World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்Defend public education against Sarkozy's cuts! Unite workers and youth across Europe and internationally! சார்க்கோசியின் செலவின குறைப்புக்களுக்கு எதிராக பொதுக் கல்வியை காப்பாற்று! ஐரோப்பாவிலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்து! Statement of the International Students for Social
Equality சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பு மே 15 அன்று பிரான்ஸ் முழுவதும் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட அறிக்கையை வழங்க உள்ளது. ஆசிரியர்-மாணவர் சங்கங்கள், கல்வித் துறையில் அரசாங்க செலவினக் குறைப்பை எதிர்த்து ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. கல்வித் துறையில் ஜனாதிபதி சார்க்கோசியின் செலவீனக் குறைப்புக்களுக்கு எதிராக மே 15ம் தேதி நடத்தப்பட இருக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம், இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றின் தொடர்ச்சி ஆகும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்கள் என முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு பகுதி ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த தாக்குதல் வெறுமனே ஒரு பிரெஞ்சு பிரச்சினை அல்ல, மாறாக ஐரோப்பிய ரீதியிலான மற்றும் சர்வதேச பிரச்சினை ஆகும். நிதிய உயரடுக்கு இரு அடுக்கு முறையை உருவாக்க --செல்வந்தர் குழந்தைகளுக்கு தரமான கல்வி, தரக்குறைவான கல்வி மற்றவர்களுக்கு என்று தோற்றுவிக்க பள்ளிகளை தனியார் மயமாக்குவதை நோக்கி நகருவதால் அமெரிக்காவில் உள்ளதைப் போலவே, ஐரோப்பா முழுவதும் பொதுப் பள்ளிகள் நிதியில்லாமல் வாட அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாள வர்க்க இளைஞர்கள் பள்ளிகளை விட்டு நீங்குகையில் அவர்கள் எதை எதிர் கொள்ளுகின்றனர்? தற்போதைய வேலையின்மை நிலை அல்லது குறைவூதிய வேலைகள் அல்லது போரிட இழுக்கப்படும் அச்சத்திற்கு ஆட்பட்டு போரில் மடியும் ஆபத்து இவற்றைத்தான் எதிர்கொள்கின்றனர். இவ்விதத்தில் இளைஞர்கள்மீது நடக்கும் தாக்குதலுக்கு பின் உள்ள உந்து சக்தி வெறுமனே ஒரு ஜனாதிபதி அல்லது ஒரு அரசாங்கத்துடைய கொள்கைகள் அல்ல, மாறாக, முதலாளித்துவ அமைப்புதன்னின் புறநிலை நெருக்கடியாகும். நிதிய முறை கிட்டத்தட்ட உருகி கரைந்து வரும் நிலையில் --பணவீக்கத்தால் அதிகரித்த மதிப்புக்களின் அடிப்படையில் உயர்மட்ட 1 சதவீதம் மட்டும் தன்னை உப்பிக் கொழுக்க செய்துள்ள நிலையில்-- உலகம் மீண்டும் பொருளாதார பின்னடைவு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியானது, ஆளும் வர்க்கங்களால் ஊதியங்களை குறைத்து தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து இன்னும் கூடுதலான இலாபத்தை கசக்கிப் பிழிதல், அனைத்து சமூக வேலைத் திட்ட செலவுகளையும் குறைத்தல், முக்கிய வளங்கள், சந்தைகள் மற்றும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு ஆகியவை அனைத்தையும் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் நடப்பது போல் காலனித்துவ பாணியிலான போர்கள் மூலம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் என்ற முறையின் உந்துதலைத்தான் உக்கிரப்படுத்தும். பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய துருப்புக்கள் பெருகிய முறையில் ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசாங்கமோ, பெயரளவிற்கு "எதிர்க்கட்சி" எனக் கூறிக் கொண்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சியோ ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்க்கவில்லை. இவை இரண்டுமே ஈரானுக்கு எதிரான அச்சுறுத்துல்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. உணவு போன்ற மிக அடிப்படையான தேவைகள் கூட பரந்த மக்களுக்கு மறுக்கப்படுகிறது. ஊக வாணிகம் மற்றும் இலாபத்தை சுரண்டி எடுத்தலால் அதிகரித்துள்ள உணவு விலையின் வெடிப்பானது பில்லியன் கணக்கான மக்கள் மீது பசியை சுமத்தி, மில்லியன் கணக்கான மக்கள் பட்டினி கிடக்க நேரும் அச்சுறுத்தலை கொடுக்கிறது. சார்க்கோசி ஏப்ரல் மாதம் 7 பில்லியன் வரவு/செலவு திட்ட செலவுக் குறைப்புக்களை அறிவித்தது ஆரம்பம்தான். முதலாளித்துவத்தை பொறுத்த வரையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் பின்னர் இருந்து கண்டிராத மட்டங்களுக்கு கட்டாயம் விரட்டிச் செல்லப்பட வேண்டும் என்பதாகும். முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி முன்வைக்கும் வினாக்கள் சார்க்கோசி போன்றவர்களுடைய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு கீழிருந்து அழுத்தம் கொடுப்பதின் மூலம் தீர்க்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. சமூகத்தில் அடிப்படை மாறுதல்கள் உறுதியாக வேண்டும் எனக் கூறும் வேலைத்திட்டங்கள் மற்றும் சார்க்கோசியை பதவியில் இருந்து அகற்றி அவருக்கு பதிலாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை கொண்டுவருதல் ஆகியவற்றின் மூலம்தான் அணுகப்படமுடியும் என்ற புரட்சிகர விஷயங்களை எழுப்புகின்றது. சமூக சமத்துவத்திற்காக போராடும், ஏகாதிபத்திய போருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனக் கருதும், ஜனநாயக உரிமைகளின் முழு விரிவாக்கத்திற்கு அதாவது சோசலிசத்திற்கு போராடக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் வளர்ச்சி தான் தேவையாகும். இந்த முன்னோக்குதான் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு எனப்படும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் பிரிவு, மற்றும் அதன் இணையதள வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றால் போராடப்பட்டு வருவதாகும். கடந்த தசாப்தத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் ஆகியவற்றுக்கு ஒன்றும் பஞ்சம் இருக்கவில்லை. 1995ம் ஆண்டு மே-ஜூலை 1968க்கு பின்னர் மிகப் பெரிய வேலைநிறுத்த இயக்கத்தை கண்டது; 2003ல் பொதுத் துறை தொழிலாளர்களின் ஓய்வுதிய பாதுகாப்பு மற்றும் தேசிய கல்விப் பணி பிரிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் இயக்கம் நடைபெற்றது; 2006ம் ஆண்டு "சமவாய்ப்பு சட்டங்கள்" என்ற பிற்போக்கு சடட்டத்திற்கு எதிரான பல மாதங்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்களை கண்டது. இருப்பினும் இப்போராட்டங்கள் அனைத்தும் திசைதிருப்பப்பட்டு இறுதியில் தொழிற்சங்க தலைமைகளினாலும் உத்தியோகபூர்வ "இடது" எனும் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளினாலும் காட்டிக் கொடுக்கப்பட்டன. "அதி இடது" அமைப்புக்கள் என அழைக்கப்படும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), லுத் உவ்றியேர் (LO) போன்றவற்றின் ஆதரவுடன் இந்த சக்திகள் அரசாங்கத்தை கீழிறக்கும் போராட்டத்தை நிராகரித்து, அதற்கு பதிலாக மக்கள் இயக்கம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றன. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்டிருந்த இந்தப் போராட்டங்களின் விளைவு இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகவும் வலதுசாரித்தன்மை உடைய ஒரு அரசாங்கத்தை பதவியில் இருத்தியதாகும். ஏன்? ஏனெனில் இப்போராட்டங்கள் ஒரு தவறான முன்னோக்கினால் வழிகாட்டப்பட்டன; அதாவது மக்கள் அழுத்தம் கொடுக்கப்பட்டால் ஆளும் உயரடுக்கின் கொள்கைகள் கணிசமாக மாறும் என்ற பிரமை இருந்தது. தற்போதைய போராட்டத்தில், உயர்நிலைப் பள்ளி சங்கங்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சுதந்திர ஜனநாயக கூட்டமைப்பு (FIDL), உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தேசிய ஒன்றியம் (UNL) ஆகியவற்றின் முன்னோக்கு சார்க்கோசியின் கல்விச் செலவினக் குறைப்புக்கள் அவரது நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தம் கொடுப்பதின் மூலம் தடுக்கப்பட்டுவிட முடியும், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் நலனுக்கு ஏற்ப அது நடக்குமாறு நிபந்திக்க முடியும் என்பதாகும். ஆனால் கல்வி மந்திரி சேவியர் டார்க்கோஸ் மிக மோசமாக நடைபெறும் 200 பள்ளிகளுக்கு, 1,500 குறைவூதிய, பயிற்சியற்ற ஆசிரிய உதவியாளர்களைத்தான் அளித்திருக்கிறார், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அல்ல, ஆசிரியர் பணிகளில் 11,200 குறைக்கப்படுவதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை நலன்களை கூட பாதுகாக்கவில்லை. பிரெஞ்சு பெருநிறுவனங்களின் போட்டித்தன்மை, இலாபம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டி அவை முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்கள் மீது விட்டுகொடுப்புகளை திணிக்கின்றன. CGT இன் தலைவர் பேர்னார்ட் தீபோ, சார்க்கோசியுடன் மிக பகிரங்கமாக ஒத்துழைக்கின்றார். "இடது", "அதி இடது" என்று அழைக்கப்படும் கட்சிகள் இத்தகைய திவாலான அமைப்புக்களுடன் தொழிலாளர்களை எப்பொழுதும் பிணைத்து வைக்க விரும்புகின்றன. இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் மற்றும் உரிமைகளை காப்பதற்கு முன்னிபந்தனை, ஒரு புதிய முன்னோக்கின் கீழ் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை வளர்ப்பதுதான் --அதாவது ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தலாகும். சமுதாயம் சோசலிச அடித்தளத்தில் மாற்றப்பட வேண்டும் என்பதற்கு பூமியின் வளங்கள் பொது உடைமையாக எடுத்துக் கொள்ளப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படும், ஒரு நிதிய தன்னலக் குழுவின் நலன்களுக்கு பயன்படுத்தப்படுவதை காட்டிலும் மனிதகுலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட முடியும் என்பதாகும். இந்த முன்னோக்கிற்காக போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்திடையே ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு இளைஞர்களை அதன் அணிகளில் சேருமாறும் இந்த போராட்டத்தை முன்னெடுக்குமாறும் அழைக்கிறது. |