WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்ா
:
பிரான்ஸ்
French media lay out the red carpet for Olivier
Besancenot
ஒலிவியே பெசன்ஸெநோவிற்கு பிரெஞ்சு செய்தி ஊடகம் செங்கம்பள விரிப்பு
By Antoine Lerougetel
27 May 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
2002, 2007ல் ஜனாதிபதி வேட்பாளராக புரட்சி கம்யூனிஸ்ட் கழக (LCR
) வேட்பாளராக நின்ற ஒலிவியே பெசன்ஸெநோவிற்கு பிரெஞ்சு
செய்தி ஊடகம் கொடுக்கும் பரந்த ஆதரவு பிரெஞ்சு அரசியலில் ஆழ்ந்த மாற்றங்களின் அடையாளங்களை காட்டுகிறது.
இதையொட்டி ஆழ்ந்த வினாக்களும் எழுகின்றன.
35 வயது பகுதி நேர தபால் விநியோக ஊழியருக்கு செய்தி ஊடகம் கொடுக்கும்
சாதகமான ஆதரவு புதிது ஒன்றும் அல்ல; ஆனால் மூன்று மணி நேர ஞாயிறு பிரபலங்களின் தொலைக்காட்சி
பேட்டியில் அவர் பங்கு கொண்டதை அடுத்து பெரும் ஆரவார கட்டத்தை அது அடைந்துள்ளது; இந்த நிகழ்வு,
Vivement dimance
பிரான்ஸ் 2 தொலைக்காட்சியில் மிசேல் டுருக்கரால் நடத்தப்பட்டது. அது மே 11ம் தேதி ஒளிபரப்பட்டது; அது
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு கவனமாக முன்பே ஆய்வுசெய்யப்பட்டது.
மே 9ம் தேதி Le
Monde கூறியது: "இது ஒளிபரப்பப்படும் முன்னரே இந்நிகழ்வு
பாதிப்பை கொண்டிருந்தது... இதனைப்பதிவு செய்யும்போதே ஒலிவியே பெசன்ஸெநோ டஜன் கணக்கில் செய்தியாளர்களை
ஈர்த்தார். Nouvel Observateur
ன் முதல் அட்டையில் இது வந்தது; புகழ் பெற்றவர் பற்றிய இதழான
Gala
வில் அரைப்பக்கம் இடம் பெற்து; Net
ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது."
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு தொடர்ச்சியாக ஆதரவைக் கொடுத்துக்
கொண்டிருக்கும் வலதுசாரி தொழில்துறை Serge
Dassault உரிமையாக கொண்டிருக்கும் கன்சர்வேடிவ்
நாளேடான Le Figaro
"பெசன்ஸெநோவிற்கு செங்கம்பள மரியாதை" என்ற தலைப்பில் ஒரு நீண்ட
கட்டுரையை வெளியிட்டது. ஒரு பெரிய மனிதத்தன்மை கொண்ட நபரின் சித்திரத்தை அது கொடுத்துள்ளது:
"எத்தவறும் இழைத்துவிடாதீர்கள். இளைய தோற்றம், எப்பொழுதும் தளர்வற்ற தன்மை ஆகியவற்றிற்குப் பின்னால்
ஒலிவியே பெசன்ஸெநோ ஒரு மிருதுவான குணம் படைத்தவர் அல்லர்; சமரசத்தை நாடக்கூடியவரும் அல்ல."
முரண்பாட்டிற்கு இடமில்லாமல் டுருக்கருடைய (Druckher)
கருத்தையும் பிகாரோ மேற்கோளிட்டது: "ஒலிவியே பெசன்ஸெநோ உண்மையான ஈர்க்கும் தன்மையை
கொண்டிருக்கிறார்; ஒரு ஆளுமை அவரிடம் உள்ளது; அது தற்செயலாக இல்லை; அவருடைய ஆழ்ந்த நேர்மையினால்
பலரும் ஈர்க்கப்படுவர் என்று நான் நினைக்கிறேன்."
முதலாளித்துவ சார்பு செய்தித்தாள் காட்சியின் இறுதியில்
LCR தலைவர்
Claude Sérillon
ஆல் எடுக்கப்பட்ட அரசியல் பேட்டியை கையாண்டவிதத்தை பற்றியும் பாராட்டை தெரிவித்துள்ளது: "ஒலிவர்
பெசன்ஸெநோ நிலைமையை முற்றிலும் தன்வசப்படுத்தியிருந்தார்."
வலதுசாரி வாராந்திர ஏடான
L'Express
சமீபத்தில் Dassault
ஆல் பெரிய பெல்ஜிய பதிப்பக நிறுவனமான Roulata
விற்கு விற்கப்பட்டது, பெசன்ஸெநோவைப் பற்றி நீண்ட கட்டுரை வெளியிட்டது; அதில் முடிவுரையாக கூறப்பட்ட
கணிப்பு: "நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருப்பதில் அவர் உவகை அடைகிறார்; 2009 ஐரோப்பிய தேர்தல்களில்
ஒரு உண்மையான வெற்றி வரும் என்று எதிர்பார்க்கிறார்."
பொதுவாக சோசலிஸ்ட் கட்சியின் வலது கன்னைக்கு நெருக்கமான வாராந்திர
ஏடான Nouvel Observateur,
மே 8 பதிப்பில், ஒரு முழு முக பெசன்ஸெநோவின்
புகைப்படத்தை வெளியிட்டு, "பெசன்ஸெநோ புதிர்" என்ற தலைப்பையும் கொடுத்தது. கீழ்க்கண்ட வியப்பான
மதிப்பீட்டையும் கொடுத்தது:
"35 வயதில் அவர் ஒரு சிறப்பு அந்தஸ்த்தை கொண்டுள்ளார்: முற்றிலும்
எதிர்க்கட்சி தன்மை கொண்டு, முற்றிலும் செல்வாக்கு நிறைந்தவராக உள்ளார்; சார்க்கோசிக்கு எதையும்
கொடுப்பதில்லை; அவருடைய விரோதிகளுக்கும் எதையும் கொடுப்பதில்லை; அமைப்பு முறைகளின் இடது
"கோமாளிகளுக்கும்" எதையும் கொடுக்கவில்லை, "முதலாளித்துவத்தை" முற்றிலும் கண்டனம் செய்கிறார்.
"தொலைக்காட்சியில் அவருடைய திறமை வியப்பில் ஆழ்த்துகிறது.
வேலைநிறுத்தங்கள் செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்களுடன் ஒரே தளத்தில் நிற்கிறார். செய்தி ஊடகம் அவரை
ஒரு இளவரசர் போல் நடத்துகிறது. பிரான்ஸ் 2 ல் ஞாயிறன்று மிசேல் டுருக்கர் (Michel
Drucker) நிகழ்ச்சியில் அவர் பங்கு அரியது. பெசன்ஸெநோ
பாதுகாப்பிற்கு உட்பட்டுள்ளார்: மக்களுடைய உயர்நீதிபதி என்ற அவருடைய நிலை அரசியல் அல்லது தனிப்பட்ட
விமர்சனத்தை தடுத்துநிறுத்துகிறது."
மக்கள் செய்தி ஊடகம் மற்றும் சிராக்-ராப்பரன்-சார்க்கோசி அரசாங்கத்தின்
அழுத்தத்திற்கு எதிராக, சோசலிஸ்ட் கட்சியின் "எதிர்ப்புடன்" இணைந்த நிலையில், பிரெஞ்சு மக்கள் 2005 ல்
ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக "வேண்டாம்" வாக்களிப்பு கொடுத்தபோது,
Liberation, Le Monde, Nouvel Observateur
ஆகியவை கடுமையாக அதற்கு எதிராகப் பிரச்சாரம்
செய்தவர்களை கண்டித்தன என்பது குறிப்பிடத்தக்கது; குறிப்பாக
LCR மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சியை; இவை தொழிலாள வர்க்கத்திடம் பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதாகவும் சோவினிச
கருத்துக்களை படரவைப்பதாகவும் குற்றம் சாட்டின.
பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு மற்றொரு முண்டுகோல் தேவை
பெருவணிகத்தால் நிதியூட்டப்பட்டு, சோசலிசம், கம்யூனிசம், அவற்றின் நவீன
வெளிப்பாடான ட்ரொட்ஸ்கிசம் பற்றி இயல்பான வெறுப்பை சுமந்து, உறுதியாக முதலாளித்துவ முறைக்கு ஆதரவு
கொடுக்கும் தொலைக்காட்சி நிலையங்களும் செய்தித்தாட்களும் "ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" ஆண்டு
இறுதிக்குள் அமைக்கப்படும் என்ற ஒலிவியே பெசன்ஸெநோ மற்றும்
LCR ன்
பிரச்சாரத்தை எவ்வாறு புகழ்ந்தேற்றுகின்றன?
தன்னுடைய வாராந்திர ஏடான
Rouge
ன் மே 15 பதிப்பில் LCR
இந்தக் கேள்வியை கேட்கவில்லை; ஆனால் பெரும் சாமர்த்தியத்துடன் தன்னுடைய வியப்பைக் காட்டுகிறது:
"இத்தகைய பாராட்டுக்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படவில்லை."
உண்மையில், ஒலிவியே பெசன்ஸெநோவிற்கு கொடுக்கப்படும் செங்கம்பள
மரியாதையை புரிந்து கொள்ளுவது கடினம் அல்ல. சார்க்கோசியின் செல்வாக்கின் பொறிவு மற்றும் அவருடைய
ஆட்சி தனிமைப்படுத்தப்படல், சோசலிஸ்ட் கட்சி
மற்றும் இதனுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கட்சிகள்
என்ற முறையில் உருகி விட்டமை ஆகியன அரசியல் உயரடுக்கிற்கு உளைச்சலை கொடுத்துள்ளன. உலகப் போட்டியின்
அழுத்தம், உலக நிதிய நெருக்கடியினால் அதிகமாகிவிட்ட நிலை ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள பிரெஞ்சு
முதலாளித்துவம் மக்களுடைய சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின் மீதான
தாக்குதலை விரைவுபடுத்த வேண்டும். ஆனால் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பெருகிய குவிப்பான
எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
இடதில் இருக்கும் எந்தக் கட்சியும் நம்பகத்தன்மை உடைய எதிர்க்கட்சியாக
செயல்பட்டு மக்களின் பெரும் சமூக இயக்கம் கட்டுப்பாட்டை மீறுவதை தடுக்க முடியாது என்று அது அஞ்சுகிறது.
முதலாளித்துவ வர்க்கத்தின் பணியாட்களாக இப்பொழுது பெரிதும் அடையாளம் காணப்பட்டுள்ள இடதின் சக்திகளின்
இடத்தை எடுப்பதற்கு அதற்கு மற்றொரு முண்டுகோல் தேவைப்படுகிறது.
LCR கடந்த 40 ஆண்டுகளாக
செயல்பட்டு வருகிறது. அதன் முதலாளித்துவ-எதிர்ப்பு அலங்காரச் சொற்கள் இருந்தாலும், அது முதலாளித்துவ
ஆட்சிக்கு ஆபத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை அதேபோல் இந்த வலுவிழந்த "இடது" சக்திகளின் இடத்தை
எடுத்துக் கொள்ள நம்பலாம் என்றும் கருதுகிறது. இதுதான் இப்பணிக்கு அதைத் தயார் செய்யும் வகையில் நடக்கும்
செயல்களுக்கு காரணம்.
சமீபத்திய ஆண்டுகளில் LCR
தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவங்களுடன் செயல்பட்டு, உயர்நிலைப் பள்ளி,
பல்கலைக்கழக மாணவர்கள், மிகவும் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிறைந்த நகர்ப்பகுதியின் இளைஞர்கள், ஆவணமற்ற
தொழிலாளர்கள், போக்குவரத்து மற்றும் ஆற்றல் பயன்பாட்டு தொழிலாளர்கள், பொதுப் பணியாளர்கள்
ஆகியோரின் போராட்டங்களை தனிமைப்படுத்தி அரசியலற்றதாக்க தொழிற்பட்டு வருகின்றன. இந்த
அதிகாரத்துவங்களுக்கு எதிராக எழுச்சி கிளர்ந்தெழுவதை தடுப்பதற்கும் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள்
ஆகியோரின் சுயாதீன நலன்களை பிரதிபலிக்கும் எந்த இயக்கமும் வளர்ச்சி அடைவதைத் தடுக்கவும் செயல்பட்டு
வருகிறது.
Le Monde மே 10
பதிப்பு இப்பிரச்சினையில் மிகத் தெளிவாக உள்ளது. "எதிர்த்தரப்பு கூறுவது கேட்கவில்லை" என்கிறது. ஒரு
கருத்துக்களை ஆராயும் அமைப்பான CSA
இன் Stéphane Rosès
இதே பதிப்பில் பிரான்சில் அரசியல் அதிகாரம் சரிந்து விடுமோ என்ற
அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"சார்க்கோசிசத்தின் வளர்ச்சி சற்றே நம்பகத்தன்மை உடைய மற்ற
மாற்றீடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டது. அதன் பல்வேறு கூறுபாடுகளில், ஒரு நாடு சார்க்கோசிசத்தின் தோல்வி
என்பது முன்னோடியில்லாத நிலைமையை கொண்டுவரக்கூடும் எனப் பயப்படுகிறது. அவருக்கு எதிராக ஒன்றும்
இல்லை; அதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவருடைய ஆலோசகர்களுக்கு அவர் இவ்வாறு கூறுவது போல்
உள்ளது: "என்னைத் தவிர உங்களுக்கு வேறு யார் உள்ளார்கள்?" இந்த நிலைமையின் ஆபத்து, தேசிய
உள்ளத்திற்குள் சார்க்கோசிசத்தின் ஏகபோக பிம்பம் இருக்கிறது; அதே நேரத்தில் இந்த பிம்பம் இதே
மனத்திற்குள் ஆழ்ந்த முறையில் சிதைந்தும் விட்டுள்ளது."
அரசாங்கத்தின் பிற்போக்குக் கொள்கைகளுக்கு எதிரான எழுச்சியின்
செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் பெசன்ஸெநோவின் செல்வாக்கு, அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தை
இந்த அமைப்பின் பழைய முண்டுகோல்களுடன் பிணைத்தும் வைக்கும் அதேவேளை பிரெஞ்சு அரசியல் உயரடுக்கிற்கு
முறையிடுவதற்கு அவரை செய்விக்கிறது. Nouvel
Observateur எழுதுகிறது:
"இன்னும் இளைய வயதில் உள்ள இந்த நபரிடம், நோக்குநிலை
தவறிய பலர் தங்கள அங்கீகரிப்பதாய் அடையாளம் கண்டுணர்கின்றனர்.. இந்த நிதானமான நாட்டில் ஒரு
புரட்சியாளர் பெரும் இடத்தில் இருந்தப்படுவது அடிக்கடி நிகழ்வதில்லை!." இதழ் மேலும் கூறுகிறது: "LCR
தலைவரின் இளமையும் அவர் நடந்து கொள்ளும் முறையும், உடை, பேச்சு இரண்டுமே, அவருக்கு ஒரு தனியிடத்தைக்
கொடுக்கின்றன... இளைஞர்களை ஈர்க்கின்றன.."
இது அவரையும் அவருடைய "முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியையும்"
முதலாளித்துவத்திற்கு மதிப்புடையவை என ஆக்கியுள்ளன; ஏனெனில் இளைஞர்கள், குடியேறியவர்கள், சார்க்கோசியின்
தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர்களின் பரந்த பிரிவினர்,
ஆகியோரிடையே எதிர்ப்பு பெருகிய முறையில் வெடிப்புத் தன்மை கொண்டுவருகிறது; மரபார்ந்த "இடது" மற்றும்
தொழிற்சங்கங்களினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
சார்க்கோசி அரசாங்கத்தின் செல்வாக்கு மற்றும் நம்பகத்தன்மை வரலாற்றளவில்
மிகக் குறைவாக இருக்கும் இடத்தில், பெசன்ஸெநோவை உயர்த்திப் பேசும் அதேவேளை அவை அவருடைய
புரட்சிகர நம்பகத்தன்மையை கட்டாயம் அழித்துவிடக் கூடாது, இதுதான் செய்தி ஊடகம் எதிர்கொண்டுள்ள நயமான
பணியாகும்.
இதை நன்கு அறிந்துள்ள
Nouvel Obsevateur "பெசன்ஸெநோ மூத்த
ட்ரொட்ஸ்கிசவாதிகளிடம் இருந்து நீடித்த பொறுமை என்ற தன்மையை நன்கு ஏற்றுக் கொண்டார். தோல்விகள்
கவலை தருவதில்லை; போராட்டங்கள் மீண்டும் தொடங்கும்." பொய்யான வகையில்
Figaro
வும் இவருடைய இடது கூறுபாடுகளுக்கு கட்டியம் கூறுகிறது: "சமரசத்திற்கு
இடமில்லை என்று கூறும் நபர் இவர்; சிலர் இவரை குறுங்குழுவாதி என்பர்; ஆனால் இவர் எப்பொழுதுமே
சீர்திருத்த வாத இடதுடன் சமரசத்தை நிராகரித்துள்ளார்."
பெசன்ஸெநோ ஒருவர்தான் "இடதிற்கு இடது" என்ற வகையில் ஒரே வேட்பாளராக
2007 ஜனாதிபதி தேர்தல்களில் வாக்குக் கொடுத்து அது 2002 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் தொடர்பை
கொண்டிருந்தது என்று கருத்தாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு,
பிகரோவிற்காக நடத்தப்பட்டது அடுத்த ஞாயிறு ஜனாதிபதி தேர்தல்களுக்கான முதல் சுற்றுத் தேர்வு
நடைபெற்றால் LCR
2007ல் அது பெற்ற வாக்குகளை இரு மடங்காக்கி மற்ற "தீவிர இடது" வேட்பாளர்களைவிட 8 சதவிகிதம்
அதிகம் பெறும் என்று கூறியுள்ளது.
பிகரோ விளக்குகிறது: "இவர் சார்க்கோசி போல் தோற்றம் அளித்து
விடுகிறார்; பெருவணிகத்தின் மிக உறுதியான எதிர்ப்பாளர் என்றும் காட்டிக் கொள்ளுகிறார்."
L'Express
இப்படிக் கூறுகிறது: "உண்மையில் சார்க்கோசி மற்றும் முதலாளிகளின் ஒரு இடது எதிர்ப்பாளர் என்று இவர்
உணரப்படுகிறார்; மற்றவர்களைவிட சற்று கடுமையானவர், அரை அரசியல், அரை தொழிற்சங்க போராளி,
சமூக சின்னம் ஆவார்."
டுருக்கருடைய நிகழ்ச்சியில் பெசன்ஸெநோவிற்கு தடையற்ற முறையில் பார்வையாளர்
வருதல், சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் ஆகியவை கொடுக்கப்பட்டது; அரசியல்வாதி என்று அழைக்கப்பட்ட
ஒரே நபர் Christiane Taubira
தான்; இவர் பிரெஞ்சு காலனியான Guyne
ன் பிரதிநிதி. அவர் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செகோலென் ரோயாலின் வலதுசாரிப்
பிரச்சாரத்தை 2007ல் ஆதரித்திருந்தார். Taubira
நீண்ட காலமாக முதலாளித்துவ PRG
(Left Republican Party)
கட்சியில் இருப்பவர். பெசன்ஸெநோ இவ்வம்மையார் தொடுத்த பெரும் பாராட்டுக்களால் வெட்கம்
அடையவில்லை; அவ்வம்மையார் இவரை "பாராளுமன்ற நிறுவன அமைப்புக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்" என்று
பாராட்டினார்.
ஒரு சர்வதேசியவாதி என்றுகூறிக் கொண்டாலும், பெசன்ஸெநோ
UMP-PS பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கை பற்றி
குறைகூறுவதில்லை: ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் மற்றும் ஈரானில் இராணுவ தலையீடுகள் செய்வதாக கூட்டாக
விடும் அச்சுறுத்தல்கள், புதிய பேரழிவு தரக்கூடிய நவ காலனித்துவவாத அமெரிக்க தலைமையிலான ஈராக்
ஆக்கிரமிப்புகள் பற்றியும் சரி; அதேபோல் பாலஸ்தீனியருக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் லெபனானுக்கு
எதிரான இஸ்ரேலிய தாக்குதல் பற்றியும் சரி விமர்சிப்பதில்லை. ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு படைகள் சற்று
கூட்டப்படுவதை பற்றி வெகு சுருக்கமாக கூறினார்; ஆனால் இது கல்விச் செலவினங்களின் குறைப்பிற்கு எதிரிடையான
தன்மையில் இருப்பதை சுட்டிக் காட்டுவதற்காக கூறப்பட்டது.
இடது சொற்றொடர்களை பற்றிக் கூறும்போது ஆளும் வர்க்கத்தை
புண்படுத்தாவகையில் பெசன்ஸெநோ கருத்துக்களை வெளிப்படுத்துவதை பிகாரோ குறிப்பிட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் அரசியல் பேட்டி ஒன்றை Claude
Sérillon நடத்தியது பற்றிக் குறிப்பிட்ட அது எழுதியது:
"மீண்டும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி என அவர் தோற்றுவிக்க இருப்பதைப்பற்றி வினா
எழுப்பப்பட்டபோது, LCR
ஐ விட அதிக செல்வாக்கு அது பெறக் கூடும் என்றபோது, ஒலிவியே சற்று தெளிவற்ற முறையில்தான்
விடையிறுத்தார்.
இதையொட்டி
Claude Sérillon முடிவுரையாக "இவர் உண்மையான
அரசியல் பகுப்பாய்வு இருக்கும், எடுத்துக்காட்டாக அமைப்புக்களின் ஆய்வை கொண்டிருக்கும் என்பதைவிடவும் ஒரு
மிகப் பெரிய தொழிற்சங்கவாதி, அனைத்து போராட்டங்களிலும் இணைந்து நிற்பவர் எனலாம்;."
"நான் ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பின் செய்தித்தொடர்பாளர்" என்று
Sérillon இடம் கூறுகையில், அவர் ட்ரொட்ஸ்கிச
எதிர்பாளரான சே குவராவிற்கு தன்னுடைய மதிப்பை வெளிப்படுத்தியது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தியதற்கு
சீரிய உதாரணமாக இருந்தது. "எந்த அரசியல் சார்பையும் நான் முற்றிலும் நிராகரிக்கவில்லை: அனைத்து புரட்சி
அனுபவங்களையும் நன்கு இணைத்துக் கொண்டுவிட்டதாக எந்த புரட்சிகர போக்கும் முழுமையாக கூறுமுடியாது. நாம்
சிறந்தவற்றை எடுத்துக் கொள்ளுவோம்."
இவ்விதத்தில் Sérillon,
Taubira,
கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சியின் இடது
Jean-Luc Melenchon அல்லது 2005 பிரச்சாரத்தின்
ஐரோப்பிய அரசியலமைப்பு எதிர்த்தரப்பினர் ஆகியவற்றுடன் கூட்டுக்களை கொள்ளுவரா என வினவப்பட்டதற்கு இவர்
கொடுத்த உத்தரவாதம்: "ஒரு தெளிவான அடிப்படையில் அனைத்து கூட்டுக்களுக்கும் தயார்" என்பதாகும்.
தொழிலாள வர்க்கம் எச்சரிக்கப்பட வேண்டும். அதைப்பொறுத்தவரையில் பிரெஞ்சு
முதலாளித்துவ வர்க்கத்தின் பங்கு பெசன்ஸெநோவை தெளிவாகவே பேணி வளர்ப்பதாகும், அவருடைய
LCR ஐ புண்படுத்தாமல்
விடுவதாகும்; மதிப்பிழந்த உத்தியோகபூர்வ "இடது", தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு மாற்றீடு எனத்
தோன்றுகையில், இவர்களுடைய பணி தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் ஒரு சுயாதீன இயக்கத்தை கொண்டுவராமல்
தடுப்பது ஆகும்; முதலாளித்துவத்தின் முண்ணுடகோல்களுடன் முற்றிலும் முறித்துக் கொண்டுவிடாமல் தடுப்பது ஆகும்; அப்பொழுதுதான்
பேரழிவு விளைவுகள் முதலாளித்துவத்திற்கு தவிர்க்கப்படும்.
ஒரு உதாரணம் இத்தாலி ஆகும்; இங்கு
LCR ன் இத்தாலிய
சரிநிகர் அமைப்பான, Rifondazione
Communista வின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்டு
ரோமனோ ப்ரோடியின் கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெற்ற குறைந்த தீமை என்ற கொள்கையை செயல்படுத்தினர்;
இதையொட்டி இத்தாலிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டன; அமெரிக்க இராணுவத்தளம்
Vicenza வில்
விரிவாக்கம் செய்யப்பட்டது; ஓய்வூதிய உரிமைகளில் வெட்டுக்கள் விழுந்தன.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களுக்குப் போராட இப்படி
மறுத்தது சமீபத்திய தேர்தல்களில் மீண்டும் பெர்லுஸ்கோனி திரும்புவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது;
அதேபோல் பாசிஸ்ட்டுகளுக்கு ஊக்கம் கொடுப்பதிலும் பங்கைக் கொண்டிருந்தது; அவர்கள் இப்பொழுது நிர்வாகிகளின்
அங்கீகாரத்துடன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான இனப்படுகொலை திட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். |