WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்ா
:
பிரான்ஸ்
France: One million strike in defence of education
and social services
பிரான்ஸ்: கல்வி, சமூகப் பணிகள் பாதுகாப்பிற்காக ஒரு மில்லியன் மக்கள் வேலைநிறுத்தம்
By Antoine Lerougetel and Pierre Mabut
17 May 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஒரு மில்லியனுக்கும் மேலான பொதுப்பணித்துறை ஊழியர்கள் வியாழனன்று வேலைநிறுத்தம்
செய்தனர்; 300,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரான்சில் அனைத்து பெரிய நகரங்களிலும் பேரூர்களிலும் தெருக்களுக்கு
வந்து ஆர்ப்பரித்தனர். 11,200 ஆசிரியர் வேலைகள் மற்றும் 30,000 பொதுத்துறை வேலைகளை அகற்றும்
அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், கிட்டத்தட்ட 80,000 ஆசிரியர்
பதவிகள் 2012 அளவில் அகற்றப்பட்டும்; Bac Pro
தொழில் பட்டய படிப்பிற்கான நான்கு ஆண்டு கால பயிற்சி
குறைக்கப்படும், மற்றும் ஒரு இடைப்பட்ட தகுதியான
BEP என்பது சில பயிற்சிகளுக்கு அகற்றப்பட்டுவிடும்.
கல்வித்துறை மீது அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான அணிதிரட்டுதல்களின் இரு
மாத போராட்டத்தின் உச்சக் கட்டமாக, பல இடங்களிலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு
தலைமை தாங்கினர். ஆனால் முக்கிய உயர்நிலைப்பள்ளி சங்கமான - உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சுதந்திர
ஜனநாயக கூட்டமைப்பு (FIDL)
இந்தப் பள்ளி ஆண்டில் இனி போராட்டங்கள் இல்லை என்று அறிவித்துவிட்டன. ஆயினும், கல்வி மந்திரி சேவியர்
டார்கோஸ் 1,500 குறைவூதிய, பயிற்சியற்ற ஆசிரியர் உதவியாளர்களை எதிர்பார்த்த்தைவிட மிக்க் குறைவாகச்செய்யும்
பள்ளிகளில் நியமிக்க இருப்பதாக கூறியதை பெரும் வெற்றி என்று அது கூறுகின்றது.
பாரிசில் கிட்டத்தட்ட 60,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; மார்செய்,
ரென்னில் ஒவ்வொரு இடத்திலும் 30,000 பேர்; துலூசில் 15,000 பேர். லியோனிலும் போர்தோவிலும் தனித்தனியே
10,000 பேர். Strasbourg, Lille, Le
Havre, Perpignan ஆகியவற்றில் ஒவ்வொரு இடத்திலும்
5,000 பேருக்கும் மேலானவர்கள் பங்கு பெற்றனர். பொதுப்பணித்துறை ஊழியர்கள் பொதுப்பணி சேவைகள் குறைப்பை
கண்டனம் செய்வதற்கு திரட்டப்பட்டனர். அமியானில் 3,000 தொழிலாளர்களும், மாணவர்களும் "தரமான பொதுப்பணி
சேவைகள், கூடுதலான வாங்கும் திறன்" ஆகியவற்றை வலியுறுத்தி அணிவகுத்தனர். உயர்நிலைப் பள்ளி பதாகைகள்
"கல்வித்துறையில் சமத்துவமற்ற நிலைமை" பற்றிக் கண்டித்தனர்.
கூடுதலான உற்பத்தித்திறன், விரைவுபடுத்தும் விதிகள் ஆகியவற்றை ஏற்காததற்காக
402 தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவர் என்ற அச்சுறுத்தல் உள்ள, அமியானில் உள்ள உள்ளூர் டயர் ஆலைகளில்
இருந்து Goodyear/Dunlop
தொழிலாளர்கள் வெளியிட்ட பிரசுரம் ஒன்று கூறியதாவது: "Goodyear/Dunlop
நிறுவனங்கள் எந்தவித மனச்சாட்சியும் இன்றி 2008 முதல் கால் பகுதிக்கு 100 மில்லியன் யூரோ இலாபத்தை
அறிவிக்கின்றன. நான்கு முக்கிய இயக்குனர்களும் 2008ல் ஊதியத்தில் 20 மில்லியன் யூரோக்களை தங்களுக்கே
வழங்கிக் கொண்டனர்."
அரசாங்க புள்ளி விவரங்களின்படி --பொதுவாக இவை தொழிற்சங்க மதிப்பீடுகளைவிட
20 சதவிகிதம் குறைவாக இருக்கும்-- மே 15 நடுப்பகலை ஒட்டி பள்ளிகளில் வேலை பார்ப்பவர்களில் 34
சதவிகிதத்தினர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்; பிற அரசுப் பணிகளில் இருப்பவர்களில் 27.3 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தம்
செய்தனர்; உள்ளூராட்சி தொழிலாளர்கள் 3 சதவிகிதமும் மருத்துவமனை ஊழியர்களில் 5.8 சதவிகிதமும் வேலைநிறுத்தம்
செய்தனர்.
அரசு பணித்துறையில் 2.5 மில்லியன் ஊழியர்கள் உள்ளனர்; இவர்களில் ஒரு மில்லியன்
கல்வித்துறையில் உள்ளனர். உள்ளூர் அரசாங்க பிரிவில் 1.6 மில்லியனும், மருத்துவ பிரிவுகளில் ஒரு மில்லியனும்
உள்ளனர்.
288,000 அஞ்சல் ஊழியர்களில்
10 சதவிகிதத்தினர் வேலைக்கு வரவில்லை என்று SUD
(Solidarity, Unity, Democracy) அஞ்சல்
தொழிலாளர் சங்கம் தெரிவித்தது. பிரெஞ்சு டெலிகாம்மில் உள்ள தொழிலாளர்களும் செய்தி ஊடகத்தில்
இருப்பவர்களும் பங்கு பெற்றனர். வானிலை தகவல் மையங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன; 40 மையங்களில்
23.7 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தம் செய்தனர். பல மையங்கள் மூடத் தொடங்கின.
தொழிற்சங்கங்களின் நடைமுறை, தொழிலாளர்களின் நடவடிக்கையை சிதைக்கும்
வகையில் பல ஒரு நாள் வேலைநிறுத்த அழைப்புக்களை விடுவது ஆகும். இந்த உத்தி மீண்டும் தொழிற்சங்கங்கள்
வேண்டுமென்றே கடந்த வியாழன் வேலைநிறுத்தத்தை மற்றொரு ஓய்வூதியங்கள் பிரச்சினை பற்றிய மே 22
வேலைநிறுத்தத்தில் இருந்து தனிமைப்படுத்துவதாக இருந்தது.
முழு ஓய்வூதியத்தை பெறுவதற்கு தேவையான ஆண்டுகளை 40ல் இருந்து 41
ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து ஏழு இரயில்வே தொழிற்சங்கங்கள் தங்கள்
உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. மே 15 ஆர்ப்பாட்டங்களில் அவை கலந்து கொள்ளவில்லை. கடந்த
ஆண்டு நாடு முழுவதையும் முடக்கிய இரயில் வேலைநிறுத்தத்திற்கு பின்னர், தொழிற்சங்கங்களின்
"பேச்சுவார்த்தைகள்" அப்போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிறகு, மே 22 வேலைநிறுத்தம் என்பது பல
தொழிலாளர்களுக்கும் வெற்றுத்தனத்தைத்தான் சுட்டிக் காட்டக்கூடும்.
மே 15 வேலைநிறுத்தங்களின் மாலையில், ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி
தான் வேலைநிறுத்த காலத்தில் குறைந்த பணிகள் பற்றிய சட்டமியற்றுதலை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார்.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய தங்கள் விருப்பத்தை 48 மணி நேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள்
வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய உள்ளூராட்சி அதிகாரிகளைக்
கோரும் உரிமையைக் கொண்டிருப்பர். இதனை வேலைநிறுத்தத்திற்கு எதிரான தாக்குதல் என ஆசிரியர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளது. சார்க்கோசியின் ஆளும் UMP-இன்
கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் அனைத்து உள்ளுராட்சி நிர்வாகிகளும் அத்தகைய சேவையை அளிக்க மறுக்கப்போவதாகவும்
மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறு செய்யும்படி அவர்கள் நிர்பந்திக்கப்பட முடியாது என்றும் கூறியுள்ளனர்.
Quest-France நாளேடு
தெரிவித்த கருத்தாவது: "தன்னுடைய முகாமிலேயே நொருக்கப்பட்டு, சீர்குலைவிற்கு உட்பட்டுள்ள நிலையில்,
பொதுக் கருத்து கடினமான நிலையை தோற்றுவித்திருக்கையில், நிக்கோலோ சார்க்கோசி மிக "சார்க்கோசித்தனமான"
முறையில் மீண்டும் செல்வாக்கை அடைய முற்படுகிறார்."
La Nouvelle Republique du Centre-Quest
சார்க்கோசி ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தைத்தான்
தூண்டிவிட்டு வருகிறார் என்று கூறியுள்ளது: "வலிமையின் பழைய சிறப்புமிக்க சோதனை பெரும்பாலும் மே 68 உணர்வுடன்
புதைக்கப்பட்டது என நாம் நினைத்தது, மீண்டும் அதன் முந்தைய ஒளியை பெற்றுள்ளது: அரசாங்கத்திற்கு எதிரான
போராட்டங்கள், அரசாங்கம் தன் நிலைப்பாட்டை வலுப்படுத்துதல் என்பவை மீண்டும் வந்துள்ளன. மே 22 வேலைநிறுத்தம்
வலிமையின் மற்றொரு வசந்தகால சோதனையாக இருக்கும்; எதிர்பார்த்ததைவிட கடுமையாக இருக்கும்."
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்
அமைப்பின் ஆதரவாளர்கள் குழு ஆயிரக்கணக்கான ISSE
அறிக்கையின் நகல்களை வினியோகித்தனர்; பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், மருத்துவமனை
தொழிலாளர்களுக்கும் பிற பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கும் இந்த அறிக்கை அறிவுறுத்தல் செய்தது.
(காண்க: "சார்க்கோசியின்
செலவின குறைப்புக்களுக்கு எதிராக பொதுக் கல்வியை காப்பாற்று! ஐரோப்பாவிலும் சர்வதேசரீதியாகவும்
தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்து!")
பேட்டி காணப்பட்டவர்களில் பலரும்
WSWS ஐப் பற்றி
நன்கு அறிந்திருந்ததுடன், வேலைநிறுத்தத்தில் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி தீவிர அணுகுமுறையை வெளிப்படுத்தினர்.
2005 ல் முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE)
எதிராக இளைஞர்களின் உறுதியான மக்கள் இயக்கத்தை பற்றிக் குறிப்பிடுகையில் லம்பேர்ட் கூறினார்: "இன்றைய
இயக்கம் CPE
க்கு எதிராக நடந்ததைவிட சற்று குறைவாக உள்ளது; ஆனால் கணிசமான மக்கள் குழுமியுள்ளனர். தொழிலாள
வர்க்த்தின் பல பரிவுகளும் ஒன்றாக இணைய வேண்டும்.
CPE க்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்தோம், அது நல்ல
முறையில் விளைவுகளை கொடுத்தது." பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன்
CPE ஐ திரும்பப்
பெற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்; ஆனால் சம வாய்ப்புக்கள் சட்டத்தின் எஞ்சிய அடக்குமுறைப் பிரிவுகள்
பலவற்றையும் அப்படியே விட்டுவைத்தார்.
பாரிஸ் பல்கலைக்கழகத்தின்
Tolbiac ல்
இருந்து வந்துள்ள மாணவர் Jammie,
பெக்காரஸ் சட்டத்திற்கு எதிரான 2007 மாணவர்கள் போராட்டம் பற்றிக் கூறினார். அந்தச் சட்டம் உயர்கல்வி
அடைதலில் தடைகளை கொண்டுவரும் நோக்கத்தை இலக்காக கொண்டிருந்தது; பெருவணிகத்துடன் பல்கலைக்கழகங்களை
பிணைக்கும் முயற்சி இருந்தது. "நாங்கள் எளிதில் வெற்றிகொள்ளப்பட்டோம் மற்றும் தடிகளால் அடிக்கப்பட்டோம்"
என்று WSWS
இடம் அவர் கூறினார். "அடக்கு முறை மிகவும் அதிகமாக இருந்தது
L'UNEF (பிரான்சின்
தேசிய மாணவர்கள் சங்கம்) பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக கூறப்பட்டது, ஆனால் சட்டம் மாற்றப்படவில்லை."
பிரான்சில் உரிமைகள் மீதான தாக்குதல், "சர்வதேச சூழ்நிலை பொருத்தத்தால்
உந்துதல் பெற்றது. தனியார்மயமாக்கலை பொறுத்தவரை, சார்க்கோசி உலகின் மற்ற பகுதியுடன் ஒரே
நிலைப்பாட்டில் உள்ளார். தொழிலாள வர்க்கம், மாணவர்கள் ஆகியோருடைய நலன்கள் ஒரேமாதிரியானதுதான்.
தொழிலாள வர்க்கம் வலிமை இழந்தால், இளைஞர்களும் வலிமையை இழக்க நேரிடும். ஏற்கனவே மாணவர்களில்
50 சதவீதத்தினர் வேலை பார்க்க வேண்டியுள்ளது, எனவே அவர்களுடைய நலன்களும் பிணைக்கப்பட்டுள்ளன" என்று
Jammie
உறுதியாகக் கூறினார்.
Jammie தொடர்ந்தார்: "பிரான்சின்
ஏகாதிபத்தியக் கொள்கையைத்தான் சார்க்கோசி தொடர்கிறார். மிகக் கூடுதலான வகையில் அமெரிக்க சார்பு,
இஸ்ரேலிய சார்பை சார்க்கோசி கொண்டுள்ளார். டக்காருக்கு அவர் சென்றிருந்தபோது, ஆபிரிக்கர்கள் ஒரு பிற்போக்கான
நாட்டில், இருண்ட காலத்தில் வாழ்ந்து வருவதாக அவர்களிடம் கூறி ஒரு உரையாற்றினார்!"
சோசலிஸ்ட் கட்சி இப்பொழுது ஒரு இடது கட்சியாக இல்லை என்றும் அவர் கூறினார்.
"அது முதலாளித்துவத்திற்கு ஒரு நம்பத்தகுந்த மாற்றீடாக இப்பொழுது இல்லை. வருங்காலம் பெரும் துன்பத்தையும்
நம்பிக்கையின்மையையும் கொண்டுள்ளது. இளைஞர்கள் அடக்கப்பட்டுள்ளர்; அடிபட்டனர்; எவரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இதன் பொருள் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தால் அடிக்கப்படலாம் என்பது ஏற்கப்பட்டுவிட்டது."
பாரிசில் Lycée
Maurice Ravel இல் படிக்கும் 16 வயது
Tristan,
பிரான்சில் கல்விச்செலவின குறைப்புக்கள் உலகரீதியான அபிவிருத்தியின் ஒரு பகுதி என்பதில் தெளிவாக இருந்தார்.
"இத்தாலி, ஸ்பெயின், ஆங்கிலோ-சாக்ஸன் உலகில், சர்வதேச நிகழ்வில் உள்ளதைத்தான் நாங்களும்
கொண்டுள்ளோம். இந்த அரசாங்கத்தை கீழிறக்குவோம் -- அதற்காகத்தான் இங்கு கூடியுள்ளோம். தொழிலாள
வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாக இணையும். இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்றால்
அரசாங்கம் தூக்கியெறியப்பட வேண்டும். அதன் பின் ஒரு சோசலிச, கம்யூனிச அரசாங்கம் வரும், அதை நாம்
காண்போம்."
பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையையும் அவர் கண்டித்தார்: "மனித உரிமைகளை
பிரகடனம் செய்த நாடான பிரான்ஸ், ஆப்கானிஸ்தானிற்கு துருப்புக்களை அனுப்புவதும் இஸ்ரேலுக்கு ஆதரவு
கொடுப்பதும் வெட்ககரமான அவமானம் ஆகும். இளைஞர்கள் விரைவில் வாக்களிக்க உள்ளனர்; இதை நாங்கள்
மாற்றுவோம்."
"முதலாளித்துவம்தான் பிரச்சினை. செல்வம் சமமின்றிப் பகிர்ந்து
கொடுக்கப்படுகிறது; சமத்துவம் இல்லை. இந்த உலகத்தை அழித்து, புதிய உலகை கட்டமைப்போம்." என்று
அவர் கூறினார். |