WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: New study shows "upturn" only benefits the
wealthy
ஜேர்மனி: "ஏற்றம்" என்பது செல்வந்தர்களுக்குத்தான் நலனைக் கொடுக்கிறது என்று புதிய
ஆய்வு எடுத்துக்காட்டுகின்றது
By Dietmar Henning
16 September 2008
Use this version to
print | Send this link by email |
Email the
author
இந்த ஆண்டு மே மாத இறுதியில் வேலைவாய்ப்பு மந்திரியான ஓலாவ் ஷொல்ஷ் (Olaf
Scholz-சமூக ஜனநாயகக் கட்சி-SPD),
கூட்டாட்சி அரசாங்கத்தின் வறுமை மற்றும் செல்வம் பற்றிய அறிக்கையை
2006 வரையிலான தகவல் தொகுப்புக்களின் அடிப்படையில் அளித்தார். இந்தத் தகவல் வறுமையின்
வளர்ச்சியைத்தான் தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஷொல்ஷ் பொருளாதார ஏற்றம், 2006ல்
தொடங்கியது மக்களின் அனைத்தும் பிரிவினருக்கும் நலன்களை கொடுத்துக் கொண்டு வருகிறது என்று எனக் கூறியுள்ளார்.
ஆனால் Hans-Bockler Foundation
என்னும் அமைப்பு அளித்துள்ள புதிய ஆய்வின்படி, மார்ச் 2008 வரையிலான தகவல் தொகுப்புக்களை தளமாகக்
கொண்ட வகையில், முற்றிலும் எதிரான நிலைப்பாடுதான் உண்மை எனக்கூறுகிறது. இந்த ஆய்வு ஏற்றத்தின் பலன்கள்
செல்வந்தர்களின் பணப்பெட்டியை நிரப்பத்தான் பிரத்தியேகமாக உதவியுள்ளது என்றும் அதே நேரத்தில் உண்மை
ஊதியங்கள் சரிந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளது.
இதற்கு பல காரணங்கள் பொறுப்பு என்று ஆய்வு கண்டுபிடித்துள்ளது: தொழில்துறையில்
இருந்து பணித் துறைக்கு வேலைகள் மாறியது, வேலைகள் குறைவூதிய நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, கட்டுப்பாடுகளை
தகர்த்துள்ளது, அதாவது முந்தைய பெரும் அரச நிறுவனங்கள் (Deutsche
Telekom, அஞ்சல் துறை, எரிசக்தி அமைப்புக்கள், ரயில்வேக்கள்
போன்றவை) தனியார்மயமாக்கியிருப்பது, மற்றும் முந்தைய சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி கூட்டாட்சி
மற்றும் தற்போதைய கூட்டணி அரசாங்கமான கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி நிறைவேற்றிய
சட்டங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இந்த அரசாங்கங்களை பற்றிய பெரும் கண்டனம் இந்த ஆய்வு என்பது மட்டும்
இல்லாமல், அறிக்கையை ஏற்பாடு செய்திருந்த தொழிற்சங்கங்களுக்கும் ஒரு கண்டனம் ஆகும்.
Dr.Camille Logeay, Dr.Rudolf Zwiener
என்ற Institute for Macro-economics
and Market Research (IMK),
Hans-Bockler Foundation
இன் ஒரு பிரிவின் இரு ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் தொழிற்சங்கங்கள் கணிசமான முறையில் இத்தகைய நிலைக்குப்
பொறுப்பு என்று எடுத்துக்காட்டியுள்ளனர்.
உதாரணமாக, புதிதாக வேலைகள் தோற்றுவிக்கப்படும் என்ற கருத்திற்காக,
"உற்பத்தியை அதிகரிப்பதற்காக அல்லது பணவீக்கத்திற்கேற்ப ஊதியம் அதிகப்படுத்தப்படுவதை தள்ளுபடி செய்தல்
என்பது சிறப்பான அல்லது உகந்த செயல் அல்ல" என்று விளக்கியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக
தொழிற்சங்கங்கள்தான் இடைவிடாமல் ஓரளவு நிதானமான ஊதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்களை
ஒப்புக் கொள்ளுவதின்மூலம் வேலைகள் பாதுகாக்கப்படும் என்ற கற்பனைக் கதையை பரப்பி வருகின்றனர்.
கட்டாயப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் விட்டுக்கொடுக்கும் தன்மையை ஆசிரியர்கள்
குறைகூறியுள்ளதோடு, "மிகக் குறைந்த தொழிற்சங்கம் நிர்ணயிக்கும் ஊதிய விகிதங்கள், பணி நேரம் வாரத்தில்
அதிகப்படுத்தப்பட்டுள்ளது, மேலதிக ஊதியமற்ற விரிவாக்கப்பட்டுள்ள ஆண்டு வேலைநேர கணக்கு ஒப்பந்தங்கள்
மற்றும் விட்டுக்கொடுப்புக்கள் அதிகமான விதிகள்" தொழில்வழங்குனர்களுக்குத்தான் நலன்களை கொடுத்துள்ளன
என்றும் தெரிவித்துள்ளனர். Deutsche Telekom,
அஞ்சல் துறை அல்லது பொது அல்லது தனியார் தொழில்துறை எதுவாயினும் அனைத்து ஒப்பந்தங்களிலும்
தொழிற்சங்கங்களின் கையெழுத்து உள்ளது என்பதும் இத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஊதியங்களைக் குறைக்கும் வகையில் குறைவூதியத் தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் சந்தை மறு கட்டமைப்பு என்று சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்
கட்சி கூட்டணி அதன் ஹார்ட்ஸ் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி எனக் கொண்டுவந்தது "ஓரளவிற்கு வெற்றி", அதாவது
அதை அறிமுகப்படுத்திய நோக்கம் "கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக வழமையற்ற வேலைகள் வளர்ச்சியுற்றுள்ளன"
என்ற முறையில். "வழமையற்ற வேலைகள்"
என்று கூறும்போது இரு ஆய்வாளர்களும் கணக்கிலடங்கா குறைவூதியத் தொழிலாளர்களை குறிப்பிடுகின்றனர்: அதாவது
''மிகச் சிறிய'', ''நடுத்தர'' வேலைகள் (மிக அதிக மாத வருமானம் யூரோக்கள் 400 முதல் 800
வரை);
''தனிநபர் நிறுவனங்கள் (Ich-AGs)
ஒரு யூரோ வேலைகள் (ஒரு நபரின் உரிய நலன்களுக்கு என்று
இல்லாமல் ஒரே ஒரு யூரோவிற்காக உழைத்தல்) மற்றும் தற்காலிக தொழில் ஒப்பந்தங்கள் ஆகியவை இதில்
அடங்கும்.
மிக மோசமான ஊதியத்தைப் பெறும் தற்காலிக ஒப்பந்த தொழிலளார்களின் பங்கு
மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில், 1994 முதல் 2006 வரையிலான காலத்தில் நான்கு மடங்கு
அதிகமாகியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி, 2007 நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 730,000 மக்கள்
தற்காலிக தொழிலாளர் ஒப்பந்தவிதிகள்கீழ் வேலைகளில் இருந்தனர்.
இதே போல் குறைந்த வேலை ஒப்பந்தங்கள் கொண்டிருப்பவர்களுடைய விகிதமும்
2002ல் இருந்து 12 சதவிகிதத்தில் இருந்து 14.6 சதவிகிதம் என்று கூடியுள்ளது. இவர்களை பொறுத்தவரையில்
வருங்காலத்தை பற்றி இடைக்கால அல்லது நீண்ட கால திட்டம் ஏதும் கொள்ள முடியாது; அவர்களுடைய ஆபத்தான
நிலைமையின் பொருள் வேலையின்மை அச்சம் என்ற அழுத்தத்திற்கு அவர்கள் எளிதில் பணிய வேண்டும்; இது
ஊதியங்களையும் பணி நிலைமைகளையும் நன்கு பாதிக்கிறது.
பகுதி நேரத் தொழிலாளர்களின் விகிதமும் தொடர்ந்து பெருகி வருகிறது; 1999ல்
13.4 சதவிகிதத்தில் இருந்து 2007ல் 17.7 என்று ஆகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் சிறிய, நடுத்தர அல்லது
ஒரு யூரோ வேலைகள் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள், சிறு வேலைகள்
எனக் கூறப்படுபவற்றில் ஈடுபட்டுள்ளனர், மற்ற குறைவூதிய வேலைகளிலும் பல மில்லியன்கணக்கான தொழிலாளர்கள்
உள்ளனர்.
நிறுவனங்கள் தமது பங்கிற்கு குறைந்த சமூகப் பாதுகாப்பு நிதியை இந்த குறைவூதிய
வேலைகளில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் போதும் என்ற நிலையில், "இந்த குறைக்கப்பட்ட நிதிகள்
முதலாளிகளுக்கு மொத்த குறைவூதியங்கள் என்ற வடிவத்தில் நலன்களைக் கொடுக்கின்றன என்று கருத்திற்
கொள்ளமுடியும்."
மிகக் குறைந்த வருமானம் உடையவர்கள் அதிக அரசாங்க ஆதரவைக் கோரும்
கட்டாயத்திற்கு உட்படுகின்றனர் என்ற உண்மை ("துணை அளிப்புக்கள்" என்று அழைக்கப்படுபவை),
அறிமுகப்படுத்தபப்பட்டபோது பெரிதும் பாராட்டப்பட்டது, "தொழில்வழங்குனர்களுக்கு வரி கொடுப்பவர்கள்
இழப்பில் ஊதியங்களை குறைப்பதற்கு கிட்டத்தட்ட வரம்பில்லாத வாய்ப்புக்களை அளிக்கிறது". ஜனவரி 2008ல்,
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் தொழிலாளர்கள் துணை அளிப்புக்களை பெற்றனர்.
ஊதியங்களைப் பெரிதும் குறைத்தல்
ஹார்ட்ஸ் சீர்திருத்தங்கள் ஊதியங்கள் மீது கொண்டுவந்த அழுத்தம் ஜேர்மனியில்
வேலைச் சந்தையில் ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. "ஊதியங்களின் கீழ்நோக்கு சரிவிற்கான அழுத்தமும்
ஊதிய வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணமாயிற்று"; இதற்கு கடந்த சில ஆண்டுகளில் "போதுமான நிரூபணம்"
உள்ளது.
சமீபத்தில்தான்
Duisburg-Essen பல்கலைக்கழகத்தில் இருக்கும்
Institute of Work and Qualifications (IAQ)
நடத்திய ஆய்வு ஒன்று கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிகமான அளவில் குறைவூதியங்கள் பெறுபவர்கள் தங்கள்
உண்மையான ஊதியங்களில் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் இழுந்துள்ளதாக காட்டுகிறது. 2000ம் ஆண்டில் இருந்து மிகக்
குறைந்த ஊதியங்கள் கூட இன்னும் சரிவுற்றுள்ளன. 2006ம் ஆண்டு குறைந்த ஊதியம் பெறுபவர்கள் மணி ஒன்றுக்கு,
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையைவிட 4.8 சதவிகிதம் குறைந்த ஊதியம் பெற்றனர். ஆனால் மிக
உயர்மட்ட ஊதியம் பெறுபவர்களுடைய வருமானங்கள் இதே காலத்தில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக போயிற்று
என்று IAQ
ஆய்வு கூறுகிறது.
IMK ஆய்வாளர்கள் சமீபத்திய
புள்ளி விவரங்களையும் ஆய்ந்துள்ளனர். அவர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தின் கூற்றான பொருளாதார ஏற்றம்
"அனைவரைக்கும் நலன் தருகிறதா" அல்லது இந்த ஏற்றத்தினால் தங்களுக்குப் பயன் இல்லை என்ற
''வெளிப்பாடு'' யதார்த்தத்துடன் ஒத்திருக்கிறதா என்பதை அறிய விரும்பினர். எதிர்பார்த்தபடி அந்த உணர்வை
மக்கள் கொண்டிருக்கவில்லை.
2004ம் ஆண்டு இறுதியில் இருந்து 2008 தொடக்கம் வரையிலான ஏற்ற சுற்று
வட்டத்தைக் காண்கையில், நிகர உண்மை ஊதியங்கள் 3.5 சதவிகிதம் குறைந்தன. கூட்டாட்சி நிதித் துறை
கொடுத்துள்ள தகவல்படி, தனிநபர் இல்லத்தின் பொது நிகர வருமானம் கடந்த மூன்று ஆண்டுகளில் 2.6 சதவிகிதம்
குறைந்துவிட்டது; நான்கு பேர் இருக்கும் இல்லங்களில், ஒரே ஒருவர் சம்பாதிக்கும் வீடுகளில் இது 3.5 சதவிகிதம்
குறைந்துவிட்டது.
வேலைச் சந்தையை இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக்க முடியுமா,
தொழிற்சங்கங்கள் ஊதியத் தடையே ஏற்படுத்தியுள்ளமை சராசரிக்கும் மேலாக கூடுதலான வேலைகளை
தோற்றுவித்துள்ளதா என்பதை ஆராய IMK
விஞ்ஞானிகள் இருவரும் 1998 நடுப்பகுதியில் இருந்து 2001 தொடக்கம் வரையிலான ஏற்றத்தை தற்போதைய
ஏற்றமான 2004 இறுதியில் இருந்து 2008 ஆரம்ப காலத்துடன் ஒப்பிட்டனர். இது ஒப்புமைக்கு உரியதுதான்,
ஏனெனில் இரு பொருளாதார சுழற்சிகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 7.5 சதவிகிதம்
உயர்ந்தன. ஆனால் சமூகப் பாதுகாப்பு அளிப்புக்களுக்கு போதுமானதைக் கொடுக்கும் ஊதியம் உடைய வேலைகளை
ஒப்பிடும்போது, "சந்தைச் சீர்திருத்தங்களுக்கு பின் வேலைச் சந்தை சாதகமான விளைவுகளை கொடுக்கவில்லை."
என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுரை கூறியுள்ளனர் வேலைகள் பெருக்கம் மற்றும் ஒரு வேலையின்மையில் இருந்து
வேலை கிடைத்து செல்வது என்பது கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகதான் உள்ளது; அதாவது வேலைச் சந்தையினால்
சீர்திருத்தங்களால் அவை விளக்கப்பட முடியாதவை ஆகும்.
முந்தைய சுற்றில், தனியார் நுகர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தியை போலவே
வளர்ந்திருந்தது; அதவாது 7.5 சதவிகிம். தற்போதைய ஏற்றத்திலோ அது முழுக் காலத்திலும் தேக்கம்
அடைந்தது, மொத்த காலத்திலும் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, "மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT)
2007ல் மூன்று சதவிகிதம் கூட்டப்பட்டதுதான் இதற்கு
காரணமாகின்றது. ஆனால் அறிக்கையின் ஆசிரியர்கள் VAT
அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பழுது சமூக விவகாரங்கள் மந்திரியாக இருந்த பிரான்ஸ்
முன்டபெயரிங்கினால் (SPD)
முன்வைக்கப்பட்டது என்பதையும் அறிமுகப்படுத்தப்படு முன் அனைத்து தேர்தல்
உறுதிமொழிகளையும் மீறிய வகையில் இருந்தது என்பதையும் குறிப்பிட மறந்துள்ளனர்.
ஆனால் வேலைவாய்ப்பு நிலையில் 3.3 சதவிகிதம் 2004 இறுதியில் இருந்து 2008
ஆரம்ப காலம் வரை உயர்ந்திருந்தும் அனைத்து இல்லத்தார்களுக்கும் கிடைக்கக் கூடிய உண்மையான வருமானம்
அடையப்படவில்லை என்பதற்குக் கூடுதல் காரணங்கள் உள்ளன; முந்தைய காலத்திலோ அது 8 சதவிகிதம்
உயர்ந்திருந்தது. VAT
அதிகமானதை தவிர, தொழிற்சங்கங்கள் உடன்பட்டிருந்த குறைவூதிய ஒப்பந்தங்களும் தமது பங்கிற்கு இதற்கு ஒரு
காரணமாக இருந்திருக்கின்றது.
அரசாங்க நலன்களை பெறுபவர்களுக்கு சட்டத்தின் விளைவுகள் இன்னமும் தீவிரமாக
இருந்தன. உண்மையான சமூக மாற்றங்கள் தனியார் வீடுகளுக்கு வந்தது என்பது தற்போதைய ஏற்றத்தில் 6
சதவிகிதம் குறைந்துவிட்டது; ஆனால் முன்பு அவை 4 சதவிகிதம் உயர்ந்திருந்தது. இது ஓய்வூதியங்களை குறைவாக
வைத்திருந்ததாலும் குழந்தைகள் நலன்கள், மாணவர்களுக்கு நிதிய உதவி, பிற நலன்களைக் கொடுக்கத்
தவறியதாலும் ஏற்பட்டது.
தொழிலாளர்கள் எழுச்சியுறும் செலவினங்கள் மற்றும் சரியும் அல்லது தேக்க நிலையில்
இருக்கும் ஊதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன்களை எதிர்கொண்டிருக்கையில், "தொழில்வழங்குனர்கள், சுய
வேலை பார்ப்பவர்கள், பங்குதாரர்கள் இன்னும் மூலதனத்தின் பலவகை உரிமையாளர்கள் தங்கள் வருமானங்களில்
உறுதியான ஏற்றத்தைக் கண்டனர்" என்று ஆய்வு தொடர்ந்து கூறுகிறது. உண்மையான இலாபங்களும் முதலீடுகளில்
இருந்து கிடைக்கும் வருமானமும் 10 சதவிகிதம் உயர்ந்தன; இலாபங்கள் மற்றும் முதலீட்டு வருமானம் பங்கு
மூலதனத்தில் இருந்து 254 சதவிகிதம் கிடைக்கப்பட்டது. முந்தைய பொருளாதார வட்டத்தில் அவை 5 சதவிகிதம்
மட்டுமே உயர்ந்திருந்தன; அது தனியார் இல்லங்களின் வருமானங்களின் ஏற்றத்தை விடக் குறைவு ஆகும்.
இவ்விதத்தில் தேசிய வருமானத்தில் ஒரு பங்கு என்னும் முறையில் கூலிப்பணம், ஊதியம்
ஆகியவை சரிந்தன. ஊதிய விகிதம் என்று அழைக்கப்படுவது 1998-2001 வட்டத்தில் 71 சதவிகிதம் இருந்தது தற்போதைய
வட்டத்தில் 61 சதவிகிதமாகிவிட்டது.
தற்போதைய ஏற்றத்தில் "ஒரு ஏற்றம் மிகுந்த வணிகப் போக்கு என்ற புதிய
தன்மையை" ஆசிரியர்கள் காண்கின்றனர். இது முன்பு காணப்படவில்லை; "பொருளாதார செயற்பாடுகள் தெளிவாக
பெருகிக் கொண்டு வருகின்றன; ஆனால் பெரும்பாலான தனியார் வீடுகள் இதில் இருந்து சிறிதும் பயன் பெறவில்லை."
"இந்த உண்மைகள் மற்றும் அறிக்கையில் பகுப்பாய்வுகள் மற்ற ஆய்வுகளை போலவே,
தெளிவாகக் கூறுகின்றன. பெரும்பான்மையான மக்கள் ஏற்றத்தினால் பயன் பெறவில்லை என்று உணர்கிறார்கள்.
அதுதான் உண்மை ஆகும்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வணிக சுற்றுவட்டம் ஏற்றமான நிலையில் இருந்த
போதிலும்கூட, பல இல்லங்களில் இன்று உண்மையான வருமானங்கள் முன்னைவிட மோசமாகித்தான் உள்ளன. கடைசி
இரு கூட்டாட்சி அரசாங்கங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் பொருள் மக்கள் கூடுதலாக வயதான காலப்
பாதுகாப்பிற்கும் மற்ற வாழ்க்கையின் ஆபத்துக்களுக்கும் பணம் ஒதுக்க வேண்டியுள்ளது. "எனவே இந்த ஏற்றத்தின்
மூலம் எவர் பலன் அடைந்துள்ளனர்? பெரும்பாலான சாதாரண மக்களோ அல்லது நலன்களைப் பெறுபவர்களோ
அல்ல. நிறுவன இயக்குனர்கள், செல்வக் கொழிப்பு உடையவர்கள் பல சுய பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று
வாதிடக்கூடிய வகையில் கூறமுடியும்.
இதையொட்டி இது "தடையற்ற முதலாளித்துவத்தின்" விளைவு என்று செய்தி ஊடகம்
கூறுவதின் விளைவு என்பது ஏற்கப்பட வேண்டியதில்லை; ஹெகார்ட் ஷ்ரோடர் (1998-2005) தலைமையில் இருந்த
சமூக ஜனநாயகக் கட்சி-
பசுமைக் கட்சி கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் 2005ல் இருந்து அங்கேலா மேர்க்கெலின் தலைமையில் இருக்கும்
சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயகக் யூனியன்/கிறிஸ்தவ
சமூக யூனியன் (CDU/CSU)
கூட்டணி ஆட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் ஊதிய மற்றும் கூட்டு விட்டுக்கொடுப்பு கொள்கைகளின் முடிவு என்று
கூறலாம். |