ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Socialist Party and unions support government
cheap labour scheme
பிரான்ஸ்:
அரசாங்கத்தின் குறைவூதிய உழைப்பு திட்டத்திற்கு
(RSA)
சோசலிஸ்ட் கட்சியும் தொழிற்சங்கங்களும் ஆதரவு
By Antoine Lerougetel
9 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
பிரான்சில், கோடை விடுமுறைக்குப் பின்னர் பணிக்கு திரும்பும் நேரம் வந்துள்ள நிலையில்,
விலை உயர்விற்கு எதிரான பரந்த எதிர்ப்புக்கள் தொடர்ந்து தீவிரமடைதலை திசை திருப்ப ஜனாதிபதி
நிக்கோலோ சார்க்கோசி முயன்றுள்ளார். விடுமுறைகள் தொடங்கும் முன்பு மீனவர்கள், விவசாயிகள், லாரி டிரைவர்கள்
மற்றும் தொழிலாளர்களில் பல பிரிவினர் பெரும் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு பெற்றிருந்தனர்.
ஐரோப்பா முழுவதும் மற்றும் பிரான்சிலும் உயரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளினால்
இயக்கங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதால் "வாங்கும் திறனை அதிகரிக்கப் போகும் ஜனாதிபதி" என்று தன்னைத்தானே
கூறிக்கொண்ட சார்க்கோசிக்கு ஆதரவு கருத்துக்கணிப்புப் புள்ளிகள் 40க்கும் குறைவாகப் போயின. கருத்துக் கணிப்புக்கள்
பிரெஞ்சு மக்களில் பெரும்பாலானவர்கள் சரியும் வாழ்க்கைத் தரங்களை சார்க்கோசி தடுத்த நிறுத்த முடியாது,
மாட்டார் என்று கருதுவதாகத் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதக் கடைசயில் தான் ஒரு ஒன்றரை பில்லியன் யூரோ திட்டத்தை செயல்படுத்த
இருப்பதாக சார்க்கோசி அறிவித்தார்; RSA
(Revenu de solidarité active) என்னும் இத்திட்டம்
வறுமையில் இருந்த குறைவூதியத் தொழிலாளர்களை மீட்கும் அரசாங்க நிதிய முறை ஆகும்; ஊதியத்தை தவிர அவர்களுக்கு
இது கிடைக்கும்; இது வேலையில்லாதவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப ஊக்குவிக்கும். 2010 த்தில் செயல்படுத்தப்படுவதாக
இருந்த இத்திட்டம் 2009க்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதில் இருந்து அரசாங்கத்தின் கவலை மற்றும் அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
பற்றிய தன்மை நன்கு புலப்படுகிறது.
RSA வறுமையை ஒன்றும் துடைக்கப்
போவதில்லை. உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழ் பிரான்சில் 8 மில்லியன் மக்கள் உள்ளனர், அதாவது
சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்திற்கும் குறைவான வருமானத்தை உடையவர்கள் என்று விளக்கப்படுகிறது.
இதில் மக்களில் வேலையில் உள்ள 6 சதவீதத்தினரும் அடங்குவர். இந்த நடவடிக்கை வறுமை எண்ணிக்கையில் எந்த
பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த நடவடிக்கை மூலம் 3 முதல் 4 மில்லியன் மக்கள் சில நலன்களைப் பெறுவர்
என மதிப்பிடப்பட்டுள்ளது; இதில் மூன்றில் இரு பகுதியினர் குறைவூதிய வேலைகளில் உள்ளனர்.
சோர்போன் பல்கலைக் கழகத்தின் பொருளாதார மையத்தில் ஆய்வாளராக
இருக்கும் பொருளாதார வல்லுனர் Thibault
Gajdos, Le Monde ல் செப்டம்பர் 2 அன்று
எழுதியுள்ள கட்டுரையில், கடந்த ஆண்டு சார்க்கோசி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டத்தில் இருந்து கொண்டு வந்த
சமீபத்திய "மகத்தான பிற்போக்குத்தன" வரிச் சீர்திருத்தங்கள் மிகச் செல்வக் கொழிப்பு உடையவர்களை 6.7
பில்லியன் யூரோக்கள் என்ற அளவிற்கு கூடுதலான செல்வந்தர்களாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
Gajdos
குறிப்பிடுவது: "RSA
வேலை கிடைக்காமல் வாடுபவர்களுடைய நலன்களையோ வாழ்க்கைத் தரத்தையோ உயர்த்த போவதில்லை.
உண்மையில் சமூக பொதுநலத்தில் ஒப்புமையில் தரம் 90 களில் இருந்து சரிந்துகொண்டுதான் வருகிறது. 1990ல்
ஒரு தனிநபரின் RMI (ஜீவனோபாய
நிதியுதவி) சராசரி வருமானத்தில் 34.9 சதவிகிதம் என்று இருந்தது. 2007ல் அது 30.1 எனத்தான்
குறைந்துள்ளது. RSA
இந்தப் போக்கை நிறுத்தாது."
Gajdos மேலும் கூறுவது:
"1998ல் இருந்து 2005 வரையிலான காலத்தில் மிக உயர்மட்ட 1 சதவீத குடும்பங்களின் வருமானம் 20 சதவீதம்
உயர்ந்தது; சராரசி வருமானமோ இதே காலத்தில் 4.3 சதவீதம்தான் உயர்ந்துள்ளது." சராசரி வருமானத்திற்கும்
வறுமைக் கோட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு 2002ல் 16.3 சதவீதம் என்பதில் இருந்து 2005ல் 18.2
என ஆயிற்று. அவர் கூறுகிறார்; "RSA
நிதி அளிப்புக்களிடம் இதற்கு விடை இல்லை. அது உட்குறிப்பாய் இருவித ஏழைகள் என்றவிதத்தில் மோசமானதாகும்.
ஒரு புறத்தில் கடினமாக உழைப்பவர்கள், உதவி அளிக்கப்பட வேண்டியவர்கள், மற்றொரு புறத்தில் வேலை மறுக்கப்பட்டவர்கள்,
அவர்கள் விதி இப்படித்தான் எனக் கைவிடப்பட்டவர்கள்."
இத்திட்டம் RSA
நிதி உதவி பெறுவோர் இரண்டு "நியாயமான" வாய்ப்புக்களை மறுத்தபின் எந்த வேலையையும் ஏற்க வேண்டும்
என்றும் இல்லாவிடின் அவர்களுடைய நலன்கள் இரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் கூறுகிறது. இதன் பொருள்
தொழிலாளர்கள் குறுகிய கால ஒப்பந்தத்திற்கு பகுதி நேர வேலையை குறைந்த ஊதியவீதம், மட்டமான
பணிநிலைகள் இவற்றுடன் ஒப்புக்கொள்ளவேண்டும். முதலாளிகள் இவர்களை வளைந்து கொடுக்கும் தொழிலாளர்
தொகுப்பு போல் பயன்படுத்தி, தேவையானால் சந்தை நிலவரப்படி வேலை கொடுக்க அல்லது வேலையில் இருந்து
நீக்க முடியும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முக்கிய பெரிய சூப்பர்மார்க்கெட் தொடர்கள் மற்றும்
இன்னும் பிற இதேபோன்ற விற்பனை நிலையங்களில், சில்லறை விற்பனை கூடத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த
முக்கிய கோரிக்கைகளில் ஒன்று வாரம் முழுவதும் வேலைபார்ப்பதற்கு எதிர்ப்பு வேண்டும் என்று இருந்தது.
தொழிலாளர்கள் கடினமான நேரங்கள் மற்றும் பிளவுற்ற ஷிப்ட் முறையில் தாங்கள் இருத்தப்படுவர், அதுவும் நேரம்
கடந்த மணிகளில் வேலைபார்க்க இருத்தப்படுவர் என்று கோபம் அடைந்தனர். இத்தொகுப்பில்
பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்ததால் அத்தகைய பணிநிலைகள் குடும்ப வாழ்வுடன் ஒத்துப்போகவில்லை
என்று கண்டனர்.
Nouvel Observateur
இல் ஆகஸ்ட் 1 கொடுக்கப்பட்ட ஆய்வுத் தகவல் ஒன்று
RSA பெறும் முன்னோடிப் பகுதிகளில் இருக்கும் 12,400
குடும்பங்களில் 18 சதவீதம்தான் நிரந்தர ஒப்பந்தங்களில் ஈடுபட்டன, 26 சதவீதம் குறுகிய காலம், தற்காலிக
ஒப்பந்தம் மற்றும் 30 சதவீதம் அரசாங்க உதவிபெறும் வேலைகளில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. அவ்விதழ் குறிப்பிடுகிறது:
"Pierre Concialdi, Denis Clerc
போன்ற பொருளாதார வல்லுநர்களை பொறுத்தவரை
RSA வேலை கொடுப்பவர்கள் குறுகிய கால குறைவூதிய பகுதி நேர
வேலைகளை அதிகரிப்பர் என்ற ஆபத்து உடையது என்ற கருத்து உள்ளது; மற்றும்
RSA தொழிலாளர்கள்
அரசிடமிருந்து உதவி பெறுகின்றனர் என்ற உண்மையிலிருந்து ஆதாயம் பெறுவர்."
சமூக அறிவியல்வாதி
Noelle Burgi,
AFP செய்தி
அமைப்பிடம், "RSA
மட்டமான வேலை நிலைமை உடைய பணிகளை பெருக்கி, இரண்டாந்தர வேலைச் சந்தையை பாதுகாப்பற்ற வேலை
என்ற முறையிலும் அதிகரிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது" எனக் கூறினார்.
அரசாங்கத்தின் முடிவான
RSA ஐக் கொண்டுவருவது மிகச் சிறந்த நடவடிக்கை என்று சில
வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2005ல் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் ஏழைகளின்
வறுமைத்துயர் துடைப்பு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்த காலத்தில்
Martin Hirsch
ஆல் அபிவிருத்தி செய்யப்பட்ட முன்மொழிவை எடுத்துக் கொண்டு, சார்க்கோசி சோசலிஸ்ட் கட்சியை
குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நம்பிக்கையுடன் தொழிலாளர்களின் வாங்கும் திறனைக் காப்பவர் என்ற நம்பகத்
தன்மையை மீட்க முற்பட்டார். அதே நேரத்தில் ஈட்டப்படாத வருமானத்தில் 1.1 சதவீத வரி உயர்வைக்
கொண்டுவந்து, அதன் மூலம் இத்திட்டத்திற்கு நிதியூட்டுவது என்ற அவரது முடிவு, ஆளும்
UMP
உறுப்பினர்கள், MEDEF
(முதலாளிகள் கூட்டமைப்பு) உட்பட பலராலும் வரிகளைக் குறைத்தல் என்ற சார்க்கோசியின் உறுதிமொழி
மறுக்கப்படலை குறிப்பதாக நினைக்கப்பட்டது.
ஆனால் இந்த வரி பெரும்பாலும் நிதானமாக சேமிப்பவர்கள்மீது தொடுத்துள்ளது,
பெரும் செல்வந்தர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதுதான் உண்மை; ஏனெனில் பிந்தையவர்கள் "ஒரு நிதியக்
கேடயத்தின் மூலம்" தங்கள் செல்வத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக வரிவிதிப்பிலிருந்து பாதுகாப்பில் உள்ளனர்;
இதையொட்டி பொது மக்களிடையே கடுமையான எதிர்விளைவை உண்டுபண்ணியுள்ளது.
அரசியல் நடைமுறை எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது வெறுப்பைக்
கொண்டுள்ளது, ஆழ்ந்த வெறியைக் கொண்டுள்ளது என்பது வலதுசாரி நாளேடு
Le Figaro
வில் ஆகஸ்ட் 29 வந்த தலையங்கத்தின் மூலம் தெரிய வரும்; இந்த ஏடு தொடர்ந்து சார்க்கோசி ஆட்சிக்கு ஆதரவு
கொடுத்து வருவதாகும். திட்டத்தை நிறைவேற்றத் தேவையான 1.5 பில்லியன் யூரோக்கள் திட்டமிடப்பட்டுள்ள
1.1 சதவீத வரியில் இருந்து திரட்டக் கூடாது என்றும், ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவ
வசதி செலவினங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. "தன்னுடைய ஒற்றுமை முயற்சியால்
அனைத்து ஏழைகளுக்கும் உதவ வேண்டும் என்பது தன்னுடைய உரிமை என்று சார்க்கோசி நினைத்தால், அவர்
ஆவணமற்ற தொழிலாளர்களும் இதற்கு பங்களிப்பு செய்யும் வகையில், ஆண்டு ஒன்றுக்கு 800 மில்லியன் யூரோ செலவாகும்
அரசு மருத்துவ உதவியை கைவிடுவதின் மூலம் செய்யலாம்"
சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்கொண்ட தன்மை
RSA க்கு பொது
ஒப்புதல் கொடுத்த விதத்தில்தான் உள்ளது. ஆகஸ்ட் 29ம் தேதி
Le Monde
சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் பிரான்சுவா ஹாலண்ட்,
"சோசலிஸ்ட்டுக்களும் இடதுகளும் இறுதியில் முன்னாள் சோசலிஸ்ட்
கட்சி மந்திரியும் கட்சியின் தலைமைக்கு போட்டியிடுபவருமானவரின் கருத்தை கேட்டுள்ளனர்" என்றார். மார்ட்டின்
ஆப்ரி, "இந்த நடவடிக்கை சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை; ஆயினும்கூட அது நிதானமாகத்தான்
உள்ளது" என்றார். சோசலிஸ்ட் கட்சி
முன்னாள் பிரதம மந்திரி மிசேல் ரொக்கார்ட் ஆகஸ்ட் 30ம் தேதி
RSA
வருவது "ஒரு நல்ல செய்தி" என்றார்.
La Tribune க்குக்
கொடுத்த பேட்டி ஒன்றில் Maryse Dumas,
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான CGT
யின் பொதுச்செயலாளர், மற்றும் Hirsch
குழுவின் உறுப்பினர், அறிவித்தார்: "வேலையற்றவர்களுக்கு அல்லது மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்குக்
கொடுக்கப்படும் சமூக உதவி என்ற கருத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்."
உண்மையில் RSA
க்கு ஆதரவு கொடுக்கிறாரா எனக் கேட்கப்பட்டதற்கு இவ்வம்மையார் கூறினார்: "சிறிய கருத்து வேறுபாடுகள்
உள்ளன. ஒரு குறிப்பிட்ட நபருக்கு, உழைத்த ஒவ்வொரு மணி நேரமும் சாதகமாக இருக்க வேண்டும் என்று நாங்கள்
நினைக்கிறோம். ஆனால் இந்த முறையில் முதலாளிகள் சிறு ஒப்பந்த வேலைகளை வளர்த்து விடாமல் நாம் கூடுதலான
கண்காணிப்பைக் கொள்ள வேண்டும்...ஏனெனில் உதவித் தொகை குறைவூதியங்களை ஈடுகட்டும் என்று அவர்கள்
நினைக்கலாம். அதன் பொருள் இன்னும் கூடுதலான வறுமை மிகுந்த தொழிலாளர்களை தோற்றுவிப்பதுதான்."
இளைஞர்கள் மற்றும் வேலையற்றவர்கள் வேலை பெறுவதற்கு உதவும் வகையில் உள்ளது
எனச் சித்தரிக்கும் திட்டங்களை கொண்டுவருதல், ஆதரவு கொடுத்தல் ஆகியவற்றில் சோசலிஸ்ட் கட்சிக்கு நீண்ட
வரலாறு உள்ளது; ஆனால் குறைந்த ஊதியம், உதவித்தொகை பெறும் தொழிலாளர்களை முதலாளிகளுக்கு
கொடுத்தல் என்பது பொதுவான ஊதிய தரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்; மேலும் அனைத்து
தொழிலாளர்களின் உரிமைகள், ஊதியங்கள் ஆகியவற்றையும் பாதிக்கும். ஆனால் இவை தொழிற்சங்கங்களினால் அதிக
அளவு ஆதரவைப் பெறுகின்றன.
1970 களின் இறுதியில் வேலையின்மை
என்பது போருக்குப் பிந்தைய உயர்நிலைக்கு பின்னர் அதிகமாயிற்று. 1982ல் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனும்
பிரதம மந்திரி பியர் மொறுவாவும் இளைஞர்களுக்கு "பயிற்சிக் காலம்" என்பதை நிறுவி முதலாளிகளுக்கு
கிட்டத்தட்ட இலவச தொழிலாளர் உழைப்பைக் கொடுத்தனர். அதுவும் மக்களில் 7.5 சதவிகிதம், இளைஞர்களில்
20 சதவிகிதம் வேலையில்லாமலிருந்த காலத்தில் இது திட்டமிடப்பட்டிருந்தது. 1983ல் முதலாளிகள்
SIVP (stage d'insertion dans la vie
professionnelle -- பணி வாழ்வில்
சேர்க்கப்படுவதற்கான பயிற்சிக் காலம்) என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்; இதன்படி தொழிலாளர்கள்
SMIC (Salaire minimum légal --
சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம்) இல் மூன்றில் ஒரு பங்கிற்கும்
அரைப்பங்கிற்கும் இடையில்தான் ஊதியம் பெற்றனர். தொழிற்சங்கங்களும் இதை செயல்படுத்த ஒப்புக் கொண்டன.
1984ம் ஆண்டு வேலையின்மை விகிதம் 10 சதவிகிதம், 25 வயதுக்கு உட்பட்ட
இளைஞர்களிடையே 25 சதவிகிதம் என்று இருந்த நிலையில் பிரதம மந்திரி
PS ஐ சேர்ந்த
லோரன்ட் பாபியுஸ் TUC (Travaux d'utilité
collective) என்ற திட்டத்தை தொடக்கினார்; இதன்படி
இளைஞர்களுக்கு பொதுப் பணிகளில் பகுதி நேரங்கள் கொடுக்கப்பட்டன. இந்தப்பணிகள் ஆறு மாத ஒப்பந்தத்திற்கு
கொடுக்கப்பட்டன; SMIC
ஐ விட சற்றுக் குறைவான தொகை கொடுக்கப்பட்டது; இதில் இருந்து ஓய்வூதியம் அல்லது வேலையின்மை நலன்களுக்கு
பணம் ஏதும் பிடித்தம் செய்யப்படவில்லை.
1990 ல் அப்பொழுது
PS ன் பிரதம மந்திரியாக
இருந்த மிசேல் ரொக்கார்ட் TUC
க்குப் பதிலாக CES (Contrat emploi
solidarité) என்பதை இளைஞர்களுக்கு கொண்டுவந்தார்:
12 மாதம், பகுதி நேர ஒப்பந்தங்கள் பொதுத் துறைகளில்
SMIC ஊதியங்களில்
பாதி என்ற விதத்தில் அவை அமைக்கப்பட்டிருந்தன.
1993ல் எடுவார்ட் பல்லடூரின் கோலிச அரசாங்கம்
CIP
(Contrat d'insertion professionnelle)
என்னும் திட்டத்தை, பொதுவாக Smic-jeune
அல்லது இளைஞர்களுக்கான குறைந்த ஊதியம் என்னும் திட்டத்தை வேலையில்லாமல் உள்ள உயர்கல்வி
பட்டதாரிகளுக்காக கொண்டுவந்தது. இந்நடவடிக்கை முதலாளிகள் இளந்தொழிலாளர்களுக்கு
SMIC விகிதத்தில்
80 சதவிகிதத்தை மட்டும் கொடுக்க அனுமதித்திருக்கும். ஆனால் மிகப் பெரிய அளவில் பல்கலைக் கழக,
உயர்நிலைப் பள்ளி மாணவர் தொகுப்பு இருந்தது இத்திட்டத்தை பலடூர் கைவிடுமாறு செய்தது. ஆனால் லியோனல்
ஜோஸ்பன்னுடைய பன்முக இடது அரசாங்கம் (PS,
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமை வாதிகள்) 1997ல் பதவிக்கு வந்தபின் அது இளைஞர்களுக்கு வேலைத்திட்டம்
என்பதை நிறுவியது; இது Baccalauréat
தகுதிக்கு அப்பால் படித்த இளம் தொழிலாளர்களுக்கு என்று இருந்தது. இந்த இளந்தொழிலாளர்களை சுரண்டிய
தன்மை பிரான்ஸ் முழுவதும் மிகக் குறைந்த அளவில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை நிறுவ உதவியது.
செப்டம்பர் 2 ம்தேதி
Le Monde க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில்
CGT
பொதுச் செயலாளரான பேர்னார்ட் தீபோ, "சார்க்கோசி கவனத்துடன் இருக்க வேண்டும் தொழிலாளர்களின்
கஷ்டங்கள் உண்மையானவை. ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாகும்" என்றார். இம் முறை
மற்ற தொழிற்சங்கங்களின் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்படுத்த
முடியாது என்ற அச்சங்களுடன் தன்னுடைய எச்சரிக்கையும் அவர் கூறியுள்ளார். கடந்த வாரம்
Force Ouvrière (FO)
இன் Jean-Claude Mailly
"அனைத்து அடையாளங்களும் சிவப்பைத்தான் காட்டுகின்றன" என்றார்; பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பின்
CFDT
இன் François Chérèque
பொதுநல அரசை அரசாங்கம் தகர்ப்பதற்கான விளைவுகள் "மக்களைத் திருப்திபடுத்தும் வகையிலான
பேச்சுக்களைத்தான் அளிக்கும்" என்ற அச்சத்தைத் தெரிவித்தார்.
அக்டோபர் 7ம் தேதி நடவடிக்கை தினம், ஆர்ப்பாட்டங்கள் தினம் என்று திபோ
அறிவித்துள்ளார்: "கெளரவமான வேலைகள், ஊதியங்கள், பாதுகாப்பான பணிகள், சமூக பாதுகாப்பு" ஆகியவை
கோரப்படுகின்றன. இந்நிலைமையில் உடனடித் தேவை நடவடிக்கையும் ஐக்கியமும் ஆகும்" என்று தீபோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பின் பாசாங்குத்தன்மை தொழிற்சங்கங்கள் வேலைக்குத் திரும்புமாறு
தொடர்ச்சியான பல நடவடிக்கைகளில் கொடுத்த அழைப்பைப் பார்த்தாலே நன்கு புலப்படும்; இவை
சார்க்கோசியுடன் 2007 மே தேர்தலுக்கு பின்னர் அவருடைய திட்டமான தொழிலாளர்கள் உரிமைகள், நிலைமைகள்
ஆகியவற்றை தகர்ப்பதில் மிக நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன. இந்த வழிவகைதான் தொழிலாளர்கள் எதிர்ப்பை
ஏமாற்றத்திற்கு உட்படுத்தி அவர்களுக்கு ஒரு அரசியல் முன்னோக்கு இல்லாமல் செய்வதற்கு துல்லியமாக கையாளப்படுகிறது.
தொழிற்சங்கங்களின் முன்னுரிமை முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் உலகப்
போட்டியாளர்களுக்கு பிரெஞ்சு முதலாளித்துவத்தை போட்டித்தன்மை உடையதாகச் செய்வது ஆகும்; இதற்கு
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக, ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுவது அவசியமாகும்.
இச்சக்திகளுடன் முறித்துக் கொள்ளுவது, அதுவும் சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு
என்பதுதான் தொழிலாள வர்க்கத்தை தன்னுடைய வாழ்க்கைத் தரங்களை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள உதவும். |