ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: trade unions warn government against social
explosion
பிரான்ஸ்: சமூக வெடிப்பு குறித்து அரசாங்கத்தை தொழிற் சங்கங்கள் எச்சரிக்கின்றன
By Antoine Lerougetel and Alex Lantier
2 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
Force Ouvrière (FO) இன்
தலைவரான Jean-Claude Mailly
மற்றும் CFDT
இன் தலைவரான François Chérèque
ஆகிய இரண்டு தொழிற் சங்க தலைவர்களும் சமீபத்தில் தாங்கள் கொடுத்த உயர் நிலை நேர்காணல்களில்,
கோடை விடுமுறைகளின் முடிவில் பெரும் அளவிலான சமூகப் போராட்டங்களுக்கான சாத்தியம் குறித்து எச்சரித்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வாங்கும் சக்தி சரிவையும், பொருளாதார சுருக்கத்தையும் காணும் நிலையில்
தொழிலாள வர்க்க அதிருப்தி அதிகரித்து வருகிறது.
தனது ஆகஸ்ட் 25 பதிப்பில்,
Le Parisien
பத்திரிகை Mailly
ஐ கேட்பதுடன் தொடங்கியது: "பள்ளிக்கு திரும்பும் காலமானது சமூக அளவில் கொதிப்புற்றிருக்குமா?" அவர்
பதிலளித்தார்: "அனைத்து புள்ளிவிவரங்களும் சிவப்பு எச்சரிக்கை காண்பிக்கின்றன. வேலைவாய்ப்பு, வாங்கும்
சக்தி, சம்பளங்கள், இவை மட்டுமல்லாமல் தொழில்துறை உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதிகள்....
எல்லாம். தங்களது எல்லைகள் தடுக்கப்பட்டிருப்பதாக தொழிலாளர்கள் உணர்கிறார்கள். குறிப்பிட அவசியமின்றி
அவை ஓய்வூதியம் மற்றும் சுகாதாரக் காப்பீடு குறித்த அவர்களின் கவலை தான்.
அவர் மேலும் கூறுகிறார்: "தொழிலாளர்கள் போதுமான அளவு பட்டு விட்டார்கள்.
ஒரு இயக்கத்தை முன்நிறுத்த அதிக கால அவகாசம் அவசியப்படாது".
Mailly
இன் அறிவிப்புகள் ஒரு தீர்மானமான அரசியல்
பொருளில் நடைபெறுகின்றன. மே மற்றும் ஜூன் மாதத்தில் தொழிற்சங்கங்கள், ஓய்வூதிய வெட்டுகள் மற்றும்
35-மணி நேர வேலைவாரத்தை எதிர்த்து நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அவற்றை தனிமைப்பட்ட
மற்றும், அரசாங்கம் மற்றும் அதன் சமூக-விரோத திட்டத்திற்கு எதிரானதொரு அரசியல் போராட்ட முன்னோக்கு
எதுவும் இல்லாத ஒருநாள் போராட்டங்களாக கட்டுப்படுத்தி உடைத்து விட்டன. மே 2007ல் நிக்கோலா
சார்க்கோசி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அவருடன் தொழிற்சங்கங்களின் நெருங்கிய ஒத்துழைப்பின்
ஒரு பாகமாகும் இது. எனவே, வர்க்க உறவுகளின் வெடிப்புதன்மை குறித்த அவர்களின் எச்சரிக்கைகள் தொழிலாள
வர்க்கத்தை திரட்டும் பொருட்டு அல்ல, மாறாக அரசாங்கத்திற்கு அதன் கொள்கையால் வரக் கூடிய அபாயங்கள்
குறித்து எச்சரிப்பதற்கு தான்.
தொழிலாளர் அதிருப்தி இருந்த போதிலும், தொழிலாள வர்க்கத்தை பரந்த அளவில்
அணிதிரட்டும் திட்டம் எதுவும் FO
வசம் இல்லை என்று Mailly
தெரிவித்தார். "இப்போதைக்கு, மற்ற தொழிற் சங்கங்களுடன் எந்த கூட்டமும் திட்டமிடப்படவில்லை. [...]
ஒரு நாள் சம்பளத்தை இழந்து ஒன்றையும் பெறுவதற்கு வழியின்றி, தொழிலாளர்கள் இதில் அயற்சியுற்று இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் நடவடிக்கையில் இறங்கத் தொடங்கும் போது, ரொம்பவும் கடினமானதாகி விடும்".
தனிமைப்பட்ட, பயனற்ற நடவடிக்கை தினங்களில் சம்பளத்தை இழப்பதில்
தொழிலாளர்கள் விரக்தியுற்றிருப்பதை விளக்கி முடித்த கையோடு, "அக்டோபர் 2 அன்று ஒரு நடவடிக்கை தினத்திற்கு
FO திட்டமிட்டிருப்பதாக
அவர் அறிவித்தார்". அந்த நடவடிக்கை தினத்தில், வரவிருக்கும் அஞ்சலக தனியார்மயமாக்கம், சுகாதார பராமரிப்பு
சீர்திருத்தங்கள், மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் வெட்டுகள் ஆகிய விஷயங்களுக்கு தங்களது எதிர்ப்பு பதிவு செய்யப்படும்
என்று அவர் கூறினார்.
Journal du Dimanche
இன் ஆகஸ்ட் 30 நேர்காணல் Chérèque
இடம் இந்த இலையுதிர்காலம் எப்படி செல்லும் என்று கேட்பதுடன் தொடங்கியது.
அவர் பதிலளித்தார்: "கடைசி 18 மாதங்களில் அனைத்து நம்பிக்கையான வார்த்தைகளையும் கேட்டு விட்டு
தொழிலாளர்கள் விடுமுறையில் சென்றார்கள். நாங்கள் எல்லாவற்றையும் சரிசெய்து விடுவோம், எல்லாமே ஏற்கனவே
நன்கு செல்லத்தொடங்கி விட்டது என்று அவர்களிடம் கூறப்பட்டது. இப்போது அவர்கள் திரும்பி வரத் தொடங்கி
கேட்பதெல்லாம்: "விஷயங்கள் நல்ல படியாக நடக்கவில்லை" என்பதைத் தான். இது வெறுப்பூட்டும் விஷயம்
தான். ஆனால் இது எங்கு சென்று முடியும்: கொந்தளிப்பிலா அல்லது அதற்கும் மேற்பட்ட பதட்டத்திலா என்பது
எனக்குத் தெரியவில்லை".
35-மணிநேர வேலைவார சீர்திருத்தத்தின் மீது அவர் என்ன மாதிரி நடவடிக்கைக்கு
திட்டமிட்டு இருக்கிறார் எனக் கேட்டபோது தான் எதுவும் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
"சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நான் குடியரசின் மதிப்புகளின் மீது நம்பிக்கை கொண்டவன்".
தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்க தனது சமூக வெட்டுகளை எவ்வாறு சிறந்த
முறையில் வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை அளிப்பவரின் நிலைப்பாட்டை செரெக்
கைக்கொண்டிருந்தார். அவர் சொன்னார்: "Alps,
Haute Provence
இல் உள்ள சிஸ்டரோனில் [தென்கிழக்கு பிரான்சு] எனது பழைய நண்பர்கள்
எது குறித்து பேசினார்கள்? மருத்துவமனைகள், அஞ்சலகம் குறித்து, உள்ளூர் சேவைகள், பிராந்திய போக்குவரத்து
குறித்து. [...] அஞ்சலகத்திற்கானது போன்றதொரு முக்கியமானதொரு சீர்திருத்தத்தில் பொது விவாதம் இன்றி
ஒருவர் ஈடுபட முடியாது. அது இல்லாமல், ஒருவர் மக்களை அதனைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் செய்ய
முடியாது. இது உணர்வு தட்ட பேசக்கூடியவர்களுக்கு பாதையைத் திறந்து விடுகிறது".
உணர்வு தட்டும் பேச்சாளர்கள் குறித்த செரெக்கின் குறிப்பு உயர் முக்கியத்துவம்
வாய்ந்தது. தொழிற்சங்கங்கள் பிரான்சின் அரசியல் சூழலின் நொறுங்குநிலை குறித்து வலியுடன் பிரக்ஞை
கொண்டிருக்கின்றன, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கமானது தொழிற்சங்க தலைமைகளின்
அப்பட்டமான துரோகத்தை அம்பலப்படுத்தலாம் என்று அஞ்சுகின்றன.
சார்க்கோசியுடனான அவர்களது ஒத்துழைப்பு சார்க்கோசியின் பதவிக் காலம் நகர
நகர கூடுதலாக வெளிப்படையானதாக ஆகியிருக்கிறது. செப்டம்பர் 2007 இல், ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான
அக்டோபர்-நவம்பர் போக்குவரத்து வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக, செரெக்கும் மெய்லியும் தொடர்ந்து
சார்க்கோசியுடன் சந்திப்புகள் நிகழ்த்தியதாக பத்திரிகைகள் தெரிவித்தன. செரெக்கின் விருப்பத்திற்குகந்த சந்திப்பு
இடமாக பெருமைமிகுந்த "Violon d'Ingres"
இருந்தது. இந்த சந்திப்புகளை நியாயப்படுத்தும் பொருட்டு ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய
CFDT
சார்க்கோசியுடன் செரெக்கின் மதிய உணவுகள் "எந்த வகையிலும் அசாதாரணமானது அல்ல, ஏனென்றால்
FO
தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளரான
Jean-Claude Mailly உடன் இதே போன்ற சூழ்நிலைகளின்
கீழ் பிரெஞ்சு ஜனாதிபதி பேச்சு நடத்தியிருக்கிறார்".
ஏப்ரல் மாதத்தில் "வலிமையான தொழிற்சங்கங்களுக்கு" என்ற தலைப்பின் கீழ்
Le Monde
தினசரியில் சார்க்கோசி எழுதிய ஒரு நீள தலையங்கத்தில்
"நமது நாட்டிற்கு அவசியமான சீர்திருத்தங்களை வழங்கவும் மேற்கொள்ளவும், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனதாரர்களின்
நலன்களை பிரதிநிதிப்படுத்துவோருடன் நாம் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார். அவர் மேலும் கூறினார்: "ஜனாதிபதி
தேர்தல் முடிந்த உடனேயும், ஜனாதிபதி மாளிகையில் காலடி எடுத்து வைக்கும் முன்பேயும், தொழிற் சங்கங்களையும்
வர்த்தக குழுமங்களையும் நான் சந்தித்து அவர்கள் கூறுவதைக் கேட்டு, நான் எடுக்க திட்டமிட்டு வந்த முதல் நடவடிக்கைகள்
மீது அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அப்போது முதல், அவர்களின் பிரதிநிதிகள்
ஒவ்வொருவருடனும் அவ்வப்போது சந்திப்பதை நான் தொடர்ந்திருக்கிறேன்".
மே-ஜூன் ஆர்ப்பாட்டங்களின் போது, போராடியவர்கள் தொழிற் சங்கங்கள் மீது
கொண்டிருந்த அதிருப்தி அதிகரித்திருந்ததை அரசாங்கம் கவலையுடன் கவனித்தது.
Le Monde
ஜூன் 24 இல் எழுதியது: "ஜனாதிபதி மாளிகை கண்காணித்துக் கொண்டிருக்கிறது, ஜனாதிபதியின் சமூக விவகாரங்களுக்கான
ஆலோசகர் Raymound Soubie
எம்மிடம் கூறியதைப் போல, தொழிற் சங்கங்கள் பலவீனமடைவதையும் கட்டுப்படுத்த முடியாத இயக்கங்கள் தோன்றுவதையும்
தடுக்கும் பொருட்டு".
இந்த உத்தியோகபூர்வமாய் நாகரிகப்படுத்திய பேச்சின் வழி, நம்பிக்கையிழந்த
சங்க தலைமைகளில் இருந்து விலகி சுதந்திரமான அரசியல் போராட்டங்களை தொழிலாளர்கள் ஆரம்பிக்கலாம்
என்னும் பூர்சுவாக்களின் அச்சத்தை Soubie
வெளிப்படுத்தியிருந்தார். பிரான்ஸ் மற்றும் பொதுவாக ஐரோப்பாவின் பொருளாதார மந்தநிலை, அத்துடன் வெகுஜன
அதிருப்திக்குள்ளாகும் சீர்திருத்தங்களை முன்செலுத்தும் அரசாங்கத்தின் உறுதி இவற்றால் இத்தகைய அச்சம் அதிகரித்திருக்கிறது.
மிக சமீபத்திய புள்ளிவிவரத்தின் படி, 2008 இன் இரண்டாவது காலாண்டில் பிரெஞ்சு பொருளாதாரம் 0.3
சதவீதம் சுருக்கம் கண்டது, ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய-மண்டல பொருளாதாரமானது 0.2 சதவீத
சுருக்கத்தைக் கண்டது.
சுருங்கும் பொருளாதாரமானது மாநில செலவினத்தை குறிப்பிடத்தகுந்த அளவில்
குறைக்கும். Xerfi
சந்தை ஆய்வு நிறுவனத்தின் Alexander Law
எழுதும் போது, "2008 நிதிநிலை அறிக்கையானது 2.25 சதவீதம்
GDP வளர்ச்சி நிர்ணயத்தின்
அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் இந்த வளர்ச்சி விகிதத்தை ஏற்கனவே 1.7 சதவீதமாக
திருத்த தள்ளப்பட்டிருக்கிறது, சமீபத்திய கணக்கீடுகள் இதனை 0.9 சதவீதமாக வைக்கின்றன, எதிர்பார்க்கப்பட்ட
வருவாய்களில் ஒரு பிரம்மாண்டமான இழப்பை குறிக்கும் விதமாக". பிரான்சின் நிதிநிலை பற்றாக்குறையானது
ஐரோப்பிய ஸ்திரநிலை உடன்படிக்கை கோரும் 3 சதவீத வரம்புக்கு ஏற்கனவே மிக அருகில் வந்து விட்டிருக்கிறது.
பொருளாதார சுருக்கமும் பணவீக்கமும் தொழிலாளர்களின் வாங்கும் திறனில் பெரும்
சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. லா மேற்கோள் காட்டியிருக்கும் தேசிய நுகர்வு நிறுவனத்தால் (INC)
மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, "2000 மற்றும் 2008 இல் ஒரு நாள் சம்பளத்திற்கு சமமான தொகையை
ஒப்பிட்டால்... பணவீக்கத்தால் எட்டு வருடங்களுக்கு முந்தைய நிலையை விட தொழிலாளர்கள் இன்று குறைவான
உணவு, வீடு மற்றும் எரிபொருளைத் தான் வாங்க முடிகிறது" என்று தெரிவிக்கிறது.
INC ஆய்வு தொடர்கிறது:
"2000 இல் ஒரு நாள் சம்பளத்தை கொண்டு ஒரு தொழிலாளர் 49 லிட்டர் டீசலை வாங்க முடியும் என்றால்,
இந்த ஆண்டு அவர் 38 லிட்டர் தான் வாங்க முடியும். இதேபோல் குறைவான ஆரஞ்சுகளையும் (-14 சதவீதம்),
உருளைக்கிழங்குகளையும் (-14 சதவீதம்), குறைவான கறித்துண்டுகளையும் (-13 சதவீதம்), குறைவான
ரொட்டித் துண்டுகளையும் (-11 சதவீதம்), மற்றும் குறைவான வெண்ணெயையும் (-7 சதவீதம்) தான் அவர் வாங்க
முடியும்".
2003 இன் இரண்டாவது காலாண்டு முதல் முதல்முறையாக வேலைவாய்ப்பின்மை
அதிகரித்து வருகிறது. 2008 இன் இரண்டாவது காலாண்டில், 12000 வேலை இழப்புகள் ஏற்பட்டன
(மொத்தத்தில் 0.1 சதவீதம்). இந்த சரிவின் முக்கிய காரணம் இரண்டாவது காலாண்டில் தற்காலிக வேலைகளின்
6.8 சதவீத வேலை இழப்பாகும். சேவை துறையில், வேலை வளர்ச்சி என்பது ஏறக்குறைய 0.1 சதவீதம் என
முற்றுப்புள்ளியை எட்டி விட்டது. தொழிற்துறை தொழிலாளர் எண்ணிக்கையானது இரண்டாவது காலாண்டில் 0.3
சதவீதம் குறைந்தது.
சர்வதேச வீட்டு நெருக்கடியும் பிரான்சை தாக்குகிறது, கடந்த 12 மாதங்களில் புதிய
வீடுகள் விற்பனையானது 34 சதவீதம் சரிவினைக் கண்டிருக்கிறது.
பொருளாதார மந்தநிலைக்கு அரசாங்கத்தின் பதிலிறுப்பானது செலவினங்களை கட்டுப்படுத்துவதும்
மற்றும் சமூக ஒழுக்கத்தை செயலாக்குவதுமாக இருக்கும் என்று ஆகஸ்ட் 18 அன்று பிரதமர்
François Fillon
மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர் கூறினார்: "குடியரசின் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ், அரசாங்கத்தின்
நோக்கமானது பிரெஞ்சு பொருளாதாரத்தின் போட்டியிடும் தன்மையை மறுஸ்தாபிப்பு செய்வதாகும்".
"தொழிலாளர் சந்தை, வேலை அமைப்பு மற்றும் வேலை சட்டத்தின் கட்டமைப்பு சீர்திருத்தங்களின்" வழியாக
தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீது கூடுதலான தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் இதனைச் செய்ய
அவர் முன்மொழிந்தார். |