World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

House of Representatives passes Democratic home mortgage bill backed by the Fed and banking industry

பெடரல் மற்றும் வங்கித் துறை ஆதரவு கொண்ட ஜனநாயகக் கட்சியின் வீடுகள் அடைமான சட்டத்தை பிரதிநிதிகள் மன்றம் இயற்றுகிறது.

By Barry Grey
9 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

தங்கள் அடைமான தவணைகளை செலுத்த முடியாத மில்லியன் கணக்கான வீடுவாங்கியவர்களில் ஒரு சிறிய சதவிகிதத்தினருக்கு உதவும் வகையில் வியாழனன்று பிரதிநிதிகள் மன்றம் ஒரு சட்டம் இயற்றியது; அதேவேளை அடைமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கொடுக்க முடியாத கடன்களை மத்திய அரசாங்கத்திற்கு மாற்றிவிடுவதற்கு இது இயலச்செய்யும்.

266-154 என்ற வாக்குகளில் சட்டம் இயற்றப்பட்டது; அவையில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் ஆறு பேரைத் தவிர 39 குடியரசுக் கட்சியினர் மற்றவர்களுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்தனர். செனட்டிலும் இதே போன்ற சட்டம் இயற்றப்பட்டால் தான் அதைத் தடுக்க இருப்பதாக ஜனாதிபதி புஷ் புதனன்று அறிவித்தார். சட்டசபையின் மேலவை இந்த சட்டவரைவை அடுத்த வாரம் பரிசீலிப்பதாக உள்ளது.

மன்ற சட்டவரைவு, மாசாச்சூசட்ஸ் பிரதிநிதி, முன்னாள் மன்ற நிதிய சேவைகள் குழுவின் தலைவரான Barney Frank யினால் முன்வைக்கப்பட்டது மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டு வெள்ளமெனப் பெருகியுள்ள வீடுகள் கடன் கட்டுதல், மூடுதல் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு குறைந்த செலவில் குறைக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது; இதையொட்டி வீடுகள் சந்தை உறுதிப்படுத்தப்படலாம் என்றும் வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்கள் குறைந்த பிணை மதிப்பு அடைமானம் கொண்ட பத்திரங்களின் நஷ்டங்களால் சரிவு அடையாமல் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்றத்தின் சட்ட வரைவின் முக்கிய விதி, கூட்டாட்சி வீடுகள் நிர்வாக அமைப்பு (Federal Housing Administration), மறுநிதியூட்டும் வீடுகள் கடனில் 300 பில்லியன் டாலர்களுக்கு உத்தரவாதம் அளிக்கக் கோருகிறது. வீடுகளின் உரிமையாளர்கள், குறைந்த பிணைமதிப்புடைய அடைமானம் மற்றும் மாறும் விகித அடைமானத்தைக் கொண்டவர்கள், புதிய முறையில் கடனை திரும்பக் கொடுக்கக்கூடிய திறனை நிரூபித்தால், அவர்களுடைய கடன்களில் இருக்கும் அசல் தொகையை குறைக்கக் கூடும் என்பதுடன், கடனும் முப்பது ஆண்டுகள் ஒரு நிலையான அடைமான வீத கடன் என்ற விதத்தில் மாற்றப்பட்டு மாதம் குறைந்த தவணையை கொடுக்க முடியும்.

புதுப்பிக்கப்பட்ட கடன்களை உடைய அடைமான வீட்டுக்காரர்கள், பின்னர் தங்கள் வீடுகளை விற்றவர்கள் விற்பனையில் இலாபம் ஏதேனும் பெற்றிருந்தால், இத்திட்டத்தின்படி அரசாங்கத்திற்கு ஒரு பகுதியை அதில் இருந்து கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவர்.

இத்திட்டம் முற்றிலும் தானாய் முன்வந்து ஏற்பதாகும்; அதாவது வங்கிகளும், அடைமானக் கடன் கொடுத்தவர்களும் ஆபத்து நிறைந்த கடன்களில் அசலில் குறைவை ஒப்புக் கொள்ளுவதில் விருப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம்; இதற்கு பதிலாக மறு நிதி அளிப்பில் பெடரல் உறுதிகள் கிடைக்கும். தவணை கொடுக்கப்படாத FHA ஆதரவுடைய கடன்களில் இழப்புக்கள் ஏற்பட்டால் அது மத்திய அரசாங்கத்தால் ஏற்கப்படும்; வங்கிகள் அல்லது அடைமானக் கடன் கொடுப்போர் ஏற்க வேண்டியது இல்லை.

எந்த வங்கியும் அடைமானக் கடன் கொடுத்தவரும் திட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்று இல்லை; நிதிய நிறுவனங்கள் தாங்கள் மறு உதவி கொடுத்த கடன்களில் அரசாங்க உறுதியை இழப்புக்களுக்கு எதிராக கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். இதன் விளைவாக அடைமான நிறுவனங்களும், வங்கிகளும், பங்கு பெற வேண்டும் என்று முடிவு எடுத்தால், தாங்கள் மறு உதவி கொடுத்ததில் "சிறந்தவற்றை" கொடுக்கலாம்; விதியின்படி தவணையில் தாமதம் ஏற்படலாம் என்று நினைப்பவற்றை மற்றும் எடுத்தால் போதும்.

இத்திட்டத்தின் முக்கிய இலக்கு "முழுகிப் போய் இருக்கும்" பெருகி வரும் வீடுகளின் எண்ணிக்கையை குறைப்பது ஆகும் --அதாவது சந்தைவிலையைவிட கொடுக்க வேண்டிய கடன் அடைமானத்திற்கு அதிகம் என்று இருக்கும் வீடுகள். அத்தகைய வீடுகளை வைத்திருக்கும் குடும்பங்கள் பற்றிய தற்போதைய மதிப்பீடுகள் 4 மில்லியனில் இருந்து (அடைமானம் வைத்துள்ள 12 குடும்பங்களில் 1 என) என்பதில் இருந்து 10 மில்லியன் வரை இருக்கலாம். வீடுகளில் விலைகள் மற்றும் ஒரு 15 சதவிகிதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சரியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Mood's Economy.com கணித்துள்ளது; 2009 ஆரம்பத்தில் இது நான்கில் ஒன்று அல்லது 12 மில்லியன் உரிமையாளர்கள் முழுகும் நிலையில் இருப்பர் என்று பொருள் ஆகும்.

கடன் செலுத்தமுடியா நெருக்கடி, அதனால் விளையும் வங்கித்துறை நெருக்கடி, வீடுகள் சந்தை உறுதிப்பட்டு, வீடுகளின் விலைகள் சரியாமல் இருந்தால்தான் கடக்கப்பட முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

காங்கிரஸ் உறுப்பினரான பிராங்க் தன்னுடைய சட்ட வரைவு 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் கஷ்டத்தில் இருக்கும் வீடுகள் உரிமையாளர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் உதவி அளிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் காங்கிரசின் வரவு/செலவுத்திட்ட அலுவலகம் (CBO) கடந்த வாரம் வெளியிட்ட மதிப்பீட்டில் இத்திட்டம் அதிக பட்சம் 500,000 வீட்டு உரிமையாளர்களுக்கு உதவும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே 1.5 மில்லியன் குடும்பங்கள் கட்டாய விற்பனையில் ஜனவரி வரை ஈடுபட்டுள்ள நிலையில், மற்றும் ஒரு 2.8 மில்லியன் அடுத்த நான்கு ஆண்டுகளில் அப்படிச் செய்யக்கூடும் என்ற நிலையில், CBO கருத்தின்படி மன்றம் கட்டாய விற்பனையில் ஈடுபடும் வீட்டு உரிமையாளர்களில் 8.6 சதவிகிதத்திற்குத்தான் உதவ முடியும் என்று உள்ளது.

ஏற்கனவே தங்கள் வீடுகளை கட்டாயமாக விற்றுவிட்டவர்களுக்கு இது எவ்விதத்திலும் உதவவில்லை அதே போல் வங்கிகள் மற்றும் அடைமானக் கடன் கொடுத்தவர்கள் கட்டாய விற்பனைக்கு ஏதும் செய்வதை தடுக்கவும் இல்லை. கடந்த வாரம் RealtyTrac என்னும் கட்டண தாமதம், விற்பனைகள் இவற்றை ஆராயும் நிறுவனம், கட்டாய விற்பனைகள் 2008 ன் முதல் மூன்று மாதங்களில் 112 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறுகிறது. கடன் கொடுப்பவர்கள் இப்பொழுது கட்டாய விற்பனைக்கு பதிவு செய்கின்றனர்; இது நாள் ஒன்றுக்கு 7,000 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடைபெறுகிறது.

குறைந்த பிணைமதிப்புடைய அல்லது மற்ற உயர் வட்டி அடைமானங்களை வைத்திருக்கும் 9 மில்லியன் வீடுகள் உரிமையாளர்களில் "பெரும்பான்மையானோர் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்தின்படி திரும்ப நிதியூட்டப்பெறமாட்டார்கள்" என்று CBO விளக்கியது. கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் வீடுகளில் இரண்டாம் அடைமானம் வைத்திருப்பர்; அத்தகையவர்கள் கடனில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க அனுமதிக்கமாட்டார்கள். மற்ற கடன்காரர்கள் இதைப் பற்றி அறிவர்; இன்னும் சிலருக்கு குறைந்த கடன் கிடைக்கக்கூடும்; ஏனெனில் "வேலை இழப்பு, நோய்வாய்ப்படுதல், விவாகரத்து அல்லது மரணம்" போன்றவை நிகழலாம்.

கிட்டத்தட்ட 1.4 மில்லியன் எஞ்சிய குறைந்த பிணையுள்ள கடன்வாங்கியவர்களில், 40 சதவீதத்திற்கும் குறைந்தவர்கள் இத்திட்டத்தில் கலந்து கொள்ளக் கூடும் என்று CBO கூறியுள்ளது.

இக்காரணங்களை ஒட்டி, CBO திட்டத்தின் சரியான செலவு --FHA ஆதரவு உடைய மறு கடனில் தவணை செலுத்ததாவர்கள்-- அடுத்த ஐந்து ஆண்டுகள் $2.7 பில்லியன் என்றுதான் இருக்கும் இது ஈராக் போரில் 15 நாட்கள் செலவை விட குறைவாகும்; அமெரிக்க சிறப்பு நிதி உயர்மட்ட நிறுவன மேலாளர் ஒருவரின் 2007 ஆண்டு வருமானத்தை விட ஒரு பில்லியன் டாலர்கள்தான் குறைவாக இருக்கும்.

காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் CBO கருத்துக்களை மறுக்கவில்லை. பிரதிநிதி பிராங்கின் செய்தித் தொடர்பாளரான Steven Adamske CBO மதிப்பீடு "ஒரு நல்ல செய்தி" என்று கூறினார். செவ்வாயன்று அவை விவாதத்தில் பிராங்க் தன்னுடைய சட்டவரைவை காத்துப் பேசுகையில் 500,000 பேருக்கு பயனளிக்கும் என்றார்.

வங்கித் தொழில் சங்கங்கள் பொதுவாக சட்ட வரைவை வரவேற்றுள்ளன; இதற்கு காரணம் இது முற்றிலும் விருப்புரிமையை அடிப்படையாக கொண்டது; வங்கிகளுக்கு மோசமான கடன்களை அரசாங்கத்திடம் தள்ளிவிடும் வாய்ப்பை கொடுக்கிறது; வங்கிகள் மற்ற தடைகள் கொடுப்பதையோ முன்கூட்டி மூடுதல்களை செய்வதையோ தடுக்கவும் இல்லை.

சட்டவரைவு ஒரு சில வகை அடைமான கடன் கொடுப்போருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்வதை தடுக்கும் விதிகளையும் கொண்டுள்ளது.

நியூ யோர்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் திங்களன்று நடத்திய உரை ஒன்றில் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பென் பெர்நன்கே உட்குறிப்பாக ஜனநாயக நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து, வீடுகள் உரிமையாளர்கள், வீடுகளின் மதிப்பை விட அடைமானக் கடன் அதிகமாக உள்ளவர்களுக்கு" இது "சிறந்த தீர்வு" என்றார்; கடன் இன்னும் செலுத்தப்படுவதற்கு எளிதாக இருக்கும் வகையில் ஒரு திருத்தம் கொண்டுவரப்படலாம், "அதில் பெடரல் ஹெளசிங் நிர்வாகம் மற்றும் ஒரு கடன் கொடுப்பவர் மறு நிதியளிக்கலாம்" என்று இணைக்கப்படலாம்" என்றார்.

புஷ் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறும் வகையில் வெள்ளை மாளிகை கூறும் சில கருத்துக்களை பிராங்க் சட்டவரைவில் சேர்துள்ளார்; இதில் அரசாங்கம் அனுமதித்துள்ள அடைமான நிதிய நிறுவனங்களான Fanne Mae and Freddie Mac ஆகியவற்றின்மீது கடுமையான கட்டுப்பாடு, FHA மாற்றியமைக்கப்பட வேண்டியது, மாநிலங்கள், உள்ளூராட்சிகள் அடைமான வருமானப் பத்திரங்களை விரிவுபடுத்துதலுக்கு ஒரு உச்ச வரம்பு ஆகியவை அடங்கியுள்ளன.

ஆனால் நிதித்துறை மந்திரியான ஹென்ரி போல்ஸன் சற்று தயக்கத்திற்கு பின்னர் புதனன்று தான் சட்டவரைவை "அது கடுமையான விதிகளை கடன் கொடுப்பவர்களிடம் இருந்து ஆபத்தை வரி செலுத்துபவர்களுக்கு மாற்றுவதால்" எதிர்ப்பதாக கூறினார் புஷ் நிர்வாகம் வீடுகள் விலைகளில் "தேவையான திருத்தங்களுக்கு" தடையாக இருக்கவில்லை என்றும் கூறினார்.

குடியரசு சட்ட மன்ற உறுப்பினர்களை புதனன்று சந்தித்தபின் புஷ் இச்சட்டவரைவை தான் எதிர்ப்பதற்கு காரணம் இது "ஊக வணிகர்கள், கடன் கொடுப்பவர்களுக்கு" வெகுமதி கொடுக்கிறது என்றார். "மன்றத்தின் இரு பிரிவுகளிலும் இயற்றப்பட்டு இன்று என்னுடைய மேசைக்கு சட்ட வரைவு வந்தால், அதை தடுப்பதிகாரத்தின் மூலம் தடுத்துவிடுவேன்" என்றும் கூறினார்.

இப்படி "ஊகவாணிகர்களுக்கு பரிசளிப்பதை" எதிர்த்தல் என்பது மார்ச் மாதம் பேர்ஸ்டேர்ன்ஸ் என்னும் நிறுவனத்திற்கு $29 பில்லியன் பெடரல் வங்கி அளிக்கும் என்று உறுதி கூறி, பெடரலை கிட்டத்தட்ட $ 1 டிரில்லியனை நிதியச் சந்தைகளுக்கும் அரை டிரில்லியன் டாலர்களை அடைமான ஆதரவு பத்திரங்கள் வோல்ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்கள் வைத்திருப்பதற்கும் கொடுக்க வைத்த நிர்வாகத்தில் இருந்து வருகிறது; அந்த மதிப்புக்களோ வீடுகள் சந்தை பொறிவிற்கு பின்னர் இன்னும் கூடுதலாயின.

வீடுகளின் நெருக்கடி பற்றி நிர்வாகத்தின் திட்டங்கள் அனைத்தும் முக்கிய வோல்ஸ்ட்ரீட் நிறுவனங்கள் மற்றும் அடைமான கடன் கொடுப்போர், சேவை செய்வோர் ஆகியோர் விருப்புரிமையின்படி ஒரு குறிப்பிட்ட அளவு வீடுகள் உரிமையாளர்களுக்கு உதவ வேண்டும் என்று உள்ளது. ஒரு திட்டம், FHA Secure என்று அழைக்கப்டுவது, ஒரு சிலரின் மதிப்பீட்டின்படி, 2,000 வீட்டு உரிமையாளர்களுக்கு உதவியது. மற்றொன்று, Hope now Alliance என்பது 179,000 கடன் வாங்கியவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட கடன்களை கொடுத்து உதவியுள்ளது.

ஊக வணிகர்களை பற்றி புஷ் நிர்வாகம் பேசுகையில், அது கொள்ளைமுறை கடன் கொடுத்தவர்களின் பாதிப்பிற்கு உட்பட்ட மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களை உள்ளடக்கியுள்ளது; அவர்கள்தான் குறைந்த பிணை மாற்றக் கூடிய வட்டி வீதத்தை அதிகம் அறிந்திராத வீடுகள் வாங்கியோர் மீது வீடுகளின் விலைகள் தொடர்ந்து உயரும் என்று உறுதியளித்து விற்றனர்; வீடு வாங்குபவர்கள் உயர்ந்த வட்டி வீதத்தை கட்டமுடியும் என்றும் அடைமான தவணைகள் அதிக மாதாந்திர கட்டணங்களை செலுத்த வேண்டியதற்கு முன்பே மறுநிதியூட்டம் பெறக்கூடியதாக இருப்பர் என்றும் கூறினர்.

நிதித்துறை சமீபத்தில் ஒரு Power-Point presentationல் வாதிட்டுள்ளபடி, "வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் அடைமானங்களை கொடுக்கமுடியும்; ஆனால் பேசாமல் இருக்கின்றனர், இதற்கு காரணம் முழ்கும் நிலையில் இருப்பவற்றை பொறுத்தவரை அவர்கள் வெறும் பார்வையாளர்கள்தாம்."

புஷ் தடுப்பதிகாரம் என்ற பயமுறுத்தல் இருந்தாலும், நிர்வாகம் ஜனநாயகக் கட்சி இன்னும் கூடுதலான நலன்களை வங்கிகளுக்கும் அடைமான நிறுவனங்களுக்கும் கொடுக்கும் வகையில் உடன்பாடு காண விரும்புகிறது. வெள்ளை மாளிகை தேசிய பொருளாதாரக் குழுவில் இயக்குனரான Keith Hennessey புதனன்று காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் வெள்ளை மாளிகைக்கும் இருக்கும் வேறுபாடுகள் ஒன்றும் "கடக்கப்பட முடியாதவை அல்ல" என்றார். வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்தின்படி, ஹென்னெசி "விவாதம் கூடுகையில் வெள்ளை மாளிகையும் கூடுதலாக தொடர்பு பெறுவதற்கான வழிவகையில் ஆர்வம் காட்டும் எனக் கூறினார்" என்றது.

வெள்ளை மாளிகை FHA மற்றும் கடன் கொடுப்பவர்களுக்கு மன்றச் சட்டத்தில் இருப்பதை விட "கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மை" இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஜேர்னல் கூறுகிறது. இன்னும் குறிப்பாக வெள்ளை மாளிகை FHA விற்கு "அதிக ஆபத்து இருக்கும் உடன்பாடுகளுக்கு அதிக தொகை வசூல் செய்யும் உரிமை வேண்டும் எனக்கூறுகிறது --அதாவது குறைந்த கடன்களுடன் உள்ள வீட்டுரிமையாளர்களை பொறுத்த வரையில் அப்படி இருக்க வேண்டும் என்று."