங்கடலில் இருப்பதாகவும், மேலும் பல எதிர்பார்க்கப்படுவதாகவும்
தெரிவித்தார்.
"கருங்கடலில் நேட்டோ யுத்த கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய கப்பல்களும்
அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
ஜோர்ஜியாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்க வந்ததாக கூறப்படும் இரு அமெரிக்க
யுத்த கப்பல்களும் இதில் அடங்கும். இவற்றுடன் மூன்றாவது கப்பல் ஒன்றும் சேர்ந்துள்ளது.
மேலும், "ருமேனிய மற்றும் பல்கேரிய பிரிவுகளுடன் துறைமுகங்களை பார்வையிட
முன்னரே திட்டமிட்டபடி தமது நான்கு கப்பல்கள் கருங்கடலுக்கு வந்துள்ளன" என்று நேட்டோ ஒப்பு குறிப்பிட்டது.
"நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த" பயிற்சியான
Active Endeavor (பயங்கரவாதம்
மற்றும் கடற்கொள்ளைக்கு எதிரான தந்திர உத்திகளில் பயிற்சி அளிப்பது என கூறப்படுவது) ஸ்பெயின், ஜேர்மனி,
போலந்து ஆகிய நாடுகளிலிருந்து ஒவ்வொரு கப்பலை கொண்டுள்ளது. இவை பின்னர் அமெரிக்க கடற்படை கப்பல்
ஒன்றினால் ஒரு மூன்று வார கால துறைமுக பயணங்கள் மற்றும் பயிற்சிகளுக்காக சேர்ந்து கொள்ளப்பட்டன.
கடற்படை வலிமைப்படுத்தபடுகிறது என்பதை மறுத்த ஒரு நேட்டோ செய்தி
தொடர்பாளர் மற்ற நேட்டோ நாடுகளும் கடலில் கப்பல்களை நிறுத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
"நிச்சயமாக, மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளும் இவற்றை செய்து கொண்டிருக்கின்றன." என்று லெப்டினன்ட்
கர்னல் வெப் ரைட் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் குறைந்தது ஆறு நேட்டோ கப்பல்கள் கருங்கடலில் இருப்பதை
உறுதிபடுத்துகின்றன. இதன் பொருள் தங்கள் கப்பல்களின் எண்ணிக்கையை விட ஜோர்ஜியாவின் மேலை கடலோரத்தில்
மேலை நாட்டு கூட்டணியின் யுத்த கப்பல்கள் அதிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று கூறும் ரஷ்யாவின் எச்சரிக்கைகள்
தவறு அல்ல என்பதையே காட்டுவதாகும்.
ஜோர்ஜியாவிற்கு மீண்டும் வலுவான ஆயுதங்களை அளிப்பதற்காக மனிதாபிமான
உதவியை அமெரிக்க பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. "பொதுவாக யுத்த கப்பல்கள் உதவிகளை
அளிப்பதில்லை. இது யுத்த கப்பல் தூதரக முறையாகும். இது சூழலை நன்கு ஸ்திரப்படுத்தாது." என்று ரஷ்ய
வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
அமெரிக்க தளத்தை கொண்ட ஆலோசனை அமைப்பான
Eurasia Groupல்
உள்ள Cliff Kupchan,
"இராணுவ தலைமையில் மனிதாபிமான உதவியை அளிப்பது ஒரு கெட்டிக்காரத்தனமான கொள்கையாகும்" என்று
கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறியதாவது: "இந்த நிர்வாகம் தொடர்ச்சியாக அமெரிக்க
செல்வாக்கை பாதுகாப்பதில் ஆக்கிரோஷ அணுகுமுறை கொண்டிருப்பதை காண்கையில், எந்த ஜோர்ஜிய
துறைமுகத்தை பயன்படுத்தலாம் என்று ரஷ்யர்கள் கூறுவது எத்தனை நாட்கள் நீடிக்க முடியும்?"
அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவு கப்பல் ஒன்று வியாழனன்று படுமி
துறைமுகத்திற்கு வந்தது. டிபிலிசியில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தொடக்கத்தில் இக்கப்பல் ரஷ்ய
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் போட்டி துறைமுகத்திற்கு ஜோர்ஜிய முறைகள்படி சென்றுகொண்டிருப்பதாக
தெரிவித்தது. தகவல்களின்படி இந்த அறிக்கை பின்னர் மாற்றப்பட்டு டல்லஸ் என்னும் அக்கப்பல் படுமியில்
அளிப்புக்களை இறக்கியது.
கடந்த ஞாயிறன்று அமெரிக்க அழிக்கும் கப்பலான
USS McFaul,
படுமி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றது. மூன்றாம் கப்பல்
USS Mount Whitney
அமெரிக்க ஆறாம் கடற்படையின் முக்கிய கப்பல், இன்று ஜோர்ஜியாவை வந்தடையும்.
ஆகஸ்ட் 28ம் தேதி நியூயோர்க் டைம்ஸ், அமெரிக்க "இராணுவ
போக்குவரத்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் மனிதாபிமான உதவி பொருட்களை அளிக்கும் நயமான
கொள்கையை தொடர்கிறது. ஜோர்ஜியாவின் வான்வழி மற்றும் கடலோர பகுதியை அவர்கள் முற்றிலும்
கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படையாக இது ரஷ்யர்களுக்கு உணர்த்துகிறது."
"இக்கொள்கை அமெரிக்க மற்றும் ரஷ்ய கடற்படை கப்பல்களை ஜோர்ஜியாவின்
மேலை கடலோர பகுதிக்கு அருகில் உத்திகள் செய்ய விட்டுள்ளது. அமெரிக்கர்கள் படுமி என்னும் தெற்கு
துறைமுகத்திற்கு அருகில் குவிப்பு காட்டியுள்ளனர், ரஷ்யர்கள் மத்திய துறைமுகமான
Potiக்கு அருகில் குவிந்துள்ளனர்.
இது கிரெம்ளினை அமெரிக்க நோக்கங்கள் பற்றி ஆழ்ந்த சந்தேகங்களையும் கொள்ள வைத்துள்ளது."
மற்றொரு ஆத்திரமூட்டும் தன்மையான நிகழ்ச்சியில் டல்லாஸ் கப்பல் ஜோர்ஜியாவை
விட்டு நீங்கி அன்றே உக்ரைன் துறைமுகமான செவஸ்டாபோலுக்கு செல்ல இருக்கிறது. இந்த துறைமுகம் உக்ரைனால்
ரஷ்யாவிற்கு நீண்டகால வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதன் கருங்கடல் செயற்பாடுகளுடன் இணைந்த தன்மையை
கொண்டது. அமெரிக்காவிற்கு ஆதரவை காட்டும் வகையில் உக்ரைனிய ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோ இந்த
வாடகை காலம் 2017க்கு பின்னர் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் செவ்டாபோலிலிருந்து அனைத்து ரஷ்ய
கடற்படை கப்பல்கள், விமானங்களின் நடவடிக்கைகள் பற்றி தகவல் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஓர் ஆணையை
வெளியிட்டுள்ளார்.
துருக்கியின் ஹுரியத் செய்தித்தாள் அமெரிக்க கப்பல்கள் அணுவாயுதங்கள் கொண்ட
ஏவுகணைகளை வைத்திருப்பதாகவும், அவை ரஷ்யா இலக்குகளை
St.Petersburg
வரை தொலைவில் இருப்பவற்றை தாக்க முடியும் என்றும்
Nogovitzynஐ மேற்கோளிட்டு கூறியுள்ளது. நேட்டோ
கப்பல்கள் 100 டொமஹாக் குரூஸ் ஏவுகணைகளைக்கும் மேல் சுமந்து செல்லுவதாகவும், அவற்றில் 50க்கும் மேல்
USS McFaulல்
மட்டும் உள்ளன என்றும் அவை எளிதில் தரையிலுள்ள இலக்குகளை தாக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 26ம் தேதி ரஷ்யாவின் முக்கிய க்ரூசர்
Moskva மீண்டும்
கருங்கடல் பகுதிக்கு ஆயுத சோதனைக்கு வந்துவிட்டதாக
Reuters தகவல்
குறிப்பிட்டது. ரஷ்ய கடற்படை தலைமை தளபதியின் உதவியாளர் ரஷ்ய செய்தி நிறுவனங்களிடம், இந்த க்ரூசிர்
உக்ரைன் துறைமுகமான செவஸ்டோபோலுக்கு அதன் தளத்திற்கு வந்த இரு நாட்களிலேயே மீண்டும் புறப்பட்டுவிட்டது
என்று தெரிவித்தார்.
ரஷ்ய யுத்த கப்பல்கள் பிரிவினைவாத பகுதியான அப்காஜியாவிற்கு வந்துள்ளதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய கடற்படை துணை தளபதி செர்ஜீ மென்யய்லோ, "அவை உறுதியையும்
சமாதானத்தையும் நிலைநிறுத்தும்" என்று கூறினார். "எங்கள் பணியில் அப்காஜியாவை சேர்ந்த நீர்நிலையை
காத்தலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்படுவதும் உண்டு" என்றும் அவர் கூறினார். பிரிவினை பகுதியின் தலைவர் தான்
ரஷ்யாவை சுகுமி என்னும் ஆழம் அதிகம் இருக்கும் பகுதியின் துறைமுகத்தில் ஒரு ரஷ்ய தளத்தை நிறுவ
அழைப்புவிடுக்க இருப்பதாக கூறினார்.
CNN க்கு வியாழனன்று அளித்த
பேட்டி ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதின், அசாதாரண நடவடிக்கையான தெற்கு ஒசீஷியா மீது
ஜோர்ஜிய தாக்குதலை அமெரிக்க தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
"அமெரிக்காவிலுள்ள யாரோ ஒருவர் குறிப்பாக இப்பூசலை தோற்றுவித்து
நிலைமையை இன்னும் அழுத்தம் உடையதாக செய்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு நடக்கும் போட்டியில் ஒரு
வேட்பாளருக்கு கூடுதாலன நலன்களை ஏற்படுத்த முற்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது" என்று புட்டின்
கூறினார். இது குடியரசு கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெயின் சாகேஷ்விலி அரசாங்கத்திற்கு செல்வாக்கு அளிக்கும்
வெளியுறவு கொள்கை ஆதரவாளரை கொண்டுள்ளார் என்பதை குறிப்பதாகும்.
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ரஷ்யாவிற்கு எதிராக போரிட்ட ஜோர்ஜியா
படைகளுடன் இணைந்து செயலாற்றினர் என்று நம்புவதற்கு காரணம் உள்ளதாகவும் புதின் தெரிவித்தார். இந்த
நிலைப்பாடு "மிக ஆபத்தானது" என்று அவர் விவரித்தார்.
புட்டினுடைய கூற்றுக்களை அதிக பிரசங்கித்தனமானவை என்று வெள்ளை மாளிகை உதறி
தள்ளியது. அதே நேரத்தில் மக்கெயினின் மனைவி சிண்டி ஜோர்ஜியாவிற்கு பயணித்திருந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி
டிக் சேனேயும் இவ்வாரம் அங்கு செல்வதாக உள்ளது. அவர் அங்கு அமெரிக்க இராணுவ உதவியை உறுதிமொழியாக
கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய பங்கிற்கு ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பரக் ஒபாமா
"ரஷ்ய ஆக்கிரமிப்பு" பற்றி சவால் விடும் அச்சுறுத்தல்களில் சேர்ந்து கொண்டு, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால்
தன்னுடைய நிர்வாகம் ஜோர்ஜியாவிற்கு பாதுகாப்பு அளிப்பதில் உறுதியாக இருக்கும் என்றார்.
"செனியின் நபர் யுத்தத்திற்கு சற்று முன்னர் ஜோர்ஜியாவில் ஏன் இருந்தார்" என்ற
தலைப்பில் ஒரு கட்டுரையை ஆகஸ்ட் 26ம் தேதி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டது. இக்கட்டுரை
செனியின் தேசிய பாதுகாப்பு விவகார பிரிவின் துணை உதவியாளர் ஜோசப் ஆர். உட் என்பவரின் பெயரை
குறிப்பிட்டுள்ளது. அது பின்வருமாறு கேள்வி எழுப்புகிறது: "துணை ஜனாதிபதி டிக் செனியின் உயர்மட்ட தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெய்ல் சாகேஷ்விலியின் துருப்புக்கள் தெற்கு ஒசேஷிய படைகளுடன்
அழிவுதரக்கூடிய யுத்தத்தில் ஈடுபடுமுன், பின்னர் ரஷ்ய படைகளுடன் கைகலப்பு செய்வதற்கு முன்னர்,
ஜோர்ஜியாவில் என்ன செய்து கொண்டிருந்தார்?"
ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் தெற்கு ஒசேஷியா மீது படையெடுத்த
ஜோர்ஜிய சிறப்பு படை பிரிவு ஒன்றினுள் இருந்ததாக நோகோவிட்சின் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க
பாஸ்போர்ட் ஒன்று மைக்கேல் லீ ஓயிட் என்று டெக்சாசை சேர்ந்தவர், 1967ல் பிறந்தவருடைய வண்ண
புகைப்பட நகலையும் காட்டினார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
"Zemonekoziயில்
ஒரு கட்டிடம் உள்ளது --இது டிஷிக்டனிவிலிக்கு தெற்கே உள்ள குடியிருப்பாகும். அதை ஜோர்ஜிய சிறப்பு பிரிவுகள்
கடுமையாக பாதுகாத்தன. கட்டிடத்திலிருந்து நபர்களை அனுப்பிய பின்னர், ரஷ்ய சமாதான காப்பாளர்கள்,
மற்ற ஆவணங்களுடன் அமெரிக்க பாஸ்போர்ட் ஒன்றை, மைக்கேல் லீ ஒயிட், டெக்சாசை சேர்ந்தவருடையதையும்
கைப்பற்றியது."
பெருகிய முறையில் சான்றுகளும் கருத்துக்களும் அமெரிக்க பங்கு எவ்வாறு
ஜோர்ஜியாவின் இராணுவத்தை கட்டமைத்தது, ரஷ்யாவுடன் மோதலை தூண்டிவிடும் நோக்கத்தை கொண்டிருந்தது
என்பது பற்றி அதிகமாக வந்துள்ளன. ஆகஸ்ட் 14ல் தேதி
New Statesmanல்
எழுதிய Misha Glenny
எப்படி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஜோர்ஜியாவிற்கு ஆயுதம் அளிக்க செயல்பட்டன என்றும், "அதையொட்டி
சாகேஷ்விலியும் அவரை சுற்றியுள்ள பருந்துகளும் நகைப்பிற்கிடமான விகிதத்திலிருந்து ஜோர்ஜிய படைகள் வடக்கில்
இருக்கும் அண்டை நாட்டின் வலிமையை எதிர்கொள்ள ஒரு மரபார்ந்த யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல முடியும் எனவும்
நம்பினர் என்று" எழுதியுள்ளது.
ஜோர்ஜியாவின் தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காஜியாவை மீண்டும் இணைப்பதற்காக
முயலும் மந்திரியான டெமுர் யாகோபாஷ்விலி இஸ்ரேலை அதன் இராணுவ உதவிக்காக புகழ்ந்துள்ளார். தெற்கு
ஒசேஷியாவின் மீது தாக்குதலை தொடர்ந்து கிளென்னி கூறினார்: "இஸ்ரேல் அதன் இராணுவம் பற்றி, ஜோர்ஜிய
படைகளுக்கு அளித்த பயிற்சி பற்றி, பெருமிதம் கொள்ளவேண்டும்." அதன் உதவியினால், "நாங்கள் நேற்று மட்டும்
60 ரஷ்ய படையினர்களை கொன்றோம். ரஷ்யர்கள் 50க்கும் மேற்பட்ட டாங்குகளை இழந்துள்ளனர்; நாங்கள்
அவர்கள் விமானங்கள் 11ஐ வீழ்த்தினோம். மனித சக்தியில் அவர்கள் மகத்தான இழப்பை பெற்றனர்."
அமெரிக்கா மற்றும் ஜோர்ஜியா இரண்டும் கூட்டு இராணுவ பயிற்சியை ஜூலை 15
முதல் 31 வரை நடத்தினர். அதன் சங்கேத பெயர்
Operation Immediate Response ஆகும். இதில்
1,000 அமெரிக்க துருப்புகள் தொடர்பு கொண்டிருந்தனர். ஒருவாரம் கழித்து ஆகஸ்ட் 7 அன்று ஜோர்ஜிய
படைகள் தெற்கு ஒசேஷியாவின் மீது தாக்குதல் நடத்தின.
உடனடியான வருங்காலத்தை பொறுத்தவரையில், டைம்ஸ் ஆப் லண்டன்
குறிப்பிட்டதாவது:
"அமெரிக்க இராணுவ திட்டமிடுபவர்கள் இப்பொழுது எப்படி ஜோர்ஜிய படைகளுக்கு மீண்டும் ஆயுதம் அளிக்கலாம்
என்பதை வெளிப்படையாக சிந்திக்கின்றனர்." அதுவொரு பெண்டகன் செய்தி தொடர்பளாரை மேற்கோளிட்டு,
"இனி ஜோர்ஜிய இராணுவத்தை மறுகட்டமைக்க என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்போம்.... இப்பொழுது
அமெரிக்க இராணுவத்தின் பணி மனிதாபிமான உதவி கொடுப்பதாகும்."
ஜோர்ஜியாவில் பிரிட்டனின் முன்னாள் தூதராக இருந்த
Donald McLaren
நேட்டோ இப்பகுதிக்கு படைகளை அனுப்ப கூடும் என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. மாஸ்கோ அத்தகைய
திட்டத்தை நிராகரித்தால் நேட்டோவிற்கு இரு விருப்புரிமைகள் தான் இருக்கும்: "இருப்பதை கைவிட்டு
ரஷ்யர்களிடம், "இது உங்கள் கொல்லை புறம், நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்." அல்லது ஜோர்ஜியாவின்
இறையாண்மை மற்றும் கிழக்கு-மேற்கு எண்ணெய், எரிவாயு குழாய் திட்டத்தை காஸ்பியன் மற்றும் மத்திய ஆசியாவில்
இருந்து பாதுகாப்பாக காப்பாற்றுவது என்பதே அது."
Daily Mail ல் இதற்கு
முன்னர் McLaren,
"ஜோர்ஜியா ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும். மத்திய ஆசியாவிற்கு அது நம் நுழைவாயில். ரஷ்யா மற்றும்
துருக்கி அண்டை நாடுகள், ஈராக் மற்றும் ஈரான் இரண்டும் தெற்கில் அதிக தூரத்தில் இல்லை. இந்நிலையில் அதன்
இடம் மட்டுமே முலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது."
"உலகின் மிக அதிக அழுத்தம் நிறைந்த பகுதிகளில் ஒன்றில் அது நம்முடைய நட்பு
நாடும் பங்காளியுமாகும். காஸ்பியின் பகுதியிலிருந்து கிழக்கிற்கும் மத்திய ஆசிய அளிப்புக்கள் அதற்கு அப்பாலிருந்து
வருவதற்கும் விசை போன்றவற்றிற்கு ஜோர்ஜியா முக்கிய போக்குவரத்து தடமாகும்.
"எரிசக்தி பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு வேறு சில உடனடி பிரச்சனைகளும் உள்ளன
மற்றும் ரஷ்யாவுடன் சார்ந்திருப்பதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக ஜோர்ஜியாவின் எண்ணெய் குழாய் திட்டம் உள்ளது"
ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தாக்குதல் இப்பகுதி முழுவதையும் உறுதியை
குலைத்து தவிர்க்க முடியாமல் ஐரோப்பிய சக்திகளையும் இதில் கொண்டு வந்துவிட்டது.
ஆசியா டைம்ஸ் குறிப்பிட்டதாவது: "அமெரிக்க ஆதரவு பெறுள்ள
பகு-டிபிலிசி-ஷேஹன் குழாய் திட்டம் ஜோர்ஜிய பகுதி மூலம் செல்கிறது. ஜோர்ஜிய நிகழ்வுகளை ரஷ்யா
கட்டுப்படுத்தும் என்பது எரிசக்தி பாதுகாப்பில் உறுதியான உட்குறிப்பை கொண்டுள்ளது. அதுவும் யூரேசிய
நிலப்பகுதியின் புவி அரசியலுக்கு இந்த கடுமையான குழாய் திட்டத்தின் முக்கியத்துவத்தை ஆராயும் போது, அதே
போல் ரஷ்யாவின் மீது மிக அதிகமான முறையில் ஐரோப்பா விசைக்கு கொண்டுள்ள நம்பகத்தன்மை மற்றும்
மாஸ்கோ ஐரோப்பாவுடன் பேரம் பாதுகாப்பு பேசி விசை துருப்பை பயன்படுத்த தயாராக இருக்கையில்."
"ஐரோப்பிய ஒன்றிய, ஜோர்ஜிய நெருக்கடிக்கு விடையிறுப்பு பற்றி பிளவுற்று ஏன்
உள்ளது என்பதை விளக்க இது ஒன்றே போதுமானது. இப்பொழுது பெருமளவில் அமெரிக்காவின் மிரட்டல் முறைக்கு
ஒப்புதல் கொடுத்துள்ளது. இப்பிரச்சினை இப்பொழுது பனிப்போருக்கு பிந்தைய காலத்தில் முக்கியமான கணமாக
போய்விட்டது. காரணம் இதன் பரந்த தாக்கங்கள்."
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜோர்ஜிய
உறுப்பு அந்தஸ்த்திற்கு தங்கள் முந்தைய எதிர்ப்பை விலக்கி கொண்டுவிட்டதாக அடையாளம் காட்டியுள்ளன. ஐரோப்பிய
ஒன்றிய மற்றும் உக்ரைன் தலைவர்கள் செப்டம்பர் 9 அன்று பிரான்ஸில் சந்தித்து இன்னும் நெருக்கமான உறவுகள்,
சங்கம் பற்றி கையெழுத்திட உள்ளனர். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறுமா என்பது பற்றி இது தெளிவுபடுத்தாவிட்டாலும்,
ஐரோப்பிய குழுவின் சமீபத்திய அறிக்கை வெளியுறவுகள் சிந்தனை குழுக்கள் ஐரோப்பிய ஒன்றியம் இனி உக்ரைனுடன்
உறவுகளை வரையறுத்து ஆழ்ந்து செயல்படுத்துவதில் தாமதம் கூடாது என கூறுவதை சுட்டி காட்டியுள்ளது.
ரஷ்யா மற்றும் ஜோர்ஜியாவிற்கு இடையே அழுத்தங்கள் என்பது தொடர்ந்து மோசமாகி
வருகின்றன. வெள்ளியன்று டிபிலிசி மாஸ்கோவுடன் தூதரக உறவுகளைத் துண்டிப்பதாக அறிவித்துள்ளது; தெற்கு ஒசேஷியாவில்
உள்ள அதிகாரிகள் ரஷ்யாவுடன் தாங்கள் முழு இணைப்பை நாட போவதாக கூறியுள்ளனர்.
ஜோர்ஜியா மற்றும் உக்ரைனை ரஷ்யாவிற்கு எதிராக மோதவிடுவதுடன், அமெரிக்கா
துருக்கியையும் மாஸ்கோவுடன் ஒரு கடுமையான பூசலில் ஆழ்த்தியுள்ளது.
கருங்கடலில் நேட்டோ வந்துள்ளது. 1936ம் ஆண்டு
Montgreux
மரபை மீறியது என்று ரஷ்யா வாதிடுகிறது. அதன்படி கடலோர நாடுகள் இல்லாதவை இக்கடற்பகுதியில் இராணுவ
கப்பல்களை முன்று வாரங்கள்தான் செலுத்தமுடியும் என்று உள்ளது.
ஒப்பந்தத்தின்படி, போஸ்போரஸ் மற்றும் டார்ட்டனெல்லெஸ் ஜலசந்திகளை
கட்டுப்படுத்தும் துருக்கியிடம் கடலில் எந்த இராணுவ கப்பலும் வருவதற்கு 15 நாட்கள் முன்னதாக தகவல்
கொடுக்கப்படவேண்டும். அவை 21 நாட்களுக்கு மேல் அப்பகுதியில் இருக்கக்கூடாது. ஆனால் துருக்கி அமெரிக்க
கப்பல்கள் செல்வது பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 20 அன்றுதான் வெளியிட்டது. அமெரிக்க கப்பல்கள் முறைப்படி
நீக்கவில்லை என்றால் துருக்கிதான் முறைப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. |