World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Sarkozy visits Syria to seek new alliances

புதிய உடன்படிக்கைகளை பெற பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி சிரியாவிற்கு விஜயம்

By Pierre Mabut
15 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 3-4 தேதிகளில் பிரான்ஸ் ஊக்கம் கொடுத்து நடத்தும் இஸ்ரேலிய-சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு சிரிய தலைநகரான டமாஸ்கஸிற்கு பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இரு நாள் பயணத்தை மேற்கொண்டார். இப்பேச்சு வார்த்தைகளின் உடனடி நோக்கம் சிரியாவும் இஸ்ரேலும் நேரடியாக பேச்சு வார்த்தைகளை நடத்தி 1948ல் இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து போர் நிலைமை இரு நாடுகளுக்கும் இடையே இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திட வேண்டும் என்பதாகும்.

தற்போது ஆறுமாத காலத்திற்கு ஐரோப்பிய குழுவின் தலைவராகவும் இருக்கும் சார்க்கோசி, இன்னும் பரந்த அளவில், பஷிர் அல் அஸட்டின் சிரிய ஆட்சியை ஐரோப்பிய பொருளாதார செல்வாக்கு மண்டலத்திற்குள் இணைத்து, அதன் நட்பு நாடான ஈரானில் இருந்து அதனைத் தனிமைப்படுத்த நினைக்கிறார்.

தற்பொழுது அரபு லீக்கின் தலைவராக இருக்கும் அசாத் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துடன் உறவுகளை சீராக்கிக் கொள்ள முற்பட்டு, 1967ம் ஆண்டு ஆறு நாட்கள் போரில் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட கோலன் குன்றுகள் பகுதியை மீட்க முற்படுகிறார். கோலன் குன்றுகள் இல்லாவிடில் மேற்கு சிரியா இராணுவ அளவில் பாதுகாப்பற்றதாகும்; இதையொட்டி இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையேயான தீவிர சமாதானப் பேச்சு எதிலும் இது திரும்ப ஒப்படைக்கப்படுதல் என்பது முக்கிய முன்னிபந்தனை ஆகியுள்ளது.

அமெரிக்காவில் சிரியாவின் தூதராக இருக்கும் இமத் முஸ்தாபா மேற்கின் பாதுகாப்பில் சிரியா கொண்டுவரப்பட வேண்டும் என்ற விருப்பத்தை அடிக்கோடிடும் வகையில் கடந்தமாதம் வாஷிங்டனில் தெரிவித்த கருத்தாவது: "போர் நிலைமையை முடிக்கும் வகையில் ஒருவரை ஒருவர் அங்கீகாரம் செய்து சமாதானம் காண விரும்புகிறோம். நாம் சமாதானம் செய்து கொள்ளுவோம்."

எந்த உடன்பாட்டிற்கும் அசாத் எதிர்கொண்டிருக்கும் ஒரு தடை அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளதாகும்; அப்பட்டியலில் காசாவில் இருக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ், லெபனானில் உள்ள ஹெஜ்பொல்லா மற்றும் ஈரான் ஆகியவை உள்ளன. சிரியாவுடன் அமெரிக்க, இஸ்ரேலிய உறவுகள் கொண்டுள்ள வெடிப்புத்தன்மை செப்டம்பர் 5, 2007ல் சிரியாவில் டீர் அஜோர் பகுதியில் இருக்கும் நிலையங்களின் மீது வேண்டுமென்றே காரணமின்றி குண்டுத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதில் இருந்து அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இஸ்ரேலியர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி எக்கருத்தையும் கூற மறுத்துவிட்டனர்.

பிரெஞ்சு ஆதரவில், இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கையை பேச்சுவார்த்தைகள் மூலம் காண முடியும் என்றால், சார்க்கோசி ஒரு சிரிய-அமெரிக்க ஒப்பந்தத்திற்கும் உதவுவார் என்று சிரிய ஆட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தென் புறத்தில் பொருளாதாரச் செல்வாக்கை வளர்ப்பதற்கு பிரான்ஸ் முன்னிலைப்படுத்திவரும் ஒரு குழுவான 43 நாடுகளின் மத்தியதரைக் கடல் ஒன்றியத்திற்குள் வர சிரியாவிற்கு சார்க்கோசி அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில் "பயங்கரவாதத்துடன் போரிடுவதற்கு" மற்றும் குடியேறுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஆழ்ந்த ஒத்துழைப்பையும் நாடியுள்ளார். இது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் உறவுகளை முறித்துக் கொண்டு டமாஸ்கஸ்தான் பழைய லெபனிய பிரதமர் ரபிக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு என்று கூறியிருந்த பொழுதிலிருந்து கடைப்பிடித்து வரும் பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு திருப்பத்தைக் குறிக்கிறது.

பிரான்ஸ், துருக்கி மற்றும் கத்தார் ஆகியவை --இஸ்ரேலுடன் "சீரான உறவுகளைக் கொண்டவை"--"அமெரிக்காவின் அதிகார அந்தஸ்து மற்றும் இஸ்ரேலுடன் அது கொண்டுள்ள உறவுகளின் தன்மை ஆகியவற்றின் காரணமாக அதனை பங்கு பெற ஊக்குவிக்கும்" என்று அசாத் கூறினார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் அத்தகைய சமாதானத்திற்கான விலை என்பது லெபனானில் இருக்கும் ஹெஸ்போல்லாவிற்கு ஈரானிய நிதிய இராணுவ ஆதரவு கொடுக்கப்படுவதை நிறுத்த சிரியாவும் முயலவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை லெபனானில் திறமையுடன் எதிர்த்து நிற்கும் ஒரே அரசியல் சக்தி ஹெஸ்போல்லா என்பதால் இது இஸ்ரேலுக்கு அதன் வடக்கு எல்லையில் தடையற்ற செயல்பாட்டை கொடுக்கும், ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பில் கூடுதலான நலன்களையும் கொடுக்கும். ஆகஸ்ட் 3ம் தேதி Sunday Times எழுதியது: "அவர் [ஓல்மெர்ட்] ஹமாஸின் டமாஸ்கஸ் அலுவலகம் மற்றும் பிற இராணுவ அமைப்புக்கள் மூடப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன், ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது இஸ்ரேலோ அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் ஈரானுடன் கொண்டிருக்கும் பாதுகாப்பு உடன்படிக்கையை செயல்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் எதிர்பார்க்கிறார்."

ஒரு இஸ்ரேலிய இராணுவ பாதுகாப்பு வட்டாரம் தெரிவிப்பதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளதாவது: "இஸ்ரேலின் முக்கிய நோக்கம் சிரியாவிற்கும் ஈரானுக்கும் இடையே தடையை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்; இது சாதிக்கப்பட்டு விட்டால், கோலன் குன்றுகள் பகுதியை திரும்பக் கொடுப்பது என்பது தக்க விலை என்று கருதப்படும்."

கடந்த ஆண்டு மே மாதம் பதவியை எடுத்துக் கொண்டதில் இருந்து, சார்க்கோசி பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுடன் இணைத்த வகையில் "பயங்கரவாததிற்கு எதிரான போர்" என அழைக்கப்படுவதுடன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் சேர்த்துள்ளார். நேட்டோவின் கட்டுப்பாட்டு அமைப்பு முறையுடன் பிரான்ஸ் முழுமையாக இணைந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மத்திய கிழக்கில் அதன் ஆக்கிரமிப்பிற்கு உதவுகிறது. கடுமையான அமெரிக்க அழுத்தத்தின்பேரில் பிரெஞ்சு அரசாங்கம் கடந்த ஆண்டு பிரெஞ்சு நிறுவனங்களை ஈரானில் முதலீடு செய்வதை நிறுத்துமாறு முறையீடு செய்தது. ஐ.நா.வில் ஈராக் ஆக்கிரமிப்பு அமெரிக்காவால் தொடர்ந்து நடத்தப்படலாம் என்பதற்கும் பிரான்ஸ் வாக்களித்து, "சமாதானத்திற்கும்", "ஜனநாயகத்திற்காகவும்" என லெபனான் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தன் துருப்புக்களையும் அனுப்பி வைத்துள்ளது.

டமாஸ்கஸில் பேச்சுவார்த்தைகளின் போது கடைசி நாளன்று, சார்க்கோசி இத்தகைய ஏகாதிபத்திய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கும் வகையிலும், ஒரு "உத்தியோகபூர்வமற்ற" கருத்தைக் கூறி சிரியா ஈரானிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற வகையில் வலியுறுத்தினார். Liberation செப்டம்பர் 5ம் தேதி பதிப்பின்படி, மூடிய கதவுகளுக்குப் பின்னே நடந்த ஒரு விவாதத்தை, "ஒரு தொழில்நுட்ப தவறை அடுத்து, செய்தியாளர்கள் சிரியா, கத்தார், துருக்கி நாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் சார்க்கோசி குறுக்கிட்டுக் கூறியதைக் கேட்க முடிந்தது. 'ஒரு இராணுவ அணுசக்தி திறனை அடையவேண்டும் என்ற வழிவகையை ஈரான் தொடரும் வகையில் பெரும் ஆபத்தான போக்கைக் கொண்டுள்ளது; இது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். இஸ்ரேலிய அரசாங்கம் என்னவாக இருந்தாலும், ஒருநாள்காலை இதை ஒட்டி இஸ்ரேல் தாக்கப்படுவதைப் பார்ப்போம். அது அறிவுடையதா, நெறியானதா என்பது பிரச்சினை அல்ல. அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய முடியும்? அது மிகப் பெரிய அழிவாக இருக்கும்.' "

சார்க்கோசியின் பயணத்திற்கான தளம் அவர் வருவதற்கு ஒருவாரம் முன்பே பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெரால் தயயாரிக்கப்பட்டிருந்தது; அவர் சிரியர்களை இன்னும் மிரட்டும் வகையில் அதிக நிபந்தனைகளை முன்வைத்தார். பெய்ரூட்டில் குஷ்நெர் டமாஸ்கஸிற்கு வருமுன்னர், "பிரான்ஸ், சிரியாவின் சொற்களையும் விருப்பத்தையும் நம்ப விழைகிறது, ஆனால் மிகவும் எச்சரிக்கையாகவும், நிதானத்துடனும் இருக்க விரும்புகிறது" என்று கூறியதாக Le Monde மேற்கோளிட்டுள்ளது. அது மேலும் குறிப்பிட்டது: "இந்த வகையில் அவர் ஜனாதிபதி அசாத்தால் வழங்கப்பட்ட, ஜோர்ஷியா தொடர்பான மாஸ்கோவின் மனப்பாங்கிற்கும் லெபனான் தொடர்பான சிரியாவின் மனப்பாங்கிற்கும் இடையில் ஒரு ஒத்த இணைத்தன்மையை வரையும், அவரது சமீபத்திய பேச்சின் ஐயத்தைப் போக்குதலை அரிதானதாக தகுதிப்படுத்தினார்.

ஆனால் தன்னுடைய நலன்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ரஷ்ய தேசியவாதத்திற்குமான நலன்களை சமச்சீர் செய்வதில் அசாத் முனைந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவில் அவர் இராணுவ ஒப்பந்தங்களில், "தன்னுடைய பாதுகாப்பை வலியுறுத்த விரும்பும் எந்த ரஷ்ய திட்டத்துடனும் ஒத்துழைக்க நாங்கள் தயார்" என்று கூறி கையெழுத்திட்டார்.

ஆகஸ்ட் மாதம், தெற்கு ஓசேட்டியா மீது ஜோர்ஜியா நடத்திய தாக்குதல் அதற்கு ரஷ்ய விடையிறுப்பு இவற்றை ஒட்டிய முறையில் சிரியத் தலைவர் மாஸ்கோவிற்கு சென்று இராணுவ ஒப்பந்தங்களை அடைய முற்பட்டு தன் நாட்டுப் பகுதியில் ரஷ்ய ஏவுகணைகள் நிறுவப்படும் வாய்ப்பு பற்றி விவாதிக்கப்படும் என்று அறிவித்தார். அசாத் கூறியது: "ஒரு வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொண்டுவிட்ட நிலையில் என்ன செய்வது, எப்படி எதிர்கொள்ளுவது என்பது பற்றி ரஷ்யா சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." மேற்கத்தைய ஏகாதிபத்திய சுற்றிவளைப்பு முயற்சிக்கு எதிராக ரஷ்யாவுடன் சேர்ந்த வகையில் முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ அதிகாரத்தின் மனநிலையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அசாத் நடந்து கொண்டுள்ளார்: அதன் நலன்கள் இப்பொழுது மத்திய கிழக்கு சுற்றுப் பாதையில் அமெரிக்காவுடனும் மற்ற சக்திகளுடனும் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஈரானுடன் உறவை முறிக்க வேண்டும் என்ற அமெரிக்க மற்றும் நேட்டோவின் கோரிக்கைகளுடன் பொருந்தும் வகையில் சிரியாவைக் கொண்டுவருவதுபற்றி சார்க்கோசி வெளிப்படையாய் அக்கறை கொண்டிருந்தாலும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

சிரியாவில் பத்து ஆண்டுகளாக இருக்கும் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டல், மற்றும் CMA-CGM (உலகின் மூன்றாம் மிகப் பெரிய கப்பல் நிறுவனம்) இரண்டும் டமாஸ்கஸ் பயணத்தில் சார்க்கோசியுடன் இணைந்திருந்தன. டோட்டலின் தலைவரான Christophe de Margerie டீர் அஜ்ஜோர் பகுதியில் இருக்கும் எண்ணெய் இருப்புக்களை பயன்படுத்தும் உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டு 2021 வரை அங்கு எரிவாயுவை எடுத்துக் கொள்ளும் உரிமையையும் வாங்கிக் கொண்டார். சிரிய பெட்ரோலிய நிறுவனத்துடன் பங்காளியாக இருக்கும் முறையில் டோட்டல் 2007ம் ஆண்டு 29,000 பீப்பாய்கள் எண்ணெயை நிலத்தடியில் இருந்து எடுத்துக்கொண்டது. புதிய உடன்பாடுகள், "சிரிய நாட்டு (எரிவாயு, எண்ணெய்) நிறுவனங்களுடன் ஒரு மூலோபாயப் பங்காளித்துவத்தை" வலியுறுத்துகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி De Margerie தன் திருப்தியைத் தெரிவித்தார்; இவை "டோட்டலுக்கும் சிரியாவிற்கும் புதுப்பிக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பிற்கு வழிவகுத்துள்ளன; அதே போல் இக்குழு நாட்டில் இருக்கும் தேசிய எண்ணெய் நிறுவனங்களுடன் பங்கு பெறும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது."

இதுகாறும் கத்தாரின் எமிர், பிரான்சிற்கும் சிரியாவிற்கும் உறவுகள் சீரடைவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுன் அவர் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளார். பிரான்சிற்கு முதன்முதலாக அழைக்கப்பட்ட அரேபியத் தலைவர் எமிர் ஆவார். திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகிற்கு அதிக அளவிற்கு ஏற்றுமதி செய்யும் கத்தார் மின்விசை மற்றும் அணுசக்தி விசைக்கான ஒப்பந்தத்தை ஜனவரி மாதம் சார்க்கோசி வந்திருந்தபோது பிரான்ஸுடன் கையெழுத்திட்டார். சார்க்கோசி ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுடனும் அணுசக்தி விசை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.