WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
பர்மா
Bush administration moves to exploit Burma cyclone disaster
புஷ் நிர்வாகம் பர்மா சூறாவளி பேரழிவைத் தன்னலப்படுத்த விரும்புகிறது
By Joe Kay
7 May 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
பர்மாவின் (மியான்மர்) பரிதாபகரமான துயரத்தை தன்னலப்படுத்துவதில் புஷ்
நிர்வாகம் சிறிதும் காலந்தாழ்த்தவில்லை. அது ஆசியாவில் அதன் வெளிநாட்டு கொள்கை திட்டத்தை தீவிரமாக திணிக்க,
வார இறுதியில் பர்மாவை தாக்கி குறைந்தபட்சம் 20,000 த்திற்கும் மேலானவர்களை பலி கொண்ட சூறாவளியை
வலிந்து கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
செவ்வாயன்று, பர்மாவின் எதிர்கட்சி தலைவர்
Aung San Suu Kyi
இற்கு ஒரு காங்கிரசின் தங்கப்பதக்கம் அளிப்பதற்கான மசோதாவில் கையெழுத்திட புஷ் வெள்ளை மாளிகையில் ஒரு
சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஓர் ஆரம்பகட்ட தொகைக்கு அப்பாற்பட்டு, பாதிக்கப்பட்ட
அந்நாட்டிற்கு தேவையான எல்லாவித உதவிகளையும் அளிப்பதற்கான ஆத்திரமூட்டும் நிபந்தனைகள் குறித்து பேசுவதற்கு
இந்த விழாவை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
"அமெரிக்கா முதல்கட்ட உதவியை அளித்திருக்கிறது, ஆனால் நாங்கள் மேலும் நிறைய
செய்ய விரும்புகிறோம்." என அறிவித்த புஷ், தொடர்ந்து, "உயிரிழந்தவர்களையும், காணாமல் போனவர்களையும்
கண்டறிய மற்றும் சூழ்நிலையை ஸ்திரப்படுத்த உதவும் வகையில் அமெரிக்க கப்பற்படையை அனுப்ப நாங்கள் தயாராக
உள்ளோம். ஆனால் அவ்வாறு செய்வதற்கு, அந்நாட்டின் இராணுவ ஆட்சி எங்களின் இயற்கை பேரழிவு மதிப்பீட்டு
குழுவை நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
இதுவரை, ஒரு சிறிய தொகையான 250,000 டாலரை அமெரிக்க தூதரகம்
ஒதுக்கீடு செய்திருக்கிறது. இத்தொகை கடந்த வாரம் சோமாலிய போராளிகளை கொல்ல அமெரிக்க இராணுவத்தால்
பயன்படுத்தப்பட்ட ஒரு டோமாஹாக் தாக்குதல் ஏவுகணையின் செலவில் பாதிக்கும் குறைந்ததாகும். கடந்த
செவ்வாயன்று, USAID
இயற்கை பேரழிவுக்கான மீட்புக்குழுவினால் மேலும் 3 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பதாக
நிர்வாகம் அறிவித்தது.
உண்மை என்னவென்றால், சில குறிப்பிட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்து
தருவதற்கான நிபந்தனையின் அடிப்படையில் பர்மாவிற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகிறது என்பதே ஒரு
கொடிய குற்றமாகும். மேலும், உதவிகளை வழங்க அமெரிக்காவிற்கு ஏன் அதன் சொந்த மதிப்பீடு
தேவைப்படுகிறது என்பது குறித்தோ அல்லது "சூழ்நிலையை ஸ்திரப்படுத்துவதற்கான" அமெரிக்க இராணுவ உதவி
வழங்குவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்தோ புஷ் விவரிக்கவில்லை. உள்நுழைவதற்காக அமெரிக்க
கப்பற்படை கப்பல்கள் தாய்லாந்தின் கடற்கரையில் நின்று கொண்டிருக்கின்றன.
இந்த அறிவிப்புகள் நிச்சயமாக சுயநலமற்ற மனிதாபிமான தகமைகளை
கொண்டிருக்கவில்லை. புஷ் நிர்வாகம் பல ஆண்டுகளாக பர்மாவின் இராணுவ அரசாங்கத்தை இல்லாதொழிக்கவும்
மற்றும் ஆட்சியாளருக்கும் மற்றும் நாட்டின் மீதும் பொருளாதார தடைகளை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பமாக
புத்த குருமார்களின் கடந்த ஆண்டு போராட்டங்களை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அந்நாட்டில் இராணுவ
காலடி எடுத்து வைப்பதற்காக அமெரிக்கா அந்நாட்டின் தற்போதைய துயரத்தை தன்னலப்படுத்தும் என்பதில்
எவ்வித சந்தேகமும் இல்லை.
பாரியளவில் ஏழ்மை பீடித்த நாட்டின் மீது சர்வாதிகார கட்டுப்பாட்டை கொண்டுள்ள
ஒரு கொடிய ஆட்சியான பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு உலக சோசலிச வலைத் தளம் எவ்வித ஆதரவையும்
கொடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும், Suu Kyi
இனை முன்னணிக்கு கொண்டுவருவது உட்பட அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் பொருளாதார பிரச்சனைகள் பற்றி கவனத்தில்
கொண்டதல்ல. அமெரிக்க அரசாங்கத்தின் மனிதாபிமான நோக்கங்கள் எப்போதும் போல அமெரிக்க ஆளும்
வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் கவனமாக ஒத்திருக்க செய்யப்பட்டுள்ளன.
பர்மாவைப் பொறுத்த வரை, அதன் இராணுவ ஆட்சியுடன் நெருக்கமாக தொடர்பு
கொண்டுள்ள சீனாவின் செல்வாக்குக்கு எதிராக செயல்பட அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதுடன் மற்றும் இந்திய
பெருங்கடலை அணுவதற்கு அந்நாடு ஒரு முக்கிய புள்ளியாக இருப்பதாகவும் கருதுகிறது. புஷ் நிர்வாகத்தை
பொறுத்த வரை, பூகோள மூலோபாய இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கு அந்நாட்டின் மக்கள் ஒரு
கொடுக்கல்வாங்கல் பண்டமாக உள்ளனர்.
Chevron எண்ணெய் நிறுவனம்
உட்பட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் பர்மாவின் மீது ஆர்வம் கொண்டுள்ளன. புஷ் நிர்வாகம் அந்நாட்டின் மீது
பொருளாதார தடைகள் விதித்திருக்கும் போதினும், இது
Chevron இன் சேய் நிறுவனமான
Unocal மூலம்
செய்யப்பட்டிருக்கும் பல பில்லியன் டாலர் முதலீட்டை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. தனது எண்ணெய்
குழாய்வழிகளை பாதுகாக்க பர்மாவில் தவறான குற்ற நடவடிக்ககைளில் ஈடுபட்டுள்ளதாக
Chevron இனை
மனித உரிமைகள் குழு குற்றஞ்சாட்டி இருக்கின்றன.
புஷ் நிர்வாகத்தின் அறிக்கைகளை, அமெரிக்க மக்கள் உட்பட உலகளவிலான மக்களை
அமெரிக்கா நடத்தும் உள்ளடக்கத்தில் வைத்து பார்க்க வேண்டும். மக்களை எச்சரிக்க தவறியதையும்,
பின்விளைவுகளுக்கு அந்த அரசாங்கம் தயாராக இல்லாமல் இருந்ததாக தண்டனையளிக்கவேண்டும் என திங்களன்று,
சூறாவளி தொடர்பாக வெள்ளை மாளிகையிலிருந்து குரல் எழுப்பிய முதல் நபர் அமெரிக்க முதல் குடிமகள் லோரா
புஷ் ஆவார்.
"அவர்கள் இந்த பயங்கரத்தை குறித்து அறிந்திருந்த போதினும், பர்மாவின் அரசு
ஊடகம் தகுந்த நேரத்தில் மக்களுக்கு புயல் அறிவிப்பை அளிக்கத் தவறிவிட்டது" என தெரிவித்த அவர், "சூறாவளிக்கு
பின் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை என்பது இராணுவ ஆட்சி அதன் மக்களுக்கான அடிப்படை தேவையை அளிக்க
தவறியதற்கான மிக சமீபத்திய சான்றுகளில் ஒன்றாகும்." எனத் தெரிவித்தார்.
இந்த அறிக்கையின் பாசாங்கு மற்றும் மனிதாபிமானமற்றதன்மை வேண்டுமென்றே ஆத்திரமூட்டல்
இல்லாதாக இருக்கும் என்றால் அது பற்றி ஒருவர் ஆச்சரியப்படவே முடியும். வரும் ஆகஸ்ட் 29ம் தேதி, லூசியானா
மற்றும் மிசிசிப்பியை தாக்கி குறைந்தபட்சம் 1,800 மக்களை பலி கொண்ட மாபெரும் புயல் ஹூரிகேன் காத்ரினாவின்
மூன்றாம் ஆண்டு நினைவுதினம் ஆகும். இந்த ஹூரிகேன் அமெரிக்காவின் ஒரு முக்கிய நகரமான நியூ ஓர்லீன்ஸை அழித்து
சிதைத்தது.
பேரழிவளிக்கும் புயலால் நியூ ஓர்லீன்ஸ் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறை பல
தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்க மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் உணர்ந்திருந்தன, ஆனால் சரியான நேரத்தில்
மக்களை வெளியேற்றும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் இதில் மாட்டிக் கொண்டவர்கள் மற்றும்
இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டமும் எதுவும் இருக்கவில்லை. இப்பேரழிவில் பல
நாட்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் லூசியானா மைதானத்தில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். தங்கள் வீடுகளை
இழந்த பல ஆயிரக்கணக்கானவர்கள் தற்காலிகமான நகரும் குடியிருப்பு கொட்டகைகளில் தங்க
வைக்கப்பட்டிருந்தனர், 2007ல் இந்த நகரும் குடியிருப்பு கொட்டகைகள் மிக உயரளவிலான ஓர் இரசாயன நச்சு
பொருளான ஃபார்மல்டிஹைடை கொண்டிருந்தன என்பதும் வெளியிடப்பட்டது.
ஹூரிகேன் காத்ரினாவால் ஏற்பட்ட பாதிப்புகள் பெருமளவில் தவிர்த்திருக்க
கூடியவையே, ஆனால் மொத்த அரசாங்க முரண்பாடுகள் மற்றும் அலட்சியங்களால் நியூ ஓர்லீன்ஸின் வெள்ள ஆபாய
நுட்பங்களுக்கு தேவையான முதலீடுகள் தாமதிக்கப்பட்டன மற்றும் அவை அழிந்துபோக அனுமதிக்கப்பட்டன -
"அமெரிக்க மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிய" அமெரிக்க அரசாங்கங்களின் பல
சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். |