World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :ஆசியா
:
பர்மா Why the propaganda campaign for international intervention in Burma? பர்மாவில் சர்வதேச தலையீட்டிற்கு ஆதரவான பிரச்சாரங்கள் ஏன்? By Peter Symonds பர்மா மக்கள் மீது நர்கீஸ் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவானது உதவிகளுக்கும் மற்றும் தொண்டு அமைப்புக்களுக்கும், அத்துடன் அமெரிக்க இராணுவம், விமானம், துருப்புகள் மற்றும் யுத்த கப்பல்களுக்கும் பர்மாவின் இராணுவ ஆட்சி அதன் எல்லையை திறந்து விடக் கோரி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நேசசக்திகளும், மற்றும் சர்வதேச ஊடகங்களாலும் ஓர் அசாதாரண பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டிருக்கிறது. பர்மா ஆட்சியின் மீட்பு நடவடிக்கைகளின் பற்றாக்குறை, அதன் தனிமைப்படுத்தபடும் போக்கு மற்றும் சர்வதேச உதவியை, குறிப்பாக அமெரிக்காவின் உதவியை அது பெற மறுத்ததால் உண்டான விளைவுகளுக்கும் கண்டனம் தெரிவித்து நம்பிக்கையற்று பிழைத்திருப்பவர்கள் மற்றும் பேரழிவுக்குள்ளான நகரங்களின் நெஞ்சை பிளக்கும் காட்சிகளை காட்டி பொதுமக்களின் கருத்துக்களை கிளர்ந்தெளச்செய்ய மீண்டும் ஒருமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற "மனிதாபிமான" நடைமுறைகளின் விளைவுகளை ஒருவர் உடனடியாக நின்று நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 1999ல், சேர்பியாவுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கவும், அங்கிருந்த சேர்பிய சிறுபான்மையினரை துப்புரவாக அகற்றி அதை ஒரு நேட்டோ பாதுகாப்பிலான மாகாணமாக மாற்ற அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளால் கொசோவா அகதிகளின் பரிதாபம் சுரண்டப்பட்டது. அதே ஆண்டு, அமெரிக்காவின் பின்புலத்துடன் ஆஸ்திரேலியா, கான்பெர்ராவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களின் மேல் இரக்கம் கொண்ட ஓர் ஆட்சியை கிழக்கு திமோரில் நிறுவ ஓர் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தும் இந்தோனேஷியாவின் ஆதரவு பெற்ற போராளிகளின் வன்முறையை பயன்படுத்தியது. இரண்டு நாடுகளிலும் இருந்த உள்ளூர் மக்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தொடர்ந்து ஒரு மோசமான சூழலில் வாழ்வதுடன், அவர்களில் யாருடைய அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி, கடந்த வாரத்தில் ஒரு பெரிய சமூக துயரம் நடந்தேறியிருக்கிறது. இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை 60,000 த்திற்கும் மேலாக பர்மா உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. இறப்பு எண்ணிக்கையை 100,000 மாகவும், சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 2 மில்லியனுக்கு அண்மையாகவும் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். தாழ்ந்த நிலப்பகுதியாக இருக்கும் பெருமளவிலான ஐராவதி நதிப்படுகை பகுதிகள் நர்கீஸ் சூறாவளியில் உருவாக்கப்பட்ட புயல் பேரலைகளால் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து நகரங்களும், கிராமங்களும் நாசமாக்கப்பட்டு இருக்கின்றன. இது, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து கடற்கரைகளில் டிசம்பர் 2004ல் ஏற்பட்ட சுனாமியால் உருவாக்கப்பட்ட பேரழிவை நினைவுபடுத்தும் காட்சிகளை விட்டுச் சென்றிருக்கிறது. பர்மிய இராணுவ ஆட்சி ஓர் இரக்கமற்ற ஆட்சி என்பது உண்மை தான், அது அதன் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளை தக்க வைக்க ஆட்சி எதிர்ப்பு போராளிகளை தொடர்ந்து சுட்டு கொன்றனர். நிச்சயமாக நாட்டின் பொருளாதார பின்னடைவால் மட்டும் அதன் மீட்பு முயற்சிகள் பாதிக்கப்படவில்லை, பர்மிய மக்களின் பரிதாபகரமான நிலை தொடர்பான ஆட்சியின் அக்கறையற்ற நிலைமையும் இதற்கு காரணமாகும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஊடக பிரசாரங்களின் மத்தியில் அனைத்து செய்தி அறிவிப்புகளையும் ஒருவர் மிக குறிப்பிடத்தக்க எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஆனால் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பலர் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலையில் விடப்பட்டுள்ளார்கள் என்பதில் சிறிய சந்தேகம் எதுவுமில்லை. உண்மையில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களால் 2004ம் ஆண்டு சுனாமியில் பிழைத்தவர்கள் விடப்பட்டதை குறிப்பிடலாம். எவ்வாறிருப்பினும், புஷ் நிர்வாகம் மற்றும் அதன் கூட்டாளிகளின் கவலைகளுக்கு எவ்விதமான மதிப்பளிக்கமுடியாது. சூறாவளிக்கான வாஷிங்டனின் உதவி என்பது "அரசியல் சார்ந்ததல்ல", அது "மனிதயின நெருக்கடிகள்" சார்ந்தது என புதனன்று அமெரிக்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்தார். பர்மிய அரசாங்கம் செய்ய வேண்டியது என்னவென்றால், அதன் மக்களுக்கு உதவ சர்வதேச சமூகத்தை அனுமதிப்பதேயாகும்." என ரைஸ் அறிவித்தார். உண்மையில், அனைத்து அமெரிக்க உதவிகளும் அரசியல் மூலம் பூசப்பட்டே வருகின்றன. சிறிய தொகையான 3.5 மில்லியன் டாலரை நிதி உதவியாக அளித்திருக்கும் புஷ் நிர்வாகம், அவசரகால மீட்பு நடவடிக்கைகளைக் கையாள பர்மிய அதிகாரிகளைச் செயல்பட அனுமதிக்காமல் அமெரிக்க அதிகாரிகளை மற்றும் தொண்டு ஊழியர்களை மற்றும் இராணுவ படையினரின் உள்நுழைவை உந்துகிறது. அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் தொடர்ந்து பர்மிய ஆட்சியின் மீது தடைகளை விதித்து வருகிறார்கள், அவை அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை அதிகரித்திருக்கிறது. சூறாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, வர்த்தகம் மற்றும் முதலீடு மீதான தடை மற்றும் சொத்துக்களை முடக்குதல் போன்றவற்றை வலுப்படுத்தியது, நிதியுதவி மீதான வரைமுறைகள் சற்று குறைக்கப்பட்டது தவிர மற்ற அனைத்து தடைகளும் தொடர்ந்து இருக்கின்றன. இராணுவ ஆட்சியின் அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ, ஐக்கியநாடுகள் சபை அதன் "பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வை" முன்னிறுத்தி பர்மாவின் தேசிய இறையாண்மையை மீறவும், பர்மாவிற்கு சர்வதேச உதவிகளை வழங்கவும் ஆலோசிக்க வேண்டும் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி பேர்னார்ட் குஷ்னெர் வலியுறுத்தினார். யூகோஸ்லேவியா மீதான 1999 நேட்டோ யுத்தத்தின் வரலாறைக் கொண்ட "பாதுகாப்பிற்கான பொறுப்புணர்வு" தீர்மானமானது "இனப்படுகொலை, யுத்தம், இனசுத்திகரிப்பு மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை" தடுக்கும் அடிப்படையிலான இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முக்கிய நாடுகளால் 2006 இல் ஒரு கருவியாக கொண்டு வரப்பட்டது. நர்கிஸ் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளில் இதுபோன்ற தலையீடுகளின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதே குஷ்னெரின் ஆலோசனையாகும். குஷ்னெரின் கருத்துக்கள் வாஷிங்டனினால் வெளிப்படையாக இதுவரை ஆதரிக்கப்படவில்லை, ஆனால் நிர்வாகத்திற்குள் இந்த ஆலோசனை தெளிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச உதவியை ஏற்றுக் கொள்ள பர்மிய அரசாங்கம் காட்டும் பொறுமையை பெரும்பான்மையான அரசாங்கங்கள் "குற்றஞ்சாட்டி" இருந்தன என ஐக்கிய நாட்டு சபைக்கான அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஜத் தெரிவித்தார். ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையின் அதிகாரங்களை மறைமுகமாக குறிப்பிட்டுக்காட்டி, அவர் தெரிவித்ததாவது: "தன் மக்களைப் பாதுகாப்பதற்கும் , அதன் மக்களுக்கு உதவிகளை அளிக்கான பொறுப்பை ஓர் அரசாங்கம் கொண்டிருக்கிறது..... சர்வதேச சமூகத்தால் அளிக்கப்படும் உதவிகளை ஏற்காமல் இருப்பது அறிவீனமாகும்" என்று தெரிவித்தார். வெளிநாட்டு பேரழிவு உதவிக்கான அமெரிக்க அலுவலகத்தின் இயக்குனர் Ky Luu மிகவும் வெளிப்படையாக இருந்தார். அமெரிக்காவின் உதவியை இராணுவ ஆட்சி தொடர்ந்து நிராகரித்தால், அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலம் ஒருதரப்பு விமான வினியோகம் செய்வதற்கான ஒரு வாய்ப்பும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார். நான்கு அமெரிக்க யுத்தகப்பல்களும் ஏற்கனவே பர்மாவை நோக்கி நகர்ந்து வருகின்றன மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானப்படை சரக்கு விமானங்கள் அண்டை நாடான தாய்லாந்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பர்மாவின் அனுமதியில்லாத ஓர் இராணுவ தலையீட்டை தம்மால் கற்பனையும் செய்ய முடியவில்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் கேட்ஸ் தெரிவித்தார். பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் பிரெய்ன் விட்மேன் குறிப்பிட்டதாவது: "உங்களிடம் உதவி கேட்கப்படாவிட்டாலும், விண்ணக்கப்படாவிட்டாலும் அது ஒரு தாக்குதலாகவே கருதப்படும்." என்றார். எனினும், இராணுவ சாத்தியக்கூறும் மற்றும் அதன் அரசியல் ஊடுருவலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது மட்டும் தெளிவாகும். ஆசிய சுனாமி பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு அழுத்தம் அளிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஆசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கான சர்வதேச உதவியின் போது அதில் ஈடுபட்ட அனைவராலும் அளிக்கப்பட்ட விரைவான, சிறப்பான மற்றும் கருணையுடன் கூடிய உதவி வினியோகத்தை ஒரு முன்மாதிரியாக சித்தரிக்க ஒரு புதிய கட்டுக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இன்றைய பர்மிய ஆட்சிக்கும், அதன் கூட்டு "ஜனநாயக" நாடுகளான இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவவை 2004ல் இருந்த நிலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் கூடுதலாக உருவாக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும், 2004 துன்பியலுக்கான எவ்வித புறநிலையான ஆய்வும் ஒரு மாறுபட்ட விளக்கத்தை வெளிப்படுத்துகிறது. டிசம்பர் 26ல் வங்காள வளைகுடாவை சுற்றி இருந்த ஏழ்மைமிக்க கிராமங்கள் பெரிய சுனாமி அலைகளால் சூழப்பட்டன. இறப்பு எண்ணிக்கை மிக விரைவில் ஆயிரக்கணக்கை எட்டியிருந்த போதும், அமெரிக்க ஜனாதிபதி புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் உலகின் பிற தலைவர்கள் பல நாட்களாக இந்த பேரழிவைக் குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. இறுதியாக அவர்கள் தங்களின் விடுமுறைகளை முடித்து கொண்ட போது, பாதிக்கப்பட்டவர்கள் மீதான அவர்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பானது அவர்களின் உதாசீனமான அறிக்கைகள் மற்றும் அனுதாப உதவிகள் மூலம் வெளிப்பட்டது. பேரழிவின் மிகப் பெரிய அதிர்ச்சியால் உலகம் முழுவதும் இருந்த உழைக்கும் மக்களின் அனுதாபம் மற்றும் உதவிகளின் பங்களிப்புகளுக்கு பின்னர் தான், அமெரிக்கா மற்றும் முக்கிய நாடுகள் இதில் தலையிடத் தொடங்கின. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில், அவசர மீட்பு உதவிகள் உள்நாட்டு ஆட்சிகள் மற்றும் உதவியளிப்பு நாடுகளின் சிவப்பு நாடாக்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிநிரலால் தடைப்பட்டு இருந்தன. நீண்ட காலமாக பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக கொடூரமான யுத்தங்களை நடத்தி வந்ததால் இந்தோனேஷியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் தொண்டு அமைப்புகளை, அன்னிய நாட்டு இராணுவங்களை பேரழிவுக்குள்ளான பகுதிகளில் அனுமதிக்க முற்றிலுமாக விருப்பம் கொண்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, இந்தோனேஷிய இராணுவம் ஆச்னீஸ் போராளிகளுக்கு எதிராக அதன் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்த வாய்ப்பை பயன்படுத்தியது. இலங்கையில், பிரிவினைவாதிகளை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதன் மீதான இனவாத குற்றச்சாட்டுகளுக்கு இடையில், 2002 போர்நிறுத்தம் முறிவின் போதும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகளுடன் ஒரு கூட்டு உதவி அமைப்பு உருவாக்க முயலப்பட்டது. சொந்த மீட்பு நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க வலியுறுத்திய இந்திய அரசாங்கம், அன்னியநாட்டு இராணுவங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற அனைத்து ஆலோசனைகளையும் நிராகரித்தது. குறிப்பாக, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் மூலோபாய கப்பற்படை மற்றும் விமானப்படை தளங்கள் இருப்பதால், மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான அத்தீவுகளில் சர்வதேச தொண்டு ஊழியர்களை ஈடுபடுத்துவதை இந்திய இராணுவம் விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலான பின்னரும் கூட, அந்த தீவுகளிலும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், இந்தோனேஷியா மற்றும் இலங்கையிலும் சுனாமியால் பாதிக்கபட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து தற்காலிக குடியிருப்புகளில் மோசமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் இந்திய இறையாண்மையை மீறி ஓர் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் அல்லது அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மீது ஒருதரப்பு விமான வினியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டங்களிலிருந்து ஒருவரும் ஆலோசனை கூறவில்லை. இலங்கை மற்றும் இந்தோனேஷியாவின் விடயத்தில், அரசாங்கங்கள் இறுதியாக அவற்றின் மாகாணங்களில் உதவி நடவடிக்கைகளுக்கு உதவ அமெரிக்க இராணுவத்தை அனுமதித்தன. இரண்டு விடயங்களிலும், வாஷிங்டனின் மீறுவதற்கான நோக்கம் அரசியல்ரீதியாக அதாவது இந்த இரு நாடுகளின் இராணுவத்துடன் தொடர்புகளை அதிகரிக்கவும், ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது. அதுவே தற்போது பர்மிய இராணுவ ஆட்சியின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் செயலாளர் ரைஸ் பிளண்ட் ஜனவரி 2005 இல் செனட்டின் வெளியுறவு குழுவிடம், அமெரிக்க அரசாங்கத்தின் உணர்வை மட்டுமின்றி அமெரிக்க மக்களின் இதயத்தை வெளியிட இந்த சுனாமி ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி அளித்திருக்கிறது... மேலும் அது நமக்கு பெரிய இலாபத்தை அளித்திருக்கிறது." என்று தெரிவித்தார். தற்போது ரைஸ், பர்மாவிற்கான அமெரிக்காவின் உதவிகள் "அரசியல் சார்ந்தவையல்ல," என்று தெரிவிக்கிறார். ஆனால் புஷ் நிர்வாகம் அதன் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை அப்பிராந்தியத்தில் மேம்படுத்த இந்த சமீபத்திய பேரழிவை ஒரு புதிய அரசியல் "வாய்ப்பாக" பயன்படுத்த விரும்புகிறது. மூலோபாய நலன்கள் அமெரிக்காவிடம் இருந்து அல்லாமல் சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற அனுதாபம் கொண்ட தேர்ந்தெடுத்த நாடுகளிடமிருந்து உதவிகளை ஏற்க விரும்பும் பர்மிய இராணுவ ஆட்சியின் முடிவு மிகவும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. பர்மாவில் ஆட்சியை மாற்ற விரும்பும் உண்மையை புஷ் நிர்வாகம் மறைமுகமாக வெளியிட்டிருக்கிறது. அதாவது, வாஷிங்டனின் நலன்களுக்கும் இணக்கமாக அந்நாட்டை அன்னிய முதலீட்டிற்குத் திறந்து விடுவதற்காக, இராணுவ ஆட்சியை மாற்றி அதற்கு பதிலாக எதிர்கட்சி தலைவரான Aung San Suu Kyi இன் தலைமையிலான ஓர் அரசாங்கத்தை அமைக்க விரும்புகிறது. இராணுவ ஆட்சியின் மீது அமெரிக்கா இலக்கு வைப்பது, ஜனநாயக உரிமைகள் தொடர்பான கவனமோ அல்லது பர்மிய மக்களின் நல்வாழ்விற்கான விடயங்கள் தொடர்புபட்டதல்ல. பர்மிய ஆட்சிக்கு வாஷிங்டனின் விரோதமானது, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் முக்கிய போட்டியாளரான சீனாவுடனான அதன் நெருங்கிய உறவினால் உண்டானது. கடந்த எட்டு ஆண்டுகளில், சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் (அதாவது, தென்கொரியா மற்றும் ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா மற்றும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய குடியரசுகளை சுற்றியும்) இராணுவத் தளங்களை உருவாக்கும் மற்றும் இராணுவ கூட்டுக்களை வலுப்படுத்தும் மூலோபாயங்களை புஷ் நிர்வாகம் பின்பற்றி இருக்கிறது. சீனாவை ''கட்டுப்படுத்துவதற்கான'' அமெரிக்காவின் முயற்சியில் பர்மா ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியாக இருக்கிறது. சீனா உட்பட, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் எரிசக்தி வளங்களுடன் வடகிழக்கு ஆசியாவை இணைக்கும் முக்கிய கடல்வழியான மலாக்காவின் மூலோபாய நீரிணையை அடுத்து இந்நாடு (பர்மா) அமைந்திருக்கிறது. இதுபோன்ற மையப்புள்ளிகளின் கட்டுப்பாடு நீண்டகாலமாக அமெரிக்க கப்பற்படை விமானங்களின் மையமாக இருந்திருக்கிறது. பல கப்பற்படை தளங்களை உருவாக்க சீனா பர்மாவிற்கு உதவி இருக்கிறது மற்றும் அதன் சொந்த பொருளாதாரத்திற்கு முக்கியமான கப்பல்தடங்களைப் பாதுகாக்கும் அதன் முயற்சியாக பர்மிய துறைமுகங்களை அணுகவும் ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச உதவிக்கு திறந்து விடாமல் இருக்கும் அதன் கூட்டாளிக்கு சீனா அழுத்தம் அளிக்க தவறுவதை ஏற்கனவே சர்வதேச ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பர்மாவின் மீது அதிக அழுத்தம் அளிக்க சீனா அரசாங்கத்தை கட்டாயப்படுத்த இந்த வாரம் அமெரிக்க செயலாளர் ரைஸ் பெய்ஜிங்கிலுள்ள அந்நாட்டு சக அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். தலையிடுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிர்பந்திக்க புஷ் நிர்வாகம் முடிவு செய்தால், பெய்ஜிங் விரைவாக நேரடியாக குற்றச்சாட்டுக்குள்ளாகலாம். சூறாவளி பேரழிவு குறித்து ஐக்கியநாட்டு பாதுக்காப்பு சபையில் குரல் எழுப்புவதற்கான எவ்வித முனைவையும் சீனா எதிர்த்திருக்கிறது. பர்மிய இராணுவ ஆட்சியின் மீதான வாஷிங்டனின் கோபத்திற்கு பின்னாலும் ஒரு பரந்த பொருளாதார நிகழ்ச்சிநிரல் இருக்கிறது. பல தசாப்தங்களாக, தற்போதும் கூட முக்கிய துறைகளில், இராணுவத்தால் நடத்தப்படும் நிறுவனங்களை கொண்ட முழுவதும் மூடிய, தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை அது நிர்வகித்து வருகிறது. அமெரிக்க நிறுவனங்களுக்கு, மலிவு தொழிலாளர்களுக்காகவும் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு உட்பட முக்கிய வளங்களுக்காகவும் இந்த நாடு ஒரு புதிய முக்கிய ஆதாரமாக இருக்கிறது. Chevron எண்ணெய் நிறுவனம் அதன் பல மில்லியன் டாலர் முதலீட்டை பர்மாவில் தொடர, அமெரிக்க நிர்வாகம் அனுமதித்திருக்கிறது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோசமான உறவுகளால் இதுபோன்ற செயல்பாடுகள் தடைக்குள்ளாகின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருப்பதை விட பர்மாவின் மனிதாபிமான பிரச்சனைகளால் புஷ் நிர்வாகம் தூண்டிவிடப்படவில்லை. வெள்ளைமாளிகையின் சமீபத்திய பொய்களை மற்றும் பாசாங்குகளை மறுத்து, இதில் உள்ளடங்கி இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை கவனிக்க வேண்டியுள்ளது. சர்வதேச மக்கள்தொகையின் மிகவும் பாதிக்கப்பட்ட அடுக்குகளை இதுபோன்ற அழிவுகள் ஏன் தொடர்ந்து தாக்குகின்றன? ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படும் நோய், பசி மற்றும் வறுமை ஏன் தொடர்கிறது? பாதிப்புகளையும் இல்லாமையையும் இல்லாதொழிக்கவும் மற்றும் நர்கிஸ் சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களின் விளைவுகளை குறைக்கவும் வளங்கள் இருக்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, உற்பத்தியின் பூகோளமயமாக்கல் உலகின் ஒவ்வொரு பகுதியை சார்ந்த மக்களுக்கு ஒரு நாகரீகமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த பகுத்தறிவு திட்டங்கள் மற்றும் உலகளவில் வளங்களை பயன்படுத்துதலின் அடிப்படையை உருவாக்கி மனித இனத்தின் பொருளாதார சக்தியை மிகப் பெரியளவில் விரிவுபடுத்தி இருக்கிறது. எவ்வாறிருப்பினும், முதலாளித்துவத்தின் கீழ், முக்கிய தொழில்துறை நாடுகள் உட்பட பெரும்பான்மையினர் ஒவ்வொரு நாளும் பிழைப்புக்காக போராடும் வேளையில், செல்வவளம் மிக்க சிலருக்கு இலாபங்களை குவிக்க இந்த பெரியளவிலான பொருளாதார மற்றும் விஞ்ஞான திறன்கள் சுரண்டப்படுகின்றன. வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவை இயல்பானவையல்ல. சர்வதேச முதலாளித்துவத்திற்கு உலகின் நகர மற்றும் கிராமங்களின் பெருமளவிலான மக்கள் ஒரு முக்கிய இயங்கு சக்தியாக இருக்கின்றன. அவர்கள் ஒரு பெரியளவிலான மேலதிக தொழிலாளர் படையை உருவாக்குகின்றன என்பதுடன் அப்படை சர்வதேச அளவில் கூலிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஒரே தொடர்ச்சியான கீழ்நோக்கி அழுத்தம் அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சோசலிச வழியில் இணைந்து சமூகத்தைப் புரட்சிகர மறுசீரமைப்பு செய்வது மட்டுமே பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான மிகப்பரந்த மற்றும் ஆழ்ந்த இடைவெளியை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழியாகும். இதன்மூலம் மனிதயினத்தில் பெரும்பான்மையினரின் அடிப்படை தேவைகளானது ஒரு சிலரின் இலாப தேவைகளை விட முன்னுரிமை பெற்றதாகும். |