World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Beneath the Olympic glitter, massive police presence highlights China's social tensions

ஒலிம்பிக் சுடரொளியின் கீழ், பாரிய போலீஸ் குவிப்பு சீனாவின் சமூக பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது

By John Chan
21 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

ஒலிம்பிக்கில் ஒரு கவர்ச்சிகரமான, நவீன புதிய சீனாவின் தோற்றத்தை காட்டுவதற்கு பெய்ஜிங் கணிசமான செலவும், முயற்சிகளையும் செய்திருக்கிறது. எவ்வாறிருப்பினும், உண்மை புதைந்து போய்விடவில்லை. விளையாட்டுக்களின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு முறைமைகள், உலகின் மிகப்பெரிய மலிவு கூலி தட்டை நிர்வகித்து வரும் அந்த ஆட்சி எவ்வித அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்க வழக்கமாக பயன்படுத்தும் போலீஸ் அரச முறைகளை எடுத்து காட்டுகிறது.

சுமார் 100,000 எண்ணிக்கையிலான துணை இராணுவ போலீசின் வலுவான பாதுகாப்பு படையுடன், பெருமளவிலான சாதாரண போலீஸூம், மாற்றுடை அணிந்த முகவர்களும் மற்றும் பாதுகாவலர்களும் பெய்ஜிங்கில் மற்றும் நிகழ்ச்சி நடந்த பிற நகரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தனர். உலகிற்கு சீனாவை அடையாளம் காட்டுவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முயற்சிகளுக்கு தொந்தரவளிக்கும் தொழிலாளர்கள், குடியுரிமை போராளிகள் மற்றும் திபெத் அல்லது ஜிங்ஜியாங்கின் பிரிவினைவாதிகளின் போராட்டங்களை தடுக்க அது தீர்மானித்திருந்தது.

மோசமான வசதியற்ற இருப்பிடங்களில் வாழும் மில்லியன்கணக்கான நகர்புற ஏழை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புகைப்படத்திற்கு பொருத்தமற்று இருப்பதால், அவர்களை CCP முன்னிறுத்தி காட்ட விரும்பவில்லை. விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு முன்னதாகவே, தொழிற்சாலைகள், கட்டுமான இடங்கள் மற்றும் மலிவு விலை தங்குமிடங்களை மூடியதன் மூலம் பலரும் தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாள் ஒன்றிற்கு 3 டாலருக்கும் குறைவாக சம்பாதித்தவர்களும், ஒலிம்பிக் அரங்கங்களை அமைத்தவர்களுமான ஒரு மில்லியன் கட்டுமான தொழிலாளர்களால் ஒலிம்பிக் விளையாட்டுக்களை பார்க்க முடியவில்லை. நவீன சீனாவின் மோசமான சமூக உண்மையை மறைக்க, வீடற்றவர்ககள், விலைமாதர்கள் மற்றும் சட்டவிரோதமாக போதைபொருள் பயன்படுத்துபவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான விரும்பத்தகாதவர்கள் பெய்ஜிங்கின் வெளிப்புறம் உள்ள தொழிலாளர் முகாம்களில் பூட்டி வைக்கப்பட்டனர்.

"தொழிலாளர் முகாம் மூலம் மறு கல்வி" என்னும் இழிந்த முறையை சீனா பயன்படுத்தி இருந்ததாக Amnesty International தகவல் அளித்திருந்தது. மே 2006ல் நகரத்தை "சுத்தப்படுத்தும்" உந்துதலாக தொடங்கிய இது, நான்கு ஆண்டுகள் வரை விசாரணையின்றி மக்களை காவலில் வைக்கும் போலீஸ் அதிகாரம் ஆகும். இது உரிமம் பெறாத டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் சிறு வணிகர்கள் (இவர்ககளில் பெரும்பாலானவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள்), அத்துடன் சட்டவிரோதமாக துண்டறிக்கை பிரசுரம் செய்வதில் ஈடுபட்டவர்கள், வாழ்க்கை முறையற்றவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை இலக்காக கொண்டிருந்தது. பெப்ரவரி 2007ல், ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது, போதைப் பொருள் பயன்படுத்துவோர் இல்லாத தெருக்களை ஏற்படுத்த போதைப்பொருள் தடுப்பு சட்டம் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடமாக அதிகரிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் இருந்து வரும் மனுதாரர்களை, வலுக்கட்டாயமாக அவர்களின் சொந்த நகரத்திற்கு அனுப்புவதற்கு முன்னதாக, காவலில் வைக்க பெய்ஜிங்கின் வெளிப்புறங்களில் இரகசிய காவல் மையங்களை அதிகாரிகள் ஏற்படுத்தி இருப்பதாக செப்டம்பர் 2007ல் Amnesty International தகவல்கள் பெற்றது. மனித உரிமைகள் அமைப்பு எழுதியதாவது: "மனுதாரர்கள் மோசான உணவு மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமலும், சுகாதார குறைப்பாட்டுடனும் இந்த இடங்களில் குவிந்திருந்தனர். பாதுகாவலர்கள் கைதிகளை அடிக்கடி அடித்ததாகவும் சில வட்டாரங்கள் குறிப்பிட்டன." என்று குறிப்பிட்டது.

2008 தொடக்கத்திலிருந்து, டியானன்மென் சதுக்கம் மற்றும் Chang'An ஆவின்யூவிலிருந்து வீடற்றவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் உரிமம் பெறாத டாக்சி ஓட்டுனர்களை விரட்ட சீன போலீஸ் முயற்சிகளை அதிகரித்தது. நகரத்தின் தோற்றத்தை மோசமாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக ஒழுங்கமைப்பை குலைக்கும் முயற்சிகள் மீது நடத்தப்பட்டதாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. நடவடிக்கையாளர்களையும் மற்றும் தங்களின் குறைகளை எடுத்து கூற பெய்ஜிங்கிற்கு சென்ற மனுதாரர்களையும் தடுக்க பிற நகரங்கள் மற்றும் மாகாணங்களிலும் கூட கடுமையான முறைமைகள் எடுக்கப்பட்டன.

எதிர்ப்பாளர்களையும் அவர்கள் பொறுத்து கொண்டிருப்பதாக காட்டிக்கொள்ள, விளையாட்டுக்கள் நடக்கும்போது, சீன அதிகாரிகள் பெயரளவிற்கு பெய்ஜிங் பூங்காக்களின் அருகிலிருந்த மூன்று பகுதிகளில் எதிர்ப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என்ற வகையில் ஒதுக்கி வைத்துள்ளனர். இது வெறும் பார்வைக்கு தான் இருந்தது. உண்மையில் எதிர்ப்பு பகுதியை பயன்படுத்த எவரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த பகுதிகளில் ஒன்றில் தனது எதிர்ப்பு போராட்டத்திற்கு விண்ணப்பித்த ஜாங் வீயின் மனு நிராகரிக்கப்பட்டது. Qianmen மாவட்டத்தின் குடியிருப்போருடன் இணைந்து அவர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், ஆகஸ்ட் 6ல் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு பெரிய நில விற்பனை அபிவிருத்தி நிறுவனமான சோஹோ சீனாவால் கட்டுமானத்திற்கான வழியை உருவாக்க சட்டவிரோதமாக அவர்களின் வீடுகளை உடைத்ததை எதிர்த்து இந்த குழு போராட்டம் நடத்தியது.

அரசியல் நடவடிக்கையாளரான Ji Sizun, கூடுதலான ஜனநாயக உரிமைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஊழலுக்கு தடை விதிக்கக்கோரி அழைப்பு விடுப்பதற்கான ஒரு போராட்டத்தை நடத்த விண்ணப்பித்தார். அவரும் கைது செய்யப்பட்டார். மற்ற விண்ணப்பதாரர்களும் துன்புறுத்தப்பட்டனர் அல்லது பெய்ஜிங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஓர் இரகசிய கிறிஸ்துவ திருச்சபையின் நடவடிக்கையாளர் Hua Huiqi, ஆகஸ்ட் 10ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுடன் ஒரு திருச்சபை சேவையில் கலந்து கொள்ள முயன்ற போது நாட்டின் கொடூரமான அரசியல் போலீஸ் அவரை கைது செய்தது. பிற எதிர்ப்பாளர்கள் ஒலிம்பிக்கின் போது மெளனமாக இருப்பதை உறுதி செய்ய அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர் அல்லது பிற மாகாணங்களுக்கு "விடுமுறையில்" செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதன் கொடூரமான பாதுகாப்பு முறைமைகளை நியாயப்படுத்த, விளையாட்டுக்களை தாக்கவிருப்பதாக அச்சுறுத்திய ஜிங்ஜியாங் மாகாணத்திலிருந்த முஸ்லீம் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல்களை பெய்ஜிங் பயன்படுத்திக் கொண்டது. ஆகஸ்ட் 4ம் தேதியிலிருந்து, ஜிங்ஜியாங்கில் சீன போலீஸ் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் மீது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமியவாதிகளால் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த தாக்குதல்களில் போலீஸ்காரர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட 30க்கும் மேலானவர்கள் இறந்துள்ளனர். ஆகஸ்ட் 12ல், கஷ்கரில் உள்ள ஒரு சாலை சோதனைச்சாவடியிலிருந்த மூன்று எல்லையோர காவலர்களை தாக்குதல் நடத்தியவர்கள் கத்தியால் குத்தி சென்றது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியாகும்.

பத்திரிகை சுதந்திரம்

வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு பத்திரிகை சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதான தோற்றத்தை உருவாக்கியிருந்த போதினும், CCP உள்ளூர் ஊடகத்தை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உறுதி கொண்டிருந்தது. சீன பத்திரிகையாளர்களுக்கான 21 அம்ச விதிகள் சர்வதேச ஊடகத்தில் வெளியான போது, கட்டுப்பாடுகளின் தன்மை கடந்த வாரம் வெளிப்பட்டது.

பிரச்சார அதிகாரிகளிடம் முதலில் அனுமதி பெறாமல் விளையாட்டுகளின் போதான எவ்வித அவசர செய்தியையும் வெளியிடக்கூடாது என்று ஊடகம் முகாம்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் ஒலிம்பிக் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய, CCP பல வலைத் தளங்களுக்கு விதித்திருந்த தடையை தற்காலிகமாக அகற்றினர். எவ்வாறிருப்பினும், முடிந்தவரை வெகு சில மக்கள் மட்டும் வலைத் தளங்களை பார்வையிடும் வகையில், எந்த வலைத் தளத்திற்கும் உண்மையை அல்லது வலைத் தள முகவரிகளை அளிக்க கூடாது என்று சீன நிருபர்கள் கூறப்பட்டிருந்தனர்.

பிற உத்தரவுகள் திபெத் போன்ற அரசியல் உணர்வு பிரச்சனை குறித்து கூறப்பட்டிருந்தன. 7வது விதி குறிப்பிட்டதாவது: "திபெத்திய சுதந்திரம் மற்றும் கிழக்கு துர்க்கிஸ்தான் இயக்கங்களுக்கு ஆதரவான எந்தவித பிரசுரிப்பும் அனுமதிக்கப்படாது. நமது பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் பற்றியும் எவ்வித பரபரப்பும் உருவாக்க தேவையில்லை." உணவு பாதுகாப்பு குறித்த கருத்துக்களும் "தடைசெய்யப்பட்டிருந்தன."

ஈரான், வட கொரியா, சூடான், மியான்மர் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளுடனான சீனாவின் முரண்பாடான உறவுகள் குறித்தும் "முடிந்தவரை குறைவாக எழுதுமாறு" சீன நிருபர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். டோஹா சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளில் சீனாவின் பங்களிப்பு குறித்த கருத்துக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இத்தகவலை உறுதிசெய்யும் வகையில், ஆகஸ்ட் 12ல் ஒலிம்பிக்கின் முதன்மை பத்திரிகை மையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆயுதந்தாங்கிய வாகனம் மற்றும் இயந்திர துப்பாக்கிகளுடனான போலீஸ், பத்திரிகையாளர்களிடமிருந்து எரிச்சலான பிரதிபலிப்புகளை உருவாக்கிவிட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் தொடர்பின் சீரழிவிற்கு இட்டு செல்லும் என்று உணர்ந்த பின்னர், அதிகாரிகள் உடனடியாக அந்த வாகனத்தை அகற்றியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதந்தாங்கிய போலீசாரின் புகைப்படங்கள் உலகளவில் பிரசுரிக்கப்பட்டிருந்த போதினும், அங்கு ஒருபோதும் அவர்கள் நிறுத்தப்படவில்லை என்று மறுத்தார்கள்.

ஆகஸ்ட் 13ம் தேதி, முதன்மை ஒலிம்பிக் மைதானத்தின் அருகில் திபெத்திய சுதந்திரத்திற்கு ஆதரவான நடவடிக்கையாளர்களின் ஒரு சிறு குழுவை படமெடுத்து கொண்டிருந்த ஒரு பிரிட்டிஷ் செய்தியாளரான ஜோன் ரேயை பாதுகாப்பு காவலர்கள் தாக்கியதுடன், அவரை சிறிது நேரம் காவலிலும் வைத்திருந்தனர். போலீஸார் தமது சாதனங்களை பறிமுதல் செய்து கொண்டு, பிடித்து தள்ளியதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். "அடையாளங்கள் எதுவுமல்லாத உடையணிந்திருந்த அதிகாரி அவர் கைகளால் சுதந்திர திபெத் குறித்த சைகை செய்தார். பின்னர் திபெத் பற்றிய என் அபிப்ராயம் என்ன என்று அவர் விசாரித்தார்" என்று ரே கூறினார்.

CCTV கட்டிடத்தின் அருகே இருந்த ஒரு விளம்பர பலகை மீது "சுதந்திர திபெத்" பதாகையை வைத்ததற்காக, சுதந்திர திபெத்திற்கான மாணவர்களில் ஐந்து பேர் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தை வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் படமெடுப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயற்சித்தார்கள்.

எந்தவித பிரச்சனையின் சிறு போராட்டங்களுக்கும் கூட சீன அதிகாரிகள் காட்டிய சிடுசிடுப்பு நாட்டின் தீவிர சமூக பதட்டங்களின் அறிகுறியாக இருக்கிறது; அது பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளை மேலும் மோசமாக்க கூடும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளின் வீழ்ச்சி இந்த ஆண்டின் முதல் பாதியில், சீனா முழுவதிலும் உள்ள 67,000 சிறு மற்றும் மத்திய தர நிறுவனங்களை திவாலாக்கிவிட்டதுடன், 20 மில்லியன் மக்களுக்கு வேலை இல்லாமலும் செய்துவிட்டதாக ஆகஸ்டு 3ம் தேதி Guangdong இல் நடந்த ஒரு கூட்டத்தில் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் ஓர் அதிகாரி தெரிவித்தார்.

சமூக அமைதியின்மையைத் தடுக்க, குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக ஏவிவிட, CCP ஆட்சி ஒரு பாரிய போலீஸ் பாதுகாப்பு படையை, துணை இராணுவத்தை மற்றும் இராணுவ துருப்புகளை நம்பியிருக்கிறது. அது பரந்த அதிகாரங்களையும், தீவிர கண்காணிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. துரத்தப்பட்ட பெரும்பான்மையான குழுக்கள் எதுவும், அதாவது சமயம் மற்றும் அரசியல் அமைப்புகள் முதல் சுயாதீனமான தொழிலாளர் குழுக்கள் வரை மற்றும் ஊழல் மற்றும் சமூக ஒழுக்ககேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் கட்டுப்பாட்டுடன் தான் பிரசுரிக்க வேண்டும் என்பதுடன் வெளிநாட்டினருடன் எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது, குறிப்பாக ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள கூடாது என்று தடுத்தது தான் ஒலிம்பிக்சின் பிரச்சனையாக இருந்தது.

"பொதுவிடங்களில் தங்களின் செயல்பாடுகள் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்ட உயர்நுட்ப சாதனங்கள் மூலமாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறோம், அத்துடன் சீனாவின் அநேக பாரம்பரிய மனிதர்கள் மூலமாகவும் நெருக்கமாக பின்தொடரப்படுகிறோம் என்பதை பார்வையாளர்கள் உணர்வது புத்திசாலித்தனமாகும். பொதுவாக ஜனநாயக நாடுகளில் "பிரத்யேகமானது" என்று கருதப்படும் நடவடிக்கைகள் சீனாவில் உத்தியோகபூர்வ கண்காணிப்பிற்கு உட்படுகின்றன என்பதை அவர்கள் அறிய வேண்டும். வலைத் தளங்கள் தணிக்கை செய்யப்படுவது நன்கு அறியப்பட்டிருக்கும் நிலையில், கம்பிவழி தொலைபேசிகள், செல்பேசிகள், தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற மின்னணு தொடர்புகளும் கண்காணிப்பிற்குட்பட்டுள்ளன என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. மேலும் ஓட்டல் அறைகளிலும், அலுவலகங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோபோன்கள் மற்றும் கேமிராக்கள் வாழ்வின் மிக நெருக்கமான நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடும்." என்று ஆகஸ்ட் 7ம் தேதி The South China Morning Post எச்சரித்தது.

மற்றொரு இறுதி கருத்தும் கூறப்பட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி புஷ் மற்றும் பிற மேற்கத்திய நாட்டு தலைவர்கள் மற்றும் பல்வேறு ஊடக விமர்சகர்கள் சீனாவின் ஜனநாயக-எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானவையாகும். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடத்தப்பட்ட கொடூரமான பாதுகாப்பு முறைமைகள், ஜி-8 நாடுகள் கூட்டத்திலிருந்து டாவோஸ் பொருளாதார கூட்டம் வரை உலகெங்கும் நடக்கும் அனைத்து முக்கிய சர்வதேச நிகழ்வுகளிலும் நிரந்தர செயல்பாட்டு முறையாக மாறியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போலித்தனமான முழக்கத்தின் கீழ், ஆழமாகி வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் பதட்டங்களுக்கு பிரதிபலிப்பாக ஆளும் வட்டாரங்கள் போலீஸ் ஆட்சி முறைமைகளை நோக்கி செல்லும் சர்வதேச போக்கு காணப்படுகிறது.

சீனாவின் மகத்தான போலீஸ் வலையமைப்பு, ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது, கூட்டுநிறுவன மேற்தட்டின் பார்வையில் பெய்ஜிங்கின் தோற்றம் சேதப்படாமல் பார்த்து கொண்டதால், சீனாவில் தங்களின் பாரிய பொருளாதார நலன்கள் மற்றும் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உலக வியாபார வட்டாரங்களில் பெரும்பான்மையினர் சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொண்டனர்.