World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSRRussia, China denounce US missile shield at summit meeting ரஷ்யா, சீனா அமெரிக்க ஏவுகணை கேடயத்தை உச்சி மாநாட்டில் கண்டிக்கின்றன By Alex Lantier ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வெடேவ் நேற்று இரு நாட்கள் பயணத்திற்கு பெய்ஜிங்கிற்கு ஒரு நாள் காஜக்ஸ்தானில் இருந்த பின் வந்தார்; மார்ச் மாதம் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வெளிநாடுகளுக்கு வருவது இதுவே முதல் தடவையாகும். அவர் வந்தவுடன் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவுடன் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார்; அதில் அமெரிக்க அணுசக்தி ஏவுகணை கேடயத் திட்டங்கள் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டன. ஆயினும், அமெரிக்க இராணுவம் பற்றிய பயத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒற்றுமை உடனடியாக பொருளாதார விஷயங்களில் கூடுதலான ஒத்துழைப்பை கொண்டுவந்துவிடவில்லை. அமெரிக்கா திட்டமிட்டுள்ள ஏவுகணைக் கேடயம், ஒரு சிக்கல் வாய்ந்த வான்தளங்கள், பாதுகாப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு அமெரிக்கா அல்லது அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது செலுத்தப்படும் அணுவாயுத ஏவுகணைகளை சுட்டுவீழ்த்துவதற்காக குறிப்பிட்ட இடங்களில் நிறுவப்படும். இது அதன் தொடக்க வடிவமைப்புக் கட்டத்தில் உள்ளது; தற்பொழுது ஒரு பாதுகாப்பு முறை என்ற அளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருந்தபோதிலும்கூட, அமெரிக்காவிற்கு எதிரிகள் என்ற திறன் உடையவை ஒரு நாள் அது செயல்படத் தொடங்கிவிடக் கூடிய வாய்ப்பை கட்டாயம் கருத்திற் கொள்ள வேண்டும்; மேலும் அமெரிக்கா கேடயத்தின் பாதுகாப்புத் தளங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிற்கு அருகே உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (எ-டு, போலந்து, செக் குடியரசு) நிறுவத் திட்டமிட்டுள்ளபோது, ஏவுகணைக் கேடயம் அமெரிக்க-ரஷ்ய உறவுகளில் ஒரு பதட்ங்கள் கொடுக்கும் பிரதான மூலகாரணமாகி விட்டது. ஹு மற்றும் மேட்வெடேவின் கூட்டறிக்கை கூறுகிறது; "இரு திறத்தாரும் ஒரு உலக ஏவுகணைப் பாதுகாப்பு முறையை ஏற்படுத்துதல், அத்தகைய முறைகளை உலகில் சில பகுதிகளில் நிலை நிறுத்ததுதல் அல்லது அத்தகைய ஒத்துழைப்பிற்காக திட்டமிடுதல் என்பவை மூலோபாய சமநிலை மற்றும் உறுதிப்பாட்டிற்கு உதவாது என்பதுடன், ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுதப்பெருக்க வழிவகையை தடுத்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச முயற்சிகளையும் தீமைக்குள்ளாக்கும் என்று நினைக்கின்றனர்." ரஷ்யா மற்றும் சீனா காட்டும் கவலைகளின் அடித்தளத்தில் இருக்கும் சில காரணங்கள் மார்ச் 2006 பகுப்பாய்வு ஒன்றில் செல்வாக்கு மிகுந்த அமெரிக்கக் கொள்கை இதழான Foreign Affiars ல் குறிப்பிடப்பட்டிருந்தது. "அமெரிக்க அணுவாயுத மேலாதிக்கத்தின் எழுச்சி" என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றில் Keir Lieber, Daryl Press இருவரும் ரஷ்ய அணுசக்தி ஆயுதத் திறன் சோவியத் ஒன்றிய சரிவிற்குப்பின் குறைந்துள்ள நிலையிலும், ஒப்புமையில் சீனாவின் அணுவாயுதங்கள் மிகப் பழைய தன்மையில் இருப்பதாலும், அமெரிக்க இராணுவத் திட்டமிடுபவர்கள் இப்பொழுது இரு சக்திகளுக்கு எதிரான அணுவாயுதப் போர் நடத்தி வெற்றி பெறலாம் என்றும், அமெரிக்க அணுசக்தி ஆயுதக்கிடங்கை பயன்படுத்தி அவர்களுடைய அணுவாயுதங்கள் முழுவதையும் அகற்றிவிடலாம் என்றும் அதன் பின் அமெரிக்க அணுசக்தி ஆயுதங்கள் இருக்கும் நிலையில் ரஷ்யாவும் சீனாவும் சரணடையும் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைத்தியக்கார, கொடூரமான வகையில் உலகத்தை பெரும் படுகொலை செய்வது என்பது உயர்மட்ட அமெரிக்க மூலோபாயக் கொள்கை இயற்றுபவர்களால் நினைக்கப்படுகிறது; அமெரிக்க அணுவாயுத ஏவுகணை கேடயம் இதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கக்கூடும். லீபரும் பிரஸ்ஸும் எழுதினர்: "அமெரிக்கா நம்பத்தக்குந்த வகையில் நிறுவக்கூடிய இத்தகைய ஏவுகணை பாதுகாப்பு முறை பிரதானமாக, ஒரு தாக்குதல் பின்னணியில் மிகவும் பயனுடையதாக இருக்கும்; தற்காப்பு பின்னணியில் அல்ல- அமெரிக்கா முதலில் தாக்கும் திறனுக்கு இணைக்கப்பட்டது என்றவகையில் இது பெரும் உதவியளிக்கும்; தனித்த கேடயம் என்பதனால் அல்ல. அமெரிக்கா ரஷ்யாவிற்கு (அல்லது சீனாவிற்கு) எதிராக அணுவாயுதத் தாக்குதலை நடத்தினால், இலக்கு வைக்கப்பட்ட நாடு மிகச் சிறிய ஆயுதத்தைத்தான் மிச்சமாக கொண்டிருக்கும்; அதுவும் ஏதேனும் மிஞ்சினால். அந்தக் கட்டத்தில் ஒப்புமையில் நிதானமான, ஏன் திறமையற்ற ஏவுகணைப் பாதுகாப்பு முறைகூட எந்த பதிலடி தாக்குதல்களுக்கு எதிராக காக்கும் திறனைக் கொண்டிருக்கும்; ஏனெனில் பேரழிவிற்கு உட்பட்ட விரோதியிடம் அதிகம் ஆயுதங்கள் இராது; சூழ்ச்சிப் பொறிகளும் இராது." மத்திய கிழக்கை கட்டுப்படுத்தும், இராணுவ அளவில் வெற்றிபெற அமெரிக்கா முயற்சி செய்கையில் ஏற்பட்டுள்ள சங்கடத்தால் வெளிவந்துள்ள அழுத்தங்களுக்கு மத்தியில், இத்தகைய திட்டங்கள் சர்வதேச அரசியலில் ஒரு பயங்கரமான பொருத்தத்தை கொண்டுள்ளன. 2001 ல் ரஷ்யாவும் சீனாவும் Shanghai Cooperation Organization (SCO) என்னும் அமைப்பை ரஷ்யா, சீனா, மத்திய ஆசிய நாடுகளான காஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், டாஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்படுத்தின. செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் பெறப்பட்ட தளங்களில் பெரும்பாலான அமெரிக்க தளங்களை SCO 2005 ல் மத்திய ஆசியாவில் இருந்து அகற்றுவதில் வெற்றி அடைந்தது. 2007ல் அந்த அமைப்பு கூட்டு இராணுவப் பயிற்சிகளை வட மேற்கு சீனாவிலும் அண்டை ரஷ்ய பகுதியிலும் நடத்தியது.அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடத்தும் போர் அச்சுறுத்தல் பிரச்சாரங்களும் இத்தகைய அழுத்தங்களை பெருக்க முக்கிய பங்கை கொண்டுள்ளன. அக்டோபர் 2007ல் அப்பொழுது ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த விளாடிமீர் புட்டின் ஈரானுக்கு பயணித்து, ஈரான் மற்றும் காஸ்பியன் கடல் பகுதியில் "பலப்பிரயோகத்தை பயன்படுத்தலை நிராகரித்தது மட்டும் இல்லாமல், பலப்பிரயோகம் ஒரு சாத்தியம் என்று குறிப்பிடுவதை கூட" நிராகரித்தார். அமெரிக்க ஜனாதிபதி புஷ் இதற்கு விடையிறுக்கையில் ஈரானிடம் இருப்பதாக கூறப்படும் அணுசக்தி ஆயுதத் திட்டங்கள் "மூன்றாம் உலகப் போரை" ஏற்படுத்தக் கூடும் என்று அச்சுறுத்தினார். சீனா மற்றும் ரஷ்யா இரண்டும் அமெரிக்க இராணுவக் கொள்கைகள் பற்றிக் கொண்டிருக்கும் பொது நிலைப்பாடு பொருளாதார மற்றும் வணிக விஷயங்களுக்கு நீடிக்கவில்லை. மேட்வேடேவின் பயணத்திற்கு முன் நடந்த ஏற்பாடுகளில் ரஷ்ய அதிகாரிகள் வணிக
உடன்பாடுகள் செய்யப்படக்கூடும் என்ற குறிப்பைக் காட்டினர். ரஷ்ய அரசாங்க அணுசக்தி நிறுவனமான
Roastom ன் தலைமை
நிர்வாக அதிகாரியான Sergei Kiriyenko
ரஷ்யா ஒரு பில்லியன் யூரேனிய அடர்த்தி ஆலை ஒன்றை விற்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடும் என்று கூறியிருந்தார்.
மேட்வெடேவ் சீன அரசாங்கச் செய்தி ஊடகத்திடம் மே 22 அன்று ரஷ்ய எண்ணெ நிறுவனம்
Rosneft மற்றும் சீன
தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் இரண்டும் திட்டமிடப்பட்டுள்ள கிழக்கு சைபீரிய பசிபிக் பெருங்கடல் எண்ணெய்
குழாய்த்திட்டத்தின் மூலம் அனுப்பப்படும் கச்சா எண்ணெயின் விலை பற்றி ஒரு "அடிப்படை உடன்பாடு" ஒன்றை
அடைந்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் வரை எந்த முக்கிய பொருளாதார முயற்சிகளும்
உச்சி மாநாட்டில் அறிவிக்கப்படவில்லை. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கும் வணிக உறவுகள் விரைவாக சமீப ஆண்டுகளில் பெருகியுள்ளன; இதற்குக் காரணம் ரஷ்யாவில் எண்ணெய் வளம் பெருகிய நிலையில், அது மிக அதிகமான இறக்குமதிகளை சீனாவில் இருந்து பெறுகிறது; குறிப்பாக நடுத்தர தொழில்நுட்ப பொருட்களான கார்கள், நுகர்வோர் மின்னணுப்பொருட்கள் போன்றவை. வணிகம் 2006 ல் இருந்த $33.4 பில்லியனில் இருந்து 2007ம் ஆண்டு $48 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது; 1996ல் இது $7 பில்லியனாக இருந்தது. ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி பெட்ரோகெமிக்கல் பொருட்களும் உயர்தர மரங்களும் ஆகும். சீனாவும் ரஷ்யாவும் வணிகத்தை $80 பில்லியனுக்கு 2010க்குகள் உயர்த்த நம்பிக்கை கொண்டுள்ளன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு மத்தியில் சோவியத் தொழில்துறை பொறிந்தபின் ஏற்பட்ட ரஷ்யாவின் பொருளாதார பலவீனத்தைப் பிரதிபலிக்கும் ரஷ்யாவின் சீனாவுடனான வணிக பற்றாக்குறை $8.8 பில்லியனை அடைந்துள்ளது. இந்த பற்றாக்குறை அரசியல் அழுத்தங்கள் கணிசமாக வருவதற்கு வகை செய்யும். ரஷ்ய விமானத்துறை, வான்வழி தொழில்நுட்ப பொருட்களை வாங்குமாறு சீனாவிற்கு மேட்வேடேவ் அழுத்தம் கொடுத்துக் கூறினார்: "எங்கள் பணி மொத்த வணிகத்தை ரஷ்யா, சீனாவிற்கு இடையே அதிகம் ஆக்குவது மட்டும் அல்ல -- மிக நேர்த்தியான முறையில் அது செய்யப்பட வேண்டும் என்பதும்தான்." இதுகாறும் ஆற்றல் குழாய்த்திட்ட உடன்பாடுகள் பெருமளவில் ரஷ்யா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிற்காக அதிக விலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் தடைபட்டு நிற்கின்றன. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே மத்திய ஆசியாவில் குறிப்பாக காஜக்ஸ்தான், துர்க்மேனிஸ்மான் ஆகியவற்றில் உள்ள பெட்ரோகெமிக்கல் இருப்புக்கள் பற்றி போட்டி வளர்ந்துள்ளது; அங்கு இந்த இருப்புக்கள் மிகப் பெரிய அளவில் உள்ளன. சீனா இந்த நாடுகளில் இருந்து நேரடியாக ஆற்றலை வாங்குவதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது; இவை முன்பு தங்கள் பொருட்களை பிரத்தியேகமாக ரஷ்யா மூலம்தான் ஏற்றுமதி செய்துவந்தன -- பழைய சோவியத் குழாய்த்திட்டம் மூலம். 2003 ல் காஜக்ஸ்தானில் இருந்து சீனாவிற்கு செல்லும் ஒரு குழாய்த்திட்டம் அமைக்கப்பட்டது; ஆகஸ்ட் 2007 ல் ஒரு துருக்மேனிஸ்தான்-சீனா குழாய்த்திட்ட கட்டமைப்பு தொடங்கியது. பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முதல் தினம், மேட்வேடெவ் ஒரு நாள் பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி Nursultan Nazarbayev உடன் புதிய காஜக் தலைநகரான ஆஸ்டானாவிற்கு சென்றிருந்தார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதற்கு பதிலாக நேட்டோவில் இருந்து வாங்கலாம் என்ற கருத்தை தெரிவித்திருந்த Nazarbayev, மேடெவேடெவிடம் இருந்து சற்று பேரம் பேசிக் கூடுதலாக ஏதேனும் பெறலாம் என்ற விதத்தில் நடந்து கொண்டார். Nazarbayeve தன்னுடைய மரபார்ந்த நட்புநாட்டிடம் முறித்துக் கொள்ளும் விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது; ஆனால் ரஷ்யா வலுவான பொருளாதார ஊக்கங்கள் கொடுக்காவிட்டால் வேறு பரிசீலனை இருக்கும் என்று அவர் கூறினார். மேலும், "எங்கள் குழாய்த்திட்டங்கள் மூலம் ரஷ்யாவை கடந்து செல்கிறோம் என்று கூறப்படுகிறது. அத்தகைய திட்டங்கள் ஏதும் எங்களுக்கு கிடையாது... ஒவ்வொரு நாடும் அதன் நலன்களையும் குழாய்த்திட்டங்களின் நலன்களையும் நன்கு பராமரிக்கவேண்டும்." என்றார் அவர். இரண்டு ஜனாதிபதிகளும் ரஷ்யாவின் GLONASS உலகந்தழுவிய இயக்கு முறையை கூட்டாகப் பயன்படுத்துவது பற்றி விவாதித்தனர்; அதேபோல் இராசயன ஆலைகள் கட்டமைப்பில் ஒத்துழைப்பு பற்றியும் விவாதித்தனர்.ரஷ்ய நிதிய ஏடான Kommersant கருத்தின்படி, Nazarbayev ரஷ்ய ஆதரவுடைய Burgas-Alexandroupoli குழாய்த்திட்டத்தை பால்கன்ஸ் பகுதிகளில் கட்டமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இக்குழாய்த்திட்டம் Bosphorus, Dardanelles என்னும் குறுகிய நீர்ப்பாதைகளை சுற்றிக் கொண்டு கருங்கடல், மத்தியதரக் கடல்களை இணைக்கும்; ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வது எளிதாகும். அமெரிக்கா ஆதரவுத் திட்டமான Albanian Macedonian Bulgarian Oil Corporation (AMBO) குழாய்த்திட்டத்துடன் இது போட்டியிடும். |