World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்ா
:
பிரான்ஸ் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு "முடியாது" என பிரெஞ்சு தொழிலாளர்கள் எதிர்ப்பு By Pierre Mabut and a WSWS reporting team முழு ஒய்வூதியம் பெறுவதற்கு தொழிலாளர்களுக்கான பங்களிப்பை 40 ல் இருந்து 41 ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மே 22ம் தேதி பிரான்ஸ் முழுவதும் பெரும் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் நடைபெற்றன. இதன் விளைவு ஓய்வுபெற்றோரின் வருமானங்களில் தீவிர சரிவு ஏற்படும். குறைந்த அரசு ஓய்வூதியத் தொகை தற்போது நபருக்கு மாதத்திற்கு 628 யூரோக்கள் என்று உள்ளது (ஒரு தம்பதிக்கு 1,127 யூரோக்கள் ஆகும்.) . CGT, பிரான்ஸ் முழுவதும் 150 நகரங்களிலும் பேரூர்களிலும் 700,000 எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று கூறியுள்ளது; (போலீசார் 300,000 என்று மதிப்பிட்டுள்ளனர்). பாரிசில் 70,000 தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஆவணமற்ற குடியேறிய தொழிலாளர்கள் நடைமுறையில் வேலை செய்யும் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நாந்தில் 25,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓய்வூதியங்களை காக்க அணிவகுத்தனர்; லியோனில் 12,000 பேரும் போர்தோவில் 25,000 பேரும் கூடினர். மார்சேயில் மிகப் பெரிய எதிர்ப்புக்களில் ஒன்று வெளிவந்தது; 60,000 பேர் அணிதிரண்டு அங்கு ஒய்வூதியங்கள் சீர்திருத்ததை எதிர்த்தும் துறைமுக வசதிகள் தனியார் மயமாக்கப்படுதலை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தாலும், அவை அன்று நேரடியான வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கவில்லை. இருந்த போதிலும்கூட, ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறுவதற்கான வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புக்கள் ஆகியவற்றால் பொருளாதாரத்தின் பல பகுதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயின. தேசிய இரயில்வேக்களில் (SNCF) பாதி இரயில்கள் இரத்து செய்யப்பட்டன; வேலைநிறுத்தத்தில் 24.9 சதவீத தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அஞ்சல் துறை தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த ஆதரவு 11.33 சதவீதமாகவும், பிரான்ஸ் டெலிகாம்மில் 19.5 வீதமாகவும் EDF மின்வசதியில் 20.8 சதவீதம் என்றும், எரிவாயுத் தொழிலாளர்களிடையே 16.2 வீதம் எனவும் இருந்தது. உள்ளூராட்சி அரசாங்கம், மருத்துவ மனை மற்றும் அரச ஊழியர்கள் 8 சதவீதம் பங்கு பெற்றிருந்தனர். மே 15 அன்று வேலைக் குறைப்புக்களுக்காக நடந்த வேலைநிறுத்தத்தில் 34 சதவீதத்தினர் பங்கு பெற்றதுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்களில் 7.5 சதவீதத்தினர்தான் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் இவ்வியக்கத்தை கட்டுப்படுத்தவேண்டி வேலைப்பிரச்சனையையும் ஓய்வூதிய பிரச்சனைகளையும் தனித்தனியாக வேண்டுமென்றே பிரித்தன மற்றும் அவை சமூக நலன்களை அழிக்கும் அரசாங்கத்தின் உரிமைக்கு அரசியல் ரீதியாக சவால் விடுவதை தடுத்தன. பொதுமக்களிடையே ஓய்வூதியத்தை காப்பதற்காக நடந்த வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு சமீபத்திய CSA கருத்துக் கணிப்பில் வெளிவந்தது; 58 சதவீதம் ஆதரவையும் 24 சதவீதம் எதிர்ப்பையும் கொடுத்தனர். இந்த வாரம் தொழிலாளர்கள் பங்கு பெற்றது 2003 ல் முதல் ஓய்வூதிய எதிர்ப்புக்களில் இருந்த எண்ணிக்கையை விடக் கூடுதல் ஆகும்; அப்பொழுது 500,000 பேர் பங்கு பெற்றனர். அந்த இயக்கம் CGT,CFDT கல்வித் துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் FSU (United Federation of Unitiary Unions), ஆகியனவற்றால் நனவாக காட்டிக்கொடுக்கப்பட்டது. அவை அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை 37.5 ஆண்டுகளில் இருந்து 40 ஆண்டுகள் என உயர்த்தலாம் என்று ஒப்புக் கொண்டன. இது பொதுப் பணித்துறை ஊழியர்களை தனியார் துறையுடன் சமமாக கொண்டுவந்த பெரும் பின்னடைவு ஆகும். பாரிசில் WSWS குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் தன்னெழுச்சியாக பங்கு கொண்டதையும் அரசாங்கத்தின் சமூக செலவினக் குறைப்புக்களுக்கு எதிரான பெரும் சீற்றத்தையும் கண்டது. இதில் பங்கு பெற்றவர்கள் மாணவர்கள், இரயில்வே தொழிலாளர்கள், பல ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆவணமற்ற தொழிலாளர்களில் பல பிரிவினர் என்று இருந்தனர். பாரிசில் 3ம் வட்டாரத்தில் இருக்கும் CGT கட்டிடத்தை ஆக்கிரமித்தவர்கள், வசிக்கும் உரிமைகளுக்கான தங்கள் விண்ணப்பங்களை தொழிற்சங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அதிக ஆதரவைப் பெற்றது. பல பொதுமக்களும் அவர்களுடைய மனுக்களில் கையெழுத்திட்டு பண உதவியும் அளித்தனர். மே 22 ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கங்கள் எந்தவித தொடர்ச்சியான நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை; அரசாங்கம் தன் கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்ற நல்லெண்ணத்தை மட்டும் நம்பியிருந்தன. CGT கூறியது: "பந்து இப்பொழுது அரசாங்கத்தின் பக்கம்தான் உள்ளது." Force Ouvrière இன் பொதுச் செயலாளர் Jean-Clause Mailly அரசாங்கம் எதிர்ப்புக்கு தக்க விடை அளிக்கவில்லை என்றால் "ஜனநாயகத்தை மறுப்பதற்கு" ஒப்பாகும் என்றார். CFDT தொழிற்சங்க தலைவர் Francois Chérèque கூறினார்: "இன்றைய ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியாகும். இந்த வகை சக்திகளின் உறவுகளுக்கு பின்னர், அரசாங்கம் எங்களை வரவேற்க கடப்பாடுடையதாக இருக்கும் நாம் எமது முன்மொழிவுகளை மேசையில் வைப்போம்." ஆனால் தொழில்துறை மந்திரி Xavier Bertrand உடனடியாக அரசாங்கம் 41 ஆண்டுகள் பணிகாலக் கட்டாயம் பற்றி வலியுறுத்தினார். இத்திட்டம் "சீரானது" என்று வலியுறுத்திய அவர் அரசாங்கத்தின் பங்கு "எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை எண்ணுவது அல்ல என்றும் அனைத்து பிரெஞ்சு மக்களின் ஓய்வூதியங்களையும் காப்பது ஆகும்" என்றார். "சமூகப் பங்காளிகளுடன் (முதலாளிகள், தொழிற்சங்கங்கள்) பிரச்சினையின் மையம், முன்னுரிமைகளின் முன்னுரிமை முதிய தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தல், நிறுவனங்கள் முதிய தொழிலாளர்களை எப்படி வேலையில் இருத்திக் கொள்ள வேண்டும் என அவை கூறுவதுடன் உடன்பாடு ஆகும்." என்று பெத்ரோன் அறிவித்தார். இதன் விளைவாக, முதிய தொழிலாளர்களை தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ளுவதற்கு ஈடாக எத்தகைய மாறுதல்களை தொழிலாளர்கள் ஓய்வூதியங்களில் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் இடைவிடாமல் பேச்சு வார்த்தைகளில் இருந்து வருகின்றன. தற்பொழுது 55 க்கும் 64 வயதிற்கும் உட்பட்டவர்கள் 38.1 சதவீத தொழிலாளர்கள் வேலையில் உள்ளனர் ஐரோப்பிய ஒன்றியம் இந்த எண்ணிக்கையை 2010 அளவில் 50 சதவீதத்திற்கு ஐரோப்பா முழுவதும் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறது. 41 ஆண்டுகளுக்கு தொழிற்சங்கத்தின் ஒப்புதலை பெறுவதற்கு "பேச்சுவார்த்தைக்கு" தயாரிக்க, தொழில்துறை மந்திரி அறிவிக்கும் மற்றொரு சலுகை, ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் 25 சதவிகித உயர்வும், மரணமடைந்து விட்ட ஓய்வூதிய தொழிலாளரின் பணம் உயிரோடு இருக்கும் கணவன்/மனைவிக்கு அளிக்கப்படுதலில் 54 ல் இருந்து 60 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்பதாகும். முதலாளிகள் அமைப்பான MEDEF இன் தலைவர் Laurence Parisot அரசாங்கம் எப்படிச் சென்று கொண்டிருக்கிறது என்பது பற்றி பெருவணிகம் அறிந்துள்ளதை குறிப்பாகக் காட்டினார். எதிர்ப்புக்கள் தினத்தன்று நடத்திய உரை ஒன்றில் இவ்வம்மையார் சட்டபூர்வு ஓய்வு பெறும் வயது தற்போதைய 60ல் இருந்து 63.5 என உயர்த்தப்பட வேண்டும் என்று கூறி தொழிலாளர்களின் சீற்றத்திற்கு உள்ளானார். அப்பொழுதுதான் 41 ஆண்டுகள் பணிக்காலம் என்பதுடன் ஓய்வூதிய நிதிகள் செவ்வனே கொடுக்கப்படுவதற்கு "ஒரே வழியாகும்" என்றும் அவர் கூறினார். தொழிற்சங்கங்கள் 2003ல் 37.5 பணி ஆண்டுகள் என்பதை கைவிட்ட அளவிலேயே இக் கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்திருந்தனர்; மேலும் சிறப்பு ஓய்வூதிய திட்டம் தகர்க்கப்படுவதற்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த அதைக் காட்டிக் கொடுக்கவும் செய்தன. தொழிற்சங்கங்கள் சார்க்கோசி அரசாங்கத்துடன் எப்படி வேலைகள், கல்வி, வாங்கும் திறன் பற்றி மக்கள் கொண்டுள்ள சீற்றம் திகைப்பு ஆகியவற்றை சமாளிக்கலாம் என்பது பற்றி வாராந்திரப் பேச்சுக்கள் நடத்திவருகையில், பலரும் முன்னேற்றப் பாதை பேசப்படுவது பற்றியும் வினா எழுப்பியுள்ளனர். ஸ்ட்ராஸ்பேர்க்கில் இருக்கும் உள்ளூர் சிஜிடி பிரதிநிதியான Jacky Wagner குறிப்பிட்டார்: "கடந்த திரட்டைவிட கூடுதலான வலிமை இருக்கும் என நாங்கள் கூறினோம்; அது பற்றி எனக்குத் திருப்திதான்...ஆனால் மீண்டும் மீண்டும் திரண்டுவருதல் முக்கியம் என்று நினைக்கிறேன்; ஏனெனில் சார்க்கோசி தெருக்களில் என்ன கூறப்படுகிறது என்பது பற்றி கேட்கக்கூடியவராக தெரியவில்லை. தொழிலாளர்கள் பொதுவாக போதுமான வேலைநிறுத்தம் செய்துவிட்டனர்; இப்பகுதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது." 22 வயதான ஸ்டீபன் SNCF ல் செப்டம்பரில் இருந்து வேலை பார்த்து வருகிறார். தொழலாளர்கள்மீது கூடுதலான வேலைகள் சுமத்தப்படுகின்றன என்றும் பணி நிலைமைகள் சரிந்து கொண்டுவருவதாகவும் அவர் கூறினார். "எங்களுடைய பாட்டனார்கள் எதற்குப் பாடுபட்டனரோ அதற்காக நாங்கள் மீண்டும் போராட வேண்டி உள்ளது. எனவேதான் நிறைய மக்கள் தெருக்களுக்கு வந்துவிட்டனர். முழு ஓய்வூதியங்கள் பெற 37.5 ஆண்டுகள் போதும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்; அனைவருக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும். பொருளாதார வல்லுனர்கள் இது இயலும் என்கின்றனர். அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்தால் அரசாங்கத்தைப் பின்வாங்க வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்." "கடந்த ஆண்டு 10 நாட்கள் வேலைநிறுத்தத்தின்போது நாங்கள் தக்க உந்துதல் பெற்றிருந்தோம். இப்பொழுநு அவர்கள் நாங்கள் பின் வாங்க வேண்டும் என்கின்றனர்; நாங்கள் அதை விரும்பவில்லை. அரசாங்கத்தை வீழ்த்த நாங்கள் இங்கு கூடவில்லை. நாங்கள் ஒன்றும் எப்பொழுதும் பயன்படும் கறவை மாடுகள் அல்ல என்பதை அரசாங்கத்திற்கு உணர்த்த விரும்புகிறோம். ஐரோப்பா முழுவதும் ஒரு பொது அணியை நாங்கள் அமைக்க விரும்புகிறோம். CGT மற்ற தொழிற்சங்கங்கள் ஒரு பொது ஐரோப்பிய ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். வீடுகள் இல்லாதவர்கள், ஆவணம் அற்றவர்களுடைய நிலைமையை அவர்கள் காண வேண்டும். அது உங்களுக்கு உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தொழிற்சங்கங்கள் அவர்களைக் காப்பாற்றத்தான் உள்ளன. தற்பொழுது எங்களுக்கு என்று ஒரு கட்சி இல்லை. உண்மையான இடது வேட்பாளர் வெளிப்படவில்லை. அவர்களிடம் திட்டம் ஏதும் இல்லை." 54 வயதான Jean, SNCF க்காக Seine-Saint-Denis ல் வேலை பார்க்கிறார். விரைவில் அவர் ஓய்வுபெற உள்ளார். நிலமை மோசமாகிக் கொண்டிருப்பதாகவும் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் WSWS இடம் கூறினார். "நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். 2007 வேலைநிறுத்தம் ஒரு பெரும் தோல்வியாகிவிட்டது. அதில் எனக்குப் பெரும் ஏமாற்றம்தான். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் ஒன்றும் அரசாங்கத்தை வீழ்த்த தவிரும்பவில்லை; ஆனால் 24 மணி நேர வேலைநிறுத்தங்கள் போதாது என்பது உறுதி. சார்க்கோசி உலகில் இருக்கும் மற்ற அரசாங்கங்கள் நடந்து கொள்ளுவது போல்தான் நடந்து கொள்ளுகிறார். ஒரு பூஜ்ய நிலைக்குத்தான் நாங்கள் பின் தள்ளப்படுகிறோம்; உரிமைகள் ஏதும் இல்லை, கற்காலம் போன்ற நிலைமைதான் உள்ளது. சார்க்கோசி தாட்சரையும் அமெரிக்காவையும் காப்பி அடிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார்: இவை பிரான்ஸில் மட்டுமே நடைபெறவில்லை." Jean மேலும் கூறினார்: "ஒரு சிறிய சதவீதத்தினர் தங்கள் சட்டங்களை பிறர் மீது சுமத்துகின்றனர்; செல்வம் நல்ல முறையில் மறு பகிர்வு செய்யப்படவில்லை. படகுகளை பிரான்ஸ் அனுப்பிவைத்து மற்ற நாட்டு விஷயங்களில் தலையிடுகிறது. இளைஞர்களுக்கு வருங்காலம் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் மக்களும் பொதுவாக வருங்காலம் பற்றிப் பெரும் கவலை கொண்டுள்ளனர். எமது கருத்துக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும்; முன்னேறுவதற்கு ஒரு திட்டம் வகுக்க வேண்டும். வெறுமே கொடிகளுக்கு பின் சென்று கொண்டிருக்கக்கூடாது. Maastricht Treaty ஐ நாம் அகற்ற வேண்டும். அது ஆபத்து நிறைந்தது; இலாபம் அடைவதற்காக பள்ளிகள் மூடத்தான் அது உதவுகிறது. இடது, வலது கட்சிகள் ஒன்றாக உழைக்க வேண்டும்." 59 வயதான Daniele உம் Seine-Saint-Denis ல் வேலை பார்க்கிறார். "எங்களுடைய உரிமைகள் சரிந்து விழுந்து கொண்டிருக்கின்றன; அதுவும் இப்பொழுதுதான் பெரிதாக தொடங்கியுள்ளது." என்று இப்பெண்மணி கூறினார். "மக்கள் ஒன்றாகத் திரள வேண்டும்; குறிப்பாக கஷ்டத்தில் இருப்பவர்கள் ஒன்று சேர வேண்டும். வெற்றி பெறுதல் என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லை. பாலஸ்தீனியர்களையும் காசா மக்களையும் நினைக்கிறேன். வருங்காலம் என்பது போராட்டத்தில் உள்ளது, அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுடைய போராட்டத்தில் உள்ளது." |