World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
சீனா
Inflation, manufacturing contraction and property bubble
haunts Chinese government பணவீக்கம், உற்பத்தி குறைவு மற்றும் சொத்து குமிழி ஆகியன சீன அரசாங்கத்தை வாட்டுகின்றன By John Chan நாட்டின் விரைவான வளர்ச்சி, அதை அமெரிக்க நிதிய நெருக்கடியிலிருந்து "விலக்கி நிற்க" அனுமதிக்கும் என்ற கருத்துகளை சீன பொருளாதாரம் பற்றிய சமீபத்திய புள்ளிவிவரங்கள் தகர்த்துள்ளன. உண்மையில், வளர்ச்சி குறைவு, உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைக்காக ஜூலை 25ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) பொலிட்பீரோ கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிடுவதாவது: "வளர்ந்து வரும் சர்வதேச ஸ்திரமின்மைகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார பிரச்சனைகளுக்கு இடையில், விரைவான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை தக்கவைப்பதில் சீன அதிக சவால்களை எதிர்கொண்டு வருகிறது." 2007ம் ஆண்டு முழுவதும் 11.9 சதவீதமாக இருந்த சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம், 2008ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 10.1 சதவீதமாக குறைந்தது. ஆண்டு கணக்கீட்டு ஏற்றுமதி வளர்ச்சியும், 28.1 சதவீதமாக இருந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூனில் 17.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index) ஜூன் மாதம் 7.1 சதவீதமாக உயர்ந்தது. இது ஒரு தசாப்த காலத்தில் அதிகமாக பெப்ரவரியிலிருந்த 8.7ஐ சதவீதத்தை விட குறைவாகும். எவ்வாறிருப்பினும், ஆண்டின் இரண்டாம் பகுதியில் மேலும் உயரக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கி இருந்த உற்பத்தியாளர் விலை குறியீடு 8.8. சதவீதத்தை எட்டியிருந்தது. பகுப்பாய்வாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பொருளாதாரம் பற்றி பெய்ஜிங் வலியுறுத்தியிருப்பது நிலைமையின் தீவிரத்தை சுட்டிக்காட்டி இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். சமீப ஆண்டுகளில் பொருளாதார "உற்பத்தி செலவுகளைத்தவிர நிர்வாகச்செலவுகள்" மற்றும் அதிக வளர்ச்சி விகிதம் ஆகியவற்றைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் அதன் முந்தைய அழுத்தத்திலிருந்து ஒரு மாற்றம் இருப்பதை பொலிட்பீரோ கூட்டமும் குறித்தது. South China Morning Post இன் கருத்துப்படி, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மையங்களுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை CCP இன் உயர்மட்ட தலைவர்கள் மேற்கொண்ட பின்னர் அதன் பொலிட்பீரோ கூட்டம் நடைபெற்றது; பயணத்தின் போது உள்ளூர் அதிகாரிகள் வலுவற்ற ஏற்றுமதி சந்தைகள், உயர்ந்துள்ள மூலபொருள் விலைகள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பு உயர்வு ஆகியவை பற்றி கடுமையாக குறை கூறினார்கள்.ஆண்டின் முதல் பகுதியில் குவாங்டோங் பொருளாதாரம் 10.7 சதவீதம் வளர்ச்சி அடைந்தது; ஓராண்டிற்கு முன் இருந்ததைவிட இது 3.6 சதவீதம் குறைவு ஆகும். முதல் ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 2,331 காலணி தயாரிப்பு ஆலைகள் முடப்பட்டு விட்டன; பல நிறுவனங்கள் வியட்நாம் மற்றும் இந்தியாவில் இருக்கும் குறைவூதிய உற்பத்தி மையங்களுக்கு உற்பத்தியை மாற்றியுள்ளன. ஷாங்காய் 10.3 சதவீத வளர்ச்சியை கண்டது. இது 2007ல் இருந்து 2.7 சதவீகிதத்தை விட குறைவாகும். ஜேஜியாங்கில் முன்னணியில் இருக்கும் இரு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நகரங்களான வென்ஜோ மற்றும் யிவுவின் 20 சதவீத தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. கிழக்கு ஜேஜியாங் மாகாணத்திலிருக்கும் நிலைமை, உற்பத்தித்துறை நெருக்கடிக்கு ஒரு சான்றாக உள்ளது. கிட்டத்தட்ட உள்ளூர் நிறுவனங்களில் ஐந்தில் ஒரு பங்கு நிறுவனங்கள் கூடுதலான வட்டிவிகிதம், மூலப்பொருட்களின் விலையுயர்வு மற்றும் போக்குவரத்து இழப்புக்களை தெரிவித்துள்ளன. சராசரி இலாபவிகிதம் 4.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் நிலையில், 90 சதவீத நிறுவனங்கள் ஏற்றுமதியில் 5 சதவீதத்திற்கும் குறைவான யுவான் மதிப்பை தான் பொறுத்து கொள்ள முடியும். ஆனால் யுவானோ 6.56 சதவீத மதிப்பை டாலருக்கு எதிராகப் பெற்றுள்ளது. ஷங்காயிலிருந்து வெளியாகும் Oriental Morning Post ஜூன் 19ம் தேதி மாகானத்தின் "வென்ஷோ முன்மாதிரி", ஒரு காலத்தில் சீன ஏற்றுமதி அதிசயத்தின் ஓர் அடையாளம் என பாராட்டப்பட்டது. இப்பொழுது பெரும் கஷ்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மாகாணத்தில் இருக்கும் 60,000 நிறுவனங்களில், (அதாவது கிட்டத்தட்ட 20 சதவீதம்) இப்பொழுது திவாலாகும் நிலையில் உள்ளன. உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் கவனத்தை எண்ணிக்கையை விரிவுபடுத்துவதிலும், இலாபத்தை குறைக்கும் வகையிலும், தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு பதிலாக போட்டியில் அதிகம் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை குடும்பங்களே நடத்தும் வணிகங்கள் ஆகும்; அநேகமாக பணக்கார விவசாயிகளால் இது செய்யப்படுகிறது. இத்தகைய அதிக கல்வியறிவற்ற ஆலை உரிமையாளர்கள் தற்கால நிர்வாக வழிவகைகளை ஏற்க தயக்கம் காட்டுகின்றனர். இதையொட்டி திடீரென ஏற்படும் பொருளாதார மாறுதல்ககளுக்கு இவை இலக்காகின்றன. சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்களும் குறிப்பிடத்தக்க அளவில் பணவீக்கத்திற்கு எதிராக வந்துள்ள வங்கிகளின் கடன் கொடுக்கும் நிலை போன்ற கடுமையான நிதிய நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிக பெரிய முதலீட்டூ வங்கியான சீன சர்வதேச மூலதன நிறுவனத்திலுள்ள ஒரு பொருளாதார வல்லுனரான ஜிங் ஜிக்கியாங் Bloombergயிடம் கூறியதாவது: "இந்த சரிவு எதிர்பார்க்கப்படவில்லை. அரசாங்கம் இன்னும் செயலூக்கமான நிதிய கொள்கையை பயன்படுத்த கூடும், யுவான் மூலம் கிடைக்கும் இலாபங்களை குறைத்து கொண்டு சிறிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கப்படுவதை ஊக்குவிக்கலாம்." எவ்வாறிருப்பினும், அத்தகைய வளர்ச்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள் பணவீக்க பிரச்சினைகள் அதிகரிக்கத் தான் செய்யும்; ஏனெனில் பலவீனமான யுவான், அமெரிக்க டாலரில் விற்கப்படும் எண்ணெய், இரும்பு தாதுப்பொருள் போன்ற இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்கும். அரசாங்க முதலீட்டை உள்கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்தல் போன்ற ஆக்கபூர்வமான நிதிய கொள்கை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்; ஆனால் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கும். சீனாவில் பணவீக்கம் தான் சீனாவின் மிக பெரிய சவாலாக உள்ளது என்று ஜனாதிபதி ஹு ஜின்டாவோ குறிப்பிட்டிருந்தார். அதன் வெடிப்புதன்மை நிறைந்த அரசியல் உட்குறிப்புக்களை பற்றி CCP தலைமை தெரிவித்துள்ள அச்சத்தைத்தான் அவரும் பிரதிபலித்துள்ளார். 1989ல் இருந்த பாரிய பணவீக்கம் பெரும்பாலும் நகர்ப்புற தொழிலாளர்களாக இருந்த 100 மில்லியன் மக்களை சீனா முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தியதாக சில புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டியானன்மென் சதுக்கத்தில் இராணுவம் மிக மிருகத்தனமான முறையில் மக்கள் எதிர்ப்பை அடக்கியதன் மூலம்தான் அந்த போராட்டம் முடிவிற்கு வந்தது. 1989லிருந்து, தொழிலாள வர்க்கம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில், சமூக அமைதியின்மை இன்னும் பரந்த அளவில் மீண்டும் வெடிக்கக்கூடும் என்று பெய்ஜிங் அஞ்சுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட கடன்நுகர்வு சந்தை, சீனாவின் தொழில்துறையை சமீபத்திய ஆண்டுகளின் வளர்ச்சி அடைய செய்திருந்தது. இந்த உயர்நிலை வளர்ச்சியின் போது, ஜனாதிபதி ஹு பாரிய உள்நாட்டு நுகர்விற்கு ஏற்றவாறும், குறைந்த தொழில்நுட்பத்துடன், தொழிலாளர்கள் சார்ந்த உற்பத்திமுறைக்கு மாற்றாக உலகத்தரம் வாய்ந்த சீன கூட்டுநிறுவனங்களை உருவாக்குவதன் மூலமாகவும் சீன பொருளாதாரத்தை மாற்றியமைக்க அழைப்பு விடுத்திருந்தார். பெருமளவிலான ஏற்றுமதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் வர்த்தக அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாக குறைகூறும் பெய்ஜிங் தலைவர்கள், சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்காக மிக அதிகமாக மாசுபடுத்தும் தொழில்துறைகளை வெட்டிவிட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்கள். தொழில்வழங்குனர்கள் நீண்ட கால வேலைவாய்ப்பையும் மற்றும் பிற சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று ஜனவரியில், ஒரு தொழிலாளர் ஒப்பந்த சட்டம் இயற்றப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற சிக்கலில் இருக்கும் முக்கிய ஏற்றுமதி சந்தைகளுடன் பார்க்கப்படும் போது, இந்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாக உள்ளன. ஏற்றுமதிகளின் மீதான வரிசலுகைகள் குறைப்பை நீக்குமாறும், டாலருக்கு எதிராக யுவான் மதிப்பு உயர்வதை குறைக்குமாறும், புதிய தொழிலாளர் சட்டத்தை அகற்றுமாறும் சீன வியாபாரங்கள் தற்பொழுது பெய்ஜிங்கிற்கு அழுத்தம் அளிக்கின்றன. உண்மையில் வளைந்து கொடுக்கும் தன்மை நிறைந்த "வேலையில் அமர்த்தல், வேலையில் இருந்து நீக்கல்" ("hire and fire") என்ற கொள்கையுடன் நேரடி மோதலுக்கு வருகிறது. இக்கொள்கையோ ஏற்கனவே பல வணிகங்களால் ஏற்றுமதி உற்பத்தி சுழற்சியில் மீறப்பட்டு வருகிறது. இச்சட்டம் முழுமையாக அகற்றப்பட்டு உலகின் தலையாய கடும் உழைப்புக்கூடம் என்ற சீனாவின் தகுதியை காப்பாற்றப்படக்கூடும். பெய்ஜிங் ஏற்கனவே ஜவுளிகள், ஆடைகள் ஏற்றுமதி மீதான வரிவிலக்குகளை 11லிருந்து 13 சதவீதமாக ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தியுள்ளது. கடன்கள் அளிப்பதில் அதன் கட்டுப்பாட்டை தளர்த்தி கொள்ள இருப்பதாகவும், மேலும் ஏற்றுமதி தொழில்துறையை பாதுகாப்பதற்காக யுவானின் உயர்வை குறைக்க தலையிட போவதாகவும் வர்த்தக வங்கிகளுக்கு The Peoples Bank of China தெரிவித்தது. National Development and Reform Commission ல் இருக்கும் மூத்த பொருளாதார வல்லுனர் ஜாங் யான்ஷெங், 2005ல் டாலருக்கு எதிராக யுவான் பிணைக்கப்பட்டிருந்ததை மாற்றிய வகையில் தொடங்கப்பட்ட வலுவான யுவான் கொள்கை ஒரு முடிவிற்கு வருவதாக கூறியுள்ளார்: "கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி மற்றும் பெரும் வர்த்தக உபரி ஆகியவற்றின் அடித்தளத்தில் யுவான் மதிப்பீடு மீதான எதிர்பார்ப்புகள் இடம் பெற்றிருந்தன. சீன பொருளாதாரம் மற்றும் வணிகத்தை எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினை இப்பொழுது மாறியுள்ளது; எனவே தற்பொழுதைய கொள்கை மற்றும் மாற்று விகிதங்கள் மாறும் என்ற எதிர்பார்ப்புக்களும் உள்ளன."சீனாவில் 9 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதம் உலக தரங்களில் மிக உயர்ந்து என்றாலும், இது பெய்ஜிங்கில் சமூக உறுதியை தக்கவைத்து கொள்ளவும், வேலையின்மை பெருகுவதை தடுக்கவும் உள்ள இலக்கான, ஆண்டு ஒன்றுக்கு 10-20 மில்லியன் வேலைகளை தோற்றுவிக்க வேண்டும் என்பதை அடைய போதுமானதாக இல்லை. Caijing என்னும் நிதிய ஏடு ஜூலை 21இல், சாதனை அளவாக 5.59 கல்லூரி பட்டதாரிகள் உருவாக்கப்பட்டது, மே மாதம் சீயாசெனில் ஏற்பட்ட பூகம்பம் உட்பட தொடர்ச்சியான இயற்கை சீற்றங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டது, பொதுவான குறைந்த திறன் பணியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச பொருளாத ஸ்திரமின்மை ஆகியவற்றால் சீனா இந்த ஆண்டு கடுமையான வேலைவாய்ப்பு பிரச்சனைகள் எதிர்கொண்டதாக குறிப்பிட்டது.உயர்ந்து வரும் உற்பத்தித்திறன் வேலைகளை தோற்றுவிக்கும் அளவில் ஒரு சரிவை ஏற்படுத்தி வருவதாக Caijing குறிப்பிட்டுள்ளது. சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 1996-2000 ஆண்டில் ஒரு சதவீதம் குறைவாக இருந்த போதிலும், அந்த காலத்தை விட குறைவாக, 2001-2005லிருந்து, ஆண்டுக்கு சராசரியாக 560,000 புதிய வேலைகள் தோற்றுவிக்கப்பட்டன. புதிய வேலையின் தேவை நகர்ப்புற தொழிலாளர்களுக்கு 50 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் ஒப்பிடுகையில், 2010க்குள் 40 மில்லியன் புதிய வேலைகளை மட்டுமே சீனா தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு நான்கு ஆண்டுகால திட்டத்தின்படி, 2,000க்கும் மேற்பட்ட கடன் நிறைந்த அரசாங்க நிறுவனங்கள் இந்த ஆண்டு திவால் என்று அறிவித்து ஏராளமான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிடும். ஆண்டின் முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய இலாபத்தில் 39 சதவீத சரிவு ஏற்பட்டதை அடுத்து, மிகபெரிய எண்ணெய் நிறுவனமான China National Petroleum Corp (CNPC) தனது மொத்த தொழிலாளர்களில் 5 சதவீதத்தினரை அல்லது 83,500 பணியிடங்களை குறைக்க இருப்பதாக ஜூலையில் அறிவித்தது. இந்த இழப்புக்கள் எழுச்சி பெறும் உலக எண்ணெய் விலைகளுக்கு எதிராக உள்நாட்டு எரிபொருள் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ளன. அங்கு உற்பத்தி நெருக்கடிக்கும் மேலாக, நிதிய ஸ்திரமின்னையின் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் சரிவு சீனாவிற்குள் "சூடனா பணம்" ஊக முறையில் குறிப்பாக, சொத்து சந்தைகளில் வெள்ளப்பெருக்கென கொண்டு வந்துள்ளது. அமெரிக்க நிதிய சந்தைகளில் நம்பிக்கை இல்லாத ஊக வணிகர்கள் யுவான் இன்னும் வலுப்பெறும் என்ற கருத்திலும், பண வீக்க அழுத்தங்கள் சீன மைய வங்கியை வட்டிவிகிதத்தை உயர்த்தை வைக்கும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். நாட்டின் அன்னிய செலாவணி இருப்புக்கள் ஜூன் மாதத்தில் $1.81 டிரில்லியனை அடைந்தது; மார்ச் மாதம் இது 1.53 டாலராக இருந்தது. உயர்வின் பெரும்பகுதி (ஒரு கணிப்பின்படி, முதல் ஐந்து மாதங்களில் 200 டாலர் பில்லியன்) ஊக முதலீட்டை சார்ந்தது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க அரசாங்கம் வீட்டுகடன் சந்தையின் பெரும் நிறுவனங்களான Fannie Mae மற்றும் Freddie Mac இரண்டையும் ஜூலை மாதம் திறந்துவிட்ட பின்னர், அடமான கடன்களை கட்டுக்குள் வைக்குமாறு வங்கிகளுக்கு பெய்ஜிங் குறிப்பனுப்பியது. சீனாவில் வீடுகடன் சந்தை நீர்த்துவிடும் அபாயத்தில் இருப்பதற்கான அச்சங்கள் அங்கு நிலவுகின்றன. ஜூன் மாத இறுதிவாக்கில், சீனாவின் 70 மிக பெரிய நகரங்களில் சராசரி சொத்துமதிப்பு விலை, அதற்கு முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்தது. ஆனால் ஷாங்காய், ஷென்ஜென் மற்றும் பெய்ஜிங் போன்ற பெரிய நகரங்களில் விற்பனை கடுமையாக குறைந்துள்ளது. சமூக விஞ்ஞானத்திற்கான உத்தியோகப்பூர்வ சீன பயிலகத்தின் முன்னணி பொருளாதார வல்லுனர் Yi Xianrong, ஜூலை 23ல் Financial Timesக்கு தெரிவித்ததாவது: "Freedie Mac, Fannie Mac போன்ற தரமான நிறுவனங்களே மோசமான நிலைமையை அடையக்கூடும் என்றால், சீன நிதிய அமைப்புக்களை பற்றி என்ன கூறமுடியும்? அத்தகைய பிரச்சினைகளை இங்கு நாம் காணவில்லை என்றால் அதற்கு காரணம் சொத்துக்கள் விலை தொடர்ந்து ஏற்றம் பெறாததுதான்." அதிகளவிலான ஊகமுறை மற்றும் வங்கி அலுவலர்களுடனான உள்நடவடிக்கை ஆகியவற்றால் சீன அடைமான கடன் அளவுகோல்கள் தளர்ந்துவிட்டன என்று Yi விளக்கினார். "சீனாவில் எவருக்கும் அடைமான கடன் கிடைக்கும், அவர்கள் எப்படி இருந்தாலும் சரி." என்றார். பங்குசந்தை வருமானம் குறைந்து வருவதால், நிலபேரதுறையிலும் ஊக மூலதனம் குவிகிறது. பிற ஆசிய நாடுகளை போல், அமெரிக்க நிதிய அதிர்வுகளை தொடர்ந்து முக்கிய ஷாங்காய் கூட்டு குறியீடு அக்டோபர் மாதம் இருந்த உயர்ந்த நிலையான 6,200 புள்ளிகளில் இருந்து ஜூலை மாதம் 2,600 புள்ளிகளுக்கு மிக கடுமையாக சரிந்தது. சந்தையும் பலவீனமாக இருக்கும் நிலையில் புதிதான பங்குகள் ஏதேனும் வெளியிடப்படுவது விற்கும் நிலைமையை அதிகப்படுத்தும். The China Security Regulator Commission CSR, சீன பாதுகாப்பு பத்திரங்கள் கட்டுப்பாட்டு குழு ஜூலை மாதம் தொடக்க பொது வெளியீட்டில் மூன்றில் ஒரு பங்கை, சந்தையை உறுதிபடுத்துவதற்காக, வேண்டாம் என்று மறுத்துவிட்டது. பங்குசந்தை பற்றி எதிர்மறை கருத்துக்களை கூறவேண்டாம் என்று உள்ளூர் நிதிய நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட CSRC உத்தரவு மூலம் நிதிய ஸ்திரமின்மை பற்றிய வளர்ந்து வரும் கவலைகள் வெளிப்படுகின்றன. "நிதிய நிறுவன நிர்வாகிகள், நிதிய மேலாளர்கள் மற்றும் பிற முக்கிய அலுவலர்கள் தங்கள் உரைகளிலும், வலைபதிவுகள் எழுதும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்; அவை சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும்". என்று அது குறிப்பிட்டது. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடியும் வரை உள்ளூர் நிதியங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் பங்குபத்திர இடைத்தரகு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஸ்திரத்தன்மை அளிப்பதற்கான இந்த முயற்சிகள், சீன ஆட்சி எதிர்கொண்டு வரும் அடிப்படை முரண்பாடுகளை மாற்றிவிடாது. கடந்த 30 ஆண்டுகளாக சீனாவை உலக பொருளாதாரத்துடன் இணைத்த பின்னர், தற்போது சீனாவின் தொழில்துறை உற்பத்தி மற்றும் நிதியியல் முறையில் செல்வாக்கு பெற்றிருக்கும் சர்வதேச மூலத்தின் பாரிய சக்திகளுக்கு முன்னால் பெய்ஜிங் பலவீனமாகவே உள்ளது. |