World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

UK declares its support for Washington's anti-Russian campaign over Georgia

ஜோர்ஜியா மீதான வாஷிங்டனின் ரஷ்ய-எதிர்ப்புபிரச்சாரத்திற்கு இங்கிலாந்து ஆதரவை அறிவிக்கிறது

By Ann Talbot
20 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

ஜோர்ஜியா பற்றிய வாஷிங்டனின் தீவிர ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு இங்கிலாந்து முழு ஆதரவளிப்பதாக பிரிட்டனின் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் அறிவித்துள்ளார்.

தெற்கு ஓசிடியாவை சுற்றியுள்ள நெருக்கடி மீது தங்களின் பிரதிபலிப்பு குறித்து விவாதிப்பதற்காக நேட்டோ அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் ஓர் அவசர கூட்டம் நடந்த நாளன்று Times இதழில் வெளியான ஒரு கட்டுரையில், போர்நிறுத்தம் மற்றும் ஜோர்ஜிய இறையாண்மையை பாதுகாப்பது குறித்து பார்வையிட ஜோர்ஜியாவிற்கு சர்வதேச பார்வையாளர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று மிலிபாண்ட் வலியுறுத்தினார்.

"ஜோர்ஜியா மீதான தாக்குதல் முற்றிலும் நியாயமற்றது. நேட்டோவில் சேர வேண்டுமென்ற அதன் விருப்பத்திற்கான ஆதரவிற்கு நாங்கள் வலுச்சேர்ப்போம்." என்று மிலிபாண்ட் குறிப்பிட்டார்.

"ரஷ்ய டாங்குகள் அண்டை நாட்டில் நுழையும் உறைய வைக்கும் காட்சியை காண, 1968ம் ஆண்டு வசந்தகாலத்தில் பிராக்கில் நசுக்கப்பட்ட மாணவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டிய அவசியமில்லை," என்று பனிப்போர் கால மொழிநடையை நிதானமாக மில்பாண்ட் அக்கட்டுரையில் கையாண்டிருந்தார்.

"ஜோர்ஜிய நெருக்கடி மனிதாபிமான தேவையின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் படை ஆட்சியின் மீதான சட்டத்தின் ஆட்சி என்பதற்கும் மேலானதாக உள்ளது. ரஷ்யா தன் உரிமைகளை நடைமுறைப்படுத்தி, ஆனால் அதேசமயம் பிறர் உரிமைகளையும் மதித்து, ஒரு சட்டங்கள் அடிப்படையிலான சர்வதேச அரசியல் முறையில் அதுவொரு முழுமையான மற்றும் முறையான பங்களிப்பை செய்ய முடியுமா, அவ்வாறு முடியுமென்றால் எவ்வாறு செய்ய முடியும் என்ற அடிப்படை பிரச்சனையை அது எழுப்புகிறது."

"பாரிய ரஷ்ய ஆக்கிரமிப்பு" குறித்து புகார் தெரிவித்த மிலிபாண்ட், "போர்க்குற்றங்கள் பற்றிய எந்த சான்றையும் ரஷ்யா அளிக்கவில்லை என்றும், அவர்களே ஒப்புக்கொண்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை ரஷ்யா மீறிவிட்டது" என்றும் மிலிபாண்ட் தெரிவித்தார்.

"ரஷ்யா மிகவும் அப்பட்டமான முறையில் அண்டை நாட்டின் (மற்றும் ஜனநாயக நாட்டின்) இறைமையாண்மையை மீறியுள்ளது" என்று மிலிபாண்ட் தொடர்ந்து எழுதினார்.

"ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு முன்னர் அதன் அதன் 'அருகே அயல்நாடாக' இருந்ததன் (அல்லது வேறெங்கும் உள்ள நாட்டின்) வரைபடத்தை மாற்றாது; மாற்றவும் முடியாது என்பதே பிரிட்டனின் நிலைப்பாடாகும்." என்று மில்பாண்ட் அறிவித்தார்.

ஜோர்ஜிய மாகாணங்களின் ஒருங்கிணைப்புக்கு நேட்டோ வெளியுறவு மந்திரிகள் தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட மிலிபாண்ட், "உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா நேட்டோவில் உறுப்பு நாடுகளாக்கப்படும் என்று ஏப்ரலில் நேட்டோ உச்சிமாநாட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அதை தொடர்ந்து உறுப்பினர் பதவியை முடிவாக உறுதிப்படுத்துவதற்கான ஒரு வடிவமைக்கப்பட்ட வழிதிட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவ மற்றும் அரசியல்ரீதியான தீவிர ஒத்துழைப்பும் வழங்கப்பட வேண்டும்." என்று வலியுறுத்தினார்.

ஓர் உயர்ந்த அறநெறி தொனியில் மிலிபாண்ட் வெளிபடுத்தியிருந்தார். ஆனால் "பெரியளவிலான ஆக்கிரமிப்பு" என்றும், பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் மாகாண ஒருமைப்பாடை மீறுகிறது என்றும் பிறரை குற்றஞ்சாட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எந்த தகுதியும் இல்லை.

சதாம் ஹூசைன் பேரழிவு ஆயுதங்களை கொண்டிருக்கிறார் என்ற தவறான கருத்தின்கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் எந்த தீர்மானமும் இல்லாமல் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான தாக்குதலுக்கு தொழிற் கட்சி அரசாங்கம் ஆதரவளித்தது. மேலும் இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் அந்நாட்டின் கட்டாய ஆட்சி மாற்றத்திற்கும் அது உதவி செய்தது.

பதினேழு மாதங்களுக்கு முன்னர் தான், செப்டம்பர் 11ம் தேதி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பொறுப்பாகி இருந்தது என்ற போலியான அடித்தளத்தில், அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது பங்கெடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் பிற நேட்டோ நாடுகளும் பின்புலத்தில் இருந்தன என்றாலும் கூட, அது எந்த வகையிலும் நியாயமானதல்ல. நேட்டோ படைகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி கொண்டிருந்தன. தலைநகரில் கூட குறைந்த உள்ளூர் அதரவுடன் இருந்த ஹமித் கர்ஜாய் அரசாங்கம், ஒரு மேற்கத்திய கைப்பாவை அரசாங்கமாக இருக்கிறது.

மிலிபாண்டின் கட்டுரை டைம்ஸில் வெளியான அதே நாளில், பிரிட்டிஷ் சிறப்பு படைகள் ஆப்கானிஸ்தானில் "செயலிழக்க வைக்கும்" மூலோபாயத்தில் பங்கு பெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பழங்குடியினரின் மாகாணங்களில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிரானவர்களை தாக்கியொழிப்பதே அதன் நோக்கமாக இருக்க கூடும்.

ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப் இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாகிஸ்தானில் ஒரு பாதுகாப்பிற்கான ஒடுக்குமுறையை தங்கள் உளவுத்துறை கவனித்திருப்பதாக "மூத்த பாதுகாப்பு வட்டாரங்கள்" என்று அவர்கள் அழைக்கும் நபர்கள் குறிப்பிட்டதாக The Independent குறிப்பிட்டது. பாகிஸ்தானிலும் நேட்டோ பிரச்சாரத்தை விரிவுபடுத்துவதே திட்டமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆக்கிரமிப்பு மற்றும் ஆத்திரமூட்டலின் வரலாறு

1999ல், பொதுமக்கள் மற்றும் நடுநிலை வகித்த தூதரகங்களையும் இலக்காக கொண்ட சேர்பியா மீதான குண்டுவீச்சில் பிரிட்டிஷ் படைகள் பங்கு பெற்றிருந்தன. இந்த ஆண்டிற்கு முன்னதாக, சேர்பியாவில் இருந்து கொசோவோ ஒருதலைபட்சமாக பிரிந்து செல்வதை பிரிட்டன் அங்கீகரித்தது.

சேர்பியாவின் மாகாண ஒருமைப்பாடு குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. மாறாக, தெற்கு ஓடிசியா மற்றும் அப்காஜியாவிலுள்ள ஜோர்ஜிய எதிர்ப்பு பிரிவினைவாதிகளால் தற்போது கோரப்படுவது போன்ற அதே அடித்தளத்தில், கொசோவோ சுதந்திரத்திற்கான அதன் ஆதரவு நியாயப்படுத்தப்பட்டது. அந்த நடவடிக்கையே, தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியாவில் செய்தது போன்று செயல்படுவதற்கான ரஷ்யாவின் முடிவில் பங்கெடுத்துள்ளது.

அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு, ரஷ்யாவின் எல்லைப்புறங்களிலும் மற்றும் முன்னாள் USSR இன் பகுதிகளாக இருந்த பிராந்தியங்களில் பிரிட்டன் தொடர்ந்து தாக்குதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

ஏப்ரலில், ஜோர்ஜியா ஒரு நேட்டோ உறுப்பு நாடாக வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவளித்தது. இந்த நடவடிக்கை மாஸ்கோவுடன் விரோதத்தை வளர்க்கும் என்பதை அறிந்த பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்க தயக்கம் காட்டின. போலாந்தில் ஏவுகணை தடுப்பு தரைதளமும், செக் குடியரசில் எக்ஸ்-பேண்ட் ராடார் தளம் அமைப்பது குறித்த அமெரிக்காவின் திட்டத்திற்கும் பிரிட்டன் ஆதரவளித்தது.

புதனன்று ஜோர்ஜியாவிற்கு செல்லவிருக்கும் மிலிபாண்ட், ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போர்நிறுத்தத்தை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்புவதில் பிரிட்டன் முழு பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.

G8லிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்ற வாஷிங்டனில் கூறப்பட்ட யோசனையை அவர் நிராகரித்தார். ஆனால் மற்ற சக்திகள் அவர்கள் விரும்பும் போது, G7 போல் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். G8ல் இருந்து நீக்கப்படுவதற்கான நடைமுறை உட்குறிப்புகள் அதிகமில்லாமல் இருக்கும் போதினும், அதுவொரு முக்கிய இராஜாங்க நடவடிக்கையாக இருக்கிறது.

மற்ற ஐரோப்பிய சக்திகள் இன்னும் எச்சரிக்கையான அணுகுமுறை வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஜோர்ஜிய நெருக்கடி மீதான "தொடை-நடுங்கி பிரதிபலிப்புகளுக்கு" எதிராக ஜேர்மனிய வெளியுறவு மந்திரி Frank-Walther Steinmeir எச்சரித்தார். மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பொறுப்பற்ற விரோத மனப்பான்மை

மிலிபாண்டை ஜோர்ஜியாவிற்கு அனுப்புவதற்கான முடிவானது, ஜோர்ஜிய பிரச்சனையை பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் தக்க முறையில் எதிர்கொள்ளவில்லை என்று பிரிட்டன் பத்திரிகைகள் குற்றஞ்சாட்டின. "Gord எங்கே?" என்ற ஒரு முதல்பக்க தலைப்பு செய்தியில் Sun பத்திரிகை கேள்வி எழுப்பியது. இதை தொடர்ந்து ஓரிரு நாட்கள் கழித்து, Sun பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியர் Trevor Kavanagh, "ஹலோ? கோர்டன்? இதுவரை உங்களிடமிருந்து தகவல் இல்லையே." என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். Murdochஇன் ஊடக குரு குறிப்பிடும் சர்வதேச நிதியியல் மேற்தட்டின் முக்கிய பிரிவுகளில், பிரெளனின் இந்த செயல்பாடு ஓர் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை தான் இந்த பிரதிபலிப்பு குறிப்பிட்டு காட்டுகிறது.

அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு முறையை ஏற்கும் போலாந்தின் முடிவு, அதை ஓர் இராணுவ இலக்காக உருவாக்கிவிட்டது என்ற ரஷ்யாவின் எச்சரிக்கையை Kavanagh குறிப்பிட்டு காட்டினார்.

"பதட்டத்தின் இந்த வெளிப்பாடு, இந்த கேள்வியை மேலும் விரைவுபடுத்துகிறது," என்று எழுதிய Kavanagh, "கோர்டன் பிரெளன் மற்றும் அவருடைய வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் இருவரும் இந்த பூமியில் எங்கு இருக்கிறார்கள்?" என்று எழுதினார்.

மற்ற சர்வதேச தலைவர்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள், ஆனால் பிரெளன், கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி தலைவர் டேவிட் கேமரானை ஜோர்ஜியா மீது பேச விட்டுள்ளார் என்று Kavanagh தெரிவித்தார். கேமரான் செய்தி ஊடகங்களின் முன்னால் தோன்றிய பின்னர் தான் பிரெளன் தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார். டோனி பிளேயர் இதுபோன்று நடத்து கொண்டிருக்க மாட்டார் என்று Kavanagh சுட்டி காட்டினார்.

கேமரான், ஜனாதிபதி சாகேஷ்விலியைச் சந்திப்பதற்கு டிபிலிசிக்கு பறந்து சென்ற அன்று தான் Kavanaghஇன் கட்டுரை வெளிவந்தது. 1939இல் நாஜி ஜேர்மனி திருப்திபடுத்தப்பட்டதுடன், ஜோர்ஜிய நெருக்கடிக்கு மேற்கின் பிரதிபலிப்பை அவர் ஒப்பிட்டதை அடுத்து அவர் தலைநகருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ரஷ்யர்கள் மீது விசா தடைகள் வேண்டும் என்று வலியுறுத்திய கேமரான், "ரஷ்ய வியாபாரிகள் Selfridgesக்குள் நுழைந்த போதினும், ரஷ்யபடைகள் பிற நாடுகளுக்குள் நுழைய கூடாது" என்றார்.

ரஷ்யர்கள் மீது ஏற்கனவே விசா தடைகள் இருப்பதாக வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் சுட்டி காட்டியது. ஆனால் தொழிலாளர் அரசாங்கத்தின் மீது விளைந்த சேதம் உண்மையாக இருந்தது.

பிரெளன் தலைமையை மிலிபாண்ட் சவால் விடுத்ததை அடுத்து, தொழிலாளர் கட்சியில் உட்பூசல் என்று ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து கேமரான் தலையீடு இருந்தது.

ஜூலை இறுதியில், Guardian இதழின் கட்டுரை ஒன்றில் அரசாங்கம் செயல்படும் முறையை மிலிபாண்ட் குற்றஞ்சாட்டினார். இரண்டு இடைத்தேர்தல்களில் தோற்றிருந்தாலும் கூட, தொழிற் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் என்று மிலிபாண்ட் தெரிவித்தார். ஆனால் பிரெளனின் பெயரை அவர் குறிப்பிடவில்லை; இது அவர் தன்னையே முக்கிய தலைவராக காட்டி கொள்ள முற்படுகிறார் என்ற குறிப்பை உணர்த்துவதாக எடுத்து கொள்ளப்பட்டது.

Guardian கட்டுரையாளர்கள் Polly Toynbee மற்றும் Jackie Ashley இருவரும் மிலிபாண்டிற்கு உடனடியாக ஆதரவளித்தார்கள். ஒருசமயம் பிளேயருடன் போட்டியிட்ட பிரெளனுக்கு Toynbee தீவிர ஆதரவாளராக இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய உற்சாகத்தை மட்டுமே கொண்டிருந்தார்.

மிலிபாண்டின் கட்டுரையை தொடர்ந்து, "அனைத்தும் திடீரென மாறிவிட்டன" என்று அவ்வம்மையார் எழுதினார். " நன்னம்பிக்கையின் வெடிப்பானது ஆழ்ந்த இருட்டறையில் நீண்டகாலம் மாட்டிக்கொண்டவர் கண்கூசும் வெளிச்சத்திற்கு வந்தது போன்று மிகவும் அதிர்ச்சியளித்தது. அந்த ஒருகணத்தில், அவர்களை இந்த ஆழத்திற்கு தள்ளியிருந்த பழைய தலைவருக்கு எல்லாம் முடிந்துவிட்டது. காத்திருந்த ஒவ்வொருவரும் திடீரென, தப்பிப்பதற்கான வாய்ப்பு அங்கு கிடைத்தது."

இன்னும் நேர்மறையாக ஆஷ்லி புகழ்ந்திருந்தார். "ஒரு முன்னணி அரசியலில் அவர் எளிதில் மனநிறைவு செய்ய முடியாத ஒரு மனிதராக இருக்கிறார்" என்று மிலிபாண்ட் பற்றி குறிப்பிட்ட ஆஷ்லி, "சிலவேளைகளில் மிகவும் கடுமையானவராகவும் தோன்றுகிறார்." என்று குறிப்பிட்டார்.

பிரெளனின் பிரச்சனைகள் வாஷிங்டனில் கவனிக்கப்படாமல் இல்லை. The Wall Street இதழின் ஐரோப்பிய பதிப்பில் தலையங்கம் எழுதும் கட்டுரையாளர் Kyle Wingfield ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

"கோடை விடுமுறைக்கு பின்னர் கோர்டன் பிரெளன் வீடு திரும்பும்போது, 10 டெளனிங் தெருவிலுள்ள வீட்டின் பூட்டுக்கள் மாற்றப்பட்டிருப்பதை அவர் பார்க்கலாம்" என்று அந்த கட்டுரை தொடங்கியது.

இந்த உட்பகை பிரச்சனையால், ஜோர்ஜிய நெருக்கடிக்கு பிரதிபலிப்பு காட்டுவதை பிரெளன் அரசாங்கம் தாமதப்படுத்தியது. இதை தன்னுடைய சில ஆதாயத்திற்கு கேமரான் பயன்படுத்தி கொள்ள முடிந்தது. இலண்டன் மற்றும் வாஷிங்டன் இடையிலான வெளியுறவு கொள்கையில் அவர் தன்னைத்தானே நெருங்கிய உறவிற்கான ஒரு சிறந்த நபராக முன்னிறுத்தி வருகிறார்.

ஜோர்ஜியா மீதான சர்வதேச நெருக்கடிக்கான சூழலை உருவாக்குவில் பிரெளன் தனது பங்களிப்பை நிலைநாட்டியுள்ளார். நிதிமந்திரி எனும் முறையில், அவர் அளித்த நிதியுதவிகள் இரண்டு முன்னணிகளின் மீதும் ஒரு யுத்தம் செய்யவும் மற்றும் பிரிட்டன் வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளியாக செயல்படுவதற்கும் அதற்கு வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் பொருளாதாரம் தற்போது பின்னடைவின் விளிம்பில் இருப்பதாலும், சர்வதேச பதட்டங்கள் தீவிரமாகி வருவதாலும் பிரெளன் முக்கிய பாத்திரத்தில் தொடர தகுதியுள்ளவரா என்ற கேள்வி வெளிப்படையாக எழுகிறது.

பிரிட்டன் அரசியலின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை கேமரான் எழுப்பியுள்ளார். திருப்திப்படுத்தல் பற்றிய அவருடைய குறிப்பானது, இரண்டாம் உலக யுத்தத்தின் தொடக்கத்தில் சேம்பர்லின் நிர்வாகத்தின் கொள்கைகள் பற்றியதாகும். இக்கருத்துக்களை அவர் கூறியிருக்கும் சூழல், முந்தைய உலக யுத்தங்களின் முன்னர் இருந்த சர்வதேச நெருக்கடிகளுக்கு ஒத்த அபாயகரமான ஒற்றுமைகளை கொண்டிருப்பதாக காணப்பட்டது. உள்ளடக்கமாக, கேமரான் தன்னைதானே முக்கிய யுத்த தலைவராக காட்டி வருகிறார்.

ஆனால் பிரெளன் இக்கருத்தை ஏற்க தயாராக இல்லை. தன்னுடைய வெளியுறவு செயலாளரை களத்திற்கு அனுப்பி வைப்பது தான் இவரின் பிரதிபலிப்பாக இருக்கிறது. தன்னுடைய திறமையைக் காட்டும் ஆர்வத்தில், மிலிபாண்ட் நேட்டோ உச்சமாநாட்டில் ஒரு மிரட்டும் போக்கை கடைப்பிடித்தார். தங்களில் எவரும் சேம்பர்லியர்கள் இல்லை என்பதை காட்டுவதற்கான பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போக்கு, எப்போதும் இல்லாத வகையில் பொறுப்பற்ற யுத்த விருப்பத்தில் அவர்கள் போட்டியிடுவதால், அதுவே சர்வதேச பதட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான ஒரு காரணியாக இருக்கிறது.