World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிSEP/ISSE public meetings in Germany 1968: The lessons for today ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சி/ சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு இவற்றின் பகிரங்க பொதுக்கூட்டம் 1968: இன்றைக்கான படிப்பினைகள்9 May 2008 1968 நிகழ்வுகள் வெறுமனே "மாணவர் கிளர்ச்சிகள்" என்று பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. ஆயினும், ஒருவர் சர்வதேச மற்றும் வரலாற்று நிலைப்பாட்டிலிருந்து ஆய்வு செய்யும்பொழுது வேறுபட்ட காட்சி ஒன்று தோன்றுகிறது. மாணவர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்புக்கள், பல்வேறு கண்டங்களில் ஒரு தொடரான நாடுகளில் இடம்பெற்ற தொழிலாளர்களால் ஆன ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும். அவ்வியக்கம் முழு தசாப்தமும் நீடித்த மற்றும் முதலாளித்துவ அமைப்பை அதன் அத்திவாரங்களில் உலுக்கி எடுத்த இயக்கமாக இருந்தது. 1968 மே மாத வேலைநிறுத்தத்தில் பத்து மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்ற பிரான்சில் இது மிகவும் கண்கூடான சாட்சியாக இருந்தது. அவர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்தனர் மற்றும் தளபதி சார்லஸ் டு கோல் ஆல் தலைமை தாங்கப்பட்ட பிரெஞ்சு அரசாங்கத்திற்கான பெரும் நெருக்கடியை வீழ்படிவாக்கினர். 1969ல் ஜேர்மனியில் செப்டம்பர் வேலைநிறுத்தத்தில் மற்றும் இத்தாலியில் "சூடான இலையுதிர்காலம்" என்றழைக்கப்பட்டதில் பங்கேற்க பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களும் அணிதிரட்டப்பட்டனர். நகர்ப்புற கிளர்ச்சி எழுச்சிகளுடன் சேர்ந்து, குடி உரிமைகளுக்கான பரந்த இயக்கத்தால் அமெரிக்கா குலுங்கியது. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளை எதிர்த்து போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியா தெருக்களில் தொழிலாளர்கள் இறங்கினர், மற்றும் 1970களின் பொழுது கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் வலதுசாரி சர்வாதிகாரங்கள் கவிழ்க்கப்பட்டன அதே காலகட்டத்தின் பொழுது வியட்னாமில் அமெரிக்க இராணுவம் அழிவுகரமான தோல்வியால் பாதிக்கப்பட்டது.ஆயினும், தொழிலாளர்கள் சுதந்திரமாய் செயற்படும் திறனை இழந்தனர், ஆளும் மேற்தட்டினர் இந்த இயக்கத்தை தடுத்து நிறுத்தியதுடன் அதனை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அது இதனை ஒன்றில் சமூக சலுகைகள் மூலமோ அல்லது, 1973ல் சிலியில் நடந்ததை போல் கொடூரமான ஒடுக்குமுறையின் மூலமோ செய்தனர். அவ்வாறு செய்வதில் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், புரட்சிகர முன்னோக்கை நிராகரித்த சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் ஆதரவில் நம்பி இருக்க முடிந்தது. பின்னர், 1970களின் முடிவில், ஆளும் தட்டு எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தது மற்றும் மார்கரெட் தாட்சர் (பிரிட்டன்), றொனால்ட் றேகன் (அமெரிக்கா), ஹெல்மூட் கோல் (ஜேர்மனி) அதிகாரத்திற்கு வந்தனர். முந்தைய சமூக சலுகைகள் திரும்பப்பெறப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இன்று செல்வந்தருக்கும் ஏழைக்கும் இடையிலான இடைவெளி என்றுமில்லா வகையில் மிகவும் தீர்மான கரமானதாக இருக்கிறது, நிதிய நெருக்கடி உலகப் பொருளாதாரத்தை மூழ்கடித்திருக்கிறது, மற்றும் ஈராக் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. புதிய மோதல்களும் வர்க்கப் போராட்டங்களும் தவிர்க்க முடியாதனவாக ஆகியுள்ளன. அத்தகைய போராட்டங்களுக்கு தயார் செய்வதற்கு 1968 லிருந்து படிப்பினைகளை பெறுதல் அவசியமானதாக இருக்கிறது: தொழிலாளர்கள் ஏன் சுயாதீனமாய் செயற்படும் திறனை இழந்தனர்? சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் பரந்த இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது எப்படி சாத்தியமானது? ருடி டுஷ்கே (Rudi Dutschke) மற்றும் "புதிய இடதின்" ஏனைய தலைவர்கள் போன்ற நபர்களின் கருத்துக்கள் என்ன பாத்திரத்தை ஆற்றியது? இந்த விஷயங்கள் சோசலிச சமத்துவக் கட்சியாலும் (PSG) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பினாலும் ஜேர்மனியில் ஒழுங்கு செய்யப்படும் விரிவுரைகளில் அலசப்பட இருக்கின்றன. PSG -ன் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான பீற்றர் சுவார்ட்ஸ் இக்கூட்டங்களில் உரையாற்றுவார், அதனை தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். கூட்ட விபரங்கள்: Berlin Friday, May 16, 2008, 18:00 Main Building, Technical University, Room H 112 Straße des 17. Juni 135, 10623 Berlin (Underground Ernst Reuter Platz or S-Bahn. Tiergarten) Frankfurt am Main Saturday, May 17, 2008, 19:00 Saalbau Bockenheim, Room 1 Schwälmer Str., am Kurfürstenplatz (S 3,4,5,6 Westbahnhof or Underground 5,6 Leipziger Str.) |