World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி 

The financial crisis and the comeback of Gerhard Schröder

நிதிய நெருக்கடியும் ஹெகார்ட் ஷ்ரோடர் திரும்பி வருதலும்

By Ulrich Rippert
19 September 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்த வார ஆரம்பத்தில் ஜேர்மனிய வாராந்திர இதழான Die Spiegel ஒரு முக்கிய கட்டுரையை "ஷ்ரோடர் மீண்டும் வருகிறார்" என்ற தலைப்பில் வெளியிட்டது. இக்கட்டுரை, ''மெதுவாக நடந்தேறிய சதி", அதாவது சமூக ஜனநாயகக் கட்சி எப்படி கடந்த வாரத்தில் தன்னுடைய தலைமையை "மறுசீரமைத்தது" என்று குறிப்பிட்டு மேலும் "திடீரென முன்னாள் அதிபர் ஷ்ரோடர் மீண்டும் இந்த விளையாட்டின் ஒரு பகுதியாகியுள்ளார்." என கூறியது.

அதே தினத்தில் Berliner Morgenpost பத்திரிகை "அதிகாரத்தை இயக்கும் ஷ்ரோடர் மீண்டும் வருகிறார்" என்று ஒரு கட்டுரையை எழுதியது; Die Welt பத்திரிகை, பிராங்க் வால்ட்டர் ஷ்ரோடர் என்று வியக்கத்தக்க முறையிலான மாற்றம் பற்றிக் குறிப்பிட்டது.

ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மயர் முன்னாள் அதிபரின் செல்லப்பிள்ளை, ஷ்ரோடருடைய சொந்த மாநில ஹனோவரிலுள்ள மந்திரிசபையின் தலைவராக, கூட்டாட்சி அதிபர் அலுவலகப் பொறுப்பை சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் (1998-2003)ல் எடுத்துக் கொள்வதற்கு முன்பே தலைமையில் இருந்து வருபவர் ஆவார். சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் மற்றும் ஸ்ரைன்மயர் அதிபர் பதவிக்கு வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது, சமூக ஜனநாயகக் கட்சித் தலைமைக்கு பிரான்ஸ் முன்டபெயரிங் உயர்த்தப்பட்டுள்ளது ஆகியவை ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் முக்கிய வணிக அமைப்புக்களுடன் கலந்து பேசிய பின் நடத்தப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனிய பொருளாதாரத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் கட்சித் தலைமையில் திடீரென நடந்துள்ள மாற்றம் மற்றும் ஸ்ரைன்மயர் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகியவற்றை "சமூக ஜனநாயக கட்சி கொண்டுள்ள பாதையின் மாற்றம் பற்றிய ஊக்கம் தரும் குறிப்பு" என வரவேற்றுள்ளது தற்செயல் நிகழ்வு அல்ல. ஜேர்மனிய முதலாளிகள் சங்கத்தின் (BDA) தலைவரான Dieter Hundt, மற்றும் ஜேர்மனிய தொழில், வணிகக் குழுவின் தலைவரான Geore Ludwig Braun ஆகியோர் "ஹெகார்ட் ஷ்ரோடரின் செயற்பட்டியல் அரசியல் தொடர்வதற்கான நல்ல வாய்ப்புக்களை இப்பொழுது காண்பதாக" கூறியுள்ளனர்.

அரசியல் அரங்கிற்கு ஷ்ரோடர் திரும்பிவருவது என்பது சர்வதேச நிதிய நெருக்கடி வியத்தகு முறையில் தீவிரமாகியிருப்பதுடன் தொடர்புபடுத்திக் காண வேண்டியது ஆகும். பல மாதங்களாக ஜேர்மனிய அரசியல்வாதிகளும் வணிகப் பிரதிநிதிகளும் அமெரிக்க அடைமான நெருக்கடி இன்னும் "முற்றுப் பெறவில்லை" என்றுதான் கூறிவருகின்றனர். மார்ச் மாதம் அமெரிக்க அரசாங்கம் பெயர் ஸ்ரேர்ன்ஸ் (Bear Stearns) இனை தப்ப வைக்க நடவடிக்கை எடுத்தபோதே பேர்லினில் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன. ஆனால் லெஹ்மன் பிரதர்ஸ் (Lehman Brothers) இறுதியில் கடந்த வாரம் சரிவடைந்தபின், மெரில் லிஞ்சும் (Merrill Lynch) அவசர அவசரமாக விற்கப்பட்டதும், பேர்லினில் இருக்கும் அரசியல், பொருளாதார வட்டங்கள் வியப்பில் ஆழ்ந்தன.

ஆறே மாதங்களில் உலகின் ஐந்து பெரிய முதலீட்டு நிறுவன வங்கிகள் சரிந்துள்ளன. செவ்வாயன்று முக்கிய கட்டுரையில் "பெரும் சரிவு" (The Crash) என்ற தலைப்பில், Suddeutsche Zeitung பத்திரிகை கிட்டத்தட்ட வோல் ஸ்ட்ரீட்டிற்கு இரங்கற் கவிதை ஒன்றையே எழுதிவிட்டது. "அமெரிக்காவில் பெருமித இடமாக வோல் ஸ்ட்ரீட் இருந்தது. முதலாளித்துவத்தின் இதயத்தானமாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தின் விதிகளை நிர்ணயிக்கும் இடமாக இருந்தது. நாம் அறிந்த வோல் ஸ்ட்ரீட் இப்பொழுது இல்லை."

ஏற்றுமதிப் பிரிவை பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், ஜேர்மனிய பொருளாதாரம் சர்வதேச வங்கி நெருக்கடியால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, 80 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி சரிவு மற்றும் பொருளாதாரச் சரிவினால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளை நாடு இன்னமும் மறந்துவிடவில்லை. அக்டோபர் 1929ல் வோல் ஸ்ட்ரீட் சரிந்ததை அடுத்து, ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க வங்கிகள் பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டதை அடுத்து, ஜேர்மனியில் வேலையின்மை ஒரே நாளில் 6 மில்லியன் என்று உயர்ந்தது. ஜேர்மனிய அரசாங்கம் இதற்கு விடையிறுக்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் நெருக்கடியின் சுமையை மாற்றினர். இருக்கும் ஜனநாயக கட்டமைப்புக்கள் அகற்றப்பட்டன, பாராளுமன்றம் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டது, அரசாங்கம் அவசரகால சட்டத்தில் ஆட்சியை நடத்தியது. அதே நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி புரூனிங் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து, பின்னர் நாஜிகள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள தயாரிப்பு செய்தது.

மீண்டும் ஆளும் உயரடுக்கு பில்லியன் டாலர்கள் கணக்கான இழப்புச் சுமையை தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது; மீண்டும் சமூக ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கைக் கொள்ளுவதற்கு வரிசையில் நிற்கிறது. அரசியல் அரங்கின் நடுவே ஷ்ரோடர் திரும்பி வருதல் என்பது, நேரடியாக அவருடைய செயற்பட்டியல் 2010 கொள்கைகள் தீவிரமாக்கப்படும், புதிய சுற்று சமூகத் தாக்குதல்கள் நடைபெறும் என்ற பொருளைக் கொடுக்கும். ஏற்கனவே இருக்கும் நோய்வாய்ப்பட்ட காலத்திற்கு ஊதியத்தை இரத்துச்செய்யவும், பணிநீக்கத்திற்கு எதிரான சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் வலுவிழக்கப்பண்ண வேண்டும் என்றும் உரத்த குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.

ஷ்ரோடர் மீண்டும் வருவது என்பது மற்றொரு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிபர் ஷ்ரோடர் புஷ் நிர்வாகம் பற்றி வெளிப்படையாக குறைகூறிய வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்திருந்த நிலையில், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு அவர் காட்டிய எதிர்ப்பு எந்தவகையிலும் போருக்கு எதிரான ஒரு கொள்கைரீதியான எதிர்ப்பு இல்ல. சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக்கட்சி அரசாங்கம் 1999ல் நேட்டோ நடத்திய சேர்பியாவிற்கு எதிரான போரில் ஆதரவு கொடுக்கத் தயாராக இருந்தது. ஈராக்கை பொறுத்தவரை, ஷ்ரோடர் அரசாங்கம் அமெரிக்க இராணுவத்துடன் பல மட்டங்களில் ஒத்துழைப்புக் கொடுத்தது.

ஆயினும்கூட, ஷ்ரோடர் ஜேர்மனிய துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்ப மறுத்து, ஜேர்மனிக்கு அதன் சொந்த பொருளாதார, பூகோள-மூலோபாய நலன்கள் அமெரிக்காவில் இருந்து வேறுபட்ட முறையில் உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தினார். ஈராக், ஈரானுடன் ரஷ்யா மீதும் அழுத்தம் கொடுக்க விழையும் வாஷிங்டனை போல் இல்லாமல் ஷ்ரோடர் மாஸ்கோவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு வடிவங்களைக்காண விரும்பினார்.

2005 தேர்தலில் குறுகிய தோல்வியை அடைந்த பின்னர், வட ஐரோப்பிய எரிவாயு குழாய்ப்பாதை (NEGP) என்ற அமைப்பின் கண்காணிப்பு நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற முறையில் அவர் பொறுப்பை எடுத்துக் கொண்ட முடிவு ஒரு அரசியல் முடிவு ஆகும். NEGP கூட்டு நிர்வாகம் ரஷ்ய விசை நிறுவனமான Gazprom 51 சதவிகிதம், ஜேர்மனிய நிறுவனங்கள் E.ON Ruhrgas AG, BASF ன் துணை நிறுவனம் Winterhall AG ஆகியவை தலா 20 சதவிகித பொறுப்பும் கொண்ட அமைப்பு ஆகும். NEGP உரிமையின் எஞ்சிய 9 சதவிகிதம் டச்சு நிறுவனமான Gasunie இன் கட்டுப்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே எரிபொருள் உறவுகளை பலப்படுத்துவதற்கு St.Peterburg நகருக்கு மேற்கே உள்ள Wyborg இல் இருந்து ஜேர்மனிய பால்டிக் கடல் கடலோரப் பகுதிக்கு 1,200 கி.மீ. நீள குழாய்த்திட்டத்தை கொண்டுவருவது ஆகும். இத்திட்டத்தில் இரு குழாய்கள், இணைந்து ஆண்டு ஒன்றுக்கு 55 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு கொண்டுவரப்படும்.

மாஸ்கோவில் கூடுதலான எரிபொருளுக்காக தங்கியிருப்பதால் ஏற்படக்கூடிய பொருளாதார, அரசியல் விளைவுகளை பற்றிய எச்சரிக்கை பிரச்சாரம் அமைதியாகாவிட்டாலும், அமெரிக்க நிதிய முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால், இன்னும் கூடுதலான வகையில் தன்னிறைவு மற்றும் வாஷிங்டனில் இருந்து கூடுதலான சுதந்திரம் வேண்டும் என்று வாதிடுபவர்களுடைய கரங்களை ஜேர்மன் வெளியுறவுத்துறையில் வலுப்படுத்தியுள்ளது.

ஜேர்மனிய பெருவணிகத்தின் பிரதிநிதிகள் சமீபத்திய ஜோர்ஜிய நெருக்கடியைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்கு மிகவும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜோர்ஜியா பற்றிய சிறப்பு உச்சிமாநாட்டை தொடர்ந்து ஜேர்மனியத் தொழில்துறை கூட்டமைப்புச் சங்கத்தின் தலைவரான Jürgen Thumann செய்தி தொலைக்காட்சி நிலையமான N-TV யிடம் ஜேர்மனியும் ரஷ்யாவும் நல்ல உறவுகளைக் கொள்ள வேண்டும் என்று கூறினார். "உலக வர்த்தக அமைப்பில் சேர்க்கை அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பங்காளித்தனம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான பேச்சுக்களை நிறுத்தல் அல்லது தடைசெய்தலுடன், ரஷ்யாவை அழுத்தத்திற்குள்ளாக்க கருதிப்பார்த்தல் என்பது தவறான திசைக்கு இட்டுச் செல்லும்." ஜேர்மனிய பொருளாதாரத்தின் கிழக்கு குழுவின் சார்பாளர் ஒருவர் இதே திட்டம் பற்றிக் கூறியது: "இத்துடன் விரிவாக்கத்தின் உச்சக் கட்டம் அடையப்பட்டு விட்டது என்று நம்புகிறோம்."

ஜேர்மனி கிழக்குப் புற சார்பு உடையது என்பது விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும், அமெரிக்க செல்வாக்கு குறைவடையும் நேரத்தில் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

பெருகிய முறையில் இடது கட்சியிடம் நடைமுறை அரசியல் வட்டங்கள் கொண்டுள்ள பெருகிய சார்பையும் இது பிரதிபலிக்கிறது. சமூக ஜனநாயக கட்சியுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட வாராந்திர பத்திரிகையான Die Zeit கடைசிப் பதிப்பில், சமூக ஜனநாயகக் கட்சியில் தலைமை மாற்றம் என்பது "விரைவில் இடது கட்சியை பற்றிய ஒதுக்கி வைக்கும் சடங்குகள், தேசிய மட்டத்தில் கடந்த காலத்தை சேர்ந்தவை என்று ஆகிவிடலாம்... ஏற்கனவே மாநில அரசாங்கங்களில் (உதாரணம் பேர்லின்) நம்பிக்கைக்கு உட்பட்ட பங்காளியாக இருக்கும் கட்சி கூட்டாட்சி அளவில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை விளக்குவது கடினமாக உள்ளது'' என குறிப்பிட்டது.

இடது கட்சியின் தலைவரான ஒஸ்கார் லாபொன்டைன் (Oskar Lafontaine), தேசிய மட்டத்தில் தன்னுடைய அரசியல் வாழ்வுப் போக்கை மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஜேர்மனியில் நேட்டோ ஏவுகணை முறைகள் நிறுத்தப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு தலைமை தாங்கிய விதத்தில் தொடங்கினார். 1970 களில் இறுதியில் வார்சோ ஒப்பந்த நாடுகளுடன் நடுத்தர ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்திக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு நேட்டோ உடன்பட்டது; அதே நேரத்தில் ஒரு புதிய தலைமுறை அமெரிக்க Pershing II எனப்பட்ட க்ரூஸ் ஏவுகணைகளை மேற்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்த முற்பட்டது.

அதே நேரத்தில், இடது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் ஜனநாயக சோசலிச கட்சியை (Party of Democratic Socialism-PDS) சேர்ந்தவர்கள் ஆவர். அதன வேர்கள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிச கட்சியில், அதாவது முன்னாள் "இரும்புத் திரையின்" மறுபுறத்தில் இருந்தது.

சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணிக்காக, லாபொன்டைன் மற்றும் இடது கட்சி விரைவில் தங்கள் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையை மறுநோக்குநிலைப்படுத்துவதில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் முக்கிய பிரிவின் நலன்களுக்காக விரைவில் ஒரு முக்கிய பங்கை ஆற்றக்கூடும்.